CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, February 17, 2012

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட!


                                          நந்தனம் கலைக்கல்லூரி நாட்டி பாய்ஸ்  

"பஸ் டே வந்தாலே சென்னை காலேஜ் பயலுக இப்படி அநியாயம் பண்றாங்களே" என்று நம் சிட்டிசன்கள் கொந்தளித்து எழுதும் பதிவுகளையும், ஊடக செய்திகளையும் படித்து இருப்பீர்கள். அது குறித்து பிலாசபி பொங்கிய பதிவு: பச்சையப்பன் கல்லூரியும்... . அதில் களை கட்டிய கமன்ட்டுகளையும் படித்து பாருங்கள்.  அடுத்து சமீபத்தில் விக்கி சீறிய பதிவு: பஸ் டே. இனி நான் கண்ட 'மாஸ் ஹீரோஸ் ஆப் சென்னை காலேஜ்' பற்றிய பதிவு கீழே. 

வடசென்னைக்கு சர் தியாகராயா , மத்தியில் பச்சையப்பாஸ், தெற்கே நந்தனம் ஆர்ட்ஸ்..பாடாத பாட்டா..ஆடாத ஆட்டமா? அடியேன் விழுந்து விழுந்து  படித்தது தியாகராயாவில். அக்கல்லூரி நாட்கள் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பகிர்கிறேன். இப்போது நான் கண்ட கல்லூரி 'பருத்தி வீரர்கள்' பற்றி பார்ப்போம். அதாகப்பட்டது சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்தில் கலாட்டா செய்வதோடு, ரத்தம் தெறிக்கும் வன்முறையிலும் ஈடுபடுவர் என்பதை நான் முதலில் கண்ணெதிரே பார்த்தது பள்ளி நாட்களில்தான்.

தெற்கே: 
நந்தனம் YMCA  பள்ளியில் நண்பர்களுடன் மதியம் விளையாடிக்கொண்டிருந்த சமயமது. எமது பள்ளிக்கு பின்புறம் மினி கூவம் ஒன்று ஓடும். அதில் இருந்து பாலா பட ஹீரோ போல ஒரு இளைஞன் 'சாக்கடை பாத்' கெட்டப்பில் கத்தியுடன் நாங்கள் இருந்த திசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். நானும், சக மாணவர்களும் அதிர்ந்து போனோம். மறுபக்கத்தில் நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் அவனை பலவழியில் துரத்தி வந்து ஒருவழியாக பிடித்து விட்டனர். நடந்தது என்னவென்று நாங்கள் விசாரித்தபோது கல்லூரி தேர்தலில் தன் தலைவனை(!) எதிர்த்து ஜெயித்தவனை கல்லூரி வாசலிலேயே ஒரே சொருகாக சொருகிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் ஜம்ப் செய்து தப்பிக்க பார்த்தானாம். இந்தப்போராளி கைக்கூலி அல்ல. சாட்சாத் அதே கல்லூரி மாணவன்தான். வாயில் ரத்தம் வர உதைத்து இழுத்து சென்றனர் அவனை. இப்படியும் காலேஜ் பசங்க இருப்பாங்களா என்று என்னை வாய்பிளந்து பார்க்க வைத்த முதல் நேரடி நேர் அடி ஒலி/ஒளிபரப்பு.

பஸ் டே வந்தால் போதும். மவுண்ட் ரோட்டையே உண்டு இல்லை என்றாக்கி கடும் ட்ராபிக் ஜாம் செய்வதில் மன்னர்கள் நம்ம நந்தனம் ஆர்ட்ஸ் பாய்ஸ். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரி அருகே மாநகரப்பேருந்து க்ராஸ் செய்கையில் இவர்களின் கோஷம் விண்ணை பிளக்கும். அதுவும் பஸ்  டே அன்று கேட்கவே வேண்டாம். அந்த சில மணிநேரங்கள் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பார்கள்.      

வடக்கே:
சர் தியாகராயாவில் சீட் கிடைத்து (தெரியாமல்) உள்ளே நுழைந்தேன். சிக்கி ஒரு வாரம் ஆகி இருக்கும். எனது லெக்சரரிடம் பேசிக்கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஆசிரியரை உரசிக்கொண்டே ஓடினான் ஒரு சுப்ரமணியபுரத்தான்.  "டேய்..என்னடா இது" என்று அவர் கேட்டதற்கு மெலிதாக ஒரு புன்னகையை மட்டும் பூத்து விட்டு மேலும் வேகமாக ஓடினான். "என்ன சார் இது?" என்று நான் கேட்டதற்கு "அதட்டுனா பிரச்னை வேற மாதிரி ஆகும். வா போகலாம்" என்று பதில் சொன்னார். வட சென்னையில் வாண்டு பயலிடம் (பிலாசபி உட்பட) முறைத்தால் கூட "வகுந்துருவேன்" என்கிற ரீதியில் பெரும்பாலும் லுக் அடிப்பார்கள் என்பதால் 'காக்க காக்க'. 

மற்றொரு நாளில் அக்கல்லூரியின் பெரிய சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து குதித்து மைதானத்தை தாண்டி ஓடினர் சில மாணவர்கள். யூனிபார்முடன் பேருந்து நடத்துனர்களும், சில அடியாட்களும் பின் தொடர்ந்து அவர்களை விரட்டினர். காரணம் இதுதான். சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் வீறுகொண்டு எழுந்த மாணவன் ஒருவன் ஓட்டுனர் வாயை உடைத்து விட்டானாம். பேருந்தை நடுரோட்டில் பெப்பரப்பே என்று போட்டுவிட்டு கல்லூரியில் புகுந்து அதகளம் செய்திருக்கின்றனர் கவர்மென்ட் மாப்பிள்ளைகளும், அவர்தம் அடிப்பொடிகளும். நல்ல காலேஜ்ல சேந்தேன் போங்க. 

பச்சையப்பன் ப(டி)ச்ச புள்ளைங்க! 

மத்தியில்:
முன்பெல்லாம் சத்யம் தியேட்டரில் புதுப்படம் வந்தால் போதும். காலைக்காட்சி துவங்கும் நேரத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மண்டையை உடைத்து கொள்வார்கள். குறிப்பாக ரூபாய் 6.50 டிக்கட்(இப்போது 10 ரூபாய்) கவுண்டரில். ஒன்று லயோலா க்ரூப். மற்றொன்று புதுக்கல்லூரி(தமிழில் ந்யூ காலேஜ்) க்ரூப். அருகில் இருந்தால் நமக்கும் தர்மத்துக்கு நாலு விழும்.  முக்கியமாக மாணவர்களை திருத்த 'பஞ்ச்' பேசுபவர்கள் ஸ்பாட்டில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி. இலவசமாகவே உங்கள் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு விட்டு வலி/வழி தெரியாமல் இருக்க அடிபட்ட இடத்தில் சுண்ணாம்பையும் தடவி விட்டிருப்பார்கள். அது ஒரு கற்காலம் கல் ஒரு கண்ணாடி காலம்.   இப்போது சத்யம் படு டீசன்ட் ஆகிவிட்டதால் கலவரங்கள் 99% குறைந்து விட்டன. 

அடுத்து நம்ம தலைநகரின் சூப்பர் ஸ்டார் காலேஜான பச்சையப்பாஸ். 15B, 27B, 159 சீரிஸ் பஸ்களில் மாப்பிள்ளைகள் ரவுசு உச்சத்தை தொடும். நடத்துனர்கள்  சிலரை இவர்கள் வசியம் செய்து வைத்திருப்பதால், அடிக்கும் கூத்து அளவு மீறும்போதெல்லாம் "ஏண்டா.."என பரிதாபமாக நடத்துனர் கேட்டால் "ண்ணா..டென்ஷன் ஆவதண்ணா" என்று சொல்லி இன்னும் டென்ஷனை எகிற வைப்பார்கள். கடைசி படிக்கட்டிற்கு மேலிருக்கும் தகரத்தில் காது கிழிய கம்போசிங் நடக்கும். ஒவ்வொரு க்ரூப்பிலும் ஒரு கானா உலகநாதன் கண்டிப்பாக உண்டு. எல்லாமே ஜாலிதான் அவர்களுக்கு. 

ஆனால் இச்செயல்கள் கடந்த சில வருடங்களாக எல்லை மீறி போய்க்கொண்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென்று தெரியவில்லை. நான் கண்டவரையில் இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடக்கும் சமயம் 'அரசியல்' உள்ளே நுழைந்து விடும். தேர்தலில் நிற்கும் மாணவர்கள் சிலருக்கு ஸ்பான்சர் செய்வதில் முன்னணி அரசியல் கட்சி ஆட்களும்  இருப்பதுண்டு. சாதாரண கல்லூரி மாணவர்கள் பலர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான் பெரும்புள்ளிகளுக்கு இந்தப்பாசம். 

இதன் விளைவே சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் நடந்த/நடந்து வரும் வன்முறை சம்பவங்கள். மாணவன் தான் பலிகடா ஆக்கப்படுவதை உணராத வரை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்ப ஆடுங்க மாப்ள. இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும். நீங்க காலேஜ் பில்டிங்கல ஸ்ட்ராங்கா ஆடுன ஆட்டத்தோட விளைவு என்னான்னு. அப்போது கையில் காசில்லாமல் திணறும் நேரத்தில் கவுண்டமணி சொன்ன டயலாக் ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மச்சான்ஸ்:

"வட்டமா இருக்குமே எட்டணா. அதைப்பாக்கவே ஒரு வாரம் சிங்கி அடிப்ப மகனே. சிங்கி." 
.......................................................

மவுண்ட் ரோட் பேருந்தில் நந்தனம் ஆர்ட்ஸ் பசங்களின் கானா கச்சேரி:


.............................................................................

...............................
My other site:
...............................17 comments:

Unknown said...

மாப்ள நான் படிக்கிர(!) காலத்துல இந்த பக்கம் நியூ, அந்த பக்கம் நந்தனம், இன்னொரு பக்கம் பிரசிடென்சி..இப்படி நடுவுல வெள்ள்ந்தியா இருந்தேன் ஹிஹி...என்ன பண்றது..பிரச்சினைன்னு வந்தா..என் ஐடிய பாத்துட்டு ஸ்கூல் புள்ள் இதுன்னு போக சொல்லிடிவாங்க...எல்லா நான் குறிப்பிட்ட காலேஜ்களிள் இருந்த நண்பர்களும் என்னய மட்டும் ரகளைன்னா போக சொல்லிடுவாங்க!

Unknown said...

அப்பவே அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு நான் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டேன்னுட்டு!...இதுல ஒரு முறை எங்க காலேஜ் சேர்மனை காலேஜ் உள்ள வந்தே அடிச்சி அவரை நாங்க ஹாஸ்பிடல்ல சேத்த கதயும் நடந்து இருக்கு...!

Yoga.S. said...

விழிப்புணர்வூட்டும் பகிர்வு!வெங்கட்டின் கமென்ட் வேறு,,,,,,!!!:::

நாய் நக்ஸ் said...

நான் இன்னும் ஸ்கூல் விட்டே போகலை...
அதனால இன்னும் முணு வருடம் கழித்து
பார்ப்போம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீயு காலேஜுக்கும் பச்சையப்பாசுக்கும்ம் வந்த சிக்கல்ல நான் ஒரு வாட்டி மாட்டி இருக்கேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முன்னாடி இருந்த சபையர் தியேட்டர் காம்ப்ளக்ஸ்ல நந்தனம் ஆர்ட்சும் நியூ காலேஜும் ரெகுலரா மோதிக்குவாங்க. லயோலாவும் பச்சையப்பாசும் மோதிக்குவாங்க. லயோலா-பச்சையப்பாசை வெச்சுத்தானே காதல் தேசம் படமே எடுத்தாங்க....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சென்னை கலைக்கல்லூரிகளுக்கு விரிவுரையாளர்கள் டெய்லி போறாங்களோ இல்லியோ, போலீஸ் டெய்லி போகும். எல்லா கல்லூரி வாசல்கள்லேயும் ஒரு போலீஸ் வேன் டெய்லி நிக்கும்........ சாபக்கேடு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பஸ் டேவ விடுங்க, ஹோலி அன்னிக்கு இவனுங்க பண்ற சேட்டை இருக்கே.... அந்தப்பக்கமா போற பொண்ணுங்க வாழ்க்கைல மறக்கவே முடியாதபடி பண்ணிடுவாங்க (வெவரம் தெரிஞ்சவங்க அன்னிக்கு அந்தப்பக்கம் தலை வெச்சுக்கூட படுக்க மாட்டாங்க)

NKS.ஹாஜா மைதீன் said...

#இன்டர்வியுவில் பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்...#

அனுபவம் பேசுகிறதோ..!

வெளங்காதவன்™ said...

:-)

MANO நாஞ்சில் மனோ said...

அங்கே கத்தியோடு வந்தது விக்கி என்ற பக்கியாக இருக்கும் நல்லா உத்து பாருங்க முதல்ல....

MANO நாஞ்சில் மனோ said...

பஸ் டே அநியாயம் எல்லாம் ரொம்ப ஓவர்...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம் அனுபவிக்க வேண்டிய வயசில் அனுபவிக்கட்டும் பிள்ளைகள், பின்னே சிபி மாதிரி கிழவன் ஆனபின்பு அழ கூடாது இல்லையா ஹி ஹி...

சேலம் தேவா said...

//இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும்.//

யதார்த்தமான வரிகள்.எந்தக்கொண்டாட்டத்துக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்தால் நல்லது.

Unknown said...

சிவா...இந்த வீடியோ பெண்ணை கல்லூரிக்கு அப்பன் பார்த்தா...
பெண்ணை கல்லூரிக்கு அனுப்பமாட்டான்..

அஞ்சா சிங்கம் said...

இந்த வீடியோவில் நடுவே பிரபா ..பிரபா ..என்று யாரோ கூப்பிடுவது கேட்கிறது ..
இது யோரோட சதியாக இருக்கும் ????????

Unknown said...

யய்யா, இவ்வளவு சீரியஸான பதிவுலேயும் உங்க நக்கல் உங்கள விட்டு போக மாட்டேங்குதே.

Related Posts Plugin for WordPress, Blogger...