CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, February 10, 2012

கொலையும் செய்வான் மாணவன்நேற்று மதியம் 2 மணி வாக்கில் தமிழ் மற்றும் இந்தியாவின் முன்னனின் சேனல்களான என்.டி.டி.வி, டைம்ஸ் நவ் என அனைத்திலும் ப்ளாஷ் செய்யப்பட செய்தி "ஆசிரியையை வகுப்பிலேயே குத்திக்கொன்றான் மாணவன்". எங்கு நடந்தது என அறிகையில் சற்று அதிர்ச்சிதான். தலைநகரின் பிரதான/பரபரப்பான இடமான பாரிமுனைதான் அது. 173 வருட புகழ்பெற்ற செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இன்டியன் மேல்நிலைப்பள்ளி நேற்று காலை 10.50 மணிக்கு தன் வரலாற்று பக்கங்களில் முதன் முறை சிகப்பு சாயத்தை துரதிர்ஷ்டவசமாக பூசிக்கொண்டது.  ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற இப்பள்ளி இருக்குமிடம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகில்!  இச்சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை மறுப்பதற்கில்லை. 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ-ஆசிரியர் உறவு எப்படி கசப்பாக மாறி வருகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்நிகழ்வு அந்த அளவிற்கு அதிர்ச்சியை தந்திருக்காது. எப்போது டாஸ்மாக்  தன் அசுர கிளைகளை தெருவுக்கு தெரு பரப்ப ஆரம்பித்ததோ அன்று முதலே பள்ளிகளின் மதிப்பை குறைக்க ஆரம்பித்து விட்டனர் விடலைகள். குவார்ட்டர் பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டு வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்து தாகசாந்தி அடைந்த செய்தி கண்டு அதிர்ந்தோம். அது போன்ற நிலையில் உள்ள மாணவனை இனி ஆசிரியர் தட்டிக்கேட்க வாய்ப்பு குறைவென்றே தோன்றுகிறது. உமாமகேஸ்வரி எனும் ஆசிரியைக்கு ஏற்பட்ட கதி தனக்கு வந்தாலும் மாணவன் ஒழுக்கமே முக்கியம் என எத்தனை ஆசிரியர்கள் துணிந்து இது போன்ற அவலங்களை தட்டிக்கேட்பர்? 

"இதத்தான் நண்பன், பசங்க, மெரீனா படத்துல சொல்றாங்க. கேட்டாத்தான? பெத்தவங்க பசங்கள கண்டிக்க கூடாது. அவன் இஷ்டத்துக்கு படிக்க வைங்க. இல்லனா விட்டுடுங்க. பாவம்", "பசங்கல திட்டுறது ரொம்ப தப்பு. டீச்சருங்க எல்லாம் அன்பா பாடம் நடத்தணும்". இனி அடுத்த சில நாட்களுக்கு வழக்கம்போல இதே வசனங்கள் ஒவ்வொரு வீட்டிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும்   கேட்கும். நம்ம கோடம்பாக்க பிரம்மாக்கள் இந்நேரம் இதை எப்படி கமர்ஷியல் கலந்த சேஜ்  படமாக்கி கல்லா கட்டலாம் என்று அந்த மாணவன் கேரக்டரில் நடிக்க விடலை வேட்டையை ஆரம்பித்து இருப்பார்கள். இவற்றின் மூலம் மட்டுமே இம்மாதிரி கொடூரங்களை 100% தடுக்க இயலுமா? கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம். 

ப்ராடிக்கலாக சிந்திக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. இதை ஒரு அபூர்வ நிகழ்வாக எண்ணி வழக்கம்போல் அனைவரும் இயங்க ஆரம்பித்துவிட்டால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை.ஆசிரியர் தொழிலையே தன் லட்சியமாக எண்ணி பி.எட் போன்ற படிப்புகளை படித்துவிட்டு பள்ளியில் காலடி எடுத்து வைக்க எண்ணும் ஒவ்வொருவர் மனதையும் பலமாக அசைத்து பார்த்துள்ளது இக்கொலை. குறிப்பாக பயிற்சி ஆசிரியைகள் பலர் திகில் அடித்து போய் கிடக்கிறார்கள்.    

பள்ளிகள் உடனே செய்ய வேண்டிய செயல்கள் என நான் கருதுவது இவைதான்:

* பள்ளிக்குள்ளே நுழைந்ததுமே மாணவர்களை மெட்டல் டிடக்டர் போன்ற சாதனங்கள் மூலம் சோதிக்க வேண்டும். இது பணக்கார பள்ளிகளுக்கு சரி. ஆனால் மாநகராட்சி பள்ளிகளில் சாத்தியமா என்றால்..வேறு வழியில்லை என்றே சொல்ல வேண்டும். பல்லாண்டு காலம் பாடம் கற்பித்து நல்ல மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியரின் உயிர் தேசத்தில் இருப்போரின் அனைவரின் உயிரையும் விட மதிப்பு வாய்ந்தது என மாநில அரசுகள் நினைத்தால் இது சாத்தியமே. 

* இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்த பின்பு உடனே பள்ளிக்கு சில நாட்கள் விடுமுறை அளித்து விடுவதும், பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அந்த பள்ளியில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதும் நிரந்தர தீர்வுக்கானே வழியே ஆகாது. இக்கொடூரத்தை நேரில் பார்த்த சக மாணவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என எத்தனை பத்திரிகை, மீடியாக்கள் விவாதம் நடத்தி இருக்கின்றன? நடத்த போகின்றன? அல்லது அந்த மாணவர்கள் மனநிலை குறித்து எந்த வணிக நோக்கமும் இல்லாமல் சிறந்த திரைப்படம் ஒன்றை முன்னணி இயக்குனர்கள் திரையில் கொண்டுவருவர்?    

                                                               டாக்டர் ஷாலினி    

* எனவே..முதல் கட்டமாக அப்பள்ளி மாணவர்களுக்கு சகட்டு மேனிக்கு அட்வைஸ் தராமல் ஆசிரியர், பெற்றோர் செய்ய வேண்டியது என்னவெனில்,  சிறந்த மனநிலை மருத்துவர் ஒருவரை அணுகி இம்மாணவர்களுக்கு இலகுவாக நிலையை புரிய வைக்க வேண்டும். உமா மகேஸ்வரி எனும் ஆசிரியை ரத்தம் சொட்ட துடித்த காட்சியின் தாக்கத்தை பெருமளவு குறைத்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது அவர்களுக்கு. இன்னும் சில வாரங்களில் இறுதித்தேர்வு நடக்கவுள்ள நேரத்தில் இந்தக் கொடுஞ்செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே உடனே இதை பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். 

*  வகுப்பறையில் சில மாணவர்கள் கைபேசியில் ஆபாசப்படம் பார்த்தல் எல்லாம் இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொம்மை, லாலிபாப் வாங்கி தந்தாலே அழுவதை நிறுத்தும் குழந்தைகள் இருந்ததெல்லாம் அந்தக்காலம். குறைந்தபட்சம் பிளாஸ்டிக் மொபைல் ஆவது தந்தால்தான் ஆச்சு. இல்லை என்றால் உரக்க கத்தி ஊரை கூட்டுவேன் என்று சொல்லும் அளவிற்கு மொபைல் மேனியா பிடித்து ஆட்டுகிறது. நிஜ செல்போனில் தன் சின்னஞ்சிறு குழந்தை பேசுவதை பார்த்து ஏதோ ராக்கெட்  விட்ட கணக்காக பெருமைப்பட்டுக்கொள்ளும் பேரன்ட்ஸ். இது ஆவுறதில்ல!

* கீழ்சாதி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கும் ஆசிரியர்களை இதற்கு மேலும் பள்ளி நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புகள் அதிகம். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், தவறு செய்யும் மாணவனை ஆசிரியர் கண்டித்தால் "சார்/டீச்சர். என்னை இது மாதிரி கண்டிக்காதீங்க. சாதி பேரை சொல்லி திட்டனீங்கன்னு ஊரை கூட்டிருவேன்" என்று மிரட்ட ஆரம்பித்து உள்ளனர். இதில் மாணவிகளும் அடக்கம் என்பதுதான் முக்கிய செய்தியே. இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் நல்லாசிரியர்கள் நிலைதான் பாவமாக உள்ளது.  

* மேலைநாடுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ப்யூன், கேண்டீன் ஓனர் என ஒருவரைக்கூட விட்டு வைக்காமல் சுட்டுத்தள்ளும் செய்திகளை கண்டு அதிர்ந்த நமக்கு இந்தக்கத்திக்குத்து முதல் மற்றும் அதிமுக்கிய எச்சரிக்கையை தந்துள்ளது.இந்தியாவின் வடக்கே உள்ள பள்ளிகளில் ஏற்கனவே துப்பாக்கியால் டீச்சர்களை மாணவர்கள் சுட ஆரம்பித்து விட்டனர். அருமைடா ராசாக்களா.   

* இப்போதைக்கு ஊடகங்கள் இதை மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தாமல் இருப்பதே பரீட்சை எழுதப்போகும் அனைத்து மாணவர்களுக்கும் செய்யப்போகும் மிகப்பெரிய உதவி. ஓரிரு நிமிட செய்திகளாக போட்டுவிட்டு மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை போட வேண்டும் என்பதே எனது அவா.

ஆசிரியையின் ரத்தத்தை நேரில் கண்ட மாணவர்களின் மனநிலையை சீர்செய்ய ஆவன செய்ய வேண்டியது பெற்றோர், பள்ளிகள், ஊடகம் மற்றும் அரசின் உடனடி கடமையாகும்.
...............................................................................................................


...............................
My other site:
..............................                                                         

13 comments:

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!சென்னையிலுமா???பதிவில் கேட்டதுபோல் ஊடகங்கள் நடந்து கொள்ளுமா?மாணவ/மாணவியர் துயர் தீருமா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவுன்சிலிங் அவசரத் தேவை. அதே நேரத்தில் நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டியவை,
1. டாஸ்மாக்குகளைக் குறைத்தல் (முக்கியமாக பள்ளிகளுக்கருகில் இருப்பதை நீக்கலாம், வயதில் குறைந்தவர்களுக்கு விற்பதைத் தடை செய்யலாம்)

2. சினிமாக்களில் வன்முறைக்கு கடும் கட்டுப்பாடு கொண்டுவரலாம். (வேறு வழியில்லை, கருத்து சுந்ததிரத்தை விட சமூக நலனே முக்கியமாக படுகிறது)

NKS.ஹாஜா மைதீன் said...

நிச்சயம் அந்த அதிர்ச்சியில் இருந்து சக மாணவர்கள் மீள நீண்ட நாட்கள் ஆகும்...ஆனால் நீங்கள் சொல்வதுபோல இனி ஊடகங்கள் நிஜம்,நடந்தது என்ன என்று இது பற்றிய நிகழ்சிகளை போட்டு அவர்களை மேலும் கலவரமாக்குவார்கள் என்பது உறுதி....

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

Unknown said...

திரைப்படங்களே! மாணவர்களின் வன்முறை செயல்களுக்கு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை! உதாரணமா ஏகப்பட்ட படங்களைச் சொல்லலாம், நிழல் நிஜம் என நம்புகின்ற மாணவர் சமுதாயத்திலிருந்துதான் நாம் வந்துள்ளோம். திருப்பூரில் போட்டை ரவுடிகள் போல் மாணவர்கள் குரூப் வைத்துக் கொண்டு சக மாணவனை ஓடஓட அருவாளில் வெட்டி சாய்த்தனர்,இது திரைப்படத்தின் தாக்கம் என்று அந்த மாணவன் கூறியபோது காவல்துறை அதிகாரிகளே அதிர்ந்து போனார்கள்! இன்று ஒரு ஆசிரியை பலியாகிவிட்டார்...இது மாதிரி மாணவர்கள் பிறப்பதில்லை இந்த பாழ்பட்ட சமுதாயத்தினால் உருவாக்கபடுகிறார்கள் அதற்காக நாம் தலைகுனிய வேண்டும்

சென்னை பித்தன் said...

Quo vadis?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார், சத்தியமா அந்த அதிர்ச்சியில இருந்து நான் மீளவே இல்லை. அதற்குள் இப்படி ஒரு பதிவா?... பதிவு பிடிச்சிருக்கு. ஆனா... அந்த நாயை சுட்டு தள்ளணும் சார்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சார்... உங்க பதிவெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. ஓகே. ஆனா, சில பதிவுகள் ஒண்ணுமே இல்லாம எல்லா இடத்துலேயும் முன்னணியில இருக்கே?... அது எப்படி?... வோட்டு தான் முக்கியமா?... அவன் குழந்தைக்கு பர்த் - டே 'ந்னு ஒருத்தன் பதிவு போடறான். அதுக்கு பல பேர் கமென்ட் போடறாங்க. இதுலாம் தட்டிக் கேட்க ஒரு இந்தியன் தாத்தா பதிவுலகத்துக்கு வரலேன்னா... நான் பதிவுலகை விட்டு போகப்போறேன் சார்.. இவனுங்க லொள்ளு தாங்கலை!

சிராஜ் said...

சிவா,

வழக்கம் போலவே உங்களிடம் இருந்து மற்றொரு தரமான பதிவு. மெட்டல் டிடக்டர் வைத்து மாணவர்களை சோதிப்பதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத விஷயம். மற்ற ஆலோசனைகள் மிகச் சரி. இன்னொரு முக்கிய விஷயம் சிவா...யாருமே அதைப்பற்றி சிந்திப்பது இல்லை என்பது தான் உண்மை.....டாஸ்க்மாக் கடையை வைத்துக்கொண்டே குடிக்காதே என்பதும், செக்ஸ் படங்களை திரயிட்டுக்கொண்டே பார்க்காதே என்பதும், விபச்சார விடுதிகளை அல்லது விபச்சாரத்தை ஒழிக்க முற்படாமல் விபச்சாரம் செய்யாதே என்பதும் கேலிக்கூத்தான ஒன்று, நடை முறை சாத்தியம் அற்ற ஒன்று.

எந்த ஒரு தீமையும் வேருடனே கலையப்பட வேண்டும். இலை அல்லது கிளையை மட்டும் வெட்டுவது என்பது அவை மீண்டும் வேகமாக வளரவே வழி செய்யும்.

சிராஜ் said...

/* அவன் குழந்தைக்கு பர்த் - டே 'ந்னு ஒருத்தன் பதிவு போடறான். அதுக்கு பல பேர் கமென்ட் போடறாங்க. இதுலாம் தட்டிக் கேட்க ஒரு இந்தியன் தாத்தா பதிவுலகத்துக்கு வரலேன்னா... நான் பதிவுலகை விட்டு போகப்போறேன் சார்.. */

சகோ பூங்கதிர்,

இது தான் நம்மோட பிரச்சினையே. ஏன் நீங்க ஒரு இந்தியன் தாத்தா வரணும்னு எதிர்பார்க்கிறீங்க?????? நீங்களே இந்தியன் தாத்தாவா மாறிடுங்க. உங்களுக்கு வெளியிட கொஞ்சம் சங்கடமா இருந்தா, எனக்கு அனுப்புங்க நான் வெளியிடறேன்(எனக்கு பிடித்திருந்தால் மட்டும்...).

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சத்தியமா நான் ஒரு இந்தியன் தாத்தா ஸாரி இந்தியன் இளைஞனா மாறத்தான் போறேன். அப்புறம் பாருங்க ஹிட்டுக்கு அலையறவன் பொழைப்பை!(நீங்க நல்லா இருக்கிங்களா சிராஜ் சார்?...)

CS. Mohan Kumar said...

//மெட்டல் டிடக்டர் வைத்து மாணவர்களை சோதிப்பதெல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லாத விஷயம். மற்ற ஆலோசனைகள் மிகச் சரி. //

I too felt the same thing when I read the post y'day. Came today to post this comment & found SIraaj has already written this. I too want to write an article about this incident. But it could be harsh & painful.

சென்னை பித்தன் said...

உங்களுக்கு Liebster Blog விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.பாருங்கள் என் இன்றைய பதிவு.

Related Posts Plugin for WordPress, Blogger...