CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, February 8, 2012

சிம்பு.. சிங்கிள் சிங்கம்லே!!


                                                ஒரு ரொமாண்டிக் உறுமல்........    


ஜம்பு: ஒஸ்தி மாமே......ஒஸ்தி மாமே......சல்லா சலசலா...சல்லா..

தல கவுண்டமணி: என்றா இது காலங்காத்தால சத்தம். இந்த காய்கறி விக்கிற பயலுவ புரியாத பாஷைலையே வியாபாரம் செய்யறாங்கப்பா.

சோம்பலை முறித்துக்கொண்டு பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார். 

தல: யார் இந்த அர டிக்கட்டு. அதுவும் காக்கி ட்ரெஸ்ல. ஒரு வேள நம்ம தெரு கூர்க்காவோட பேரனா இருப்பானோ? டேய்..டிபன் பாக்ஸ் தலையா. நில்றா..

கீழிறங்கி நம்ம போலீசை ஏறி இறங்க பார்த்துவிட்டு யாரென கேட்கிறார்.

ஜம்பு:: நான் யாருன்னு இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும்....

தல: இத்தன நாளா தமிழ்நாட்டுல எந்த சந்துலடா இருந்த? ஒருவேள ஆல் இன் ஆல் அழுகுராஜா கிட்ட சைக்கிள் கேட்ட காரமட ரங்கநாதன் தம்பியா இருப்பியோ?   

ஜம்பு: நோ. நோ. உங்க வீட்ல வாட்ச்மேனா சேர வால்க்-இன் இண்டர்வியூவுக்கு வந்துருக்கேன். ஹவ் இஸ் இட் ஹை?  

தல: அதுக்குதான் இந்த அலும்பலா. படுவா மொதல்ல அந்த கிளாசை கழட்டு. என்னடா இது மூக்குக்கு கீழ ஏகப்பட்ட தூசி. ஒட்டடை அடிக்கும்போது பாதில ஓடி வந்துட்டியா? 

ஜம்பு::  ஹல்லோ..இது என்னோட மீச..மைன்ட்  இட்.   

தல: ஹே..ஹே...சோ சாட். தம்பி...ராசா..பின்னால கெணத்தடில போன வாரம் ஷேவ் பண்ணி போட்ட தூள் ப்ளேடு இருக்கு. உடனே ஓடிப்போயி உன்னோட மீசைய எடுத்துட்டு வந்துருடா மவராசு. அதை பாத்த பயத்துல எனக்கு குளிர் ஜுரம் வர்ற மாதிரி இருக்கு. 

ஷேவ் செய்துவிட்டு ரிட்டன் ஆகிறார் ஜம்பு. 

                                    ஆடி ஆடி தள்ளுபடில வாங்குன கூலர்ஸ்லே!!

ஜம்பு:: Now I am How ண்ணே?        

தல: இதுக்கு அதுவே மேலு. (படுவா. பாண்டி பஜார் ப்ளாட்பார்ம்ல வாங்குன கண்ணாடிய மட்டும் விடவே மாட்டான் போல்ருக்கே). சரி ராத்ரி திருடன் வராம இருக்க என்ன டெக்னிக்கை யூஸ் பண்ணுவ ராசா?

ஜம்பு: வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்..

தல: ஏன் தெற்கு, கிழக்கு, மேற்குல உன்னை சீந்தவே மாட்டாங்களா? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றா அமுல் டப்பா.

ஜம்பு:  நான் அருமையா பாடுவண்ணே. ராவெல்லாம் தூங்கவே மாட்டேன். 

தல: (எங்களையும் தூங்க விட மாட்ட..). எங்க ஒரு பாட்டு பாடு. திருடனே செதறி ஓடற மாதிரி. 

ஜம்பு: ஏ வாடி வாடி வாடி ஸ்வீட், போண்டா, டீ. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

தல: Stop There.  தொம்பி.. ஒனக்கு சம்பளம் மட்டுந்தான். ஸ்வீட், போண்டா, டீ எல்லாம் தர முடியாது. நீ எடத்த காலி பண்ணு.  

ஜம்பு: Hey ஹவுஸ் ஓனர். அது பொண்டாட்டி. அதைத்தான் கொஞ்சம் ஸ்டைலா மாத்தி பாடுனேன். "ஐ  லவ் யூ டில் நீ பாட்டி. தேவை இல்ல வப்பாட்டி"

தல:  பார்ரா...அந்த நெனப்பு வேறயா..!!

ஜம்பு: காபி கொடுத்து காலையில நானே உன்ன எழுப்பி விடுவேன். 

தல: என்னது...உன் முகத்துல நான் விழிக்கணுமா? அட வடபழனி முருகா!! எக்குத்தப்பா மாட்டிக்கிட்டனா?

                                                நின்னுக்கோரி வ..ர..ணு..ம்

ஜம்பு: சமையல் தெரியலன்னா நானே சமையல் செஞ்சி உனக்கு ஊட்டி  விடுவேன். 

தல: அதெல்லாம் வேண்டாண்டா ராசா. இதுக்கு நானு கபாலீஸ்வரர் கோயில்ல உண்ட கட்டி வாங்கி தின்னுட்டு தெப்பக்குளத்துலயே உருண்டு கெடக்கலாம்.  

ஜம்பு: உன்ன நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன். என்ன நீ சந்தேகப்படுற மாதிரி நடக்க மாட்டேன். 

தல: (ஒரு மாசம் வேலைக்கி வச்சிட்டு சம்பளம் தராம தொரத்தலாம்னு நெனச்சத கண்டுபுடிச்சிட்டானோ?). வேற எப்படி..பேஷன் டி.வி.ல வர்றா மாதிரி வளச்சி வளச்சி நடப்பியோ?  

ஜம்பு: என் நெஞ்சுல ஒன்ன சொமப்பேன். ஒன்ன டெய்லி நானு ரசிப்பேன். உன் நிழலைப்போல நானிருப்பேன். 

தல: நெஞ்சுல சொமப்பியா? உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி முடிய மட்டும் கிளீன் பண்ணிடு செல்லம். அங்க ட்ராவல் பண்ணும்போது அண்ணன் தொலஞ்சிட போறேன். டெய்லி ஏண்டா ரசிக்கற? அவனா நீ?  நிழலைப்போல இருப்பானாமுல்ல.  அப்பாட. மான் மார்க் கொடை வாங்குற காசு மிச்சம். 

ஜம்பு: உன் முன்னாடி சத்தியமா என் உசுரு என்ன விடாது...

தல: நீ இன்னும் 49 வருசத்துக்கு எங்கள விட மாட்ட போல இருக்கே. 

ஜம்பு: ஏன்னா நான் போய்ட்டா உன்ன யாரும் விதவையா பாக்க கூடாது..

தல: செண்டிமென்ட்டு டோய். 

ஜம்பு: என்ன விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்?

தல: என்ன திடீர்னு 'டி' போட்டெல்லாம் கூப்புடறான். கன்பர்ம் அவனேதான் இவன். 

ஜம்பு: ஒரு தகப்பன் போலவும் இருப்பேன், ஒரு தாயப்போலவும் இருப்பேன். நண்பன் போல நடப்பேன். அந்த கடவுள் போல காப்பேன். 

தல: ஆக மொத்தத்துல வாட்ச்மேனா மட்டும் இருக்க மாட்டேன்னு சொல்ல வர்ற? 

ஜம்பு: உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்.

தல: அடங்கப்பா. எனக்கு இப்படி ஒரு சத்திய சோதனையா. ஆள விட்றா சாமி. 

தல கக்கூசை நோக்கி 210 மைல் வேகத்தில் பதறி ஓடுகிறார். 
.....................................................................................18 comments:

முத்தரசு said...

ஹா ஹா ஹா....நல்லதாம்யா யோசிகிரிக

Thava said...

@@ நிறுத்துடா. உனக்கு சம்பளம் மட்டுந்தான். போண்டா டீ எல்லாம் தர முடியாது. @@
சிரிச்சிக்கிட்டே படிக்க வச்சிட்டீங்க..அது எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிரீங்க..காமெடி கல கட்டிருச்சி..நன்றி.
சைக்கோ திரை விமர்சனம்

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

எல்லாப்புகழும் எஸ்.டி.ஆருக்கே

! சிவகுமார் ! said...

@ குமரன்

நன்றி குமரன்

Unknown said...

யோவ் சிவக்குமாரூ...
நீ..போட்ட பதிவுல சிம்பு டவுசர் டர்ரூ..
வர்றாரு டிஆர் ரூ!
சிப்பு..சிப்பா வருதுங்கோ!

Unknown said...

என்றா என்றா முறைக்கிரே ராசு கோலு பிச்சி புடுவேன்...ஆளும் அமுல் பேபி மூஞ்சியும்..டூ ஸ்டெப் பேக் மேன்...பிலடி ஆப்பிரிக்க வெள்ள பன்னி குட்டி!

---

எப்பிடி மாப்ளே இப்படி கலக்குரே ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யார்ல அது கரடிய உள்ள விட்டது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி ////

யூ மீன் பிக் கரடி...?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema enjoyed it

நாய் நக்ஸ் said...

.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நடக்குது இங்கே....!!!

MANO நாஞ்சில் மனோ said...

சரிய்யா சரிய்யா விடுய்யா விடுய்யா.....

ஹாலிவுட்ரசிகன் said...

//ஏ வாடி வாடி வாடி ஸ்வீட், போண்டா, டீ.//
பொண்டாட்டி என்ற ஒரு வார்த்தைக்கு என்ன ஒரு விளக்கம், என்ன ஒரு தெளிவுரை. ஐயா தமிழ் அறிஞரே ... வாழ்க.

ஹாலிவுட்ரசிகன் said...

செம காமெடி கலக்கல். பவன் இன்னிக்கு கல கட்டுது...

Yoga.S. said...

எப்புடியோ இன்னிக்கும் ஒங்களுக்கு ஒரு அடிமை கெடைச்சிட்டான்,தூள் கிளப்புங்க,ம்!ம்!ம்!ம்!ம்!ம்!!!!

சம்பத்குமார் said...

வணக்கம் சிவா

நலமா..?

//நெஞ்சுல சொமப்பியா? உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி முடிய மட்டும் கிளீன் பண்ணிடு செல்லம் //

சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குது.ஏதாவது தனியா ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?

அப்புறமா சைட்ல முதல் (முரட்டு)ரசிகர் மன்றம் எப்போ ஆரம்பிச்சீங்க ?

உணவு உலகம் said...

என்னமா யோசிக்கிறீங்கப்பா! சூப்பர்.

Unknown said...

காலையில் ஆனந்த விகடன் வாங்கியதும் மாலையில் படித்துக் கொள்ளலாம் என அசட்டையாக இருந்து விட்டேன். ஆனால் அதன் இலவச இணைப்பான என் விகடனில் ஒரு பழகிய முகம் தெரிந்தது, ஆர்வமுடன் எடுத்துப் பார்த்தால் நம்ம கேபிள் சங்கர் அண்ணன். அவரைப் பற்றியும் அவரது வலைத்தளத்தைப் பற்றியும் இரண்டு பக்கத்திற்கு கட்டுரை வந்துள்ளது. மிகுந்த சந்தோஷம். வாழ்த்துக்கள் கேபிள் அண்ணே. மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியாக ஒவ்வொரு வாரமும் ஒரு வலைப்பதிவைப் பற்றி போடப் போவதாகவும் அதில் அறிவிப்பு வந்துள்ளது. இனிமேல் நமது வலையுலக நண்பர்களுக்கு கொண்டாட்டம் தான். அதிலும் விகடனின் அங்கீகாரம் என்பது கூடுதல் கொண்டாட்டம் தான் போங்கள். வலையுலகத்தினர் தங்களுடைய வலைப்பதிவு பற்றிய விவரங்கள் விகடனில் இடம் பெற வேண்டும் என விரும்பினால் தங்களுடைய சுய அறிமுகத்துடன் தங்களது வலைப்பதிவு பற்றிய விவரங்களை chennai@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தால் அவற்றில் சிறந்த வலைப்பதிவு, ஒவ்வொரு வாரமும் என் விகடன் சென்னை பதிப்பில் வெளியிடப்படும்.

Related Posts Plugin for WordPress, Blogger...