CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, February 6, 2012

மெரினா


                                                                                                                                     
மழலை மேஸ்திரிகள் கட்டும் மணல் வீடு, அக்னி வெயில் சூட்டையும் அண்டார்டிக் ஐஸாக உணரும் உள்ளம் கொண்ட காதலர்கள், இயல்பாக சிரிக்காமல் சிரிப்பதற்கென்றே க்ளப் அமைத்து கும்பலாக சிரிக்கும் மேற்குடிகள்,'நாங்க சுனாமிலயே ஸ்விம்மிங்க போடுவோம்டா' என்று கடலன்னைக்கு சவால் விடும் மறத்தமிழர்கள்..இன்னும் பற்பல வகையான மனிதர்கள், சம்பவங்கள் என மெரினா பார்க்காததா? கடலளவு கதைகளை தன்னுள் சுமந்திருக்கும் மெரினா பற்றிய சித்திரத்தை பசங்க வாயிலாக நமக்கு தந்திருக்கிறார் கோலிவுட்டின் மஜித் மஜிதியான பாண்டிராஜ். 

'பசங்க'  திரைப்படத்தில்   ஜீவா, அன்புக்கரசை விட என் மனதில் நின்றது பக்கடா பையன்தான். 'மெரினா'வில் பிரதான வேடத்திற்கு ப்ரமோஷன் வாங்கி உள்ளான் 'பக்கடா' பாண்டி. சென்னைக்கு பிழைப்பு தேட வந்து அங்கு சுண்டல், தண்ணீர் பாக்கெட் விற்கும் சிறுவர்களிடம் சிநேகம் ஏற்படுத்தி, படகையே வீடாக்கி வாழ்கிறான் அம்பிகாபதி. 10 ஆம் வகுப்பை டுடோரியல் கல்லூரியில் படிக்க வேண்டுமென்பது அவன் லட்சியம். கடற்கரையையே நம்பி வாழும் பல தரப்பட்ட ஏழை மக்கள் சிலரின் கதைகளையும் கலந்து கூடவே சிவகார்த்திகேயன் - ஓவியா காதலையும் கோர்த்து உள்ளார் இயக்குனர்.

ஓவியாவை சிவகார்த்தி ஓட்டி வசனம் பேசும் இடங்களில் எல்லாம் கரவொலிதான். அவருடைய நண்பராக வருபவர் சொல்லும் மொக்கை தத்துவங்கள், இந்த ஜோடிகளை காதல் செய்யவிடாமல் சுண்டல், சங்கு விற்கும் வாண்டுகள், பூ விற்கும் பெண் என ஒவ்வொருவரும் பேசும் அக்மார்க் சென்னை டயலாக்குகளுக்கும் கைத்தட்டல்கள் பலமாக விழுகின்றன. 'காதல் அப்டிங்கறது காக்கா கக்கா  மாதிரி. அது எப்ப வேணும்னா யார் தலைலயும் விழும்' என சிவகார்த்தி பல இடங்களில் சிரிப்பு கார்த்தி. நடிக்கதான் சற்று சிரமப்படுகிறார். ஓவியா..நடிச்சிட்டாலும்!!  

                                                                                                                                         
தன்னால் தரமுடிந்த பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் விஜய். இறுதியில் வரும் குதிரைப்போட்டி சிறப்பாக காட்சிப்படுத்தப்படவில்லை என்பது என் எண்ணம்.  பாடல்கள் பாஸ்மார்க் மட்டும் வாங்குகின்றன. 'சென்னை' டைட்டில் பாடல் அருமை. பழைய பாடல்களை பாடுபவராக ஒருவரை வைத்து காட்சிகளை அமைத்துள்ள இயக்குனர் அப்பாடல்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கலாம். குதிரை ஓட்டுபவர், தாத்தா என அனைவரையும் மறந்துவிட்டு வெள்ளைகாரர்களிடம் பரிசு வாங்குவது, அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறி மெரினாவில் பிச்சை எடுப்பது ஏன் என தாத்தா சொல்லும் காட்சிகள் நெகிழ்வு. ஆனால் ஆழமான கதை(மெரினா..ஆழம் கண்டிப்பா அவசியம் பாண்டிராஜ்), திக்கற்று அல்லாடும் திரைக்கதை என முக்கியமான மைனஸ்கள். 

கோடம்பாக்க படைப்பாளிகளுக்கு என பிரத்யேகமாக இருக்கும் ஒரு குழப்பம் பாண்டிராஜுக்கும் இதில் இருந்தது. அது என்னவெனில் ஒரு களத்தை தேர்வு செய்தால் அதை முழுமையாகவும் அதே நேரம் சுவாரஸ்யம் குன்றாமலும்  இரண்டரை மணி நேரத்திற்குள் எப்படியாவது திணித்து ரசிகர்களிடம் தந்து விட வேண்டும் என்பதில் காட்டும் அவசரம்/ஆசை. உதாரணம்: பெரியார் எனும் மனிதர் பல்லாண்டு காலம் வாழ்ந்த சரித்திரத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று பாகங்களில் சொல்லாமல் ஒரே படத்தில் கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களையும் திணித்து விட எண்ணிய இயக்குனர் ஞானராஜசேகரன் போல. மெரினாவும் அதற்கு இன்னொரு உதாரணம். 

ஹிட்லர் எனும் மனிதனை பற்றி ஒவ்வொரு படைப்பாளியின் பார்வையில் எத்தனை படங்கள்? சின்ட்லர்ஸ் லிஸ்ட்,Downfall,இங்க்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர்...இப்படி.அதுபோல இந்த 'மெரினா'வைத்தாண்டி வேறொரு பார்வையில் மெரீனா கடற்கரை பற்றி இன்னும் சில படங்கள் வர வேண்டும் என்பதுதான் நமதாசை. சென்னையிலேயே பிறந்து வளர்ந்து அவ்வப்போது கடற்கரைக்கு சென்று சிறுவர்களிடம் சுண்டல் வாங்கி உண்ணும் பலருக்கு 'மெரினா' திரைப்படம் பல புதிய தகவல்களை சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது. இக்கடற்கரையை காணாதோருக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும் 'மெரினா'.    

மெரினா - டைம் பாஸ். 
...........................................................................

கடலோரக்கவிதை: 

நா. முத்துகுமார் எழுதிய டைட்டில் பாடலான 'வணக்கம். வாழ வைக்கும் சென்னை' நன்றாக இருந்தது.'மிரட்டி ஓடவைக்கும் சென்னை. மிரட்டுதென்னை. இருந்தும் ஓடவில்லையே', 'பலநூறு சனம் வந்து வாழும் இடந்தான். அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடந்தான்', எப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா.  அவ உன்னுடைய வளர்ச்சிக்கு ஏணி கொடுப்பா' என சென்னை குறித்தான நிதர்சனங்களை பதிவு செய்துள்ளார் கவிஞர். பின்னணி பாடிய ராமஷங்கர், முகேஷ், ஷில்பா அனைவரின் குரல்களும் இனிமை. பிரபல நட்சத்திரங்களின் 'சென்னை மெரினா' ப்ரமோ பாடல்: 


 .................................................................................................................


..............................
My other site:
.............................


                                                                    

20 comments:

Thava said...

என் இனிய இரவு வணக்கம்,
இந்த படத்தை பற்றி நிறைய நல்ல விமர்சனங்களாக வந்துக் கொண்டிருக்கின்றன..அதில் இதுவும் ஒன்று..அருமையான வரிகள்..அழகாக எழுதியுள்ளீகள்..

@@ இக்கடற்கரையை காணாதோருக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும் 'மெரினா'. @@
நான் பார்த்ததில்லை..கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பேன்..மிக்க நன்றி.

சைக்கோ திரை விமர்சனம்..

Unknown said...

நச் விமர்சனம் சிவா. நான் கூட சில விஷயத்தை பூசி மெழுகினேன். ஆனால் நீங்கள் அசத்தலான விமர்சனம் போட்டு அசத்தி விட்டீர்கள்.

CS. Mohan Kumar said...

ஓவியா நடிக்கணுமா என்ன?

கோவை நேரம் said...

உங்க விமர்சனம் மாதிரி இல்லையே,....ரொம்ப வேறுபடுதே ....

சி.பி.செந்தில்குமார் said...

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

! சிவகுமார் ! said...

@ குமரன்

நன்றி குமரன். மெரீனா பார்க்காத நீங்கள் இந்த மெரினா பாருங்கள்.

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா செந்தில்

நன்றி செந்தில்.

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
ஓவியா நடிக்கணுமா என்ன?//

ஹா.ஹா...அவங்களை நடிகைன்னு சொல்றதுக்காவது கொஞ்சம் நடிக்கலாம்..

! சிவகுமார் ! said...

//கோவை நேரம் said...
உங்க விமர்சனம் மாதிரி இல்லையே,....ரொம்ப வேறுபடுதே ...//

படம் வேறுபடுவதை பொறுத்துதானே விமர்சனமும்.

! சிவகுமார் ! said...

//சி.பி.செந்தில்குமார் said...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

???????????????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாண்டிராஜ் கொஞ்சம் அவசரப்பட்டுட்டார் போல...

rajamelaiyur said...

நல்ல விமர்சனம் .. எனக்கு படம் பிடித்துள்ளது

rajamelaiyur said...

உங்கள் பார்வைக்கு இன்று :
விஜய்யின் துப்பாக்கி படத்தின் கதை வெளியானதா ? முருகதாஸ்அதிர்ச்சி

நாய் நக்ஸ் said...

OK..SIVA..
DOWNLODE PANNIDUREN....

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

சென்னையை துல்லியமாக திரையில் பிரதிபலிக்கும் திறமை வெகு சில படைப்பாளிகளுக்கு மட்டுமே உள்ளது. பாண்டிராஜ் ஜஸ்ட் பாஸ்தான் வாங்கி உள்ளார்.

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!ஒவ்வொருவர் ஒவ்வொரு ரசனையில் விமர்சிக்கிறீர்கள்!"அகசியம்"வரோ ஒரு டைப்!சி.பி ஒரு டைப்!:நீங்க ஒரு டைப்!மொத்தத்துல மூணு படம் பாத்தாச்சு,நன்றி!!!!!

சென்னை பித்தன் said...

ஒரு காலத்தில் மெரினாவும் சாந்தோமும் அடிக்கடி சென்றதுண்டு.(கல்லூரி நாட்கள்!)இப்போது சாந்தோம் இல்லை..மெரினா போய் வருடக்கணக்காகி விட்டது சிவா.
நல்ல விமரிசனம்

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

படத்தை ரொம்ப நோண்டி நொங்கெடுக்காம, மேலோட்டமா.. ஆனா, அதே சமயம் தேவையான அளவுக்கு ஆழமாவும் விவர்சனம் செய்துள்ள அழகு பாராட்ட வைக்கிறது.

ஹாலிவுட்ரசிகன் said...

// இக்கடற்கரையை காணாதோருக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும் 'மெரினா'. //

ஒருமுறை இந்தியா வந்திருந்தபோது இரண்டு மணிநேரங்கள் மெரீனாவில் கழித்தது மட்டும் தான். கட்டாயம் நான் காணாமல் தவறவிட்ட பல விடயங்களை இதில் பார்க்கலாம் என நம்புகிறேன்.

நல்ல விமர்சனம். நன்றி.

Unknown said...

மெரினா சென்றவருக்கும் பிடிக்கும்....அந்த கடற்கரையில் அப்படி என்னதான் மாயம் உள்ளதோ மனம் ரம்யமாக இருக்கிறது.....உங்கள் விமர்சனத்தைப் போலவே!

Related Posts Plugin for WordPress, Blogger...