CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, February 4, 2012

ஒலிம்பிக்கும், இந்தியாவும்                                                           பதக்கங்கள் தயார்...

ஜூலை 27 அன்று தொடங்கப்போடும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை முற்றிலுமாக தயார் செய்து கொண்டு விட்டது லண்டன். அதில் பங்குபெற இந்திய வீர,வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க அளவில் தகுதியும் பெற்றாகி விட்டனர். முன்பொரு காலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து தங்க மெடல்களை அள்ளி வந்தது இந்தியா. அது ஒரு பொற்காலம். கடந்த முப்பது வருடத்தில் நம் தேசம் வென்றது ஒரே ஒரு தங்கம்தான். மிஞ்சிப்போனால் ஒரு வெண்கலம். அதிசயமாக ஒரு வெள்ளி. இதுதான் தொடர்கதையாகி வந்தது. 

என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டு சேனல்களும், பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களும் கிரிக்கெட்டை அளவுக்கு அதிகமாக தூக்கி விட்டு மக்கள் தலையில் மிளகாய் அரைக்க ஆரம்பித்ததோ அன்றே மற்ற விளையாட்டுகள் மக்களை விட்டு விலக ஆரம்பித்தன. "எம் புள்ள சச்சின் மாதிரி வரணும். எம்புள்ள ஷேவாக் மாதிரி வரணும்" என்று கோடைக்கால சிறப்பு பயிற்சிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப ஆரம்பித்தனர் பெற்றோர்கள். ஒருவர் வாயில் இருந்தும் "எம்புள்ள பி.டி. உஷா மாதிரி வரணும், பாய்சுங் பூட்டியா மாதிரி வரணும்" என்று சொல்லியதை கேட்டிருந்தால் அதிசயமே!!

"என்னாது பாய்சுங்கா? அது என்ன பிஸ்ஸா கார்னர்ல புதுசா வந்த ஐட்டமா?" என்று பலர் கேட்டாலும் ஆச்சர்யமில்லைதான். இந்திய கிரிக்கெட் அணியில் நேற்று சேர்ந்த புதிய ப்ளேயரின் ஒன்று விட்ட நாலாவது சித்தப்பாவின் தம்பி மகன் பேர் கூட நினைவில் இருக்கும். கால்பந்து வீரரை பற்றி யார் கவலைப்பட்டா? பத்மஸ்ரீ.பாய்சுங் பூட்டியா...இந்திய கால்பந்து அணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளை விளையாடிவர். இந்திய அணியின் பெருமைமிகு கேப்டன். சில நாட்களுக்கு முன் தனது கடைசி ஆட்டத்தை ஆடிவிட்டு ஓய்வு பெற்றபோது கூட மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மீடியாவும்தான்.  

                                          சிங்கம் புலி.... பாய்சுங் - சுனில் சேத்ரி 

அதே நேரத்தில்தான் நமக்கு அதிமுக்கிய வரலாற்றை பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்ததே.."சச்சின் எப்ப 100 வது 100 அடிப்பார்". உலகிலேயே அதிக ரசிகர்களை தன் பக்கம் வைத்துள்ளது கால்பந்து ஆட்டம். அதில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பாய்சுங்கிற்கு இந்தியா தந்த கௌரவம் இதுதான். தற்போது மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் சுனில் சேத்ரி எனும் இளம் கால்பந்தாட்ட வீரரையாவது இத்தேசம் கண்டு கொள்ளுமா? ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் வேண்டுமென்றால் பார்வையாளர்களிடம் இருந்து ஆளுக்கு ஒரு கைதட்டல் தந்தாலே போதும். சுனில் மாதிரி இளம் ரத்தங்கள் தங்க வேட்டைக்கு தீவிரமாக களம் இறங்க. 

இத்தலைமுறை இளைஞர்களுக்கு ஒலிம்பிக் என்றதும் சட்டென நினைவிற்கு வரும் ஒரே பெயர் அபினவ் பிந்த்ரா. 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர். அதை வெல்ல அவர் பட்ட பாடு சாதாரணமல்ல. இந்திய அரசாங்கம் தரும் துருப்பிடித்த துப்பாக்கி மற்றும் ஹைதர் கால பயிற்சி முறைகளை வைத்துக்கொண்டு குருவி கூட சுடமுடியாது என்பதை நன்கு உணர்ந்து ஜெர்மனிக்கு சொந்த செலவில் சென்று பயிற்சி மேற்கொண்டார். தங்கம் வசப்பட்டது. மகா கோடீஸ்வரர் மகன் என்பதால் மட்டுமே இது கூட சாத்தியம் ஆனது. 

                                                    தங்கமகன் அபினவ் பிந்த்ரா

இந்தியாவைப்போலவே ஒருகாலத்தில் சைனாவும் ஒலிம்பிக்கில் பெரிதாக சோபிக்காமல்தான் இருந்தது. "என்னடா இது பெயர் தெரியாத சுண்டக்காய் நாடு கூட நான்கைந்து தங்கங்களை அள்ளுகிறது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாமோ இப்படி இருக்கிறோம்" என்று ரோஷப்பட ஆரம்பித்த சைனா 90- களுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தங்க வேட்டையாட ஆரம்பித்தது. 2008 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 51 தங்கங்களை வென்று தூள் கிளப்பியது. ஆனால் உலகில் 2 - வது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா வென்றதோ ஒரே ஒரு தங்கம்.         

என்று சாதாரண குடும்ப சூழலில் இருந்து ஒரு வீரரோ, வீராங்கனையோ அரசு உதவியுடன் பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கங்களை வெல்ல ஆரம்பிக்கிறாரோ அப்போதுதான் நவீன இந்தியா சர்வேத விளையாட்டு களத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம். அதற்கான ஆதரவை தரவேண்டியது மாநில, மத்திய அரசுகள்தான். அதையும் தாண்டி மக்களும், ஊடகங்களும் இதைச்செய்ய வேண்டும். ஒரு சில கைதட்டல்கள் மற்றும் மீடியா வெளிச்சம் தருவதன் மூலம். இந்த ஒலிம்பிக்கிலும் இவை நடக்காவிடில்...வழக்கம்போல "சச்சின் எப்பதான் நூறு அடிப்பார்?" என்று 2022 வரை சீட்டின் நுனியில் அமர்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்!!
......................................................................................

................................
My other site:
............................

.....................................................................
சமீபத்தில் விரும்பி படித்தது:

கவுண்டமணி - செந்தில் ரசிகர் மன்றம்                   
.......................................................................                          

                                                          
                                                                     

6 comments:

Unknown said...

நாம் சினிமாக்காரர்கள் பின்னாடியும், அரசியல்வாதி பின்னாடியும்தான் போவோம்:)))

நாய் நக்ஸ் said...

:))))))))))))

எங்களுக்கு...டாஸ்மாக் ...ஓபன்
ஆனா போதும்....

Thava said...

@@ என்று சாதாரண குடும்ப சூழலில் இருந்து ஒரு வீரரோ, வீராங்கனையோ அரசு உதவியுடன் பயிற்சி மேற்கொண்டு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கங்களை வெல்ல ஆரம்பிக்கிறாரோ அப்போதுதான் நவீன இந்தியா சர்வேத விளையாட்டு களத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது என்று அர்த்தம்.@@@

சத்தியமான வரிகள் இவை..பதிவுக்கு நன்றி.

Unknown said...

சிவா! நீங்கள் எடுத்த களத்தில் உள்ள உணர்வு உண்மையில் பல இந்தியனுக்குள்ளும் உள்ளது. தொடர்ந்து வெற்றி வாகை சூடும் செஸ் ஆனந் அவர்களை வரவேற்க வருபவர்கள் பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை விட குறைவு. உலகம் முழுவதும் கொண்டாடும் கால் பந்து விளையாட்டை இந்தியாவில் யாரும் விரும்புவதில்லை.ஆனால் பல அருமையான கால்பந்து வீரர்கள் நம்மிடம் உள்ளனர் சொதப்பலான கிரிகெட் வீரர்களை விட திறமையானவர்கள். நமது அரசும் பல விளையாட்டுகளையும் ஊக்குவிக்க வேண்டும்.
இந்த பதிவு ஒரு சிறந்த பதிவு பாராட்டுகள் சிவா!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

சூப்பர் சார். நல்லா எழுதறிங்க. பாராட்டுகள்.

Related Posts Plugin for WordPress, Blogger...