CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, February 3, 2012

பொறுமை எருமைய விட பெருசு கேப்டன்!                                                               
தமிழக சட்டசபை வரலாற்றில் ஏகப்பட்ட குடுமிப்பிடி சண்டைகளும், மைக் வீசப்பட்டு உடைந்த மண்டைகளும் என நாம் கேட்டிறாத செய்திகளா? ஆனால் நாக்கை கடித்து வீராவேசகோலம் பூண்டதன் மூலம் சபை கண்ணியத்திற்கு வேறொரு இலக்கணம் படைத்துள்ளார் கேப்டன். ஒரு காலத்தில் சோலா பூரி சைஸ் மோதிரத்தால் முன்னாள் அமரும் எம்.எல்.ஏவின் மண்டையில் தக்காளி சட்னி வரவழைத்து புகழ்பெற்றவர் தாமரைக்கனி. அவரைப்போல் அடிக்கடி பொங்கி நாக்கு,கை,கால் ஓங்கும் கட்சியின் இரண்டாம் நிலை, லோயர் பெர்த்  ஆட்களை விட்டு விடுவோம். ஆனால் நீங்களோ எதிர்க்கட்சி தலைவர். அதுவும் கருப்பு எம்.ஜி.ஆர். என சுயநாமகரணம் சூட்டிக்கொண்டவர். சபையில் தனது கட்சி ஆள் பரம வைரியான கலைஞரை எதிர்த்து நாகரீகம் இன்றி பேசினால் உடனே அவரை கடிந்து விட்டு அமரச்செய்வார் எம்.ஜி.ஆர். அவரின் வழித்தோன்றல் என்று சொல்லிக்கொள்ளும்  நீங்கள்?

முன்கோபம் எனும் ஆயுதத்தை வைத்துக்கொண்டு அடிக்கடி படம் காட்டுவதால் மக்கள், தொண்டர்கள் தாண்டி இப்போது கூட இருக்கும் ஆலோசகர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட மேடமையும், உங்களையும் நெருங்க அஞ்சும் நிலை பெருமளவு உருவாகிவிட்டது. யார் அதிக கோபக்காரர் என்று பலப்பரீட்சை நடத்தவா உங்களுக்கு வாக்களித்தார்கள்? கவர்னர் ஆட்சி நடந்து அதில் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிப்பது பிறகு இருக்கட்டும். 'தென்னவனில்' நீங்கள் சொல்வது போல மக்களுக்கு 'ரீகால்' உரிமை வந்தால் ஒரு ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள்  கூட இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் இப்படி உறும முடியாது என்பதே உண்மை. அந்த நாளும் வந்திடாதோ....

                                                         என் வழி..தனி வழி...

இங்கு சபையில் நீங்கள் போடும் சீன்கள் எல்லாம் லால்லிபாப் வகையறா. நாடாளுமன்றத்தில் நடக்கும் அமளிதுமளிகளை எத்தனை முறை பார்த்து உள்ளீர்கள் கேப்டன்? அதை அவ்வப்போது பாருங்கள். எதிரிகள் என்னதான் கோபத்தை கிளறி கேள்வி கேட்டாலும் அதற்கெல்லாம் அசராமல் ஒரு வரி நகைச்சுவையாக பேசி அவர்களை ஆப் செய்து சபையையே சிரிக்க வைப்பார் 'தல' லாலு பிரசாத். மம்தா அக்கா, சுஷ்மா மேடம், அருண் ஜெட்லி போன்றவர்கள் அனல் காக்க ஆரம்பித்தால் அதிரும் நாடாளுமன்றம். அவர்களுக்கு தெரியாத நாகரீகமா? உங்களை எல்லாம் எம்.பி. ஆக்கி அந்த கூண்டில் சில மாதங்கள் அடைக்க வேண்டும். நாக்கை கடித்தாலும், மூக்கை கடித்தாலும் அவர்களிடம் பருப்பு அவ்வளவு எளிதில் வேகாது. நீங்க என்னடான்னா ஸ்ட்ரீட் பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு திரியறீங்க...

நேற்று அளித்த பிரஸ் மீட்டில்தான் எத்தனை தமாசு. எந்த வருடம் அ.தி.மு.க.  எம்.பி. தேர்தலில் 40 இடங்களிலும் தோற்றது என்பதை அறியாமல் அருகில் உள்ளவரிடம் '1994 ஆ...2004 ஆ...இல்ல 1999 ஆ' என்று கேட்டீர்கள். புள்ளிவிவர டிப்போ நீங்களே இந்த சாதாரண மேட்டரை மனதில் தேக்கி வைக்காதது கொடுமை. அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்குமா என்று கேட்டால் அதற்கும் நேரடி பதில் இல்லை. கூட்டணி தர்மம் எங்கே போனது என்று கேட்டால் "அப்படி என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நீங்கள் பத்திரிக்கையாளர்கள்தானே..நீங்களே சொல்லுங்கள். முதலில் உங்களுக்குள் ஒற்றுமை உள்ளதா?" என்று எதிர் கேள்வி கேட்டீர்கள். 

அடுத்து எடுக்கப்போகும் முடிவுகள் குறித்து ஒரு தெளிவான பதிலும் இல்லை. எதைக்கேட்டாலும் "அதை நடக்கும்போது பார்த்துக்கொள்ளுங்கள்" என்கிறீர்கள். பிறகு எதைத்தான் மீடியா ஆட்கள் கேட்க வேண்டும் எதிர்பார்க்கிறீர்கள்? தங்கள் தவறை சுட்டிக்காட்டினால் உடனே கோபம் கொண்டு "நீங்க ஜெயா டி.வி.யா..இல்லை ராஜ் டி.வி.யா" என்று மடக்குகிறீர்கள். எந்த டி.வி. ஆளாக இருந்தால் என்ன? கேட்ட கேள்வியில் நியாயமும்,  நாகரீகமும் இருந்தால் பதில் சொல்ல என்ன தயக்கம்?  

மேடமை பற்றி 'நாக்கு கடி' சட்டசபை நிகழ்வு நடந்த பின்பு கேப்டன் சொன்னார் "யாரையும் பேச விட மாட்டார் ஜெ. பிறகு மக்கள் பிரச்னையை எப்படி பேச? ஆணவத்துடன் நடந்து கொள்ளும் போக்கில் இருந்து அவர் இன்னும் திருந்தவே இல்லை". தேர்தல் நேரத்திலும், நேற்றும் நீங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளித்த இரண்டு பேட்டிகளையும் பார்த்ததில் நீங்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் பலநூறு மைல்கள் உள்ளது என்பது தெளிவாகிறது. முதலில் மீடியா ஆட்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுற்றி வளைக்காமல், சவுண்டை நாலு பாயின்ட் கம்மி செய்துகொண்டு பதில் சொல்ல பழகுங்கள் கேப்டன். நீங்களே இப்படி இருந்தால் பிறகு ஜெ. வை குறை கூறி என்ன பயன்?  எதையும் எளிதாக எடுத்து கொள்ளும் பண்பும், விவேகமும் இல்லாதவரை நீங்கள் சபைப்பேச்சு மற்றும் பிரஸ் மீட் விஷயங்களில் UKG பாஸ் செய்ய பல அரியர்ஸ் எழுத வேண்டும். அதை மறக்க வேண்டாம் தவசி ஐயா.

நான் முன்ன சொன்ன மாதிரி உங்களை மாதிரி செம டென்ஷன் ஆட்களை எம்.பி. ஆக்கி பார்லிமெண்டுக்கு அனுப்பனும். அங்க நீங்க பொங்கிப்பாருங்க. அப்ப இருக்கு உங்களுக்கு தீபாவளி. எங்களுக்கும்தான்!!
...........................................................................................

சின்ன சிங்கம் களம் இறங்கிடுச்சீ......................

தனது இளைய மகன் வைஸ் கேப்டன் சண்முகபாண்டியனை அதிரடி ஹீரோவாக களம் இறக்கி தான் திரையில் இல்லாத குறையை நிரப்பப்போகும் எங்கள் கேப்டனுக்கு கோடான கோடி நன்றி. யாருப்பா அது சூப்பர், அல்டிமேட் ஸ்டாரு, ஒலக நாயகன், எளய தளபதி.....எல்லாம் நாப்பது ஸ்டெப் பேக்ல நில்லுங்க. ஒரு சூறாவளி கிளம்பியதே..சிவ தாண்டவம் தொடங்கியதே..!!ஷூட்டிங் துவங்கும் முன்பே வைஸ் கேப்டனுக்கு நாங்கள் முதல் ரசிகர் மன்றத்தை துவக்கிய  பெருமையை நாளை வரலாறு பேசும். பேசணும். இந்த வலைப்பூவின் வலது உச்சியில் ஏறி பேனர் கட்டி முதல் ரசிகர் மன்றத்தை ஆரம்பித்த டயர்டில் இருப்பதால் சோடா குடித்து விட்டு வருகிறேன்.    
.......................................................................................................

லாலுடிக்ஸ்: 

அவ்வப்போது தனது நகைச்சுவையான  பேச்சுகளின் மூலம் நாடாளுமன்ற பிரதிநிதிகளையும், நம்மையும்  கலகலக்க வைக்கும் லாலுவின் வரலாற்று சுவடுகளில் இருந்து ஒரு சாம்பிள். பார்த்து மகிழ்க:      


..................................................................................

..............................
My other site:
.............................


                                                              

16 comments:

அருண் பிரசாத் said...

:)

அருண் பிரசாத் said...

இதுவும் நல்லாதாம்லே இருக்கு...

! சிவகுமார் ! said...

@அருண் பிரசாத்

இன்னும் கேப்டன் வசம் நிறைய சரக்கு இருக்கு :))

ரஹீம் கஸ்ஸாலி said...

என்னது? வைஸ் கேபடன் வேறா? ஸ்ஸ்...யப்பா இப்பவே கண்ணைகட்டுதே....

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!///இன்னும் கேப்டன் வசம் நிறைய "சரக்கு" இருக்கு!///இது நீங்க சொல்லியா தெரியணும் நிறைய(சரக்கு) இருக்குண்ணு??????அப்புடி இல்லேன்னாக் கூட பாண்டிச்சேரிலேருந்து இறக்கிட மாட்டாரு??????ஹ!ஹ!ஹா!!!!

! சிவகுமார் ! said...

@ கஸாலி

இதுக்கே அசந்தா எப்படி? பட ரிலீசுக்கு நம்ம ஊருக்கு வந்துடுங்க..

! சிவகுமார் ! said...

@ யோகா

நான் அந்த சரக்கை சொல்லலீங்கோ!!

சென்னை பித்தன் said...

வைஸ் வேறா?நடக்கட்டும்.

ஹாலிவுட்ரசிகன் said...

இனி இவனுங்க கொட்டம் அடங்காதே??? ரெண்டு பேரும் ஸ்க்ரீனுல மாறி மாறி பறக்கவேண்டியது தான்.

லாலு வீடியோ சூப்பர்.

உணவு உலகம் said...

அப்ப நீங்க இளைய கேப்டனுக்கும் ரசிகர் மன்றத் தலைவரா!

ஆமினா said...

//அனல் காக்க//

அனல் கக்க?லல்லுபோல வருமா? :-)

Unknown said...

யோவ் உனக்கு எங்க பருப்பு தங்கத்த ச்சே கருப்பு தங்கத்த பாத்த கிண்டலா போச்சா...ஆங் பிச்சி புடுவோம் பிச்சி!...அது சரி wise captain அப்படின்னா கெட்ட பழக்க கேப்டன்னு அர்த்தமா please reply ஹிஹி!

Unknown said...

கேப்டன் said...
யோய்...சிவக்குமார்..தினமும் என்ன பத்தி....எழுதிகிட்டே..இருக்க...எம் மேல எந்த தப்பும் இல்லை
பக்கத்துல உக்கார்ந்து இருந்த ஸ்டாலின் "ஸ்டார்ட் கேமரா"
அப்டின்னூ சொல்லிட்டாரு....ஆங்க் நன்றி வணக்கம் மக்கலே(ளே).....

Prem S said...

'புள்ளிவிவர டிப்போ"பட்டம் அருமை அருமை

cyberthiru said...

CAPTAN ANNA INNORU MURAI CHINA GOWNDER PADAM PART-2 EDUNGA .ATHALA NEENGA EVALUVU PORUMAYA IRUNTHEENGA. IPPA MATTUM EN ERUMAYA MARITEENGS

cyberthiru said...

YOV YARACHUM CAPTAIN ANNANE THAPPA PESUNEENGA. NAAN SUMMA IRRUKKA MATEAN. APPURAM CHINA GOWNDER PART-2 EDUTHU AVARUDAIYA PORUMAIYAI NIRUBIBPOM.

Related Posts Plugin for WordPress, Blogger...