CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, February 2, 2012

வாழ்க்க ஒரு (மா)வட்டம் கேப்டன்!                                                                   
கலாட்டா கல்யாணம்..மேடம் அவர்கள் சிவாஜியுடன் நடித்த முதல் படம். பொதுவாக படப்பிடிப்பு நடக்க தொடங்கும் நேரத்திற்கு அரை மணி  முன்பாகவே செட்டுக்கு வந்து விடுவார் சிவாஜி. அதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த மேடம் அந்தப்படப்பிடிப்பின் போதெல்லாம் சிவாஜிக்கு முன்பாகவே செட்டிற்கு வந்து அமர்ந்துகொண்டு கையில் ஆங்கில நாவலை ஸ்டைலாக படித்துகொண்டு இருப்பாராம். எதிலும் தோற்கக்கூடாது எனும் பிடிவாதம். அதுவே அவருக்கு அசுர பலம்,பேரசுர பலவீனமும் கூட. 'பேரரசு' பட நாயகன் கேப்டன்(அரசியலில் சிற்றரசு) இப்போது 'தானே' புயல் விவகாரம் பற்றி சட்டசபையில் பேசி மேடமின் கடுங்கோபப்புயலை கிளப்போ கிளப்பென்று கிளப்பி இருக்கிறார். 

வெகுண்டெழுந்த வேங்கையாக கேப்டன் கட்சியை வெள்ளாவியில் வைத்து வெளுத்துவிட்டார் 'வெண்ணிற ஆடை' அறிமுக நாயகி. அதாவது கேப்டன் இவர்களுடன் சேராவிட்டால் ஒரு சீட் கூட கிடைத்து இருக்காதாம். அப்பறம் எதற்கு வைகோவை லூசில் விட்டு விட்டு முதலில் கேப்டனிடம் தொகுதி பங்கீடு பற்றி பேச we will meet. will meet. meet என்று அழைப்பு விடுத்தார்? அம்மாடி. அதுவும் சட்டசபைல என்னா சவுண்டு? நல்லவேளை அந்த நேரம் பாத்து பன்னீரு வழக்கம்போல பம்மிட்டு இருந்தாரு. நம்ம நாடாளுமன்ற சபாநாயகி மீரா குமாரு மேடம் மாதிரி ''சைலன்ட். மிஸ். ஜெயலலிதா சிட் டவுன் ப்ளீஸ்'' என்று லோக்கல்(தமிழக) சபாநாயகர் ஜெயகுமார் சொல்லி இருந்தால் மேடமின் பார்வை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்தேன். சிப்பு சிப்பா வருது வாத்யாரே!!

'என்னடா விருதகிரிக்கு பிறகு படமே வரலையே' என்று ஏங்கித்தவித்த எம் போன்ற தீவெறி ரசிகர்களுக்கு நேற்று திடீர் தீபாவளிதான். சினிமாவில் பஞ்ச் அடிப்பது போல கேப்டன் சட்டசபையில் இப்படி பொங்கி இருக்க வேண்டாம். தலைவா..ஒன்று மட்டும் (லாங் சைஸ்) நோட் பண்ணிக்கங்க. நீங்க என்னதான் ஆர்ம்ஸை முறுக்கி வசனம் பேசினாலும்..ஆகப்போவது ஒன்றுமில்லை. மேடம் கொந்தளிச்சா கொக்க கோலாவே 150 டிகிரி ஹீட்டில் கதகதக்கும். நீங்க ஷார்ட் டெம்பர் என்றால் எங்க மேடம் லாங்.லாங்கர்.லாங்கஸ்ட் டெம்பர் கொண்டவர் என்று இப்போது உணர்ந்து இருப்பீர்கள். யாரு கிட்ட?


மக்களுடனும், தெய்வத்துடனும்தான் கூட்டணி என்று கூறிவிட்டு பிறகு பல்டி அடித்ததன் பலன் இப்போது பலமாக கிடைத்துள்ளது. படத்துல ரோப் கட்டி பகுமானமா பல்டி அடிக்கற நீங்க இந்த மேட்டர்ல 'கோட்டை' விட்டுட்டீங்க. 'பல முறையில் பக்குவமாக பல்டி அடிப்பது எப்படி?' எனும் சூட்சுமத்தை இதற்கு முன்பு செமையாக கையாண்ட ராமதாஸ் ஐயாவிடம் உடனே 'க்ராஷ் கோர்ஸ்' போக வேண்டிய நேரம் வந்துருச்சி கேப்டன். 

மீடியாவிற்கு அளித்த பேட்டியில் 'அவங்களும் 10 மாசம்தான். நாங்களும் 10 மாசம்தான்." என்று பேசியதுதான் பக்கா பஞ்ச். இந்த டயலாக்கு ரொம்ப முக்கியமா தலைவா? எரிமலைய எட்டி பாக்கும்போது தீக்குச்சிய வேற எதுக்கு பத்த வக்கணும்?

''தேர்தலுக்கு முன்புவரை மின்னணு வாக்குப்பதிவு கூடாது என்று கூறிவந்த ஜெயலலிதா(கேப்டன்தாங்க ஜெயலலிதான்னு பேர் சொல்லி பேட்டி குடுத்தாரு. நான் அப்படி சொல்லவே இல்லீங்க போலீஸ்கார்).  அதற்கு பிறகு வெற்றிகள் கிடைக்க ஆரம்பித்ததும் அதைப்பற்றி பேசாதது ஏன்?" என்று என் வீட்டு L.G(Life is Good) டி.வி. முன்பாக ஆவேசமாக கேட்டதும் பயத்தில் பதறி  கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டை கீழே போட்டுவிட்டேன். ஏங்க இதையெல்லாம் சட்டசபைலயே மேடம் கிட்ட கொறஞ்சது ஒரு 25 அடி தூரத்துல நின்னாவது கேட்டு இருக்கலாமே? நானா கெடச்சேன்? வீக்கெண்ட்ல கோயம்பேடு பக்கம் வரும்போது உங்க ஆபீசை தாண்டிதான் போவேன். 15 ரூவா சிப்ஸ் பாக்கெட்டுக்கு இழப்பீடு வாங்காம விட்றதா இல்ல. உங்களுக்கு மட்டுந்தான் கண்ணு செவக்குமா? சென்னைக்காரன். 'மெட்ராஸ் ஐ' கொண்டு உங்களைப்பாத்தா என்ன ஆகும்னு தெரியும்ல? சொல்றத சொல்லிட்டேன். 

என்னதான் கெட்ட பெயர் வாங்கினாலும் கலைஞர் கலைஞர்தான். இந்த சண்டையை பார்த்து உள்ளூர குதூகளித்தாலும் வெளியே பேசுகையில் ''இது எதிர்பார்த்த ஒன்றுதான்" என்று பேசி உள்ளார். தமிழ் பண்பாடுய்யா!! (திராவிட பண் இப்ப பாடுய்யா. ஸ்டார் மியூசிக்).  ''சரி சரி ரெண்டு பேரும் சண்ட போட்டுக்காதீங்கப்பா" என்று (மருதமலை) சிங்கமுத்து பாணியில் சொல்லிவிட்டு வழக்கம்போல வதைபடப்போவது...வேற யாரு?? இவர்களை நம்பி வாக்களித்த வக்கெத்த ஆட்களாகிய நம்மளேதான்!! 

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம். மேடமுடன் கூட்டணி பேச்சு வார்த்தை வேண்டாம் என்று உதறிவிட்டு தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க. கட்சியின்   கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் அவர்கள் தமது தலைமை அலுவலகமான தாயகத்தில் எங்களுக்கு(குறிப்பாக விந்தை மனிதன் ராஜாராமனுக்கு) அளித்த பேட்டி விரைவில் பதிவிடப்படும். ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதமாக வரப்போகும் பதிவு என்றாலும், இப்போதைய அரசியல் சூழலுக்கு இப்பேட்டி பொருத்தமாகவே இருக்கும் என எண்ணுகிறோம். 

                                                             
    
சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு..ஏன்? எதற்கு?

இளைஞர்களை கவர ம.தி.மு.க வகுத்துள்ள திட்டமென்ன? 

மாநில அடிப்படை பிரச்னைகளுக்காக வைகோ அடிக்கடி குரல் கொடுத்தாரா?

இப்படி பல கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்கள். விரைவில்...
............................................................................................

.............................
My other site:
agsivakumar.com
.............................
24 comments:

நாய் நக்ஸ் said...

பட்டாசு...இன்னும் இருக்கு...
இரண்டு பக்கமும் வெடிக்கும்....
நாம..வழக்கம் போல வேடிக்கை..பார்ப்போம்...
சரியா ?????

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!கேப்டனுக்கு இனிமேதான் "சனி"(சளி?)புடிக்கும் போல???

Unknown said...

சிவா..டிவிபார்க்கும் போது சிப்ஸ் சாப்பிடாதிங்க..!சில சமயம் அரசியல்வா(ந்)திக ஷிப் அடிச்சிட்டு பேசும் போது சிப்பு சிப்பாவரும் தொண்டையில மாட்டிக்க போகுது....

இப்படிக்கு
சிவாவின் அடிவிழுது
(சிவாவுக்கு அடிவிழுந்தா எஸ்கேப்பு)

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
வணக்கம் சிவா சார்!கேப்டனுக்கு இனிமேதான் "சனி"(சளி?)புடிக்கும் போல??//

கேப்டன் அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் சட்டசபையில். என்ன சொல்ல... அதே சமயம் தான் இருக்குமிடத்தில் யாரும் குரல் உயர்த்தவே கூடாது என மேடம் நினைப்பதும் சரியல்ல. அது அ.தி.மு.க. அலுவலகம் இல்லை. சட்ட சபை.... இதை மேடம் உணர வாய்ப்பில்லை. என்றும். எப்போதும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அம்மாவும் பதிலுக்கு பதில் பேசினாங்க...

ஆனாலும் கேப்டன் ரொம்பவே ஆக்ரோசமா பேசியது அவங்க கட்சிக்காரங்களாலே நம்ப முடியல...

Unknown said...

நான் கேப்டனை பாராட்டுகிறேன், அதிலும் நாக்கை கடித்தபடி மிரட்டுவது பிரமாதம்..

விருதகிரி ஒரு நல்ல படம்!!!

சிராஜ் said...

சிவா,

கேப்டன் சட்ட சபைல புள்ளி விபரம் பேசினால் நிச்சயம் அசிங்கப்பட்டு விடுவார். ஏன்னா அம்மா அந்த விசயத்தில கேப்டனவிட ஸ்ட்ராங்.
புள்ளிவிபரம் கேப்டனுக்கு படங்களில் மட்டுமே சரிப்படும். மற்றபடி பொத்தாம் பொதுவாக ஏதாவது பிரச்சனை தொடர்பாக ஆக்ரோசமாக பேசினால்
நிச்சயம் அது அவருக்கு பாசிடிவ் தான். ஏனெனில் தழிழர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்களையும் அவர்களுக்கு புரியும்.

! சிவகுமார் ! said...

@ கே ஆர்.பி

விருதகிரி ஒரு நல்ல படமா? We will meet. Will meet. Meet!!

! சிவகுமார் ! said...

//தமிழ்வாசி பிரகாஷ் said...
அம்மாவும் பதிலுக்கு பதில் பேசினாங்க...

ஆனாலும் கேப்டன் ரொம்பவே ஆக்ரோசமா பேசியது அவங்க கட்சிக்காரங்களாலே நம்ப முடியல...//

அட அவரோட அதிதீவிர ரசிகன் நானே நம்ப முடியாம மெர்சலாகி இருக்கேன்...

! சிவகுமார் ! said...

@ சிராஜ்

மொத்தம் 201 பாலோயர்ஸ் எனக்கு. அதுல 1,2 பேருதான் இப்படி விரிவா கமன்ட் போடுவாங்க. அதுலயும் வருஷத்துக்கு ஒருதரம்தான் மத்யானம் 1.30 மணிக்கு லஞ்ச் சாப்புடாம உங்கள மாதிரி இப்படி கருத்து சொல்வாங்க. எப்புடி என் புள்ளி வெவரம்..

Unknown said...

என்னடா நடக்குது இங்க நான் மேல வந்துட்டண்டா!

-கேப்டன்...

- டேய் நாதாறி நேத்துவரைக்கும் எந்த கெணத்துல குந்திகினு இருந்தடா...- பொது ஜனம்!

சேலம் தேவா said...

//கேப்டன்தாங்க ஜெயலலிதான்னு பேர் சொல்லி பேட்டி குடுத்தாரு. நான் அப்படி சொல்லவே இல்லீங்க போலீஸ்கார்//

விவிசி :))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஷூட்டிங் முடிஞ்சிருச்சா, இல்ல இன்னும் தொடருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே, கேப்டன் என்ன பிராண்டு அடிச்சிட்டு அப்படி பொங்குனாருன்னு கேட்டு சொல்லுங்கண்ணே, இங்க ஆபீஸ்ல ஒருத்தனை போட்டு பொரட்ட வேண்டி இருக்கு.......

Yoga.S. said...

உண்மைதான்!அந்த வீடியோ கிளிப் நல்லநேரம் சதீஷ்குமார் புண்ணியத்தில் எனக்கும் கிட்டியது.உடனேயே கமென்ட் உங்கள் தளத்தில் போட்டேன்,சதீஷ்குமார் பதிவுக்கும் தான்!சவால் விடும் நேரம் இதுவல்ல,கூடவே,கண்ணியம் என்பது அண்ணா காலத்துடன் முடிந்தது!

Kite said...

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.9 கோடி. தி.மு.க அணி பெற்ற வாக்குகள் 1.45கோடி. வித்தியாசம் 45 லட்சம்தான். தே.மு.தி.க தனித்துப் போட்டியுடும்போதேல்லாம் 30 லட்சம் வாக்குகள் பெறுகிறது. இந்த கணக்குப்படி பார்த்தால் தே.மு.தி.க சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அ.தி.மு.க பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்து 100-120இடங்கள் பெற்றிருக்கும் என்று புரிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த அளவுக்கு சுதந்திரமாக ஜெ வால் ஆட்சி செய்ய முடியாது. கூட்டணியால் தே.மு.தி.க எவ்வளவு பலனைப் பெற்றதோ அதே அளவு
அ.தி.மு.க வும் பெற்றுள்ளது. ஜெ இதை மறந்து விட்டு தன் ஆணவத்தைக் காட்டுகிறார்.

உணவு உலகம் said...

அரசியல்-அப்பீட்டு.

! சிவகுமார் ! said...

@ விக்கி

மாம்ஸ்.. நீங்க எம்.எல்.ஏ ஆகணும். தவசி கையால குத்து வாங்கணும் :))

! சிவகுமார் ! said...

@ சேலம் தேவா

கேப்டன் பாலிடிக்ஸ் பண்றவரை நமக்கு கொண்டாட்டம்தான் தேவா!!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஷூட்டிங் முடிஞ்சிருச்சா, இல்ல இன்னும் தொடருமா?//

இது வெறும் முன்னோட்டமே..கேப்டன் இனி பின்னி பெடல் எடுக்கப்போகிறார்..

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே, கேப்டன் என்ன பிராண்டு அடிச்சிட்டு அப்படி பொங்குனாருன்னு கேட்டு சொல்லுங்கண்ணே, இங்க ஆபீஸ்ல ஒருத்தனை போட்டு பொரட்ட வேண்டி இருக்கு.......//

ராம்ராஜ் வேட்டிகள் மற்றும் சட்டைகள். அந்த பிராண்டை தான கேட்டீங்க. :)). ஆபீஸ் ஆளை பாத்து நாக்கை கடிங்க. இதுதான் கேப்டன் எடுத்த முதல் கிளாஸ் (Glass illa Class). ஒவ்வொண்ணா கத்துப்போம்.

! சிவகுமார் ! said...

@ யோகா

எம்.ஜி.ஆர். பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டு இவர் இப்படி செய்வது சரியல்ல.

! சிவகுமார் ! said...

@ ஜகன்னாத்

தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஜகன். இன்னும் நிறைய ஆட்டம் உள்ளது. பார்க்கலாம்..

! சிவகுமார் ! said...

//FOOD NELLAI said...
அரசியல்-அப்பீட்டு.//

நாளைய நெல்லை மேயர் வாழ்க!!

Related Posts Plugin for WordPress, Blogger...