CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, February 1, 2012

மம்மீ டாடீ                                                                   
யாசகம் கேட்பவர்கள் பற்றிய ஒரு பதிவை உழைப்பாளிகளும், பிச்சைக்காரர்களும் எனும் தலைப்பில் தோழர் இரவுவானம் முன்பு ஒரு முறை எழுதி இருந்தார். நண்பர்களால் பாராட்டப்பட்ட பதிவது. அதுபோல் நானும் ஒரு பதிவு எழுத உள்ளதாக இரவுவானத்திடம் கூறி இருந்தேன். இப்போதுதான் வாய்ப்பு கிட்டியது. சென்னையில் தான் எத்தனை ரக வினோத ஆட்களடா சாமி. 

தி.நகர் வெங்கடாசலபதி கோயில்:

வாசலில் பிச்சை எடுப்பவர்கள்...சும்மா சொல்லக்கூடாது..ஒஸ்தி மாமே! அதிகாலை நேரத்திலேயே சீட் பிடிக்க அடிதடியே நடக்கும். 'தள்ளி உக்காரு' என்று ஒருவருக்கொருவர் பிறரை ஏசுவர். பெரும் பணக்காரர்கள்தான் பெரும்பாலும் வெங்கியின் பக்தர்கள் என்பதால் சரக் சரக் என சொகுசு கார்கள் கோயில் வாசலில் வந்து நிற்கும். வெளியே வந்து பல்க்கான அமவுண்டை பிரித்து பிச்சை போடுவர் மிஸ்டர் சீமான்ஸ் அண்ட் மிஸ் சீமாட்டிகள். ரொட்டி, ஹோட்டல் சாப்பாடு என்றும் தனியே தருபவர்களும் உண்டு. அதனால் வாசலை சுற்றி அடிக்கடி நெரிசல் ஏற்படும். போலீசாருக்கு பெரிய தொந்தரவை தந்து வந்தது இச்செயல்.

ஒரு முறை கோயில் அருகில் உள்ள நடேசன் பூங்கா அருகே நடைபாதையில் படுத்தவாறு அன்றுதான் வெளியான குமுதம் புத்தகத்தை கால் மேல் கால் போட்டு படித்து கொண்டு இருந்தார் ஒரு பெரியவர். லேசாக ஓரக்கண்ணால் பார்த்தேன். அட கோயில் வாசலில் நித்தம் பார்க்கும் அதே பிச்சைக்காரர். வாரா வாரம் அவ்வழியே செல்லும்போதெல்லாம் புதிய குமுதத்துடன் அதே போஸில் படுத்தவாறு படித்து கொண்டிருந்தார். அப்படி என்னதான் படிக்கிறார் என்று போகிற வாக்கில் எட்டிப்பார்த்தேன். நடுப்பக்க நாயகிகள் படம் கொண்ட சினிமா செய்தி!!

இன்னொரு சமயம் அதே இடத்தில் இருவர் அமர்ந்து கொண்டு வேட்டியால் கட்டப்பட்ட மூட்டையை பிரித்து கொண்டிருந்தனர். என்னவென்று பார்த்த எனக்கு தலை கிறுகிறுத்தது. ஏகப்பட்ட ரூபாய் நோட்டுகளும், சில சில்லறைகளும். பாலாஜி மகிமை! சினிமாவில் மட்டுமே இம்மாதிரி காட்சிகளை பார்த்த எனக்கு இதை பார்த்ததும் மருதமலை வடிவேலு போண்டாமணி கையில் இருக்கும் பணம் கண்டு பொருமும் மனநிலை வந்தது.

சத்யம் தியேட்டர்:
படம் போட இன்னும் நேரம் இருந்ததால் நண்பருடன் எதிரில் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று (பாட்டிலில் அடைத்த) பாதாம் பால் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது சாட்டையால் அடித்து கொள்ளும் யாசகர் ஒருவர் எங்கள் இருவரையும் பார்த்து கைநீட்ட என்னிடம் இருந்த சில்லறையை தர எத்தனித்தேன். வேண்டாம் என்றார் அவர். ''வேறென்ன வேண்டும்?'' எனக்கேட்டதற்கு சொன்னாரே ஒரு பதில் "பாதாம் பால்".  நானோ 'என்னய்யா இப்பிடி கெளம்பிட்டீங்க?' என எண்ணியவாறு "அதெல்லாம் தரமுடியாது" என்றேன். சாட்டை என்னை விடவில்லை. "பாதாம் பால்தான் வேணும் " என்று அடம்பிடித்தார். நானும் அடம்பிடிக்க..நண்பன் அவருக்கு தன்னிடம் இருந்த பாட்டிலை நீட்டினான். பொறுமையாக ருசித்து குடித்துவிட்டு புன்முறுவலுடன் விடைபெற்றார் சாட்டை. எப்படியெல்லாம் டெவெலப் ஆயிட்டு போறாய்ங்க!!

அண்ணா நகர் 12 வது மெயின் ரோடு:

ரோட்டோர சிற்றுண்டி உணவகம் ஒன்றில் சாப்பிட்டு கொண்டிருந்தேன். வயதான பெண்மணி அருகில் வந்து ஏதாவது வாங்கித்தருமாறு கேட்டார். ஏற்கனவே நம்மை வெரைட்டி வெரைட்டியாக ஏமாற்றும் ஆட்கள் அதிகம் ஆகிக்கொண்டே போனதால் பாட்டிக்கு எதையும் வாங்கித்தரவில்லை. அருகில் இருந்த நபர் என்னை ஒருமாதிரி பார்த்து விட்டு கடைக்காரரிடம் "அண்ணே..பாட்டிக்கு நாலு இட்லி குடு" என்றார். இட்லியை வாங்கிய பாட்டி அடுத்து ஒன்று சொன்னார். அப்போதுதான் அந்த நபருக்கு நான் ஏன் சும்மா இருந்தேன் என்பது உரைத்தது. அப்படி அவரிடம் என்ன கேட்டார் பாட்டி? "இந்தப்பா..ஒரு மசால் வடை சொல்லேன்". டென்ஷன் ஆன நபர் "உனக்கு கொழுப்பு ஜாஸ்திதான். ஒழுங்கா குடுத்ததை தின்னுட்டு ஓடிரு" என்றார். அதைப்பற்றி பெரிதாக பீல் பண்ணாமல் இட்லியை உள்வாங்கினார் பாட்டி!!

அண்ணா நகர் ப்ளூ ஸ்டார் சிக்னல்:

சிக்னல் மறுபுறம் சாந்தி காலனி செல்லும் வழியில் ஒரு டீக்கடை இருக்கும். நண்பர்களுடன் முன்பெல்லாம் அவ்வப்போது விஜயம் செய்வதுண்டு. அங்கு அடிக்கடி ஒரு பாட்டியை காண்பதுண்டு. வயது 80+ இருக்கும். பாவம் என்று நானும் சில முறை பிச்சை போட்டுள்ளேன். ஆனால் ஒருமுறை ஜகஜ்ஜால பாட்டி செய்ததைக்கண்டு வெறியாகி அவருக்கு பிச்சை போடுவதையே நிறுத்திவிட்டேன். நண்பர்களிடம் "டேய்..எவனாவது அந்த பாட்டிக்கு பிச்சை போட்டீங்க..வாய்லயே குத்துவேன்" என்றதையும் மீறி ஒரு பய பிச்சை போட்டான். அவனை ஓரமாக அழைத்து சென்று சில நிமிடங்கள் நடைபாதை ஓரத்தில் காத்திருக்க வைத்தேன். சற்று தூரத்தில் தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தார் பாட்டி.

முதல் ரவுண்ட் ட்யூட்டி பார்த்த களைப்பில் நடைபாதையை ஒட்டிய மரநிழலில் ஓய்வு எடுத்தார்.  "பாவண்டா..இந்த வயசுல இப்படி ஒரு நெலம.." என்று பீல் செய்தான் நண்பன். கோபத்துடன்  "கொஞ்சம் பொறு" என்றேன். கையில் இருந்த ஒயர் கூடையை திறந்து அதில் இருந்த ப்ளாஸ்டிக் கவரை பிரித்தார் அம்மூதாட்டி. உள்ளே இருந்து ஒரு வாட்டர் பாட்டில் தலை காட்டியது. அடுத்து ப்ளாஸ்டிக் டம்ளர். இறுதியாக......குவார்ட்டர் பாட்டில்!! கலந்தடித்துவிட்டு அடுத்த ரவுண்ட் யாசகத்திற்கு தயாரானார் (பாட்டில்) பாட்டி. நண்பனை பார்த்தேன். தலை கவிழ்ந்தான்.

மீண்டும் கடைப்பக்கம் போய் நின்று கொண்டோம். அதே இடத்திற்கு தள்ளாடியபடியே வந்த தண்ணி பா(ர்)ட்டி ஒவ்வொரு அப்பாவிகளிடம் வசூல் செய்துவிட்டு நண்பனை நோக்கி "சாமீ" என்றார். "அப்படியே ஓடிரு. நானே  குவாட்டருக்கு மாசக்கடைசில காசில்லாம அலையறேன். உனக்கு எவ்ளோ நெக்குலு இருந்தா தண்ணி அஸ்ட்டு இப்பிடி ஆட்டம் போடுவ" என்று விரட்டி அடித்தான். சுற்றி இருந்த நண்பர்கள் அவனைப்பார்த்து சிரிக்க தொடங்கினர். பாட்டியோ போதை தலைக்கேறியதால் தரையில் அமர்ந்து விட்டு மீண்டும் "சாமீ" என்று தெருவில் நடந்து கொண்டிருந்த இன்னொருவரிடம் கைநீட்டினார். மறக்க முடியாத நிகழ்வுகள். ஹா..ஹா..!!

இன்னொரு ரூட்டில் பிச்சை எடுப்பவர்களை அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. "சார்.வெளியூர்ல இருந்து வர்றேன். பணத்தை தொலைச்சிட்டேன்.   பஸ்சுக்கு மட்டும் ஒரு 150...." என்று தலையை சொறிவர். இல்லை என்று சொன்னாலும் விடாமல் நச்சரிப்பார். அதனால் இப்போது எல்லாம் பதில் கூட இல்லை. ஒரே ஒரு முறைப்புதான். கேப்டனை விட அடர்சிகப்பாகும் எனது கண்களை கண்டு அடுத்து ஒரு வார்த்தை பேச முடியுமா அவரால்? என்ன சொல்றீங்க?  


...........................................................................................

...............................
My other site:
agsivakumar.com
..............................

...................................................
சமீபத்தில் எழுதியது:

அமிதாப்பின் அக்னிபத் 1990 - விமர்சனம்

மோகன்லாலின் கான்பிடன்ட் காசனோவா - விமர்சனம் 
......................................................

   

22 comments:

சென்னை பித்தன் said...

யாசிப்பவர்கள்தான் எத்தனை விதம்?அதைக் கூர்ந்து பார்த்து சுவாரஸ்யமான பதிவாக்கி விட்டீர்கள்!

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!////கேப்டனை விட அடர்சிகப்பாகும் என் கண்கள் ////அடடே,அப்புடீன்னா அடுத்த எலெக்க்ஷன்ல உங்க கட்சியும் களம் இறங்குமோ????ஹ!ஹ!ஹா!!!!!!

Unknown said...

தி.நகர் நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் விடும் பிச்சைக்காரர்களை நான் பார்த்திருக்கிறேன்..

உழைப்புக்கு மரியாதை!!!

உணவு உலகம் said...

பிச்சை போடாவிட்டால், திட்டிவிட்டுப்போகும் நபர்களைச் சந்தித்த அனுபவம் இல்லையோ!

நிரூபன் said...

வணக்கம் சகோ,

வெளி உலகை நன்கு அவதானித்து, வறுமையினை ஆடையாக்கி நல் வாழ்க்கை வாழ்வோரினைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பினைக் கொடுத்திருக்கிறீங்க.

நன்றி.

ஆமினா said...

அடடே... ஆராய்ச்சி பதிவா??

//உழைப்புக்கு மரியாதை!!!//

இந்த வாக்கியம் பார்த்ததும் முதலில் நீங்கள் அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆளாய் இருந்து அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதியதாக நினைத்தேன் :-)

சில வகையினரை சரியா அடையாளப்படுத்தியிருக்கீங்க...

வாழ்த்துகள்

ஆமினா said...

200 பதிவர்கள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ங்க...

எதாவது ட்ரீட் உண்டா? :-)

rajamelaiyur said...

நல்லா கவனிச்சு இருக்கிங்க ...

நாய் நக்ஸ் said...

என்ன தான் சொல்ல வரீங்க..??
நாமளும்...அதுக்கு போவோம்னா ????

ஹாலிவுட்ரசிகன் said...

நாட்டின் இன்கம் டாக்ஸ் கட்டாத பணக்காரர்கள் பற்றி சுவாரஸ்யமான அலசல். நல்லாயிருக்கு.

Yoga.S. said...

அடர்சிகப்பாகும் கண்களையுடைய கேப்டனுக்கு இன்று "அம்மா"சட்டசபையில் முழிபிதுங்க வைத்து விட்டாரே????

Philosophy Prabhakaran said...

// "சார்.வெளியூர்ல இருந்து வர்றேன். பணத்தை தொலைச்சிட்டேன். பஸ்சுக்கு மட்டும் ஒரு 150...." என்று தலையை சொறிவர். //

இதெல்லாம் எங்க தாத்தா காலத்து டெக்னிக்...

இன்னும் நிறைய இருக்கு... முன்னாடி கோவில் வாசல்ல மட்டும் பிச்சை எடுத்தவங்க, இப்ப தியேட்டர், பீச்சுன்னு எடுக்குறாங்க... கூட்டம் எங்க சேருதோ அங்கதானே எடுக்க முடியும்...

ஒரு முப்பது வயது திடகாத்திரமான வாலிபன் பிச்சை எடுத்தால் யாரும் பிச்சை போடமாட்டார்கள்... அதே பிச்சைக்காரப்பய புடவையை சுத்திட்டு கையை தட்டிட்டு வந்தா வேற வழியில்லை... போட்டுதான் ஆகணும்... இதைச் சொன்னா அரவாணி, ஆதரவு, வெங்காயம், வெளக்கெண்ணைன்னு புரட்சி பேச வேண்டியது...

! சிவகுமார் ! said...

@ சென்னை பித்தன்

வருகைக்கு நன்றி சார்.

! சிவகுமார் ! said...

@ யோகா

நான் எப்பவுமோ கட்சியில் சேராதோர் கட்சிதாங்க.

! சிவகுமார் ! said...

@ கே.ஆர்.பி. செந்தில்

அவங்களை சீக்கிரம் மீட் பண்ணனும்னே..

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

நன்றி நிரூபன். இன்னும் சில நிகழ்வுகளும் உண்டு. நேரம் கிடைக்கையில் பதிவிடுகிறேன்.

! சிவகுமார் ! said...

//ஆமினா said...
அடடே... ஆராய்ச்சி பதிவா??

//உழைப்புக்கு மரியாதை!!!//

இந்த வாக்கியம் பார்த்ததும் முதலில் நீங்கள் அவர்களின் கூட்டத்தில் ஒரு ஆளாய் இருந்து அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்து கட்டுரை எழுதியதாக நினைத்தேன் :-)//

எகத்தாளத்த பாரு...

! சிவகுமார் ! said...

//ஆமினா said...
200 பதிவர்கள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்ங்க...

எதாவது ட்ரீட் உண்டா? :-)//


நன்றி சகோ. நீங்க எல்லாரும் சேர்ந்து முதல்ல பாராட்டு விழா நடத்துங்க. அப்பறம் ட்ரீட் தர்றேன் :))))

! சிவகுமார் ! said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்லா கவனிச்சு இருக்கிங்க ...//

ஆமாங்க.

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
என்ன தான் சொல்ல வரீங்க..??
நாமளும்...அதுக்கு போவோம்னா ????//

போகலாம். புதிய அனுபவமா இருக்கும்.

! சிவகுமார் ! said...

@ Philosophy Prabhakaran

இந்த மினி எம்.ஆர். ராதா இம்சை தாங்க முடியலப்பா..

சிராஜ் said...

சோ, உங்களுக்கு பிச்சைகாரர்கள் மேல் எப்போதும் ஒரு கண்ணு இருக்கு. வேல மெனக்கெட்டு follow பண்ணி இருக்கீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...