CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 19, 2012

அம்புலி 3D


                                                                      
பேய்வீடு, 13 ஆம் நம்பர் வீடு போன்ற திகில்(!) படங்களை பார்த்தியா என்று முன்னொரு காலத்தில் சுற்றி இருப்பவர்கள் பேசியதை கேட்டதுண்டு. அந்த வகையறாவில் பார்த்த பல தமிழ்ப்படங்களில் பின்னணி இசை,பயமுறுத்தும் குரல்கள், திடுக்கிட வைக்கும் சத்தம் என வெரைட்டி வெரைட்டியாக முயற்சி செய்து நம்மை கிச்சு கிச்சு மூட்டுவார்கள் படைப்பாளிகள். "நாங்கல்லாம் விருதகிரி, வீராசாமி பார்த்து மிலிட்டரி ட்ரைனிங் எடுத்தவாங்க.எங்க கிட்டயேவா?" என்று அதற்கெல்லாம் அசராமல் இருந்ததுண்டு. ஆனால் அம்புலி..ஹாட்ஸ் ஆப். சில ஆண்டுகளாக த்ரில்லர், ஹார்ரர் வகை படைப்புகள் இந்திய சினிமாவில் பெருமளவு பேசப்பட்டதில்லை. அதை உடைத்து எறிந்திருக்கிறது அம்புலி. 

ஹரீஷ் - ஹரி இரட்டை இயக்குனர்கள், நான்கு இசையமைப்பாளர்கள் மற்றும்  புதுமுக நடிகர்கள் சேர்ந்து விறுவிறுப்பான படத்தை தந்துள்ளனர். அம்புலி என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் ஒன்று(அது என்னவென்று திரையில் காண்க) ஊரை அச்சுறுத்துகிறது அல்லது அப்படி நம்புகிறார்கள் மக்கள்(சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை). கல்லூரி மாணவர்கள் இருவர் ஊருக்கு சென்று அம்புலி யார் என்று கண்டறிய முயல்கின்றனர். அவர்களோடு ஜெகனும்.  காமடி நடிகரான இவருக்கு நல்ல கேரக்டரை தந்த இயக்குனர்களுக்கு பாராட்டுகள். அமுதன், வேந்தனாக வருபவர்கள் பெரிதாக நடிக்காவிடிலும் படத்தின் ஓட்டத்திற்கும், அம்புலி ஓட்டத்திற்கும் நன்றாக வழிவிடுகிறார்கள். நாயகிகள் நடிப்பு வெரி நார்மல். 

தம்பி ராமையா, கலைராணி ஆகியோர்  வழக்கம்போல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பார்த்திபனுக்கு ஏற்ற கேரக்டர் இதில். டெர்ரர் ரோலை கூலாக ஏற்று ஸ்கோர் செய்துள்ளார். இதுபோன்ற படங்களில் திகில் காட்டும் நபர் யார் என்பதை ஓரளவிற்கு யூகித்துவிடுவோம்.அம்புலியில் அப்படி யூகிக்க விடாமல் இறுதிவரை சஸ்பென்சை வளர்த்தது செம. த்ரீ டி கண்ணாடியில் பார்க்க சற்று சிரமமாக இருந்தது. டெக்னிக்கல் குறைபாடா அல்லது கண்ணாடியின் தரம் சரியில்லையா என்று குழப்பமாக உள்ளது. இத்தனைக்கும் சத்யம் தியேட்டர் தந்த உயர்ரக கண்ணாடிதான் அது). இதை உடனே அம்புலி டீம் என்னவென்று கவனிக்க வேண்டும்.  ஆனால் திகிலுடன் நகரும் தொடர் காட்சிகளுக்கு முன்பு இக்குறையெல்லாம்  ஒன்றுமே இல்லை. 

                                                           
பாடல்கள் எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவற்றில் வரும் இசையும் வெகு சுமார்தான். இரண்டு பாடல்களை குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சோளக்காடு வரும் ஒவ்வொரு சீனிலும் நம்மை திகில் கவ்விக்கொள்கிறது. தியேட்டரில் அக்காட்சி வருகையில் குழந்தைகள் வீறிட்டு அழ, சுவாரஸ்யத்தை மிஸ் செய்ய விரும்பாத பெற்றோர்கள் வெளியேயும் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். சதீஸின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பல்ஸை எகிற வைக்கின்றன. ஆரம்பத்தில் அமுதன் அரக்க பறக்க காட்டை தாண்டி சைக்கிள் வந்து நின்றதும் அவர் தோளை ஒரு கை தொட்டுப்பார்க்க...அரங்கில் இருந்த பலர் உறைந்து போயினர் என்றால் அது மிகையில்லை. 

வெறும் பயத்தை மட்டுமே கிளப்பாமல், இரண்டாம் பாதியில் அறிவியல் ரீதியான விளக்கத்தையும் தந்துள்ளது பாராட்டத்தக்கது. அதுதான் படத்தின் முக்கிய அம்சம் என்பது என் கருத்து. அதே கண்கள் படத்திற்கு பிறகு என்னை அசர வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அம்புலி. இந்திய சினிமா காலரை உயர்த்திக்கொள்ள ஒரு சூப்பர் த்ரில்லரை தந்த அம்புலி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

அம்புலி - கும்மிருட்டில் ஒரு குபீர் சிக்ஸர்!
...............................................................................................

முக்கிய கேரக்டரில் நடித்த 'கலக்கப்போவது யாரு' கோகுல் மற்றும் இயக்குனர் ஹரீஷ் நாராயண் இருவரிடமும் போனில் பேசினேன்(உபயம் அதிரடி அரசியல் பதிவர் ரஹீம் கசாலி). கடும் உடல் உழைப்பை தந்துள்ள தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் எனப்பாராட்டியதை பணிவன்புடன் ஏற்றுக்கொண்டார் கோகுல். 

இயக்குனர் ஹரீஷிடம் பேசுகையில் சமீப காலத்தில் இப்படி ஒரு த்ரில்லரை பார்த்ததில்லை என்றும், படத்தில் இருந்த சில குறைகளையும் சுட்டிக்காட்டினேன். ரிசல்ட் கேட்க தியேட்டர்களை நோக்கி சென்று கொண்டிருந்த பிசியான நேரத்திலும் போதுமான நேரம் ஒதுக்கி உரையாடிய ஹரீஷுக்கு நன்றி. தனக்கும் 'அதே கண்கள்' மிகவும் பிடித்த படமென்றார். சத்யம் தியேட்டரில் ஆடியன்ஸ் ரியாக்சன் பாசிடிவாக இருந்ததை சொன்னதற்கு சந்தோஷப்பட்டார். 

                                                  இயக்குனர்கள் ஹரி - ஹரீஷ்

அம்புலி - 2 வருவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதை இறுதிக்காட்சி உணர்த்தி உள்ளது.  அச்சம் கலந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். 

ஹரீஷின் வலைப்பூ: ஹரீஷ் நாராயண்
.........................................................................................

............................
My other site:
agsivakumar.com
...........................

.......................................................
சமீபத்தில் எழுதியது:

காதலில் சொதப்புவது எப்படி? 

முப்பொழுதும் உன் கற்பனைகள்

அட உங்க வூட்ல பார்ட்டி!
.......................................................18 comments:

முட்டாப்பையன் said...

இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க.இந்த படத்தை ப்ரோமொட் பண்ண எவ்வளவு வாங்கினீங்க?
(நான் இன்னும் படம் பாக்களை)

முட்டாப்பையன் said...

வாங்கப்பா வாங்க எல்லாருக்கும் இருக்கு.
all fellows come front.

முட்டாப்பையன் said...

இதோ பார் கமெண்ட் போட்டா பப்ளிஷ் பண்ணனும்.
புரியுதா??

CS. Mohan Kumar said...

போனில் எல்லாம் பேசி கலக்குறீங்க

சேலம் தேவா said...

நல்ல விமர்சனம்..!!

Thava said...

விமர்சனம் ரொம்ப அருமையாக இருக்கிறது சகோ...ஆவலை தூண்டுகின்றன..இந்த படத்தை பற்றி அனைவரும் நல்லப்படியாகவே சொல்கிறார்கள்.பார்த்துவிடுகிறேன்.நன்றிகள்.

சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

Yoga.S. said...

உங்களுக்கு ரொம்ப நல்ல மனசுங்க!கிளைமாக்ஸ் சையோ,கதையையோ சொல்லாம சஸ்பென்ஸ் வச்சீங்க பாருங்க,அங்கின தாங்க நீங்க நிக்கிறீங்க!சில பேரு................வோணாம் விட்டுடலாம்.

! சிவகுமார் ! said...

//முட்டாப்பையன் said...
இன்னும் எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க.இந்த படத்தை ப்ரோமொட் பண்ண எவ்வளவு வாங்கினீங்க?
(நான் இன்னும் படம் பாக்களை)//

இதுவரைக்கும் 199 பேரு. இன்னும் நிறைய பேரு வைகை எக்ஸ்ப்ரஸ்ல கெளம்பிட்டு இருக்காங்க.

ஒரு சினிமா டிக்கட் வாங்குனேன். :)

! சிவகுமார் ! said...

//முட்டாப்பையன் said...
இதோ பார் கமெண்ட் போட்டா பப்ளிஷ் பண்ணனும்.
புரியுதா??//

நல்லவேளை தமிழ்ல கமன்ட் போட்டீங்க. அதால புரியுது :)

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
போனில் எல்லாம் பேசி கலக்குறீங்க//

படம் பிடிச்சி இருந்தது சார். அதான்.

! சிவகுமார் ! said...

@ சேலம் தேவா

நன்றி தேவா.

! சிவகுமார் ! said...

@ குமரன்

கண்டிப்பாக பாருங்கள் குமரன்.

! சிவகுமார் ! said...

@ யோகா

பொதுவாக விமர்சனத்தில் கதை குறித்து நீட்டு முழக்க விருப்பமில்லை. இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்பதால் எதையும் சொல்லவில்லை.

Unknown said...

பார்க்கனும்..

கவி அழகன் said...

Supper

ராஜி said...

விமர்சனத்துக்கு நன்றி

NKS.ஹாஜா மைதீன் said...

இந்த மாதிரி படத்துக்கெல்லாம் பாடல்களே தேவை இல்லாத ஒன்று....ஆனால் அதில் ஏன் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார்கள்?

Unknown said...

/// ! சிவகுமார் ! said...

இதையெல்லாம் தினத்தந்தி வரலாற்று சுவடு புத்தகத்திலேயே படித்துவிட்டோம். சொந்தமாக எழுத ஏதாவது இருந்தால் எழுதுங்கள். ///

நன்றி சிவா

Related Posts Plugin for WordPress, Blogger...