CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 26, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (26/02/12)


லண்டன்:                

    
தற்போது இந்திய விளையாட்டின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அது சந்தீப் சிங்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இன்று நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று இறுதிப்போட்டியில் பிரான்சுக்கு எதிராக 5 கோல்களை அடித்து அசால்ட் செய்துள்ளார். பிரான்ஸ் அணியை 8-1 எனும் கோல் கணக்கில் பம்ப் அடித்தது இந்தியா. லண்டனில் ஜூலை மாதம்  தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் தகுதி பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வெற்றி குறித்த தனிப்பதிவை படிக்க க்ளிக்கவும்: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி.      
..................................................................................                                                             

தலைநகரம்:
மக்கள் நெரிசலும், கடும் போக்குவரத்தும் இருக்கும் நந்தனம் சிக்னல் மற்றும் தி.நகர் பனகல் பார்க் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் எண்ணம் எப்போது அரசுக்கு வருமென்றே தெரியவில்லை. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தீர்வு கிடைத்த பாடில்லை. நடந்து செல்வபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதை அந்த ஏரியா அருகிலேயே வசிக்கும் மேயர் சைதை துரைசாமி எப்போது உணர்ந்து செயலில் இறங்கப்போகிறார்?
........................................................................................

'ஒண்ணா' இருக்க கத்துக்கணும்: 
பில்லா-2, சிங்கம்-2, சண்டக்கோழி-2 என வரிசையாக சீக்வல் படங்கள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. இனியும் பொறுப்பதில்லை. வீராசாமி-2, எங்க ஊரு பாட்டுக்காரன்-2 என்று எங்கள் தலைகளும் களத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஏன் நாம் கொஞ்சம் அசந்தால் ராஜபாட்டை-2 வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 
...................................................................................

புரியாத புதிர்:
யாமறிந்த தேசங்களிலே இங்கிலாந்து என்று ஒன்றிருப்பதை உறுதியிட்டு   கூற இயலும். ஆனால் புதிய தலைமுறை டி.வி. மட்டும் 'இங்கிலந்து' என்றொரு நாட்டை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறது.ஒருவேளை வெள்ளைக்காரர்கள் அப்படித்தான் அழைப்பார்களோ என்று பரிசோதித்தும் பார்த்தாயிற்று. கிடைத்த பதில் "வீ ஆர் பரம் இங்க்லான்ட்" தான்.  ஒருவேளை 'இஸ்லன்ட் எஸ்டேட்' டை கண்டுபிடித்தவரின் வாரிசுதான் இதையும் டிஸ்கவர் செய்திருப்பாரோ?
.................................................................................

புதுப்புது அர்த்தங்கள்:
என்கவுண்டருக்கு சரியான தமிழ்ச்சொல் என்ன என்பது மர்மமாக இருக்கிறது. ஊடகங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் கொலம்பஸ்கள் இதற்கு வைத்திருக்கும் பெயர் "போட்டுத்தள்ளுறது" (தமிழையும் சேத்தா?)
.................................................................................

புதிய பாதை: 
சென்னைவாசிகளின் காதில் தேன் பாயோ பாயென்று பாயும் செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற வரும் புதன் முதல் மவுன்ட் ரோட்டில் போக்குவரத்து மாற்றங்கள் வரப்போகிறதாம். எனவே பத்து நிமிடத்தில் அடைய வேண்டிய இலக்கை குறைந்தது அரைமணி நேரமாவது கழித்துதான் அடைய முடியும். மவுன்ட் ரோட்டை ஒட்டியுள்ள சந்து பொந்துகளில் வாகனங்களை வளைத்து, சுழற்றி பகுமானமாக ஓட்டி ஆபீஸ், காலேஜ், தியேட்டர்களை அடைய..Get Ready Folks!!
..................................................................................
   
பலே பாண்டியா: 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக ஸ்பாட்டில் ஏகப்பட்ட மிஸ்டர். ஒய்ட்கள் குவிந்து உள்ளனராம். வாடகைக்கு வீடு எடுக்க சிரமமாக உள்ளதால் சுற்றியுள்ள ஊர்களிலும் துண்டு போட்டு வைத்துள்ளனர். ச.கோவில் வாடகை வீடுகளை முன்பே ரிசர்வ் செய்துவிட்ட அரசியல்வாதிகள் ஏசி பொருத்தி பிரச்சார சூட்டை அவ்வப்போது தவிர்த்து வருவதாக செய்தி. "தேர்தல் முடிஞ்சதும் அந்த ஏசி உங்களுக்குதான். அப்படியே விட்டுட்டு போறோம்" என்று ஆசை காட்டுவது ஹவுஸ் ஓனர்கள் மத்தியில் நன்றாக வொர்க் அவுட் ஆகிறதாம். சும்மாவா சொன்னாங்க. அரசியல் பண்றது தனிக்கலைன்னு..
.......................................................................................

கோபாலா. கோபாலா:
"ட்வீட் செய்வது செக்ஸுக்கு இணையானது போல் உள்ளது". இப்படி ஒரு மேட்டரை சொல்லி இருப்பது டைரடக்கர் ராம் கோபால் வர்மா.

# "நீங்க இப்படி பேசலைன்னாதான் ஆச்சர்யம் கோப்பால்.."சரோஜா தேவி.
............................................................................................

முரண்: 
அரும்பாக்கம் அம்பா ஸ்கைவாக் மாலில் புட் கோர்ட் இருக்கும் தளத்தில் 'எங்கய்யா இருக்கு குடிக்கிற தண்ணி' என்று அலைந்து திரிந்து அவ்விடத்தை கண்டுபிடித்து என்ன பயன்?  டென்சன் அதிகமானதுதான் மிச்சம். கழிப்பறைக்கு ஒட்டிய இடத்தில் இலவச குடிநீர் குழாயை வைத்துள்ளனர். இப்படி வைத்தால் "ஆளை விடுங்கடா சாமி" மக்கள் டப்பு தந்து மினரல் வாட்டரைத்தான் குடித்தாக வேண்டும் என டெக்னிக்கலாக ப்ளான் பண்ணி இருப்பார்களோ? நல்லா தண்ணி காட்டறீங்க அப்பு!!
.........................................................................

ஷாக்:
தேர்வு நேரம் நெருங்குவதால் மின்தடையால்  பள்ளிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசே ஜெனரேட்டர்களை வாங்கித்தர முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து ஜெனரேட்டர் செலவை அரசே ஏற்குமாம். அப்படி என்றால் வீட்டில் படித்து பரீட்சைக்கு மாணவர்கள் தயாராக என்ன திட்டம் வைத்துள்ளார் மேடம்?? இரவிலும், அதிகாலையிலும் இறுதிக்கட்டத்தில் பரபரப்பாக படிக்கப்போகும் மாணவர்கள் கதி? 
..............................................................................

இதுதாண்டா போலீஸ்:
காக்க காக்க படத்தை செமத்தியாக மெருகேற்றி கௌதம் விரைவில் ஒரு என்கவுண்டர் படத்தை எடுக்க வேண்டும். அதில் நான்கு போலீஸ்கார் வேடங்களில் பவர் ஸ்டார், மக்கள் நாயகன், கேப்டன் மற்றும் டி.ஆர். டுப்பாக்கி ஏந்தி தமிழ்நாட்டை அதிர வைக்க வேண்டும் என்பது எனது அவா. அந்த 'பாண்டியா' ரோலையும் டி.ஆரே முடியை சிலுப்பிக்கொண்டு நடித்தால் ப்ரம்மாதமாக இருக்கும்தானே?!
...............................................................................

மொழி:  
பாவேந்தரின் மொழிப்பற்று பொங்கும் வார்த்தைகளால் தமிழுக்கோர் வெண்சாமரம் வீசும் இனிய பாடல். என்றும் செவிக்கினிமையாக! 


...................................................................................

..............................
My other site:
agsivakumar.com
.............................
........................................................    
........................................................


21 comments:

கோகுல் said...

பெனால்டி வாய்ப்புகளை அவர் கோலாக்கியது கண்ணுலே நிக்குது./
டிக்ஸ்னரில தேடினதுல என்கவுன்டருக்கு பகைமையோடு எதிர்த்து நில்,போராடு அப்படின்னு சொல்லுது./
புதுவையில இன்னும் மின்வெட்டு பிரச்சினை ஆரம்பிக்கல,(யாரும் பொறாமைக்கண்ணோடு பார்க்க வேண்டாம்.)

Philosophy Prabhakaran said...

பில்லா - 2 சீக்வல் அல்ல... ப்ரீக்வெல்...

Encounter - மிகச்சரியான தமிழ் வார்த்தை தெரியாவிடினும் எதிர்தாக்குதல் என்று கொள்ளலாம்... ஆனால் தமிழகத்தில் நடப்பவை எதிர்த்தாக்குதல்கள் அல்லவே...

// எனவே பத்து நிமிடத்தில் அடைய வேண்டிய இலக்கை குறைந்தது அரைமணி நேரமாவது கழித்துதான் அடைய முடியும். //

மிகப்பெரிய Rivet... இனி தினமும் அலுவலகத்திற்கு அரைமணிநேரம் முன்னதாக கிளம்ப வேண்டும்...

Prem S said...

//அசந்தால் ராஜபாட்டை-2 வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.//WHY THIS KOLAIVERI ?

! சிவகுமார் ! said...

@ கோகுல்

என்ன அங்க கரண்ட் கட் இல்லையா? என்றா இது...கூட்டுங்கலே 18 பட்டி பஞ்சாயத்த.......

! சிவகுமார் ! said...

@ பிலாசபி பிரபாகரன்

தல ரசிகனாச்சே..கரக்டா கணக்கு பண்றீரு ஓய்! மவுன்ட் ரோட்..என்சாய் தி எர்லி ரைடுங்கானும்!!

! சிவகுமார் ! said...

@ பிரேம்

கொஸ்டின் பாஸ்ட் டு சுசீந்திரன்!!

முத்தரசு said...

சரி

முத்தரசு said...

சரி....அப்புறம்

வெளங்காதவன்™ said...

:-)

CS. Mohan Kumar said...

தம்ப்ப்பி..ஞாயிறு ஒரு நாளாவது நேரத்தில் தூங்க கூடாதா? :))

Unknown said...

அய் ஹாக்கி கேம் அப்படின்னு ஒன்னு இருக்கா...நன்றிங்க சார்..வாழ்த்துக்கள் அடித்து ஆடியவர்களுக்கு..!...என் கவுண்டர் இல்லல்ல அதுவரைக்கும் ரைட்டு!

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

'சரி'க்கு அப்பறம் மூணு டாட் வச்சிருக்கீங்க. வேற எதுனா கேக்கணுமா? :))

! சிவகுமார் ! said...

@ வெளங்காதவன்

எதுக்கு சிரிக்கறேன்னு சொல்லவே மாட்டேங்கறாரே!

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

தூக்கம் வரல சார். கரண்ட் கட் ஆகுறதுக்குள்ள போஸ்ட் போடணும். ஜெய் ஜெ!!

! சிவகுமார் ! said...

@ விக்கி மாம்ஸ்

ஹாக்கின்னு ஒரு கேம் இருக்காவா? அந்த மட்டையாலயே நாலு போட்டா ஞாபகம் வரும். 'ஸ்பூன்லிங்' எப்ப விடப்போறீங்க?

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஸ்பெஷல் மீல்ஸ்ல சைவம் இருந்தா ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி இன்னும் சந்தோஷமா இருக்கும்
!

சிராஜ் said...

ஏன் சிவா என்கவுண்டருக்கு தமிழ்ச் சொல் தேடறீங்க??? அதுவே தமிழ்ச் சொல் தானே???
என்+கவுண்டர். ரெண்டுமே தமிழ்ச் சொல்தான் . நல்லா பாருங்க.
பதிவுகள ஆராஞ்சு எழுத கத்துக்கங்க. அப்புறம் தமிழ் ஈட்டிகிட்ட சொல்லிடுவேன்.

சிராஜ் said...

smiley யா போடும் இந்த வெளங்காதவன மொதல்ல encounter பண்ணுங்கப்பா.

சிராஜ் said...

ஹாக்கி....
கவலையே படாதீங்க.. ஒலிம்பிக்ஸ்ல 5 அல்லது 6 வது இடம் தான் நமக்கு கிடைக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ சுறா பார்ட் 2 வருமா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்கவுண்டர் - திருப்பியடி?

Related Posts Plugin for WordPress, Blogger...