இந்திய நேரப்படி திங்கள் அதிகாலையிலேயே ஆஸ்கரை நேரடித்தது ஸ்டார் மூவிஸ் சேனல். செட் டாப் பாக்ஸ், DTH இல்லாததால் கடந்த சில வருடங்களாக கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு போன் செய்து ஸ்டார் மூவிஸ் சேனலை விருது வழங்கும் நேரத்தில் மட்டும் எப்படியாவது லிங்க் தருமாறு கேட்பதற்குள் படாத பாடு பட வேண்டி உள்ளது. வருடா வருடம் ஞாயிறு இரவுதான் ஆஸ்கர் ஞாபகம் வந்து தொலைக்கும். சில சமயம் நல்ல மூடில் இருந்தால் அண்ணன் சேனலை வைத்து விடுவார். இல்லாவிட்டால் "இல்ல தம்பி. வேலை செய்ற பசங்க எல்லாம் இன்னைக்கு லீவு" என்று ஹார்ட்டை ப்ரேக் செய்வார். எப்படியோ திங்கள் அதிகாலை டி.வி.யை நோண்டியதில் ஸ்டார் மூவிஸ் கண்டெடுக்கப்பட்டது. வெரி ஹாப்பி!
இவ்வாண்டு ஆஸ்கர் வென்றவற்றில் நான் பார்த்த ஒரே பிலிம் 'தி ஆர்டிஸ்ட்'. சிறந்த படம், இயக்குனர், உடை வடிவமைப்பு, இசை, நடிகர் என 5 விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். படம் நெடுக நாயகன் டுஜார்டினுடன் வலம் வந்த நாயுடன் மேடையேறினார் இவர். ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட் ஆகியோரை தாண்டி இவ்விருதை வசப்படுத்தி உள்ளார். டெக்னிக்கல் விருதுகளை மொத்தமாக அள்ளிச்சென்றது 'ஹ்யூகோ'. மொத்தம் 5 விருதுகள்!! சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட அரங்கின் பால்கனியில் இருந்தவாறு நிகழ்ச்சிக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் நமது ஏ.ஆர். ரஹ்மான்.
சிறந்த நடிகையாக 'அயன் லேடி' மெரில் ஸ்ட்ரீப் தேர்வானார். இதோடு சேர்த்து 17 முறை நாமினேட் செய்யப்பட இவருக்கு மொத்தம் கிடைத்தது 3 ஆஸ்கர்கள் மட்டுமே. துணை நடிகருக்கான விருதை வென்ற க்றிஸ்டோபர் ப்ளம்மருக்கு வயது 82. ஆஸ்கர் வென்ற அதிக வயதுடைய நபர் எனும் பெருமையுடன் பேசிய க்றிஸ்டோபர் "என் தாயின் கருவறையில் இருந்த நாளில் இருந்தே இம்மேடையில் விருது வாங்கி நன்றியுரை ஆற்ற கனவு கண்டிருந்தேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார். பிரபலங்களான பிராட் பிட், மார்கன் ப்ரீமன், க்ளூனி ஆகியோர் விழாவில் அமர்ந்திருக்க அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று கிண்டல் அடித்தார் தொகுப்பாளர்.
சிறந்த அனிமேஷன் மூவியாக 'ராங்கோ'வை தேர்வு செய்தனர். குங்பூ பாண்டா-2 மற்றும் புஸ் இன் தி பூட்ஸ் ஆகியவற்றை பார்த்த எனக்கு ராங்கோவை காணும் ஆவலை தூண்டி உள்ளது இந்த ஆஸ்கர். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட Money Ball, The Descendants ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அடாப்டட் ஸ்க்ரீன்ப்ளே விருதை மட்டும் பெற்றது The Descendants. சிறந்த இசைக்கான அவார்டை 'தி ஆர்டிஸ்ட்' வென்றதில் ஆச்சர்யம் இல்லைதான்.
ஆஸ்கர்-2012 நிகழ்ச்சிக்கு பின்பு பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவலை தூண்டியுள்ள படங்களில் ஹ்யூகோ, தி ஹெல்ப், தி ட்ரீ ஆப் லைப், சிறந்த வெளிநாட்டு பட விருதை வென்ற ஈரானின் 'எ செபரேஷன்', The Fantastic Flying Books of Mr. Morris Lessmore (சிறந்த அனிமேஷன் குறும்படம்), சேவிங் பேஸ் (சிறந்த ஆவணக்குறும்படம்) போன்றவை குறிப்பிடத்தக்கவை. லெட்ஸ் ஸீ!!
.................................................................................................
..............................
My other site:
agsivakumar.com
.............................
...................................................................................
..................................................................................
7 comments:
ஆஸ்கரு அப்படின்னா அப்பா டக்கருன்னு சொல்ராங்களே நெசமா ஹிஹி!
விருது வழங்கும் விழாவை நானும் கண்டு ரசித்தேன்..சிறப்பாக இருந்தது.இவ்வளவு சிறிது நேரத்தில் ஆஸ்கர் விருதை பற்றி அருமையான தொகுப்பை வழங்கியிருக்கிறீர்கள்..விருது எங்கும் போகாமல், தெ ஆர்டிஸ்ட் மற்றும் ஹூகோ தலா ஐந்து விருதுகளை வாரிக்கொண்டு போனதில் மன மகிழ்ச்சி..
ஸ்பில்பெர்க் இந்த வருடமும் எதுவும் இல்லாமல் போகிறார்.இந்த வருடம் வரவிருக்கும் லிங்கன் படத்துக்காவது ஸ்பீல்பெர்க் ஆஸ்கர் போடுகிறாரா என்று பார்ப்போம்.
நன்றி சகோ..வாழ்த்துக்கள்.
சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..
நம்ம தல மியூசிக் போட்டுட்டு இருந்தாரா? பாக்கணும் பாஸ்!
நானும் பார்த்தேன்,இன்று காலையில்!தி ஆர்ட்ட்டிஸ்ட் நடிகர் பிரான்சை சேர்ந்தவர்!
எனக்கு காலை கொஞ்ச நேரம் மட்டுமே ஸ்டார் மூவிஸில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
// சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட அரங்கின் பால்கனியில் இருந்தவாறு நிகழ்ச்சிக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் நமது ஏ.ஆர். ரஹ்மான். //
அடடா ... இது தெரியாமல் போச்சே. பார்க்க முடியவில்லையே. அவ்வ்வ்வ்வ்
A Separation படத்தை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. இன்னும் இரண்டு,மூன்று நாட்களுக்குள் பார்த்துவிடலாம்.
Saving Face.. say something on this boss.
சிவா,
/* இவ்வாண்டு ஆஸ்கர் வென்றவற்றில் நான் பார்த்த ஒரே பிலிம் 'தி ஆர்டிஸ்ட்'. சிறந்த படம், இயக்குனர், உடை வடிவமைப்பு, நடிகர் என 4 விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். */
இது சரி தானா??? 5 வாங்கியதாக நியாபகம். இல்ல நான் தப்பா சொல்றேனா????
Post a Comment