எங்கள் அண்ணா:
ராபர்ட் வத்ரா
"தேவைப்பட்டால்(!) பிசினசை கடாசி விட்டு அரசியலுக்கு வரத்தயார்" என்று சொல்லி விட்டார் பிரியங்கா அக்காவின் பிராணநாதர் ராபர்ட். ஒரு சின்ன விண்ணப்பம்ண்ணே. ஏற்கனவே வெவசாயி வீட்ல பூந்து மிஞ்சி இருந்த ஒரு டம்ளர் கஞ்சியக்கூட வளச்சி தின்னுட்டாறு ராகுல் தம்பி. அதனால அதை விட்டுட்டு புதுசா எதுனா ஸ்டன்ட் அடிங்கண்ணே. நாடு தாங்காது.
அப்பறம்ண்ணே..நீங்க கெலிச்சி வந்த பொறவு பார்லிமெண்ட்ல பிரச்னை ஏதாச்சும் வந்தா நாக்கு கூட கடிக்க வேணாம். ஒத்த கையிலேயே இத்தனை தவக்களை தவ்வுதே. இந்த ஸ்டில் ஒண்ணு போதாது. எவனும் வாய தெறக்கவே மாட்டான்.
...............................................................................
பாசமலர்:
இரண்டு இட்லி ஆர்டர் செய்தாலே அதன் தலையில் தட்டு நிரம்பி வழிய சாம்பார் ஊற்றும் திருவல்லிக்கேணி ரத்னா கபே சப்ளையர் அண்ணன்கள் பற்றி சென்னை உணவுப்பிரியர்கள் பலருக்கு தெரியும். இன்று மதியம் அங்கு அடியேன் ஆஜர். ஊற்றைப்போல் ஊற்றிய சாம்பாரை உறிஞ்சிவிட்டு மிச்சம் இருந்த தம்மா தூண்டு இட்லியை கையில் எடுத்து ஸ்வாகா செய்ய எண்ணிய அடுத்த நொடியே மேலும் கால் லிட்டர் சாம்பாரை ஊற்றினார் அண்ணன். போதும் என்று சொன்ன பிறகும் "சாப்டுங்க. சாப்டுங்க" என்று பாசத்தால் நனைத்தார். அதில் சொட்ட சொட்ட நனைந்த காந்தி தாத்தாவை கர்சீப்பால் துவட்டி விட்டு ரூபாயை நீட்ட வேண்டியதாய் போனது. அடுத்த வாட்டி அந்த சாம்பார் குவளையை ரெடியா வைங்கண்ணே. நம்ம மறுபடியும் மீட் பண்றோம்!!
........................................................................................

மின்சார கண்ணா:
காலை சுமார் 5.45-க்கு வெளியே செல்லும்போது டப்பென தெருவிளக்குகளை அணைத்து விடுகிறார்கள் கவர்மென்ட் கரண்ட் ஊழியர்கள் ஆப் சென்னை. அந்த சுவிட்சை அமுத்துவதற்கு முன்பு சற்று வெளியே எட்டிப்பார்த்து ஏரியா முழுக்க எப்படி இருளில் கிடக்கிறது என்று பார்க்கவே மாட்டார்கள் போல. ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு. வீட்டை விட்டு கொஞ்ச தூரம் நடந்த உடனே படாரென பவரை புடுங்கும்போது ஒரு அட்மாஸ்பியர் உருவாகும் பாருங்க. அதை அனுபவிச்சாதான் தெரியும்.
நம்மை ஏதோ மணிரத்னம் பட ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்காவது பீல் செய்ய வைக்கும் பட பட தருணமது. எங்கே ரோட்டில் படுத்து கிடக்கும் நாயை எசகு பிசகாக மிதித்து தொலைத்து கலவரம் ஆகிவிடுமோ என்று பயந்தவாறே அடியெடுத்து வைக்க வேண்டி இருக்கிறது. யாருங்கண்ணே அந்த மின்துறை அமைச்சர்? பாத்து செய்யிங்க. இல்லன்னா டார்ச் லைட் வழங்கும் திட்டம் கொண்டுவரணும்னு பயங்கர டார்ச்சர் செய்வேன். பந்து இப்போது உங்கள் நீதிமன்றத்தில்(The ball is in your court).
...............................................................................
EK MAIN AUR EK TU:
இம்ரான் கான், கரீனா கபூர் நடித்த இப்படத்திற்கு 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அதை நம்பி டிக்கட் எடுத்த என் புத்திய..விடுங்க. பெற்றோருக்கு பயந்த ரிச்சான கைப்புள்ளையாக இம்ரான். லாஸ் வேகாசில் வேலை போன சோகத்தில் இருக்கும்போது அவர் வாழ்வில் நுழைகிறார் ஏற்கனவே சிலரை கழற்றிவிட்ட கரீனா. இன்டர்வியூ போவதை விட நாயகியுடன் ஊர் சுற்றியே பொழுதை போக்குகிறார் ஹீரோ.
இடைவேளைக்கு பிறகு மும்பையில் இருவரும் சுற்றுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு. பல இடங்களில் கொட்டாவி. என்ன வெளக்கெண்ணைக்கு 4 ஸ்டார் குடுத்தாங்களோ... உங்கள நம்பி இனிமே டிக்கெட் எடுக்கவே மாட்டேன் சாமி. அந்த விமர்சனக் குழுவுல இருக்கறவங்க வெலாசம் மட்டும் தாரீகளா? வெலாசம்...வெலாசம்.
.................................................................................
சிரித்து வாழ வேண்டும்:
"நாம் ஆட்சியில் இருக்கையில் நல்லதை பயந்து செய்தோம். ஆனால் இப்போது கெட்டதை தைரியமாக செய்ய வேண்டும்" என்று ஸ்டாலின் சொயட்டி அடிக்கும் பஞ்ச் ஒன்றை தூத்துக்குடி இளைஞர் அணி தேர்வின்போது கூறி உள்ளார்.
# கலைஞர் புது படத்துக்கு வசனம் எழுத ஆரம்பிச்சிட்டாரோ?
..................................................................................
சத்தம் போடாதே:
ஞாயிறு அன்று எக்ஸ்ப்ரஸ் அவின்யூவில் 3 கோடி மதிப்புள்ள ரெனால்ட் ரேஸ் காரை நிறுத்தி வைத்து வெளம்பரம் செய்து கொண்டிருந்தனர். அருகிலேயே வீடியோ கேம் வேறு. வளாகத்தை சுற்றி ஸ்பீக்கர் வைத்து உசுரை வாங்கினர். "யே..டுர்..டுர்.." என்று வாண்டுகள் காத்த, "எக்ஸ்க்யூஸ் மீ. டூ யூ வான்ட் டு பார்ட்டிசிப்பேட்?" என்று தொகுப்பாளினி(தமன்னா தங்கச்சி ரேஞ்சில் இருந்தாங்க) வேறு பேச..வளாகம் முழுக்க இரைச்சல். யார் E.A மானேஜர் என்று தெரியவில்லை. அடுத்த முறை ஸ்பீக்கர் சத்தம் குறைக்கப்படாவிடில் கொந்தளித்தே தீர வேண்டும் என்று நரம்பு புடைக்க அந்த காம்ப்ளக்சை சுற்றி நாலு ரவுண்ட் குறுக்க மறுக்க நடந்துவிட்டு வீடு திரும்பினேன்.
.........................................................................................
போராளி:
சர்வதேச ஒற்றையர் போட்டிகளில் அடிக்கடி முதல் சுற்றிலேயே உதை வாங்கி வரும் சானியா, இரட்டையர் போட்டிகளில் அவ்வப்போது ஜெயிப்பது சற்று ஆறுதல் தரும் செய்திதான். ஞாயிறு அன்று நடந்த பட்டயா ஓப்பன் இறுதிப்போட்டியில் ஆஸியின் அனஸ்டாசியா எனும் வீராங்கனையுடன் சேர்ந்து 3-6, 6-1, 10-8 எனும் செட்கணக்கில் கடுமையாக போராடி சீன தாய்பெய் இணையை வென்றுள்ளார் சானியா. வெல்டன் மேடம்.
................................................................................................
கௌரவம்:
குறைந்தபட்சம் விகடன் வாசகர் கடித பகுதியிலாவது தனது பெயர் வராதா என்று பலர் ஏங்கிய காலமுண்டு. ஆனால் இப்போது என் விகடனில் தமிழ்ப்பதிவர்களை கௌரவிக்க ஆரம்பித்ததன் மூலம் அக்குறையை போக்க ஆரம்பித்து உள்ளது விகடன். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், தமிழ்வாசி பிரகாஷ், பரிசல்காரன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.அடுத்து அப்பெருமையை அடையப்போகும் பதிவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
......................................................................................

எங்களுக்கும் COLUMN வரும்:
தி ஹிந்து பேப்பரை படித்தால் தூங்கி வழிய வேண்டி வரும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா போட்ட விளம்பரம் செம ஹிட் ஆனது. அதற்கு சரியான பதிலடியை தனது புதிய விளம்பரங்கள் மூலம் தந்துள்ளது ஹிந்து. சபாசு. சரியான போட்டி!

......................................................................
.............................
My other site:
agsivakumar.com
.............................
...............................................
சமீபத்தில் எழுதியது:
தோனி - விமர்சனம்
.................................................

26 comments:
Test comment...
Comment for delete...
Ellarum...vanga.....
Comment innum varalai...
He...he...he...
வழக்கம் போல் எல்லாமே கலக்கல்
டார்ச் லைட் இலவசமா கொடுக்குற விஷயம் சூப்பர் :-)
///"தேவைப்பட்டால்(!) பிசினசை கடாசி விட்டு அரசியலுக்கு வரத்தயார்"////
அவங்களுக்கு எல்லாம் ஒண்ணுதானுங்களே? நமக்குத்தான் புச்சு புச்சாத் தெரியுது......
/// 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.////
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் பளிச்னு கிளிவேஜு, கும்முன்னு டான்சு, ஹைஃபை சீன்ஸ் இதெல்லாம் இருந்தா போதும்.........
//கலைஞர் புதுப்படத்துக்கு வசனம் எழுத ஆரம்பிச்சிட்டாரா..?!//
வி.வி.சி.
மீல்ஸ் நல்ல சுவை -
கெட்டதை செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் எதை சொல்றார்???????
//ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு//
சென்னையத் தவிர மற்ற ஊர்களில் எல்லாம் அறிவிக்கப்பட்ட மின்கட்டு 8 மணிநேரம் ஆனால் 12 மணி நேரம் புடுங்கிடுறாங்க... அரைமணி நேரத்துக்கு புலம்பரீங்களே தல...
@ நாய் நக்ஸ்
இவரோட இம்சை தாங்கலையே ஆண்டவா.......
@ ஆமினா
நன்றி மேடம்.
@ பன்னிக்குட்டி ராம்சாமி
எனக்கென்னவோ ராபர்ட் இந்தியாவை எங்கயோ கொண்டு போய்டுவாருன்னு தோணுது. :)))
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/// 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்.////
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கெல்லாம் பளிச்னு கிளிவேஜு, கும்முன்னு டான்சு, ஹைஃபை சீன்ஸ் இதெல்லாம் இருந்தா போதும்.........//
ஆனா சில விஷயங்கள்ல ஹிந்துவை விட இவங்க டாப்ல இருக்காங்க. மசாலாவை கொஞ்சம் கம்மி பண்ணலாம்.
@ சேலம் தேவா
உடனே கோபாலபுரத்திற்கு வருமாறு சேலம் தேவா அவர்களை கேட்டுக்கொள்கிறோம்!
@ மனசாட்சி
அது வந்து..வந்து...அதாவது..
//சங்கவி said...
//ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு//
சென்னையத் தவிர மற்ற ஊர்களில் எல்லாம் அறிவிக்கப்பட்ட மின்கட்டு 8 மணிநேரம் ஆனால் 12 மணி நேரம் புடுங்கிடுறாங்க... அரைமணி நேரத்துக்கு புலம்பரீங்களே தல...//
கரண்ட் கட்டை(Cut ஐ...சிங்கிள் மீனிங்தான்) பத்தி சொல்லலை சங்கவி(உங்க நிஜப்பேரே அதுதானா? இல்லை நீங்க விஜய் ரசிகரா? ஈரோட்லயே கேக்கனும்னு நெனச்சேன்). விடியறதுக்குள்ள விளைக்கை அணைச்சிடறாங்க(ஸ்ஸ்..தமிழ்ல எது சொன்னாலும் வேற அர்த்தமாவே வருதே..என்னடா தமிழுக்கு வந்த சோதனை). அதாவது தெருவிளைக்கை.
அங்க 12 மணிநேர பவர் கட்டா? சோ சாட். இங்க ஒன்லி ஒன் அவர் மட்டுமே. உல்லாசமாகவே உலகத்தில் வாழவே..!!
வணக்கம் சார்!எல்லாம் கலக்கல் தான்!ஆனா,டார்ச் லைட் குடுக்க கட்டுப்படியாவாது!ஏன்னா,அப்புறம்,அதுக்கு பாட்டரி கேப்பீங்க!பல்ப்பு கேப்பீங்க!இதெல்லாம் வேலைக்காவாது!பேசாம அரிக்கேன் லாந்தர் கேட்டுடுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!!!
சாம்பார் மழை பத்திப் பேசி ஏன் சார் நாக்க சப்புகொட்ட வைக்கிறீங்க????
மாப்ள நான் எதிர்பார்த்து வந்த 1000 ரூவா நோட்டு மேட்டர் நீங்க போடாத்தால வெளிநடப்பு பண்றேன் ஹிஹி!
ப்ளீஸ் ஏன் சார் அந்த வலது பக்கத்து மேல் மூலைல கோயில் வாசல்ல ரெண்டு பக்கமும் துவார பாலகர்கள் காவலுக்கு இருக்கிறாப்புல ஒரு ஆளைப் போட்டு பயமுறுத்துறீங்க?????????
அறுசுவை அரசுதான் நீங்கள்!
சானியா மிர்சாவின் எடுப்பான படம் மிக அருமை சார்... அந்த பந்தை எட்டி கேட்ச் பிடிக்கணும் போல இருக்கு.
Nice. I too enjoyed the Times Vs Hindu fight
meals arumai
/* வணக்கம் சார்!எல்லாம் கலக்கல் தான்!ஆனா,டார்ச் லைட் குடுக்க கட்டுப்படியாவாது!ஏன்னா,அப்புறம்,அதுக்கு பாட்டரி கேப்பீங்க!பல்ப்பு கேப்பீங்க!இதெல்லாம் வேலைக்காவாது!பேசாம அரிக்கேன் லாந்தர் கேட்டுடுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!!! */
இதுக்கு மண்ணெண்ணெய் கேட்போமே... ஹி. ஹி.ஹி..
Times of India might have business interest in the movie? So many times they give good rating to dubba movies.
Post a Comment