CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, February 5, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (05/02/12)காதலிக்க நேரமில்லை:


                                                                  
சானியா மிர்சாவை ஓரம் கட்டிவிட்டு இப்போது இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளை சகட்டுமேனிக்கு பறக்க விட்டுக்கொண்டு இருக்கும் யுவதி இவர்தான். பெயர்: தீபிகா பல்லிகல்.  20 வயது சென்னைப்பொண்ணு. தற்போது நடந்து வரும் அண்டர் 21 உலக ஸ்குவாஷ் போட்டியில் எதிர் அணிகளை டுமீல் செய்து வருகிறார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் எகிப்து அணியுடன் மோதப்போகிறார் தீபிகா. போட்டி நடக்கும் இடம்: சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூ மால். நேரம் மாலை ஆறு மணி. 

நேற்று நடந்த செமிபைனலை பார்க்க E.A-வில் 50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனராம். இன்று சொல்லவா வேண்டும்? தீபிகா ரசிகர் மன்றங்கள் வேகமாக பதிவு செய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. வெல்லட்டும் இந்தியா!!

                                                தீபிகாவும், த்ரிஷா அக்காவும்  
...............................................................................

போக்கிரி:
"இந்த தரம் என் நாக்குதான். அடுத்த வாட்டி யாராச்சும் எதிர்த்து பேசனீங்க, அப்பறம் நேரா பாஞ்சி வந்து உங்க நாக்கையெல்லாம் ஒண்ணு விடாம கடிச்சி தின்னுபுடுவேன்" - சிம்மா. நரசிம்மா.    
..............................................................................

ஒரு மருபூமிக்கதா:   
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், முகேஷ், லட்சுமிராய்,பாவனா  நடித்துள்ள காமடி படம்தான் 'ஒரு மருபூமிக்கதா'. PVR தியேட்டரில் நேற்றைய இரவுக்காட்சிகூட ஹவுஸ்புல்லாக இருந்தது. அரபீம்,ஒட்டகம்,பி.மாதவன் நாயரும்..இதுதான் ஒரிஜினல் டைட்டில். அரபி, ஒட்டகம் போன்ற வார்த்தைகளுக்கு வளைகுடா அரசு சென்சார் போட்டுவிட்டதால் டைட்டிலை மாற்றிவிட்டனர். ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் UAE இல் தான். 

90-களில் வந்த நகைச்சுவை காட்சிகள்தான் பெரும்பாலும். எனினும் மோகன்லால், முகேஷ் இருவரும் சேர்ந்து பாலைவனத்தில் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.  ப்ரியதர்ஷனின் ஆவரேஜ் காமடி சித்திரம். 
.....................................................................................

மின்சார கனவு: 
மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது தமிழக அரசு. எல்லா கூட்டங்களிலும் சிட்டிசன்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் 'ஏற்றியே தீருவோம்' என்று இறுதியாக கூறுகின்றனராம் அரசு தூதர்கள். அப்பறம் எதுக்கு எங்கள வேற கேட்டுகிட்டு? சீக்கிரம் ஷாக் வைங்க!!
................................................................................

தப்புத்தாளங்கள்: 
டெஸ்ட் தொடரில் ஆஸி.யால் கொத்து பரோட்டா போடப்பட்ட மென் இன் ப்ளூ இன்று தொடங்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நன்றாக ஆடி  இறுதிப்போட்டிக்காவது தகுதி பெற்றே தீர வேண்டும். இல்லாவிடில் தோனி & கோ.வின் பாடு அம்புட்டுதான். சஹாரா வேறு திடீரென ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொண்டு விட்டதால் பி. சி. சி. ஐ. தடுமாறிப்போய் உள்ளது. அதோடு மட்டுமின்றி புனே வாரியர்ஸ் அணியையும் விற்க சஹாரா முடிவு செய்துள்ளது. என்னடா இது இந்திய கிரிக்கெட்டிற்கு சோதனை....
...................................................................................

நாடோடிகள்:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 'லைப் டைம் கியாரண்டி' தர காங்கிரஸ் தலைவர்கள் நெல்லையில் நேற்று நடத்திய கூட்டத்தில் பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட ABCD. இளங்கோவன் பேசியது "நான் சொல்லும் கருத்தைத்தான் நாராயணசாமி சொல்கிறார். அவர் சொன்னதைத்தான் தங்கபாலு சொல்கிறார். எங்கள் குரலில் ஏற்ற இறக்கம் இருப்பினும் சொல்ல வரும் விஷயங்கள் ஒன்றுதான்"(அவ்வ்). கடைசியா ஒன்று சொன்னாரு பாருங்க. அதுக்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் புரியுதான்னு பாருங்கங்க:  

"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".

என்ன கொடும சரவணன் இது?
......................................................................................

காலம் மாறிப்போச்சி:  
சில வருடங்களுக்கு முன்பு நைட்டி போட்டுக்கொண்டு நாட்டார் கடைக்கு போகும் தலைநகர இல்லத்தரசிகளை அதிசயமாகவும், ஆக்ரோஷமாகவும் பார்த்த காலமெல்லாம் (பரங்கி) மலையேறிப்போய் விட்டது. தேவயானியே சொல்லிட்டாங்க "ஒரு குடும்பத்தலைவியாய் என்னை உணர வைப்பது பொம்மிஸ் நைட்டிஸ்"ன்னு. நல்லி, குமரன்,போத்திஸ் எல்லாம் இனிமே 'சாமுத்ரிகா பட்டு, விவாகா பட்டு' ரேஞ்சுக்கு விளம்பரம் தர்றதை நிறுத்திட்டு 'நவரச நைட்டி, எங்கும் எங்கெங்கும் நைட்டி'ன்னு தங்க, வெள்ளி ஜரிகை வச்ச நவ நாகரீக உடுப்புகளை விக்க ஆரம்பிச்சாதான் பீல்டுல நிக்க முடியும் போல! இப்படி ஒரு வெளம்பரத்த எடுத்த எசமான் வாழ்க.வாழ்க!
...................................................................................

தம்பி ஊருக்கு புதுசு:
"தற்போது நடைபெற்று வரும் உ.பி. தேர்தல் பிரச்சாரத்தின் நாயகன் எனது தொம்பி ராகுல்தான்" என்று சொல்லி செம டமாசு செய்துள்ளார் பிரியங்கா அக்கா. யக்கோவ்...அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சோட நிறுத்தி இருக்கலாம். கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டீக..
.................................................................................    

முகராசி: 
பேஸ்புக்கை உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரட்டிப்பாகிவிட்டதாம்.இனி இந்தியாதான் எங்களுக்கு முக்கியமான வருமானம் தரும் தேசமாக மாறப்போகிறது என்கிறது நிர்வாகம். சீன நாட்டு  பெண்களிடம் மட்டும் "ஹாய் க்யூட்டி. ஹவ் ஆர் யூ" சொல்ல முடியாது பாய்ஸ். ஏன்னா அங்க பேஸ்புக்குக்கு 144 உத்தரவு எப்பயோ போட்டாச்சி!!
...............................................................................   

மன்னாதி மன்னன்: 
புரட்சித்தலைவரின் சமூக நோக்கம் கொண்ட பாடல்களில் புகழ்பெற்ற ஒன்று. எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்: 


.................................................................................


..............................
My other site:
.............................47 comments:

நாய் நக்ஸ் said...

தீபிகா பல்லிகல் STILES..இன்னும் தரலாமே...
இன்னிக்கு சண்டே ...ஹி...ஹி...ஹி..

ஆமினா said...

. அப்பறம் எதுக்கு எங்கள வேற கேட்டுகிட்டு? சீக்கிரம் ஷாக் வைங்க!!///

அதானே... இதெல்லாம் ஓவரு!

நம்மல கேட்டு தான் ஆட்சி பண்றமாதிரி....

ஆமினா said...

//"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".//

அடக்கொடுமைக்கு பொறந்தவின்ங்களா?????/

Prem S said...

அசாருதீன் உடன் இணைத்து பேசப்பட்டாரே அந்த தீபிகா தானே இது !சிம்மா நரசிம்மா கலக்கல்

ஆமினா said...

//ஏன்னா அங்க பேஸ்புக்குக்கு 144 உத்தரவு எப்பயோ போட்டாச்சி!!///

உங்களுக்குமா?? ரிக்வஸ்ட் அனுப்பி கொள்ள காலமாச்சு அவ்வ்வ்வ்வ்

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
தீபிகா பல்லிகல் STILES..இன்னும் தரலாமே...
இன்னிக்கு சண்டே ...ஹி...ஹி...ஹி..//

இன்னொரு ஸ்டில்...போட்டாச்சி. போட்டாச்சி.

! சிவகுமார் ! said...

@ ஆமினா

ரீகால் சிஸ்டம் வரட்டும். பாத்துக்கலாம். :)

ஆமினா said...

//எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்: //

என்னமோ ஏதோ???

நாய் நக்ஸ் said...

தீபிகாவும், த்ரிஷா அக்காவும் ////

யாருக்கு?????
வேணாம் இதெல்லாம் வேணாம்...
இதோட நிறுத்திக்குங்க ....

! சிவகுமார் ! said...

//ஆமினா said...
//"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".//

அடக்கொடுமைக்கு பொறந்தவின்ங்களா?????//

இதை அப்படியே சத்யமூர்த்தி பவன் வாசல்ல போயி நாலு தபா சொல்லுங்க...

! சிவகுமார் ! said...

//பிரேம் குமார் .சி said...
அசாருதீன் உடன் இணைத்து பேசப்பட்டாரே அந்த தீபிகா தானே இது !சிம்மா நரசிம்மா கலக்கல்//

இது என்ன புது புரளி. பிரேம்..அது சங்கீதா பிஜ்லானி!!

ஆமினா said...

//இதை அப்படியே சத்யமூர்த்தி பவன் வாசல்ல போயி நாலு தபா சொல்லுங்க...//

ஹி...ஹி...ஹி... ஈ ஏ க்கு பேக் சைட்ல அந்த ஏரியா இருக்குன்னு எனக்கு சத்தியமா தெரியாதுங்கண்ணா...

கெளம்புறேனுங்கோ

! சிவகுமார் ! said...

//ஆமினா said...
//எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்: //

என்னமோ ஏதோ???//

பாட்டு வேறயா..அடுத்த ஏர்டெல் சூப்பர் சிங்கர் நீங்கதானா?

CS. Mohan Kumar said...

அசார் சங்கீதா பிஜிலாணியை கல்யாணம் பண்ணிட்டார். இப்போ ஒண்ணா இருக்காங்களா தெரியலை. அப்புறம் மிக சமீபத்தில் வேறு ஒரு இளம் வீராங்கனையுடன் இணைத்து பேசினார்கள். அது தீபிகா அல்ல. வேறு யாரோ

Unknown said...

சிவா...பேஸ்புக் மட்டுமல்ல பல ஜம்பாவன்களும் சீனாவுல தன் தளம்/சாப்ட்வேர் போறத விரும்பறதில்லை..காரணம் வெளியான மூனாவது நாளே டூப்ளிகெட் ரெடி பண்ணி விடுறாங்க...இந்திய மக்கள் அவ்வளவு ஒர்த் இல்லை!ஹிஹி
ஆனால் இந்தியாகாரன் கண்டுபிடிச்சாலும் அமெரிக்கா கம்பனிகாரன்தான் அதெ வெளியிடுறான் இந்தியனின் தயாரிப்பு இந்தியாகாரனுக்கு புடிக்காது ஹிஹி!
திரிசாவை அக்கா என்றதுக்கு கடுமையான கண்டனங்கள்!
வேண்டுமென்றால் நாய்நக்ஸ் மச்சானுக்கு அக்கா என்று போடவும் ஹிஹி.....சாப்பாடு திருப்த்தி...

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!மீல்ஸ் அருமை.அந்தப் பெண் ஏன்(த்ரிஷா)கமலா காமேஷ் கூட நின்னு போட்டோ புடிச்சுது?இந்தியா ஜெயிக்கட்டும்!!!!

Yoga.S. said...

ஐய்! ஆமினா சூப்பர் சிங்கர் கம்பிட்டிசனில போட்டி போடுறதுக்கு சென்னைக்குப் போகப் போறாங்க,ஜாலி!!!!!!!!!

சிராஜ் said...

/* அப்பறம் எதுக்கு எங்கள வேற கேட்டுகிட்டு? சீக்கிரம் ஷாக் வைங்க! */

உண்மை.....ரசித்தேன்....

சிராஜ் said...

/* சீன நாட்டு பெண்களிடம் மட்டும் "ஹாய் க்யூட்டி. ஹவ் ஆர் யூ" சொல்ல முடியாது பாய்ஸ். */

சொன்னாலும் புரியாது....ஆங்கில அறிவு அமோகம்.

சிராஜ் said...

/* "ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்
*/

இது கூட புரியலையா????? ஹே...ஹே..

"ஊழல் செய்பவர்கள் யாரும் காங்கிரசில் இருக்க முடியாது... ஆனால் காங்கிரசில் பல காலமாக இருக்கும் சிலர் ஊழல் செய்கிறார்கள்" அன்னை சோனியா, இது மாதிரி தான் அதுவும்.

ஹாலிவுட்ரசிகன் said...

//எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்//
உண்மை உண்மை

தாமரைக்குட்டி said...

கலக்கல் காக்டைல்!

விறு விறு தொகுப்பு!

ஹாலிவுட்ரசிகன் said...

//இப்படி ஒரு வெளம்பரத்த எடுத்த எசமான் வாழ்க.வாழ்க!//
இனிமே நிறைய ஆன்டிஹீரோக்களை ரோட்டுல பார்க்கமுடியும். ஹி ஹி

நிரூபன் said...

வணக்கம் சகோ,

ஒரு குடும்பத் தலைவி முன்னால் வந்தா
சூடான விவாதங்களும் கூலாகிடும்!
ஒரு நைட்டிக்கு வந்த மவுசைப் பார்த்தீங்களா?

நிரூபன் said...

திரைப்படங்களின் பெயரின் கீழ் சுவாரஸ்யமான விடயங்களைத் தொகுத்திருக்கிறீங்க.

நாடோடிகள் தலைப்பின் கீழே உள்ள விடயம் தான் கொஞ்சம் வேதனையாக இருக்கிறது.
எல்லா அரசியல்வாதிகளும் சேர்ந்து மக்களை ஏமாற்றுகிறார்களே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

திரிசாவுக்கு அங்க என்ன வேலை?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நேற்று நடந்த செமிபைனலை பார்க்க E.A-வில் 50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனராம். இன்று சொல்லவா வேண்டும்?////

இது எந்த டீவில வருது......? சீக்கிரம் சொல்லும்யா.... இதெல்லாம் முன்னாடியே சொல்லித் தொலச்சிருக்கப்படாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////போக்கிரி:
"இந்த தரம் என் நாக்குதான். அடுத்த வாட்டி யாராச்சும் எதிர்த்து பேசனீங்க, அப்பறம் நேரா பாஞ்சி வந்து உங்க நாக்கையெல்லாம் ஒண்ணு விடாம கடிச்சி தின்னுபுடுவேன்" //////

அதுக்குள்ள நாங்க கட் சொல்லிடுவோமே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஒரு மருபூமிக்கதா: ////

அண்ணன் அடிக்கடி ஸ்டேட் மாறி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// சஹாரா வேறு திடீரென ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொண்டு விட்டதால் பி. சி. சி. ஐ. தடுமாறிப்போய் உள்ளது. அதோடு மட்டுமின்றி புனே வாரியர்ஸ் அணியையும் விற்க சஹாரா முடிவு செய்துள்ளது. என்னடா இது இந்திய கிரிக்கெட்டிற்கு சோதனை..../////

இந்திய கிரிக்கெட்டுக்கா இல்ல கிரிக்கெட் போர்டுக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".
//////

என்னது தொண்டர்களா......?

Yoga.S. said...

ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம்!அதல்ல பிரச்சினை(!!!!)உங்களுக்குள் ஒற்றுமை என்றைக்குமே இருக்க வேண்டும்!///அதாவது தலைவருங்க அடிச்சுக்குவோம்,கண்டுக்காம வேற இடம் பாருங்க தொண்டனுங்களா அப்புடீங்குறாரு!

! சிவகுமார் ! said...

@மோகன் குமார்

எப்படியும் கண்டுபிடிச்சி ஆகணும்.

! சிவகுமார் ! said...

@ (சின்ன) வீடு சுரேஷ்குமார்

நக்கிக்குதான் த்ரிஷா அக்கா என்று கூறி உள்ளேன். நீங்க கொந்தளிக்க வேண்டாம். கூல் சுரேஷ்!

! சிவகுமார் ! said...

@ யோகா

அந்தப்பொண்ணு போட்டோ புடிக்கலீங்க. போட்டோக்ராபர்தான். இந்தியா எகிப்திடம் தோத்துருச்சி. தீபிகா பேச்சு கா!!

! சிவகுமார் ! said...

//சிராஜ் said
"ஊழல் செய்பவர்கள் யாரும் காங்கிரசில் இருக்க முடியாது... ஆனால் காங்கிரசில் பல காலமாக இருக்கும் சிலர் ஊழல் செய்கிறார்கள்" அன்னை சோனியா, இது மாதிரி தான் அதுவும்.//

இப்ப தெளிவாயிட்டேன்.

! சிவகுமார் ! said...

@ ஹாலிவுட் ரசிகன்

நன்றி நண்பரே.

! சிவகுமார் ! said...

@ தாமரைக்குட்டி

நன்றி மினி லோட்டஸ்.

! சிவகுமார் ! said...

//ஹாலிவுட்ரசிகன் said...
//இப்படி ஒரு வெளம்பரத்த எடுத்த எசமான் வாழ்க.வாழ்க!//
இனிமே நிறைய ஆன்டிஹீரோக்களை ரோட்டுல பார்க்கமுடியும். ஹி ஹி//

ஆமாம். பேட் பாய்ஸ் அண்ட் அங்கிள்ஸ்!!

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

பொம்மிஸ்..விளம்பர பிரம்மா வாழ்க. காங்கிரஸ் தலைவர்கள் என்றாலே தமாசுதான்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
திரிசாவுக்கு அங்க என்ன வேலை?//

ஒரு வெளம்பரம்......

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///நேற்று நடந்த செமிபைனலை பார்க்க E.A-வில் 50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனராம். இன்று சொல்லவா வேண்டும்?////

இது எந்த டீவில வருது......? சீக்கிரம் சொல்லும்யா.... இதெல்லாம் முன்னாடியே சொல்லித் தொலச்சிருக்கப்படாதா?//

ஹா.ஹா...ஹா.....எங்க ஊர்ல (தீபிகாவை) நேரடியாவே பாக்கறதால எந்த சேனல்ல போட்டா என்ன..ஞாபகம் இல்ல. நாந்தான் காலைலயே பதிவு போட்டனே ஆட்டம் ஆறு மணிக்கு ஆரம்பம்னு. அப்பயே இங்க(madras) வந்துருக்கணும். போட்டி முடிஞ்சதும் வந்து கேட்டா..என்ன சின்னபுள்ள தனமா இருக்கு?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////போக்கிரி:
"இந்த தரம் என் நாக்குதான். அடுத்த வாட்டி யாராச்சும் எதிர்த்து பேசனீங்க, அப்பறம் நேரா பாஞ்சி வந்து உங்க நாக்கையெல்லாம் ஒண்ணு விடாம கடிச்சி தின்னுபுடுவேன்" //////

அதுக்குள்ள நாங்க கட் சொல்லிடுவோமே.....?//

நீங்க நாக்கைதான் கட் பண்ண சொல்றீங்கன்னு நெனச்சிட போறார். தெளிவா கட் சொல்லுங்க.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///ஒரு மருபூமிக்கதா: ////

அண்ணன் அடிக்கடி ஸ்டேட் மாறி....//

ஓ..சேட்டன் இந்த பாலக்காட்டு மாதவனை நன்னாயிட்டு புரிஞ்சு வச்சோ.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///// சஹாரா வேறு திடீரென ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொண்டு விட்டதால் பி. சி. சி. ஐ. தடுமாறிப்போய் உள்ளது. அதோடு மட்டுமின்றி புனே வாரியர்ஸ் அணியையும் விற்க சஹாரா முடிவு செய்துள்ளது. என்னடா இது இந்திய கிரிக்கெட்டிற்கு சோதனை..../////

இந்திய கிரிக்கெட்டுக்கா இல்ல கிரிக்கெட் போர்டுக்கா?//

ரெண்டுத்துக்கும் என்ன வித்யாசம்...அதான் இது. இதான் அது.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".
//////

என்னது தொண்டர்களா......?//

என்ன ஆணவம்? பன்மோகன் போர்ப்படை சார்பாக ஆட்சேபங்களை அள்ளி விடுகிறோம்.

! சிவகுமார் ! said...

// யோகா

//அதாவது தலைவருங்க அடிச்சுக்குவோம்,கண்டுக்காம வேற இடம் பாருங்க தொண்டனுங்களா அப்புடீங்குறாரு!//

அதே. அதே.

Related Posts Plugin for WordPress, Blogger...