CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, February 27, 2012

ஆஸ்கர் விருதுகள் - 2012


                                                                   
இந்திய நேரப்படி திங்கள் அதிகாலையிலேயே ஆஸ்கரை நேரடித்தது ஸ்டார் மூவிஸ் சேனல். செட் டாப் பாக்ஸ், DTH இல்லாததால் கடந்த சில வருடங்களாக கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு போன் செய்து ஸ்டார் மூவிஸ் சேனலை விருது வழங்கும் நேரத்தில் மட்டும் எப்படியாவது லிங்க் தருமாறு கேட்பதற்குள் படாத பாடு பட வேண்டி உள்ளது. வருடா வருடம் ஞாயிறு இரவுதான் ஆஸ்கர் ஞாபகம் வந்து தொலைக்கும். சில சமயம் நல்ல மூடில் இருந்தால் அண்ணன் சேனலை வைத்து விடுவார். இல்லாவிட்டால் "இல்ல தம்பி. வேலை செய்ற பசங்க எல்லாம் இன்னைக்கு லீவு" என்று ஹார்ட்டை ப்ரேக் செய்வார். எப்படியோ திங்கள் அதிகாலை டி.வி.யை நோண்டியதில் ஸ்டார் மூவிஸ் கண்டெடுக்கப்பட்டது. வெரி ஹாப்பி!

இவ்வாண்டு ஆஸ்கர் வென்றவற்றில் நான் பார்த்த ஒரே பிலிம் 'தி ஆர்டிஸ்ட்'. சிறந்த படம், இயக்குனர், உடை வடிவமைப்பு, இசை, நடிகர் என 5 விருதுகளை தட்டி சென்றது இத்திரைப்படம். படம் நெடுக நாயகன் டுஜார்டினுடன் வலம் வந்த நாயுடன் மேடையேறினார் இவர். ஜார்ஜ் க்ளூனி, பிராட் பிட் ஆகியோரை தாண்டி இவ்விருதை வசப்படுத்தி உள்ளார். டெக்னிக்கல் விருதுகளை மொத்தமாக அள்ளிச்சென்றது 'ஹ்யூகோ'. மொத்தம் 5 விருதுகள்!! சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட அரங்கின் பால்கனியில் இருந்தவாறு நிகழ்ச்சிக்கு இசையமைத்து கொண்டிருந்தவர் நமது ஏ.ஆர். ரஹ்மான்.  

                                                        சிறந்த நடிகர் டுஜார்டின்

சிறந்த நடிகையாக 'அயன் லேடி' மெரில் ஸ்ட்ரீப் தேர்வானார். இதோடு சேர்த்து 17 முறை நாமினேட் செய்யப்பட இவருக்கு மொத்தம் கிடைத்தது 3 ஆஸ்கர்கள் மட்டுமே. துணை நடிகருக்கான விருதை வென்ற க்றிஸ்டோபர் ப்ளம்மருக்கு வயது 82. ஆஸ்கர் வென்ற அதிக வயதுடைய நபர் எனும் பெருமையுடன் பேசிய க்றிஸ்டோபர் "என் தாயின் கருவறையில் இருந்த நாளில் இருந்தே இம்மேடையில் விருது வாங்கி நன்றியுரை ஆற்ற கனவு கண்டிருந்தேன்" என்று உணர்ச்சி பொங்க பேசினார். பிரபலங்களான பிராட் பிட், மார்கன் ப்ரீமன், க்ளூனி ஆகியோர் விழாவில் அமர்ந்திருக்க அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்று கிண்டல் அடித்தார் தொகுப்பாளர். 

                                                சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப்    

சிறந்த அனிமேஷன் மூவியாக 'ராங்கோ'வை தேர்வு செய்தனர். குங்பூ பாண்டா-2 மற்றும் புஸ் இன் தி பூட்ஸ் ஆகியவற்றை பார்த்த எனக்கு ராங்கோவை காணும் ஆவலை தூண்டி உள்ளது இந்த ஆஸ்கர். பெரிதும் எதிர்பாக்கப்பட்ட Money Ball, The Descendants ஆகிய படங்கள் ஏமாற்றத்தையே தந்தன. அடாப்டட் ஸ்க்ரீன்ப்ளே விருதை மட்டும் பெற்றது The Descendants. சிறந்த இசைக்கான அவார்டை 'தி ஆர்டிஸ்ட்' வென்றதில் ஆச்சர்யம் இல்லைதான்.  

                                            சிறந்த துணை நடிகர் - க்றிஸ்டோபர்  

ஆஸ்கர்-2012 நிகழ்ச்சிக்கு பின்பு பார்த்தே தீர வேண்டும் எனும் ஆவலை தூண்டியுள்ள படங்களில் ஹ்யூகோ, தி ஹெல்ப், தி ட்ரீ ஆப் லைப், சிறந்த வெளிநாட்டு பட விருதை வென்ற ஈரானின் 'எ செபரேஷன்', The Fantastic Flying Books of Mr. Morris Lessmore (சிறந்த அனிமேஷன் குறும்படம்), சேவிங் பேஸ் (சிறந்த ஆவணக்குறும்படம்) போன்றவை குறிப்பிடத்தக்கவை. லெட்ஸ் ஸீ!!
.................................................................................................

..............................
My other site:
agsivakumar.com
.............................

...................................................................................
சமீபத்தில் எழுதியது:

ஸ்பெஷல் மீல்ஸ் (26/02/12) 


..................................................................................                 

Sunday, February 26, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (26/02/12)


லண்டன்:                

    
தற்போது இந்திய விளையாட்டின் சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் அது சந்தீப் சிங்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இன்று நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று இறுதிப்போட்டியில் பிரான்சுக்கு எதிராக 5 கோல்களை அடித்து அசால்ட் செய்துள்ளார். பிரான்ஸ் அணியை 8-1 எனும் கோல் கணக்கில் பம்ப் அடித்தது இந்தியா. லண்டனில் ஜூலை மாதம்  தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் தகுதி பெற்றதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவ்வெற்றி குறித்த தனிப்பதிவை படிக்க க்ளிக்கவும்: ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி.      
..................................................................................                                                             

தலைநகரம்:
மக்கள் நெரிசலும், கடும் போக்குவரத்தும் இருக்கும் நந்தனம் சிக்னல் மற்றும் தி.நகர் பனகல் பார்க் ஆகிய இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கும் எண்ணம் எப்போது அரசுக்கு வருமென்றே தெரியவில்லை. எத்தனை ஆட்சிகள் மாறினாலும் தீர்வு கிடைத்த பாடில்லை. நடந்து செல்வபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவதை அந்த ஏரியா அருகிலேயே வசிக்கும் மேயர் சைதை துரைசாமி எப்போது உணர்ந்து செயலில் இறங்கப்போகிறார்?
........................................................................................

'ஒண்ணா' இருக்க கத்துக்கணும்: 
பில்லா-2, சிங்கம்-2, சண்டக்கோழி-2 என வரிசையாக சீக்வல் படங்கள் தயாராகிக்கொண்டு இருக்கின்றன. இனியும் பொறுப்பதில்லை. வீராசாமி-2, எங்க ஊரு பாட்டுக்காரன்-2 என்று எங்கள் தலைகளும் களத்தில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது. ஏன் நாம் கொஞ்சம் அசந்தால் ராஜபாட்டை-2 வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 
...................................................................................

புரியாத புதிர்:
யாமறிந்த தேசங்களிலே இங்கிலாந்து என்று ஒன்றிருப்பதை உறுதியிட்டு   கூற இயலும். ஆனால் புதிய தலைமுறை டி.வி. மட்டும் 'இங்கிலந்து' என்றொரு நாட்டை அடிக்கடி குறிப்பிட்டு வருகிறது.ஒருவேளை வெள்ளைக்காரர்கள் அப்படித்தான் அழைப்பார்களோ என்று பரிசோதித்தும் பார்த்தாயிற்று. கிடைத்த பதில் "வீ ஆர் பரம் இங்க்லான்ட்" தான்.  ஒருவேளை 'இஸ்லன்ட் எஸ்டேட்' டை கண்டுபிடித்தவரின் வாரிசுதான் இதையும் டிஸ்கவர் செய்திருப்பாரோ?
.................................................................................

புதுப்புது அர்த்தங்கள்:
என்கவுண்டருக்கு சரியான தமிழ்ச்சொல் என்ன என்பது மர்மமாக இருக்கிறது. ஊடகங்களில் தேடியும் கிடைக்கவில்லை. நம்மை சுற்றி இருக்கும் கொலம்பஸ்கள் இதற்கு வைத்திருக்கும் பெயர் "போட்டுத்தள்ளுறது" (தமிழையும் சேத்தா?)
.................................................................................

புதிய பாதை: 
சென்னைவாசிகளின் காதில் தேன் பாயோ பாயென்று பாயும் செய்தியை அறிவித்துள்ளது அரசாங்கம். மெட்ரோ பணிகள் வேகமாக நடைபெற வரும் புதன் முதல் மவுன்ட் ரோட்டில் போக்குவரத்து மாற்றங்கள் வரப்போகிறதாம். எனவே பத்து நிமிடத்தில் அடைய வேண்டிய இலக்கை குறைந்தது அரைமணி நேரமாவது கழித்துதான் அடைய முடியும். மவுன்ட் ரோட்டை ஒட்டியுள்ள சந்து பொந்துகளில் வாகனங்களை வளைத்து, சுழற்றி பகுமானமாக ஓட்டி ஆபீஸ், காலேஜ், தியேட்டர்களை அடைய..Get Ready Folks!!
..................................................................................
   
பலே பாண்டியா: 
சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்காக ஸ்பாட்டில் ஏகப்பட்ட மிஸ்டர். ஒய்ட்கள் குவிந்து உள்ளனராம். வாடகைக்கு வீடு எடுக்க சிரமமாக உள்ளதால் சுற்றியுள்ள ஊர்களிலும் துண்டு போட்டு வைத்துள்ளனர். ச.கோவில் வாடகை வீடுகளை முன்பே ரிசர்வ் செய்துவிட்ட அரசியல்வாதிகள் ஏசி பொருத்தி பிரச்சார சூட்டை அவ்வப்போது தவிர்த்து வருவதாக செய்தி. "தேர்தல் முடிஞ்சதும் அந்த ஏசி உங்களுக்குதான். அப்படியே விட்டுட்டு போறோம்" என்று ஆசை காட்டுவது ஹவுஸ் ஓனர்கள் மத்தியில் நன்றாக வொர்க் அவுட் ஆகிறதாம். சும்மாவா சொன்னாங்க. அரசியல் பண்றது தனிக்கலைன்னு..
.......................................................................................

கோபாலா. கோபாலா:
"ட்வீட் செய்வது செக்ஸுக்கு இணையானது போல் உள்ளது". இப்படி ஒரு மேட்டரை சொல்லி இருப்பது டைரடக்கர் ராம் கோபால் வர்மா.

# "நீங்க இப்படி பேசலைன்னாதான் ஆச்சர்யம் கோப்பால்.."சரோஜா தேவி.
............................................................................................

முரண்: 
அரும்பாக்கம் அம்பா ஸ்கைவாக் மாலில் புட் கோர்ட் இருக்கும் தளத்தில் 'எங்கய்யா இருக்கு குடிக்கிற தண்ணி' என்று அலைந்து திரிந்து அவ்விடத்தை கண்டுபிடித்து என்ன பயன்?  டென்சன் அதிகமானதுதான் மிச்சம். கழிப்பறைக்கு ஒட்டிய இடத்தில் இலவச குடிநீர் குழாயை வைத்துள்ளனர். இப்படி வைத்தால் "ஆளை விடுங்கடா சாமி" மக்கள் டப்பு தந்து மினரல் வாட்டரைத்தான் குடித்தாக வேண்டும் என டெக்னிக்கலாக ப்ளான் பண்ணி இருப்பார்களோ? நல்லா தண்ணி காட்டறீங்க அப்பு!!
.........................................................................

ஷாக்:
தேர்வு நேரம் நெருங்குவதால் மின்தடையால்  பள்ளிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசே ஜெனரேட்டர்களை வாங்கித்தர முடிவு செய்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் சேர்த்து ஜெனரேட்டர் செலவை அரசே ஏற்குமாம். அப்படி என்றால் வீட்டில் படித்து பரீட்சைக்கு மாணவர்கள் தயாராக என்ன திட்டம் வைத்துள்ளார் மேடம்?? இரவிலும், அதிகாலையிலும் இறுதிக்கட்டத்தில் பரபரப்பாக படிக்கப்போகும் மாணவர்கள் கதி? 
..............................................................................

இதுதாண்டா போலீஸ்:
காக்க காக்க படத்தை செமத்தியாக மெருகேற்றி கௌதம் விரைவில் ஒரு என்கவுண்டர் படத்தை எடுக்க வேண்டும். அதில் நான்கு போலீஸ்கார் வேடங்களில் பவர் ஸ்டார், மக்கள் நாயகன், கேப்டன் மற்றும் டி.ஆர். டுப்பாக்கி ஏந்தி தமிழ்நாட்டை அதிர வைக்க வேண்டும் என்பது எனது அவா. அந்த 'பாண்டியா' ரோலையும் டி.ஆரே முடியை சிலுப்பிக்கொண்டு நடித்தால் ப்ரம்மாதமாக இருக்கும்தானே?!
...............................................................................

மொழி:  
பாவேந்தரின் மொழிப்பற்று பொங்கும் வார்த்தைகளால் தமிழுக்கோர் வெண்சாமரம் வீசும் இனிய பாடல். என்றும் செவிக்கினிமையாக! 


...................................................................................

..............................
My other site:
agsivakumar.com
.............................
........................................................    
........................................................


Friday, February 24, 2012

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்..டுமீலுதான்!!


                                                                                                                               
வேளச்சேரி என்கவுண்டர் குறித்து சூடான விவாதங்கள் பல்வேறு தளங்களில் நடந்து வருகின்றன. திருவல்லிக்கேணி மேன்சன்கள் பலவற்றில் போலீஸ் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றதென அங்கு தங்கி இருக்கும் நண்பர் தெரிவித்தார். கொன்னது சரிதான் என்று பொதுமக்கள் பலர் ஷங்கர் பட க்ளைமாக்ஸ் டயலாக்குகளை உதிர்த்து வருகின்றனர். அம்மக்களை 'நடுத்தர வர்க்க மொக்கைகள்' என்று விளிக்கும் கட்சிசார் கொழுந்துகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு மேட்டருக்கு வருவோம்.  ஏனெனில் சிங்கள அரசு தமிழர் பலரை மாஸ் என்கவுண்டர் செய்கையில் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்த கட்சியை சேர்ந்த ஜகதலப்பிரதாபர்கள் இப்போது மனித உரிமை(!) பற்றி பேசுவதை கண்டால்...வேணாம் விடுங்க. கெரகம்!!

மாநிலத்தில் மக்களுக்கு பாதுகாப்பில்லை என்று தொடர்ந்து மீடியாக்கள் சங்கு ஊத ஆரம்பிக்கையில், அதிலும் குறிப்பாக சாமான்யனே கொந்தளிக்க தொடங்கியதும் வேறு வழியின்றி சில என்கவுண்டர்களை செய்கிறது அரசு. வேளச்சேரியில் நடைபெற்றது ரியலா, போலியா என்று சந்தேகங்கள் வர ஆரம்பித்து உள்ளன. கேமராவில் பதிவான நபரின் உருவத்திற்கு பின்பு பேக் கிரவுண்ட் காட்சிகள் இல்லாமல் வெள்ளையாக தெரிகிறது.அந்த மர்ம நபரின்  உருவத்தை மட்டும் கட் செய்து காட்ட வேண்டிய அவசியம் என்ன? , (பணத்தை) சுட்டவன் உடனே வேறு ஊருக்கு தவ்வாமல் எதற்கு வேளச்சேரியில் பம்மி இருக்க வேண்டும்? துப்பு கிடைத்த அரைமணி நேரத்தில் எப்படி போலீஸ் ரவுண்டு கட்டி அடித்தது? கேள்விகள் பல. ஒருவேளை போலி என்கவுண்டர் என்றால் அது மிகவும் வருந்தத்தக்கதே. 

சில நாட்களுக்கு முன்பு கூட தொடர்ந்து சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்  தன் கணவனை கொன்று போட்டிருக்கிறார். பெற்ற மகளையே கற்பழிக்க வந்த மிருகத்தை தடுக்க வேறு வழி தெரியாமல். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரிலீஸ் செய்துள்ளார் மதுரையின் 'ரியல் அஞ்சா சிங்கம்' அஸ்ரா கார்க். ஐயா.. மனித உரிமை அண்ட் (கொக்கரக்) கோ க்ரூப்பை சேர்ந்தவர்களே,  தங்கள்  மகளை கற்பழிக்க ஒரு கயவன் முயன்றால் அதை வேடிக்கை பார்த்தவாறு "அன்பின் மன்மதக்குஞ்சு, நடுத்தர வர்க்க மொக்கைகள் போல் சட்டென உணர்ச்சி வசப்பட்டு உங்களை கொல்ல நான் முட்டாள் இல்லை. மனித உரிமை ஆர்வலர். அதற்கான ஐ.டி.கார்ட் உள்ளது. (கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை மட்டும் இன்னும் புதுப்பிக்கவில்லை). நீங்கள் பொறுமையாக ரேப்புங்கள். பிறகு இருவரும் ஆட்டோ பிடித்து போகிற வழியில் கீரை பக்கடா சாப்பிட்டுக்கொண்டே காவல் நிலையம் செல்வோம். ஏனெனில் சட்டப்படிதான் யாரையும் தண்டிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்று பேசுவீர்களா? 

                                                                   அஸ்ரா கார்க் 

போலி என்கவுண்டர் செய்யும் போலீசுக்கு மரண தண்டனை தர வேண்டும் என சில நாட்களுக்கு முன்புதான் சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது. அதையும் மீறி   வேளச்சேரியில் போலி என்கவுண்டர் செய்ய தமிழக போலீஸ் முடிவெடுத்து இருப்பார்களா என்பதும் நம்முள் எழும் முக்கியமான('முக்கிய' 'மான') கேள்வியே. 'வாழும் வள்ளுவர்(!)' டி.வி. இந்த என்கவுன்டரை போஸ்ட் மார்ட்டம் செய்வது அதிசயமல்ல. கூடவே தவசி டி.வி.யும் "சாமீ..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்" என்று என்கவுன்டரை சந்தேகித்து 'புலன் விசாரணை' நடத்தி வருகிறது. தவசி ஐயா நடித்த பல படங்களில் வில்லன்களை மன்னித்து சட்டத்தின் முன்பு நிறுத்தினாரா அல்லது சுட்டு பொசுக்கினாரா என்பது அவர் படத்தை ஒன்று விடாமல் பார்க்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கே வெளிச்சம்!!

                                                                    விஜயகுமார்

மெகா ஸ்டார் கசாப் முதல் கீழ்கட்டளை சோட்டா கிரிமினல்கள் வரை யாருக்கு ஆபத்து என்றாலும் கொக்கரிக்கும் மனிதநேயர்கள் எத்தனை பேர்  காலிப்பயல்களின் தோட்டாவிற்கு நேர்மையான போலீஸ்காரர்கள் உயிரை பலி கொடுக்கையில் இதே தீவிரத்தை காட்டி உள்ளனர்? பொதுமக்கள் தரும் ரியாக்சனுக்கு தானும் சேர்ந்து குரல் தந்தால் ஆட்டு மந்தை ஆகிவிடுவோம் என்பதால் தனித்து நிற்க வேண்டும். அப்போதுதான் நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள் எனும் ஒரே அல்ப விளம்பரத்திற்காக கொடூர குற்றவாளிகளுக்கு வால் பிடிக்கும் வானரங்களை உள் நாக்கில் சூட் செய்தாலும் தப்பில்லை!!

என்கவுண்டர்கள் தொடர வேண்டுமா? நிறுத்தப்பட வேண்டுமா? என்கிற பட்டிமன்றம் எல்லாம் அப்பறம். ஆனால் இதைக்கேள்விப்பட்டதும் அடுத்த சில நாட்களுக்கேனும் திருட நினைப்பவன் வாலை சுருட்டிக்கொண்டு சிதறி ஓடி இருப்பானே..அது போதும். ஏனெனில் ஒவ்வொரு முறையும் கொள்ளை போவது பிளாட்பாரத்தில் 'வானம் கூரை, பூமி பஞ்சுமெத்தை' என்றிருப்பவனின் பணமோ அல்லது ஊரை அடித்து உலையில் போட்ட திடீர் பணக்காரர்கள் பணமோ அல்ல. வருடக்கணக்கில் நாயாய் உழைத்து பிள்ளைகளின் படிப்பு, திருமணத்திற்கு சேர்த்து வைத்த நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்பு. அதை சேர்த்து வைக்க எம் மக்கள் படும் பாட்டை அறியாமல் 'மனிதநேயம்' பேசுபவர்களை என்ன  சொல்ல?

'சம்பவம் நடக்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், தம்மை தற்காத்து கொள்ள வேண்டியும் கயவர்களை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது', 'எச்சரிக்கை செய்தும் திருந்தாமல் கொடூர செயல்களில் ஈடுபட்டு வருகிறான். இனி பேசிப்பயன் இல்லை' என்று காவல்துறை கையை பிசைந்து கொண்டு இருக்கும் நேரத்தில்...... சுட்டு தள்ளுங்க சார்!!
  
................................................................................................

.............................
My other site:
.............................
Sunday, February 19, 2012

அம்புலி 3D


                                                                      
பேய்வீடு, 13 ஆம் நம்பர் வீடு போன்ற திகில்(!) படங்களை பார்த்தியா என்று முன்னொரு காலத்தில் சுற்றி இருப்பவர்கள் பேசியதை கேட்டதுண்டு. அந்த வகையறாவில் பார்த்த பல தமிழ்ப்படங்களில் பின்னணி இசை,பயமுறுத்தும் குரல்கள், திடுக்கிட வைக்கும் சத்தம் என வெரைட்டி வெரைட்டியாக முயற்சி செய்து நம்மை கிச்சு கிச்சு மூட்டுவார்கள் படைப்பாளிகள். "நாங்கல்லாம் விருதகிரி, வீராசாமி பார்த்து மிலிட்டரி ட்ரைனிங் எடுத்தவாங்க.எங்க கிட்டயேவா?" என்று அதற்கெல்லாம் அசராமல் இருந்ததுண்டு. ஆனால் அம்புலி..ஹாட்ஸ் ஆப். சில ஆண்டுகளாக த்ரில்லர், ஹார்ரர் வகை படைப்புகள் இந்திய சினிமாவில் பெருமளவு பேசப்பட்டதில்லை. அதை உடைத்து எறிந்திருக்கிறது அம்புலி. 

ஹரீஷ் - ஹரி இரட்டை இயக்குனர்கள், நான்கு இசையமைப்பாளர்கள் மற்றும்  புதுமுக நடிகர்கள் சேர்ந்து விறுவிறுப்பான படத்தை தந்துள்ளனர். அம்புலி என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் ஒன்று(அது என்னவென்று திரையில் காண்க) ஊரை அச்சுறுத்துகிறது அல்லது அப்படி நம்புகிறார்கள் மக்கள்(சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை). கல்லூரி மாணவர்கள் இருவர் ஊருக்கு சென்று அம்புலி யார் என்று கண்டறிய முயல்கின்றனர். அவர்களோடு ஜெகனும்.  காமடி நடிகரான இவருக்கு நல்ல கேரக்டரை தந்த இயக்குனர்களுக்கு பாராட்டுகள். அமுதன், வேந்தனாக வருபவர்கள் பெரிதாக நடிக்காவிடிலும் படத்தின் ஓட்டத்திற்கும், அம்புலி ஓட்டத்திற்கும் நன்றாக வழிவிடுகிறார்கள். நாயகிகள் நடிப்பு வெரி நார்மல். 

தம்பி ராமையா, கலைராணி ஆகியோர்  வழக்கம்போல் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். பார்த்திபனுக்கு ஏற்ற கேரக்டர் இதில். டெர்ரர் ரோலை கூலாக ஏற்று ஸ்கோர் செய்துள்ளார். இதுபோன்ற படங்களில் திகில் காட்டும் நபர் யார் என்பதை ஓரளவிற்கு யூகித்துவிடுவோம்.அம்புலியில் அப்படி யூகிக்க விடாமல் இறுதிவரை சஸ்பென்சை வளர்த்தது செம. த்ரீ டி கண்ணாடியில் பார்க்க சற்று சிரமமாக இருந்தது. டெக்னிக்கல் குறைபாடா அல்லது கண்ணாடியின் தரம் சரியில்லையா என்று குழப்பமாக உள்ளது. இத்தனைக்கும் சத்யம் தியேட்டர் தந்த உயர்ரக கண்ணாடிதான் அது). இதை உடனே அம்புலி டீம் என்னவென்று கவனிக்க வேண்டும்.  ஆனால் திகிலுடன் நகரும் தொடர் காட்சிகளுக்கு முன்பு இக்குறையெல்லாம்  ஒன்றுமே இல்லை. 

                                                           
பாடல்கள் எதுவும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அவற்றில் வரும் இசையும் வெகு சுமார்தான். இரண்டு பாடல்களை குறைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சோளக்காடு வரும் ஒவ்வொரு சீனிலும் நம்மை திகில் கவ்விக்கொள்கிறது. தியேட்டரில் அக்காட்சி வருகையில் குழந்தைகள் வீறிட்டு அழ, சுவாரஸ்யத்தை மிஸ் செய்ய விரும்பாத பெற்றோர்கள் வெளியேயும் செல்ல இயலாமல் தவிக்கின்றனர். சதீஸின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பல்ஸை எகிற வைக்கின்றன. ஆரம்பத்தில் அமுதன் அரக்க பறக்க காட்டை தாண்டி சைக்கிள் வந்து நின்றதும் அவர் தோளை ஒரு கை தொட்டுப்பார்க்க...அரங்கில் இருந்த பலர் உறைந்து போயினர் என்றால் அது மிகையில்லை. 

வெறும் பயத்தை மட்டுமே கிளப்பாமல், இரண்டாம் பாதியில் அறிவியல் ரீதியான விளக்கத்தையும் தந்துள்ளது பாராட்டத்தக்கது. அதுதான் படத்தின் முக்கிய அம்சம் என்பது என் கருத்து. அதே கண்கள் படத்திற்கு பிறகு என்னை அசர வைத்த சஸ்பென்ஸ் த்ரில்லர் அம்புலி. இந்திய சினிமா காலரை உயர்த்திக்கொள்ள ஒரு சூப்பர் த்ரில்லரை தந்த அம்புலி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

அம்புலி - கும்மிருட்டில் ஒரு குபீர் சிக்ஸர்!
...............................................................................................

முக்கிய கேரக்டரில் நடித்த 'கலக்கப்போவது யாரு' கோகுல் மற்றும் இயக்குனர் ஹரீஷ் நாராயண் இருவரிடமும் போனில் பேசினேன்(உபயம் அதிரடி அரசியல் பதிவர் ரஹீம் கசாலி). கடும் உடல் உழைப்பை தந்துள்ள தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் எனப்பாராட்டியதை பணிவன்புடன் ஏற்றுக்கொண்டார் கோகுல். 

இயக்குனர் ஹரீஷிடம் பேசுகையில் சமீப காலத்தில் இப்படி ஒரு த்ரில்லரை பார்த்ததில்லை என்றும், படத்தில் இருந்த சில குறைகளையும் சுட்டிக்காட்டினேன். ரிசல்ட் கேட்க தியேட்டர்களை நோக்கி சென்று கொண்டிருந்த பிசியான நேரத்திலும் போதுமான நேரம் ஒதுக்கி உரையாடிய ஹரீஷுக்கு நன்றி. தனக்கும் 'அதே கண்கள்' மிகவும் பிடித்த படமென்றார். சத்யம் தியேட்டரில் ஆடியன்ஸ் ரியாக்சன் பாசிடிவாக இருந்ததை சொன்னதற்கு சந்தோஷப்பட்டார். 

                                                  இயக்குனர்கள் ஹரி - ஹரீஷ்

அம்புலி - 2 வருவதற்கான வாய்ப்பு உள்ளதென்பதை இறுதிக்காட்சி உணர்த்தி உள்ளது.  அச்சம் கலந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். 

ஹரீஷின் வலைப்பூ: ஹரீஷ் நாராயண்
.........................................................................................

............................
My other site:
agsivakumar.com
...........................

.......................................................
சமீபத்தில் எழுதியது:

காதலில் சொதப்புவது எப்படி? 

முப்பொழுதும் உன் கற்பனைகள்

அட உங்க வூட்ல பார்ட்டி!
.......................................................Friday, February 17, 2012

வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட!


                                          நந்தனம் கலைக்கல்லூரி நாட்டி பாய்ஸ்  

"பஸ் டே வந்தாலே சென்னை காலேஜ் பயலுக இப்படி அநியாயம் பண்றாங்களே" என்று நம் சிட்டிசன்கள் கொந்தளித்து எழுதும் பதிவுகளையும், ஊடக செய்திகளையும் படித்து இருப்பீர்கள். அது குறித்து பிலாசபி பொங்கிய பதிவு: பச்சையப்பன் கல்லூரியும்... . அதில் களை கட்டிய கமன்ட்டுகளையும் படித்து பாருங்கள்.  அடுத்து சமீபத்தில் விக்கி சீறிய பதிவு: பஸ் டே. இனி நான் கண்ட 'மாஸ் ஹீரோஸ் ஆப் சென்னை காலேஜ்' பற்றிய பதிவு கீழே. 

வடசென்னைக்கு சர் தியாகராயா , மத்தியில் பச்சையப்பாஸ், தெற்கே நந்தனம் ஆர்ட்ஸ்..பாடாத பாட்டா..ஆடாத ஆட்டமா? அடியேன் விழுந்து விழுந்து  படித்தது தியாகராயாவில். அக்கல்லூரி நாட்கள் குறித்து விரிவாக வேறொரு பதிவில் பகிர்கிறேன். இப்போது நான் கண்ட கல்லூரி 'பருத்தி வீரர்கள்' பற்றி பார்ப்போம். அதாகப்பட்டது சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்தில் கலாட்டா செய்வதோடு, ரத்தம் தெறிக்கும் வன்முறையிலும் ஈடுபடுவர் என்பதை நான் முதலில் கண்ணெதிரே பார்த்தது பள்ளி நாட்களில்தான்.

தெற்கே: 
நந்தனம் YMCA  பள்ளியில் நண்பர்களுடன் மதியம் விளையாடிக்கொண்டிருந்த சமயமது. எமது பள்ளிக்கு பின்புறம் மினி கூவம் ஒன்று ஓடும். அதில் இருந்து பாலா பட ஹீரோ போல ஒரு இளைஞன் 'சாக்கடை பாத்' கெட்டப்பில் கத்தியுடன் நாங்கள் இருந்த திசை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தான். நானும், சக மாணவர்களும் அதிர்ந்து போனோம். மறுபக்கத்தில் நந்தனம் ஆர்ட்ஸ் மாணவர்கள் மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் அவனை பலவழியில் துரத்தி வந்து ஒருவழியாக பிடித்து விட்டனர். நடந்தது என்னவென்று நாங்கள் விசாரித்தபோது கல்லூரி தேர்தலில் தன் தலைவனை(!) எதிர்த்து ஜெயித்தவனை கல்லூரி வாசலிலேயே ஒரே சொருகாக சொருகிவிட்டு அருகில் இருந்த ஆற்றில் ஜம்ப் செய்து தப்பிக்க பார்த்தானாம். இந்தப்போராளி கைக்கூலி அல்ல. சாட்சாத் அதே கல்லூரி மாணவன்தான். வாயில் ரத்தம் வர உதைத்து இழுத்து சென்றனர் அவனை. இப்படியும் காலேஜ் பசங்க இருப்பாங்களா என்று என்னை வாய்பிளந்து பார்க்க வைத்த முதல் நேரடி நேர் அடி ஒலி/ஒளிபரப்பு.

பஸ் டே வந்தால் போதும். மவுண்ட் ரோட்டையே உண்டு இல்லை என்றாக்கி கடும் ட்ராபிக் ஜாம் செய்வதில் மன்னர்கள் நம்ம நந்தனம் ஆர்ட்ஸ் பாய்ஸ். தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. பெண்கள் கல்லூரி அருகே மாநகரப்பேருந்து க்ராஸ் செய்கையில் இவர்களின் கோஷம் விண்ணை பிளக்கும். அதுவும் பஸ்  டே அன்று கேட்கவே வேண்டாம். அந்த சில மணிநேரங்கள் போலீஸ்காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பார்கள்.      

வடக்கே:
சர் தியாகராயாவில் சீட் கிடைத்து (தெரியாமல்) உள்ளே நுழைந்தேன். சிக்கி ஒரு வாரம் ஆகி இருக்கும். எனது லெக்சரரிடம் பேசிக்கொண்டே வகுப்பறையை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். ரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஆசிரியரை உரசிக்கொண்டே ஓடினான் ஒரு சுப்ரமணியபுரத்தான்.  "டேய்..என்னடா இது" என்று அவர் கேட்டதற்கு மெலிதாக ஒரு புன்னகையை மட்டும் பூத்து விட்டு மேலும் வேகமாக ஓடினான். "என்ன சார் இது?" என்று நான் கேட்டதற்கு "அதட்டுனா பிரச்னை வேற மாதிரி ஆகும். வா போகலாம்" என்று பதில் சொன்னார். வட சென்னையில் வாண்டு பயலிடம் (பிலாசபி உட்பட) முறைத்தால் கூட "வகுந்துருவேன்" என்கிற ரீதியில் பெரும்பாலும் லுக் அடிப்பார்கள் என்பதால் 'காக்க காக்க'. 

மற்றொரு நாளில் அக்கல்லூரியின் பெரிய சுவற்றின் பின்பக்கத்தில் இருந்து குதித்து மைதானத்தை தாண்டி ஓடினர் சில மாணவர்கள். யூனிபார்முடன் பேருந்து நடத்துனர்களும், சில அடியாட்களும் பின் தொடர்ந்து அவர்களை விரட்டினர். காரணம் இதுதான். சொன்ன இடத்தில் பேருந்தை நிறுத்தாததால் வீறுகொண்டு எழுந்த மாணவன் ஒருவன் ஓட்டுனர் வாயை உடைத்து விட்டானாம். பேருந்தை நடுரோட்டில் பெப்பரப்பே என்று போட்டுவிட்டு கல்லூரியில் புகுந்து அதகளம் செய்திருக்கின்றனர் கவர்மென்ட் மாப்பிள்ளைகளும், அவர்தம் அடிப்பொடிகளும். நல்ல காலேஜ்ல சேந்தேன் போங்க. 

பச்சையப்பன் ப(டி)ச்ச புள்ளைங்க! 

மத்தியில்:
முன்பெல்லாம் சத்யம் தியேட்டரில் புதுப்படம் வந்தால் போதும். காலைக்காட்சி துவங்கும் நேரத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மண்டையை உடைத்து கொள்வார்கள். குறிப்பாக ரூபாய் 6.50 டிக்கட்(இப்போது 10 ரூபாய்) கவுண்டரில். ஒன்று லயோலா க்ரூப். மற்றொன்று புதுக்கல்லூரி(தமிழில் ந்யூ காலேஜ்) க்ரூப். அருகில் இருந்தால் நமக்கும் தர்மத்துக்கு நாலு விழும்.  முக்கியமாக மாணவர்களை திருத்த 'பஞ்ச்' பேசுபவர்கள் ஸ்பாட்டில் இருந்திருந்தால் தெரிந்திருக்கும் சேதி. இலவசமாகவே உங்கள் வாயில் வெற்றிலை பாக்கு போட்டு விட்டு வலி/வழி தெரியாமல் இருக்க அடிபட்ட இடத்தில் சுண்ணாம்பையும் தடவி விட்டிருப்பார்கள். அது ஒரு கற்காலம் கல் ஒரு கண்ணாடி காலம்.   இப்போது சத்யம் படு டீசன்ட் ஆகிவிட்டதால் கலவரங்கள் 99% குறைந்து விட்டன. 

அடுத்து நம்ம தலைநகரின் சூப்பர் ஸ்டார் காலேஜான பச்சையப்பாஸ். 15B, 27B, 159 சீரிஸ் பஸ்களில் மாப்பிள்ளைகள் ரவுசு உச்சத்தை தொடும். நடத்துனர்கள்  சிலரை இவர்கள் வசியம் செய்து வைத்திருப்பதால், அடிக்கும் கூத்து அளவு மீறும்போதெல்லாம் "ஏண்டா.."என பரிதாபமாக நடத்துனர் கேட்டால் "ண்ணா..டென்ஷன் ஆவதண்ணா" என்று சொல்லி இன்னும் டென்ஷனை எகிற வைப்பார்கள். கடைசி படிக்கட்டிற்கு மேலிருக்கும் தகரத்தில் காது கிழிய கம்போசிங் நடக்கும். ஒவ்வொரு க்ரூப்பிலும் ஒரு கானா உலகநாதன் கண்டிப்பாக உண்டு. எல்லாமே ஜாலிதான் அவர்களுக்கு. 

ஆனால் இச்செயல்கள் கடந்த சில வருடங்களாக எல்லை மீறி போய்க்கொண்டு இருப்பதை மறுப்பதற்கில்லை. அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏனென்று தெரியவில்லை. நான் கண்டவரையில் இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடக்கும் சமயம் 'அரசியல்' உள்ளே நுழைந்து விடும். தேர்தலில் நிற்கும் மாணவர்கள் சிலருக்கு ஸ்பான்சர் செய்வதில் முன்னணி அரசியல் கட்சி ஆட்களும்  இருப்பதுண்டு. சாதாரண கல்லூரி மாணவர்கள் பலர் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால்தான் பெரும்புள்ளிகளுக்கு இந்தப்பாசம். 

இதன் விளைவே சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் நடந்த/நடந்து வரும் வன்முறை சம்பவங்கள். மாணவன் தான் பலிகடா ஆக்கப்படுவதை உணராத வரை இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. இப்ப ஆடுங்க மாப்ள. இன்டர்வியூன்னு ஒண்ணு வரும். அப்ப பேஸ்மென்ட் ஆடும்போது தெரியும். நீங்க காலேஜ் பில்டிங்கல ஸ்ட்ராங்கா ஆடுன ஆட்டத்தோட விளைவு என்னான்னு. அப்போது கையில் காசில்லாமல் திணறும் நேரத்தில் கவுண்டமணி சொன்ன டயலாக் ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் மச்சான்ஸ்:

"வட்டமா இருக்குமே எட்டணா. அதைப்பாக்கவே ஒரு வாரம் சிங்கி அடிப்ப மகனே. சிங்கி." 
.......................................................

மவுண்ட் ரோட் பேருந்தில் நந்தனம் ஆர்ட்ஸ் பசங்களின் கானா கச்சேரி:


.............................................................................

...............................
My other site:
...............................Tuesday, February 14, 2012

பாரதத்தின் பெருமை தன்னை பாடு. சோறு எதுக்கு தம்பி?                                                                       
"பிள்ளை விரும்பும் பாடத்தையே படிக்க விடுங்கள். ஆசைப்படும் தொழிலையே செய்ய அனுமதியுங்கள்" என்று சமீபகாலமாக திரைப்படங்களில் கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன.அது நடைமுறையில் எந்த அளவிற்கு ஒத்து வரும் என்பது முக்கியமான கேள்வி.அதுவும் இந்தியக்கல்வி முறையை பின்பற்றிக்கொண்டு. "எஜுகேஷன் சிஸ்டத்த மாத்தியே தீரணும்" என்பதும் அடுத்து முன்வைக்கப்படும் வாதம். இதைக்கூட மிக மெதுவாகத்தான் சில அரசுகளும், பள்ளிகளும் செயல்படுத்த துவங்கி உள்ளன. முழுமையாக அனைத்து மாணவர்களையும் சென்றடைய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? 

முன்பொரு காலத்தில் பி.ஏ. படித்தவருக்கு கிடைத்த மரியாதையே தனி. தமிழ்ப்படங்களில் கூட "மாப்ள என்ன படிச்சிருக்கார்?" என்றால் "பி.ஏ." என்று பெருமிதம் பொங்க சொல்வார்கள் அந்தக்கால ஹீரோக்கள். அதற்கடுத்த கால கட்டத்தில் பி.காம் பட்டதாரிகள் ஒவ்வொரு தெருவிலும் கணிசமாக உலவி வந்தனர். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எல்லாம் எம்.சி.ஏ. ஜுரம் ஏகத்துக்கும் பற்றிக்கொண்டது. தன் பிள்ளை டாக்டர், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று அரதப்பழசான வசனத்தை பேசி வந்த பெற்றோர் கூட திடீர் கோடீஸ்வரன் ஆக சிறந்த வழி இதுதான் என ஞான திருஷ்டியில் உணர்ந்து கணினி பயில பிள்ளைகளை கட்டாயப்படுத்தினர். கொஞ்ச காலம் கழித்து   கம்ப்யூட்டர் துறை ஓரிரு முறை பெருவீழ்ச்சி கண்டதும் எம்.சி.ஏ. சீட்டுகள் எல்லாம் கல்லூரிகளில் கற்று வாங்க ஆரம்பித்தன. 

மீண்டும் ஒரு செய்தி காற்று வாக்கில் பரவ ஆரம்பித்தது. அடுத்து உலகத்தை ஆட்சி செய்யப்போவது பயோ டெக்னாலஜி துறைதான் என்பதுதான் அது.  அதற்கான படையெடுப்பு துவங்கியது. பிறகு அந்த மோகமும் நீர்த்துப்போனது. இப்போது 'நானே ராஜா' என்று சொல்லிக்கொள்ள எந்தத்துறை சார்ந்த படிப்பும் இல்லாத சூழல். ஆச்சர்யமான விஷயம்தான். 

                                                                     
பத்தாம் வகுப்பு முடித்ததும் தன் பிள்ளை எந்தத்துறை சார்ந்த பட்டப்படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என பணக்கார பெற்றோர்கள் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்துவிடுகின்றனர். அவர்களுக்கு பணம் ஒரு பொருட்டல்லவே. ஏழ்மை நிலையில் உள்ள பெற்றோர்களுக்கும் பெரிய குழப்பங்கள் இல்லை. யாரேனும் உதவி செய்தால் அதை வைத்து குழந்தைகளை மேற்படிப்பு படிக்க வைக்க யோசிப்பார். இல்லாவிடில் வேலைக்கு அனுப்பி விடுவர். ஆனால் திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் நிலைதான் அந்தோ பரிதாபம். மண்டையைக்குடைந்து முடிவு எடுப்பதற்கு முன்பே கல்லூரி அட்மிஷன்கள் முடிந்து விடுகின்றன. 

வெறும் டிகிரி இருந்தால் போதும். ஏதேனும் ஒரு வேலை நிச்சயம் என்று இன்னும் எத்தனை வருடங்கள் BPO முதலாளிகளை நம்பி பட்டதாரிகள் தம்  வாழ்வை தீர்மானிக்க முடியும்? ஏற்கனவே ஒபாமா அபாயச்சங்கு ஊதி வருகிறார். அப்படி ஒரு நிலைவந்து IT/BPO நிறுவனங்கள் ஷட்டரை மூட வேண்டிய நாள் வரலாம். அந்த நாளை கற்பனை கூட செய்ய இயலாது. இந்தியா இதுவரை காணாத வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்பது சர்வ நிச்சயம். பிறகென்ன? வீட்டுக்கொரு 'வறுமையின் நிறம் சிகப்பு' கமல் உருவாகும் நிலை வருவதை தவிர்க்கவே இயலாது.  

இந்த ஆபத்தை முன்பே உணர்ந்து அதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்குமா என்று எதிர்பார்த்தால் நம்ம பன்மோகன் நித்தம் ஒரு வெளிநாட்டில் போய்தான் இறங்குகிறார். இலவசங்களை அள்ளித்தெளிக்கும் எந்த மாநில அரசும் சராசரி இளைஞனுக்கு வேலை தருவதில் அக்கறை செலுத்துவதில்லை. தொடர் மின்வெட்டால் ஸ்தம்பித்து போய் உள்ளது தமிழகம். கணினி பூங்காக்களில் மட்டும் 24/7 கரண்ட் சப்ளை. ஆனால் கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் இடைவிடாத மின்வெட்டு. இப்படியே இன்னும் சில மாதங்கள் நிலைமை நீடித்தால் டெக்ஸ்டைல், பேஷன் டெக்னாலஜி போன்ற படிப்பை படிக்கும் சில மாணவர்கள் கூட சாப்ட்வேர் படித்து பிழைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.  

இம்மாதிரி நிர்வாக சீர்கேட்டால் கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களையும் அறிந்தும், அறியாமலும் கணினி சார்ந்த படிப்பை தேர்ந்து எடுக்க வைக்கும் கட்டாயத்தை உருவாக்கி வருகின்றனர் ஆட்சியாளர்கள். இசை, விளையாட்டு, சைக்காலஜி போன்ற பல துறைகளில் இளைஞர்கள் மிளிரும் வாய்ப்பை ஆண்டுதோறும் குறைத்து கொண்டே வருவது கல்வித்துறையின் வீழ்ச்சியாகவே கருதப்படும். ஒருவேளை ஆட்டுமந்தை போல அல்லாமல் சிந்தித்து படித்து இளைஞர்கள் முன்னேறிவிட்டால் நம்மை எதிர்த்து கேள்விகள் கேட்டு, பிறகு ஆட்சிக்கு வரவும் வாய்ப்புண்டு என்பதால் மௌனம் சாதிக்கின்றனவா அரசுகள்? ஒரே கல்விசார் துறையில் வருமானம் கொட்டும் நிலையை சிறிதேனும் மாற்றியமைக்க எப்போது திட்டம் தீட்டப்போகின்றனர் இவர்கள்? 

அவர்கள் முடிவு எடுக்கும் வரை... 

"பாட்டு ஒண்ணு பாடு தம்பி... பசிய கொஞ்சம் மறந்திருப்போம்"
               


.......................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................


Sunday, February 12, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (12/02/12)எங்கள் அண்ணா: 

                                                                  ராபர்ட் வத்ரா 

"தேவைப்பட்டால்(!) பிசினசை கடாசி விட்டு அரசியலுக்கு வரத்தயார்" என்று சொல்லி விட்டார் பிரியங்கா அக்காவின் பிராணநாதர் ராபர்ட். ஒரு சின்ன விண்ணப்பம்ண்ணே. ஏற்கனவே வெவசாயி வீட்ல பூந்து மிஞ்சி இருந்த ஒரு டம்ளர் கஞ்சியக்கூட வளச்சி தின்னுட்டாறு ராகுல் தம்பி. அதனால அதை விட்டுட்டு புதுசா எதுனா ஸ்டன்ட் அடிங்கண்ணே. நாடு தாங்காது. 

அப்பறம்ண்ணே..நீங்க கெலிச்சி வந்த பொறவு பார்லிமெண்ட்ல பிரச்னை ஏதாச்சும் வந்தா நாக்கு கூட கடிக்க வேணாம்.  ஒத்த கையிலேயே இத்தனை தவக்களை தவ்வுதே. இந்த ஸ்டில் ஒண்ணு போதாது. எவனும் வாய தெறக்கவே மாட்டான். 
...............................................................................


பாசமலர்: 
இரண்டு இட்லி ஆர்டர் செய்தாலே அதன் தலையில் தட்டு நிரம்பி வழிய சாம்பார் ஊற்றும் திருவல்லிக்கேணி ரத்னா கபே சப்ளையர் அண்ணன்கள் பற்றி சென்னை உணவுப்பிரியர்கள் பலருக்கு தெரியும். இன்று மதியம் அங்கு அடியேன் ஆஜர். ஊற்றைப்போல் ஊற்றிய சாம்பாரை உறிஞ்சிவிட்டு மிச்சம் இருந்த தம்மா தூண்டு இட்லியை கையில் எடுத்து ஸ்வாகா செய்ய எண்ணிய அடுத்த நொடியே மேலும் கால் லிட்டர் சாம்பாரை ஊற்றினார் அண்ணன். போதும் என்று சொன்ன பிறகும் "சாப்டுங்க. சாப்டுங்க" என்று பாசத்தால் நனைத்தார். அதில் சொட்ட சொட்ட நனைந்த காந்தி தாத்தாவை கர்சீப்பால் துவட்டி விட்டு ரூபாயை நீட்ட வேண்டியதாய் போனது. அடுத்த வாட்டி அந்த சாம்பார் குவளையை ரெடியா வைங்கண்ணே. நம்ம மறுபடியும் மீட் பண்றோம்!!
........................................................................................   

மின்சார கண்ணா:
காலை சுமார் 5.45-க்கு வெளியே செல்லும்போது டப்பென தெருவிளக்குகளை அணைத்து விடுகிறார்கள் கவர்மென்ட் கரண்ட் ஊழியர்கள் ஆப் சென்னை. அந்த சுவிட்சை அமுத்துவதற்கு முன்பு சற்று வெளியே எட்டிப்பார்த்து ஏரியா முழுக்க எப்படி இருளில் கிடக்கிறது என்று பார்க்கவே மாட்டார்கள் போல. ஒரு அரை மணி நேரம் கழித்து அணைத்தால் புண்ணியமாய் போகும் உங்களுக்கு. வீட்டை விட்டு கொஞ்ச தூரம் நடந்த உடனே படாரென பவரை புடுங்கும்போது ஒரு அட்மாஸ்பியர் உருவாகும் பாருங்க. அதை அனுபவிச்சாதான் தெரியும்.

நம்மை ஏதோ மணிரத்னம் பட ஹீரோ, அமெரிக்க மாப்பிள்ளை  ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்காவது பீல் செய்ய வைக்கும் பட பட தருணமது. எங்கே ரோட்டில் படுத்து கிடக்கும் நாயை எசகு பிசகாக மிதித்து தொலைத்து கலவரம் ஆகிவிடுமோ என்று பயந்தவாறே அடியெடுத்து வைக்க வேண்டி இருக்கிறது. யாருங்கண்ணே அந்த மின்துறை அமைச்சர்? பாத்து செய்யிங்க. இல்லன்னா டார்ச் லைட் வழங்கும் திட்டம் கொண்டுவரணும்னு பயங்கர டார்ச்சர் செய்வேன். பந்து இப்போது உங்கள் நீதிமன்றத்தில்(The ball is in your court).
...............................................................................

EK MAIN AUR EK TU:
இம்ரான் கான், கரீனா கபூர் நடித்த இப்படத்திற்கு 4 ஸ்டார்கள் வாரி வழங்கியது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அதை நம்பி டிக்கட் எடுத்த என் புத்திய..விடுங்க. பெற்றோருக்கு பயந்த ரிச்சான கைப்புள்ளையாக இம்ரான். லாஸ் வேகாசில் வேலை போன சோகத்தில் இருக்கும்போது அவர் வாழ்வில் நுழைகிறார் ஏற்கனவே சிலரை கழற்றிவிட்ட கரீனா. இன்டர்வியூ போவதை விட நாயகியுடன் ஊர் சுற்றியே பொழுதை போக்குகிறார் ஹீரோ. 

இடைவேளைக்கு பிறகு மும்பையில் இருவரும் சுற்றுகிறார்கள். சில இடங்களில் சிரிப்பு. பல இடங்களில் கொட்டாவி. என்ன வெளக்கெண்ணைக்கு 4 ஸ்டார் குடுத்தாங்களோ... உங்கள நம்பி இனிமே டிக்கெட் எடுக்கவே  மாட்டேன் சாமி. அந்த விமர்சனக் குழுவுல இருக்கறவங்க வெலாசம் மட்டும் தாரீகளா? வெலாசம்...வெலாசம்.
.................................................................................

சிரித்து வாழ வேண்டும்:
"நாம் ஆட்சியில் இருக்கையில் நல்லதை பயந்து செய்தோம். ஆனால் இப்போது கெட்டதை தைரியமாக செய்ய வேண்டும்" என்று ஸ்டாலின் சொயட்டி அடிக்கும் பஞ்ச் ஒன்றை தூத்துக்குடி இளைஞர் அணி தேர்வின்போது கூறி உள்ளார். 

# கலைஞர் புது படத்துக்கு வசனம் எழுத ஆரம்பிச்சிட்டாரோ?
..................................................................................
  
சத்தம் போடாதே:  
ஞாயிறு அன்று எக்ஸ்ப்ரஸ் அவின்யூவில் 3 கோடி மதிப்புள்ள ரெனால்ட் ரேஸ் காரை நிறுத்தி வைத்து வெளம்பரம் செய்து கொண்டிருந்தனர். அருகிலேயே வீடியோ கேம் வேறு. வளாகத்தை சுற்றி ஸ்பீக்கர் வைத்து உசுரை வாங்கினர். "யே..டுர்..டுர்.." என்று வாண்டுகள் காத்த, "எக்ஸ்க்யூஸ் மீ. டூ யூ வான்ட் டு பார்ட்டிசிப்பேட்?" என்று தொகுப்பாளினி(தமன்னா தங்கச்சி ரேஞ்சில் இருந்தாங்க) வேறு பேச..வளாகம் முழுக்க இரைச்சல். யார் E.A மானேஜர் என்று தெரியவில்லை. அடுத்த முறை ஸ்பீக்கர் சத்தம் குறைக்கப்படாவிடில் கொந்தளித்தே தீர வேண்டும் என்று நரம்பு புடைக்க அந்த காம்ப்ளக்சை சுற்றி நாலு ரவுண்ட் குறுக்க மறுக்க நடந்துவிட்டு வீடு திரும்பினேன். 
.........................................................................................

போராளி: 


                                                                       
சர்வதேச ஒற்றையர் போட்டிகளில் அடிக்கடி முதல் சுற்றிலேயே உதை வாங்கி வரும் சானியா, இரட்டையர் போட்டிகளில் அவ்வப்போது ஜெயிப்பது சற்று ஆறுதல் தரும் செய்திதான். ஞாயிறு அன்று நடந்த பட்டயா ஓப்பன் இறுதிப்போட்டியில் ஆஸியின் அனஸ்டாசியா எனும் வீராங்கனையுடன் சேர்ந்து 3-6,  6-1, 10-8 எனும் செட்கணக்கில் கடுமையாக போராடி சீன தாய்பெய் இணையை வென்றுள்ளார் சானியா. வெல்டன் மேடம். 
................................................................................................  


கௌரவம்: 
குறைந்தபட்சம் விகடன் வாசகர் கடித பகுதியிலாவது தனது பெயர் வராதா என்று பலர் ஏங்கிய காலமுண்டு. ஆனால் இப்போது என் விகடனில் தமிழ்ப்பதிவர்களை கௌரவிக்க ஆரம்பித்ததன் மூலம் அக்குறையை போக்க ஆரம்பித்து உள்ளது விகடன். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், தமிழ்வாசி பிரகாஷ், பரிசல்காரன் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.அடுத்து அப்பெருமையை அடையப்போகும் பதிவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள். 
......................................................................................

எங்களுக்கும் COLUMN வரும்:
தி ஹிந்து பேப்பரை படித்தால் தூங்கி வழிய வேண்டி வரும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா போட்ட விளம்பரம் செம ஹிட் ஆனது. அதற்கு சரியான பதிலடியை தனது புதிய விளம்பரங்கள் மூலம் தந்துள்ளது ஹிந்து. சபாசு. சரியான போட்டி!
  


......................................................................


.............................
My other site:
agsivakumar.com
.............................

...............................................

சமீபத்தில் எழுதியது:

தோனி - விமர்சனம்
.................................................Friday, February 10, 2012

கொலையும் செய்வான் மாணவன்நேற்று மதியம் 2 மணி வாக்கில் தமிழ் மற்றும் இந்தியாவின் முன்னனின் சேனல்களான என்.டி.டி.வி, டைம்ஸ் நவ் என அனைத்திலும் ப்ளாஷ் செய்யப்பட செய்தி "ஆசிரியையை வகுப்பிலேயே குத்திக்கொன்றான் மாணவன்". எங்கு நடந்தது என அறிகையில் சற்று அதிர்ச்சிதான். தலைநகரின் பிரதான/பரபரப்பான இடமான பாரிமுனைதான் அது. 173 வருட புகழ்பெற்ற செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இன்டியன் மேல்நிலைப்பள்ளி நேற்று காலை 10.50 மணிக்கு தன் வரலாற்று பக்கங்களில் முதன் முறை சிகப்பு சாயத்தை துரதிர்ஷ்டவசமாக பூசிக்கொண்டது.  ஒழுக்கத்திற்கு பெயர் பெற்ற இப்பள்ளி இருக்குமிடம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகில்!  இச்சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை மறுப்பதற்கில்லை. 

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவ-ஆசிரியர் உறவு எப்படி கசப்பாக மாறி வருகிறது என்பதை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இந்நிகழ்வு அந்த அளவிற்கு அதிர்ச்சியை தந்திருக்காது. எப்போது டாஸ்மாக்  தன் அசுர கிளைகளை தெருவுக்கு தெரு பரப்ப ஆரம்பித்ததோ அன்று முதலே பள்ளிகளின் மதிப்பை குறைக்க ஆரம்பித்து விட்டனர் விடலைகள். குவார்ட்டர் பாட்டிலை இடுப்பில் சொருகிக்கொண்டு வகுப்பின் கடைசி வரிசையில் அமர்ந்து தாகசாந்தி அடைந்த செய்தி கண்டு அதிர்ந்தோம். அது போன்ற நிலையில் உள்ள மாணவனை இனி ஆசிரியர் தட்டிக்கேட்க வாய்ப்பு குறைவென்றே தோன்றுகிறது. உமாமகேஸ்வரி எனும் ஆசிரியைக்கு ஏற்பட்ட கதி தனக்கு வந்தாலும் மாணவன் ஒழுக்கமே முக்கியம் என எத்தனை ஆசிரியர்கள் துணிந்து இது போன்ற அவலங்களை தட்டிக்கேட்பர்? 

"இதத்தான் நண்பன், பசங்க, மெரீனா படத்துல சொல்றாங்க. கேட்டாத்தான? பெத்தவங்க பசங்கள கண்டிக்க கூடாது. அவன் இஷ்டத்துக்கு படிக்க வைங்க. இல்லனா விட்டுடுங்க. பாவம்", "பசங்கல திட்டுறது ரொம்ப தப்பு. டீச்சருங்க எல்லாம் அன்பா பாடம் நடத்தணும்". இனி அடுத்த சில நாட்களுக்கு வழக்கம்போல இதே வசனங்கள் ஒவ்வொரு வீட்டிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும்   கேட்கும். நம்ம கோடம்பாக்க பிரம்மாக்கள் இந்நேரம் இதை எப்படி கமர்ஷியல் கலந்த சேஜ்  படமாக்கி கல்லா கட்டலாம் என்று அந்த மாணவன் கேரக்டரில் நடிக்க விடலை வேட்டையை ஆரம்பித்து இருப்பார்கள். இவற்றின் மூலம் மட்டுமே இம்மாதிரி கொடூரங்களை 100% தடுக்க இயலுமா? கண்டிப்பாக இல்லை என்றே சொல்லலாம். 

ப்ராடிக்கலாக சிந்திக்க வேண்டிய கட்டம் வந்து விட்டது. இதை ஒரு அபூர்வ நிகழ்வாக எண்ணி வழக்கம்போல் அனைவரும் இயங்க ஆரம்பித்துவிட்டால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை.ஆசிரியர் தொழிலையே தன் லட்சியமாக எண்ணி பி.எட் போன்ற படிப்புகளை படித்துவிட்டு பள்ளியில் காலடி எடுத்து வைக்க எண்ணும் ஒவ்வொருவர் மனதையும் பலமாக அசைத்து பார்த்துள்ளது இக்கொலை. குறிப்பாக பயிற்சி ஆசிரியைகள் பலர் திகில் அடித்து போய் கிடக்கிறார்கள்.    

பள்ளிகள் உடனே செய்ய வேண்டிய செயல்கள் என நான் கருதுவது இவைதான்:

* பள்ளிக்குள்ளே நுழைந்ததுமே மாணவர்களை மெட்டல் டிடக்டர் போன்ற சாதனங்கள் மூலம் சோதிக்க வேண்டும். இது பணக்கார பள்ளிகளுக்கு சரி. ஆனால் மாநகராட்சி பள்ளிகளில் சாத்தியமா என்றால்..வேறு வழியில்லை என்றே சொல்ல வேண்டும். பல்லாண்டு காலம் பாடம் கற்பித்து நல்ல மாணவர்களை உருவாக்கும் ஒரு ஆசிரியரின் உயிர் தேசத்தில் இருப்போரின் அனைவரின் உயிரையும் விட மதிப்பு வாய்ந்தது என மாநில அரசுகள் நினைத்தால் இது சாத்தியமே. 

* இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்த பின்பு உடனே பள்ளிக்கு சில நாட்கள் விடுமுறை அளித்து விடுவதும், பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அந்த பள்ளியில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்வதும் நிரந்தர தீர்வுக்கானே வழியே ஆகாது. இக்கொடூரத்தை நேரில் பார்த்த சக மாணவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என எத்தனை பத்திரிகை, மீடியாக்கள் விவாதம் நடத்தி இருக்கின்றன? நடத்த போகின்றன? அல்லது அந்த மாணவர்கள் மனநிலை குறித்து எந்த வணிக நோக்கமும் இல்லாமல் சிறந்த திரைப்படம் ஒன்றை முன்னணி இயக்குனர்கள் திரையில் கொண்டுவருவர்?    

                                                               டாக்டர் ஷாலினி    

* எனவே..முதல் கட்டமாக அப்பள்ளி மாணவர்களுக்கு சகட்டு மேனிக்கு அட்வைஸ் தராமல் ஆசிரியர், பெற்றோர் செய்ய வேண்டியது என்னவெனில்,  சிறந்த மனநிலை மருத்துவர் ஒருவரை அணுகி இம்மாணவர்களுக்கு இலகுவாக நிலையை புரிய வைக்க வேண்டும். உமா மகேஸ்வரி எனும் ஆசிரியை ரத்தம் சொட்ட துடித்த காட்சியின் தாக்கத்தை பெருமளவு குறைத்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் உள்ளது அவர்களுக்கு. இன்னும் சில வாரங்களில் இறுதித்தேர்வு நடக்கவுள்ள நேரத்தில் இந்தக் கொடுஞ்செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே உடனே இதை பள்ளி நிர்வாகமும், பெற்றோர்களும் கருத்தில் கொண்டு ஆவன செய்ய வேண்டும். 

*  வகுப்பறையில் சில மாணவர்கள் கைபேசியில் ஆபாசப்படம் பார்த்தல் எல்லாம் இப்போது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. பிளாஸ்டிக் பொம்மை, லாலிபாப் வாங்கி தந்தாலே அழுவதை நிறுத்தும் குழந்தைகள் இருந்ததெல்லாம் அந்தக்காலம். குறைந்தபட்சம் பிளாஸ்டிக் மொபைல் ஆவது தந்தால்தான் ஆச்சு. இல்லை என்றால் உரக்க கத்தி ஊரை கூட்டுவேன் என்று சொல்லும் அளவிற்கு மொபைல் மேனியா பிடித்து ஆட்டுகிறது. நிஜ செல்போனில் தன் சின்னஞ்சிறு குழந்தை பேசுவதை பார்த்து ஏதோ ராக்கெட்  விட்ட கணக்காக பெருமைப்பட்டுக்கொள்ளும் பேரன்ட்ஸ். இது ஆவுறதில்ல!

* கீழ்சாதி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய நிர்பந்திக்கும் ஆசிரியர்களை இதற்கு மேலும் பள்ளி நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருந்தால் இது போன்ற சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புகள் அதிகம். இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், தவறு செய்யும் மாணவனை ஆசிரியர் கண்டித்தால் "சார்/டீச்சர். என்னை இது மாதிரி கண்டிக்காதீங்க. சாதி பேரை சொல்லி திட்டனீங்கன்னு ஊரை கூட்டிருவேன்" என்று மிரட்ட ஆரம்பித்து உள்ளனர். இதில் மாணவிகளும் அடக்கம் என்பதுதான் முக்கிய செய்தியே. இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் நல்லாசிரியர்கள் நிலைதான் பாவமாக உள்ளது.  

* மேலைநாடுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், ப்யூன், கேண்டீன் ஓனர் என ஒருவரைக்கூட விட்டு வைக்காமல் சுட்டுத்தள்ளும் செய்திகளை கண்டு அதிர்ந்த நமக்கு இந்தக்கத்திக்குத்து முதல் மற்றும் அதிமுக்கிய எச்சரிக்கையை தந்துள்ளது.இந்தியாவின் வடக்கே உள்ள பள்ளிகளில் ஏற்கனவே துப்பாக்கியால் டீச்சர்களை மாணவர்கள் சுட ஆரம்பித்து விட்டனர். அருமைடா ராசாக்களா.   

* இப்போதைக்கு ஊடகங்கள் இதை மீண்டும், மீண்டும் பெரிதுபடுத்தாமல் இருப்பதே பரீட்சை எழுதப்போகும் அனைத்து மாணவர்களுக்கும் செய்யப்போகும் மிகப்பெரிய உதவி. ஓரிரு நிமிட செய்திகளாக போட்டுவிட்டு மாணவர் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை போட வேண்டும் என்பதே எனது அவா.

ஆசிரியையின் ரத்தத்தை நேரில் கண்ட மாணவர்களின் மனநிலையை சீர்செய்ய ஆவன செய்ய வேண்டியது பெற்றோர், பள்ளிகள், ஊடகம் மற்றும் அரசின் உடனடி கடமையாகும்.
...............................................................................................................


...............................
My other site:
..............................                                                         

Thursday, February 9, 2012

செம தெகிரியமானவர்களுக்கு மட்டும்"ஒரே குகையில் டபுள் சிங்கங்களா? ஓருரையில் பல கத்திகளா? நெவெர்." என்று சொல்லும் எமதருமை மக்களே. இதோ ஒரே கடலில் தமிழ்த்திரை சுனாமிகளின் சங்கமம். என்சாய்:

இக்காணொளியை அழுத்திய அடுத்த நொடியே பேராபத்து காத்திருக்கிறது. பாத்து ஓப்பன் பண்ணுங்க. அப்பறம் எதுனா ஆனா சத்தியமா நான் பொறுப்பில்லை. சொல்லிட்டேன்: 

"யே.தாங்கனக்கிரியா..ஈ யா..ஈ ஈ யா..ஆ ஈ யா ஆ ஈ ஈ யியா"

இ( ம்)சை பல பரிமாணத்துல திரியுது.........


பவர் ஸ்டாருடன் ஒரு பட்டையை கிளப்பும் பேட்டி..   

எனக்கு போட்டி ரஜினிதான்!! யார் தாய்? யார் தந்தை? டி.ஆரின் ஸ்பெஷல் கிளாஸ்: 

கண்களை தெப்பக்குளமாக்கும் காட்சி..!!  :(((( 


.................................................................................Wednesday, February 8, 2012

சிம்பு.. சிங்கிள் சிங்கம்லே!!


                                                ஒரு ரொமாண்டிக் உறுமல்........    


ஜம்பு: ஒஸ்தி மாமே......ஒஸ்தி மாமே......சல்லா சலசலா...சல்லா..

தல கவுண்டமணி: என்றா இது காலங்காத்தால சத்தம். இந்த காய்கறி விக்கிற பயலுவ புரியாத பாஷைலையே வியாபாரம் செய்யறாங்கப்பா.

சோம்பலை முறித்துக்கொண்டு பால்கனி வந்து எட்டிப்பார்க்கிறார். 

தல: யார் இந்த அர டிக்கட்டு. அதுவும் காக்கி ட்ரெஸ்ல. ஒரு வேள நம்ம தெரு கூர்க்காவோட பேரனா இருப்பானோ? டேய்..டிபன் பாக்ஸ் தலையா. நில்றா..

கீழிறங்கி நம்ம போலீசை ஏறி இறங்க பார்த்துவிட்டு யாரென கேட்கிறார்.

ஜம்பு:: நான் யாருன்னு இந்த தமிழ்நாட்டுக்கே தெரியும்....

தல: இத்தன நாளா தமிழ்நாட்டுல எந்த சந்துலடா இருந்த? ஒருவேள ஆல் இன் ஆல் அழுகுராஜா கிட்ட சைக்கிள் கேட்ட காரமட ரங்கநாதன் தம்பியா இருப்பியோ?   

ஜம்பு: நோ. நோ. உங்க வீட்ல வாட்ச்மேனா சேர வால்க்-இன் இண்டர்வியூவுக்கு வந்துருக்கேன். ஹவ் இஸ் இட் ஹை?  

தல: அதுக்குதான் இந்த அலும்பலா. படுவா மொதல்ல அந்த கிளாசை கழட்டு. என்னடா இது மூக்குக்கு கீழ ஏகப்பட்ட தூசி. ஒட்டடை அடிக்கும்போது பாதில ஓடி வந்துட்டியா? 

ஜம்பு::  ஹல்லோ..இது என்னோட மீச..மைன்ட்  இட்.   

தல: ஹே..ஹே...சோ சாட். தம்பி...ராசா..பின்னால கெணத்தடில போன வாரம் ஷேவ் பண்ணி போட்ட தூள் ப்ளேடு இருக்கு. உடனே ஓடிப்போயி உன்னோட மீசைய எடுத்துட்டு வந்துருடா மவராசு. அதை பாத்த பயத்துல எனக்கு குளிர் ஜுரம் வர்ற மாதிரி இருக்கு. 

ஷேவ் செய்துவிட்டு ரிட்டன் ஆகிறார் ஜம்பு. 

                                    ஆடி ஆடி தள்ளுபடில வாங்குன கூலர்ஸ்லே!!

ஜம்பு:: Now I am How ண்ணே?        

தல: இதுக்கு அதுவே மேலு. (படுவா. பாண்டி பஜார் ப்ளாட்பார்ம்ல வாங்குன கண்ணாடிய மட்டும் விடவே மாட்டான் போல்ருக்கே). சரி ராத்ரி திருடன் வராம இருக்க என்ன டெக்னிக்கை யூஸ் பண்ணுவ ராசா?

ஜம்பு: வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்..

தல: ஏன் தெற்கு, கிழக்கு, மேற்குல உன்னை சீந்தவே மாட்டாங்களா? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்றா அமுல் டப்பா.

ஜம்பு:  நான் அருமையா பாடுவண்ணே. ராவெல்லாம் தூங்கவே மாட்டேன். 

தல: (எங்களையும் தூங்க விட மாட்ட..). எங்க ஒரு பாட்டு பாடு. திருடனே செதறி ஓடற மாதிரி. 

ஜம்பு: ஏ வாடி வாடி வாடி ஸ்வீட், போண்டா, டீ. நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

தல: Stop There.  தொம்பி.. ஒனக்கு சம்பளம் மட்டுந்தான். ஸ்வீட், போண்டா, டீ எல்லாம் தர முடியாது. நீ எடத்த காலி பண்ணு.  

ஜம்பு: Hey ஹவுஸ் ஓனர். அது பொண்டாட்டி. அதைத்தான் கொஞ்சம் ஸ்டைலா மாத்தி பாடுனேன். "ஐ  லவ் யூ டில் நீ பாட்டி. தேவை இல்ல வப்பாட்டி"

தல:  பார்ரா...அந்த நெனப்பு வேறயா..!!

ஜம்பு: காபி கொடுத்து காலையில நானே உன்ன எழுப்பி விடுவேன். 

தல: என்னது...உன் முகத்துல நான் விழிக்கணுமா? அட வடபழனி முருகா!! எக்குத்தப்பா மாட்டிக்கிட்டனா?

                                                நின்னுக்கோரி வ..ர..ணு..ம்

ஜம்பு: சமையல் தெரியலன்னா நானே சமையல் செஞ்சி உனக்கு ஊட்டி  விடுவேன். 

தல: அதெல்லாம் வேண்டாண்டா ராசா. இதுக்கு நானு கபாலீஸ்வரர் கோயில்ல உண்ட கட்டி வாங்கி தின்னுட்டு தெப்பக்குளத்துலயே உருண்டு கெடக்கலாம்.  

ஜம்பு: உன்ன நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன். என்ன நீ சந்தேகப்படுற மாதிரி நடக்க மாட்டேன். 

தல: (ஒரு மாசம் வேலைக்கி வச்சிட்டு சம்பளம் தராம தொரத்தலாம்னு நெனச்சத கண்டுபுடிச்சிட்டானோ?). வேற எப்படி..பேஷன் டி.வி.ல வர்றா மாதிரி வளச்சி வளச்சி நடப்பியோ?  

ஜம்பு: என் நெஞ்சுல ஒன்ன சொமப்பேன். ஒன்ன டெய்லி நானு ரசிப்பேன். உன் நிழலைப்போல நானிருப்பேன். 

தல: நெஞ்சுல சொமப்பியா? உங்கப்பா மாதிரி கரு கருன்னு இருக்குற காட்டுவாசி முடிய மட்டும் கிளீன் பண்ணிடு செல்லம். அங்க ட்ராவல் பண்ணும்போது அண்ணன் தொலஞ்சிட போறேன். டெய்லி ஏண்டா ரசிக்கற? அவனா நீ?  நிழலைப்போல இருப்பானாமுல்ல.  அப்பாட. மான் மார்க் கொடை வாங்குற காசு மிச்சம். 

ஜம்பு: உன் முன்னாடி சத்தியமா என் உசுரு என்ன விடாது...

தல: நீ இன்னும் 49 வருசத்துக்கு எங்கள விட மாட்ட போல இருக்கே. 

ஜம்பு: ஏன்னா நான் போய்ட்டா உன்ன யாரும் விதவையா பாக்க கூடாது..

தல: செண்டிமென்ட்டு டோய். 

ஜம்பு: என்ன விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்?

தல: என்ன திடீர்னு 'டி' போட்டெல்லாம் கூப்புடறான். கன்பர்ம் அவனேதான் இவன். 

ஜம்பு: ஒரு தகப்பன் போலவும் இருப்பேன், ஒரு தாயப்போலவும் இருப்பேன். நண்பன் போல நடப்பேன். அந்த கடவுள் போல காப்பேன். 

தல: ஆக மொத்தத்துல வாட்ச்மேனா மட்டும் இருக்க மாட்டேன்னு சொல்ல வர்ற? 

ஜம்பு: உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்.

தல: அடங்கப்பா. எனக்கு இப்படி ஒரு சத்திய சோதனையா. ஆள விட்றா சாமி. 

தல கக்கூசை நோக்கி 210 மைல் வேகத்தில் பதறி ஓடுகிறார். 
.....................................................................................Monday, February 6, 2012

மெரினா


                                                                                                                                     
மழலை மேஸ்திரிகள் கட்டும் மணல் வீடு, அக்னி வெயில் சூட்டையும் அண்டார்டிக் ஐஸாக உணரும் உள்ளம் கொண்ட காதலர்கள், இயல்பாக சிரிக்காமல் சிரிப்பதற்கென்றே க்ளப் அமைத்து கும்பலாக சிரிக்கும் மேற்குடிகள்,'நாங்க சுனாமிலயே ஸ்விம்மிங்க போடுவோம்டா' என்று கடலன்னைக்கு சவால் விடும் மறத்தமிழர்கள்..இன்னும் பற்பல வகையான மனிதர்கள், சம்பவங்கள் என மெரினா பார்க்காததா? கடலளவு கதைகளை தன்னுள் சுமந்திருக்கும் மெரினா பற்றிய சித்திரத்தை பசங்க வாயிலாக நமக்கு தந்திருக்கிறார் கோலிவுட்டின் மஜித் மஜிதியான பாண்டிராஜ். 

'பசங்க'  திரைப்படத்தில்   ஜீவா, அன்புக்கரசை விட என் மனதில் நின்றது பக்கடா பையன்தான். 'மெரினா'வில் பிரதான வேடத்திற்கு ப்ரமோஷன் வாங்கி உள்ளான் 'பக்கடா' பாண்டி. சென்னைக்கு பிழைப்பு தேட வந்து அங்கு சுண்டல், தண்ணீர் பாக்கெட் விற்கும் சிறுவர்களிடம் சிநேகம் ஏற்படுத்தி, படகையே வீடாக்கி வாழ்கிறான் அம்பிகாபதி. 10 ஆம் வகுப்பை டுடோரியல் கல்லூரியில் படிக்க வேண்டுமென்பது அவன் லட்சியம். கடற்கரையையே நம்பி வாழும் பல தரப்பட்ட ஏழை மக்கள் சிலரின் கதைகளையும் கலந்து கூடவே சிவகார்த்திகேயன் - ஓவியா காதலையும் கோர்த்து உள்ளார் இயக்குனர்.

ஓவியாவை சிவகார்த்தி ஓட்டி வசனம் பேசும் இடங்களில் எல்லாம் கரவொலிதான். அவருடைய நண்பராக வருபவர் சொல்லும் மொக்கை தத்துவங்கள், இந்த ஜோடிகளை காதல் செய்யவிடாமல் சுண்டல், சங்கு விற்கும் வாண்டுகள், பூ விற்கும் பெண் என ஒவ்வொருவரும் பேசும் அக்மார்க் சென்னை டயலாக்குகளுக்கும் கைத்தட்டல்கள் பலமாக விழுகின்றன. 'காதல் அப்டிங்கறது காக்கா கக்கா  மாதிரி. அது எப்ப வேணும்னா யார் தலைலயும் விழும்' என சிவகார்த்தி பல இடங்களில் சிரிப்பு கார்த்தி. நடிக்கதான் சற்று சிரமப்படுகிறார். ஓவியா..நடிச்சிட்டாலும்!!  

                                                                                                                                         
தன்னால் தரமுடிந்த பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் விஜய். இறுதியில் வரும் குதிரைப்போட்டி சிறப்பாக காட்சிப்படுத்தப்படவில்லை என்பது என் எண்ணம்.  பாடல்கள் பாஸ்மார்க் மட்டும் வாங்குகின்றன. 'சென்னை' டைட்டில் பாடல் அருமை. பழைய பாடல்களை பாடுபவராக ஒருவரை வைத்து காட்சிகளை அமைத்துள்ள இயக்குனர் அப்பாடல்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கலாம். குதிரை ஓட்டுபவர், தாத்தா என அனைவரையும் மறந்துவிட்டு வெள்ளைகாரர்களிடம் பரிசு வாங்குவது, அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறி மெரினாவில் பிச்சை எடுப்பது ஏன் என தாத்தா சொல்லும் காட்சிகள் நெகிழ்வு. ஆனால் ஆழமான கதை(மெரினா..ஆழம் கண்டிப்பா அவசியம் பாண்டிராஜ்), திக்கற்று அல்லாடும் திரைக்கதை என முக்கியமான மைனஸ்கள். 

கோடம்பாக்க படைப்பாளிகளுக்கு என பிரத்யேகமாக இருக்கும் ஒரு குழப்பம் பாண்டிராஜுக்கும் இதில் இருந்தது. அது என்னவெனில் ஒரு களத்தை தேர்வு செய்தால் அதை முழுமையாகவும் அதே நேரம் சுவாரஸ்யம் குன்றாமலும்  இரண்டரை மணி நேரத்திற்குள் எப்படியாவது திணித்து ரசிகர்களிடம் தந்து விட வேண்டும் என்பதில் காட்டும் அவசரம்/ஆசை. உதாரணம்: பெரியார் எனும் மனிதர் பல்லாண்டு காலம் வாழ்ந்த சரித்திரத்தை குறைந்தது இரண்டு அல்லது மூன்று பாகங்களில் சொல்லாமல் ஒரே படத்தில் கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களையும் திணித்து விட எண்ணிய இயக்குனர் ஞானராஜசேகரன் போல. மெரினாவும் அதற்கு இன்னொரு உதாரணம். 

ஹிட்லர் எனும் மனிதனை பற்றி ஒவ்வொரு படைப்பாளியின் பார்வையில் எத்தனை படங்கள்? சின்ட்லர்ஸ் லிஸ்ட்,Downfall,இங்க்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர்...இப்படி.அதுபோல இந்த 'மெரினா'வைத்தாண்டி வேறொரு பார்வையில் மெரீனா கடற்கரை பற்றி இன்னும் சில படங்கள் வர வேண்டும் என்பதுதான் நமதாசை. சென்னையிலேயே பிறந்து வளர்ந்து அவ்வப்போது கடற்கரைக்கு சென்று சிறுவர்களிடம் சுண்டல் வாங்கி உண்ணும் பலருக்கு 'மெரினா' திரைப்படம் பல புதிய தகவல்களை சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது. இக்கடற்கரையை காணாதோருக்கு சற்று அதிகமாகவே பிடிக்கும் 'மெரினா'.    

மெரினா - டைம் பாஸ். 
...........................................................................

கடலோரக்கவிதை: 

நா. முத்துகுமார் எழுதிய டைட்டில் பாடலான 'வணக்கம். வாழ வைக்கும் சென்னை' நன்றாக இருந்தது.'மிரட்டி ஓடவைக்கும் சென்னை. மிரட்டுதென்னை. இருந்தும் ஓடவில்லையே', 'பலநூறு சனம் வந்து வாழும் இடந்தான். அட பத்து நாளில் சொந்த ஊரு இந்த இடந்தான்', எப்படி நீ திட்டும்போதும் உன்ன பொறுப்பா.  அவ உன்னுடைய வளர்ச்சிக்கு ஏணி கொடுப்பா' என சென்னை குறித்தான நிதர்சனங்களை பதிவு செய்துள்ளார் கவிஞர். பின்னணி பாடிய ராமஷங்கர், முகேஷ், ஷில்பா அனைவரின் குரல்களும் இனிமை. பிரபல நட்சத்திரங்களின் 'சென்னை மெரினா' ப்ரமோ பாடல்: 


 .................................................................................................................


..............................
My other site:
.............................


                                                                    

Sunday, February 5, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (05/02/12)காதலிக்க நேரமில்லை:


                                                                  
சானியா மிர்சாவை ஓரம் கட்டிவிட்டு இப்போது இளைஞர்கள் மனதில் பட்டாம்பூச்சிகளை சகட்டுமேனிக்கு பறக்க விட்டுக்கொண்டு இருக்கும் யுவதி இவர்தான். பெயர்: தீபிகா பல்லிகல்.  20 வயது சென்னைப்பொண்ணு. தற்போது நடந்து வரும் அண்டர் 21 உலக ஸ்குவாஷ் போட்டியில் எதிர் அணிகளை டுமீல் செய்து வருகிறார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் எகிப்து அணியுடன் மோதப்போகிறார் தீபிகா. போட்டி நடக்கும் இடம்: சென்னை எக்ஸ்பிரஸ் அவின்யூ மால். நேரம் மாலை ஆறு மணி. 

நேற்று நடந்த செமிபைனலை பார்க்க E.A-வில் 50,000 ரசிகர்கள் திரண்டிருந்தனராம். இன்று சொல்லவா வேண்டும்? தீபிகா ரசிகர் மன்றங்கள் வேகமாக பதிவு செய்யப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. வெல்லட்டும் இந்தியா!!

                                                தீபிகாவும், த்ரிஷா அக்காவும்  
...............................................................................

போக்கிரி:
"இந்த தரம் என் நாக்குதான். அடுத்த வாட்டி யாராச்சும் எதிர்த்து பேசனீங்க, அப்பறம் நேரா பாஞ்சி வந்து உங்க நாக்கையெல்லாம் ஒண்ணு விடாம கடிச்சி தின்னுபுடுவேன்" - சிம்மா. நரசிம்மா.    
..............................................................................

ஒரு மருபூமிக்கதா:   
ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், முகேஷ், லட்சுமிராய்,பாவனா  நடித்துள்ள காமடி படம்தான் 'ஒரு மருபூமிக்கதா'. PVR தியேட்டரில் நேற்றைய இரவுக்காட்சிகூட ஹவுஸ்புல்லாக இருந்தது. அரபீம்,ஒட்டகம்,பி.மாதவன் நாயரும்..இதுதான் ஒரிஜினல் டைட்டில். அரபி, ஒட்டகம் போன்ற வார்த்தைகளுக்கு வளைகுடா அரசு சென்சார் போட்டுவிட்டதால் டைட்டிலை மாற்றிவிட்டனர். ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் UAE இல் தான். 

90-களில் வந்த நகைச்சுவை காட்சிகள்தான் பெரும்பாலும். எனினும் மோகன்லால், முகேஷ் இருவரும் சேர்ந்து பாலைவனத்தில் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.  ப்ரியதர்ஷனின் ஆவரேஜ் காமடி சித்திரம். 
.....................................................................................

மின்சார கனவு: 
மின்கட்டணத்தை உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டு வருகிறது தமிழக அரசு. எல்லா கூட்டங்களிலும் சிட்டிசன்கள் பயங்கர எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் 'ஏற்றியே தீருவோம்' என்று இறுதியாக கூறுகின்றனராம் அரசு தூதர்கள். அப்பறம் எதுக்கு எங்கள வேற கேட்டுகிட்டு? சீக்கிரம் ஷாக் வைங்க!!
................................................................................

தப்புத்தாளங்கள்: 
டெஸ்ட் தொடரில் ஆஸி.யால் கொத்து பரோட்டா போடப்பட்ட மென் இன் ப்ளூ இன்று தொடங்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நன்றாக ஆடி  இறுதிப்போட்டிக்காவது தகுதி பெற்றே தீர வேண்டும். இல்லாவிடில் தோனி & கோ.வின் பாடு அம்புட்டுதான். சஹாரா வேறு திடீரென ஸ்பான்சர்ஷிப்பை விலக்கிக்கொண்டு விட்டதால் பி. சி. சி. ஐ. தடுமாறிப்போய் உள்ளது. அதோடு மட்டுமின்றி புனே வாரியர்ஸ் அணியையும் விற்க சஹாரா முடிவு செய்துள்ளது. என்னடா இது இந்திய கிரிக்கெட்டிற்கு சோதனை....
...................................................................................

நாடோடிகள்:
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு 'லைப் டைம் கியாரண்டி' தர காங்கிரஸ் தலைவர்கள் நெல்லையில் நேற்று நடத்திய கூட்டத்தில் பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட ABCD. இளங்கோவன் பேசியது "நான் சொல்லும் கருத்தைத்தான் நாராயணசாமி சொல்கிறார். அவர் சொன்னதைத்தான் தங்கபாலு சொல்கிறார். எங்கள் குரலில் ஏற்ற இறக்கம் இருப்பினும் சொல்ல வரும் விஷயங்கள் ஒன்றுதான்"(அவ்வ்). கடைசியா ஒன்று சொன்னாரு பாருங்க. அதுக்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் புரியுதான்னு பாருங்கங்க:  

"ஆகவே தொண்டர்களே தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் போகலாம். அதல்ல பிரச்னை(!!!!). உங்களுக்குள் என்றுமே ஒற்றுமை இருக்க வேண்டும்".

என்ன கொடும சரவணன் இது?
......................................................................................

காலம் மாறிப்போச்சி:  
சில வருடங்களுக்கு முன்பு நைட்டி போட்டுக்கொண்டு நாட்டார் கடைக்கு போகும் தலைநகர இல்லத்தரசிகளை அதிசயமாகவும், ஆக்ரோஷமாகவும் பார்த்த காலமெல்லாம் (பரங்கி) மலையேறிப்போய் விட்டது. தேவயானியே சொல்லிட்டாங்க "ஒரு குடும்பத்தலைவியாய் என்னை உணர வைப்பது பொம்மிஸ் நைட்டிஸ்"ன்னு. நல்லி, குமரன்,போத்திஸ் எல்லாம் இனிமே 'சாமுத்ரிகா பட்டு, விவாகா பட்டு' ரேஞ்சுக்கு விளம்பரம் தர்றதை நிறுத்திட்டு 'நவரச நைட்டி, எங்கும் எங்கெங்கும் நைட்டி'ன்னு தங்க, வெள்ளி ஜரிகை வச்ச நவ நாகரீக உடுப்புகளை விக்க ஆரம்பிச்சாதான் பீல்டுல நிக்க முடியும் போல! இப்படி ஒரு வெளம்பரத்த எடுத்த எசமான் வாழ்க.வாழ்க!
...................................................................................

தம்பி ஊருக்கு புதுசு:
"தற்போது நடைபெற்று வரும் உ.பி. தேர்தல் பிரச்சாரத்தின் நாயகன் எனது தொம்பி ராகுல்தான்" என்று சொல்லி செம டமாசு செய்துள்ளார் பிரியங்கா அக்கா. யக்கோவ்...அமெரிக்க மாப்பிள்ளை ரேஞ்சோட நிறுத்தி இருக்கலாம். கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டீக..
.................................................................................    

முகராசி: 
பேஸ்புக்கை உபயோகிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இரட்டிப்பாகிவிட்டதாம்.இனி இந்தியாதான் எங்களுக்கு முக்கியமான வருமானம் தரும் தேசமாக மாறப்போகிறது என்கிறது நிர்வாகம். சீன நாட்டு  பெண்களிடம் மட்டும் "ஹாய் க்யூட்டி. ஹவ் ஆர் யூ" சொல்ல முடியாது பாய்ஸ். ஏன்னா அங்க பேஸ்புக்குக்கு 144 உத்தரவு எப்பயோ போட்டாச்சி!!
...............................................................................   

மன்னாதி மன்னன்: 
புரட்சித்தலைவரின் சமூக நோக்கம் கொண்ட பாடல்களில் புகழ்பெற்ற ஒன்று. எக்காலத்திற்கும் பொருந்தும் வரிகள்: 


.................................................................................


..............................
My other site:
.............................Related Posts Plugin for WordPress, Blogger...