CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, January 26, 2012

இவரும் மலையாளிதான்......                                                                       
மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன்...நம்மில் சிலருக்கு நினைவிருக்கலாம். பலருக்கு 'மிலிட்டரி ஆளு போல இருக்கு. ஆனா பேரு தெரியலியே'. தாஜ் ஓட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மக்களை காப்பாற்ற தன் உயிரை ஈந்த இளைஞன். 31 வயதிலேயே காலம் இவரை அழைத்து சென்று விட்டது. பெற்றோருக்கு ஒரே மகன். பிறந்த இடம் கோழிக்கோடு. நம்மைப்போல் சந்தோஷமாக கல்லூரி வாழ்வை அனுபவித்தோமா, இளம்பெண்களை சைட் அடித்தோமா, வேலைக்கு சென்று வாழ்வில் செட்டில் ஆனோமா என என்னும் சராசரி இளைஞன் அல்ல. ராணுவத்தில் சேர்ந்து தேசப்பணியாற்ற வேண்டுமென்பது இவருடைய பால்ய வயதிலேயே மனதில் ஆழமாக ஊன்றிய எண்ணம். 31 வயதில் இறக்கும் இறுதி நொடிவரை தேசத்திற்காக செலவிட்ட மணித்துளிகளே மிக அதிகம்.  26/11 மும்பை சம்பவத்தன்று அப்படி என்ன செய்தார் இவர்? ஒரு முறை திரும்பி பார்ப்போம். 
  
                               அரிதாக 'நம் சகோதரர்'  சந்தீப் மகிழ்ந்த நிமிடங்கள்...         
                                 
தாஜில் ஊடுருவி இருந்த பாகிஸ்தான் தீவிரவாத பன்னாடைகளை வீழ்த்த நடந்த போராட்டத்தில் தனது அணியுடன் திட்டம் வகுத்தவாறு முன்னேறி கொண்டு இருந்தார். எதிர்முனையில் இருந்து கடும் துப்பாக்கி சத்தத்துடன் அந்த ராட்சசர்கள் ஆட்டம் போட, அதிலொரு குண்டு இவருடன் இருந்த வீரரை பதம் பார்த்தது. அவரை பத்திரமாக அனுப்பிவிட்டு, மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டார் சந்தீப்.பொதுவாகவே இம்மாதிரி ஆபரேஷன்களில் அனைவருக்கும் முன்பாக சென்று உயிரை பணயம் வைத்து சண்டை போடுவது இவரது இயல்பு. இம்முறையும் அதையேதான் செய்தார். தனது இரு ராணுவ நண்பர்களை நோக்கி எதிரிகள் சுடுவதை கண்டு அவர்களை காப்பாற்ற அந்த தோட்டாக்களை தன் முதுகில் படுமாறு பார்த்துக்கொண்டார். அடுத்த சில நொடிகளில் மரணத்தை தழுவினார் சந்தீப். 

அந்த சண்டையின்போது இந்த எண்ணம் மட்டும் அவர் மனதில் எழவே இல்லை:

"தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் பிடியில் இருப்பவர்களில் எத்தனை பேர் தமிழர்கள்? அப்படி எவரேனும் இருப்பின், அவர்களை தவிர்த்து விட்டு மற்ற ஆட்களை மட்டும் காப்பாற்ற வேண்டும். அப்பதான் தமிழன்களுக்கு புத்தி வரும். சாவட்டும்".

சில நாட்களுக்கு முன் சென்னை எழிலக கட்டிட தீ விபத்தில் உயிரை இழந்த வீரர் அன்பழகன் கூட 'உள்ள மலையாளி இருந்தா காப்பாத்த மாட்டேன். தண்ணி விஷயத்துல நம்ம உசுர வாங்கற பயலுக' என்று நிபந்தனை போட்டு விட்டு களத்தில் இறங்கவில்லை. இப்படி இவர்களைப்போல ஒவ்வொரு ராணுவவீரனும், போலீஸ் அதிகாரிகளும் தனக்கு பிடிக்காத மாநிலம், இனம், மொழி, ஜாதி, மதத்தை சேர்ந்தவன் என்று தரம் பிரித்து இந்திய மக்களை காப்பாற்ற ஆரம்பித்தால்...நம்மில் பலர் இப்படி பேசிக்கொண்டு இருக்க மாட்டோம்:

"அந்த மலையாளி/பாண்டி நாயிங்களை செருப்பால அடிக்கணும். இனிமே எந்த மலையாள/தமிழ் பயலுக கிட்டயும் பேச்சே கிடையாது. $%$****". 

                                   ஒரே மகனை இழந்த சோகத்தில் சந்தீப்பின் தாயார் 

எனவே இனியேனும் முல்லைப்பெரியாறு போன்ற பிரச்னைகள் நடக்கையில் சற்று நிதானத்துடன் வார்த்தைகளை வெளியிட கேட்டுக்கொள்கிறேன். தமிழக பெண்களை அவமானப்படுத்திய பொறுக்கிகளையும், பிடிவாதம் பிடிக்கும் கேரளா அரசையும் கண்டிப்பதில் தவறேதும் இல்லை.ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தோரை ஒருமையில் நாகரீகமின்றி பேசுவதில் என்ன பயன்? எரியும் நெருப்பில் மேலும் பெட்ரோலை ஊற்றி என்ன சாதிக்க போகிறீர்கள்? இதைப்படித்து சேட்டன்கள் வெறியாகி அங்குள்ள தமிழர்களை இன்னும் தீவிரமாக தாக்குவார்கள். அண்மையில் குடிக்க தண்ணீர் கேட்ட தமிழக ஐயப்பன் பக்தர் மீது வெந்நீர் ஊற்றி கொன்றார் ஒரு மலையாளி. முதலில் இந்நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். நாமும் நாகரீகம் இன்றி எல்லை மீறிய அசிங்கமான வார்த்தைகள் உபயோகித்து கொண்டே இருந்தால் அங்கே இன்னும் ஒரு தமிழன் தாக்கப்படுவது உறுதி. அவர்கள் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தர நம்மால் இயலாதபோது இப்படி கொச்சையாக எழுதுவது எவ்வகையில் நியாயம்?  கூடுமானவரை கண்ணியம் காப்போம். மொத்தமாக 'மலையாள நாய்கள், பேய்கள்' என்று வர்ணிப்பதை குறைப்போம்(!).இது அவர்களுக்கும் சேர்த்துதான்.  

எந்த தமிழன்/மலையாளியிடமும் இனி பேச மாட்டோம். அவர்கள் தயாரித்த பொருட்களை தொட மாட்டோம். எமது சந்ததிகளுக்கும் அதையே போதிப்போம். மலையாளி/ தமிழர்/மலையாளி ஆசிரியராக இருக்கும் பள்ளிகளில் எமது பிள்ளைகள் படிக்க கூடாது என்று இருதரப்பும் முடிவெடுக்க முடியுமா? அட போங்க பாஸ். இப்போது இதை நீங்கள் படித்து கொண்டு இருக்கும்போதே ஒரு மலையாளி - தமிழ் ஜோடி 'ஐ லவ் யூ' சொல்லிக்கொண்டு இருக்கலாம்.  

'நான் இந்தியன் இல்ல. தமிழன்டா' என்று அடிக்கடி ஆவேசப்படும் தோழர்களே. அதற்கு முன் இந்திய எல்லையில் அனைவரது உயிரையும் காக்க எந்த பேதமும் இன்றி தேசத்திற்கு தன்னை அர்ப்பணிக்கும் ராணுவ வீரர்களையும் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். காங்கிரஸ் அரசின் செய்கைகள் பிடிக்கவில்லை எனில் அவர்களை விளாசலாம். அதற்காக தமிழ்நாட்டை பிரித்து பேசி என்ன பயன்? அதுதான் சிலருக்கு விருப்பமெனில் முப்படை தளபதிகளிடம் ஒன்றை மட்டும் சொல்லிவிட்டு வாருங்கள்: 

"நீங்க எல்லாம் வீட்டை பாக்க போங்க. நாங்க பாத்துக்கறோம்" 

போங்கய்யா நீங்களும் உங்க பிரிவினைவாதமும்.   
.................................................................................................................

மேஜர் சந்தீப்...நினைவலைகள்.....
.....................................................................................

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!

.............................
My other site:
...........................


28 comments:

CS. Mohan Kumar said...

Good Siva. You are always straight from ur heart in speaking and writing

NKS.ஹாஜா மைதீன் said...

அருமை நண்பா...மேஜர் சந்திப் இறந்தாலும் அவர் வீரம் என்றும் மறையாது...

Unknown said...

குடியரசுதினவிழா வாழ்த்துகள்....!
கார்கில் போர்ல இறந்த சரவணன் தெரியுமா?சிவா....இல்லை உங்களுக்கு மலையாளம் தெரிஞ்சா...எதாவது மலையாள பிளாக்குல போட்டிருந்தா சொல்லுங்க பிளீஸ் அவர பற்றி தெரிஞ்சுக்கனும்.....

நாய் நக்ஸ் said...

இதைப்படித்து சேட்டன்கள் வெறியாகி அங்குள்ள தமிழர்களை இன்னும் தீவிரமாக தாக்குவார்கள்/////

இது எப்போ ????

அவ்வளவு FOLLOWER-ஆ???

நாய் நக்ஸ் said...

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!!!

MANO நாஞ்சில் மனோ said...

சந்தீப்புக்கு என் வீரவணக்கங்கள்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மும்பை அட்டாக்கில் ஹெலிகாப்டரில் இருந்து ஆபத்தான இடத்தில் முதல் ஆளாக தைரியமாக குதித்து தீவிரவாதிகளை நிலைகுலைய வைத்தவர் ஒரு தமிழர் என்று என் மராட்டிய நண்பன் பெருமையாக சொன்னான், இந்த அட்டாக்கில் என் நண்பன் [[அவிட்லட் மானேஜர்]] ஒருவனும் கொல்லப்பட்டது பரிதாபம்.

MANO நாஞ்சில் மனோ said...

எல்லா மலையாளிகளையும் ஒன்றாக பார்ப்பது தவறுதான் எனக்கும் மலையாளி உயிர் நண்பர்கள் உண்டு அவர்களோடு நாகரீகமாக நானும் அவர்களும் தர்க்கிப்பதும் உண்டு...!!!

! சிவகுமார் ! said...

அவரைப்பற்றியும் படித்துள்ளேன் சுரேஷ். எனக்கு மலையாளம் அவ்வளவாக தெரியாது. கேரளா பதிவர்கள் தமிழக வீரர்கள் பற்றி பதிவிடாவிட்டால் அதற்கு நாம் என்ன செய்ய இயலும்? அவர்களைப்போலவே அனைத்திலும் நாம் ரியாக்ட் செய்தால் அவர்களுக்கும் நமக்கும் வித்யாசம் என்ன?

எந்த எல்லைக்கோட்டிற்கு உள்ளும் நான் அடைபட விரும்பவில்லை. என்னைப்பொறுத்தவரை முதுகில் குத்துபவன் இந்தியனாக இருந்தாலும் எதிரிதான். ஆபத்தான நேரத்தில் என் நாட்டு மக்களுக்கு உதவுபவன் பாகிஸ்தானி ஆனாலும் நண்பன்தான். சிம்பிள்!!

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

Thanks sir.

! சிவகுமார் ! said...

@ ஹாஜா மைதீன், நக்கீரன், மனோ

மிக்க நன்றி. குடியரசு தின வாழ்த்துகள்!!

MANO நாஞ்சில் மனோ said...

நாய்கள் பேய்கள் என்று கூறுவது கண்டிப்பாக கண்டிக்க தக்கதே....!

! சிவகுமார் ! said...

@ வீடு சுரேஷ்.

நேரம் இருப்பின் படித்து பாருங்கள்:

http://www.agsivakumar.com/2010/11/2611.html

http://www.madrasbhavan.com/2011/09/blog-post_29.html

http://www.madrasbhavan.com/2011/09/male-2.html

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

தகவல்களுக்கு நன்றி மனோ.

! சிவகுமார் ! said...

//veedu said...
குடியரசுதினவிழா வாழ்த்துகள்....!
கார்கில் போர்ல இறந்த சரவணன் தெரியுமா?சிவா....இல்லை உங்களுக்கு மலையாளம் தெரிஞ்சா...எதாவது மலையாள பிளாக்குல போட்டிருந்தா சொல்லுங்க பிளீஸ் அவர பற்றி தெரிஞ்சுக்கனும்.....//

குடியரசுதினவிழா வாழ்த்துகள் சுரேஷ்! இப்பதிவில் தமிழக தீயணைப்பு வீரர் அன்பழகன் பற்றியும் எழுதி உள்ளேன் நண்பா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

குட் போஸ்ட் சிவா!

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றி தல.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பதிவு சிவா,,,,,
என்னதான் முல்லைபெரியாரில் நாம் பகையாளியாக இருந்தாலும் தேச ஒற்றுமை என்று வரும் போது ஒற்றுமையாக இருப்போம்.

RVS said...

சிவா! உயர்ந்த சிந்தனை! உரத்த சிந்தனை!! வாழ்த்துகள்.

சிராஜ் said...

சிவா,

அருமையான, இன்றைய நிலைக்கு தேவையான பதிவு. யாரையும் பொத்தாம் பொதுவாக திட்டுவது நிச்சயம் கண்டிக்கத் தக்கது தான்.

பொன் மாலை பொழுது said...

நீங்கள் பெரிய மனது காரர்தான், பெரும்தன்மையானவர்தான் . ஆனால் "அவர்கள் " நம்மை விட புத்தி சாலிகளாக இருப்பதாக எண்ணாதீர்கள். நான் சுமார் பதினைந்து வருடங்களாக மலையாளிகளுடன் பழகுகிறேன். எனக்கு தெரிந்தவரை அத்தனை பேருமே தமிழன் என்றால் இளப்பமாகவே என்னும் மன நிலையில் உள்ளவர்களே. மேலும் தமிழன் என்றால் அவர்களிடம் சற்று அச்ச உணர்வும் உண்டுதான், இந்த அச்ச உணர்வே அவர்களை நமக்கு எதிராக பேசவும் செயல் படவும் வைக்கிறது போலும். பொதுவாகவே மலையாளிகள் "வளைந்து "போகும் இயல்புடையவர்கள்."பணம் " என்றால் எதற்கும் தயார் என்ற இயல்புடையவர்கள். ஆனால் எனக்கு தெரிந்த வரையில் தமிழர்கள், அவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அப்படி இருப்பதில்லை. தன்மான உணர்வு நம் மக்களிடையே சற்று அதிகம். மலையாளிகள் நமவர்களை விடவும் நிறைய பேசுவார்கள் தான் "சத்திய சீலந்தான் " என்று வாதாடுவார்கள். அனால் செய்வதெல்லாம் நான்காம் தற வேலைகளாக இருக்கும். இந்த உண்மை நம்மவர்களுக்கு நன்கு தெரியும் அதனால் இவர்களை மதிக்க மாட்டார்கள். அதனால் உண்டாகும் வேறு பாடே இவர்களை தமிழர்கள் அனைவரும் தம் எதிரிகளாகவே என்னதொன்றுகிறது . அதுவே நடக்கிறது. போட்டி என்று வந்தால் அணைத்து மலையாளிகளும் தமிழர்களிடம் தோற்று போகின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்க நம் மக்களுக்கும் தெரிகிறது. நேரிடையான எதிரிகளை விட நைசியம் பேசும் துரோகிகள் மோசமானவர்கள் நண்பரே! எந்த ஒரு மலையாளியும் உங்களைபோல தான் எழுத முன்வரமாட்டான்.

சேலம் தேவா said...

குடியரசு தின சிறப்புபதிவு..!!

பொன் மாலை பொழுது said...

மீடியாக்களில் மலையாளிகளின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் போது மலையாளிகள் அல்லாதவர்களின் இது போன்ற நிகழ்வுகள் தியாகங்கள், கொண்டாட படுவதில்லை. எனக்கு சாந்திப் கிருஷ்ணன் அவர்களின் தியாகத்தில் மதிப்பும் வணக்கமும் உண்டு.அவர் இறந்த பின்னர் நிகழ்ந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளை படித்து விமர்சித்தும் உண்டு. அவரின் தந்தையார் மிக அதிகமாக பாதிகப்பாடார் .ஒரு வீர மறவனின் தந்தைக்கு இப்படி ஒரு நிலையா என்று அணைவரும் வேதனை பட்டதுண்டு.


நான் சொல்லவருவதெல்லாம் இதுதான். சாந்திப் கிருஷ்ணனை மலையாளியாக பார்க்கவேண்டுவதில்லை. ஒரு இந்திய மறவன் தான். ஆனால் அவரையே முழு உதாராணமாக எடுத்துக்கொண்டு எல்லா மலையாளிகளையும் கொண்டாட வேண்டுவதில்லை. என்பதே.

தங்கள் மாநிலத்தை ஒரு தனிநாடாக வே பாவித்து பேசும் மலையாளிகளை என்ன சொல்வீர்கள்?

வீரர் சாந்திப் கிருஷ்ணனை பாராட்டி தனிபதிவே போட்டிருக்கலாம். அவரின் புகழ் பாடும் இந்த பதிவில் தேவை இல்லாமல் முல்லை பெரியாறு நிகழ்வுகளையும், தமிழர்களின் எதிர்வினையும் விமர்சனம் செய்திருக்க வேண்டாம். முல்லை பெரியாறு சண்டையை ஆரம்பித்து தேவையில்லாத வேற்றுமைகள் வளர்த்தது தமிழர்கள் அல்ல என்பதை சற்று இன்னமும் தெளிவாக புரிந்து கொள்ள முயலுங்கள்.

நிரூபன் said...

வணக்கம் சகோ,
முதலில் இந்தப் பதிவிற்கும், இப் பதிவில் சுட்டப்பட்டிருக்கும் அந்த உயர்ந்த பண்பு நிறைந்த வீர மரணம் எய்திய இராணுவ வீரனுக்கும் சல்யூட்,

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் நன்மை பயக்கும். அதற்கு அமைவாக கல்லுக்குள் ஈரம் என்பது போல நல்ல மனம் படைத்தவர்கள், நாட்டிற்காக தொண்டாற்றுவோர் உள்ளார்கள் என்பது இயல்பு.

நிரூபன் said...

தேசியம் என்கின்ற குடையின் கீழ் நாம் அனைவரும் ஒருவர் என அணுகினால் எமது வருங்கால இந்தியா, நிச்சயமாக அபிவிருத்திப் பாதையில் இன்னும் சிறந்து விளங்கும்!

நண்பர்கள் அனைவருக்கும், உங்களுக்கும் எனது பிந்திய குடியரசுத் தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

உணவு உலகம் said...

குடியரசு தின சிறப்புப் பதிவு.நன்றாக சொல்லப்பட்ட கருத்துக்கள். நன்றி.

உணவு உலகம் said...

நல்ல கருத்துக்கள்.

MOHAN P SIVAM said...

வளைகுடா நாடுகளில் ஒரு அரபிக் காரரோ அல்லது வட இந்தியாவை சேர்ந்தவரோ நீ இந்தியரா எனக் கேட்கும் போது "இல்லை. நான் கேரளா" என்பதே கேரள மாநிலத்தவரின் பதிலாக இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...