மதன் கார்க்கி
நண்பனுக்கு பேனா தூக்கிய மதன் கார்க்கி, ஷங்கர் இருவருக்கும் முதலில் ஒரு ஸ்பெஷல் கைகுலுக்கல். பெரும்பாலும் வசனங்கள் மிகச்சிறப்பு. குறைகளை இறுதியில் காண்போம்.த்ரீ இடியட்சை ஏற்கனவே பார்த்துவிட்டதாலும், அதற்கு முன் சேத்தன் பகத்தின் Five Point Some One புத்தகத்தை படித்ததாலும் நண்பன் போகும் எண்ணம் முதலில் இல்லை. விமர்சனங்கள் வரட்டும். பிறகு முடிவெடுப்போம் என காத்திருந்தேன். ஏகோபித்த பாராட்டுக்களை நண்பன் பெற ஆரம்பித்ததால் படம் பார்த்தேன். 3 இடியட்சுடன் கம்பேர் செய்து பார்த்தால் எப்படி இருந்தது நண்பன்?
இந்த வயதில் அமீர்கான் கல்லூரி மாணவனா? திரையில் எப்படி சாத்தியம் என்றெண்ணி பார்த்தபோது ஆளு அநியாயத்திற்கு யூத்தாக வந்தார். விஜய் PG படிக்கும் மாணவன் போல. துள்ளல் மிஸ்ஸிங். ஆனால் நம்மூர் மாஸ் ஹீரோக்களுக்கே இருக்கும் வீம்பை கடாசி விட்டு அருமையாக பெர்பார்ம் செய்துள்ளார். மல்டி ஹீரோ சப்ஜெக்ட் செய்வது பெரிதல்ல. அதில் தன் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்துவதே முக்கியம். காதலுக்கு மரியாதை, பிரியமானவளே போன்ற படங்களில் இயல்பாக நடித்து வெற்றிக்கொடி கட்டிய விஜய் இதிலும் அசத்தியது ஆச்சர்யமில்லைதான். சில வருடங்கள் அதிரடி ரூட்டில் பெரும்பயணம் மேற்கொண்டுவிட்டு மீண்டும் இதுமாதிரி ரோலை ஏற்றது மகிழ்ச்சியை தருகிறது.
மாதவன், ஷர்மானை விட தமிழில் ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பு பலமடங்கு மேல். குறிப்பாக தந்தையிடம் ஸ்ரீகாந்த் உருகிப்பேசும் காட்சி, ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவில் அமைதியாக பேசுவது....கலக்கறீங்கப்பா!! ஹிந்தியில் ஓம் வைத்யா செய்ததைவிட சத்யன் இங்கு தூள் பரத்தி இருக்கிறார். அவருடைய கேரியரில் முக்கியமான திருப்புமுனை. ஆனால் ஒரு நிறுவனத்தின் வைஸ் பிரெசிடன்ட் ஆன பிறகும் அசட்டுத்தனமாக பேசும் சீன்கள் கொடுமை.
சத்யராஜும் போமன் இராணியை விட நன்றாக நடித்து இருக்கிறார். சத்யராஜுக்கான அடுத்த அருமையான இன்னிங்க்ஸ் ஆரம்பம். இலியானா நடிப்பு ஸ்வீட். கொஞ்சம் வந்தாலும் நெஞ்சில் நிற்கிறார் எஸ்.ஜே. சூர்யா. துணைநடிகர்கள் கூட நடிப்பில் பெரிதாக குறைவைக்கவில்லை.
மனோஜின் ஒளிப்பதிவு மீண்டும் ஒரு முறை படம் பார்க்க தூண்டுகிறது. ஹாரிஸ் மேஜிக் இல்லாவிடினும் இரைச்சல் இல்லை. 'நண்பன் போல' 'ஆல் இஸ் வெல்' இரண்டும் இனிமை.டூயட் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம்...ஷங்கர் உங்க ரசனையா? நம்ப கஷ்டமாக உள்ளது. ரஹ்மான் இசை அமைத்து இருந்தால் இன்னும் அமர்க்களப்பட்டிருக்கும் பாடல்கள். ஆரம்பித்த 15 - வது நிமிடத்திலேயே நம்மை அண்ணாந்து கொட்டாவி விட வைத்து தியேட்டரின் கூரையை கிழிக்க வைக்கும் சீன்கள் இருக்கும் காலத்தில், மூன்று மணிநேரம் சோர்வின்றி ஆர்வமாக பார்க்க வைத்த எடிட்டர் ஆண்டனிக்கு ஹாட்ஸ் ஆப்.
குறைகள் என்று சொல்லப்போனால் சிலவற்றை பட்டியலிடலாம். பாரிவேந்தன், முனியம்மா போன்ற பெயர்களை கிண்டல் செய்வது எதுக்கு ஷங்கர்? அதுபோல சொட்டைத்தலை, தடிமனான கண்ணாடி போட்டவர்களை ஒரு காட்சியிலும், ஜீவாவின் அக்காவை சில சீன்களிலும் எள்ளி நகையாடுவது....எப்படி ரசிக்க சொல்கிறீர்கள்? கருப்பான, அழகில்லாத(உங்கள் வெகுஜன பாஷையில்) பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு இளக்காரமா? நகைச்சுவை என்றாலும் நாகரீகம் வேண்டாமா? தங்கள் வீட்டிலிருப்போரின் நிறத்தையும் மனதில் கொண்டுதான் இக்காட்சியை அமைத்தீர்களா?
அங்கவை, சங்கவை, முனியம்மா போன்றோரின் நிறம் கருப்பென்றால் மட்டும் ஏளனம் செய்து தாளிப்பீர்கள். அதே நிறத்தில் உள்ள ரஜினி 'சிவாஜி' படத்தில் வரும்போது மட்டும் விவேக்கை விட்டு "டேய்..யார சொன்ன? எங்க ஆள கருப்புன்னா சொன்ன? மேகம் கருப்பு. காமராஜ் கூட கருப்பு" போன்ற வசனங்களை பேச வைத்து கைத்தட்டலை அள்ளுகிறீர்கள். இல்லாதவன்னா உங்களுக்கு அவ்வளவு கேவலமாக தெரிகிறான் போல.
கேட்டால் மக்கள் பேசுவதை படத்தில் வைத்தேன் என்று கோடம்பாக்கத்தின் மொக்கை பஞ்ச்சை பேசுவீர்கள். அது யதார்த்தமாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இதுபோன்ற வசனங்கள் நேற்று முளைத்த புதிய இயக்குனர் படங்கள் முதல் உங்களைப்போன்ற உலக இயக்குனர்கள் படங்கள் வரை தொடர்ந்து எழுதப்பட்டு வருவது சலிப்பை தருகின்றன. அதற்காகவாவது இவற்றை தவிர்க்கலாம்.
பொதுவாக ஒரிஜினலை ரீமிக்ஸ் மிஞ்சுவது கடினம். அமீர்கானின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் விஜய்யை விட ஒரு படி மேல் என்றால், விஜய்யின் நகைச்சுவை உணர்வு அமீர்கானை விஞ்சி நிற்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் தமது நடிப்பின் மூலம் த்ரீ இடியட்சை விட நண்பன்தான் பெஸ்ட் என நிரூபித்து விட்டார்கள். இது போன்ற படங்களை எடுத்தால் நம்மூர் மக்கள் பார்க்க மாட்டார்கள். ஏனோ தானோ கமர்சியல் மசாலா போட்டு கல்லா கட்டிட்டு போகலாம் என்று என்னும் படைப்பாளிகளே..கொஞ்சம் மாத்தி யோசிங்க.
நண்பன் (விஜய்) - I AM BACK
........................................................................................
நண்பன் (விஜய்) - I AM BACK
........................................................................................
விஜய்யை இடைவிடாமல் கண்டமேனிக்கு ரவுசு விட்ட ப்ரின்ஸ்கள் (ஆந்திர பிரின்ஸ் அல்ல) இப்போது அவசியம் சாப்பிட வேண்டியது எது? காணொளியில் காண்க:
..............................
My other site:
.............................
...............................................
புதிய பதிவுகள்:
சென்னை புத்தக கண்கொள்ளாக்காட்சி - 2
மகேஷ் பாபு நடித்த 'பிசினெஸ்மேன்' - விமர்சனம்
....................................................................
25 comments:
Good to know that you liked the film
ஹஹா கலாய்க்க முடியாம பண்ணிட்டாங்க போல ஹிஹி!
யோவ் அப்போ நாங்கள்லாம் ஜெலுசில் சாப்புடனுமா..... நோ நெவர்.... இதுக்காகவே நானும் நண்பன் விமர்சனம் போடுறேன்.... !
////விஜய் PG படிக்கும் மாணவன் போல. துள்ளல் மிஸ்ஸிங். ஆனால் நம்மூர் மாஸ் ஹீரோக்களுக்கே இருக்கும் வீம்பை கடாசி விட்டு அருமையாக பெர்பார்ம் செய்துள்ளார். மல்டி ஹீரோ சப்ஜெக்ட் செய்வது பெரிதல்ல. அதில் தன் திறமையை கச்சிதமாக வெளிப்படுத்துவதே முக்கியம்.////
டாகுடர் இனி பயப்படாம இந்த மாதிரி செலக்ட் பண்ணி நடிக்கலாம். படமும் நல்லா ஓடும், பேரும் வரும்...!
வணக்கம் சிவா சார்!நறுக்குத் தெறித்தாற்போல் அருமையான விமர்சனம்!இப்படி ஒரு விமர்சனம் இதுவரை படித்ததேயில்லை.நம்புங்க சார் உண்மை!!!!
////மாதவன், சித்தார்த்தை விட தமிழில் ஜீவா, ஷ்யாமின் நடிப்பு பலமடங்கு மேல். குறிப்பாக தந்தையிடம் ஸ்ரீகாந்த் உருகிப்பேசும் காட்சி, ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவில் அமைதியாக பேசுவது....கலக்கறீங்கப்பா!! ஹிந்தியில் ஓம் வைத்யா செய்ததைவிட சத்யன் இங்கு தூள் பரத்தி இருக்கிறார். ///////
நல்லாருக்கே......
ஓ அது சேமியா வெளம்பரமா? இங்க வீடியோ பார்க்க முடியாதுங்க, நானும் ஜெலுசில் வெளம்பரம்னு நெனச்சிட்டேன்.....
@ மோகன் குமார்
Its all because of the good reviews!!
@ விக்கி
ஆமாம் மாம்ஸ். சிறப்பான படம்.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அப்போ நாங்கள்லாம் ஜெலுசில் சாப்புடனுமா..... நோ நெவர்.... இதுக்காகவே நானும் நண்பன் விமர்சனம் போடுறேன்.... !//
அது ப்ரின்சுகளுக்கு மட்டும்னு சொல்லி இருக்கேன்!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
டாகுடர் இனி பயப்படாம இந்த மாதிரி செலக்ட் பண்ணி நடிக்கலாம். படமும் நல்லா ஓடும், பேரும் வரும்...!//
கண்டிப்பா. சந்தேகமே இல்ல. நண்பன் அல்டிமேட் ஹிட்!!
// Yoga.S.FR said...
இப்படி ஒரு விமர்சனம் இதுவரை படித்ததேயில்லை//
உள்குத்து மாதிரியே இருக்கு. நன்றி யோகா!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஓ அது சேமியா வெளம்பரமா? இங்க வீடியோ பார்க்க முடியாதுங்க, நானும் ஜெலுசில் வெளம்பரம்னு நெனச்சிட்டேன்.....//
அணில் சேமியா படத்தை சேத்துட்டேன். அணில் சேமியா. தரமான சேமியா. ஆசிய, வளைகுடா, ஐரோப்பா நாடுகளில் பரபரப்பாக விற்கிறது அணில் சேமியா.
//ஜீவா, ஷ்யாமின் நடிப்பு //
?????
சரியாத்தான் எழுதியிருக்கீங்களா?
அருமையான விமர்சனம் சகோ. நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. முதல் சில காட்சிகள் மட்டும் (பத்து நிமிடங்கள்) த்ரீ இடியட்ஸை நியாபகப்படுத்து நின்றது :-( த்ரீ இடியட்ஸை பார்க்காதவங்க இன்னும் அதிகமா கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்.
வாழ்த்துக்கள்
என்ன அண்ணே..ஒரேடியா பாராட்டா இருக்கு..?
சத்யராஜ் அவரோட சொந்த பாணில பண்ணிருந்தா நல்லா இருந்திருக்கும் இன்னும்..
வசனங்கள்ள அந்த "கொங்கை" எல்லாம் ரொம்ப உறுத்தல்..
ஜெயம்-இராஜா மாதிரி அப்படியே ஜெராக்ஸ் எடுத்துருக்காரு அண்ணே ஷங்கரு.. கோயம்பத்தூருல வடக்கத்திய கல்யாணம்..அதுவும் விருமாண்டி சந்தானம் பேரு வெச்சுகிட்டு..
ஹிந்தில ஒரு சீரியஸ் மூட் இருந்துச்சு அண்ணே படத்துல...நம்மதுல அது மிஸ்ஸிங்..
இதெல்லாம் ரொம்ப கொஞ்சம் கொஞ்சம் குறைதான்..
ஆனா படம் நிச்சயமா ரொம்ப சூப்பர்..
விஜயின் வித்யாச முயற்சிகள் தோல்விகண்டதுண்டு.நண்பன் அதை உடைக்கட்டும்
த்ரீ இடியட்சே என்னைப் பொறுத்தவரை முன்னாபாய் எம்.பி.பி.எஸ் இன் மாறுபட்ட வடிவம்தான். அது மருத்துவம் இது பொறியியல். அதுதான் வித்தியாசம். தகுத்திக்கு மீறிய புகழை அடைந்த படம் த்ரீ இடியட்ஸ்.
த்ரீ இடியட்சின் திரைக்கதை தவறுகளைக் கூட மாற்றாமல் நகல் எடுத்து அலுப்பூட்டியது.
(1) எந்த பொறியியல் கல்லூரியில் ரேங்க் பட்டியலை அறிவிப்புப்பலகையில் ஓட்டுகிறார்கள். பல்கலைக்கழக முதல் மாணவரின் ரேங்கைத் தவிர யார் ரேங்கும் யாருக்கும் தெரியாது. ரேங்க் என்பது பள்ளிப் பழக்கம்.
(2) எந்த கேம்பஸ் இன்டர்வ்யூவில் சொந்த கதை, சோகக் கதை கேட்டு வேலை கொடுக்கின்றனர்? அது போன்ற மாணவனுக்கு வேலை கிடைப்பது கடினம். வெளியே வந்து திறமைகளை வளர்த்துக் கொண்டு வேலை தேடிக் கொள்வார்கள் அப்படிப்பட்டவர்கள்.
(3) ரேகிங் தவிர மற்ற காட்சிகளில் பேன்ட் அவிழ்த்து மரியாதை செலுத்துவது அபத்தமாக இருந்தது.
(4) திருமணத்தைக் கூட வட இந்தியத் திருமணமாகவே காட்டியிருந்தனர்.
Image is not Madhan Karky's. its his brother's.
//மாதவன், சித்தார்த்தை விட தமிழில் ஜீவா, ஷ்யாமின் //
ஷ்யாம்?
Thanks ILA. Corrected.
வணக்கம் நண்பா,
நல்லதோர் நடு நிலையான அலசலைக் கொடுத்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
எனக்கும் கார்க்கி, ஷங்கரின் வசனங்கள் மிகவும் பிடித்திருக்கிறது.
சிவா ”அணில்” விளம்பரம் சூப்பர்...உங்களுக்கு ஏதும் திட்டி கமெண்ட் வரலையா?வந்திருக்க வாய்ப்பு உண்டு....போபன் ஹிரானி பாத்திரத்திக்கு சத்தியராஜை விட பாஸ்@பாஸ்கரன் சிதிராலட்சுமணன் இருந்தா இன்னும் நல்லாயிருக்கும்ன்னு தோனுச்சு...எனக்கு...
அது எப்படி சிவா, மெட்ராஸ் பவன்லயும் சரி, நண்பேன்டாவுலயும் சரி, கவுண்டமணி செந்தில் பிளாக்குலயும் சரி அந்தந்த தரத்துல கலாய்த்தல் கொஞ்சம் கூட நிக்காம போய்க்கிட்டே இருக்குதே, பாத்து யாராவது வீட்டுக்கு சுமோ அனுப்பிட போறானுங்க.
@ஆரூர் மூனா செந்தில்
ஸ்கார்பியோ அனுப்புனா வசதியா இருக்கும். :)
அங்கவை, சங்கவை ஜோக் பார்த்து நானும் மனம் நொந்ததுண்டு. நீங்களும் அதையே பதிவு செய்திருக்கீங்க.
Post a Comment