ஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன்
சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு பொன்னர் சங்கர் படத்திற்கு அழைத்து சென்று சிக்க வைத்தோம். அது போலொரு பரவச நிலைக்கு அவரை மீண்டும் கொண்டு செல்ல நேற்றொரு வாய்ப்பு கிடைத்தது. சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்த அவரை நானும், பிரபாகரனும் மேதை படத்திற்கு வருமாறு கெஞ்சல்,மிரட்டல், விரட்டல் என அனைத்தையும் முயன்று பார்த்தும் முடியவில்லை. சிதறி ஓடி விட்டார். அஞ்சாசிங்கம் ஞாயிறு முழுக்க நேரம் உள்ளது. எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றார். மேதை என்றோம். கண்டிப்பா போவோம் என்று குஷியாக கூறினார். தி. நகர் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டருக்கு விஜயம் செய்தோம் மூவரும். வாசலில் பட்டாசு, அதிர வைக்கும் பேனர்கள் என பட்டையை கிளப்பினர். ஏரியா ஆளும்கட்சி நபர் கார் ஒன்று வந்து இறங்கியது. சைலண்ட்டா படம் பாருங்க. கட்சி ஆளுங்க கஞ்சி காச்சிட போறாங்க. ரவுசு வேண்டாம் என்று சிங்கத்தையும், தத்துவத்தையும் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. என்னா ரவுசு!!
கடலூர் மாவட்டத்தின் நல்லாசிரியர் நம்ம ஹீரோ. குழந்தை தொழிலாளிகளை வைத்துக்கொண்டு ஊரை ஏமாற்றும் வில்லன். அவனை எப்படி திருத்துகிறார் என்பதே கதை. ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஆஸ்கர் வாயிற்கதவை ஓங்கி தட்டுவதோடு மட்டுமின்றி, உடைத்து நொறுக்கும் என்பதில் ஐயமில்லை.
தலைவரின் காஸ்ட்யூம்:
அண்ணனின் கலர் சட்டைகளை கிண்டல் செய்வதையே குலத்தொழிலாக கொண்ட ரசிகர்களுக்கு செம ஆப்பு வைத்துள்ளார் நம்ம ஆளு. முதல் பாதியில் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி மட்டும்தான். (ஏ)மாற்று சினிமா?. ஒரே ஒரு பாடலில் மட்டும் தீவிர ரசிகனை திருப்திப்படுத்த ரோஸ், ராமர் ப்ளூ போன்ற சட்டைகளை போட்டு சேட்டை செய்கிறார். மற்றபடி படம் நெடுக தன்னால் போட முடியாத கலர் ஆடைகளை நாயகிகள், மாணவ மாணவிகளுக்கு போட்டுவிட்டு நம்மை போட்டு தள்ளுகிறது மேதை டீம். அவர்கள் எல்லாம் சிகப்பு, அடர் சிகப்பு, கிளிப்பச்சை கலர்களில் உடை அணிந்து நம் அடி வயிற்றில் இருந்து ஓலத்தை எழுப்பி விடுகிறார்கள்.
ஷங்கர், லிங்கு...என் ஆட்டமும், உங்க ஓட்டமும் ஆரம்பம்!
மேலே இருக்கும் ஸ்டில் வருகிற பாடலில் கருப்பு, வெள்ளை உடைகளில் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு எம்மை கொண்டே போட்டார். திருமணம் முடிந்த மறுநாள் தன் மனைவியிடம் 'ஊருக்காக வெள்ளை வேட்டி சட்டை போட்டேன். இப்ப உனக்காக வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் போடறேன்' என்று சொல்லும் காட்சிதான் இரண்டாம் பாதியின் திருப்பு முனை. க்ளைமாக்ஸ் வரை அதே காஸ்ட்யூம்தான்.
மேலே இருக்கும் ஸ்டில் வருகிற பாடலில் கருப்பு, வெள்ளை உடைகளில் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு எம்மை கொண்டே போட்டார். திருமணம் முடிந்த மறுநாள் தன் மனைவியிடம் 'ஊருக்காக வெள்ளை வேட்டி சட்டை போட்டேன். இப்ப உனக்காக வெள்ளை சட்டை, ப்ளூ ஜீன்ஸ் போடறேன்' என்று சொல்லும் காட்சிதான் இரண்டாம் பாதியின் திருப்பு முனை. க்ளைமாக்ஸ் வரை அதே காஸ்ட்யூம்தான்.
அதிநவீன காட்சிகள்:
* ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கி அண்ணன் வருகையில் கேமரா பறந்து விரிகிறது. இரண்டு அடியாட்கள் நெஞ்சில் காலை வைத்து அந்தரத்தில் சில நொடிகள் அப்படியே நிற்கிறார். இதை கிராபிக்ஸ் என்று சொல்லும் நயவஞ்சகர்களை வன்மையாக கண்டிக்க தயங்கமாட்டேன். பீ கேர்புல். ப்ளாஸ்டிக் கேன்கள், தகர ட்ரம்கள், அட்டைப்பெட்டி என லேட்ட்டஸ்ட் பொருட்கள் மீது வில்லன்கள் அடிவாங்கி விழுவது....கைய குடுங்க ஸ்டண்ட் மாஸ்டர்!!
* 'கிழக்கு திசை நோக்கி கேளுங்கடா...மேற்கு திசை நோக்கி வணங்குங்கடா' பாடலை கேட்டும் திருந்தாவிட்டால் அவன் தமிழனே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இலக்கிய, (சேப்டி) பின் நவீனத்துவ வரிகள் சுழற்றி அடிப்பது புதுமையிலும் புதுமை.
வரலாற்று பெட்டகம்..ஒரு பார்வை
* வசனங்கள் டக்கரோ டக்கர். கோவிலில் காதல் செய்யும் ஜோடியை பார்த்து தலை சொல்லும் வசனம்: "படிக்கட்ல ஸ்லிப் ஆனா பரவா இல்ல. படிப்புல ஸ்லிப் ஆகிடாதீங்க". தன் நலவிரும்பிகளிடம்: "நம்மை எதிர்த்தவன் தோக்கும்போதுதான் ஜாக்ரதையா இருக்கணும்", வில்லனிடம் "உன் உடன்பிறப்பு என் கஸ்டடில" (தி.மு.க.விற்கு எச்சரிக்கை).
* செகண்ட் ஹீரோயின் மனநிலை சரியில்லாமல் இருக்கையில் செகண்ட் ஹீரோ "இங்க பாரும்மா. நான் வந்துருக்கேன்" என்று சொல்லும்போது அவருக்கு சட்டென நினைவு திரும்புதல், வில்லனை இறுதியில் கொல்ல ஊரார் முடிவு செய்கையில் அவரை மன்னிக்க ராமராஜன் சொல்லுதல் இப்படி பற்பல பற்பல பலப்பல காட்சிகள் படத்திற்கு பக்கா பலம்.
* லொக்கேஷன்கள் எல்லாம்.......வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
*இரண்டு நாயகிகளும்(அண்ணனுக்கு ஒருவர்தான்) காட்டும் முகபாவம்...நம்மை தியேட்டரில் சொக்கி விக்கி விழ வைக்கிறது.
இடைவேளையில் தப்பித்து ஓட இயலாமல் சிக்கியவர்கள்
கிருஷ்ணவேணி தியேட்டரில் பல ஆண்டுகள் கழித்து படம் பார்த்தேன். அஞ்சாசிங்கம் அருகில் இருந்த நபர் மொக்கை ஜோக்குக்கு எல்லாம் வாய்விட்டு சிரிக்க, பிலாசபி அருகில் இருந்த ஒருவரோ அடிக்கடி கைதட்டிக்கொண்டே இருந்தார். நல்லவேளை நடுவில் இருந்ததால் நான் பிழைத்தேன். ஆனால் இடைவேளைக்கு பின் சீட் மாற்றி அமர வைத்து எனக்கு ஆப்படித்தனர் இருவரும். எம்.ஜி.ஆர். படத்தை ராமராஜன் வீட்டு சுவற்றில் மாட்டி வைத்திருக்கும் காட்சி வரும்போதெல்லாம் தியேட்டரில் பிகில். இதுபோக அண்ணா, வள்ளலார், காமராஜ் என ஏகப்பட்ட தலைவர்களின் படத்தை அடிக்கடி காட்டுகின்றனர். புதுமையை புகுத்தலாம். அதுக்காக இப்படியா? நம்ம நெஞ்சை கிழிச்சி அதுல தலைவர் ராமராஜன் ஸ்டில்லை ஆணியில் அடித்து தொங்கவிட்டும், மூளையில் இலக்கிய ரசனை பொங்கும் வசனங்களை சொருகியும்....ஆத்தாடி...ஆத்தா!!
மேதை - ராம ராஜ்யம்லே!!
...................................................................
பொங்கல் பரிசு:
பாடலை முழுதாக கேளுங்கள். பரவச நிலையை அடையுங்கள். பொங்கல் நல்வாழ்த்துகள்:
வானிலை எச்சரிக்கை:
இரண்டாம் ஸ்டில்லை தவிர மற்ற அனைத்தும் எனது மொபைல் மூலம் தியேட்டரில் எடுத்தது. அடுத்த சில பதிவுகளில் கிருஷ்ணவேணி தியேட்டரில் எடுத்த அதிரவைக்கும் படங்கள் மற்றும் வியக்க வைத்த நிகழ்வுகள். உங்களுக்கென்றே தயாராகி வருகிறது 'மேதை சிறப்பு மலர்'. யாரும் தப்ப முடியாது!!
..........................................................................................
..............................
My other site:
agsivakumar.com
..............................
....................................................
சமீபத்தில் எழுதியது:
மகேஷ்பாபு நடித்த பிசினெஸ்மேன் - விமர்சனம்
சென்னை புத்தக கண்கொள்ளா காட்சி - 2
சென்னை புத்தக கண்காட்சி -2012
....................................................
74 comments:
அடிச்சு தூள் கிளப்பறேப்பா!! :-)
வாங்க சார். பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை வரப்போகுது. நீங்களும், மோகன்குமார் சாரும் எங்களோட படம் பாக்க வந்தே ‘தீரணும்’ :))))))
சிவா தெளிவா இருக்கிங்களா...?
சிவா....உங்களை நினைச்சா...பெருமையா...இருக்குப்பா..பெருமையா...இருக்குப்பா..(மேஜர் சுந்தர்ராஜன் வாய்ஸ்சில் படிக்கவும்)
எங்க தலைவர் படத்துக்கு விமர்சனம் எழுதிவிட்டு தாங்கள் தன்மான சிங்கள் என்ற பட்ட பெயரை வாங்கிவிட்டீர்கள்...
அடுத்த பதிவு
பவர் ஸ்டாருதா...
சண்டை காட்சிகள் பற்றி முழுமையாக சொல்லாதது வருத்தம் தான்..
@ வீடு சுரேஷ்
எல்லாப்புகழும் பிலாசபி மற்றும் அஞ்சா சிங்கத்திற்கே. நான் வெறும் தொண்டன் மட்டுமே.
//கவிதை வீதி... // சௌந்தர் // said...
சண்டை காட்சிகள் பற்றி முழுமையாக சொல்லாதது வருத்தம் தான்.//
இந்த வலைப்பூவின் உச்சியில் வலது ஓரத்தில் பாருங்க. சிறப்பு மலரில் எல்லாம் வரும். கவலை வேண்டாம்.
விமர்சனம் சூப்பர். நான் பார்த்தாலும் இது மாதிரி ஒரு விமர்சனம் எழுத முடியாது.
பவர் ஸ்டார் என்பவர் "A " படம் எடுப்பவரல்லவா? அது வயது வந்தவர்களுக்கு மட்டும். நான் பள்ளி மாணவன் என்பதால் பவர் ஸ்டார் படம் வர முடியாது :))
//மோகன் குமார் said...
விமர்சனம் சூப்பர். நான் பார்த்தாலும் இது மாதிரி ஒரு விமர்சனம் எழுத முடியாது.
பவர் ஸ்டார் என்பவர் "A " படம் எடுப்பவரல்லவா? அது வயது வந்தவர்களுக்கு மட்டும். நான் பள்ளி மாணவன் என்பதால் பவர் ஸ்டார் படம் வர முடியாது :))//
நன்றி சார். இதுவே அவசரத்தில் இட்ட பதிவுதான். பவர் ஸ்டார் படம் வராவிட்டால் பரவாயில்லை. மேதை நைட் ஷோ பார்க்கவைத்து உங்களை திகிலடிக்க வைப்பதில் கூட எங்களுக்கு பேரானந்தமே!!
புத்தக கண்காட்சிக்கு செல்கிறேன். வரவுள்ள கமன்ட்களுக்கு சில மணி நேரங்கள் கழித்து பதில் சொல்கிறேன். மன்னிக்க. அதுவரை உங்கள் பொன்னான கருத்துகளை கொட்டி தீர்க்கவும். படம் பார்க்க உசுப்பிவிட்ட பன்னிக்குட்டியை திட்டுபவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் :)))
சிவா உங்களை,,பிரபா,,சிங்கத்தை ...நான்...மனிதர்கள் என்ற லிஸ்ட்-ல
வைச்சிருந்தேன்....
என் எண்ணத்தை மாற்றியதற்கு நன்றி....
@ நாய் நக்ஸ்
நக்கீரரே.... புரியுது. 'கடவுள்' நம்பிக்கை பிலாசபிக்கும், அஞ்சாசிங்கத்துக்கும் இல்லை.
மேதையை முதல் காட்சி கண்ட சிங்கம்.. :D :D ராமராஜனின் சென்னை வட்ட தலைமை ரசிகன் என்பதை நிரூபித்துவிட்டீர்கள் :) :)
யோவ்.... மேதை படத்தை பார்த்துவிட்டு சேதாரமில்லாமல் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
பதிவர்களுக்காக நீங்கள்,பிரபாகரன் மற்றும் அஞ்சாசிங்கம் செய்த தியாகத்தை நினைத்தால் சிலிர்க்கிறது. தொடர்க உங்கள் தொண்டு... :)
கலக்கல்.ஒவ்வொரு வரிகளிலும் குறும்பு ரசிக்க வைக்கிறது . பவர் ஸ்டாரின் புதிய படமான "மன்னவன் "படத்தின் விமர்சனத்தையும் போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்
// ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஆஸ்கர் வாயிற்கதவை ஓங்கி தட்டுவதோடு மட்டுமின்றி, உடைத்து நொறுக்கும் என்பதில் ஐயமில்லை. //
இப்ப என்னதான் சொல்ல வரீங்க??
பாட்ட கேக்கும்போதே தியேட்டர் மனக்கண்ணில் விரிகிறது. :P
மேதை சிறப்பு மலருக்கு வெயிட்டிங். இதுக்கு First-on-Net விமர்சனம் போட்டீங்களே. அதற்கு ஒரு Hats-Off.
மேதை படத்திற்கே விமர்சனம் எழுதிய மாமேதை சிவகுமார் வாழ்க!
எங்கள் தானைத்தலைவன் மாமாமேதை ராமராஜனை அசிங்கமாக வெள்ளைச் சட்டையில் படம்பிடித்து போட்டு அவமானப்படுத்தியவர்களைக் வன்மையாக கண்டிக்கிறோம்!
இந்தப் படத்த டெய்லி நூறு நாளைக்கு நீங்க மூணு பேரும் பார்க்க போறதா கேள்விப்பட்டேனே?
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தில்லுங்க , அதிலயும் தனியா போகாம ரெண்டு பேர சேர்த்து மாட்டி விட்டீங்க பாருங்க , அங்க நிக்குறீங்க ! உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்குறேன் !
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
துணைக்கு ஆள் இல்லன்னு போகல.....மிஸ் ஆகி போச்சு..
நேத்து ஒருபயப்புள்ள மேதைய பாக்கபோறதா மெரட்டுச்சு.. நானும் சும்மாகாச்சுக்கும்னுல நெனச்சேன்......
ஆத்தி...
பதிவை படிச்சதுக்கே இந்த தலைசுத்தல்.. சிறப்புமலர் வேறையா? ஹா...ஹா..ஹ்ஹா...
அப்பறம் கேட்க்குள் இருக்கும் கைதிகளை பார்க்கும் போது பரிதாபமா இருக்கு, நீங்களும் அதில் ஒருவர் என நினைக்கும் போது ஹி...ஹி..ஹி.. செம குஷி :-)
@ கனகு
எங்களுடன் அரங்கில் பல வெரைட்டியான சிங்கங்களும் அமர்ந்து இருந்தது அருமையான காட்சி.
@ கஸாலி
அடுத்த முறை சென்னைக்கு வந்தால் உங்களை சிக்க வைக்க சக்கர வியூகம் வகுத்தே தீருவோம்.
@ சேலம் தேவா
தொடர்க உங்கள் தொண்டா...? :((
//பிரேம் குமார்
//"மன்னவன் "படத்தின் விமர்சனத்தையும் போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்//
இந்த மாதிரி சொல்றவங்க எல்லாம் டிக்கட் காசு போக கூட 250 ரூவா நிவாரண நிதி வழங்குமாறு மிரட்ட்டி கேட்டுக்கொள்கிறோம்.
@ ஹாலிவுட் ரசிகன்
இப்ப சொன்னது சாம்பிள்தான். என்னுடன் கூட வந்த இருவரால் அன் லிமிடட் மேதை மீல்ஸ் விரைவில் பகிரப்படும்.
@ பன்னிக்குட்டி ராமசாமி
வாங்க. இப்ப சந்தோஷமா? கூட படம் பார்த்த மாமேதைகள் இருவருக்கு என்ன பட்டம்?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எங்கள் தானைத்தலைவன் மாமாமேதை ராமராஜனை அசிங்கமாக வெள்ளைச் சட்டையில் படம்பிடித்து போட்டு அவமானப்படுத்தியவர்களைக் வன்மையாக கண்டிக்கிறோம்!//
ராமராஜன் அண்ணன் வெள்ளைமனம் கொண்டவர். எனவே மென்மையாக கண்டிக்குமாறு உங்களை கண்டித்து கேட்டுக்கொள்கிறோம்..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
இந்தப் படத்த டெய்லி நூறு நாளைக்கு நீங்க மூணு பேரும் பார்க்க போறதா கேள்விப்பட்டேனே?//
உங்க ஊர்ல ரிலீஸ் ஆகாத ஆணவத்துல ஆடறீங்க. தமிழ்நாட்டு பார்டர்ல கால் வைங்க. படம் பாக்காம எஸ்கேப் ஆக முடியாது. சிறப்பு படை அமைச்சி உங்களை இழுத்து வரச்சொல்லி ஸ்பெஷல் ஷோ போட்டு அலற வைப்போம்.
// ananthu said...
இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தில்லுங்க , அதிலயும் தனியா போகாம ரெண்டு பேர சேர்த்து மாட்டி விட்டீங்க பாருங்க , அங்க நிக்குறீங்க ! உங்ககிட்ட இருந்து நெறைய எதிர்பார்க்குறேன் !//
நிறைய எதிர்பாக்கறீங்களா? மேதை ஒன்ஸ்மோர்!!
//சென்னை பித்தன் said...
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.//
படித்தேன். அறிமுகம் செய்ததற்கு நன்றி சார். வாங்களேன்..சென்னைல உங்களுக்கு பிடிச்ச தியேட்டர்ல மேதை பாக்கலாம்..
//ஜெட்லி... said...
துணைக்கு ஆள் இல்லன்னு போகல.....மிஸ் ஆகி போச்சு..//
உங்க தோழரை புத்தக கண்காட்சியில் பார்த்தேன். மஞ்ச கலர் சட்டையில்..ராமராஜன் ரசிகரா? அடுத்து ஒரு படம் நம்ம போகலாம். அநேகமாக ஆனந்த தொல்லை...!!
@ஆமினா
நாங்கள் கைதிகள்தான். அண்ணன் ராமராஜனின் மனச்சிறையில்.. :)
நீ ரொம்ப நல்லவண்டா தம்பி..
//சங்கர் நாராயண் @ Cable Sankar said...
நீ ரொம்ப நல்லவண்டா தம்பி..///
வாங்க தல. படத்த மிஸ் பண்ணிட்டீங்க. நீங்க துரதிர்ஷ்டசாலி. மேதை விமர்சனம் போடலன்னா உங்க பேச்சு டூ !
@ NAAI-NAKKS
// சிவா உங்களை,,பிரபா,,சிங்கத்தை ...நான்...மனிதர்கள் என்ற லிஸ்ட்-ல
வைச்சிருந்தேன்....
என் எண்ணத்தை மாற்றியதற்கு நன்றி.... //
நாய் நக்ஸ்... நாங்க மாமேதைகள்... புரிஞ்சதா...
வணக்கம் நண்பா,
உங்களுக்குப் பொறுமை ரொம்ப ஜாஸ்தி என்று நினைக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ ரஹீம் கஸாலி
// யோவ்.... மேதை படத்தை பார்த்துவிட்டு சேதாரமில்லாமல் வந்ததற்கு வாழ்த்துக்கள். //
படத்திற்கு வராமல் கைபர் கனவாய் வழியாக தப்பித்தமைக்கு எங்களுடைய கண்டனங்கள்...
@ பிலாசபி
அப்படி சொல்லு தம்பி!!
@ பன்னிக்குட்டி ராம்சாமி
// இந்தப் படத்த டெய்லி நூறு நாளைக்கு நீங்க மூணு பேரும் பார்க்க போறதா கேள்விப்பட்டேனே? //
இதுக்கே நாக்கு தள்ளிடுச்சு சாரே...
@ ஜெட்லி...
// துணைக்கு ஆள் இல்லன்னு போகல.....மிஸ் ஆகி போச்சு.. //
சிவா... இந்த ஆட்டை ஆனந்த தொல்லைக்கு வச்சிக்கிடலாம்...
@ நிரூபன்
இது ஒரு ஆழ்நிலை தியானம் நிரூபன். விரைவில் உங்களுக்கு மேதை DVD அனுப்பி வைக்கிறேன். என்ஜாய்!
@ நிரூபன்
இது ஒரு ஆழ்நிலை தியானம் நிரூபன். விரைவில் உங்களுக்கு மேதை DVD அனுப்பி வைக்கிறேன். என்ஜாய்!
@ ! சிவகுமார் !
// என்னுடன் கூட வந்த இருவரால் அன் லிமிடட் மேதை மீல்ஸ் விரைவில் பகிரப்படும். //
ஓவர் பப்ளிகுட்டி ஒடம்புக்கு ஆகாது... அப்புறம் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்துடுவாங்க...
//Philosophy Prabhakaran said...
@ ஜெட்லி...
// துணைக்கு ஆள் இல்லன்னு போகல.....மிஸ் ஆகி போச்சு.. //
சிவா... இந்த ஆட்டை ஆனந்த தொல்லைக்கு வச்சிக்கிடலாம்.//
டெபநெட்லி . டெபநெட்லி. ஜெட்லி தயாராக இருக்கவும்.
/Philosophy Prabhakaran said...
@ ! சிவகுமார் !
// என்னுடன் கூட வந்த இருவரால் அன் லிமிடட் மேதை மீல்ஸ் விரைவில் பகிரப்படும். //
ஓவர் பப்ளிகுட்டி ஒடம்புக்கு ஆகாது... அப்புறம் ரசிகர்கள் ரொம்ப எதிர்பார்த்துடுவாங்க...//
யோவ்..சிறப்பு மலர் சீக்கிரம் போடு. மேதை பார்ட் - 2 வேற வருதாம்.
சிவா,
இருந்தாலும் உங்க மன தைரியத்த பாராட்டியே ஆகணும். ஆனாலும் ஒரு காலத்தில கலக்கிய ஹீரோ என்பதை மறந்திராதீங்க.
"சொந்தம் உன்னை தேடும் அன்னக்கிளி " அப்படின்னு
ரோஸ் சொக்கா போட்டு ராமராஜன் நடந்து வந்தா தியேட்டரே அதிரும் என்று கசாலி சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.
சிவகுமார் அண்ணே..உங்களுக்கு சகவாசம் சரியில்லே...அவ்ளோதான் சொல்லுவேன்...
என் இப்புடி புதுசு புதுசா புத்தி பேதளிக்குது...
ஊர் பக்கம் வாங்க..பூசாரி ஐயாகிட்ட சொல்லி துந்நூர் போட்டிக்கிட்டு போலாம்...
அசாத்திய பொறுமைசாலி சிவா! படத்த முழுசாப் பாத்ததோட மட்டுமில்லாம சிறப்பு மலர் வேற... அவ்வ்வ்வ்வ!
-எள்ளல் சுவை நிரம்பிய விமர்சனத்தை ரசித்துப் படிக்க முடிந்தது. நன்று!
வாழ்த்துகள்
சினிமா விமர்சன மேதையே! வாழ்த்த வயசு பத்தாததால் கால்ல்ல விழுந்து கும்பிட்டுக்கறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்
செம காமெடி கலக்கல் விமர்சனம்
>>இடைவேளையில் தப்பித்து ஓட இயலாமல் சிக்கியவர்கள்
haa haa செம செம , அதுல பிரபா ஃபோட்டோவை போட்டிட்ருக்கலாம்
//ஒவ்வொரு காட்சியும், வசனமும் ஆஸ்கர் வாயிற்கதவை ஓங்கி தட்டுவதோடு மட்டுமின்றி, உடைத்து நொறுக்கும் என்பதில் ஐயமில்லை//
அவ்வ்வ்வ்ளவு அருமையாவாஆ இருக்கு.. ஹா ஹா கிளாசிக் விமர்சனம் சூப்பர்.
//அது போலொரு பரவச நிலைக்கு அவரை மீண்டும் கொண்டு செல்ல நேற்றொரு வாய்ப்பு கிடைத்தது//
பரவச நிலை - புத்தகம் படிச்சாத்தான் வரும்னு சொன்னாங்க..படம் பாத்தும் வருதா?
//"படிக்கட்ல ஸ்லிப் ஆனா பரவா இல்ல. படிப்புல ஸ்லிப் ஆகிடாதீங்க"//
படம் பாத்த அதிர்ச்சில யாரும் கிணத்துக் கட்டில ஸ்லிப் ஆகிடாம இருந்தா சரி!
//லொக்கேஷன்கள் எல்லாம்.......வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்//
ஏன் பாஸ்? சுடுகாட்டுல எல்லாம் எடுத்திருக்காயங்களா?
யோவ் சிவா இப்ப நீங்க எந்த ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிருக்கீங்க?
@ சிராஜ்
ராமராஜனை மறக்க கூடாதுன்னுதான் படத்துக்கே போனோம். நீங்க அவரை மறந்துட்டீங்க. :)))
@ மயிலன்
ஆமாம்பா. 'தத்துவம்' நம்மள சிக்க வக்கிது. உஷாரா இருக்கணும்.
@ கணேஷ்
எல்லாரும் என்னையே டார்கெட் பண்றீங்க. கூட வந்த ரெண்டு பேரப்பத்தி நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க.
@ நா. மணிவண்ணன்
தமிழ்நாட்ல இருக்கீங்களா மணி?
@ சி.பி. செந்தில்குமார்
தியேட்டர் கேட் சாவியை அந்த பிலாசபிதான் திருடி வச்சிருக்கணும்.
@ ரியாஸ்
ஆமாங்க. பயங்கர விழிப்புணர்வு படம். ஆனா தூக்கம் வந்துச்சி. ஏன்னு தெரியல.
@ ரியாஸ்
ஆமாங்க. பயங்கர விழிப்புணர்வு படம். ஆனா தூக்கம் வந்துச்சி. ஏன்னு தெரியல.
@ ஜீ
ஜீ..ஒரு தரம் பாருங்க. பரவசம் பத்திக்கும்.
@ ரமேஷ்
லத்திகா ஹாஸ்பிடல் c/o பவர் ஸ்டார்!!
வணக்கம் சிவகுமார் சார்!அருமையான விமர்சனம்!படக்கதை மறந்து போய்விடக் கூடாதே என்பதற்காக கூடவே இருவரை அழைத்துச் சென்று,"நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"என்று நிரூபித்து விட்டீர்கள்!கூட வந்தோர் சுய நினைவுடன் தானே இருக்கிறார்கள்?இன்னுமின்னும் இதுபோன்ற சிறப்பான,விழிப்பூட்டும்,கருத்தாழமுள்ள படங்களை இந்தப் புத்தாண்டில் பார்த்து,விமர்சனம் போட வேண்டுகிறேன்!( நாம தப்பிச்சுடலாம்!)
வாங்க யோகா. என்னை சார்னு கூப்பிட வேண்டாம். சிவான்னு சொன்னாலே போதும்.
//இன்னுமின்னும் இதுபோன்ற சிறப்பான,விழிப்பூட்டும்,கருத்தாழமுள்ள படங்களை இந்தப் புத்தாண்டில் பார்த்து,விமர்சனம் போட வேண்டுகிறேன்!( நாம தப்பிச்சுடலாம்!)//
ஹா. ஹா...தங்கள் தேவை எங்கள் சேவை. நீங்கள் இம்மாதிரி அரிதான படங்களை பார்க்காமல் சேர்த்த பணத்தில் 20% கப்பம் கட்டிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-ராமராஜன், பவர் ஸ்டார், STR, TR ரத்த வெறி ரசிகர் மன்ற குடோன்.
Post a Comment