CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 14, 2012

வேட்டைதிருப்தியாக ஒரு கமர்சியல் படத்தை தர திருப்பதி பிரதர்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளனர்  தூத்துக்குடி பிரதர்ஸ்  மாதவன்,ஆர்யா மற்றும் சிஸ்டர்ஸ் சமீரா, அமலா. யுவன்,நா.முத்துகுமார் இணையால் மட்டுமே 'பையா' வில் தப்பிப்பிழைத்த லிங்கு, இம்முறை வேட்டையில் அவர்கள் இருவரிடமும்  வேலை வாங்குவதில் கோட்டை விட்டுவிட்டார். மாதவன், ஆர்யா இருவரும் எனக்குப்பிடித்த க்யூட் ராஸ்கல்ஸ் என்பதால் வேறெதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் பார்க்க முடிவு செய்தேன். எப்படி இருந்தது வேட்டை?

கமர்சியல் படங்கள் என்றாலும் கூட லாஜிக்கே சுத்தமாக இல்லாமல் இருந்தால் எப்படி என்று கேட்டால் ''சும்மா ஜாலியா பாரு மேன். மசாலா படம் தானே'' என்று நண்பர்கள் அட்வைஸ் செய்து வருவதால், கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு பார்க்க வேண்டி இருப்பினும், "அதெல்லாம் பத்தாது. இன்னும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க" என்று  லிங்கு போன்ற இயக்குனர்கள் சொன்னால்..கொஞ்சம் கஷ்டம்தான். ஆர்யா, மாதவன் அண்ணன் தம்பியாக செம கெமிஸ்ட்ரி உடன் கலக்குகிறார்கள். ஆர்யாவை விட மாதவனுக்குதான் நடிக்க வாய்ப்பு அதிகம். பயந்த போலீசாக முதல் பாதியிலும், வெகுண்டெழும் போலீசாக அடுத்த பாதியிலும் அசால்ட் செய்கிறார். 

சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது. ஆனால் இந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி உள்ளார். அமலா பால் ஓவராக நச்சரிக்காமல் அழகாக வந்து போகிறார். மேக் அப் மேனுக்கு என்ன வெறியோ? மேடம் முகத்தில் பவுடர் மற்றும் லிப்ஸ்டிக்கை அதிகமாகவே பூசி பழி வாங்கி இருக்கிறார். தம்பி ராமையா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இரண்டு வில்லன்களும் டம்மி பீசாக வலம் வந்து வழக்கம் போல் தமிழ் சினிமா ரூல்ஸை மீறாமல் ஆர்யா, மாதவனிடம் அடி வாங்குகிறார்கள். நாசர் வந்தார். போனார். 

பாடல்கள் எதுவும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. பப்ப பப்பா பாடலை ஹிட் ஆக்க ரிலீசுக்கு முன்பே அரும்பாடு பட்டாலும் தியேட்டரில் எடுபடவில்லை. க்ரூப்பாக சிலர் காத்து வாங்க எஸ்கேப் ஆயினர். பாடல் காட்சிகளும் சுமாராகத்தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன. 'இந்த கதைக்கு இது போதும்' என்று நீரவ் ஷாவின் கேமரா முடிவு செய்துவிட்டது நன்றாக தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் நீரவ் ட்ரேட்மார்க். 

                                                                           
சமீராவின் ஸ்கூட்டியை ஆர்யா தள்ளிவிடும் காட்சியில் ஒருவரை பார்த்து 'போய்யா சொட்டை' என சமீரா சொல்கிறார்? ஏன் மிஸ்டர் லிங்கு? உங்க தலை கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. அதையும் மனதில் கொண்டு இம்மாதிரி கிண்டல் வசனங்களை தவிர்க்கலாம். அளவுக்கு மீறிய சண்டைக்காட்சிகள் சற்று பொறுமையை சோதிக்கின்றன. அமெரிக்க மாப்பிளை என ஒருவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். அம்மாதிரி கேரக்டர் எல்லாருமே 'டுபுக்கு' இங்கிலீஷில் பேசிக்கொண்டு, கையில் ஒரு கோக் பாட்டிலுடன் இருப்பது போல் காட்டுவது சகிக்கவில்லை. இதெல்லாம் புளிச்சி போன பழங்கால மேட்டர் பாஸ். அமெரிக்க மாப்பிள்ளைகளை விட உள்ளூரில் உடான்ஸ் விடும் பீட்டர்கள் தொல்லைதான் ஜாஸ்தி. அது தெரிந்துதான் இந்த கேரக்டரை வைத்தீர்களா? இல்லை நாங்கள் 'கெக்கே பிக்கே' சிரிப்போம் என்கிற அசாத்திய அசட்டு நம்பிக்கையா? திருப்பதி பாலாஜிக்கே வெளிச்சம். 

கதை, திரைக்கதை என்று ஏதோ சொல்வார்களே அதற்கெல்லாம் கூல்ட்ரிங்க்ஸ் தந்து ஓரமாக உட்கார வைத்துள்ளனர். கோ, சிங்கம் போன்ற படங்களின் இயக்குனர்கள் மக்களின் பல்ஸை சரியாக புரிந்து கொண்டு சிக்சர் அடித்ததுபோல் என்னால் முடியாது. குறைந்த பட்சம் ஒரே பந்தில் பவுண்டரியாக விளாசாமல் ஓடி ஓடி எடுக்கிறேன் என்று மட்டும் நிரூபித்துள்ளார் லிங்கு. தட்டுத்தடுமாறி போர் அடிக்கவிடாமல் படத்தை ஒருவழியாக முடித்திருக்கின்றனர்.  நண்பனின் புயல் வேக வசூல் வேட்டைக்கு முன்பு இந்த வேட்டை அணி அதிகமாக சிரமப்பட்டே கரையேற வேண்டி இருக்கும் என தெரிகிறது. நாளை தலைவர் ராமராஜனின் மேதை வேறு ரிலீஸ் ஆகிறது...வேட்டைக்காரர்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். 

வேட்டை - ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்!!

 ....................................................................


..............................
My other site:
...............................


 
                                                                        

36 comments:

CS. Mohan Kumar said...

படம் அப்போ சுமார் தானா??

லிங்கு ஜெயிக்கிறாரோ இல்லையோ நீங்க ஜெயிசிட்டீங்கன்னு நினைக்கிறேன் (முதல் விமர்சனம் போடுறதில்)

CS. Mohan Kumar said...

ஆன்லைனில் 25 பேர் படிக்கிறாங்க !! சிவா சார் வணக்கம் சார் !!

CS. Mohan Kumar said...

// சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது. ஆனால் இந்த கேரக்டருக்கு சரியாக பொருந்தி உள்ளார். //

நம்ப முடிய வில்லை !! இல்லை !! இல்லை !!

CS. Mohan Kumar said...

//கதை, திரைக்கதை என்று ஏதோ சொல்வார்களே அதற்கெல்லாம் கூல்ட்ரிங்க்ஸ் தந்து ஓரமாக உட்கார வைத்துள்ளனர். //
பையா மட்டும் என்னவாம் ? பாட்டுக்கும் ஹீரோ ஹீரோயினுக்கும் மட்டுமே கண்ணா பின்னா என ஓடிய படம் அது !

CS. Mohan Kumar said...

// ஏன் மிஸ்டர் லிங்கு? உங்க தலை கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. அதையும் மனதில் கொண்டு இம்மாதிரி கிண்டல் வசனங்களை தவிர்க்கலாம். //

இந்த மாதிரி கருத்துகளுக்காக தான் நீங்க வக்கீலுக்கு படிச்சிருக்கலாம் என நான் சொல்றது

***
நிஜமா மேதை பாக்க போறீங்களா? :)))

***
லாஸ்ட் மேட்டர், உங்களுக்கு கோபம் வரும் இருந்தாலும் சொல்றேன். இவ்வளவு சீக்கிரம் விமர்சனம் போடும் போது தமிழ் மணத்தில் இணைத்திருந்தால் இன்னும் நிறைய பேர் வாசிச்சிருப்பாங்க. தின்க் பண்ணுங்க

ஹாப்பி பொங்கல் !! Bye Bye !!

Unknown said...

//சிஸ்டர்ஸ் சமீரா, அமலா. //
பெண்ணாதிக்கவாதி சிவக்குமார் ஒழிக!!

Unknown said...

//அண்ணன் தம்பியாக செம கெமிஸ்ட்ரி உடன் கலக்குகிறார்கள்.//
என்னங்க...இது...நியாயமா?

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

மாலை புத்தக கண்காட்சி செல்வதால் காலையில் படம் பார்த்தேன். சமீரா மோசமாக நடிக்கவில்லை. ஓக்கே தான். பையா பாடல்கள் மட்டுமே பிடித்து இருந்தது. மற்றபடி அவ்வ்வ்!

Unknown said...

//சமீரா இருக்கிறார் என்றதுமே மனது பகீர் என்றது.//

சிவா.. சமீரா...அவ்வளவு கொடூரமாவா இருக்காங்க...?

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

ஆன்லைனில் படிப்பவர்களுக்கு எம்மால் ஆன துரித சேவை. வக்கீலுக்கு படிக்க கண்டிப்பா உங்களிடம்தான் சிஷ்யனாக சேர்வேன். நன்றி சார். மேதை அநேகமாக பார்க்கும் வாய்ப்பு உள்ளது. ஒரு பய புள்ள கத்திய வச்சி மிரட்டி படம் பாக்க கூப்புடுது.

Unknown said...

//'போய்யா சொட்டை' என சமீரா சொல்கிறார்? ஏன் மிஸ்டர் லிங்கு? உங்க தலை கிட்டத்தட்ட அந்த நிலைக்கு வந்துவிட்டது. அதையும் மனதில் கொண்டு இம்மாதிரி கிண்டல் வசனங்களை தவிர்க்கலாம்.//
ஆமாமாமா எங்க சிவாக்கும் லைட்டா முடி விழுது லிங்கு பார்த்துயா சிவா ரொம்ப பொல்லாத ஆளு ஆங்!

Unknown said...

//அமெரிக்க மாப்பிளை என ஒருவரை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர். அம்மாதிரி கேரக்டர் எல்லாருமே 'டுபுக்கு' இங்கிலீஷில் பேசிக்கொண்டு, கையில் ஒரு கோக் பாட்டிலுடன் இருப்பது போல் காட்டுவது சகிக்கவில்லை.//
நானும் பார்கிறேன் சிவா எல்லா படத்திலும் இந்த கொடுமைதான் என் நண்பன் அமெரிக்காவுலதான் இருக்கான் இங்க வந்தா படுலோக்கலா மாறிடுறான்...அய்யா எயக்குனருகளே! ரூட்டை மாற்றுங்க...

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

நீங்கள் சொல்வது புரிகிறது சார். கோபம் எல்லாம் எதுவும் இல்லை எனக்கு. சினிமா மட்டுமல்ல. அது தவிர்த்து வேறு சில ஆக்கபூர்வ பதிவுகள் அனைத்து திரட்டியிலும் பதிவர்களால் இணைக்கப்பட்டால் அது நல்ல விஷயம்தான். ஆனால்...தமிழ்மணம்...முந்தைய நிகழ்வுகள்...மறுபரிசீலனைக்கான வாய்ப்பே இல்லை.

Unknown said...

//நாளை தலைவர் ராமராஜனின் மேதை வேறு ரிலீஸ் ஆகிறது...//
எல்லாரும் ஆப்பிரிக்கா ஓடச்சொல்றீங்களா சிவா..!எச்சரிக்கைக்கு நன்றி!

Unknown said...

//வேட்டை - ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்!!//
ஆங் எங்களுக்கும்தான் விமர்சனம் திருப்தி பிரதர்! மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிவா..!? ஹிஹி

! சிவகுமார் ! said...

@ வீடு சுரேஷ்

அங்கக்குறைபாடுகள் உள்ளவர்களை பகடி செய்து லிங்கு போன்ற பிரபல இயக்குனர்கள் இன்றைய காலகட்டத்திலும் வசனம்
வைப்பது எனக்கு பிடிக்கவில்லை. அதான்.

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார், சுரேஷ்

இருவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்!! :)

ILA (a) இளா said...

ஓரளவுக்குத்தானா? $34 மீதி. நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...

// வேட்டை - ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்!! //

சரி ... பார்க்க ட்ரை பண்ணுறேன்.

சுடச் சுட மேதை விமர்சனம் வேணும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வேட்டையும் தேறிடுச்சோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சீக்கிரமே மேதை விமர்சனத்தையும் போடவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடுத்து ஆனந்த தொல்லையும் உண்டுதானே?

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

பாஸ்மார்க் கமர்சியல் :)

! சிவகுமார் ! said...

@ இளா

அண்ணன் தம்பி ரகளை மட்டுமே அட்டகாசம். மற்றபடி சுமார்தான்.

! சிவகுமார் ! said...

@ ஹாலிவுட் ரசிகன்

மேதை விமர்சனம் போட்ருவோம்.

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

பார்டர் மார்க்ல பாஸ் ஆயிடும் போல.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சீக்கிரமே மேதை விமர்சனத்தையும் போடவும்!//

என்ன ஒரு வில்லாதி வில்லத்தனம்..

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடுத்து ஆனந்த தொல்லையும் உண்டுதானே?//

லிஸ்ட்டை இத்தோட நிறுத்துங்க தெய்வமே..:(

நாய் நக்ஸ் said...

சாம் அண்டர்சனின் "யாருக்கு யாரோ"--- படத்துக்கு விமர்சனம்...வேண்டும்...ப்ளீஸ்...
ப்ளீஸ்....

Yoga.S. said...

வணக்கம் சிவகுமார் சார்!இதுவும் ஒருவகை விமர்சனம்.கோபித்துக் கொள்ளாதீர்கள்!ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை,விடுங்கள்!பார்ப்போம்!(படத்தை)

Philosophy Prabhakaran said...

// சிஸ்டர்ஸ் சமீரா, அமலா //

ம்ஹூம்... நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க...

Unknown said...

நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
நண்பர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழர் வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கையோடு..

பால கணேஷ் said...

மேதை விமர்சனம் போட்ருவோமா..? ஐயோ பாவம்ப்பா... நல்லா இருந்த புள்ள இப்படி ஆயிடுச்சே... சிவா, உங்களுக்காக ஆண்டவனை பிரார்த்தனை பண்றேன்...

சி.பி.செந்தில்குமார் said...

>>நண்பனின் புயல் வேக வசூல் வேட்டைக்கு முன்பு இந்த வேட்டை அணி அதிகமாக சிரமப்பட்டே கரையேற வேண்டி இருக்கும் என தெரிகிறது

உங்கள் கணிப்பு சரியா என்பதை 25 நாட்கள் கழித்து பார்க்கவும்

ILA (a) இளா said...

//ஓரளவுக்கு திருப்தி பிரதர்ஸ்//
படுதிராபையான படம் பாஸ்

Related Posts Plugin for WordPress, Blogger...