CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 3, 2012

வெகுஜன விமர்சனம்


குறிப்பு: இப்பதிவை படிக்க கண்டிப்பாக 1 நிமிடம் 30 நொடிகளுக்கு மேலாகும். முதலில் இதைப்படித்து விட்டு வரவும்: விமர்சனம்

                                    "சைத்தான் கா பச்சா..பதிவாடா எழுதறீங்க.."  

வணக்கம் கே.ஆர்.பி. அண்ணே


தோழர் யுவகிருஷ்ணா ஒரு பதிவை ஒன்றரை நிமிடத்திற்குள் படிக்குமாறு எழுத வேண்டுமெனக்கூறியதை தங்கள் பதிவில் கண்டேன். எந்திரன் 'சிட்டி'யை தவிர யாராக இருப்பினும் இப்பதிவுகளை படித்து முடிக்க குறைந்தது 1.31 நிமிடமாவது ஆகுமென்பது எனது கருத்து: துள்ளுவதோ இளமைங்கோ, ரோசாவின் நினைவுகளுங்கோ

சினிமா விமர்சனம் எழுதுவதிலாவது தான் பார்த்த மொக்கைப்படத்தை பலபேர்  பார்க்காமல் தப்பிக்கட்டும்  எனும் சமூக நல்லெண்ணம் மேலோங்கியுள்ளது. சிறு சேமிப்பிற்கான சீரிய தொண்டல்லவோ அது. படைப்பாளி பதிவர்களின் தர்க்க பலனாக 2 காஞ்ச வெங்காயம் கூட வாங்க முடிந்ததில்லை. 

சூர மொக்கை போட்டு ஹிட்ஸ் போதையில் இருப்பவர்களை விட்டு விடுவோம். ஆனால் தன்னறிவுக்கு எட்டியதை சுமாரான எழுத்து நடையில் எழுதுவோர் பலர்தான் எதிர்விமர்சனத்தை ஏற்கிறார்கள். படைப்பாளிகளின்  வலைப்பூவில் புதியவர்கள் எதிர் கேள்வி வைத்தால் ஒன்று நீக்கப்படுகின்றன அல்லது பதிலே கிடைப்பதில்லை. அதிகபட்சம் வாயை அடக்க பார்க்கின்றனர். சிலர் மட்டுமே விதிவிலக்கு. எங்களுக்கு அவதானிப்பு, அடிவருடி, ரௌத்திரம் போன்ற சொல்லாட்டம் தெரியாது. 'நெனச்சேன், ஜால்ரா, பொங்காத' தான்.

'வாசிங்கடா, வாசிங்கடா' என்று ஒளிவட்ட பதிவர்கள் அடிக்கடி 'ஸ்ருதி' வாசிப்பதை பார்த்து வருகிறோம். (உங்கள சொல்லல. நீங்கள் இருதரப்பினரிடமும் நன்றாக பழகி வருபவர் என்பதால் என்னத்த சொல்ல). எமக்கு கி.ரா, ஜெமோ, பாரா படைப்புகளை படிக்கக்கூடாது என்ற எண்ணம் என்றும் இருந்ததில்லை. காரணம்: இளையோர் பலர் 9-5 வேலை பார்ப்பதில்லை, சொந்த யாவாரம் செய்துகொண்டு கடையில் அமர்ந்து வாசிப்பதில்லை, பத்திரிகையில் வேலை செய்வதில்லை,பாட்டன் சொத்தில் பகோடா சாப்பிடுபவர்களுமில்லை. ஐந்தாண்டுக்கொரு முறை வேலைவாய்ப்பிற்கான போட்டி கழுத்தை முன்பைவிட வேகமாக நெரித்து கொண்டிருப்பதாலும், விலைவாசி மலேசியா ட்வின் டவரை க்ராஸ் செய்து பறப்பதாலும் பிரபல காவியங்களை ஈசி சேரில் அமரும் காலத்தில்தான் படிக்க முடியும்.

                                               Recession Hits Hard. Job first. Elakkiyam Next.
                                       
                                                     ரொம்ப 'வாசிச்சிட்ட'.. கெளம்பு!      

வாடகை வீட்டில் ஒத்த ரூமில் குத்த வைத்து இருப்பவன் தினத்தந்தி பேப்பரை மாதம் ஒரு முறை சேர்த்து வைக்கவே இடமின்றி அல்லாடுகையில், நீங்கள் சொன்ன செங்கல் சைஸ் புத்தகங்களை அடுக்கி வைப்பது சாத்தியமே  இல்லை என்பதுதான் நிதர்சனம். 

சான்றோர் ஷகிலா புராணம் எழுதினால் அது க்ளாஸ்/யதார்த்தம். அதையே நாங்க எழுதுனா பிட்டுப்பட விமர்சனம். நல்லா இருக்கு ஒங்க நியாயம். கூகிள் பஸ்ஸில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளை 'கீழ்'த்தரமாக விமர்சித்து so called சான்றோர்கள் அடிக்கடி கும்மி அடித்தது போல் எம்மைப்போன்ற சுமாரான/மொக்கை பதிவர்கள் பெரும்பாலும் செய்ததே இல்லை. கஜுரஹோ கஜ கஜா சிலைகளை சீனியர்கள்/இலக்கிய ரசனை கொண்டவர்கள் குறுகுறுவென பார்த்தால் அது கலைப்பார்வையாம். சாமான்யன் பார்த்தால் காமப்பார்வையாம். இந்த அநியாயத்த தட்டி கேக்க யாருமே இல்லையா? 

நகைச்சுவையாக எழுதி மொக்கை போடுபவர்கள் எல்லாம் வாசிப்புத்திறன் அறவே இல்லாதவர்கள் என்றோ, பண்புடன் பழகத்தெரியாதவர்கள் என்றோ எண்ணினால் அந்த எண்ணத்தை ஞானபீட பதிவர்கள்(நீங்க இல்ல) மாற்றிக்கொள்ள வேண்டும். மனிதநேயமும், தேர்ந்த புத்தக வாசிப்பும் கொண்ட நகைச்சுவை/மொக்கை/கும்மி பதிவர்கள் சிலர் பற்றி எனக்கு போதிய பரிச்சயமுண்டு. பதிவை வைத்து பதிவரை எடைபோட்டால்...ஒரே சிப்பு சிப்பா வருதுண்ணே! யோவ் கூகிள் ஓனருங்களே, நீங்க கூட கேக்காத கேள்வியை இந்த பிரபல பதிவருங்க கேட்டு நச்சு பண்றாங்க. என்னான்னு கேளுங்க.

                                               gOOgle owners: Larry page, Sergey Brin
                           "KRP, உமக்கேன் இந்த அக்கறை..எமக்கே இல்லாத அக்கறை"          

சுமாராக மொக்கை போடும் பதிவர்களே, சாதா வாசிப்புத்திறன் கொண்ட தோஸ்துகளே...யூ கண்டினியூ. அநியாயத்துக்கு நல்லா எழுத ஆரம்பிச்சிட்டா அப்பறம் மண்டைல கர்வ போதை வரலாம். பொறவால தனித்தனி தீவாத்தான் நிக்கணும். சாமான்ய நண்பர்களுடன் கூடுவோம். நட்பு வட்டத்தை கூட்டுவோம்!

மிஸ்டர். கே.ஆர்.பி., போன வருஷம் புத்தக கண்காட்சில வாங்குன நெறைய பொஸ்தகத்த இன்னும் படிக்கலைன்னு சொன்னவரு நீங்க. அதுக்குள்ள அடுத்த கண்காட்சி வந்துடுச்சி. எங்கள மட்டும் 'படிங்கடா பசங்களா' ன்னு சொல்றீங்க. குசும்பு ஜாஸ்திண்ணே!
................................................................................

.....................................................
எஸ்.ரா நல்லவரா? கெட்டவரா? தயவு செஞ்சி யாராச்சும் சொல்லுங்க. கே.ஆர்பி., யுவகிருஷ்ணா ரெண்டு பேரும் கொளப்பி அடிக்கறாங்க.   
......................................................
..........................
My other site:
..........................

.....................................................
சமீபத்தில் சிக்கியது:

......................................................

.......................................................
அண்மையில் துவக்கியது:

அண்மைத்தமிழன் க்ரூப் - துவக்க விழா + பேட்டி!
.......................................................59 comments:

அஞ்சா சிங்கம் said...

ஒய் திஸ் கொலைவெறி ...சிவா?
எல்லாருக்கும் புத்தக கண்காட்சியில் இருக்கு ....
இலக்கிய வியாதிகள் எல்லாம் ஏதாவது லேகியம் சாப்டிட்டு வாங்க ...
அண்ணன் இப்போ புல் பார்முல இருக்காரு ஜாக்கிரதை ..........

Unknown said...

நாங்கல்லாம் அப்பவே அப்படி...அப்போ இப்போ...படித்தால் மட்டும் போதுமா ஹிஹி!

! சிவகுமார் ! said...

போன பொஸ்தக கண்காட்சில பிரபல எழுத்தாளர்கள்(பிரபலம்னா பதிவர்கள் என்று மட்டும் பொருளில்லை) புல்லா போட்டுட்டு குறுக்க மறுக்க நடமாடினாங்க. லேக்கியம் சாப்புடாட்டியும்...கொறஞ்ச பட்சம் மௌத் பிரெஷ்னரை போட்டுட்டு வந்தாதான் கிட்டயே நிக்க முடியும். பேசறது அப்பறம்.

! சிவகுமார் ! said...

@ விக்கி

உங்க தொண்டு தொடரட்டும் மாம்ஸ்!

Unknown said...

ஜனங்களே ஒங்கள திருத்துறது என் வேலை இல்லை!

அதனாலே என்னை நானே திருத்திக்கிறேன்!!

டேய், இனி நீ ஏதாச்சும் சொல்லுவியா! சொல்லுவியா!!(இதுகூட என்னை நானே சொல்லிகிட்டது)...

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

” ! சிவகுமார் ! said...
@ விக்கி

உங்க தொண்டு தொடரட்டும் மாம்ஸ்!”

>>>>

அய்யயோ என்னய திட்டிப்புட்டாப்ல ஏன்யா ஏன்!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
இரண்டு பதிவுகளையும் படித்தேன்.

ஆனால் விமர்சனங்களுக்காக நட்புக்களை ஒதுக்கி விட நினைப்பவர்கள் குறுகிய மன்ப்பான்மை கொண்டவர்கள் அல்லவா?

செந்தில் அண்ணர் சொல்லியிருப்பது போன்று விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எம்மில் பலருக்கு இல்லையே.
அப்படியாயின் சும்மா போலிப் புகழ்சிக்காக பதிவுகளை எழுதுவதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா நண்பா?

நிரூபன் said...

உங்கள் கட்டுரையில் உள்ள கருத்துக்கள், வாசிப்பு பழக்கம் தொடர்பான விடயங்களை வரவேற்கிறேன். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாது புகழ் வார்த்தைகளை மாத்திரம் ஒரு படைப்பாளி நம்பி நட்புக்களைத் தொடர நினைப்பது ஆரோக்கியமான நட்பிற்கு எடுத்துக்காட்டாக அமையாது நண்பா.
நண்பன் தோள் கொடுப்பவனாகவும், தவறுகள் வரும் போது தோளில் தட்டிச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஜனங்களே ஒங்கள திருத்துறது என் வேலை இல்லை!

அதனாலே என்னை நானே திருத்திக்கிறேன்!!//

ஜெய் போலேநாத்!

! சிவகுமார் ! said...

// விக்கி

அய்யயோ என்னய திட்டிப்புட்டாப்ல ஏன்யா ஏன்!//

இது உங்கள் அவதானிப்பு!

Anonymous said...

வரிக்கு வரி உடன்படுகிறேன் உடன்படுகிறேன் உடன்படுகிறேன்

! சிவகுமார் ! said...

//நிரூபன் said...
வணக்கம் நண்பா,
இரண்டு பதிவுகளையும் படித்தேன்.

ஆனால் விமர்சனங்களுக்காக நட்புக்களை ஒதுக்கி விட நினைப்பவர்கள் குறுகிய மன்ப்பான்மை கொண்டவர்கள் அல்லவா?

செந்தில் அண்ணர் சொல்லியிருப்பது போன்று விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எம்மில் பலருக்கு இல்லையே.
அப்படியாயின் சும்மா போலிப் புகழ்சிக்காக பதிவுகளை எழுதுவதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா நண்பா?//

போலி புகழ்ச்சி, சூர மொக்கை, ஆபாசம், வெட்டு ஒட்டு(காப்பி பேஸ்ட்) போன்ற ஆட்டங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்களை ஆதரித்து இப்பதிவை எழுதவில்லை நிரூபன். அதை பதிவில் குறிப்பிட்டும் உள்ளேன்.

தொண்ணூறுகளின் துவக்கம் வரை இருந்தது போல் காலை வேலை, மாலை பொழுதுபோக்கு, இரவு உறக்கம் எனும் நிலை தற்போது நகரங்களில் வெகுவாக மாறிவிட்டது. கிராமத்து இளைஞர்களும் நகரத்தை நோக்கி மிக அதிக அளவில் படையெடுத்து உள்ளனர். வேலை நிரந்தரம் என்பதே நிரந்தரம் இல்லாமல் போய்விட்டது. ஆண்டுக்கொரு முறையேனும் வேலைக்கு தேவைப்படும் அறிவை வளர்த்துகொண்டால்தான் சாமான்ய வர்க்க இளைஞன் காலத்தை நகர்த்த முடியும். அதற்கான புத்தக வாசிப்பே அவனுக்கு பிரதானம் ஆகும்.

இப்படிப்பட்ட சூழலில் ஆழ்ந்த இலக்கிய வாசிப்பிற்கான நேரம் வெகுவாக குறைந்து விட்டது என்பதே உண்மை.

// எமக்கு கி.ரா, ஜெமோ, பாரா படைப்புகளை படிக்கக்கூடாது என்ற எண்ணம் என்றும் இருந்ததில்லை//

ஓரளவுக்கு யோசித்தே பதிவிட்டுள்ளேன் நிரூபன்!

! சிவகுமார் ! said...

//நிரூபன் said...
உங்கள் கட்டுரையில் உள்ள கருத்துக்கள், வாசிப்பு பழக்கம் தொடர்பான விடயங்களை வரவேற்கிறேன். ஆனால் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாது புகழ் வார்த்தைகளை மாத்திரம் ஒரு படைப்பாளி நம்பி நட்புக்களைத் தொடர நினைப்பது ஆரோக்கியமான நட்பிற்கு எடுத்துக்காட்டாக அமையாது நண்பா.
நண்பன் தோள் கொடுப்பவனாகவும், தவறுகள் வரும் போது தோளில் தட்டிச் சொல்பவனாகவும் இருக்க வேண்டும் அல்லவா?//

ஒரு சில எதிர்பதிவுகள் எழுதுகையில் முதலில் எழுதியவருடன் அலைவரிசை ஒத்துப்போவதை மனதில் கொண்டே எழுதுகிறேன். கே.ஆர்.பி அண்ணனும் அந்த 96.3 ட்யூனில் எம்முடன் இருப்பவர்தான்.

இவ்வரிகளை மறுமுறை படிக்கவும்:

// படைப்பாளிகளின் வலைப்பூவில் புதியவர்கள் எதிர் கேள்வி வைத்தால் ஒன்று நீக்கப்படுகின்றன அல்லது பதிலே கிடைப்பதில்லை. அதிகபட்சம் வாயை அடக்க பார்க்கின்றனர். சிலர் மட்டுமே விதிவிலக்கு.//

இது எந்த அளவிற்கு உண்மை என்பது மனசாட்சி உள்ளவர்களுக்கு தெரியும். மற்றபடி ஆரோக்யமான விமர்சனங்களை வைப்பவர்களுக்கு நான் பதில் சொல்லியே வருகிறேன். ஒருவேளை நான் சொல்லும் பதில் எனக்கே படுமொக்கையாக தெரிந்தால் அதை ஒப்புக்கொண்டு எதிரில் இருப்பவரிடம் விளக்கமும் கேட்டுப்பெறுகிறேன்.

வருகைக்கு நன்றி நிரூபன்!!

! சிவகுமார் ! said...

@ எனக்கு பிடித்தவை

நன்றி நண்பரே!

நிரூபன் said...

// படைப்பாளிகளின் வலைப்பூவில் புதியவர்கள் எதிர் கேள்வி வைத்தால் ஒன்று நீக்கப்படுகின்றன அல்லது பதிலே கிடைப்பதில்லை. அதிகபட்சம் வாயை அடக்க பார்க்கின்றனர். சிலர் மட்டுமே விதிவிலக்கு.///

இப்படிப் பல இடத்தில் நானும் வாயைக் கொடுத்து வாங்கி கட்டியுள்ளேன் நண்பா,
சிலர் அதன் பிறகு என்னை ஓர் விரோதியாக, என்னுடன் நட்புடன் பழகியவர்கள் எல்லாம் வெறுப்புடன் கூடப் பார்த்திருக்கிறார்கள். இது என் அனுபவமும் கூட.

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

ஹா.. ஹா... சேம் ப்ளட்!

நிரூபன் said...

இன்றைய சூழலில் புத்தக வாசிப்பு பழக்கம் என்பது தொழில்நுட்ப விருத்தியின் பயனால் எம்மை விட்டு மெது மெதுவாக அகன்று கொண்டிருக்கிறது என்பது உண்மை தான்.

நிரூபன் said...

நண்பா தங்களின் ஒரு சில கருத்துக்களைத் தவறாகப் புரிந்து கொண்டு பின்னூட்டி விட்டேன்.
மன்னிக்கவும்.

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

நன்றி நிரூபன். இவ்வகைப்பதிவிட முன்பே யோசித்து இருந்தேன். சமயம் பார்த்து கே.ஆர்.பி. பதிவிட்டார். அதான் சிங்கத்தை லேசாக சுரண்டி பார்த்தேன். :-)

ஆமினா said...

இதை படித்து முடிக்க சரியாக 1 நிமிடம் 31 வினாடிகள் ஆனது. //

எனக்கு மட்டும் ஏன் அந்த பதிவு படிக்க 3 நிமிஷம் தேவைபட்டுச்சு :-( எழுத்து கூட்டி வாசிச்சா அப்படிதான் இருக்கும் ஹி...ஹி...ஹி...)

உங்க இந்த பதிவு படிக்க 5 நிமிஷம் ஆய்டுச்சு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஆமினா said...

பம்பரத்தை விட வேகமாக சுழலும் இயந்தரங்களாய் நம் வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்ட பின் நிச்சயமாக வாசிப்பு பழக்கமும் எட்டா தூரத்தில் போய்விட்டது :-(

ஆமினா said...

//அதான் சிங்கத்தை லேசாக சுரண்டி பார்த்தேன். :-)//


:-))

சம்பத்குமார் said...

//இப்பதிவை படிக்க கண்டிப்பாக 1 நிமிடம் 30 நொடிகளுக்கு மேலாகும். முதலில் இதைப்படித்து விட்டு வரவும்: விமர்சனம் ///

சாரி சிவா..

படிக்க 2 நிமிஷமாயிடுச்சு ஹி ஹி ஹி

சம்பத்குமார் said...

//மனிதநேயமும், தேர்ந்த புத்தக வாசிப்பும் கொண்ட நகைச்சுவை/மொக்கை/கும்மி பதிவர்கள் சிலர் பற்றி எனக்கு போதிய பரிச்சயமுண்டு. பதிவை வைத்து பதிவரை எடைபோட்டால்...///

கரெக்ட சிவா..சொல்ல வந்த விசயத்தை சரியாக ஏன் பாமரனுக்கும் புரியும் படி சொல்லும் பதிவர்களும் மிகச்சிறந்தவர்களே..என்ன ஒண்ணு அவங்களுக்கான அங்கீகாரம் வெறும் ஹிட்ஸ் மட்டுமே எனபது என் எண்ணம்

உங்கள் எண்ணங்களோடு நானும் ஒத்துப்போகிறேன்

ஹாலிவுட்ரசிகன் said...

நான் இப்போதான் பதிவுலகத்திற்கு என்ட்ரீனால நோ எக்ஸ்பீரியன்ஸ் அன்ட் காமென்ட்ஸ். இன்னும் யாரிடமும் என் மோசமான எழுத்திற்காக திட்டு வாங்கவில்லை.

ஆனால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களால் மட்டுமே நன்றாக எழுதமுடியும் என்ற கருத்து தவறு. பதிவு எழுத கற்பனைவளமே மிக முக்கியம் (எனக்கு அது சற்று மிஸிங்) சிலவேளைகளில் தொடர்ந்து வாசிக்கும் போது ஒரு எழுத்தாளரின் நடை நம் எழுத்திலும் நம்மையறியாது புகுந்துவிடுவது வழக்கம். ஆகையால் நமக்கு என்று ஒரு ஸ்டைல் இருக்காது.

ஆனால் நேரம் கிடைத்தால் வாசிப்பதில் நன்மையே தவிர ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை. இங்கு அதற்கு நேரம் இல்லை என்பதே முக்கியப் பிரச்சினை. (இது மப்புல எழுதியதால் உளறியது போல் இருக்கும். கணக்குல எடுத்துக்காதீங்க)

ரஹீம் கஸ்ஸாலி said...

: துள்ளுவதோ இளமைங்கோ, ரோசாவின் நினைவுகளுங்கோ...
இந்த சுட்டி மூலம் போய் படிச்சா....ஒன்றரை நிமிடத்தில் பாதிதான் படிக்க முடியுது.
ஒருவேளை நம்மதான் ஒன்றரை நிமிடத்தில் படிப்பது போல எழுதனும்ம்போல...

ரஹீம் கஸ்ஸாலி said...

ஒருவேளை நம்மைப்போல சிறு சிறு பூச்சிகள்தான் ஒன்றரை நிமிடத்தில் எழுதவேண்டும் போல....அவர்களைப்போல டைனோசர்கள் பத்தி பத்தியாய் எழுதலாம் என்று சொல்லுகிறர்களோ....

சென்னை பித்தன் said...

நல்லாவே சுரண்டறீங்க!

கோகுல் said...

கோகுல் கூறியது...

வாசிப்பு எழுத்துநடை மேம்படுத்தும் தான்.
இதிலிருக்கும் இன்னொரு பிரச்சினை என்னென்னா படிக்கறவங்களுக்கும் அந்த வாசிப்புப்பழக்கம் இருந்தாகாணும்,இல்லேன்னா கொஞ்சம் பிரச்சினைதான்.நாம ஒண்ணு சொல்லப்போய்,படிக்கறவங்க ஒண்ணு புரிஞ்சுக்கப்போய் .......//

இது நான் அங்கே போட்ட கமென்ட்.,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே எலக்கியம்னா என்னண்ணே, அத நாம ஏண்ணே படிக்கோனும்.....?

Yoga.S. said...

வணக்கùம சிவா சார்!எனக்கு மூணு நிமிஷம் ஆச்சு!ஏன்னா,புரிஞ்சுகிட்டு படிக்கணும் போல தோணிச்சு.ரிசல்ட்; "நச்"சுன்னு இருந்திச்சு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அஞ்சா சிங்கம் said...
ஒய் திஸ் கொலைவெறி ...சிவா?
எல்லாருக்கும் புத்தக கண்காட்சியில் இருக்கு ....
இலக்கிய வியாதிகள் எல்லாம் ஏதாவது லேகியம் சாப்டிட்டு வாங்க ...
அண்ணன் இப்போ புல் பார்முல இருக்காரு ஜாக்கிரதை ..........////

அண்ணே இந்த சீசன்ல லேகிய யாவாரம் ஆரம்பிச்சிட்டீங்களாண்ணே? இப்ப எந்த ஊரு லாட்ஜ்ல இருக்கீங்கண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கு பிடித்தவை said...
வரிக்கு வரி உடன்படுகிறேன் உடன்படுகிறேன் உடன்படுகிறேன்////

ஏன் பாராவுக்கு பாரா உடன்பட்டா ஒத்துக்க மாட்டாரா ப்ளாக் ஓனரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அதான் சிங்கத்தை லேசாக சுரண்டி பார்த்தேன். :-)/////

அவர் என்ன லாட்டரி சீட்டா?

Philosophy Prabhakaran said...

அட சிங்கம் இங்க பதில் சொல்லியிருக்கா... தெரியாம திட்டிபுட்டேனே....

Philosophy Prabhakaran said...

// "சைத்தான் கா பச்சா..பதிவாடா எழுதறீங்க.." //

பி.கு: கே.ஆர்.பி ஆன்மிகவாதியா இருந்தப்ப எடுத்த புகைப்படம்...

Philosophy Prabhakaran said...

// சான்றோர் ஷகிலா புராணம் எழுதினால் அது க்ளாஸ்/யதார்த்தம். அதையே நாங்க எழுதுனா பிட்டுப்பட விமர்சனம். நல்லா இருக்கு ஒங்க நியாயம். //

சவுக்கடி...

உணவு உலகம் said...

இயந்திர உலகம், இலக்கியங்கள் படிக்க அனுமதிப்பதில்லை. நாமும் இயந்திரத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க வேகம் எடுக்க வேண்டியுள்ளது.நல்ல கருத்துப்பகிர்வு.

! சிவகுமார் ! said...

@ ஆமினா

எழுத்து கூட்டாம ரெண்டு பேராவை விட்டு வாசிச்சாலும் அதிக நேரம் ஆகுது. :)

! சிவகுமார் ! said...

@ சம்பத்

வெள்ளை ரோஜா சம்பத் வாழ்க!

! சிவகுமார் ! said...

@ ஹாலிவுட் ரசிகன்

//இன்னும் யாரிடமும் என் மோசமான எழுத்திற்காக திட்டு வாங்கவில்லை.//

நல்லா எழுதுற நாலு பேரை திட்டுங்க..அப்பறம் உங்கள திட்ட தினுசு தினுசா வருவாங்க. :)

! சிவகுமார் ! said...

@ கஸாலி

வாங்க கஸாலி. அதுவும் சரிதான். ஜுராசிக் பார்க் ரேஞ்சுக்கு நம்பளால எழுத முடியாது.

! சிவகுமார் ! said...

@ சென்னைப்பித்தன்

அரசியல்ல சேரப்போறேன் சார்.

! சிவகுமார் ! said...

@ யோகா

நன்றி நண்பரே.

! சிவகுமார் ! said...

@ கோகுல்

படிச்சேன் தம்பி. உங்க ஊரு எப்படி இருக்கு?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே எலக்கியம்னா என்னண்ணே, அத நாம ஏண்ணே படிக்கோனும்.....?//

அது என்னன்னு வர்ற புத்தக கண்காட்சில தேடியே ஆகணும். நம்ம படிச்சா தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் தெரியும். பவர் கட் சமயத்துல யூஸ் ஆகும். :)

! சிவகுமார் ! said...

/பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அஞ்சா சிங்கம் said...
ஒய் திஸ் கொலைவெறி ...சிவா?
எல்லாருக்கும் புத்தக கண்காட்சியில் இருக்கு ....
இலக்கிய வியாதிகள் எல்லாம் ஏதாவது லேகியம் சாப்டிட்டு வாங்க ...
அண்ணன் இப்போ புல் பார்முல இருக்காரு ஜாக்கிரதை ..........////

அண்ணே இந்த சீசன்ல லேகிய யாவாரம் ஆரம்பிச்சிட்டீங்களாண்ணே? இப்ப எந்த ஊரு லாட்ஜ்ல இருக்கீங்கண்ணே?//

அஞ்சாசிங்கம் லேக்கிய ஸ்டால் விரைவில் துவக்கம்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எனக்கு பிடித்தவை said...
வரிக்கு வரி உடன்படுகிறேன் உடன்படுகிறேன் உடன்படுகிறேன்////

ஏன் பாராவுக்கு பாரா உடன்பட்டா ஒத்துக்க மாட்டாரா ப்ளாக் ஓனரு?//

பார்ரா....

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////அதான் சிங்கத்தை லேசாக சுரண்டி பார்த்தேன். :-)/////

அவர் என்ன லாட்டரி சீட்டா?//

ஸ்ஸ்ஸ்..யப்பா..

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
அட சிங்கம் இங்க பதில் சொல்லியிருக்கா... தெரியாம திட்டிபுட்டேனே....//அநேகமா பொங்கல் அன்னைக்கு உமக்கு பொங்கல் கன்பர்ம்!!

! சிவகுமார் ! said...

@ உணவு நெல்லை

நன்றி ஆபீசர்!

Unknown said...

சிவா....நீங்க எதிர்பதிவு போடுற அளவுக்கு இதில என்ன இருக்கு...
மொக்கையா எழுதினாத்தான்யா எல்லாரும் படிக்கறாங்க....
அவள் அங்கே சென்றாள்!இது இலக்கியம்!
அந்த சில்பான்சு அங்க போவுது இது மொக்கை!
அந்த பொண்ணு அங்க போவுது...!இது எதார்ததம்
இது படிப்பவரின் மனநிலையில் இருக்கிறது!
எளக்கியவாதிகளுக்கு எளக்கியம்தான் புடிக்கும்!
இலக்கிய புத்தகங்களை விட ராஜேஸ்குமார் நாவல்தான் அதிகமா விக்குதுயா...
இப்ப புத்தகங்களை விட இணையத்தில தான் அதிகமா படிக்கிறாங்க.
அவர் சொல்லுற கருத்துல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கருத்தை
ஏற்றுக்கொள்ள வேண்டும் சில பேர் குறையை சுட்டிக்காட்டினா நன்றி கூட சொல்லுறது இல்லை.அவங்க குறை சொன்னா அதற்கான விளக்கத்தை கூறினா நம்மளை புறங்கணிச்டுறாங்க...
அறிவாளி வேறு...!புத்திசாலி வேறு சிவா...!பதிவுலகில் புத்திசாலிகதான் முண்ணனியில இருக்காங்க...

சிராஜ் said...

/* மிகுதியான வாசிப்புதான் நம்மிடம் இருந்து தரமான படைப்புகளை வெளிக்கொண்டுவரும். */

இதை நாம் ஏற்று கொள்ளலாம் சிவா. நல்ல கருத்துதான்.

சிராஜ் said...

ஒன்றரை நிமிடங்களில் படிக்கும் படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சம்பந்தமாக செந்திலின் பதிவில் இட்ட கீழ்கண்ட பின்னூட்டத்தை மீள் பதிவு செய்கிறேன்.

"மற்றபடி ஒன்றரை நிமிடங்களில் படிக்கும் படி இருக்க வேண்டும் என்பதெல்லாம் யுவ கிருஷ்ணாவின் எண்ணங்கள் தானே ஒழிய, அது ஒரு பொதுவான விதியாக முடியாது. யுவ கிருஷ்ணா புதிய தலைமுறையில் எழுதும் எந்தப் பதிவையும் ஒன்றரை நிமிடங்களில் படித்து முடிக்க முடியாது."

சிராஜ் said...

/* எங்களுக்கு அவதானிப்பு, அடிவருடி, ரௌத்திரம் போன்ற சொல்லாட்டம் தெரியாது. 'நெனச்சேன், ஜால்ரா, பொங்காத' தான். */
இங்க நீங்க நிக்கிறீங்க சிவா...

சிராஜ் said...

/* எங்களுக்கு அவதானிப்பு, அடிவருடி, ரௌத்திரம் போன்ற சொல்லாட்டம் தெரியாது. 'நெனச்சேன், ஜால்ரா, பொங்காத' தான். */
இங்க நீங்க நிக்கிறீங்க சிவா...

சிராஜ் said...

ஒன்றரை நிமிடங்களில் எப்படி அய்யா ஒரு பதிவை படிக்க முடியும்... நிரூபனின் ஒரு பின்னூட்டத்தை படிக்கவே 5 நிமிடங்கள் ஆகுது.
(சும்மா தாமாஷு...சகோ நிரூபன் மன்னிக்க வேண்டும்)

சிராஜ் said...

KRP யோட கவிதைகளை வேண்டுமென்றால் ஒன்றரை நிமிடங்களில் படிக்கலாம். ஏன்னா... முதல் 4 வரிகள் படித்தவுடன், படித்தவன் தளத்தைவிட்டு எஸ்கேப் ஆகிடுவான். (சும்மா தாமாஷு... KRP செந்தில் மன்னிக்க வேண்டும்)

Related Posts Plugin for WordPress, Blogger...