CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, January 30, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (30/01/12)


ஆட்ட நாயகன்:

                                                                                                                                             
பிரெஞ்சு ஓப்பன், விம்பிள்டன், யு.எஸ்.ஓப்பன் ஆகிய 3 கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டங்களை வென்றிருப்பினும் ஆஸ்திரேலியன் ஓப்பன் மட்டும் வசப்படவில்லை. அதையும் தற்போது வென்று சாதனை படைத்துள்ளார் நம் நாட்டு டென்னிஸ் ராஜா லியாண்டர். ஸ்டெபானுக்குடன் சேர்ந்து வலிமை மிக்க எதிரிகளான பைரன் ப்ரதர்ஸை 7-6, 6-2 எனும் செட் கணக்கில் வீழ்த்தி உள்ளார். 38 வயதில் இன்னும் அதே வேகத்துடன் பெயஸ் ஆடி வருவது ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம்தான். அசத்து தலைவா!!
.......................................................................

காதல் கோட்டை: 
'உலக சினிமா பாக்கலாம் வா'ன்னு ரெண்டு ஜாம்பவான் பதிவர்கள் போன வாரம் என்னை கவ்விட்டு போனாங்க. ஒரு திகிலோடத்தான் போனேன்.  ஆனா ரொம்ப வித்யாசமான படைப்பு. ஹீரோவும், ஈரோயினும் 73 நிமிஷம் மொபைல்ல பேசிக்கிட்டே இருக்கறாங்க. போர் அடிக்கலை (எனக்கும்தான்). இப்ப தியேட்டர்ல இருந்து தூக்கிட்டாங்க. உலக சினிமா ரசிகர்கள் தவற விட வேண்டாம். ட்ரெயிலர்: Good Night. Good Morning 
.................................................................................
  
ரத்த சரித்திரம்:
ஆஸி டீம் கிட்ட செம மாத்து வாங்குன இந்திய கிரிக்கெட் அணியை நெனச்சாலே ஒரே தமாசுதான் போங்க. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், ஊடகங்களும் இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க போறீங்க? இதுவரை ஆஸிக்கு சுற்றுலா போயி ஒரு டெஸ்ட் தொடரை கூட ஜெயிச்சதில்ல. இப்பவும் அதே கதைதான். சச்சின் 100 வது நூறை எப்படி அடிப்பாருன்னு பேன்ஸ் எதிர்பாக்க, மீடியா இதுதான் வாய்ப்புன்னு உங்களை உசுப்பேத்த, அவரு வழக்கம்போல சொதப்ப...கொடுமைடா சாமி. அணியாக ஆடுற ஆட்டத்துல போட்டியை எப்படி ஜெயிக்கணும்னு பாக்காம தனியாளு புராணம் பேசுனா இதுதான் கதி. எனக்கென்னவோ அந்த மனுஷன் 100 வது அட்டம்ப்ட்லதான் 100 வது நூறை அடிப்பாருன்னு தோணுது.
...................................................................................

அடுத்த வாரிசு:
சில மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நாள் நெருங்கி வருகிறது. குறிப்பாக உ.பி.யில் இம்முறை ஜெயித்தே தீர காங்கிரஸ் 'கை'ப்புள்ள ராகுல் காந்தி தீயா வேலை செய்யறார். அவருக்கும், காங்கிரஸ் தொண்டருக்கும் தேர்தலுக்கு பிந்தைய பேச்சு வார்த்தை இப்படி இருக்குமோ:
(வடிவேலு காமடி)

"அண்ணே..பேப்பர் படிங்கண்ணே "

"படிக்க தெரியாதுடா"

"சும்மா படமாச்சும் பாருண்ணே. டேய் அண்ணனுக்கு ஒரு ஹார்லிக்ஸ்"

"ஆகக்கா"

"நமக்கு கால் இல்லையா. நீயும் கால் மேல கால் போடுண்ணே"

சேற்றில் விழும் கைப்புள்ள சொல்லும் டயலாக்கு:
"கௌரவம் கௌரவம்னு சொல்லி என்னை நாறடிச்சிட்டியேடா. அம்மா. அம்மா. அம்மம்மம்மம்மா"
..................................................................................
  
காதலில் சொதப்புவது எப்படி?
காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. சித்தார்த், அமலா பால் நடித்து உள்ளனர். இவ்வருடம் யூத்கள் கொண்டாடும் பிலிமாக இருக்க வாய்ப்புண்டு என எண்ணுகிறேன். குறும்படமாக வந்து வெற்றி அடைந்த படைப்பு இப்போது திரைப்படமாக. சும்மா ஒரு ரொமாண்டிக் லுக் விடணுமா?

கிளிக் செய்க:
குறும்படம்
திரைப்பட ட்ரெயிலர்
.....................................................................................

மக்கள் ஆட்சி:
ஆளும் கட்சி செயல்பாடுகள் திருப்தி அளிக்காவிட்டால் அவர்களை திரும்ப பெரும்(!) ரீகால் உரிமை விரைவில் இந்திய மக்களுக்கு தரப்படுமென தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதுதானா உங்க டக்கு..இத எப்பயோ எங்க கேப்டன் தென்னவன்ல சொல்லிட்டாரு. இதனாலத்தான் அவர் பப்ளிக்ல தன் திட்டத்தை சொல்றதே இல்லை. காப்பியா அடிக்கறீங்க காப்பி. எட்றா வண்டிய..நிறுத்துங்கடா தென்னவன் -2 ஷூட்டிங்க!!
.....................................................................................

பாட்ஷா:
ஷேர் ஆட்டோ அண்ணாத்தைகள் சாதா ஆட்டோ பாட்ஷாக்களுக்கு வித விதமா ஆப்பு வக்கிறாங்கப்பா. சென்ற ஞாயிறு ஸ்கைவாக் மால் வழியே நான்  ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தேன்.  ஓட்டுனர் அங்கு நின்றிருந்த எஸ்.ஆர்.எம். கல்லூரி(ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்) மாணவர்களிடம் "ரெகுலர் ரேட் பேசிக்கலாம்" என்றார். தமிழ் தெரியாத அவர்கள் என்னிடம் விளக்கம் கேட்க "400 ரூவா கேக்கறார்" என்றேன். "வாட். 400 ருபீஸ்? நார்மல் ஆட்டோவாலா ஆல்சோ ஆஸ்கிங் தி சேம் ரேட்" என்று கொந்தளித்து ஓடிவிட்டார்கள்.  உள்வாடகை விடுற வித்தை அருமை ஷேர் ஆட்டோ அண்ணே!
...............................................................................

பட்டத்து ராணி:
இன்னும் சளைக்காமல் மந்திரிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார் மேடம் . நேற்று கூட புதிதாக பதவி ஏற்ற மந்திரி நாற்காலியில் அவசரமாய் அமரப்போய் ஆர்வக்கோளாறில் இன்னொரு நபரின் மடியில் குந்திக்கொண்டாராம். மடிதாங்கி நபர் சொன்னாராம் "உங்களை மேடம் தூக்கி ரெண்டு நிமிஷம் ஆகுது. நான் தூக்க ஒரு நிமிஷம்தான் இருக்கு. என் தொடை என்ன ரம்பா தொடையா? இன்ஸ்யூர் எல்லாம் பண்ணி வக்க? எந்திரிங்க பாஸ்"
...............................................................................

தேன் மழை: 
மனைவி அதிக சம்பளம் வாங்குவதைக்கண்டு கணவன் தாழ்வு மனப்பான்மை கொண்டு இருக்கையில் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடிய பாடல். அருமையான வரிகள்: 
........................................................................................................


.........................
My other site:
agsivakumar.com
..........................

.................................................................

சமீபத்தில் எழுதியது:

ஹ்ரித்திக் ரோஷன் நடித்த அக்னிபத் 2012 

அமிதாப் நடித்த அக்னிபத் 1990 

மோகன் லால் நடித்த கான்பிடன்ட் காசனோவா
..................................................................31 comments:

அனுஷ்யா said...

மசாலா கலவை..அருமை..

சச்சினை மட்டும் இரசிக்குமொரு சாமானியன்தான் நானும்..
அணி தோற்றத்தில் வருத்தம் ஏதும் பெரிதாகவும் இல்லை..

பயஸ்க்கு இராமரஜனவிட இரண்டு வயசுதான் கூடயா?ஹ்ம்ம்..

காதலில் சொதப்புவது எப்படி?காத்திருக்கிறேன்...

Prem S said...

//எனக்கென்னவோ அந்த மனுஷன் 100 வது அட்டம்ப்ட்லதான் 100 வது நூறை அடிப்பாருன்னு தோணுது.//இருக்கலாம் ஆனா அடிச்சு தான் தீருவார்

Philosophy Prabhakaran said...

// உலக சினிமா பாக்கலாம் வா'ன்னு ரெண்டு ஜாம்பவான் பதிவர்கள் போன வாரம் என்னை கவ்விட்டு போனாங்க //

யாரு அந்த ஜாம்பவான்ஸ்...? அடுத்த வாரம் மெரினா பாக்குறோம், Be ready...

! சிவகுமார் ! said...

@ மயிலன்

//காதலில் சொதப்புவது எப்படி?காத்திருக்கிறேன்//

பாவம் உங்கள் காதலி.


//பயஸ்க்கு இராமரஜனவிட இரண்டு வயசுதான் கூடயா?ஹ்ம்ம்.//

32 ஐ தாண்டி போங்கடாண்ணா போக மாட்றானுங்க. இவனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல?

! சிவகுமார் ! said...

@ பிரேம் குமார்

அதுக்குள்ள நம்ம தீந்துருவோம் போல!!

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

வேற யாரு? மூன்றெழுத்து இனிஷியல் மற்றும் கம்பிவடப்பதிவர்கள்தான்!!

நிரூபன் said...

வணக்கம் சிவா அண்ணர்,

நல்லதோர் தொகுப்பு,
டென்னிஸ் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை,
வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் தங்கள் பதிவு அந்த வருத்தத்தினைப் போக்கி விட்டது.

குட் மோர்னிங் & குட் நைட் ட்ரெயிலர் பார்த்தேன்,.
நன்றாக இருக்கிறது,
படம் பார்த்து டைம் கிடைச்சா ஒரு விமர்சனம் எழுத முயற்சிக்கிறேன்.
பாலிவூட் நடிகர்களும் நடிச்சிருக்காங்க போல இருக்கே..
ஏனைய விடயங்களும் அருமை! காதலில் சொதப்புவது பார்க்க வெயிட்டிங்.

! சிவகுமார் ! said...

@நிரூபன்

Good night Good morning இந்திய இயக்குனர் சுதீஷ் காமத்தின் படைப்பு. நடித்தவர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான். காதலில் சொதப்புவது எப்படி..ஏகப்பட்ட காதலர்கள் காத்திருக்கிறார்கள்.

Unknown said...

காதலில் சொதப்ப மொதல்ல காதலிக்க முயற்சி பண்ணனும் தம்பி!!!

பிரபாகரன் கிட்ட டியூசன் வச்சுக்க !!

! சிவகுமார் ! said...

@ கே.ஆர்.பி.

அப்படின்னா பிலாசபி காதல்ல சொதப்ப ஆரம்பிச்சுட்டாரா? :))

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!மீல்ஸ் நன்றாக இருந்தது!காதலில் சொதப்புவது எப்படி என்று "அகசிய"மும் பதிவில் கூறியிருக்கிறது.பார்க்கலாம்!(நாங்களும் இதுபோல்தான் சொதப்பினோமா,என்று!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உலக சினிமா பாக்கலாம் வா'ன்னு ரெண்டு ஜாம்பவான் பதிவர்கள் போன வாரம் என்னை கவ்விட்டு போனாங்க.////

என்ன கொடும சார் இது....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////உலக சினிமா ரசிகர்கள் தவற விட வேண்டாம். ட்ரெயிலர்////

அண்ணே அதுமாதிரி பிட்டுப்பட ரசிகர்களுக்கு ஏதாவது ரெகமண்டு பண்ணுங்கண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எனக்கென்னவோ அந்த மனுஷன் 100 வது அட்டம்ப்ட்லதான் 100 வது நூறை அடிப்பாருன்னு தோணுது./////

அப்போ அவரு அவர் பையனோட கேப்டன்சிலயும் வெளையாடுவார்னு சொல்லுங்க.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
@ கே.ஆர்.பி.

அப்படின்னா பிலாசபி காதல்ல சொதப்ப ஆரம்பிச்சுட்டாரா? :))///////

அவர் ஒரு ஆட்டோகிராஃப்........

வெளங்காதவன்™ said...

:-)

Unknown said...

காதலில் சொதப்புவது குறும்படம் செம்ம! அந்த ஹீரோயினும் நல்லா இருந்தாங்க! ஆனா அமலாபால் அந்த அளவுக்கு...அதும் அந்த ஆரம்பம் சீனை லாங்ஷாட்ல வேற எடுத்திருக்காங்க..என்னமோ...பார்க்கலாம்!

மீல்ஸ் கலக்கல்ஸ்! :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த உலகசினிமா விமர்சனம் போடுவிங்களா?

Unknown said...

நம்ம தான் தங்களுடைய 200வது பாலோயர்

The Chennai Pages said...

Coming Soon...
http://faceofchennai.blogspot.in/

! சிவகுமார் ! said...

@ யோகா

ஆமாம் யோகா. படம் வரட்டும்...பல புதிய காதல் தத்துவங்கள் வெளிவரும்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உலக சினிமா பாக்கலாம் வா'ன்னு ரெண்டு ஜாம்பவான் பதிவர்கள் போன வாரம் என்னை கவ்விட்டு போனாங்க.////

என்ன கொடும சார் இது....?//

என்ன சொல்ல வர்றாருன்னு தெரியலியே...அவ்வ்!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////உலக சினிமா ரசிகர்கள் தவற விட வேண்டாம். ட்ரெயிலர்////

அண்ணே அதுமாதிரி பிட்டுப்பட ரசிகர்களுக்கு ஏதாவது ரெகமண்டு பண்ணுங்கண்ணே....//

மேதை டூயட் சாங் ஒன்று கடற்கரையில் எடுத்து இருப்பார்கள். பிரபாகரன், அஞ்சாசிங்கம் ரெண்டு பெரும் ஜொள்ளு விட்டு பாத்தாங்க. அவங்க கிட்ட கேட்டு பாருங்க..:)

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எனக்கென்னவோ அந்த மனுஷன் 100 வது அட்டம்ப்ட்லதான் 100 வது நூறை அடிப்பாருன்னு தோணுது./////

அப்போ அவரு அவர் பையனோட கேப்டன்சிலயும் வெளையாடுவார்னு சொல்லுங்க.......//

ஹா.ஹா..நடந்தாலும் நடக்கும்!!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////! சிவகுமார் ! said...
@ கே.ஆர்.பி.

அப்படின்னா பிலாசபி காதல்ல சொதப்ப ஆரம்பிச்சுட்டாரா? :))///////

அவர் ஒரு ஆட்டோகிராஃப்........//

அது மட்டுமா..அவர் நெற்றிக்கண் ரஜினி மாதிரியும் கூட..

! சிவகுமார் ! said...

//வெளங்காதவன் said...
:-)//

எதுக்கு சிரிக்கறாரோ.. மர்ம சிரிப்பால்ல இருக்கு.

! சிவகுமார் ! said...

@ ஜீ

காதலில் சித்தார்த், அமலா நல்லா சொதப்புவாங்க போல. நீங்க எப்படி?

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி

எதுன்னு தெளிவா சொல்லுங்கப்பா. தேனி மாவட்டமா, ஆனந்த தொல்லையா?

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா

நன்றி தலைவா. சச்சினை தவிர எல்லாரும் செஞ்சுரி அடிக்கறோம்.

! சிவகுமார் ! said...

//The Chennai Pages said...
Coming Soon...
http://faceofchennai.blogspot.in//

Thanks for the info boss.

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

Related Posts Plugin for WordPress, Blogger...