CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, January 9, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (09/01/12)வாகை சூட வா:

                                                                                                                                                       
சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு கடந்த சில வருடங்களாக செல்ல ஆசைப்பட்டும், உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்காததால் நுங்கம்பாக்கம் செல்வதை தவிர்த்து வந்தேன். முன்பொரு முறை தற்போதைய மெகா ஸ்டார் ரபேல் நடால் சென்னையில் மையம் கொண்டபோது அரங்கத்தில் அமர்ந்தேன். இவ்வாண்டு நம்நாட்டு சோம்தேவ் மற்றும் பல வெளிநாட்டு ஸ்டார்கள் இல்லாததால் களையிழந்து போனது இப்போட்டி.பெயஸ்,பூபதியும்  இரட்டையர் போட்டியில் கலந்தாடவில்லை. வேறொரு வெள்ளைக்காரருடன் சோடி போட்டுக்கொண்டனர். அதனால் போக மனமில்லை.

மிலோஸ் ரோனிக் எனும் 21 வயது கனடா புயல் அரை இறுதியில் 17 ஏஸ்களை போட்டு அசத்தியதை செய்தியில் கேட்டேன். அவர் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் 35 ஏஸ்களை போட்டு 7-6 6-7 7-6 எனும் செட்கணக்கில் கடுமையாக மோதி டிப்சாரேவிக்கை(செர்பியா) வீழ்த்தி உள்ளார். அருமையான ஆட்டத்தை நேரில் பார்க்க தவற விட்டு விட்டேன். இனி வரும் ஆண்டுகளில் எத்தனை பெரிய ஸ்டார் ப்ளேயர்கள் வந்தாலும் இப்படி ஒரு அனல் பறக்கும் இறுதி ஆட்டத்தை சென்னையில் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.  
.........................................................................

லாடம்
மேடமை நக்கீரன் 'ஓவராக' தாக்கியதால் மேடமாட்கள் நக்கீரன் மீது பவுன்சர்களை வீசியது கண்டு 'ஏன்தான் இப்படி செய்யறாங்களோ' என்று உ.த. அண்ணனும், கம்பிவடப்பதிவரும் பீல் பண்ணலாம். நீங்க அடிக்கடி ஆத்தா, மம்மின்னு விளிக்கரத கொஞ்சம் கம்மி பண்ணிக்கங்க. அப்பறம் டூமாங்கொலி சைஸ் போண்டாவை எட்டுத்திக்கிலும் இருந்து எறிஞ்சிட போறாங்க. 
....................................................................

வெளுத்துக்கட்டு: 
'தானே' புயல் நிவாரண நிதி வழங்க கடலூர் போயிருக்காரு நம்ம கேப்டனு. அங்க ஒரே தள்ளு முள்ளாம். டென்ஷன் ஆன நம்மாளு ஒருத்தரை சாத்திட்டாராம். 'என்ன ஏங்க அடிச்சீங்க? நான் நிருபருங்க' என்றாராம் தர்ம தர்மா அடி வாங்கியவர். 'அது எனக்கு எப்படிய்யா தெரியும். ஐ.டி. கார்ட் மாட்டாதது உன் தப்பு" என்று கூலிங் கிளாஸ் போட்டு குத்துமதிப்பாக அடித்ததை சமாளித்தார் தல. அதுவும் சர்தான். ஐ.டி. கார்ட் மாட்டாதது சரியோ தப்போ. சிங்கத்து கிட்டு சிக்குனா ஒரு அப்பாவது வாங்காம தப்ப முடியாதே அப்பு!
.................................................................................

ப்ளேயர்ஸ்(ஹிந்தி) : 
அபிஷேக், பாப்பி தியோல், பிபாசா பாசு என ஏகப்பட்ட பேர் இருந்தும் யாரும் பெரிதாக நடிக்கவில்லை. ரஷ்யா, நியூசிலாந்து என பணத்தை கொட்டி படத்தை எடுத்துள்ளனர். ஆங்காங்கே விறுவிறுப்பாக இருப்பது போல் தோன்றினாலும், ஏனோ பெரிதாக ஈர்க்கவில்லை. ரஷ்யாவில் இருந்து ருமேனியா செல்லும் ட்ரெயினில் இருக்கும் 10,000 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகளை லபக்க ப்ளான் செய்வதே கதை. 

துப்பாக்கியை யார் தலையில் வைத்தாலும், உடனே ஒருவர் அதை தட்டிவிட்டு சண்டை போடுகிறார். எத்தனை தடவைய்யா இப்படி எடுப்பீங்க. ஜான்னி லீவரும், ஓம் வைத்யாவும் மிக சுமாராக சிரிக்க வைக்கிறார்கள். மொத்தத்தில் ஆவரேஜ் ப்ளேயர்ஸ்!!
................................................................................

ஊமை விழிகள்:
சேத்தன் பகத்தின் பைவ் பாய்ன்ட் சம் ஒன் புத்தகத்தை படித்துவிட்டு அமீர்கானின் த்ரீ இடியட்ஸ் படமும் பார்த்தாகிவிட்டது. அங்கிள் வயதில் கல்லூரி மாணவாக கலக்கி இருந்தார் அமீர். மறுபடியும் 'நண்பன்' ரூபத்தில் அதே கதை. அதனால் பார்க்க விரும்பவில்லை. பாத்துட்டு சொல்லுங்க. போமன் இரானி வேடத்தில் சத்யராஜ். சவாலான பாத்திரம். எப்படி நடித்து உள்ளார் என்பதை அறியும் ஆர்வம் உள்ளது. விமர்சனங்கள் வரும் வரை காத்திருக்கிறேன்.
.....................................................................................

ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை அறிவிக்க போகிறாராம் பன்மோகன். இந்தியான்னு ஒரு நாடு இருக்கு, அதுல இத்தன கோடி ஜனங்க இருக்காங்களே. அதப்பத்தி கொஞ்சமாவது பீல் பண்றாரா பாருங்க மக்களே. உள்ளூர் செலவாணிக்கே வக்கில்லாம அலையறோம். இதுல அந்நிய செலவாணி ஆளுங்களோட  சேந்துக்கிட்டு இவர பண்ற அலப்பறை தாங்கல. எப்ப பாத்தாலும் 'என்ன அமெரிக்கால ஒபாமா கூப்டாக, ஹாலிவுட்ல லியனார்டோ டீ, காப்பியோ  கூப்டாக'ன்னு சொல்லிக்கிட்டு வானத்துல வவ்வலாட்டம் வலம் வந்துக்கிட்டே இருக்காரே..என்ன செய்யலாம்?
...................................................................................

'அணை'யா விளக்கு:
'சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி' என்பது போல் மொக்கையான DAM 999 படத்திற்கு ஏக பில்ட் அப் குடுத்துவிட்டார்கள். அந்த டைரக்டர் வேற தமிழ்நாட்ல படத்த ரிலீஸ் பண்ணியே ஆகணும்னு சுப்ரீம் கோர்ட் பின் கேட் ஓரமா வலது கால் கட்டைவிரல்ல வாரக்கணக்கா நிக்கறாராம். இது போதாதுன்னு இதை ஆஸ்காருக்கு வேற அனுப்பி இருக்காங்க. இத ஆஸ்காருக்கு பரிந்துரை செஞ்ச மவராசுகளே,  ப்ரீயா இருந்தா இருமாநில பார்டர் பக்கம் வந்துட்டு போங்க. இறுக்க அணைச்சி ஒரு உம்மா தரணும்!!
.....................................................................................

தர்மம் இலை காக்கும்:
இலவசம் என்பது இழிவான சொல். எனவே விலையில்லா என்று சொல்வதே சரி. இது மேடமின் கண்டுபிடிப்பு. விலையில்லா வேட்டி, விலையில்லா கோழி, ஆடு....!! விலையில்லான்னா ரெண்டே அர்த்தம்தான் எனக்கு தெரிஞ்சி. ஒண்ணு: இதுக்கு மதிப்பே இல்ல(சோர்ந்த குரலில் சொல்லிப்பாருங்கள்). அதாவது 'நயா பைசாக்கு பிரயோஜனம் இல்ல'.அடுத்து: விலைமதிப்பில்லாதது(புருவத்த ஒசத்தி அடடே ஆச்சர்யக்குறி ரேஞ்சுக்கு  சொல்லிப்பாருங்க. அதேதான்). அதாவது இந்தப்பொருளோட விலையை நிர்ணயம் செய்ய முடியாத அளவுக்கு காஸ்ட்லி. மேடம் 'விலையில்லா'வை எந்த அர்த்தத்துல சொல்றாங்களோ.

வேணாம் எதுக்கு வம்பு. அப்பறம் அவங்க ஆளுங்க நான் எழுதுன பொக்கிஷ  பதிவுகளை எல்லாம் பிரிண்ட் எடுத்து வீதில வச்சி கொளுத்திட போறாங்க!  
.............................................................................................

காதலி என்னை காதலி:
(இனி பொறுப்பதில்லை. கவிதை எழுத முடிவு செஞ்சாச்சி)

முன்பொரு மாதம் என் தெருவைக்கடக்கையில்
ஓரவிழி கொண்டு என் கோர விழிகளை உரசினாய்.
நீ வருவாய் என சூம்பிப்போன ரோசாப்பூவுடன்
இளையராசா பாடல்களை கேட்டவாறு காத்திருந்தேன்.

மாதம் ஒன்று உருண்டு புரண்டோடியும் நீ வரவில்லை.
இதயத்தில் ஈட்டி. நின்றுவிட்டது எனது நாள்காட்டி.
இன்றுகாலை தோளைத்தொட்டு தோழன் சொன்னான்:
"அடச்சீ எந்திரி. தெருமொனைல தோண்டுன பள்ளத்த
இன்னும் மூடல. அதான் அவ இந்த பக்கம் வரல"
..............................................................................................

கண்டேன்:
சனியன்று சென்னை புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் விசிட். உயிர்மை ஸ்டாலில் தென்பட்டனர் களவாணி வில்லன் திருமுருகனும், இயக்குனர் சற்குணமும். அட நம்ம கிட்ட விருது வாங்குனவங்கள சந்திக்க ஒரு வாய்ப்பா என மகிழ்ந்தேன்.  :-)

                                              சற்குணம், திருமுருகன், அடியேன்

"களவாணியில் வில்லனாக நன்றாக நடித்தீர்கள்" என்று திருமுருகனிடமும், "களவாணி மழைக்காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் எடுத்தது ரசிக்கும்படி இருந்தது,  'வாகை சூட வா'வில் சிறுவர்களின் நடிப்பு அபாரம்" என்றும் கூறினேன். அடுத்த ப்ராஜக்ட் பற்றி டிஸ்கஷன் நடப்பதாக கூறினார்.  மேலுள்ள படத்தின் (மொபைல்) கேமராமேன் பிலாசபி பிரபாகரன். செ.பு.கண்காட்சி தனிப்பதிவு விரைவிலுங்கோ.                                                             
..........................................................................

அழகிய தமிழ் மகன்:
'கொலைவெறி'பல ரூபத்தில் நம் உசுரை வாங்கினாலும்,யாழ்ப்பாண   இளைஞர்கள் பாடிய இப்பாடல்தான் அனைத்திலும் உசத்தி எனலாம். சரியான பதிலடியும் கூட. தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள தமிழ்ப்பற்றுள்ள வரிகள்.இப்பாடலை வழங்கிய இளைஞர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் பல:...............................................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................


                                                                       

43 comments:

Philosophy Prabhakaran said...

// லாடம் //

யப்பா நாலு வரிக்குள் எத்தனை உள்குத்து...

Philosophy Prabhakaran said...

// ப்ளேயர்ஸ்(ஹிந்தி) //

இதை எப்ப தல பார்த்தீங்க... சொல்லவே இல்லை...

Philosophy Prabhakaran said...

// சேத்தன் பகத்தின் பைவ் பாய்ன்ட் சம் ஒன் புத்தகத்தை படித்துவிட்டு அமீர்கானின் த்ரீ இடியட்ஸ் படமும் பார்த்தாகிவிட்டது. //

ம்ஹூம்... ரெண்டும் செய்யவில்லை... புத்தகம் pdf வடிவில் இருக்கிறது... படம் வெளியாவதற்குள் படிக்க நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை...

Philosophy Prabhakaran said...

லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சு போல...

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

உள்குத்தா.எங்க? ப்ளேயர்ஸ் வெள்ளிக்கிழமை பார்த்தேன். சாரி. சொல்ல மறந்துட்டேன். சேத்தன் பகத்தின் புத்தகத்தை 3 இடியட்ஸ் ரிலீசுக்கு ஒருநாளுக்கு முன்னதான் வேகமா படிச்சி முடிச்சேன். புக்கை படிச்சிட்டு த்ரீ இடியட்சையும் பாருங்க.

Philosophy Prabhakaran said...

ம்க்கும்... ரெண்டு பேரும் ஒரே தப்பையே பண்ணியிருக்கோம்... இது 2012...

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடுச்சு போல...//

யாரு எனக்கா? ஸ்டார்ட் ஆயிட்டாலும்...

! சிவகுமார் ! said...

மாத்திட்டேன். நன்றி.

Unknown said...

கேஆர்பி அண்ணன் கூட பழகியதால தென்றல் காத்து தொத்திக்கிச்சா, பேசாம கட்டுரையை படிச்சதோட போயிருக்கலாம், கவிதைய பார்த்துட்டு இவர் கிட்ட ஏதோ இருக்குடா அப்படின்னு ஆர்வப்பட்டு படிச்சதிலிருந்து முனி அடிச்ச மாதிரியே திரியிறேன். அய்யனார் கோயிலுக்கு போய் துன்னூரு போடனும். ஆத்தா கோயிலுக்கு போய் வேப்பிலை அடிக்கணும். கடவுளே நம்ம சிவாவுக்கு கட்டுரைகளை சிந்திக்கிற அளவுக்கு அறிவை கொடுத்தா பத்தாதா. அதையும் தாண்டி கவிதை அளவுக்கு போனா படிக்கிறவங்க கதி என்னாவுறது.

Unknown said...

கவிதைய படிச்சதிலிருந்து என்னய ஏதோ பண்ணுது சிவா. கடவுளே பாரேன், இந்த சிவாவுக்குள்ள ஏதோ ஒண்ணு இருந்திருக்கு. அது பொங்கி எழுந்து கவிதையா வெளிவந்து படிச்சவங்க கண்ண குத்துது. அன்பே சிவம் கமல் போல சொல்லனும்னா இந்த உலகம் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவோ ஆச்சரியங்களை ஒளிச்சு வச்சிருக்கு. இன்னைக்கு காலையுல எழுந்ததும் நம்ம சிவா கவிதைய படிச்சு மிரண்டு திரியும் ஆச்சரியம் இருக்கே. எந்த விதமான அதிர்ச்சிக்கும் நான் தயாராகிவிட்டேன்.

மரபுக்கவி பேரரரரரரரரரசு சிவக்குமார் வாழ்க, வாழ்க.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
ரெண்டு பதிவர்களை லைட்டா கலாய்ச்சு, ரசிக்கும் வண்ணம் பதிவில் பல சுவாரஸ்யங்களைச் சேர்த்து எழுதியிருக்கிறீங்க.

டென்னீஸ் போட்டி தவற விட்டதால் ரொம்ப பீல் பண்றீங்களோ?
அப்புறமா களவாணிப் பசங்க டீமில் இருவரைச் சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஹாலிவுட்ரசிகன் said...

சாப்பாடு நல்லாயிருக்கு தல.

Prem S said...

கொலைவெறி எதிர்ப்பு பாட்டுக்கும் அந்த மெட்டு தானே தேவைப்படுது அன்பரே

Prem S said...

//முன்பொரு மாதம் என் தெருவைக்கடக்கையில்
ஓரவிழி கொண்டு என் கோர விழிகளை உரசினாய்//எதுகை யில் பிச்சு உதருரீங்களே அருமை

நாய் நக்ஸ் said...

Ennaappa.....onenum----
kaaram thuukkalaa
illai.....innum....innum
ethir parkkiren....

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா செந்திலு

என்ன ரொம்ப புகழாதீங்க. அப்பறம் கவிதைக்குன்னே தனி ப்ளாக் ஆரம்பிச்சுடுவேன்.

! சிவகுமார் ! said...

@ஹாலிவுட் ரசிகன்

நன்றி நண்பா.

! சிவகுமார் ! said...

@நிரூபன்

ஆமாம் நிரூபன். அடுத்த ஆண்டு கண்டிப்பாக சென்னை ஓப்பன் பார்த்தாக வேண்டும். வருகைக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ சி. பிரேம் குமார்

ரொம்ப சந்தோஷங்க. கவிதை மழை கொட்டென கொட்டும்!!

! சிவகுமார் ! said...

@ டாக் லிக்ஸ்

ஆந்திரா டப்பிங் படம் போடவா?

அஞ்சா சிங்கம் said...

///இதயத்தில் ஈட்டி. நின்றுவிட்டது எனது நாள்காட்டி.//////////////////

என்னையா நீயும் டபுள் மீனிங் எழுத ஆரம்பிச்சிட்ட ...................

Unknown said...

/// ! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா செந்திலு

என்ன ரொம்ப புகழாதீங்க. அப்பறம் கவிதைக்குன்னே தனி ப்ளாக் ஆரம்பிச்சுடுவேன் ///

உலகம் 2012-ல் அழிய போகுது அப்படின்னு ஏற்கனவே முடிவு பண்ணியிருக்காம். அதற்கு இந்த ஸ்டேட்மெண்ட்டும் ஒரு காரணமாக இருக்குமோ # டவுட்டு

rajamelaiyur said...

அருமையான மீல்ஸ்

rajamelaiyur said...

யாழ்ப்பான பாடல் எனக்கும் பிடிக்கும்

rajamelaiyur said...

நண்பர்களே உங்களுக்காக ..

உங்கள் FILE மற்றும் FOLDER ஐ பூட்டி வைக்க உதவும் மென்பொருள் (FOLDER LOCK 7 - WITH REGISTER KEY)

! சிவகுமார் ! said...

@ அஞ்சா சிங்கம்

ஒரு ப்ளானோடதான் அலையறாங்க..

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா செந்திலு

சந்தேகமே வேண்டாம். அதேதான்.

! சிவகுமார் ! said...

@ ராஜபாட்டை ராஜா

வருக நண்பரே.

CS. Mohan Kumar said...

எங்க தஞ்சை காரரான சற்குணத்தை பார்க்க தவறிட்டேன். :(( பார்த்தால் முழுக்க பாராட்டிருப்பேன்

நானும் அன்று இருந்தேன். நடிகரை தான் அடையாளம் தெரிஞ்சுது. சற்குணத்தை தெரியலை

Unknown said...

Good Feelings...

உணவு உலகம் said...

மேடத்தப்பத்தி பேசாதீங்கோன்னு அறிவுரை சொல்லிட்டு, சொந்த செலவில சூனியம் வச்சிருக்கீங்களே!

மாலதி said...

veri naise

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா கவிதை அட்டகாசமா வந்துருக்கே வாழ்த்துக்கள்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க அடிக்கடி ஆத்தா, மம்மின்னு விளிக்கரத கொஞ்சம் கம்மி பண்ணிக்கங்க. அப்பறம் டூமாங்கொலி சைஸ் போண்டாவை எட்டுத்திக்கிலும் இருந்து எறிஞ்சிட போறாங்க.//

ஆமாய்யா வளர்மதி தலமையில ஆட்டோ லாரில எல்லாம் குண்டாந்தடியோடே வந்துரப்போறாயிங்க...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இந்தப்பாடல்தான் தேனாய் இனிக்குதுய்யா...!!!

Yoga.S. said...

வணக்கம் சிவகுமார் சார்!எங்கள் நாட்டுத் தமிழ் மொழி கொலவெறிப் பாடல் தந்தமைக்கு நன்றிகள்!ஸ்பெஷல் மீல்ஸ் அருமை!!!

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

சற்குணம் தஞ்சைக்காரர் எனும் தகவலை தந்ததற்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ கே.ஆர்.பி. செந்தில்

Thank you Boss!!

! சிவகுமார் ! said...

@ உணவு நெல்லை

எனக்கு இன்ஸ்பெக்டர் காளியை நல்லா தெரியும் சார். பிரச்னை இல்ல.

! சிவகுமார் ! said...

@ மாலதி

Thanks!

! சிவகுமார் ! said...

@ மனோ

வளர்மதி மேடம் வாழ்க. எனக்கு எதுவும் தெரியாதுங்க.

! சிவகுமார் ! said...

@ யோகா

நன்றி யோகா.

சென்னை பித்தன் said...

வழக்கம் போல் கல்யாணச் சாப்பாடு (ம்யூசிக் அகாதமியில் பத்மனாபன் போட்ட மதிய உணவு போல்!)

Related Posts Plugin for WordPress, Blogger...