CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 10, 2011

எடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா


இங்கே:

மவனே இதுக்கு மேலயும் பொறுக்க கூடாது. அதுவும் இந்த சான்சை விடவே கூடாது. கூடங்குளம், ஐசு அக்காக்கு கொய்ந்த பொறந்து மேட்ரு எல்லாம் பழசாயிருச்சி. அப்பப்ப இந்த கேரளாக்காரன் கூட ஒரசல் இருந்தாலும் ஏழடி ஆழம், எட்டடி அகலம், ஆயிரம் அடி நீளத்துக்கு பப்பரப்பேனு ஒரு விரிசல இன்னைக்கி உண்டாகியே ஆவணும். கூடங்குளம் அணுஉலை ரொம்ப சேப் ஆனதுன்னு ஆயிரம் பேர் சொன்னாலும் நம்பக்கூடாது. 'திடீர்னு கதிரு செதறி எதுனா ஆயிட்டா போன உசுர நீயா குடுப்ப'ன்னு சண்ட போட்டு, அவனுங்க நடு மூக்குலயே நச்சுனு குத்தனும். 'அப்படி ஒரு ஆபத்து நடக்காதுன்னு உறுதி தர நீ என்ன யாகவா முனிவரா'ன்னு விஞ்ஞானிகளை கலாய்க்கனும். அங்க இருந்து பொடிநடையா நடந்து நடந்து நடந்து போயி கேரளா பார்டர்ல நின்னு 'முல்லைப்பெரியார் பாதுகாப்பானது. தரம். நிரந்தரம்'ன்னு சொல்லணும். 'எடோ (வை) கோபி. ஈ அணை பாதுகாப்பா இல்லா. அது ஒடஞ்சி எங்களுக்கு எதுனா ஆயிருச்சின்னா?'..இப்படி கேரளி கேட்டா அவனை அல்லாக்க தூக்கி மல்லாக்க போடணும். 'செம சேப் ஆன அணை. இன்னும் 999 வருஷம் தாங்கும்னு சொல்ல நீ என்ன சிவசங்கர் பாபாவா' ன்னு சேட்டன் கேப்பான். அப்ப வெறிகொண்டு அவனை பாத்து இப்படி கொதிக்கனும்:  'யூ DAM(N) இடியட். ஷட் அப் அண்ட் பிரிங் மீ ய கப் ஆப் டீ' !!  
  
மெய்னா இந்த நாயர் கடைங்கள அடிச்சி நொறுக்கனும். எங்க ஏரியா சேட்டன் கடைல வேற 400 ஓவா பாக்கி. அவன் கடைய அடிக்கிற அடில ஓட்டம் புடிக்கணும். அந்த ஏழு நாட்கள் டி.வி.டி. விக்கிற கடைங்கள எல்லாம் அடுத்த எழுநூறு நாட்களுக்கு தடை பண்ணனும். இதுல எவன் நல்லவன், கெட்டவன்னு நியாய தர்மம் எல்லாம் பாக்கக்கூடாது. ஒரே அப்பு. மவனே செவுலு அவுலு வுட்டுக்கணும். மானம் ரோஷம் இருக்கறவனா இருந்தா பரங்கிமலை ஜோதி பக்கம் நம்ம ஆளுங்க மலையாள படம் பாக்க போகவே கூடாது.  'ஐயய்யோ..இதவிட மோசமான எமோஷனல் ப்ளாக்மெயில் எதுவும் இல்ல'அப்டின்னு ஷகிலாதாசர்கள் அழப்படாது.  கொஞ்சம் அடக்குங்க/அடங்குங்க. ஒண்ணா மட்டும் கைகோத்துகிட்டு போஸ் தர்ற பாதக செயல செய்யவே கூடாது. தனித்தனியா போராட்டம் பண்ணி தமிழன் பெறுமைய செங்குத்தா நிலைநாட்டனும். ஏழாம் அறிவு, பாலை மாதிரி நமக்கு குளுக்கோஸ் ஏத்துற அளவுக்கு முல்லை பெரியார் பெரிய மேட்டர் இல்லைன்னாலும்..'அடிடா அவன. ஒதடா அவன' ட்யூனை மட்டும் கிரிக்கெட் மேட்ச் பாத்துட்டு மிச்சம் இருக்குற நேரத்துல வால்யூம் ஏத்தி கத்தனும்.

அங்கே: 

'அணை ஒடஞ்சி தண்ணி வந்தாலும் கேரளாக்கு பிரச்சன இல்லா. இடுக்கில அந்த தண்ணிய ஒடுக்கிறலாம்'ன்னு அயல்காரனுக்கு சப்போட் செய்ற ஈ மாநில வ்யக்தியான ரெவினியூ மினிஸ்டர் ராதாக்ரிஷணனை வாயை மூட சொல்லடா கோபி.  சபரி மலை வர்ற தமிழ் ஆள்களை விரட்டி அடி. மம்முட்டி, மோகன்லாலு மாதிரி ஓல்ட் ஸ்டார் எல்லாம் வேண்டாம். கேரளாலே இப்போ கலக்குற விஜய்,சூர்யா மாதிரி ஆளுங்களுக்கு அடிமையா கெடக்குற யூத் சேட்டன்களை அள்ளிப்போட்டு பெரியார் அணைகிட்ட நிறுத்து. அவனுக அடிக்கற விசில் சத்ததுலையே அந்த டாம் டமார்னு பொளந்துக்கும். பழியை தூக்கி இளிச்சவாய் தமிழன் மேல போடடா கோபி. எப்பிடி ஐடியா? ஈ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆளு உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்!! 

சென்றலு கொவர்மெண்டு இடுக்கில புதிய அணை கட்ட சத்யம் செய்ற வரை நீர் வளத்துறை அமைச்சர் ஜோசப் சாகும் வரை ஊனு கழியா விரதம் இருக்க முடிவு செய்தல்லோ. அவனை இறுக்க 'அணை'ச்சி உம்மா தந்து, புது அணை கட்ட புனுகுப்பூனை வாயன் பன்மோகன் சம்மதம் தெரிவிக்க வேணுமடா கோபி. அதுவரை ஈ கிச்சுதானந்தன் பாத்ரூமில் பிறந்த மேனியாயிட்டு நிக்கும். நீ எவ்விட எங்கும் போயால் கொன்னு களையும். அவன் சட்டைய நீ கிழி. உன் சட்டையை அவன் கிழிக்கட்டும். எவனும் நிம்மதியா இருக்கக்கூடாது. நீ பாட்டு படிக்கோடா கோபி 'ஒனக்கும். ஆஹா ஒனக்கும் எனக்கும்தான் பொருத்தம்.இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்.

நீ மட்டும் ஏனடா தமிழா சும்மா இருக்க. நீயும் பாடு 'நான் வாத்து நான் வாத்து'!!
.................................................................................................................. 

..............................
My other site:
agsivakumar.com
.............................

.................................................................................................
சமீபத்தில் எழுதியது:

ரியல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்து!  
.................................................................................................


10 comments:

Yoga.S. said...

வணக்கமுங்க!என்னங்க பண்ணச் சொல்லுறீங்க?அடிக்கு அடி,ஒதைக்கு ஒதைன்னா?நாம இண்டியன் இல்லீங்களா?பக்கத்துக்கு நாட்டுக்குப் போயி ஆயிரக் கணக்கில கொன்னு புதைச்சப்பவே,பொத்திக்கிட்டு இருந்தமே?

Philosophy Prabhakaran said...

// மானம் ரோஷம் இருக்கறவனா இருந்தா பரங்கிமலை ஜோதி பக்கம் நம்ம ஆளுங்க மலையாள படம் பாக்க போகவே கூடாது. //

இதை கூட பொறுத்துக்கலாம்... ஆனால் அமலா பாலை சைட் அடிக்கக்கூடாதுன்னு சொன்னா மட்டும் நான் அழுதுடுவேன்... அழுதுடுவேன் ஆமா...

முத்தரசு said...

என்னா நைனா சொல்ற

அஞ்சா சிங்கம் said...

சேட்டன்களுக்கு சேட்டை அதிகமாக இருக்கும் ..........
உம்மன்சாண்டி பெயரை பூச்சாண்டி என்று மாத்தி கொள்ளட்டும் ................

சக்தி கல்வி மையம் said...

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.// என்னக் கொடும சிவா..

MANO நாஞ்சில் மனோ said...

அப்ப வெறிகொண்டு அவனை பாத்து இப்படி கொதிக்கனும்: 'யூ DAM(N) இடியட். ஷட் அப் அண்ட் பிரிங் மீ ய கப் ஆப் டீ' !! //

அப்போ வடை யாரு கொண்டு வருவாங்களாம்...?

MANO நாஞ்சில் மனோ said...

அதுவரை ஈ கிச்சுதானந்தன் பாத்ரூமில் பிறந்த மேனியாயிட்டு நிக்கும். நீ எவ்விட எங்கும் போயால் கொன்னு களையும்.//

"வானம்" உண்டா சேட்டா...?

MANO நாஞ்சில் மனோ said...

ஈ லோகத்தில் யோக்கியன்னு ஒரு ஆளு உண்டெங்கில் அது ஈ பாலக்காட்டு மாதவனாக்கும்!!//

நின்றே பார்ய சுகம்தன்னே அல்லே மாதவா...???

நாய் நக்ஸ் said...

ஹும் ..ஹும் ..

Unknown said...

சிவா நாளுக்கு நாள் உங்களோட எழுத்துகள் மெருகேறிட்டே இருக்குங்க, சான்சே இல்லை, எக்சலண்ட் ஒர்க், சூப்பரா எழுதி இருக்கீங்க

Related Posts Plugin for WordPress, Blogger...