நண்பர்களே, நேற்று வெளியான வாரமலரில் ஒரு செய்தி பார்த்தேன். அது இணையத்திலும் தினமலரால் பகிரப்பட்டு உள்ளது. அதற்கான லிங்க்: கை கொடுப்போமா. தந்தையின் குடிவெறியால் கையை இழந்த சிறுமி இவர். பெயர் தனலட்சுமி. செயற்கை கை அமைக்க உதவி கோரி இருந்தார். நேற்று நள்ளிரவில்தான் வாரமலர் படிக்க நேர்ந்தது. இன்று காலை இவருடைய ஆசிரியரும், கார்டியனுமாகிய செபாஸ்டியன் அவர்களிடம் பேசினேன். நேற்றே செயற்கை கை பொறுத்த உதவி கிடைத்து விட்டதாக கூறினார். உதவி செய்த உள்ளங்களுக்கு நன்றி.
வேறு ஏதேனும் உதவி, குறிப்பாக அப்பெண்ணின் கல்விக்கு உதவி தேவையா என்று கேட்டபொழுது "ஆம். உதவி செய்யுங்கள்"என்றார். "ராமநாதபுரத்தில் நண்பர்கள் உள்ளனாரா என்று பார்க்கிறேன். அப்படி இருப்பின் அவரை உங்களிடம் நேரில் பேச வைக்க முயற்சிக்கிறேன்" என்றேன். அதன் பின் பதிவுலக நண்பர் ரஹீம் கசாலியிடம் கேட்டபோது, தனக்கு தெரிந்த ராமநாதபுரப்பதிவர் பன்னிக்குட்டி ராமசாமி மட்டுமே என்று சொன்னார். ஆனால் அவர் அயல் தேசத்தில் இருப்பதால் நேரில் சென்று ஆசிரியர் செபாஸ்டியனை காண இயலாது என நினைக்கிறேன். ராமநாதபுரத்தை சேர்ந்த பதிவர் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். செபாஸ்டியன் அவர்களிடம் நண்பர் பேசிவிட்டு வந்ததும் அதைப்பொருத்து நம்மாலான உதவியை செய்யலாம் என்பது என் கருத்து.
தொடர்புக்கு:
செபாஸ்டியன்: 94420 48565
சதானந்தம்: 97867 13264
இன்னும் எத்தனை சகோதர சகோதரிகளை காவு வாங்க காத்திருக்கிறது இந்த மது எனும் அரக்கன்?
4 comments:
இன்னும் எத்தனை சகோதர சகோதரிகளை காவு வாங்க காத்திருக்கிறது இந்த மது எனும் அரக்கன்?//
நம்மாலான உதவிகளை செய்வோம் வாருங்கள்..
நானும் தினமலரில் படித்தேன்.. மனதை உருக்கிய சம்பவம் .... நம்மாலான உதவிகளை கண்டிப்பாக செய்வோம்
nanbenda blog varala...etachum problema brother....
சமீபத்தில் ஒரு வார இதழில் குடி போதையில் தன் மகனையே வெட்டி கொன்ற தகப்பன் கட்டுரை படிக்க நேர்ந்தது. மிகவும் கொடுமையான விஷயங்கள் இத்தகைய செயலால் அரங்கேறிவருகிறது :-(
எங்கே போகிறது இந்த சமுதாயம்?
போன் செய்தேன். வேலையாக இருப்பதால் சில மணிநேரங்களில் அழைப்பதாக சொன்னார். இறைவன் நாடினால் நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் சகோ
Post a Comment