CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, December 4, 2011

போராளி


     
'நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன்' அணியான சசி - (சமுத்திரக்)கனி, கஞ்சாகருப்பு, நமோ நாராயணா, ஞானவேல், ஸ்வாதி மீண்டும் இணைந்து போர்க்களம் கண்டுள்ளனர். அல்லாரி நரேஷ் மற்றும் 'பரோட்டா' சூரி ஆகியோர் அணியில் புதிது. சசி இயக்கத்தில் கனி, கனி இயக்கத்தில் சசி என டீலிங் போட்டு நடித்து வரும் படங்களில் என்னுடைய பேவரிட் என்றால் 'நாடோடிகள்'தான். மற்ற படங்களில் அதிகமாகவே ரத்தம் சிந்தப்பட்டது. நாடோடிகளுக்கும், ஈசனுக்கும் இடையே இருப்பவன்தான் இந்தப்போராளி. 

ஈசனில் சென்னை குறித்த தனது பார்வையை சற்று அமெச்சூர்தனமாக காட்டிய  சசியை விட கனி மேலும் நுணுக்கமாக சொல்லி இருக்கிறார். குடித்தனம் இருப்பவர்கள் கேரக்டர்களை அழகாக கையாண்டிருப்பதன் மூலம். வழக்கம்போல நண்பர்களால் சிக்கிக்கொள்ளும் ரோலில் கஞ்சா கருப்பு. இருப்பினும் சிரிக்க வைத்தது விடுகிறார். சசி, நரேஷை சென்னையில் சிலர் துரத்துகையில் கஞ்சா கருப்பு ஓடிக்கொண்டே 'எதுக்கு ஒடறீங்கன்னு சொல்லிட்டாவது ஓடுங்கடா' வசனம் தூள். 'அவன்(சசி) பின்னால அவ போறாளே(ஸ்வாதி)..அதனால அவன்தான் பெருமாளு. நீ?' என்று நரேஷை நையாண்டி செய்வது என முதல் பாதியில் 'கல கல' கருப்பு. ஆனால் இதே மாதிரி பாத்திரங்களில் தொடர்ந்து நடித்தால் அது எவ்வளவு தூரம் ரசிக்கப்படும் என்று தெரியவில்லை. நரேஷ் தமிழ் பேச முயற்சி செய்கிறார். ஸ்வாதி நல்லவேளை பெரிதாக நடிக்காவிடிலும், எரிச்சல் மூட்டவில்லை. ஞானசம்பந்தம், ஞானவேல் ஆகியோர் சொன்னதை சரியாக செய்துவிட்டு போகிறார்கள். 

படவா கோபி...இவரை ஏன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை தமிழ் சினிமா என்று எண்ணத்தோன்றுகிறது. மயில்சாமியைப்போல் இவரையும் ஒரு சில காட்சிகளுடன் நடிக்க வைக்காமல் முன்னணி நகைச்சுவை நடிகருக்கான ஸ்கோப்பை இயக்குனர்கள் உருவாக்கித்தரவேண்டும். நமோ நாராயணா நாடோடிகளுக்கு பிறகு ஈசன், போராளி ஆகியவற்றில் வந்து மட்டும் போகிறார். அடுத்தமுறை உங்கள் நண்பருக்கு பேசப்படும் கேரக்டரை தாங்க ச அண்ட் ச.  

முதல் பாதி சிரிப்பொலிகளுடன்  வேகமாக நகர்கிறது. அதன் பின் 'பரோட்டா' சூரி நகைக்க வைக்கிறார். 'கேட்டுக்க', 'நாங்க இப்பயே இந்த மாதிரி' ஆகிய வசனங்களை அடிக்கடி வராமல் தவிர்த்து இருக்கலாம்.  இன்டர்வலுக்கு பின் சசியை எதிரிகள் துரத்த, அவர்களை சசி அடித்து நொறுக்க...திடுதிப்பென கிளைமாக்ஸ் வந்துவிடுகிறது. பரபரப்பான காட்சிகளில் சுந்தர் சி. பாபுவின் இசைக்கருவிகள் பல பரிமாணத்தில் திரிந்தாலும், காட்சிகளை பார்ப்பவர்கள் பெரிதாக விறுவிறுக்கவில்லை.   


வெடி போடு பாடல் மட்டும் தேறுகிறது. தன் உழைப்பை விடை லுங்கி ராசியால்தான் தேசிய விருது கிடைத்தது என நடன இயக்குனர் தினேஷ் அழுத்தமாக நம்பிவிட்டார் போலும். இங்கும் லுங்கியாட்டம். சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர்கள் பலர் ஹீரோக்கள் ஆன பொழுது கிடைத்த வரவேற்பை இனி தக்கவைத்துக்கொள்வார்களா என்பதில் சந்தேகம் வரத்துவங்கி உள்ளது. சகட்டு மேனிக்கு அனைவரையும் சசி பொளப்பதை கண்டு அரங்கில் கிண்டல் சத்தம் கேட்கிறது. பாத்துக்கங்க சசி.

வசுந்தரா 'போ. அவனை கொத்து பொரோட்டா போடு' என்று சொன்னபிறகு லெங்த் ஆன கூந்தலை சிலுப்பிக்கொண்டு சண்டைக்கோழியாகிறார் சசி. இன்னொரு சீனில் ஸ்வாதி உசுப்பேற்றி விட்டபிறகுதான் 'நான் ஒரு போராளி' என பல்லாவரம் பிரிட்ஜில் பைக்கில் பறந்து கொண்டே உணர்கிறார் சசி. இதையேத்தான் பரபரப்பு இசை இல்லாமல் விக்ரமன் எடுத்தார். அவரை 'லா லா' பாடி பேக் ஆப் செய்துவிட்டோம்.ஆனால் ஹரி(சூர்யாவுக்கு அனுஷ்கா அட்வைஸ்), செல்வராகவன்(தனுசுக்கு சோனியா, ரிச்சா அட்வைஸ்), போராளியில் கனி ஆகியோர் செய்தால் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் ரசிகர்கள்.    

                                                                         
மயக்கம் என்ன..எதிர்மறையான சிந்தனை, கதாபாத்திரங்கள் என்று நாம் நினைத்தாலும், இவை யதார்த்தமும் கூட  என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இருப்பினும் பாசிடிவ் எண்ணங்களை கொண்ட 'போராளி' சசி போன்ற கேரக்டர்களைத்தான் எனக்குப்பிடிக்கிறது. மனதில் நிற்கும் வண்ணம் போராடாத போராளியாக இருப்பினும், Bore அடிக்காமல் பொழுது போக வைக்கிறான். 

போராளி - ஜாலி பாதி. துரத்தல் மீதி. 
...................................................................................
 
.............................................
சமீபத்தில் எழுதியது:

மிக்சர் கடை (04/12/11)
..............................................
.............................
My other site:
..............................     

                                                             

9 comments:

முத்தரசு said...

நன்றி - பார்க்கணும்

kanagu said...

நானும் பார்த்தேன். சில காட்சிகள் நன்றாக இருந்தாலும் படமாக கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது பார்ப்பதற்கு.

சூரியின் காமெடி அருமை... முதல் பாதியும் ஒரளவிற்கு காமெடி கொண்டு நகர்த்தி இருந்தார்கள். நல்ல விஷயங்கள் நிறைய சொன்னர்கள். சில சமயம் திணிக்கப்பட்டதுபோல் இருந்தது.

/*இருப்பினும் பாசிடிவ் எண்ணங்களை கொண்ட 'போராளி' சசி போன்ற கேரக்டர்களைத்தான் எனக்குப்பிடிக்கிறது.*/

உண்மை தான். எனக்கும் அப்படியே. :)

Philosophy Prabhakaran said...

சுப்ரமணியபுரம் படத்தை அந்த அணியின் படைப்புகள் எதுவும் இதுவரை ஈடு செய்யவில்லை என்பதே என் எண்ணம்... அந்த க்ளைமாக்ஸ் சான்ஸே இல்லை... நண்பர்கள்ன்னா ஹீரோவுக்காக உயிரையே கொடுப்பாங்கன்னுற தமிழ் சினிமா சென்டிமென்ட்டை உடைத்த படம்...

Philosophy Prabhakaran said...

படவா கோபி மட்டுமல்ல பல்வேறு மிமிக்ரி கலைஞர்களின் நிலை இதுதான்... மிமிக்ரி கலையை தாண்டி அவர்களிடம் ஒரிஜினாலிட்டி இருந்தால் வாய்ப்புகள் கிடைக்கும்...

லொள்ளு சபா ஜீவா, சிவ கார்த்திகேயன் எல்லாம் கூட இந்த லிஸ்ட் தான்...

சொல்லப்போனால் சந்தானத்தை விட சிறந்த நடிகர் லொள்ளு சபா ஜீவா... இருப்பினும் சந்தானம் பெரிய ஹிட் ஆனதற்கு காரணம் அவருடைய ஒரிஜினாலிட்டி...

Philosophy Prabhakaran said...

அல்லரி நரேஷ் - இவர் குறும்பு படத்தில் நடித்தவர் தானே...

நமோ நாராயணன் - யார் இவர்...

படத்துல சுவாதி, வசுந்தரா இல்லாம இன்னொரு பொண்ணு வருதே... அவங்க பேர் என்ன...???

கவி அழகன் said...

Pakavendiya padam

ஆமினா said...

நா திரைவிமர்சனத்துக்கு அதிக எதிர்பார்ப்போடு கமென்ட் எழுதி எங்கேனும் பாத்திருக்கீங்களா :-)

ஆனாலும் உங்க எழுத்தில் மேல் உள்ள நம்பிக்கை என்னை வாசிக்க வைக்குது. மயக்கம் என்ன திரைவிமர்சனம் படித்தேன். ஆனால் கருத்திட முடியவில்லை.

வழக்கம் போல் உங்கள் பாணியில் அழகா சொல்லியிருக்கீங்க. ஆரம்பம் முதல் கடைசி வரை ஒவொன்றையும் ரசிக்கும் படி சொன்னவிதம் அருமையா இருந்துச்சு சகோ. கடைசியில் உங்கள் ஸ்பெஷல் தியேட்டர் நொறுக்ஸ் பார்க்க ஆசையா வந்தேன். அது மட்டும் மிஸ்ஸிங்க் :-)

அருமையான தரமான விமர்சனத்துக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்....

தமிழ்வாசி பிரகாஷ் said...

படம் பார்க்க தூண்டும் விமர்சனம்..

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கீங்களா?’

சுவையான & சுருக்கமான விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.

கஞ்சா கருப்பு காமெடி, கலைத்து துரத்தும் காட்சிகளுக்காக படத்தினைப் பார்க்க வேண்டும் போல இருக்கே!

Related Posts Plugin for WordPress, Blogger...