CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 31, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (31/12/2011)நில்.கவனி. செல்லாதே:


இவ்வருடம் தமிழில் பரபரப்பை பப்பரப்பே என்று கிளப்பிய 'இளைஞன்' அடுத்த மாதம் ஆந்திராவில் விக்க விக்க அனலை கக்க உள்ளது. தேசானிக்கி ஒக்கடு (நாட்டுக்கு ஒருவனுங்கோ) எனும் பெயரில் அதிரடி ரிலீசுக்கு ரெடி. 'தானே'வில் இருந்து ஆந்திரா மக்களு தப்பித்தாலும் தானைத்லைவனின் தொம்பி பா.விசய்யிடம் இருந்து தப்ப முடியாதண்டி!
.................................................................................................

வெங்காயம்:
தெருவில் காய்கறி வண்டியை தள்ளிக்கொண்டு வரும் ஆள் செய்யும் சித்து வேலை குறித்து நேற்றொரு செய்தி கேட்டேன். எடைபோட்ட காய்கறிகளை பையில் போட்ட பின்புபெண்கள் பேசிக்கொண்டு இருக்கையிலோ அல்லது வேறு காய்கறியை எடுத்துக்கொண்டு இருக்கும்போதோபையில் இருந்த நான்கு வெங்காயத்தை எடுத்து மீண்டும் வியாபாரம் செய்கிறாராம் பலே வியாபாரி. அதை உஷாராக பார்த்துவிட்ட பெண்மணி ஒருவர் தெருவுக்கே தமுக்கு அடித்து விட்டார். தலைவர் இனி தெருப்பக்கம் வர 144  போட்டாகிவிட்டது. அதே நேரம் வியாபாரி கொஞ்சம் அசந்தால் இரண்டு தக்காளி/வெங்காயத்தை தன் பையில் போட்டுக்கொள்ளும் ஆண்ட்டிகளும் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு என்ன தண்டனைடெல் மீ
..................................................................................

படிக்காத மேதை:
வருடா வருடம் புத்தக கண்காட்சிக்கு சென்று சேகுவேரா வரலாறு, இருண்ட ஆப்ரிக்கா ஒரு பார்வை என்று வகை வகையாக புத்தகம் வாங்கினாலும் அனைத்தையும் படிக்க நேரமில்லை. ஆனாலும் அதை வாங்குவதற்கு ஒரே காரணம்தான். தெரிந்தவர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கையில் யாருமே தராத சுவர்க்கடிகாரம், காபி கப்புகள், பிள்ளையார் படம் போன்ற அதிசய பொருட்களை தராமல் புத்தகங்களை அன்பளிப்பாக தந்துவருகிறேன்

                                                                          
பிரசித்தி பெற்ற சென்னை புத்தக கண்காட்சி இன்னும் சில நாட்களில் களை கட்ட உள்ளது. நேரம் இருந்தால் வாருங்கள். புத்தங்களை கண்டெய்னரில் ஏற்றிச்செல்லுங்கள்.  
....................................................................................

தாம் தூம்: (விருதுகள் 2011)

'1..2...3... நா பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன். நீ பாட்டுக்கு அடி' விருது:
வின்னர் - வேற யாரு. நம்ம பன்மோகன்தான். என்னா அடி!!  

'அந்த 2 லட்சத்த ரூவா பணத்த இந்த வண்டுமுருகன் கிட்டதான் குடுத்து வச்சிருக்கேன்' விருது - வின்னர்: தகத்தாய கதிரவன் ராசா. 

'குத்தாலத்துல இருக்க வேண்டியவன் எல்லாம் இங்க வந்து என் உசுர வாங்கறீங்களேடா' - வின்னர்: (லோக்)சபாநாயகர்  மீரா குமார். 

'மத்யானம் 3 மணிங்கறது என்னோட லஞ்ச் டைம். இந்த நேரத்ல அன்னத்துல கை வப்பனே தவிர யார் கன்னத்லயும்  கை வக்க மாட்டேன்' விருது:
வின்னர்: கேப்டன். 'ஜெ'க்கு எதிரா தவ்வி தவ்வி எப்பதான் பைட் போடுவீங்க?   

முக்கியமான விருது இறுதியில்....
........................................................................................

யுவன் யுவதி:
புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பவரும், சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் நிருபரும் பேசுவது ஆங்கில சேனல்களின் இன்ஸ்பிரஷேன் போல உள்ளது. 'சொல்லுங்க பீர் முகம்மது..டிபன் சாப்டீங்களா? தானே உக்காந்த 'தானே' புயல் நிலவரம் அங்க எப்படி இருக்குது பீர்?'  என மேடம் கேட்க அதற்கு நிருபர் 'இங்க ஒரே பனிமூட்டமா இருக்கு திவ்யா. நீ ஏம்பா இங்க நிக்கரன்னு கேட்டுட்டு ஆ..ஊ..னா மஞ்ச கொடிய தூக்கிட்டு ஆரவாரமா வந்துடறாங்க திவ்யா. நான் குஷ்பு இட்லி ரெண்டு சாப்புட்டேன். நீங்க திவ்யா?' என்கிற ரீதியில் பதில் சொல்கிறார்.

அன்பின் புதிய தலைமுறை ஓனர். செய்தி வாசிப்போர், நிருபர் பெயர்களை எழுத்தில் போட்டால் போதும். அதெல்லாம் முடியாதுன்னா ஒரு ஆளுக்கு ரெண்டு தடவைக்கு மேல இன்னொருத்தர பேர் சொல்லி கூப்புட வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ்ஸ்ஸ்!!
...........................................................................................

போராளி:
இந்தியா தொடரை வெல்வதை விட சச்சின் 100 அடிப்பாரா என்பதிலேயே ரசிகர்களும், மீடியாவும் குறியாக இருப்பது விடாமல் தொடர்கிறது. அவரும் நூறை தொடாமல் விடுகிறார். ஆஸி அணியை அவர்கள் நாட்டில் வென்று தொடரை இதுவரை கைப்பற்றவில்லை இந்தியா. அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலாவது அதை மனதில் கொண்டு துடுப்பை இயக்கினால் மட்டுமே பெருமை சேரும். சச்சினுக்கு பிரஷர் ஏற்றி, ரசிகர்களும் டென்ஷனில் நகத்தாலேயே ஸ்டெப் கட்டிங் செய்து கொண்டால் 'இது ஆவறதில்ல' !
.....................................................................................

மிளகா:

2011 இல் ப்ளாக்கை அளவுக்கு அதிகமாக கலக்கிய வார்த்தை 'பதிவுலகம்'. ஈரேழு உலகத்தின் லொக்கேஷன்களை கூட கூகுள் எர்த்தில் கண்டுபிடித்து விடலாம் போல. இந்த பதிவுலகத்த கண்டு புடிக்க படுற பாடு இருக்கே..!!
.......................................................................................

மௌன குரு:  
2011 ஆம் ஆண்டு வாலிபால் விளையாட்டில் சாதனை புரிந்த கல்லூரி வீரர்களுக்கு விருதளிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. தன் பெயரும் அதில் உள்ளதென சென்ற வாரம் என் டெல்லி நண்பன் மகிழ்ச்சியுடன் கூறினான். ஆனால் அவன் பெயரை இறுதி நேரத்தில் நீக்கிவிட்டனர் விழா நடத்தும் வேந்தர்கள். கேட்டதற்கு நேரில் வந்து பரிசு பெறுவோர்களுக்கு மட்டுமே கவுரம் செய்வோம் என்றனர். சில சொந்த காரணங்களுக்காக வர இயலவில்லை என்று நண்பன் கூறியும் பலனில்லை.

பொதுவாக வெற்றி பெற்றவர் அல்லது அவர் சார்பாக யாரேனும் வராவிடினும் கூட அந்த நபரின் பெயரை மேடையில் கூறி விருதுக்கு அவர் பெயர் தேர்வானதை கூறுவதே நாகரீகம். அதையும் செய்யாமல் தவிர்த்த சான்றோர்களுக்கு 'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான்' விருது வழங்குவதே சாலச்சிறந்தது. 
..............................................................................

சிவா மனசுல 'சக்தி':
இவ்வாண்டு என் பதிவுகளுக்கு ஊக்கமும், ஆரோக்யமான எதிர்கருத்தும் இட்ட அனைவருக்கும் நன்றி. அயலகம், தமிழகம் என பல இடங்களில் இருந்து நண்பர்களை பெற காரணமாக இருந்த கூகிள் நிறுவனத்திற்கு பெரிய வணக்கம். 2011 ஜனவரியில் சென்னையின் பிரபல பதிவர்களை புத்தக கண்காட்சியில் சந்தித்த நாள் தொடங்கி, சமீபத்தில் ஈரோட்டில் சங்கமித்த தோழர்களை கண்டது வரை எல்லாம் இனிய தருணங்களே. சில நேரங்களில் மனதில் பட்ட சிறு குறைகளை பதிவிட வேண்டி இருந்தது. எதிலும் நாகரீக எல்லை தாண்டாமல் இருந்தேன் என உறுதியாக நம்புகிறேன். நாளையும் நல்லதொரு தொடக்கத்தை அனைவருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்.

பர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து. குறிப்பாக குடும்ப,அலுவலக விஷயங்களை.ஹாஸ்யமான அல்லது ஆக்கபூர்வமான செயல்களை முன்வைக்க அம்மாதிரி பதிவுகளை வெளியிடுவதில் தவறே இல்லை. ஆனால் நேரில் அல்லது தொலைபேசியில் சொன்னதை வேறுமாதிரி புரிந்து கொண்டு செய்திகளை திரித்து பதிவிட்டால் அது ரசிக்கும் வண்ணம் இருக்காது என நினைக்கிறேன். நம்மைப்போல் அனைவரும் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா என்பது சந்தேகமே. அதனால் சின்ன அலாரம் அடிக்க வேண்டி உள்ளது. என்னை வழக்கம் போல துவைக்கும் 'புரிதல்' உள்ள நண்பர்கள் தாராளமாக வெள்ளாவியில் வைத்து வெளுக்கலாம். :-).

உண்மையை சொல்வதற்கு கூட நமக்கான எல்லையுண்டு. ஆசிரியர்கள், மேனேஜர்கள்...ஏன் பெற்றோர்களிடம் பேசுகையில் கூட நம் மனதில் 'ஆமா..நீ சொல்லித்தான் நாங்க திருந்தனுமா? வேலையப்பாரு' என்று சில பல சமயங்களில் எண்ணிக்கொள்வோம். அது தனி மனித உரிமை. நேரில் தெளிவாக பேசியும் கூட அதை வேறுவிதமாக புரிந்துகொள்ளும் நிலை இருக்கையில், பதிவுகள் மூலம் நம் எண்ணத்தை பிறருக்கு சரியாக புரிய வைப்பதற்குள் நாலு குடம் சோடா குடிக்க வேண்டி இருக்கிறதடா தேவுடா!

# சமீபத்தில் நான் வாங்கிய லேசான சிராய்ப்பு.
......................................................................................

பணமா? பாசமா?

'சாதுர்யம் பேசாதேடி. என் சலங்கைக்கு பதில் சொல்லடி' விருது:
வின்னர்ஸ்:  மேடம் அண்ட் சின்ன மேடம்.  

பத்மினி - வைஜயெந்தி மாலா போட்டி போட்டு ஆடும் இப்பாடலை பீட் செய்ய இதுவரை தமிழ்த்திரையில் வேறெந்த நடனக்கலைஞர்களும் வரவில்லை என்றே சொல்லலாம். ஜெ-ச தொண்டர்களுக்கு இப்பாடலை பெருமையுடன் டெடிக்கேட் செய்கிறேன்.                                                   

......................................................................................
         


.............................                                           
My other site:
agsivakumar.com

E-mail:
madrasminnal@gmail.com
............................


20 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

பர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து.///

இன்னமும் சங்கமத்துக்கான பீவர் விடலையா?

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி பிரகாஷ் said...

இவ்வளவு சொல்லியும்.....!! பெட்ரோலை ஊத்துங்க. யூ கன்டினியூ..

'ஆங்கில' புத்தாண்டு வாழ்த்துகள் பிரகாஷ்!!

rajamelaiyur said...

Happy new year dear friend

CS. Mohan Kumar said...

Puthiya thalaimurai matter :)))

Unknown said...

ஆந்திராகனுங்களுக்கு நேரம் சரியில்ல போல, புதுவருசம ஓகோன்னு இருக்க போகுது

விருதுகள் சூப்பர்

சங்கமம் சலசலப்பு இன்னும் முடியலையா?

பத்மினிய பாக்க முடியல

புத்தாண்டு வாழ்த்துக்கள் சிவா

Unknown said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள...அது என்னய்யா சிராய்ப்பு...அதான் துவச்சி எடுத்துட்டாங்க இல்ல..சரி சரி யாருக்கும் நான் சொல்லல...!..என்ன இருந்தாலும் அந்த கடைசி விஷயம் why this கொலவெறி!

! சிவகுமார் ! said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...
Happy new year dear friend//

Thanks Raja.

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

நன்றி சார்!

! சிவகுமார் ! said...

@ இரவு வானம்

பத்மினிய இனிமே யாராலயும் பாக்க முடியாது. ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் நைட் ஸ்கை!

! சிவகுமார் ! said...

//விக்கியுலகம் said...
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள...அது என்னய்யா சிராய்ப்பு...அதான் துவச்சி எடுத்துட்டாங்க இல்ல..சரி சரி யாருக்கும் நான் சொல்லல...!..என்ன இருந்தாலும் அந்த கடைசி விஷயம் why this கொலவெறி!//

துவச்சி எடுத்துட்டாங்களா? சொல்லவே இல்ல? மத்தவங்க கலாய்க்கறத நான் எப்படி எடுத்துக்கறேன் அப்டிங்கறதை பொறுத்துதான் சிராய்ப்பும், துவைத்தலும் கணக்கிடப்படும்.
அதால சிராய்ப்பே சரி.

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் மாம்ஸ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//# சமீபத்தில் நான் வாங்கிய லேசான சிராய்ப்பு.//

ஹி..ஹி... தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சும்பாங்க.....! புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஹி..ஹி... தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போச்சும்பாங்க.....! புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!//

உண்மைதாங்க. உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!!

Yoga.S. said...

வணக்கம் சிவகுமார்,சார்!முதலில் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!அப்புறம்,எனக்குப் பிடித்தது பணமா?பாசமா?தான்!(குடும்பத்தையே கூண்டோடு தூக்கப் போறதா சேதி வந்திருக்கு!)

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
ஸ்பெஷல் மீல்ஸ் இல் படங்கள் பற்றிய பார்வை கலக்கல்..
இளைஞன் படம்...நில் கவனி முன்னேறு எனும் பெயரில் என்று சொல்லி விட்டு நீங்கள் சேர்த்திருக்கும் அக்கினி கக்கும் வார்த்தை செம காமெடி. நண்பா.

அப்புறமா பதிவுலகில் நிறைய நண்பர்களை நீங்கள் பெற்றிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

நிரூபன் said...

புதிய தலைமுறை டீவி நான் இன்னமும் பார்க்கத் தொடங்கவில்லை, பெயர் போட்டு பாடாய் படுத்துறாங்களோ;-)))
உங்க ஊரில இருந்தா கண்டிப்பாக புத்தக கண்காட்சிக்கு வருவேன் நண்பா. மிஸ்ட் பண்றேனே..

நிரூபன் said...

ஸ்பெஷல் மீல்ஸ் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது நண்பா.

சி.பி.செந்தில்குமார் said...

>>பர்சனலாக பேசும் சீரியஸ் விஷயங்களை மறுமுனையில் இருக்கும் நண்பரின் அனுமதி பெறமால் பதிவிட வேண்டாம் என்பது என் கருத்து.///

hi hi hi sari sari vidunga , happy new year

Unknown said...

//தானே'வில் இருந்து ஆந்திரா மக்களு தப்பித்தாலும் தானைத்லைவனின் தொம்பி பா.விசய்யிடம் இருந்து தப்ப முடியாதண்டி!//
:-)

//எதிலும் நாகரீக எல்லை தாண்டாமல் இருந்தேன் என உறுதியாக நம்புகிறேன். நாளையும் நல்லதொரு தொடக்கத்தை அனைவருக்கும் தர இறைவனை வேண்டுகிறேன்//

கலக்கல்ஸ்!
புது வருடத்தில் நிறைய எழுதுங்க பாஸ்!
நிறையப் படம் பாருங்க..மறக்காம விமர்சனம் எழுதுங்க! :-)

RVS said...

புத்தாண்டு வாழ்த்துகள் சிவா! :-)

indianist said...

how to watch Puthiya thalaimurai tv channel in mobile?

Related Posts Plugin for WordPress, Blogger...