CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, December 25, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (25/12/11)உலகம் சுற்றும் வாலிபன்:

 
"ஏக் காவ் மே ஏக் பி.எம். ரஹ தாத்தா. சியர்சு"

"நக்கலா. அதையும் இதுல ஊத்துங்க பாஸ். அணை, அணு உலை, ஈழம், மீனவன் பிரச்னைன்னு இந்த டமிலனுங்க டார்ச்சர் தாங்கல"
...................................................................................

தர்மம் தலைகாக்கும்: 
(அன்னா ஹஜாரே)

பசி உசுர வாங்குதுன்னு
சோறு கேட்டா எவனும்
உதவாத தேசம்.

பசிலயே உசுரு போவட்டும்
அனுமதி தாங்கன்னு கேட்டாலும்
கண்டுக்காதது மோசம்.
......................................................................................


நீங்களும் ஹீரோதான்:

செய்தி: லோக்பால் குழுவில் இட ஒதுக்கீடு வேண்டும். தலைவர்கள் முடிவு.

மகளிர் மசோதா தாக்கல் செய்யும்போதும் இதே மாதிரி குட்டைய கொளப்பி அதை வரவிடாம செஞ்சீங்க. இப்ப இங்கயுமா? லோக்பால்ல எல்லா மதத்து ஆளுங்களும் அங்கம் வகிச்சிட்டா நாங்க எங்க போறது? எங்களுக்கும் இட ஒதுக்கீடு தந்தே தீரனும். இல்ல..சபாநாயகர் மைக்க கடிச்சி தின்னுபுடுவோம். 
 # நாத்திகர்ஸ்.
........................................................................................

திருவிழா:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஆபீசில் அமர்க்களப்பட்டன. வாரம் முழுக்க நடந்த நிகழ்ச்சிகளில் இறுதியாக மற்ற அணியில் இருந்த தேவதைகளை அழைத்து வந்து பாட வைத்தார்கள். பத்து மைனாக்கள் கோரசாக பாடுவதை நேரடியாக கேட்டது இதுதான் முதல் முறை. அருமை. அருமை.

.............................................................................................

நேபாளி: 
காலைல 11 மணிக்கு நல்லா தூங்கிட்டு இருக்கும்போது மாசம் ஒரு தபா கதவ தட்டி "சாப். கூர்க்கா சாப்"ன்னு ஒருத்தன் வந்து நிக்கறான். ''தூங்குற சிங்கத்த சொரண்டாத. போயிடு''ன்னு ரொம்ப வாட்டி சொல்லி இருக்கேன். நேத்து பொங்கிட்டேன் "என்னது கூர்க்காவா? நான் ரொம்ப நாளா ராத்திரில இதே தெருவுலதான் நடந்து வர்றேன். நிம்பள ஒரு நாள் கூட பாத்தது இல்லையே? யாரு கிட்டே காது குத்ரே?"ன்னு கேட்டதுக்கு என்னைய லேசா மொறச்சிட்டு போயிட்டான். நாளை பின்ன ராத்திரில ரோட்ல எப்படி நடப்பேன்...வெரட்டி வெரட்டி வெரைட்டியா வெட்டுவானோ? பாட்டி சொல்லி இருக்கு "இது ஓடற பாம்ப(பாம்பு ஓடுமா?) மிதிக்கற வயசு"ன்னு. பதறாத. த..கி..ரி..ய..மா போடா சூனா பானா.   

................................................................................................


ஜித்தன்:
வேலை செய்ற இடத்துல புதுசா ஒரு உணவகம் திறந்துருக்காங்க. உண்டு களிப்போம்னு போயி "ஒரு பரோட்டா" கேட்டுட்டு சகலைங்க கிட்ட பேசிட்டு இருந்தேன்.  அடுத்த நிமிஷமே போட்டு கொடுத்தான். என்ன வேகம்டா. இனிமே இங்கதான் திங்கம்னு முடிவு செஞ்சேன். அடுத்து ஒரு நண்பர் பரோட்டா கேட்டாரு. ப்ரிட்ஜுல காலைல இருந்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்த பரோட்டாவை எடுத்து கல்லுல போட்டு சூடு பண்ணாரு மாஸ்டரு. திகில் ஆகி நான் மாஸ்டர் கிட்ட சொன்னது: "அண்ணே, இந்த பரோட்டாவ செரமமே இல்லாமே டக்குனு பிச்சி கொடுங்க. அப்பறம் திங்கறேன்". வெக்கப்பட்டு சிரிச்சாரு மாஸ்டரு. எப்படி எல்லாம் டெவெலப் ஆகி போறாய்ங்க......

........................................................................................


மகா நடிகன்: 
கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லிவிட்டு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் விடுமுறை தின வாழ்த்து சொல்லும் கலைஞரே. பெரியார் 'சமத்துவ'புரத்தில் உங்களுக்கு ஒரு வீடு கன்பர்ம்.
........................................................................................

மயக்கம் என்ன 
'ஈரோடு பதிவர் சந்திப்பு பத்தி பதிவு போடுறதை இன்னும் சிறப்பா எப்படி கொண்டு போகலாம்'என்று 12 பேர் கொண்ட செயற்குழு ஆலோசித்ததில் சில முத்தான யோசனைகள் முன் வைக்கப்பட்டன. 'பதிவர் சந்திப்பிற்கு வெளியூர்  செல்லும் எண்ணம் உருவான விதம்' பற்றிய நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது சிறந்த யோசனையாக தெரிகிறது. பண்ணிடுவோம்.
................................................................................

சதுரங்கம்:

                                                           கொனேரு ஹம்பி

துருக்கியில் நடக்கும் உலக மகளிர் சதுரங்க போட்டியில் இந்தியா வெற்றிகளை குவித்து வருகிறது. முன்னணி வீராங்கனை கொனேரு ஹம்பி அனைத்து ஆட்டத்திலும் வென்று வருகிறார். இதுவரை சீனா, இந்தியா முறையே முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. சீனா 12, இந்தியா 9 புள்ளிகள் பெற்றுள்ளன. வரும் செவ்வாய் இறுதி சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன. வெல்க இந்திய மகளிரே!

சதுரங்க போட்டிகளில் உலகில் உயர்ந்த இடத்தை அடைந்து இந்தியாவுக்கு பல ஆண்டுகளாக பெருமை தேடித்தந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பாரத ரத்னா கிடைக்குமா என ஊடகங்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து கேட்டதற்கு வழக்கம்போல அமைதியாக பதில் அளித்துள்ளார் ஆனந்த் "சரியான முடிவை அரசே எடுக்கும். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை".

என்னதான் கத்தினாலும் பல விளையாட்டுகளில் அளப்பரிய சாதனைகள் பல புரிந்தவர்களை புறக்கணித்துவிட்டு சச்சினுக்கு முதலில் பாரத ரத்னாவை  தந்துவிட்டுதான் தூங்குவார்கள் நம்ம ஆட்கள் என்பது நாடறிந்தது. நடத்துங்க ராசா!
..................................................................................................
                                           
ஒஸ்தி:
சமீபத்தில் சுகா'சினி' மேடம் அளித்த பேட்டி: "டாம் க்ரூஸ் கொஞ்ச நாளைக்கு முன்ன இந்தியா வந்தப்ப என்ன பாக்கனும்னு சொன்னார். ஆனா நான் ரொம்ப பிசி. பாக்கறது கஷ்டம்னு சொல்லிட்டேன்".

 # லேடன்ட்ட பேசறியா. பின் லேடன்.
....................................................................................

சாணக்யா: 
தமிழ்நாட்டை கண்டுக்காம நாடு நாடா சுத்தராறு பி.எம். வடநாட்டு பெரிய கட்சி எதுவும் எட்டிக்கூட பாக்கல. பக்கத்து மாநிலக்காரன் எல்லாம் முஸ்டிய தூக்கிட்டு நிக்கறான். எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ்தான் காரணம். இதுக்கு மேலயும் பொறுக்க முடியாது. சூப்பர் சுருளியின் திட்டத்த ஒடனே அமல்படுத்த அரசு முடிவெடுக்கணும்.


............................................................................................

கடலோரக்கவிதைகள்:
புரட்சித்தலைவரின் கலக்கலான பாடல்களில் இதற்கு தனி இடமுண்டு. டி.எம்.எஸ்...சிம்மக்குரலோன். இப்பாடல் குறித்து ஒரு முறை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் அளித்த பேட்டி: "சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தேன். ஒரு நாள் அதைப்பார்க்க எம்.ஜி.ஆர். வந்திருந்தார். அதில் ஒரு வசனம் பேசுவார் துணை நடிகர் "காற்று வாங்கப்போனேன்..அருமையான பாடல்" என்று. அதற்கு நான் "காத்து வாங்கப்போனவர் அத வாங்காம எதுக்கு கவிதை வாங்கிட்டு வந்தார்" என்று சொன்னேன். அனைவரும் சிரித்தனர். நாடகம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். எங்களைக்காண வந்து கொண்டிருந்தார். கூட இருந்தவர்கள் "டேய்..பொடியா. என்ன தைரியம் இருந்தா தலைவர் முன்னாலேயே இப்படி வசனம் பேசி இருப்ப. தீந்த போ" என்று பயமுறுத்தினர். ஆனால் என்னருகே வந்த எம்.ஜி.ஆர் "நல்ல நகைச்சுவை உணர்வு" எனக்கூறி வாழ்த்தி விட்டு சென்றார்". மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் உன் பேச்சிருக்கும்.  

...................................................................................

.............................
My other site:
agsivakumar.com
.............................

......................................................
சமீபத்தில் எழுதியது:
........................................................

                                                                  

24 comments:

Prem S said...

//கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லிவிட்டு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் விடுமுறை தின வாழ்த்து சொல்லும் கலைஞரே. பெரியார் 'சமத்துவ'புரத்தில் உங்களுக்கு ஒரு வீடு கன்பர்ம்.//கலக்கல் உண்மையும் கூட

இளம் பரிதி said...

nice..nice...

சேலம் தேவா said...

திருவிழான்ற தலைப்புல படம் வந்துச்சா பாஸ்..?!

வெளங்காதவன்™ said...

///கலைஞரே. பெரியார் 'சமத்துவ'புரத்தில் உங்களுக்கு ஒரு வீடு கன்பர்ம்///

(இன்னுமொரு) சின்ன வீடா தல?

:-)

முத்தரசு said...

அறுசுவை விருந்து - அமர்க்களம்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

! சிவகுமார் ! said...

@ பிரேம்

தலைவர் டென்சன் பண்றார் பிரேம்.

! சிவகுமார் ! said...

/ Elamparuthi said...//

Thanks friend.

! சிவகுமார் ! said...

@ வெளங்காதவன்

தெரியாதுங்கோ. சென்னைல இருக்கறேன். கோத்து விட்றாதீங்க அண்ணே.

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் நண்பா.

! சிவகுமார் ! said...

//சேலம் தேவா said...
திருவிழான்ற தலைப்புல படம் வந்துச்சா பாஸ்..?!//

ஆமாம் தேவா. எஸ்.ஜே.சூர்யா நடிச்ச 'மெகா ஹிட்' படம்!

நாய் நக்ஸ் said...

Aama....innumaa
neenga singatha
parththu illai.....

Enna partha pirakuma ?????
Unga I - i nalla test pannunga
boss.....

நாய் நக்ஸ் said...

Mess kararey-----innuma
comment modertion
vaichirukkeenga......

Theriyaama.....comment
pottutene.....

Yoga.S. said...

காலை வணக்கம்,சார்!உங்களுக்கு இனிய நத்தார் வாழ்த்துக்கள்,உரித்தாகட்டும்!அருமையான சாப்பாடு!(மீல்ஸ் அப்புடீன்னா,தமிழுல சாப்பாடு தானே?)

Unknown said...

சிவா...புரோட்டாவை கைய கழுவிகிட்டு பிச்சு போட சொல்லுங்க....

கூர்கா கிட்ட பார்த்து வச்சுக்கங்க பாஸ் கத்திய எடுத்தா ரத்தம் பார்காம வைக்க மாட்டான்.....வேனா அடுத்ததடவை வரயில சிக்கன் கால் கிலோ எடுத்து கொடுத்திடுங்க...வெட்டி திங்கட்டும் ஹிஹி

கலைஞருக்கு ஒரு கொட்டு...

ஈரோடு சந்திப்பு பத்தி இனி சன் டிவியில போட்டாலும்...நமக்கு ஒன்னும் இல்லை...நாய்நக்ஸ்க்கு வேனா எதாவது கிடைக்கும்

செஸ் வீராங்கனை!?தகவல் அருமை

எம்ஜிஆர் பெருந்தன்மையை காட்டிய தொகுப்பு அருமை

அனைத்து தகவலும் அருமை ஆமா மைனாக்களோடு நீங்க பாடலையா....

கோகுல் said...

கிறிஸ்துமஸ், ரம்ஜான் வாழ்த்துகள் சொல்லிவிட்டு தீபாவளி, விநாயகர் சதுர்த்தி வந்தால் மட்டும் விடுமுறை தின வாழ்த்து சொல்லும் கலைஞரே.

//
அண்ணே!இதுக்குப்பெயர்தான் பகுத்தறிவு(!)

கோகுல் said...

உலகம் சுற்றும் வாலிபன்:
/
தமிழ்நாடு ஏதோ வெளிநாடுன்னு நினைச்சு வந்துட்டாருன்னு நினைக்கிறேன்.

Mahan.Thamesh said...

பல்சுவை விருந்து தந்து அமர்களப்படுத்தி விட்டீங்க நண்பா

CS. Mohan Kumar said...

சுகாசினி பற்றி எழுதிய விதம் சிரிக்க வைத்தது (லேடன்ட்ட பேசுறியா?:))

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்/டாக் லிக்ஸ்

லொள்ளு அண்ணே, இனிமே நீங்க தமிழ்ல கமன்ட் போட்டாதான் பதில் சொல்வேன். லொள்!!

! சிவகுமார் ! said...

@ கோகுல்

//தமிழ்நாடு ஏதோ வெளிநாடுன்னு நினைச்சு வந்துட்டாருன்னு நினைக்கிறேன்.//

இந்தியாவே வெளிநாடுதான் தம்பி அவருக்கு!!

! சிவகுமார் ! said...

@ யோகா

மீல்ஸ் என்பதற்கு தமிழில் 'சாப்பாடுகள்' என்று பொருள். ஆனால் நவீன தமிழ் சாப்பாட்டை மீல்ஸ் என்றே அழைத்து பழகிவிட்டது.

! சிவகுமார் ! said...

@ வீடு

மைனாக்களோடு சிங்கம் பாடியதாக சரித்திரமுண்டோ?

! சிவகுமார் ! said...

@ மகன் தமேஷ்

நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

சுகா'சினி' பேசுறத கேளுங்க சார். நிறைய சிரிப்பீங்க.

Related Posts Plugin for WordPress, Blogger...