CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, December 27, 2011

திரை விரு(ந்)து 2011இவ்வாண்டு வெளியான தமிழ்ப்படங்களில் ஒரு சிலவற்றை பார்த்துவிட்டு அதன் பின் அவை சுட்ட படம் என்று அறிந்ததும் கடுப்பானதுண்டு. பதிவர்கள் சிலர் எப்படியோ கண்டுபிடித்து சுட்டிக்காட்டுவர். அவர்களுக்கு சலாம். அப்படி நொந்ததில் ஒன்று தெய்வத்திருமகள். முரண், மௌனகுரு போன்ற படங்கள் முறையே Strangers on a train, Fargo படங்களின் 'அலேக்' என பதிவர்கள் வாயிலாக கேள்விப்பட்டேன். 

தமிழில் இரண்டு படங்கள் மிகவும் கவர்ந்தன. பயணம்,எங்கேயும் எப்போதும். இரண்டு படங்களிலும் முன்னணி தமிழ் நாயகர்கள் இல்லை. இறுதிவரை  பார்க்க தூண்டின. நாகார்ஜுனா, பிரகாஷ்ராஜ் நடிப்பு பயணத்தில் சிறப்பாக அமைந்தன. சில லாஜிக் விஷயங்கள் இடித்தாலும் பயணம் குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். ராதா மோகனிடம் இருந்து இப்படி ஒரு முயற்சி எதிர்பாராதது. ஆனால் அதை விட எங்கேயும் எப்போதும் ஓரடி முன்னால் நின்றது என்பது என் கருத்து. தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் வண்டியை பத்திரமாக ஓட்ட வேண்டுமென மனது அடித்துக்கொண்டது என்று  பலர் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம். இறுதிக்காட்சியில் பிரசங்கம் செய்யாமல் சொல்ல வந்ததை குறிப்பில் உணர்த்தியது பிடித்திருந்தது.

ஆடுகளம், மயக்கம் என்ன போன்றவை சிறந்த படத்திற்கான வலுவான அடித்தளத்தை வைத்திருந்தாலும் இறுதிக்காட்சிகள் தொய்வாக இருந்ததது மைனசாக படுகிறது.

பிடித்த படம்: எங்கேயும் எப்போதும்மகா மொக்கை: ராஜபாட்டை

லத்திகா உள்ளிட்ட பல படங்களை பார்க்காமல் எகிறி ஓடினாலும் அவன் இவன், வெடி, வெப்பம், ஏழாம் அறிவு, வேங்கை போன்ற படங்களிடம் இருந்து தப்ப முடியாமல் சிக்கினேன்.ஆனால் என் வாழ்நாளில் பார்த்த படுமொக்கையான படங்களில் விக்ரம் நடித்த 'கிங்'கை மறக்க முடியாது. அதில் வடிவேலு இருந்ததால் கொஞ்சம் சிரிக்க முடிந்தது. ராஜபாட்டை..தீக்ஸாவை நம்பி மட்டுமே போனாலும் அவரையும் சில காட்சிகளில் மட்டுமே காட்டி கடுப்பேற்றினர். வாழ்நாளில் பார்த்த கொடுமையான படம் கிங். இவ்வருடம் பார்த்தது ராஜபாட்டை. இரண்டிலும் விக்ரம்(பம்). இரண்டு பட டைட்டிலிலும் 'ராஜா' ஒளிஞ்சிருக்கு. 'எதுக்கு இதுக்கு ராஜபட்டைன்னு பேர் வச்சாங்க' என்று தியேட்டரில் நண்பர்கள் பலர்  புலம்பினர். எதுக்கு சார் இதுக்கு இந்த பேர வச்சீங்கோ?...முடியல..!
.........................................................................................

பிடித்த நடிகை: சாரா

                                                                   
சிறந்த நடிகர், நடிகை விருதை ஏன் பெரியவர்களுக்கு மட்டுமே தர வேண்டும். அவர்களை விட சுட்டிகள் நன்றாக நடித்திருந்தால் குழந்தை நட்சத்திரம் என்று தனிவிருது தராமல் சிறந்த நடிகர்/நடிகை விருதை தரலாமே என நான் எண்ணியதுண்டு. தாரே ஜாமீன் பர் படத்தில் நடித்த தர்ஷீல் கூட இப்படி ஒரு கேள்வியை எழுப்பி சண்டை போட்டான். கடைசியில் அமீர் கான் சமாதானம் செய்த பிறகே அமைதி ஆனான். அது போல் தெய்வத்திருமகளில் சாராவின் நடிப்பு, குறிப்பாக நீதிமன்றத்தின் உள்ளே விக்ரமை பார்த்து சமிஞ்ஞை செய்யும் போது நம் கண்களை கலங்கடித்து விட்டாள். அண்ணன் தரும் சிறுவிருதை ஏற்றுக்கொள்ளடி என் செல்ல தங்கச்சி!!
.......................................................................................

பிடித்த நடிகர்: தனுஷ்

                                                             
"நாங்கல்லாம் மாசு. எங்களுக்கு விருது எல்லாம் வேண்டாம்' (யாரும் தரப்போறதா சொல்லவே இல்லியே) என்று ஒரு அணி(விசய், சிம்பு..). சிறந்த வாலிபால் வீரர் விருது குடுத்தால் கூட அதையும் கைப்பற்றியே தீரனும் எனும் ஆர்வக்கோளாறில் ஒவ்வொரு படத்திலும் மாறுவேடப்போட்டி நடத்தி மண்டை காய வைப்போர் மறு அணி(கமல், விக்ரம், சூர்யா..). இரண்டிற்கும் நடுவில் தனி ரோடு போட்டு ஹைவேஸில் பறக்கிறார் தனுஷ். ஆடுகளத்தில் அமர்க்களமான நடிப்பு. பெரியவரை மீறி தனியாக சேவல் சண்டைக்கு செல்லும்போதும், ஒத்த கண்ணால ஆடும்போதும்..செம!

மயக்கம் என்ன படத்தில் சீனியர் ஒருவர் தன் புகைப்படத்தை திருடியது கண்டு அதை தட்டி கேட்க போட்டோ சூட் நடக்கும் இடத்திற்கு செல்வார். அங்கு தனுஷை துரத்திவிடுவார்கள். அப்போது இவர் காட்டும் முகபாவம்...தேசிய விருதுக்கு 100% தகுதியான ஆள்யா நீரு.
...........................................................................................

பிடித்த வில்லன்: ஜான் விஜய்


என்ன ஒரு வில்லத்தனம்! 'மௌனகுரு'வில் போலீசாக பின்னி பெடல் எடுத்து இருப்பார். கண்ணா அது. கத்தி. பதட்டம், கோபம், நக்கல் என சுழற்றி அடித்த இவர், பச்சையாக பேசுவதை கொஞ்சம் குறைக்கலாம் என்பது என் கருத்து. சுருக்கமாக சொன்னால் தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷம். .                                                                              
......................................

பிடித்த நகைச்சுவை நடிகர்(கள்): சாம்ஸ் மற்றும் பப்லு

                                                           
பயணத்தில் இவர்கள் செய்த அலப்பறையை மறக்க முடியுமா? தியேட்டர் குலுங்கியது. மாஸ் ஹீரோக்களை ரவுசு விடுவதில் இது ஒரு தனி ரகமாக இருந்தது. பெரிய வெளிச்சம் படாத ஆனால் திறமையுள்ள சாம்சுக்கு அருமையான களம் அமைத்து தந்த ராதாமோகன், பிரகாஷ்ராஜ் இருவரையும் பாராட்ட வேண்டும். சாம்சின் நக்கலுக்கு ஷைனிங் ஸ்டாராக வரும் பப்லு குடுக்கும் ரியாக்ஷன் சூப்பர்ப். அட்டகாசமான பயணம்!!

திரைவிரு(ந்)து 2011. தொடரும்.

..............................................................

..................................
My other site:
agsivakumar.com
.................................
                                                  
                                                    

17 comments:

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யமா இருக்கு

நானும் விருது லிஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன். விரைவில் (ஒரு பதிவில் அனைத்தும்) வெளியிடப்படும். நீங்க முந்திகிடீங்க. நீங்கள் சொன்ன பல விஷயங்கள் நானும் ரசிதவையே

தமிழ்வாசி பிரகாஷ் said...

இரண்டிலும் விக்ரம்(பம்). இரண்டு பட டைட்டிலிலும் 'ராஜா' ஒளிஞ்சிருக்கு. 'எதுக்கு இதுக்கு ராஜபட்டைன்னு பேர் வச்சாங்க'///

யாரையோ தாக்க மாதிரி இருக்கே?

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

உங்கள் பதிவிற்கு காத்திருக்கிறேன்!

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி பிரகாஷ்

//யாரையோ தாக்க மாதிரி இருக்கே?//

ஏற்கனவே பதிவுலகம்(ஏழு உலகம் இருக்கிறது பத்தாதுன்னு இது வேற) இன்னைக்கி தீயா கொழுந்துவிட்டு எரியுது. நீங்க வேற திரியை முறுக்கறீங்க. ரைட்டு!!

நாய் நக்ஸ் said...

Right-u
left-u
arumai...
Super
:)
pagirvukku nanri
arumai yana
thagaval....
Purinthu konden...
Vazhthukkal

Unknown said...

ஹிஹி..எல்லா நல்லா கீது ராசா!

MANO நாஞ்சில் மனோ said...

புது வருஷமும் அதுவுமா ஒரே விருந்து அவார்டுதான் போங்க ஹி ஹி..!!!

Unknown said...

தம்பி ஓட்டு போட்டுட்டேன் :)))

Philosophy Prabhakaran said...

நமக்கு பைக் ஓட்டி பழக்கமில்லை என்பதாலோ, அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்வதில்லை என்பதாலோ என்னை எங்கேயும் எப்போதும் படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை...

ஓகே பிடித்திருந்தது... ஆஹோ ஓஹோ என்றெல்லாம் சொல்ல மனம் வரவில்லை...

தவிர சரவ் - அனன்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிறைய லாஜிக் பொத்தல்கள்...

Philosophy Prabhakaran said...

கதைக்கு தேவை என்றால் நீச்சல் உடையில் நடிக்கத் தயார் - நடிகை சாரா துணிச்சல் பேட்டி

(இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டி வரும்)

Philosophy Prabhakaran said...

நீங்க தனுஷை பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களான்னு எனக்கு சத்தியமா புரியல... மயக்கம் என்ன படம் பற்றிய பதிவிலும் இதையே கேட்டேன் என்று நினைக்கிறேன்....

Prem S said...

நாங்கல்லாம் மாசு. எங்களுக்கு விருது எல்லாம் வேண்டாம்' (யாரும் தரப்போறதா சொல்லவே இல்லியே) என்று ஒரு அணி(விசய், சிம்பு..). //கலக்கல் அன்பரே

Yoga.S. said...

வணக்கம்,சார்!அருமை!அந்த சுட்டிப் பெண் சாரா டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரின் மகளாம்.கோர்ட் சீனை விட ஸ்கூலுக்கு வரும் விக்ரமுடன் பேசுவது கூட அழகாயிருந்தது!அதிலும் மெளன பாஷை..........சான்சே இல்லை!!!!!!! நானும் விருது கொடுக்கிறேன்!

சேலம் தேவா said...

அனைத்தும் நல்ல தேர்வுகள்..!!

Anonymous said...

ஆஹா அட்டகாசமா இருக்குங்க உங்க தொகுப்பு.. இடைல நீங்க குடுக்கற விளக்கம் நச்சுனு இருக்கு.. கிட்டத்தட்ட என்னோட லிஸ்ட் இதுதான்..

இந்த புத்தாண்டில் சில வார்த்தைகள்..

வினோத் கெளதம் said...

தலைவா,

Fargo படத்துக்கும் மௌனகுரு படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு கர்ப்பிணி பெண் இன்ஸ்பெக்டர் என்பதை தவிர.படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விகரம் போற போக்க பார்த்தா அடுத்து நம்ம சின்ன டாகுடருக்கு கடும் போட்டியா வந்துடுவாரு போல....

Related Posts Plugin for WordPress, Blogger...