CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 23, 2011

2011 பிடித்த பாடல்கள்தமிழில் எந்தப்பாடலை யார் பாடினர் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஆண்டுதோறும் புதுப்புது அறிமுகங்கள். 'என்னம்மா பாடறாங்க. யாருன்னு தெரியலியே' என யூகிக்க முடியாமல் சில நாட்கள் இருந்துவிட்டு இணையத்தில் பார்த்த பின்பே அவர்களின் பெயர் பரிச்சயம் ஆகிறது இப்போதெல்லாம். 'கண்கள் இரண்டால்' பாடலுக்கு பிறகு என்னை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல் எதுவும் வரவில்லை. ஆனால் அபிமான பாடல்களுக்கு பஞ்சமில்லை. இவ்வாண்டு நான் பார்த்த படங்களில் பிடித்த பாடல்களை பகிர்வதில் மகிழ்ச்சி: 

பிறமொழிப்படங்களில் எனது அபிமான பாடல்கள் ஐந்து. ஹிந்தியில் தில்லி தில்லி(நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா), டப்பா(ஸ்டான்லி கா டப்பா) ஆகிய படங்களின் பாடல்கள். முதலில் சொன்ன படத்தில் தில்லி நகரை மையமாக வைத்து டைட்டில் சாங்கை பரபரப்பாக பாடியும், படமாக்கியும் இருப்பார்கள். அடுத்த பாடல் பள்ளிப்பிள்ளைகளின் டிபன் பாக்சை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கும். காட்சிகளும் சுவாரஸ்யம்.

படம்: நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா
குரல்: டோசி ரைனா,ஸ்ரீராம்.  
                                                   


படம்: ஸ்டான்லி கா டப்பா
குரல்: சுக்விந்தர் சிங் 

....................................................................................

மலையாளத்தில் இரண்டு படங்களின் பாடல்கள் அருமையாக இருந்தன.
         
படம்: இண்டியன் ருபீ. குரல்: சுஜாதா,ஸ்ரீகுமார்
                 

     
படம்: ஆதமிண்டே மகன் அபு
குரல்: சங்கர் மகாதேவன், ரமேஷ் நாராயண்                                   
                                              

........................................................................

படம்: ஸ்ரீ ராமராஜ்யம்(தெலுங்கு) இசை: இளையராஜா. 
குரல்: எஸ்.பி.பி., ஸ்ரேயா கோஷல்  


.............................................................................

தமிழ்ப்படங்களில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு  படத்தில் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பும். அப்படி சென்ற ஆண்டு அசத்தியது 'பையா'. யுவனின் இசையில். சில வருடங்களாக ஹிட் ஆல்பம் தருவதில் ஹாரிஸ் முன்னணியில் இருந்தார். ஆனால் இம்முறை கோ,ஏழாம் அறிவு போன்றவற்றில் ஓரிரு மேஜிக்குகள் மட்டும் தந்தால் போதுமென இருந்துவிட்டார் போல. இவ்வருடத்தில் எனக்குப்பிடித்த ஐந்து பாடல்கள்:

5. என்னமோ ஏதோ - நெருடாத இசை. அழகிய வரிகள்.
   

4. அமளி துமளி - அட்டகாசமான லொக்கேஷனில் எடுக்கப்பட்ட பாடல். 
    கார்த்திகா அக்காவின் முகபாவம் பாடலுக்கு திருஷ்டி.  
                               


3. ரசிக்க வைக்கும் காட்சிகள். நகைச்சுவையான வரிகள். சென்னை மக்களிடம் அனன்யா படும் பாடு. எல்லாம் அருமை. மிகவும் பிடித்த வரி 'ட்ரெயிலர் போல முடிந்திடுவாளோ.ட்ரெயினை போல தொடர்ந்திடுவாளோ'.விஜய் பிரகாஷ்..குரல் அரசன்யா நீரு.                        


2. சாதாரண ஆள் காதலை எப்படி கொண்டாடுவான் என்பதை ஏகப்பட்ட தமிழ்  படங்களில் காட்டியிருப்பினும், தனுஷ் மற்றும்  தினேஷ் மாஸ்டர் இணைந்து தூள் கிளப்பிய இப்பாடல்தான் என்னைப்பொறுத்தவரை பெஸ்ட். ஜி.வி.யின் சிறந்த  இசையும், வேல்முருகனின் நாட்டுவெடி குரலும் அமோகம். 


................................................................................................................................................

1. இவ்வாண்டு வெளிவந்த பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்த பாடல் வாகை சூட வா படத்தில் இருந்து 'செங்க சூளக்காரா'. அனிதாவின் அசர வைக்கும் வாய்ஸ். என்ன ஒரு ஏற்ற இறக்கம்!!

கவிஞர் வைரமுத்துவின் 'மை'யாட்சியில் அனைத்து வரிகளும் தீப்பொறி. குறிப்பாக இறுதி வரியான 'வேர்வ தண்ணி வீட்டுக்குள்ள வெளக்கு ஏத்தும் வாடா'. .........................................
விரைவில்: 
பிடித்த படங்கள் 2011 
.........................................
.............................
My other site:
............................

............................................................
சமீபத்தில் எழுதியது:

............................................................


28 comments:

எப்பூடி.. said...

நீங்க முந்திகிட்டாலும் என்னோட லிஸ்ட் வந்தே தீரும் :-))) மற்ற மொழிப் பாட்டெல்லாம் கேட்க எனக்கு சந்தர்ப்பம் அமையல(நான் அமைச்சுக்கல) உங்க லிஸ்டில ரெண்டு பாட்டு என்னோட top 10 ல வரும்:-)))

kanagu said...

ஒத்த சொல்லால தான் பட்டைய கிளப்புன பாட்டு. டான்ஸ் தாறுமாறு.

மற்றவையும் நல்ல தேர்வு.. :) அமளி துமளி என்னை கவரவில்லை. ஹாரிஸ் அவுட் ஆப் ஃபார்ம்-ல தான் இருக்காரு.

‘நண்பன்’ எப்படி-னு பார்ப்போம் :)

கவி அழகன் said...

நல்ல ரசனை வாழ்த்துக்கள்

சேலம் தேவா said...

தொகுப்பு நல்லாருக்கு பாஸ்.. :)

நாய் நக்ஸ் said...

Evar green....
Padalgal thanya....
Ella varushamum
top.......

நாய் நக்ஸ் said...

Comment Approval...
Vaithal......
Comment poda padaathu

நாய் நக்ஸ் said...

Kummi adikkanum....
Athai udane
parthaa thane....
Comment poda
vasathiya irukkum....

Unknown said...

என்ன சிவா, நாய் நக்கிய நக்ஸ் பதிவெங்கே, ஆடு கோச்சுக்காது, கழுவி கழுவி ஊத்துங்கப்பா

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லதொரு ரசனையான பதிவு...

தமிழ் மட்டும் இல்லாமல் மற்ற மொழிப்படல்களையும் குறிப்பிட்டது மிகவும் ரசிக்ககூடியது...

வாழ்த்துக்கள் சிவா...


Top 10 படங்களை தெரிந்துகொள்ள காத்திருக்கிறேன்

Unknown said...

என்னமா பதிவு எழுதுறாங்க!!!!

முத்தரசு said...

ரசனை.....பகிர்வுக்கு நன்றி

Unknown said...

மச்சி...180 படத்துல
பார்வை கூறும் வார்த்தை நூறு....தனனனன்னனன்ன.......ன்ன்னனன....லலலலல.....பாட்டு உங்க லிஸ்ட்ல வரலையே....ஹிந்தி டப்பா பாட்டு என்னமா யோசிக்கிறாங்கப்பா.....ரசிக்கும்படியா இருக்கு...

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
நல்லா இருக்கீங்களா?

வித்தியாசமான தொகுப்பு,.

தனியே தமிழில் மாத்திரமன்றி பரந்து பட்ட ரீதியில் வேற்று மொழிப் பாடல்களிலிருந்தும் சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறீங்க.

ரொம்ப நன்றி.

! சிவகுமார் ! said...

@ எப்பூடி

உங்க அபிமான பாடல் தொகுப்பையும் சீக்கிரம் போடுங்க ஜீவா.

! சிவகுமார் ! said...

@ கனகு

நண்பன் ட்ரெயிலர் பார்த்தேன். பாடல்கள் சூப்பர் ஹிட் ஆக வாய்ப்பு கம்மின்னு தோணுது.

! சிவகுமார் ! said...

@ சேலம் தேவா

நன்றி தேவா.

! சிவகுமார் ! said...

@ டாக் லிக்ஸ்

என்ன தத்துவ மழையா பொழியறீங்க?

! சிவகுமார் ! said...

@ ஆரூர் முனா செந்திலு

கழுவி ஊத்தணுமா? ஹா. ஹா...செஞ்சிடுவோம்.

! சிவகுமார் ! said...

@ கவிதை வீதி சௌந்தர்

வாங்க நண்பரே. விரைவில் டாப் டென் மூவிஸ் போட்டுருவோம்.

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
என்னமா பதிவு எழுதுறாங்க!!!!//

அண்ணே........ஒண்ணும் இல்ல. அது வந்து....வந்து..!!

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

நன்றி நண்பா.

! சிவகுமார் ! said...

@ வீடு

அந்தப்படம் பாக்கல. பாட்டும் கேக்கல நண்பரே. அதான்.

! சிவகுமார் ! said...

@ நிரூபன்

வணக்கம் நிரூபன். வேற்று மொழிப்படங்கள் சிலவற்றை எப்போதேனும் பார்ப்பேன். அதில் பிடித்தவற்றை பகிர்ந்துள்ளேன்.

CS. Mohan Kumar said...

ஏம்பா மலையாள பாட்டு பிடிக்கும்னு சொன்னதுக்கு யாருமே சிவாவை திட்டலியா? என்ன கொடுமைய்யா இது !!

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

நமக்கு இந்த ஜாதி, இன, மொழி, தேச எல்லைகள் எல்லாம் இல்லை சார். நல்லவன், கெட்டவன் ரெண்டு வகைதான் கண்ணில் படும். அரசியலில் கேரளம் நடந்து கொள்ளும் முறை தவறென்பதில் சந்தேகமே இல்லை. கலை மற்றும் விளையாட்டை அரசியல் எல்லைகளுக்குள் அர்த்தமின்றி சுருக்குதல் தவறென்பது மன்னர் கால மரபு(உலகம் முழுமைக்கும்). அதையே அடியேனும் வழிமொழிகிறேன்.

CS. Mohan Kumar said...

Sandai varanumnu appadi sollalai Siva. Summa jolikku thaan appadi comment pottaen.

! சிவகுமார் ! said...

மோகன் குமார் said...
Sandai varanumnu appadi sollalai Siva. Summa jolikku thaan appadi comment pottaen//

நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள் என்பதை நன்கு அறிவேன் சார். ஆனால் ஒரு சிலர் தவறாக எண்ணுவார்களோ என்றுதான் விளக்கம் அளித்தேன்.

! சிவகுமார் ! said...

@ கவி அழகன்

நன்றி நண்பா.

Related Posts Plugin for WordPress, Blogger...