ஈரோடு பதிவர் சந்திப்பு மற்றும் யுடான்ஸ் சிறுகதை பரிசளிப்பு விழா இரண்டையும் ஒரே நாளில் நடத்தியதால் எதை அட்டன்ட் செய்வது என்பதில் சென்னை பதிவர்களுக்கு லேசான குழப்பம். சென்னை நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு சற்று தாமதமாக வந்ததால் ஈரோடு செல்லும் ட்ரெயினில் பறந்தோம். ஈரோட்டிற்கு இரவு சென்று சேர்ந்ததுமே பதிவர்கள் தங்க அறைகளை ஏற்பாடு செய்திருந்தனர். நண்பர் சங்கவி எம்மை சிறப்பாக கவனித்தது மகிழ்ச்சி அளித்தது. 'ரூம் பில்லை நான்தான் கட்டுவேன்'. 'இல்லை நான்தான் கட்டுவேன்.'என்று கேஆர்பியும், சங்கவியும் கொஞ்சிக்கொண்டார்கள். 'சாவகாசமா கொஞ்சிக்கங்க. எந்த ரூம்னு சொன்னா புண்ணியமா போகும்' என்று எண்ணிக்கொண்டு இருந்தேன். அருகில் மோகன்குமார், பிரபாகரன், ஆரூர் முனா செந்தில், ரமேஷ்(கேஆர்பி தம்பி). ஒருவழியாக பஞ்சாயத்து முடிந்து ரூமுக்கு சென்றோம்.
சனி அன்று இரவு பதிவர் சந்திப்பு நடக்கும் ரோட்டரி சிடி ஹாலில் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். முட்டை தோசை, குஷ்பு இட்லி, கார மற்றும் தேங்காய் சட்னி என மெனு. சாம்பார் மட்டும் நஹி. பெரிய தலைகள் பலர் வந்து கொண்டே இருந்தனர். 'தமிழ்வாசி வந்தாச்சா?' 'விந்தை மனிதன் எங்க?' 'ரகசிய குரங்கு இங்க' என்று ஆங்காங்கே டோன் ஒலித்தது. பிரகாஷ், ராஜாராமன் இப்படி கூப்புடாம வித விதமான பெயர்களில் அழைத்தது கண்டு சிரிப்பை அடக்க முடியவில்லை. நடுநாக்கில் குஷ்பு(இட்லி) நர்த்தனம் ஆடியதால் வாய் விட்டு சிரிக்க முடியவில்லை.
ஞாயிறு காலை மறுபடியும் உணவு உபசரிப்பில் அசத்தினர் ஈரோட்டு நண்பர்கள். சரியாக 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என்று முன்னறிவிப்பு செய்தது போல 10.30 மணிக்கு டான் என நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. யாதுமாகி குறும்படம், தமிழ் வணக்கம், சிறப்பு பேச்சாளர்களின் உரை, சிறந்த 15 பேர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மரியாதை, அந்த 15 பேர் குறித்தும் சிறிய திரையில் தெளிவான அறிமுகம் என அற்புதமாக ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி குறித்து திட்டமிட குறுகிய நாட்களே இருந்ததென சங்கவி கூறி இருந்தார். பதிவர்களுக்கு தங்கும் இடம், வேளை தவறாமல் அன்பான உணவு உபசரிப்பு,இனிமையான வரவேற்பு போன்றவற்றை செய்த ஈரோட்டு இதயங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. கிட்டத்தட்ட அனைத்து பிரபல பதிவர்களையும் திரட்டி அசத்தி விட்டனர். இனி இப்படி ஒரு நிகழ்வு நடப்பது ஆச்சர்யம்தான். முதன்முறை பல பதிவர்களை கண்டு மனமார பேச ஏற்பாடு ஈரோடு வலைப்பதிவர் குழும நண்பர்களுக்கு மிக்க நன்றி.
அதே நேரத்தில் ஒரு சில குறைகளை மட்டும் களைந்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவை என்ன என நண்பர் சங்கவியிடம் தனிமையில் பேசுகையில் கூறினேன். அவை பின்வருமாறு: சமூகத்திற்கும், பதிவுலகிற்கும் தம் சிறப்பான பங்கை ஆற்றிய 15 பேர் குறித்த அழகிய தொகுப்பை திரையில் காட்டினர். அதை பார்க்க பலரால் முடியவில்லை. மேடையில் இருப்போரை போட்டோ எடுக்க அந்த திரையை மறைத்தவாறு நண்பர்கள் நின்று கொண்டு இருந்ததால் பரிசு பெறும் நண்பர்கள் குறித்த முழுமையான தகவல்களை காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் சார்பாக யாரேனும் ஒருவர் இதை சரி செய்து இருக்கலாம்.
சனிக்கிழமை இரவு நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடமான ரோட்டரி சிடி ஹாலில் உணவு அருந்த அழைத்திருந்தனர். முதல் மாடியில் பதிவர்கள் இருந்தது அறிந்து மேலே சென்றோம். பிரபல சீனியர் பதிவர்கள் சுவற்றோரம் இருந்த டேபிளில் கெம்பீரமாக வீற்றிருந்த சரக்கை ஏற்றிக்கொண்டு இருந்தனர். சவுண்டும் சற்று ஜாஸ்தியே. வாடை அதனினும் தூக்கல். ஈரோடு சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்கள் சிலர் சற்று தள்ளி நின்றவாறு இவற்றை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். குடிப்பது சரி தவறு என்று சொல்ல நான் பிரச்சார பீரங்கி அல்ல என்றாலும், உற்சாகபான பிரியர்களுக்கு தனியாக அறை அமைத்து மகிழ்ச்சியை பீறிட பீரிட வைத்திருக்கலாம் என்பது என் கருத்து. வலைப்பதிவர்கள் நினைத்தால் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று சிறப்பு பேச்சாளர்கள் பேசிக்கொண்டு இருக்கையில் இந்நிகழ்வுகளை குறும்படமாக போட்டிருந்தால்? ஈரோடு கதிர் அவர்களே பதிவுலகம் புதியவர்கள் மற்றும் மொக்கைப்பதிவர்கள் ஆகியோரை விட இம்மாதிரி நிகழ்வுகளால் அளவுக்கு அதிகமாகவே 'நீர்'த்துப்போய்க்கொண்டு இருக்கிறது என்பதையும் மேடையில் சொல்லி இருக்கலாம். தங்களிடம் தனியாக பேச வேண்டுமென கூறினேன். ஆனால் நீங்கள் பிசியாக இருந்ததால் சங்கவியிடம் என் கருத்தை தெரிவித்தேன்.
நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திலேயே இவற்றை அரங்கேற செய்தது கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியது. நிகழ்ச்சி நடைபெறும்போது ஆரஞ்ச் ஜூஸ், இரவோடு இரவாக உற்சாக பானம். ஏன் இந்த முரண் என்பதே கேள்வி? பதிவர் சந்திப்பிற்கு எங்களையும் அழைத்து சென்றிருக்கலாம் என சில பதிவர்களின் இல்லத்தில் இருக்கும் பெண்கள் கேட்டிருக்க வாய்ப்புகள் உண்டு. அப்படி அவர்கள் வந்திருந்தால் இத்தகு நிகழ்வுகளைக்கண்டு வருந்தி இருப்பர் என்பதை நீங்கள் ஏன் யோசிக்கவில்லை விழாக்குழுவினர்களே?
ஞாயிறு அன்று நடந்த நிகழ்ச்சியில் முதலில் குறும்படம், சிறப்பு பேச்சாளர்கள் உரை, சமூகம் சார்ந்த விஷயங்களை சிறப்பாக செய்த நண்பர்களுக்கு பரிசளிப்பு...நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிந்தே போனது. மேடை காலி. கீழே இருந்த பாதி பேர் வெளியேறிவிட்டனர். 'இனி புதிய பதிவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்' என்று அறிவிப்பு. புதிய பதிவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பதிவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதை கேட்க அரங்கில் பாதி மட்டுமே எஞ்சி இருந்தனர். கணிசமான அளவில் பெரிய தலைகள் எஸ்கேப்.
முதலில் புதிய பதிவர்கள் அறிமுகம், பிறகு சிறப்பு பேச்சாளர்கள் உரை, சிறந்த சேவை செய்தோருக்கு பரிசளிப்பு, இறுதியில் குறும்படம் என வரிசைப்படுத்தி இருக்கலாம். 'இப்பல்லாம் எவன்டா ஒழுங்கா ப்ளாக் எழுதறான். குப்பைதான் ஜாஸ்தி. நம்மல்லாம் அந்த காலத்துல..' என்று தொடர்குரல் அவ்வப்போது பிரபல பதிவர்களிடமிருந்து ஒலிப்பதை கண்டு வருகிறோம். புதியவர்களுக்கு கணிசமான வாய்ப்பை அளிக்காமல் இதே மாதிரி நிகழ்ச்சிகள் தொடர்வது நியாயமா? புதிய பதிவர்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டு மேடையில் இருந்த சிறப்பு பேச்சாளர்களை வழியனுப்பியது சரியாக படவில்லை.
வெளிநாட்டில்/வெளியூரில் இருந்து கொண்டு இந்த சந்திப்பு குறித்து நேரடியாக ஆர்வத்துடன் தொலைபேசியில் கேட்டறிந்த நண்பர்கள் பலர். அதில் சிலர் தொலைபேசி வாயிலாக மைக்கில் பேச ஆசைப்பட்டனர். புதிய பதிவர்கள் பலர் சீனியர் பதிவர்களிடம் பரிச்சயம் இல்லாதால் சங்கோஜப்பட்டுக்கொண்டு அமைதியாக அமர்ந்து இருந்தனர். இவர்களை முன்னிலைப்படுத்தி முதலில் நிகழ்ச்சி நிரலை அமைத்து இருக்கலாம். ஆளுக்கு இரண்டு நிமிடம் ஒதுக்கி இருக்கலாம்.
குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்ததால் சிலவற்றை செய்ய இயலவில்லை என சங்கவி கூறினார். மேற்சொன்ன குறைகளை வரும் பதிவர் சந்திப்புகளில் களையுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டேன். கண்டிப்பாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்த அவருக்கு நன்றி.
பதிவர் சந்திப்புகள் கலந்து கொள்ள இயலாத வெளிநாடு/வெளியூர் பதிவர்கள் தொலைபேசி வாயிலாக மைக்கில் பேச முதல் உரிமை, அதன் பின் புதிய பதிவர்கள் அறிமுகம், பிறகு மற்ற நிகழ்ச்சிகள், இறுதியாக குறும்படம். இந்த வரிசையில் வருங்கால பதிவர் சந்திப்புகளை நடத்துமாறு பதிவுலக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இவை நடக்காமல் பதிவுலகம் நீர்த்துப்போய்க்கொண்டே இருந்தால் அதற்கு எவ்வகையிலும் அப்ரண்டிஸ் பதிவர்கள் பொறுப்பேற்க இயலாது என்பது மட்டுமே மறுக்க முடியாத நிதர்சனம்.
மற்றபடி நிறைய பொருட்செலவு செய்து விழாவை ஏற்பாடு செய்த அனைவரின் உழைப்பையும் பாராட்டியே தீர வேண்டும். ஈரோடு வலைப்பதிவர் குழுமம் அறக்கட்டளையாக மாறவிருப்பது மகிழ்ச்சியான செய்தி. உங்க ஊர், எங்க ஊர் என்று ஈகோ பார்க்காமல் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பதிவர்களும் கலந்து கொண்டு ஒற்றுமையை நிலைநாட்டி இருந்தது ஈரோடு பதிவர் சந்திப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
சிவகுமார்.
.......................................................................................
சமீபத்தில் எழுதியது:
ஈரோடு பதிவர் சந்திப்பு - ஜாலி பட்டாசுகள்
.......................................................................................
45 comments:
எங்க மனசுல இருந்தத அப்டியே கொட்டிட்டிங்க பாஸ்...சூப்பர்..!! :)
தெய்வமே...இவ்வளவையும் மனசுல வைத்துக்கொண்டு எங்களையெல்லாம் ஜாலியா சிரிக்கவைத்தீர்களே...ஆமாம் நெருடலாக இருந்ததால்தான் நாங்கள் அறிமுகம் செய்துகொள்ளவில்லை.....
நம்ம வலையில் பதிவர் சந்திப்பு அனுபவம்
நல்ல நண்பர்களை தந்த ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு
சிவா இத்தகைய அருமையான விழா நடக்கும் போது அவரவர் பார்வையில் சில குறைகள் இருப்பதும் சகஜம் தான். இந்த பதிவில் குறைகளே அதிகம் பேசப்பட்டிருப்பது எனக்கு ஏற்புடையது அல்ல. அவர்கள் செய்த நல்ல விஷயங்களை பட்டியலிட்டு விட்டு அதன் பின் இந்த குறைகளை சுருக்கமாக சொல்லியிருக்கலாம்.
நம்மை ஒரு விருந்தினராக எப்படி உபசரித்தார்கள் ! உங்கள் வீட்டில் வந்து இரு நாட்கள் தங்கி இருந்து விட்டு அப்போது நீங்கள் செய்த தவறுகள் என பட்டியலிட்டு பதிவோ கடிதமோ எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி தான் இது உள்ளது.
ஒரு விழா நடத்தும் போது அனைத்து தரப்பையும் திருப்தி படுத்த வேண்டியது எவ்வளவு பெரிய கஷ்டம் ! இது விழா நடத்துபவர்களுக்கு தான் தெரியும். இத்தகைய பதிவுகள் ஈரோடு நண்பர்களின் ஆர்வத்தை குறைத்து விட கூடாது (அடுத்த வருடம் முதல் தனிப்பட்ட காரணங்களால் நான் ஈரோடு போக போவதில்லை என்பது வேறு விஷயம்)
மற்றபடி உங்களுடன் பழகியது மிக சந்தோசம். நிச்சயம் அடிக்கடி தொடர்பில் இருப்போம் என நினைக்கிறேன்
சேலம் தேவா மற்றும் வீடு.. தங்கள் கருத்திற்கு நன்றி.
மோகன் சார், தங்கள் கருத்திற்கு நன்றி. உபசரிப்பு குறித்து ஒரு இடத்திலும் தவறாக குறிப்பிடவில்லை. அடுத்த முறை இதை சரி செய்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் கருத்து. அதைத்தான் சங்கவியிடமும் கூறினேன். சந்தர்ப்பம் அமைந்தால் ஈரோடு பதிவர் சந்திப்பில் தொடர்ந்து கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. இது ஆக்ரோஷத்தின் வெளிப்பாடல்ல. அன்பான கோரிக்கை மட்டுமே. அதை சங்கவி மட்டுமே அறிவார்.
வணக்கம் சிவா...
பதிவர் சந்திப்பின் மனகுறைகளை அன்பான கோரிக்கையாய் பகிர்ந்த விதம் பாராட்டுக்குரியது..
உங்களையெல்லாம் சந்தித்திததில் மிக்க மகிழ்ச்சி..யாரென்றே தெரியாமல் இருந்தவர்களை ஒன்றிணைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு மிக்க நன்றி..
உண்மையில் பதிவுலககுடும்பவிழாவாக இருந்தது.
எப்படியோ, நல்ல சந்தோஷ நினைவலைகளை அள்ளித் தெறித்தது இந்த சந்திப்பு....
மெட்ராஸ்பவன் சிவா ஒரு பதிவர் மீது கொலவெறி தாக்குதல். போட்டோ ஆதாரத்துடன் விரைவில்.... ஹி..ஹி.. கோச்சுக்காதிங்க சிவா...
பதிவர் சந்திப்புக்கு சென்று என்னையும் பெருமை படுத்தியமைக்கு நன்றிலேய் மக்கா வாழ்த்துக்கள்...!!!
thanks for sharing siva
உங்களிடமிருந்து இப்படியொரு பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் ஹி...ஹி...ஹி...
நெனச்சபடியே நடந்துடுச்சு. மனசுல பட்டத பொதுவில் சொல்வதற்கு தில் வேணும். வாழ்த்துகள்
சிவா சொல்ல வேண்டியது மாற்றுக் கருத்தாக இருந்தாலும் துணிச்சலாக சொன்னது பாராட்டும்படியானது. இந்த குறைகள் இல்லாமல் நாம் சென்னையில் பதிவர் சந்திப்பை நடத்த வேண்டியது அவசியம். அதனை நீங்கள் முன்னெடுப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி. புலவர் சங்கரலிங்கம் வேறு தொடர்பு கொண்டு பதிவர் சங்கம் பற்றி கேட்டுக் கொண்டேயிருக்கிறார். நான் சிவாவை கேட்டு தான் சொல்ல முடியும் என்று சொல்லி விட்டேன். இது சம்மந்தமாக ப்ரீயாக இருந்தால் போன் செய்யவும். விளக்கமாக சொல்கிறேன்.
மனதில் பட்டதை மறைக்காமல் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது சிவா!
சிவா,
எல்லா விழாக்களிலும் குறைகளும், நிறைகளும் இருக்கவே செய்யும். ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்தும் நிச்சயம் சரி செய்யப்படவேண்டியவையே. நிச்சயம் அடுத்த ஆண்டு இவற்றை விழ ஏற்பாட்டாளர்கள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புவோம்.
மற்றபடி, இந்த நல்ல முயற்சிக்காக அவர்களுக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்
முக்கியமான விஷயம், இந்த பதிவர் சந்திப்பையே சாக்கா வச்சு 10 பதிவு போடக்கூடாது. அடுத்த பதிவோட முடிச்சுக்கணும். புரிஞ்சிதா?
சிராஜ்
நல்ல பதிவு.
அண்ணே!போட்டோ எதுவும் போடாம பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பதிவா?
அடடே!
சிறப்புற நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு முதலில் வாழ்த்துகள்.
நிச்சயம் , கவனக்குறைவால் அல்லது நேரக்குறைவால் நிகழ்ந்த சில குறைகளை அடுத்தடுத்த சந்திப்புகளில் களைவார்கள் என நம்புகிறேன்.
@ சம்பத்
ஆமாம் சம்பத். எல்லாப்புகழும் ஈரோடு வலைப்பதிவர் குழுமத்திற்கே.
@ தமிழ்வாசி பிரகாஷ்
//மெட்ராஸ்பவன் சிவா ஒரு பதிவர் மீது கொலவெறி தாக்குதல். போட்டோ ஆதாரத்துடன் விரைவில்.... ஹி..ஹி.. கோச்சுக்காதிங்க சிவா...//
அவ்வ்!! சிவா..எட்றா ஓட்டம். கோச்சிக்க மாட்டேன் நண்பா. பட்டைய கிளப்புங்க.
//MANO நாஞ்சில் மனோ said...
பதிவர் சந்திப்புக்கு சென்று என்னையும் பெருமை படுத்தியமைக்கு நன்றிலேய் மக்கா வாழ்த்துக்கள்...!!!//
பதிவர் சந்திப்பில் லைவ்வா சாட்ல வந்த மனோ அண்ணனுக்கு நன்றி.
@ ரமேஷ்
Welcome Ramesh!
@ ஆமினா
//
உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் ஹி...ஹி...ஹி...//
இப்படியொரு பதிவு வரும்னு எதிர்பாத்தீங்களா? கோத்து விடறதுல ஒரு சந்தோஷமா? ரைட்டு.
@ ஆரூர் முனா செந்திலு
என்னது நான் முன்னெடுக்கணுமா? செந்தில்..உங்க கால் சுண்டுவிரலை இழுத்து புடிச்சி கேட்டுக்கறேன். கருணை காட்டுங்க.
உங்களுக்கு கண்டிப்பா போன் செய்யறேன். நம்மை விட பிரபல பதிவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று இறுதி முடிவெடுப்போம். நன்றி நண்பரே.
@சென்னைபித்தன்
எங்கள... சாரி..நம்மள மாதிரி யூத்துக்கு நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி சார்.
@சிராஜ்
சிராஜ், இவ்விஷயத்தை பதிவிடுமாறு சங்கவி சொன்ன பிறகுதான் போட்டேன். எனக்கான எல்லைகளை நன்கு உணர்ந்தே பதிவிடுவேன். நிறைய மகிழ்வான சம்பவங்கள் நடந்ததால் அதிகபட்சம் இரண்டு பதிவுகள் பேலன்ஸ். ஹா..ஹா..
@ ரத்னவேல்
நன்றி ஐயா!
/கோகுல் said...
அண்ணே!போட்டோ எதுவும் போடாம பதிவர் சந்திப்பு பற்றி ஒரு பதிவா?
அடடே!//
ஏற்கனவே 100 போட்டோ போட்டுட்டாங்க. புதுசா போட ஒண்ணுமில்ல தம்பி.
@ கோகுல்
அடுத்து பாண்டிச்சேரில உங்க தலைமைல பதிவர் சந்திப்பாம். கேள்விப்பட்டேன்.
என்னய்யா ஒரே குஜாலா இருந்தீங்களா ஹிஹி...வாழ்த்துக்க்ள்!
நல்ல தொகுப்பு...
தங்கள் வந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி....
:)))
டைம் இல்லை ..பிறகு வருகிறேன் ....
//விக்கியுலகம் said...
என்னய்யா ஒரே குஜாலா இருந்தீங்களா ஹிஹி...வாழ்த்துக்க்ள்!//
அதைப்படிக்க கவுண்டமணி சைட்டுக்கு வாங்க மாம்ஸ்!
@ சங்கவி
மிக்க நன்றி சங்கவி. அன்பாக உபசரித்த தங்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
//NAAI-NAKKS said...
டைம் இல்லை//
வாட்ச் கட்டலையா?
good///
hope u enjoyed ;)
அன்பின் சிவா - மனத் தாங்கலைக் கொட்டி விட்டாய் - பதிவர்கள் பலரின் கருத்தும் இதுதான் - பரவாய் இல்லை - அடுத்த ஆண்டு சரி செய்து கொள்ளலாம் - அமைப்பாளர்கள் குறுகிய கால அவகாசத்தில் - பல பணிச்சுமைகளுக்கு இடையே - சாதனையாளர்களை பெருமைப் படுத்தும் இந்த ஒரு நிகழ்வினை சிறப்புற நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மற்றவற்றை மறந்திருக்கலாம். இது பற்றி கதிருக்கு தனி மடல் வரைந்திருக்கிறேன். வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா சிவா
m ம் ம் அப்படிங்கறீங்க??
கவனத்தில் கொள்கிறோம்
தொடர்வதற்காக
சமுத்ரா said...
good///
hope u enjoyed ;)
Yes. Thanks Samuthra!
@ சீனா
தங்களை ஈரோட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி. எங்கே அறிமுகம் செய்து கொண்டால் வலைச்சரம் தொடுக்க வைத்து விடுவீர்களோ எனப்பயந்து நழுவிவிட்டேன். மிக்க நன்றி.
@ சிபி
ஆமாம் சார்.
@ வால்பையன்
தொடருங்கள்...விடாமல் தொடர்கிறோம். :-)
'சொல்லுதல் யாருக்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்'.
பழைய பல்லவன் பேருந்துகளில் எழுதியிருப்பார்கள்.
@இரா. வசந்த குமார்
ஆமாங்க. ஆனால் எனக்குப்பிடித்த மாநகரப்பேருந்து பஞ்ச் இதுதான்: 'நீ நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்' - கலின்ஜர்.
Post a Comment