CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, December 29, 2011

திரை விரு(ந்)து 2011 - பாகம் 2எல்லா திரைப்படம்/டாகுமெண்டரி போன்றவற்றை பார்த்தோம், மறந்தோம் என்று இருந்துவிட முடியாது. செங்கல் சைசுக்கு உள்ள புத்தகத்தை படித்து ஒரு விஷயத்தை மனதில் ஏற்றிக்கொள்ள சிரமப்படும் சாமான்யர்களுக்கு  படச்சுருள் மூலம் சினிமா படைப்பாளிகளால் அந்த விஷயங்களை எளிதாகவும், ஆழமாகவும் தர இயலும் என்பதை முற்றிலும் மறுக்க முடியாது. அதுபோல 2008 ஆம் ஆண்டு உலகையே சுழற்றி அடித்த பொருளாதார பேரிடி குறித்து சில ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தாலும், அந்நிகழ்வு குறித்த அருமையான முழுத்தொகுப்பை தந்தது ஒரு டாகுமெண்டரி படம். பெயர் இன்சைட் ஜாப்.  

அயல்தேசங்களில் 2010 ஆண்டே வெளியாகி ஆஸ்கர் விருதையும் வென்ற இந்த படம் இந்தியாவில் பிப்ரவரி மாதம்தான் ரிலீஸ் ஆனது. உலகம் முழுக்க அதிர்வுகளை உண்டாக்கி பலபேரை வேலையின்றி தெருவில் நிறுத்திய பொருளாதார பூகம்பத்தின் ஆரம்ப புள்ளியான ஐஸ்லாந்தில் ஆரம்பிக்கிறது முதல் காட்சி. அதன் பின் ஒவ்வொரு காட்சியிலும் உலகின் பல்வேறு மூலைகளில் இருப்பவர்களிடம் எடுத்த பேட்டி, நீதிமன்ற நடவடிக்கை என  வீடியோ ஆதாரங்களுடன் உண்மைகளை நமக்கு எடுத்து சொல்கிறது இன்சைட் ஜாப். கண்டிப்பாக பாருங்கள்.

இவ்வாண்டு பார்த்த(அனைத்து மொழிகளையும் உள்ளடக்கி) என்னை கவர்ந்த திரைப்படம்/டாகுமெண்டரி இதுதான்.

பிடித்த படம் - இன்சைட் ஜாப்
                                                                 
பிடித்த நடிகர்கள் - பார்த்தோ, சலீம் 

                                                                       
நான் கண்ட 2011 சினிமாக்களில் பிடித்த தமிழ் நடிகர் என்றால் தனுஷ். எல்லா மொழிப்படங்களையும் சேர்த்துப் பார்த்தால், தனுஷை தவிர மேலும் இருவர் உள்ளனர். முதல் நபர் ஸ்டான்லி கா டப்பாவில் நடித்த மகா நடிகன் பார்த்தோ.இந்தியத்திரைப்படங்களில் வாண்டுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. தாரே ஜாமீன் பர், தெய்வத்திருமகள், வாகை சூட வா இப்படி பலவற்றை பட்டியலிடலாம். அவ்வரிசையில் பார்த்தோ மிகவும் ஸ்பெஷல். எத்தனை வகை முகபாவங்கள்! கேமரா முன்பு நடித்தது போல இல்லாமல் அசத்தி எடுத்து விட்டான்ர் நடிப்பில். 

                                                                       
அடுத்து சலீம். நகைச்சுவை நடிகராக மலையாள படங்களில் பிரசித்து பெற்று இருந்த இவரை சில இயக்குனர்கள் சீரியஸ் நடிகராக மாற்றி வெற்றியும் கண்டனர். அதில் ஆதமிண்டே மகன் அபு திரைப்படம் ஒரு மைல்கல். 43 வயதே நிரம்பிய சலீம் 70 வயதுள்ள கேரக்டரில் வாழ்ந்திருப்பார். ஹாட்ஸ் ஆப் சலீம்.

ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது இந்தப்படம். முடிவு தெரிய இன்னும் சில வாரங்கள் காத்திருப்போம். 
...........................................................

சிறப்பு விருதுகள்:

'தமிழன் உணர்வை உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கு' விருது:

வின்னர்: ஏழாம் அறிவு படக்குழு.

'அது வேற வாய். இது நாரை வாய் விருது' விருது:

வின்னர்: கார்த்திக்  

தமிழ்ப்படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்டு வேறு மாநிலம் சென்று தமிழனுக்கு ஆப்பு வைக்கும் நடிகர்கள் வரிசையில் அண்ணன் கார்த்திக் இணைந்ததில் ஆச்சர்யமில்லை. 'டெபநெட்டுகா தெலுகு ஆடியன்சே' பிடிக்கும் என்று அங்கே சொல்லிவிட்டு, வழக்கம்போல இங்கே வந்து 'நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று சப்பைக்கட்டு கட்டினார் இவரும். கேக்கறவன் கேனையனா இருந்தா கொக்க கோலாவில் கொத்தமல்லி சட்னி கெடக்குமாம்.                          
                                                        


'இனமானத்தமிழர்கள்' விருது:

படத்தில் பொங்கிவிட்டு கேரவனுக்குள் ஓய்வெடுக்கும் அசகாய சூரர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில், களத்தில் இறங்கி தம்மாலான செயல்களை செய்த சேரன், பாரதிராஜா, தங்கர் பச்சான், கௌதமன், சீமான், கவிஞர் தாமரை, அமீர் மற்றும் அனைத்து தமிழ் திரையுலக உள்ளங்களுக்கும் இதயபூர்வ நன்றிகள். 

'நல்லவனுக்கு நல்லவன்' விருது: 

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு ராகவேந்திரா மண்டபத்தை ஒதுக்கி தந்த நடிகர் ரஜினிகாந்திற்கு சல்யூட். 
...................................................................................         
  
தமிழில் பிடித்த.....

தயாரிப்பாளர்: பிரகாஷ்ராஜ்(பயணம்).
இயக்குனர்: எம். சரவணன்(எங்கேயும் எப்போதும்).  
ஒளிப்பதிவாளர்: ரிச்சர்ட் எம். நாதன் (கோ). 
எடிட்டிங்: ராஜா முகம்மது (மௌன குரு).
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ்(ஆடுகளம், மயக்கம் என்ன).
வசனம்: ஞானவேல்(பயணம்)  
அணி: எங்கேயும் எப்போதும்.
பின்னணி இசை: ஜி.வி.பிரகாஷ்.  
கலை இயக்குனர்:  கதிர்(பயணம்)  

குறிப்பு: மேலே உள்ள சில தொழில்நுட்பம் சார்ந்த துறைகள் குறித்த ஞானம் இல்லாதவன் எனினும், மனதிற்கு பிடித்து இருந்ததால் விருது குடுத்தே தீருவேன் என்பதை அமெரிக்க பேரரசிற்கும், ரஷ்ய ஏகாதிபத்யத்திற்கும் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

FIND OF THE YEAR: இயக்குனர் சாந்தகுமார்(மௌனகுரு)   

    

சிறந்த உடை, ஒப்பனை, திரைக்கதை என குடுத்த காசுக்கு மேல் கூவினால் குமுற குமுற அடிப்பீர்கள் என்பதால்....இத்துடன் விருதளிப்பு விழா இனிதே நிறைவு பெறுகிறது. 
......................................................................................                                                                  

............................
My other site:
..........................9 comments:

CS. Mohan Kumar said...

நான் குறித்து வைத்திருக்கும் விருதில் நிறைய உங்களோட மேட்ச் ஆகுது. உங்களை பாத்து தான்
காப்பி அடிச்சதா பலரும் நினைக்க வாய்ப்பிருக்கு. இருந்தாலும் என் ரசனையை தானே சொல்லி ஆகணும்.

மௌன குரு இன்னும் பாக்கலை. விரைவில் பார்ப்பேன். ஆதாமிண்டே கூட பார்க்க வேண்டிய படம் தான்

MANO நாஞ்சில் மனோ said...

எலேய் சென்னை சிட்டிக்குள்ளே இருந்துட்டு எல்லா படங்களையும் பாக்குறீங்களே, நமக்கு கொடுப்பினை [[நேரம்]] இல்லாமல் போச்சே வயிறு எரியுது அவ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

'இனமானத்தமிழர்கள்' விருது:

படத்தில் பொங்கிவிட்டு கேரவனுக்குள் ஓய்வெடுக்கும் அசகாய சூரர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில், களத்தில் இறங்கி தம்மாலான செயல்களை செய்த சேரன், பாரதிராஜா, தங்கர் பச்சான், கௌதமன், சீமான், கவிஞர் தாமரை, அமீர் மற்றும் அனைத்து தமிழ் திரையுலக உள்ளங்களுக்கும் இதயபூர்வ நன்றிகள். //

ராயல் சல்யூட் மக்கா...!!!

CS. Mohan Kumar said...

//'அது வேற வாய். இது நாரை வாய் விருது' விருது:

வின்னர்: கார்த்திக் //

I think his name is Karthi; Karthik refers to Alaigal Oiyvathillai Karthik !

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்களின் ரசணை அறிந்தேன்...

விருதுக் கொடுத்தது மிகவும் அசத்தல்...

அப்படியே இவ்வளவு பொருமையா பதிவை படிக்கிறவர்களுக்கு ஒரு விருதுகொடுத்தா நல்லாயிருந்திருக்கும்..

கார்த்திக் தெலுங்கு படவுலகிற்கு செல்ல ஒரு பிட்டு போட்டு வைக்குறாறு...

அப்புறம் ரஜினி இடம் கொடுத்ததுக்கு கூட ஒரு குருப்பு தப்புன்னு சுத்திகிட்டு இருக்கு...அழகு

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நிறைய ஹோம்வொர்க் பண்ணி இருக்கீங்க....... குட் போஸ்ட்...!

Unknown said...

ரத்தவெறி படங்கள் உங்களுக்கு பிடிக்காது, ஆனாலும் ஆரண்ய காண்டம் படமும் எடிட்டிங்கும் சிறப்பா இருந்தது, தலைவருக்கும் விருது குடுத்ததுக்கு நன்றி

ஹாலிவுட்ரசிகன் said...

//தமிழன் உணர்வை உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகளமாக்கு' விருது:

வின்னர்: ஏழாம் அறிவு படக்குழு//

சரியாச் சொன்னீங்க பாஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...