CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, December 11, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (11/12/11)பலே பாண்டியா, சபாஷ் மீனா:
                                                   

(கல்லூரி பட வசனம் ரீமிக்ஸ்)


"தமிழ்நாட் - கேரளா இஸ்யூ சீரியஸ் ஆகுது. சமாதானமா போக சொல்லுங்க"

"நீங்கதான கட்சிய நடத்தறீங்க. நீங்க சொல்லுங்க"

"என்ன இருந்தாலும் நீங்க பி.எம். நீங்க சொல்லுங்க"

மக்கள்:  "ரெண்டு பேரும் எதுவும் செய்ய வேணாம். இங்க வரவே வராதீங்க"

"உங்களைத்தான் சொல்றாங்க. நீங்க போகாதீங்க."

"இல்ல. உங்களைத்தான் சொல்றார். நீங்க போகாதீங்க"
........................................................................................

கொண்டாட்டம்: 

ஒரே நேரத்தில் மூன்று பதிவர் திருவிழா பற்றிய அறிவிப்புகள் வந்துள்ளன. யுடான்ஸ் ஆதி-பரிசல் நடத்திய சிறுகதைப்போட்டி பரிசளிப்பு விழா விரைவில் சென்னையில் நடக்க உள்ளது.  யூத்(அவ்வ்) கேபிளாரின் கொத்து பரோட்டாவை உத்து பார்த்துக்கொண்டே இருக்கவும். 

டெர்ரர்கும்மி வலைப்பூவின் ஓராண்டு நிறைவை ஒட்டி பதிவர்களுக்கான போட்டிகள் நடக்க உள்ளன. பரிசுத்தொகை ரூ.10,000. சொக்கா, என்ன வேடிக்கை. உடனே களத்தில் இறங்குங்கள்!!

ஈரோடு நகரம் களைகட்ட தயாராகிவிட்டது. பதிவர் சந்திப்பை வரும் 18 ஆம் தேதி காலை நடத்துகிறார்கள். அலைகடல் என அணிதிரள்க, மேலும் விவரம் அறிய: ஈரோடு பதிவர் சந்திப்பு 2011
..........................................................................................

இணைந்த கைகள்:

வலையில் எழுதுவோருக்கு கத்திரி போட மேதகு.கபில் சிபல் சாரு முடிவு செய்திருக்கிறாராம். மெட்ரிக் உஸ்கோல் ஸ்ட்ரிக்ட் வாத்தியார் மாதிரி சவுண்ட் விட்ற அவரப்பாத்தா ஊரே கிடுகிடுன்னு ஆடுது. அது குறித்து நமது மதிப்பிற்குரிய புலவர் சா.இராமாநுசம் ஐயா ஒரு யோசனை கூறி உள்ளார். படித்து பாருங்கள்: புலவர்குரல்.
..............................................................................................  
     
மௌனகுரு:

நாங்க கதறுனா வாயே தொறக்க மாட்டீங்க? உங்களுக்கெல்லாம் அண்ணா ஹஜாரேதான் லாயக்கு. எப்படி உக்காந்தாரு பாருங்க உண்ணாவிரத பந்தல்ல. இப்ப வாய ஓப்பின் பண்ணியே ஆகணும். ஒண்ணு நீரு சன லோக்குபாலுல கையெழுத்தை போடும். இல்ல அண்ணா சார்.. நீரு மேடைய விட்டு ஓடும். இப்படி ரெண்டு பேரும் மாத்தி மாத்தி 'எதையுமே சொல்லிடாதீங்க' விரதமும், 'புவ்வா வேண்டாம்' விரதமும் இருந்தா எனக்கு வெறி ஏறிடும். மைன்ட் இட் ஹை!
..........................................................................................................  

தர்மம் எங்கே? 

இன்று மகாகவி பாரதி பிறந்தநாளாக இருப்பினும், நாளை வரப்போகும் ரசினி பர்த்டேவுக்காக இன்று காலை முதலே காலில் சலங்கை கட்டி ஆடும் விசய் டி.வி. பத்தி ஒரு நீயா நானா எபிசோட் வைக்குமாறு கோட் கோபியை கொஞ்சி கேட்டுக்கொள்கிறோம். கேரளால எத்தனை தமிழன் செத்தா நமக்கென்ன. நாளைக்கி தீயா வேலை செய்யணும் நல்லதம்பி. பால்கொடம், கட் அவுட்டு எல்லாம் பட்டைய கெளப்பனும். கெளம்பு. விடா முயற்சி. விஸ்வரூப வெற்றி!
...........................................................................

மஞ்சள் மகிமை: 

                                                               
நியூசிலாந்தில் இன்று நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி ஹாக்கி இறுதிப்போட்டியில் ஆஸி அணி ஸ்பெயினை 1-0 என வீழ்த்தி தொடர்ந்து நான்காம் முறையாக கோப்பையை வென்றுள்ளது. ஹாக்கி வரலாற்றில் இது ஒரு சாதனை. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டிக்கு தகுதி பெறவே அடிக்கடி இந்தியா தள்ளாடும். ஆனால் இதுவரை 14 முறை தொடர்ந்து இப்போட்டிக்கு தகுதி பெற்று ஹாக்கியில் என்றுமே கில்லி என ஆஸி நிரூபித்துள்ளது. 
.........................................................................................

பார்த்தாலே பரவசம்:

மனைவியை ஊருக்கு பேக் அப் செய்துவிட்டு ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டம் போடணுமா? ஷாப்பிங் மால்ல பையை தூக்கிட்டு மேடம் பின்னால அந்து நொந்து போயிட்டு இருக்கீங்களா? கூல் டவுன் புருஷன்ஸ். பாரினில் மக்கள் கூடுற எடத்துல கலக்கிய பிளாஷ் டான்ஸ் இப்போது மும்பைக்கும் வந்தாச்சி. பப்ளிக் ப்ளேஸ்ல டயர்டா இருக்குறவங்களுக்கு செம எனர்ஜி டானிக். கசாப் மும்பைல பலபேரை சுட்டுக்கொன்ன அதே சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன்லதான் இந்த பிளாஸ் டான்ஸ் நடந்தது. நீ எத்தன பேர கொன்னு குவிச்சாலும்..பருப்பு வேகாது. திஸ் இஸ் இந்தியா மச்சி:
                                                        
...........................................................................................

எல்லாம் அவன் செயல்: 

நம்ம நாட்லயே வாழ சிறந்த நகரம் அகமதாபாத்தான்னு டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட் சொல்லுது. சென்னை சிட்டி 7 வது எடத்ல தொங்கிக்கிட்டு இருக்கு. எல்லாத்துக்கும் டிஸ்டன்ஸ்தான் காரணம். அனுமார் சஞ்சீவி மலைய தூக்குன மாதிரி சென்னையை அந்தப்பக்கம் கொண்டு போயிட்டா சரியாயிடும். அதுபத்தி இப்பதான் இவங்ககிட்ட பேசிட்டு வந்தேன். டோன்ட் வொர்ரி. 
..............................................................................................

 எங்கள் அண்ணா:

                                                           
முல்லைப்பெரியார் அணை பிரச்னையில் வரும் 14 ஆம் தேதி  கேரளாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கேப்டன் முடிவு செய்தே விட்டார். இப்பதாண்டா ஆட்டமே ஆரம்பம். நம்ம மாநில பார்டர்ல நின்னு அவனுங்கள கண்ணு செவ செவக்க குறு குறுன்னு பாத்து 'மெட்ராஸ் ஐ'ய பரப்புனா மட்டும் பத்தாது கேப்டன். சண்ட போட வர்ற பயலுகள அப்படியே பிழிஞ்சி மத்யான சோத்துக்கு ரசமாக்கி தின்னுடுங்க தலைவா.
....................................................................................

தேன்மழை:

'சமுத்திரம் பெரிதா? தேன்துளி பெரிதா? தேன்தான் அது நான்தான்' என தன் குயிலினும் இனிய குரலால் பாரதியின் பாட்டை பாடி இருக்கிறாள் சகோதரி. ஒரு நிமிடத்திற்கும் குறைவாக பாடினாலும்..தேனாய் இனிக்கிறது: 


.........................................................................................

.................................................
சமீபத்தில் எழுதியது:

எடோ கோபி..இந்த அணைக்கு தாப்பாள் இல்லா

ரியல் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து!
....................................................

............................
My other site:
agsivakumar.com
............................

                                                                   

23 comments:

Prem S said...

கலக்கல் கதம்பம் வாழ்த்துகள் மன்மோகன் சோனியா வசனம் மிகவும் ரசித்தேன்

சீனுவாசன்.கு said...

ரைட்டு!

CS. Mohan Kumar said...

ஈரோடு போறீங்களா?

விரைவில் ஏதாவது ஒரு விழாவில் சந்திப்போம்

கோகுல் said...

அண்ணே இன்னைக்கு இந்தியா ஜெயிச்சுடுச்சு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கால்பந்து போட்டியில அதைப்பத்தி எழுதியிருப்பிங்கன்னு பார்த்தேன்.

கோகுல் said...

தீயா வேலை செய்வோம் வெற்றிக்கொடி கட்டுவோம்.

Yoga.S. said...

தொகுப்பு அருமை சகோ!அதிலும் கேப்டன் ................................!

! சிவகுமார் ! said...

@ பிரேம் குமார்

நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ சீனுவாசன்

ரைட்டு சார்.

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

கே.ஆர்.பி ஈரோடு போகலாம் என்று சொல்லி இருக்கிறார். திரு. பிலாசபி பிரபாகரனும் வர்றார். எங்களுடன் வரும் 'யூத்' பதிவர்கள் பெயரும் நாளை கன்பர்ம் ஆயிடும். கண்டிப்பா சந்திப்போம்.

! சிவகுமார் ! said...

@ கோகுல்

ஆமாம். நியூஸ் பாத்தேன் தம்பி. அதுக்கு முன்னதான் பதிவு போட்டேன். கொஞ்சம் லேட்.

! சிவகுமார் ! said...

//கோகுல் said...
தீயா வேலை செய்வோம் வெற்றிக்கொடி கட்டுவோம்.//

கண்டிப்பா. நமது கடன் பணி செய்து (கெடையா) கெடப்பதே!

! சிவகுமார் ! said...

@ யோகா

நன்றி நண்பா. கேப்டன் கேப்டன்தான்!

kanagu said...

/*சண்ட போட வர்ற பயலுகள அப்படியே பிழிஞ்சி மத்யான சோத்துக்கு ரசமாக்கி தின்னுடுங்க தலைவா.*/

செம நகைச்சுவை :)

செய்திகளும் எழுதிய விதமும் அருமை :)

ஆமினா said...

நியூயர்க்குள்ள யூத் பதிவர் சந்திப்பு நடத்தினா வர முயற்சிக்கிறேன் :-)

ஆமினா said...

கல்லூரி பட டயலாக் இவுகளுக்கு நல்லா பொறுந்துதே :-)

விஜய்காந்த் காமெடி சூப்பர்.

RVS said...

மீல்ஸ் நல்லா இருந்தது. கேப்டன் வசனம் சூப்பர். :-)

Unknown said...

மாப்ள கலக்கல் போஸ்ட்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks for sharing Siva

MANO நாஞ்சில் மனோ said...

கூடல் சாடல் கோபம் கவலை வாழ்த்துக்கள் இவையெல்லாம் கலந்து கலக்கும் காக்டெயில் கார்னர் அசத்தல்...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா மும்பை டான்ஸ் சூப்பருங்கோ, பிளான் பண்ணி பண்ணிருக்காங்க...!!!

நாய் சேகர் said...

http://tasmacdreams.blogspot.com/2011/12/12122001.html

நாய்சேகரின் பிராந்திக்கடை 12122001

Unknown said...

நல்ல மீல்ஸ்

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடு வாங்க சந்திப்போம்

Related Posts Plugin for WordPress, Blogger...