அனைவருக்கும் வணக்கம்,
சிறுகதை எழுதுவதில் பதிவுலக ஜாம்பவான்கள் பலருண்டு. நான் அதில் முதல் வகுப்பு கூட தேறியதில்லை. இருப்பினும் ஒரு அசாத்திய தைரியத்தை மனதில் வைத்தவாறு பதிவுலக சாம்ராட்களான ஆர்.வி.எஸ். மற்றும் கேபிள் சங்கர் இருவரிடமும் ரிலே சிறுகதை எழுத வருமாறு அழைப்பு விடுத்தேன். கேட்ட மாத்திரத்தில் சம்மதம் தெரிவித்த இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
.................................................................................
"இன்னாடி எங்கொடத்துக்கு முன்னால ஒங்கொடத்த வச்சிருக்க. அடிங்கு. அடிக்கடி எனக்கு தொந்துரவு குட்துனே கீற. நாரிப்புடும் நாரி. ஒம் புருஷன் $%$%^^&#. நீ இட்லிய மட்டுமா $%ஃ&$# " என சென்ற வாரம் B ப்ளாக் ராஜி செய்த குழாயடி ஷ்பெஸலாபிஷேகத்தில் அவமானப்பட்டவள்தான் அதே ப்ளாக்கின் கீழ் வீட்டில் வசிக்கும் மகா. மெயின் ரோட்டோரம் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம். சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் இந்த இருவருக்கும் அவ்வப்போது லேசான உரசல்கள் வருவதுண்டு. அதுவும் ராஜியின் கணவன் சேகர் அரசியலில் வைட்டான ஆள் என்பதால் மகாவை கொஞ்சம் அதிகமாகவே வசைபாடுவாள் ராஜி. மகாவும் சளைத்தவளில்லை. ஆனால் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை எப்போதும் பிரயோகிக்காதவள். கணவன் இல்லை. மகன் படிப்பது எட்டாம் வகுப்பு.
நேற்று:
ராஜியின் எதிர்வீட்டில் இருக்கும் சந்திரா பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லாததால் இட்லி பார்சலை தந்துவிட்டு சென்றாள் மகா. அடுத்த அரைமணி நேரத்தில் "ஐயய்யோ..பீரோல வச்சிருந்த 7,000 ரூவாயக்காணுமே. வூட்டு கதவ தாப்பா போடாம குளிஸ்ட்டு வர்துக்குள்ள யாரோ எத்துட்டாங்களே" என ஹவுசிங் போர்ட் அலற ராஜியின் ஒப்பாரி ஓங்கி ஒலித்தது. "யக்கா. மேட்ரு தெர்மா. ராஜிக்கா வூட்ல யாரோ பண்த்த சுட்டுட்டாங்களாம்" என்று மகாவிற்கு ப்ளாஷ் நியூஸ் தந்துவிட்டு ஓடினான் பொட்டிக்கடை பாலா. அனைத்தையும் பீடியை வலித்தவாறு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான் ஓணான். வயது 19. ராஜியின் கூச்சலை கேட்டு வெளியே வந்தாள் ரேகா. வயது 21. இருவருக்கும் படிப்பு வாசம் இல்லை. அவ்வப்போது கண்கள் மட்டும் லேசாக மோதிக்கொள்ளும்.
விரைவில் தொடரப்போவது ஆர்.வி.எஸ்.
விரைவில் தொடரப்போவது ஆர்.வி.எஸ்.
...................................................................
12 comments:
ungal writing style ku ka.si.sivakumar mathiri eluthalamnu ninaikiren...avar books tamilini,vikatan,kilaku,vamsi la kidaikum.....[ithu en karuthu matume]
சிவா.. இருந்தாலும் எனக்கு சாம்ராட் பட்டமெல்லாம் கொஞ்சம் ஓவர்.
ஒரு டெம்ட்டிங்கா புடிச்சு இழுக்க முடியுமான்னு பார்க்கறேன். :-)
முடிக்கறதுக்கு பெரிய ஆள் இருப்பதால் தெகிரியமாகத் தொடருகிறேன். :-)
நல்ல முயற்சியா இருக்கே.... படிக்க படிக்க ஆவல தூண்டுது....
நகைய எடுத்தது யாரா இருக்கும்.... அடுத்த பதிவரின் பதிவிற்காக காத்திருக்கிறேன்.
அடுத்து தொடரப்போவது லவ் ஸ்டோரியா இல்லாங்காட்டி க்ரைம் ஸ்டோரியா...?
@ Elamparuthi
கருத்துக்கு நன்றி இளம்பருதி.
@ RVS
நாளைய இயக்குனர் இருக்கும்வரை கிளைமாக்ஸ் பற்றி நமக்கென்ன பயம். தொடருங்க ஆர். வி. எஸ்.
@ ஆமினா
நகை தொலையலையே..அதை எடுத்தது யாரு. சொல்லுங்க...
@ Philosophy Prabhakaran
அடுத்தா? ஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு..
ம்ம்ம்.. தொடருங்கள். ஆமா நீங்க சொன்னது போல பிரபா அப்படித்தானா, அய்யகோ, மாட்டினா நான் தான் பலியாடா?
நல்ல ஓபனிங் ...........அடுத்த விக்கட் எப்படி ஆடுதுன்னு பார்ப்போம் .................
@ஆரூர் முனா செந்திலு said...
ஆமாம் சார். உங்களுக்கு கீழ கமன்ட் போட்ட ஆளு அதைவிட டெர்ரர். குடித்தால் அரை மணிநேரம் வேர் இஸ் த பார்ட்டி டான்ஸ் ஆடிக்கொண்டே இருப்பார்.
@ அஞ்சாசிங்கம்
ஆர்.வி.எஸ். கை சுழல்வதை பொறுத்தே விக்கட் விழும்.
Post a Comment