CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, November 20, 2011

வித்தகன்

 
                                                                   
 

கோலிவுட்டில் உச்சத்தை தொடுவதற்கான திறமைகள் இருந்தும் இன்றுவரை குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் தாண்ட முடியாமல் தவிக்கும் நாயகனாக இருக்கிறார் பார்த்திபன். தனக்கு பொருந்தும் கேரக்டரை தேர்வு செய்வது, வசனத்தில் பட்டாசு கிளப்புவது என்று தான் நடிக்கும் படங்களில் அடிக்கடி மெனக்கெட்டாலும், “சூப்பர் படம்பா” என்று சொல்ல அனைத்து தரப்பு  ரசிகர்களுக்கும் வாய்ப்பு தர மறுப்பது ஏனோ?. ‘நெடுநாள் கழித்து ஒரு பார்த்திபன் படம். சுமாராக இருந்தாலும் பரவாயில்லை. வசனங்களுக்காக பார்க்கலாம்’ என தியேட்டருக்கு வந்தவர்கள் பலர். நானும் அவ்வாறே.

90 – களில் வரவேண்டிய படத்தை செம தெகிரியமாக 2011 இல் சொல்லி தன்னை வித்யாசமானவன் என்று நிரூபித்து இருக்கிறார் நக்கல் நாயகன். காட்சி அமைப்பு, கதாபாத்திரங்கள், பாடல்கள் என அனைத்திலும் 1990 பீரியட் வாசம் கும்மென தூக்குகிறது. இடைவேளை வரும்வரை தியேட்டரில் பார்த்திபன் ராஜ்ஜியம். வாயாலும், துப்பாக்கியாலுமே எதிரிகளுக்கு கேப் விடாமல் ஆப்பு வைக்கிறார். பூர்ணா...பார்க்க டக்கராகவும் இல்லாமல், நடிக்கவும் செய்யாமல்....வை திஸ் கொலைவெறி டி???? ஓரளவுக்கு காட்சிகள் பிக் ஆகும்போது ஊடார நுழைந்து “என்ன லவ் பண்ணுங்க?” என்று ஹீரோக்களின் டங்குவாரை அறுக்கும் நாயகிகளை இனியும் தமிழ் சினிமா படைப்பாளிகள் தந்து கொண்டே இருந்தால்..பழுக்க காய்ச்சிய கடப்பாரையால் உட்காரும் இடத்தில் சூடு வைக்க தயங்க மாட்டோம். வீ ஆர் டாம் ஷ்யூர்.


                                                                      
பார்த்திபனின் ட்ரேட்மார்க் வசனங்கள் மட்டுமே வித்தகனின் ஒரே பலம். காமடி நடிகர் துணை இன்றி ஹ்யூமர் ஹிட் அடிக்கும் ரேர் நாயகன் என்பதை அழுத்தமாக ப்ரூவ் செய்துள்ளார். அவற்றில் சில: பார்த்திபன் “கையாலேயே சுட நீ என்ன எந்திரனா?”, துணை நடிகர் “கொள்கை, கோட்பாடு, தங்கப்பதக்கம், காக்க காக்க இதையெல்லாம் மனதில் வைத்து போலீசில் சேரவில்லை”. ஆனால் இவை அனைத்தையும் விட குடித்துவிட்டு “பில்லை நாந்தான் கட்டுவேன்” சீன்தான் தியேட்டரை குலுக்குகிறது. சிரிப்பொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது. வில்லன்கள் அனைவரும் வெத்து தோட்டாக்கள். அதுவும் அந்த க்ளைமாக்ஸ்....என்ன கொடும பார்த்திபன்???   


வித்யாசமாக செய்வதையே வழக்கமாக செய்துகொண்டு கதை, லாஜிக் போன்றவற்றை சொதப்பினால் என்ன யூஸ்? பொதுவாக நக்கல் வசனம் பேசும்போது லிமிட்டை தாண்டி அதிகம் பேசும் பார்த்திபன் இப்படத்தில் கொஞ்சம் கம்மியாக பேசுவது ஆறுதல். அவருக்கென இருக்கும் ரசிகர்களை மேலும் தக்கவைக்க...சத்யராஜ்/சந்தானம் காம்பினேஷனில் ராஜேஷ்(SMS,OK OK)  அல்லது சி.எஸ்  அமுதன்(தமிழ்படம்) ஆகிய இயக்குனர்களுடன் டீம் போட்டால் பார்த்திபன் பட்டையை கிளப்புவது உறுதி. நடக்குமா?    

வித்தகன் - பா(ர்த்)தி FUN
........................................................................................


தியேட்டர் சிப்ஸ்:


தியேட்டருக்குள்ள பூந்து சீட்ட கண்டுபுடுச்சி உக்காந்தா என் பக்கத்துல ஒரு இளம்பெண்.  அவங்க பக்கத்துல அவங்க லவ்வர். எழுதாத விதியின்கீழ ஒடனே சீட் மாத்திக்காம இன்டர்வல் வரை படம் பாத்தாரு லவ்வர். அட. நம்மளை நல்லவன்னு புரிஞ்சிக்கிட்டாறேன்னு புளகாங்கிதம் அடஞ்சேன். இன்டர்வல் முடிஞ்சி வந்து பாத்தா அவரு என் பக்கத்து சீட்ல உக்காந்துட்டு அந்த பொண்ண தள்ளி உக்கார வச்சிட்டாரு. நல்லவங்கள நம்புனா முழுசா நம்புங்க. இல்லனா நம்பவே நம்பாதீங்க லேய். க்ரேட் இன்சல்ட்!    
              
                                   ரெண்டு பக்கமும் பாக்க முடியல. கண்ண கட்டுதே!!                         
..................................................................
   

.................................
My other site:
agsivakumar.com
................................

..............................................................
சமீபத்தில் எழுதியது:

ஸ்ரீராமராஜ்யம் - விமர்சனம்
...............................................................

                                                                               

27 comments:

Prem S said...

விமர்சனம் அருமை

Prem S said...

விமர்சனம் அருமை

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

CS. Mohan Kumar said...

Theatre chips :))

Philosophy Prabhakaran said...

ஸ்டில்களை செங்குத்தாக வெளியிட்டிருப்பதில் ஏதாவது குறியீடு இருக்கிறதா...

Philosophy Prabhakaran said...

// பழுக்க காய்ச்சிய கடப்பாரையால் உட்காரும் இடத்தில் சூடு வைக்க தயங்க மாட்டோம் //

யூ டூ பேட் வேர்ட்ஸ்... பாவி...

Philosophy Prabhakaran said...

ஹீரோயின் நெற்றியில் இருக்கும் ஆபரணம் தங்கள் காதில் இருப்பது போல தெரிகிறதே...!!!

RVS said...

பெரிசா அலசாசதுனால சூசகமா இந்தப் படம் தேறாதுங்கிறீங்க... :-)

முத்தரசு said...

சரி விடுங்க நீங்க பார்த்திட்டிங்க ஹிம்

! சிவகுமார் ! said...

@ பிரேம்

ரெண்டு தபா பாராட்டுன உங்கள நெனச்சா மனசு கொக்குது பிரேம்.

செங்கோவி said...

இவரு எப்பவும் இப்படித்தான் சிவா..தனித்தனியாப் பார்த்தா ஒவ்வொரு சீனும் நல்லாத்தான் இருக்கும்,மொத்தமாப் பார்த்தா ஒட்டாது..

! சிவகுமார் ! said...

@ மோகன்

தியேட்டர் சிப்ஸ் :)) <--- இந்த ஷேப்ல இல்லையே.

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
ஸ்டில்களை செங்குத்தாக வெளியிட்டிருப்பதில் ஏதாவது குறியீடு இருக்கிறதா...//

ஐ ஆம் பார்த்திFAN

! சிவகுமார் ! said...

@ யூ டூ பேட் வேர்ட்ஸ்... பாவி...

இது உங்களுக்கு பேட் வேர்டா..அடப்பாவி!!

! சிவகுமார் ! said...

@ பிரபா

போல் என்ன? அதேதான்.

! சிவகுமார் ! said...

@ RVS

இரண்டாம் பாதி நல்லா எடுத்துருந்தா வித்தகன் டிக்கட்டை நாலு நாள் எக்ஸ்ட்ரா வித்துருக்கலாம் RVS.

! சிவகுமார் ! said...

//மனசாட்சி said...
சரி விடுங்க நீங்க பார்த்திட்டிங்க ஹிம்//

வாங்க மனசாட்சி.

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

ஒட்டாததால ஓடாது. நன்றி செங்கோவி!

ம.தி.சுதா said...

///தியேட்டர் சிப்ஸ்:////

ஹ...ஹ.... இந்த இடத்தில் நீங்களும் பெரிய விடயம் ஒன்றை மிஸ் பண்ணிட்டிங்கண்ணு புரியுது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

அஞ்சா சிங்கம் said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை அம்மணமா ஆடிச்சாம் .......
அது மாதிரி இருக்கு ..உனக்கு இந்தமாதிரி போட்டோ எடுக்க யாருயா சொல்லித்தரா .?
அவனுக்கு முதலில் பழுக்க காய்ச்சிய கடப்பாரை தண்டனை குடுக்கணும் ........

MANO நாஞ்சில் மனோ said...

யோவ் அந்த பக்கத்து சீட் பொண்ணு கொலுசை கானோமாமே, அந்த காதலன் கொலை வெறியா உம்மை தேடிட்டு இருக்கானாம்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா படம் பாக்கனும்னு சொல்றீங்களா, பார்க்க வேணாம்னு சொல்றீங்களா...?

! சிவகுமார் ! said...

@ அஞ்சா சிங்கம்

நாத்திகவாதின்னு சொல்லிட்டு கோயிலுக்கு போற ஆளா நீங்க? மக்களே பாத்துக்கங்க.

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
ஆமா படம் பாக்கனும்னு சொல்றீங்களா, பார்க்க வேணாம்னு சொல்றீங்களா...?//

முதல் பாதி பாருங்க. அடுத்த பாதி போருங்க.

! சிவகுமார் ! said...

//
MANO நாஞ்சில் மனோ said...
யோவ் அந்த பக்கத்து சீட் பொண்ணு கொலுசை கானோமாமே, அந்த காதலன் கொலை வெறியா உம்மை தேடிட்டு இருக்கானாம்...//

அண்ணே. இந்த டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும். பிரமாதம்.

Philosophy Prabhakaran said...

// இது உங்களுக்கு பேட் வேர்டா..அடப்பாவி!! //

பின்ன உட்காரும் இடம்ன்னா என்ன பெஞ்ச், சேர்ன்னு சொல்லுவீங்களா...

Philosophy Prabhakaran said...

// நாத்திகவாதின்னு சொல்லிட்டு கோயிலுக்கு போற ஆளா நீங்க? மக்களே பாத்துக்கங்க. //

செல்வினும் நானும் கோவிலுக்கு போன மேட்டர் இந்த வார பதிவுல வருது... மிஸ் பண்ணிடாதீங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...