CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, November 13, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (13/11/11)


ரா ஒன்:   
                                                               
சல்மான் "ஒத்த ப்ளேடுல போட்ட மொட்டைய வச்சிக்கிட்டு 300 கோடி அள்ளிட்ட நீ. பாவம் ஷாருக் பய. 135 கோடி செலவு பண்ணி மெகா மொட்டை போட்டுக்கிட்டான்".
.......................................................................................................

IMMORTALS: 

இந்தியர்களான இயக்குனர் தர்சேம் சிங் மற்றும் நாயகி ப்ரீடா பின்டோ  காம்பினேஷனில் வெளிவந்துள்ளது இப்படம். கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்ததென கேள்விப்பட்டு இப்படத்திற்கு முன் பதிவு செய்தேன். சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும், படம் நன்றாகத்தான் இருந்தது. ரத்தமும், வெட்டுகளும் அதிகம். கடலருகே இருக்கும் மலைக்கோட்டையை வைத்தே பல சீன்கள் இருந்தன. லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்று அட்டகாசமாக இல்லாவிடினும், அசத்தல் கிராபிக்ஸ் சீன்களுக்காக ஒரு முறை பார்க்கலாம். கதை புரியாமல் படம் பார்த்தால் ரொம்ப கஷ்டம் என்பது  நிஜமே. சற்று போர் அடிக்கும் சீன் வரும்போது தியேட்டரில் இருந்த ரசிகர்கள் அடித்த ஜாலியான கமன்ட்டுகளால் செம டைம் பாஸ் ஆனது. படம் குறித்த தெளிவான செய்திகளை கருந்தேள் தளத்தில் பாருங்கள்: 

....................................................................................

சந்தித்த வேளையில்:

யாருக்கும் எளிதில் தரிசனம் தராத பதிவுலக கவுண்டமணியை நேற்று நான், லயன் மற்றும் தத்துவ பதிவர் ஆகியோர் சந்தித்தோம். உலக, பதிவுலக மேட்டர்கள் என பல டாப்பிக்குகளில் பேசினார்கள் சிங்கமும், கவுண்டரும். கூட சேர்ந்து எனது கருத்தையும்(?) சொல்ல,வழக்கம்போல் அமைதிப்புறாவாக இருந்தார் தத்துவம். கேமராவுக்குள் சிக்க வைக்க முயற்சி செய்தபோது காங்கிரஸ் மற்றும் உதயசூரியன் கட்சிக்கு ஓட்டு கேட்பதுபோல் கையால் முகத்தை மறைத்துக்கொண்டார் கவுண்டர்.  அந்தப்படத்தையும் அவர் அனுமதி இல்லாமல் போடக்கூடாது என்பதால் அதுவும் கட். உண்மையிலேயே 'நான் அவன் இல்லை' என்றும், பினாமியாக வந்திருக்கிறேன் என்றும் கூறி பீதியை கிளப்பினார். மொத்தத்தில் நிறைவான, சந்தோஷம் தந்த சந்திப்பு. 
.........................................................................................

பாட்ஷா:

சென்னையில் கிட்டத்தட்ட எல்லா மாணிக்பாட்ஷாக்களும் குறைந்தபட்ச கட்டணமாக 40 ரூபாய் வாங்க ஆரம்பித்துவிட்டனர். "எண்ணன்னா..நேத்துதான் பெட்ரோல் வெல 80 காசு கம்மி பண்ணி இருக்காங்க. அப்ப கூட அதே 40 ஓவாதான் வாங்குவீங்களா?" என்று கேட்டதற்கு மினி சிரிப்பு மட்டுமே பதிலாக வந்தது. பாட்ஷா - 2 வரப்போவதாக செய்திகள் கூறுகின்றன. தலைவா..நீதான் இந்த மேட்டரை டைட்டில் சாங்குல வச்சி எங்கள காப்பத்தணும்!!    
.................................................................................................      
  
வாய்மையே வெல்லும்:

இன்று மதியம் ஒரு மணிக்கு கூடங்குளம் அணு உலை குறித்த விவாதத்தை புதிய தலைமுறை ஒளிபரப்பியது. போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சுப. உதயகுமார் மற்றும் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் காரசாரமாக மோதிக்கொண்டனர். உதயகுமார் கேட்ட முக்கியமான கேள்விகளுக்கு நேரடி பதில்களை தரவில்லை பொன்ராஜ். மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு நேர்ந்தால் அதற்கு ரஷ்யா பொறுப்பேற்காது என்று ஒப்பந்தம் செய்துகொண்டதென உதயகுமார் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. 

அதுபோல் பேச்சிப்பாறை, தாமிரபரணி..இதில் எங்கிருந்து அணு உலைக்காக தண்ணீர் எடுப்பீர்கள்? போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இன்னும் உரிய நிவாரணம் இல்லை. அதில் ஈடுபட்ட குற்றவாளியையும் விடுதலை   செய்துவிட்டது அரசு. அதே நிலை எங்களுக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? கல்பாக்கத்தில் இருக்கும் மக்களுக்கு தொண்டையில் வியாதி வந்துள்ளது. இதை விட வேறன்ன உதாரணம் வேண்டும்? எனப்பல விஷயங்களை கேட்டு செம காட்டு காட்டினார் உதயகுமார். பாவம் பொன்ராஜ். மீண்டும் மீண்டும் 'பாதுகாப்பானது' என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

புதிய தலைமுறை பெண் செய்தி வாசிப்பாளர் கொஞ்ச நேரம் கூட அமைதியாக இல்லாமல் குட்டையை குழப்பிக்கொண்டு இருந்தார். சேனல் ஓனர்களே, நீங்க நல்லா இருப்பீங்க. முக்கியமான விவாத நிகழ்ச்சிகளுக்கு தேர்ந்த அனுபவம் கொண்ட நபர்களை நியமியுங்கள். அவசரப்பட்டு பேசும் யூத் ஆட்களை போட்டு நிகழ்ச்சிகளை சொதப்ப வேண்டாம். 
.........................................................................................

உன்னால் முடியும் தம்பி:  


ஊரே சேர்ந்து பல ரூபங்களில் (பேஸ்புக், SMS, டீக்கடை, சலூன்) கொத்து பரோட்டா போட்டாலும் காவலன், மற்றும் வேலாயுதத்தின் துணையுடன் தட்டுத்தடுமாறி மீண்டும் கலையுலகில் எதிர்நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய் என்றே தெரிகிறது. விண்ணத்தாண்டி வருவாயா வென்றாலும், ஒஸ்திக்கு தவ்வும் சிம்பு போல இல்லாமல் சரியான ரூட்டை பாலோ செய்தால் விஜய் விசைப்படகு தப்பலாம். லெட்ஸ் ஸீ.
.........................................................................................

ஒக்கடு:
                                                                    
தெலுங்கானா பிரச்னையில் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார் பிரதமர் என்று எகிறி குதிக்கிறார்கள் ஆந்திர தலைவர்கள். உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையாய்யா? பேசுனாலும் தப்பு, தப்பா பேசுனாலும் தப்பு, சும்மா இருந்தாலும் தப்பு. ஒரு நாள் அந்த சேர்ல உக்காந்து பாருங்கய்யா. அப்ப தெரியும். ஏற்கனவே அங்கங்க பொரிஞ்சி போய் கெடக்கு நம்மாளுக்கு. போதாக்குறைக்கு 'குத்தாலம் அருவியிலே குளிச்சது போல் இருக்குதா?'ன்னு பாகிஸ்தான்காரன் கிண்டல் பண்றான். இருக்குற கடுப்பு பத்தாதுன்னு உங்க இம்சை வேற. ராஸ்கோல்ஸ். சம்பேஸ்தானுரா  ஒரேய்!    
.....................................................................................................

மன்னன்: 


கடும் வறட்சிக்குப்பின் ஒருவழியாக இன்று நடந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்று விட்டார் பெடரர். இந்த ஆண்டில் இவர் வென்ற மூன்றாவது பட்டம். டென்னிசை கலக்கிய பெடரர் நீண்ட மாதங்களாக வெற்றிக்கு தடுமாறி வருகிறார். ரிட்டையர் ஆக வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்றே தெரிகிறது. என்னதான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினாலும் நடாலிடம் உதை வாங்குகிறார். அவரிடம் இருந்து தப்பினால் நோவான் டோஜோவிக் ஆப்பு வைக்கிறார். ரோஜர் பெடரரின் டென்னிஸ் கெரியரை அடுத்த ஆண்டு நடக்கும் போட்டிகள் தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நடாலுக்கும் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டனர் வேகமாக முன்னேறிவரும் ஆன்டி முர்ரே போன்றவர்கள். வரும் வருடம் யார் கிராண்டாக அனைவரையும் ஸ்லாம் செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
........................................................................................................

பசங்க:

நேற்று பஸ் ஸ்டாண்டில் கண்ட நிகழ்வு. பஸ் ஒன்று ஸ்டாப்பில் நின்றதும் அதில் நான் ஏற செல்கையில் ஒரு வாண்டு கடைசி படிக்கட்டில் இருந்து தவ்வி கீழே குதித்தான். அவன் அம்மா கை தட்டி சிரித்தவாறு அவனை பாராட்டினார். நமக்கு உள்ளே பற்றிக்கொண்டு வந்தது. வீரத்தமிழனாக மகனை வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. இறங்கி முடிப்பதற்குள் விசில் அடித்து கிளப்பும் பேருந்துகள் பல. கட்டிளம் காளைகளே சில சமயம் ஜெர்க் ஆகி தடுமாறும்போது, குழந்தைகளை குதிக்க செய்து மகிழும் அம்மாக்களை அரசியல் அம்மாவிடம் சொல்லி இட மன மாற்ற மருத்துவமனைக்கு பார்சல் செய்ய சொல்ல வேண்டும். 
...................................................................................................

குடியிருந்த கோயில்: 

முந்தைய ஸ்பெஷல் மீல்ஸில் என் நண்பன் ஒருவனின் தந்தை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அவர் இந்த வாரம் இறந்துவிட்டார். மூளையில் புற்றுநோய் கட்டி வேகமாக பரவி இறுதியில் அவர் உயிரைப்பறித்தது   விட்டது. ஆங்கில மருத்துவம் செய்யாமல் அருள்வாக்கு, செய்வினை உள்ளிட்ட பல மேட்டர்களை சொல்லி என் நண்பனை குழப்பிவிட்டனர் கூட இருந்தவர்கள். தந்தை மேல் அதிக பாசம் கொண்டவன். தந்தை மறைவிற்கு சில மணி நேரங்கள் முன்பாகத்தான் ஆபீசில் அவர் குறித்து பெருமையாக பேசினான். மளிகைக்கடை வைத்து தன் மகன்கள் அனைவரையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்த மனிதர். 

இறப்பு செய்தி கேட்டு அவன் வீட்டிற்கு சென்றபோது, நண்பனின் தந்தையை பெற்ற தாய் கதறி அழுதவாறு இருந்தார். எண்பது வயது தாண்டி தான் உயிருடன் இருக்க,பேரன்கள் மற்றும் கொள்ளுப்பேரன்,பேத்திகள் நிறைந்திருக்க, பெற்ற மகனை/மகளை இழக்கும் தாயின் சோகத்தின் வலியை அந்த தாய் மட்டுமே உணர இயலும். மற்றவர்களுக்கு எல்லாம் 'பாவம் பாட்டி, வயசான காலத்துல' என்று சில நிமிடங்கள் 'உச்' கொட்டிவிட்டு பிழைப்பை பார்க்கவே நேரம் சரியாக இருக்கும்........
...................................................................................................

ராஜா எங்க ராஜா:

நன்றாக உண்டபிறகு இப்பாடலை கேட்டாலே மீண்டும் ஒரு முறை பசி எடுக்கும். பசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். படாபட் ஜெயலட்சுமி அசத்த அதற்கு ரஜினி குடுக்கும் சூப்பர் ரியாக்சன் ஒருபுறம், இசைஞானியின் குறும்பு மெட்டு, வாணி ஜெயராமின் குரல்(தகவல்: கேபிளார்) பட்டையை கிளப்புகின்றன.  கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் ஆகிய மூவரும் இப்படத்தின் பாடல்களை எழுதி இருப்பினும், இப்பாடலை எழுதியது இம்மூவரில் யார் என்று சரியாக தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே.       ...................................................................................................


.................................
My other site:
agsivakumar.com
..................................


30 comments:

CS. Mohan Kumar said...

கவுண்ட மணி சென்னையில் தான் இருக்காரா? ஏதாவது பதிவர் சந்திப்புக்கு வந்தால் பாத்துடலாம்

! சிவகுமார் ! said...

வேறு ஊருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார் மோகன்.

Prem S said...

//ஊரே சேர்ந்து பல ரூபங்களில் (பேஸ்புக், SMS, டீக்கடை, சலூன்) கொத்து பரோட்டா போட்டாலும் காவலன், மற்றும் வேலாயுதத்தின் துணையுடன் தட்டுத்தடுமாறி மீண்டும் கலையுலகில் எதிர்நீச்சல் அடிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய் என்றே தெரிகிறது. // உண்மை அன்பரே

Philosophy Prabhakaran said...

// பாட்ஷா - 2 வரப்போவதாக செய்திகள் கூறுகின்றன. தலைவா..நீதான் இந்த மேட்டரை டைட்டில் சாங்குல வச்சி எங்கள காப்பத்தணும்!! //

பாட்ஷா 2 வில் தல நடிக்கிறார்... தலைவர் அல்ல... அதுவும் ஜஸ்ட் வதந்தி தான் என்பது உங்களுக்கு ஆறுதலான செய்தி...

Philosophy Prabhakaran said...

// நன்றாக உண்டபிறகு இப்பாடலை கேட்டாலே மீண்டும் ஒரு முறை பசி எடுக்கும். பசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். //

என்ன பசின்னு விளக்கமா சொல்லிடுங்க அண்ணே...

Philosophy Prabhakaran said...

அப்ப புரட்சி பதிவருக்கு பயங்கரடேட்டா பதிவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையா...???

ஆமினா said...

சிரிப்பு,சிந்தனை,சோகம்,கோபம்,ரிச்சல் என பல முகங்களை காட்டவைத்த பதிவு

ஆமினா said...

நண்பரும் அவருடைய குடும்பத்தாரும் கூடிய விரைவில் மீண்டு வரவும் அமைதி பெறவும் மனமார்ந்த பிரார்த்தனைகள்

ஆமினா said...

இந்த காலத்துலையும் உயிரை வைத்து ஜோசியம்,தகடு,தாயம்,செய்வினைன்னு விளையாடுறாங்களேன்னு ரொம்ப வருத்தமாவும், கோபமாவும் வருது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Goundamani enna sonnaar?

சக்தி கல்வி மையம் said...

நானும் புதிய தலைமுறை செய்திகள் தொலைக்காட்சியில் அந்த தொகுப்பாளினி, குழப்பமான கேள்விகளே கேட்டாங்க,

! சிவகுமார் ! said...

@ சி.பிரேம் குமார்

வாங்க பிரேம்.

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

தகவலுக்கு நன்றி :)

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

உங்க மொபைல்ல இருந்த படங்கள்...அந்தப்பசி இல்லைய்யா!!

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

புரட்சிப்பதிவரு, பயங்கர டேட்டாவா? பயபுள்ள ஏதோ ப்ளான் பண்ணுதே.

! சிவகுமார் ! said...

@ ஆமினா

அதை நம்பி ரிஸ்க் எடுத்து உயிருடன் விளையாடுகிறார்கள் என்பதுதான் வருத்தம்.

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Goundamani enna sonnaar?//

இவரும், லயனும் சேர்ந்து கூடங்குளம், பயோடேட்டா, உள்குத்து பதிவுகள், அண்டார்டிகா பென்குயின் வரை மணிக்கணக்கில் பேசினார்கள். நமக்கு அவ்ளோ நாலேஜ் இல்லாததால் ரெண்டு பேரையும் பார்த்து மண்டை ஆட்டும் வேலைதான். ஒரு கட்டத்தில் லயன் சீரியசாக பேசும்போது க்ராஸ் ஆன பிகரை சில மணிநேரம் உற்று நோக்கிவிட்டு "என்ன சொன்னீங்க? "என்று கவுண்டர் கேட்டதும் லயன் கண்கள் செவ செவ!!

! சிவகுமார் ! said...

@ வேடந்தாங்கல் கருன்

மேடம் சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னாங்க. உதயகுமாரிடம் "உங்கள் முக்கிய கேள்வியை கேளுங்க"ன்னு அடிக்கடி மேடம் முக்கி முக்கி கேட்டாங்க. அவர் எத்தனை தடவைதான் கேள்வி கேப்பாரு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாருக்கும் எளிதில் தரிசனம் தராத பதிவுலக கவுண்டமணியை நேற்று நான், லயன் மற்றும் தத்துவ பதிவர் ஆகியோர் சந்தித்தோம்//

இவரையே சந்திச்சாச்சா. இனிமே வாழ்க்கைல எவ்ளோ துன்பம் வந்தாலும் இந்த துன்பத்தைவிட உங்களுக்கு ஏதும் பெருசா தெரியாது :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

! சிவகுமார் ! said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Goundamani enna sonnaar?//

இவரும், லயனும் சேர்ந்து கூடங்குளம், பயோடேட்டா, உள்குத்து பதிவுகள், அண்டார்டிகா பென்குயின் வரை மணிக்கணக்கில் பேசினார்கள். நமக்கு அவ்ளோ நாலேஜ் இல்லாததால் ரெண்டு பேரையும் பார்த்து மண்டை ஆட்டும் வேலைதான். ஒரு கட்டத்தில் லயன் சீரியசாக பேசும்போது க்ராஸ் ஆன பிகரை சில மணிநேரம் உற்று நோக்கிவிட்டு "என்ன சொன்னீங்க? "என்று கவுண்டர் கேட்டதும் லயன் கண்கள் செவ செவ!!//

ஹிஹி. உங்களையும் அசிங்க படுத்திட்டாரா?

எப்பூடி.. said...

//கண்ணதாசன், கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் ஆகிய மூவரும் இப்படத்தின் பாடல்களை எழுதி இருப்பினும், இப்பாடலை எழுதியது இம்மூவரில் யார் என்று சரியாக தெரியவில்லை.//


கங்கை அமரன்

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

நம்ப மாட்டேன். செகப்பா இருக்குறவர் துன்பம் தரமாட்டார்.

! சிவகுமார் ! said...

@ எப்பூடி

தேங்க்ஸ் ஜீவா!!

அஞ்சா சிங்கம் said...

கேமராவுக்குள் சிக்க வைக்க முயற்சி செய்தபோது காங்கிரஸ் மற்றும் உதயசூரியன் கட்சிக்கு ஓட்டு கேட்பதுபோல் கையால் முகத்தை மறைத்துக்கொண்டார் கவுண்டர்...////////////////////
அடா என்னப்பா இப்படி பொசுக்குன்னு சஸ்பென்சை உடைச்சிட்டீங்க கொஞ்ச நாள் ஓட்டலாம்ன்னு இருந்தேன் ...........

! சிவகுமார் ! said...

சாரி சிங்கமே. இதை வச்சி நான் இருவது பதிவு தேத்தலாம்னு பாத்தேன். அதனால அவர் எஸ்கலேட்டர்ல ஏற ஆரம்பிச்சி 'அந்த' கடைக்குள்ள போனது வரை நான் அஞ்சி பதிவு எழுதறேன். நீங்க அதை கண்டின்யூ பண்ணுங்க.

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா பன்னிகுட்டி உங்ககிட்டேயும் சிக்கிட்டாரா ஹா ஹா ஹா ஹா இனி நான் ஒருத்தன்தான் பாக்கி, ம்ம்ம் பார்ப்போம் சிக்குறாரான்னு...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் நண்பரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...

இளம் பரிதி said...

superb.....

Unknown said...

ஏன்யா மாப்ள அவரு என்ன அமலாவா முகத்த மறசிக்க..நல்லவேல பாவிங்க பாழும் கெணத்துல தல்லல ஹிஹி!

Related Posts Plugin for WordPress, Blogger...