CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, November 6, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(06/11/11)பிஸ்தா: 

                                                                 
"வெஸ்ட் இண்டீஸ்னா மும்பைதான? கவலைப்படாத தம்பி. இன்னிக்கி நடக்குற டெஸ்ட்ல நீ நூறாவது நூறு அடிக்கற. மொத பந்தை மட்டும் கிரவுண்டுக்கு வெளில அடி. பந்து மும்பை வரைக்கும் வந்து விழுந்ததால நூறு ரன் தரணும்னு நான் பந்த் பண்றேன்."
.............................................................................................

புலிவேஷம்:

அசிங்கமாக பொது இடங்களில் காதல் ஜோடிகள் சேட்டை செய்வது சகிக்க முடியாத விஷயம் என்றாலும், அவர்களை விட அப்பாவியாக பூங்காக்களில் அமர்ந்திருக்கும் ஜோடிகளை அடித்து விரட்டுவது சிவசேனாவின் பொழுதுபோக்கு. அண்ணன்- தங்கை பூங்காக்களில் இருந்தால் கூட அவர்களையும் காதலர்கள் என்றெண்ணி ஏசுவதும், அடிப்பதும் படு கேவலமான செயல். சமீபத்தில் சிவசேனாவின் இளைஞர் பிரிவான யுவசேனா நடத்திய விழாவில் நடிகைகளை வரவைத்து கவர்ச்சி ஆட்டத்தை அரங்கேற்றி உள்ளனர் இந்த மராத்தி மாவீரர்கள். அந்த ஐட்டம் சாங்கை கீழுள்ள லிங்க்கில் பாருங்கள்:


'ஊருக்கொரு நியாயம் உங்களுக்கொரு நியாயமா' என்று கேட்டதற்கு "சினிமா பாடல்களுக்கு மேடையில் ஆடுவது சகஜம்தானே" என்று கூறி உள்ளார் 'தல' பால் தாக்கரேவின் புள்ள உத்தவ் தாக்கரே. உங்களை எல்லாம் கேப்டனை விட்டு வீதி வீதியா விரட்டி விரட்டி அடிக்கனுண்டா..
.........................................................................................

இரு வல்லவர்கள்: 

                                                                     
'ஹாய்..கே.கே. ஹவ் ஆர் யூ?' என்று சொல்லும் துர்பாக்ய நிலை வந்துவிடுமோ   எனக்கருதி கலைஞரை ஓரிரு முறை எதேச்சையாக சந்திக்கும் சந்தர்ப்பம் வந்தால் கூட அதை முற்றிலும் தவிர்க்கும் ஜெ...அதே கொள்கையை பின்பற்றும் கே.கே. இப்படிப்பட்ட சூழலிலும் ஓரளவுக்கு நாகரீகம் தெரிந்த நபர்களில் முன்னாள் சென்னை மேயர் மா. சுப்பிரமணியம் குறிப்பிடத்தக்கவர். பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மக்களிடம் தொலைபேசியில் பேசி குறைகளை தீர்க்க ஆவன செய்தார். அப்போது சென்னையில் இருக்கும் கிட்டத்தட்ட எல்லா தெருக்களையும் துல்லியமாக அவர் அறிந்து வைத்திருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. 

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தற்போதைய மேயர் உடனே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார். அதுபோல் ஒரு பெண்மணி மழையால் தங்கள் பகுதியில் ஏற்படும் பிரச்னை குறித்து கூற உடனே ஒரு போன் நம்பரை தந்து அவர்கள் பகுதி மாநகராட்சி அதிகாரியிடம் பேசச்சொன்னார். 'சென்னை சாலைகளின் மொத்த நீளம் 3,300 கி.மீ., ஆனால் மழைவடிகால் வசதி  700 கி.மீ. அளவிற்கே இதுவரை போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் மழைவடிகால் கால்வாய்கள் துண்டிக்கப்பட்டுள்ளன' என்றும் கூறினார் சுப்ரமணியம். புதிய மேயர் சைதை துரைசாமி பதவி ஏற்ற உடனேயே கடுமையான சவாலை (கொட்டித்தீர்க்கும் மழை) சந்தித்து இருக்கிறார்.  இரு மேயர்களும் ஒரே ஏரியா ஆட்கள் என்பது சைதை தொகுதிக்கு பெருமை. முன்னவர் கூடுமானவரை தன் பணியை ஆற்றியதுபோல், துரைசாமியும் செய்தால் சைதை தொகுதியின் பெயர் என்றும் நிலைக்கும். பார்க்கலாம்.
.............................................................................................

மாயா பஜார்: 

அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பனின் தந்தை தலையில் கேன்சர் வந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்து வந்த நிலையில் அவனை குழப்பி அடித்து விட்டனர் அவனை சுற்றி இருப்பவர்கள். செய்வினை, அருள்வாக்கு, சேலம் சித்த வைத்தியம், கேரளா ஆயுர்வேதம் என ஆளாளுக்கு ஐடியா சொல்ல அனைத்தையும் முயற்சி செய்துபார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இவற்றை நம்பி ஆபரேஷன் கூட செய்யாமல் விட்டுவிட்டான். அவன் வயதில் மிகவும் இளையவன் என்றும் பாராமல் ஆளாளுக்கு அவனை அட்வைஸ் தந்து குழப்பியுள்ளனர்.

ஐடியா குடுக்கிறேன் பேர்வழி என்று ஐ.சி.யு.வில் இருந்த ஒரு உயிருடன் விளையாடும் இந்த அறிவுக்கொழுந்துகளை என்ன சொல்வது? நாளை அறுவை சிகிச்சை செய்யாமல் ஏதேனும் ஆகிவிட்டால் இந்த அறிவுஜீவிகள் பொறுப்பு ஏற்பார்களா? முதல்ல உங்களுக்கு பேய் ஓட்டனும்டா.
....................................................................................................

பொற்காலம்: 

வள்ளுவர் கோட்டத்தின் ரெகுலர் விசிட்டர்களான 'ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி ரெஸ்ட் எடுக்கும்' தோழர்களுக்கும், காதலை கால்கிலோ காம்ப்ளான் போட்டு தினம் வளர்க்கும் ஜோடிகளுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு: ஞாயிறு நள்ளிரவு முதல் மறுநாள் பிற்பகல் வரை வள்ளுவர் கோட்டம் பாரிமுனைக்கு மாற்றப்படும். மதிய உணவை அங்கு சாப்பிட்டு முடித்ததும் வெளியேறி விடுங்கள். அல்லாவிடில் நீங்களும் 'டோ' செய்யப்பட்டு அடையாறுக்கு இழுத்து செல்லப்படலாம். அங்கு சில மணிநேரங்கள் ஸ்டே செய்துவிட்டு அந்தி சாய்ந்ததும் அண்ணா நகருக்கு மாற்றப்படும். எக்காரணம் கொண்டும் கே.கே. நகருக்கு வ.கோட்டம் இடம் பெயர வாய்ப்பில்லை. மைன்ட் இட்!!
..............................................................................................

எதிர்பாராதது: 

                                                                  டோஜோவிக்

டென்னிஸ் கேரியரில் படிப்படியாக முன்னேறி சென்ற ஆண்டு நடால் மற்றும் பெடரர் எனும் இரு சிங்கங்களை ஓரம்கட்டி தூள் கிளப்பினார் செர்பியாவின் டோஜோவிக். ஆனால் நேற்று நடந்த ஸ்விஸ் இன்டோர் போட்டியின் அரை இறுதியில் கெய் நிஷிகோரி(யாரென்றே இதுவரை தெரியாது) எனும் ஜப்பான் வீரரிடம் 2-6, 7-6, 6-0 எனும் செட் கணக்கில் உதை வாங்கி உள்ளார். கடைசி செட்டில் ஒரு கேம் கூட ஜெயிக்காமல் இவர் தோற்றது அதிர்ச்சிதான். வலது தோள்பட்டையில் வலி இருந்ததும் தோல்விக்கு ஒரு காரணம் எனினும், இவரை விரும்பாத டென்னிஸ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
..............................................................................................

மகா நடிகன்: 


இருக்குற கடுப்பு பத்தாதுன்னு இதுவேற. "எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு எனும் அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்கி பெருமை கொள்கிறோம்" என்று சொன்னது எந்த நாடு தெரியுமா? பக்கத்து வீட்டு பாகிஸ்தான் தான். இதை மனதார வரவேற்பதாக நம் நாட்டு 'டம்மி பீஸ்' (மோகன்..பன்மோகன்) சொல்லி இருக்கிறார். பாக்குறதுக்கு கார்ட்டூன் பொம்மை மாதிரி இருக்காரு. கலாய்ச்சி அனுப்பிடலாம்னு பாத்தா.. இந்த ஆளு சீரியசாவே இப்படித்தான் பேசிட்டு திரியறாரு. என்ன செய்றதுன்னே தெரியலியே...ம்ம்..
............................................................................................

மாத்தி யோசி:

தலைமைச்செயலகத்தை சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் மருத்துவமனையாக மாற்றுவேன் என்று மேடம் சொன்னதற்கு மயங்கி சென்டிமென்ட்டாக ஆப் ஆன பலரில் நானும் ஒருவன். ஆனால் அதே அஸ்திரத்தை மொக்கையாக  பயன்படுத்தி அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவேன் என்று ஜெ சொன்னதுதான் எடுபடவில்லை. அம்மா..தாயே.. தயவு செஞ்சி இருக்குற மருத்துவமனைங்களை நல்லா வச்சிக்க பாருங்க. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை (சென்னை) பக்கம் போன வாரம் தெரியாம போயிட்டேன். அந்த இடத்தை சுத்தி குப்பைங்க ஜாஸ்தியா இருக்கு. இப்ப மழைக்காலம் வேற. இருக்குற குழந்தைங்களுக்கு முதல்ல வியாதி வராம காப்பாத்துங்க.
.............................................................................................  

அச்சமுண்டு அச்சமுண்டு:

என் சகோதரர் வேலை செய்யும் இடத்திற்கு பொருட்கள் வாங்க சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவர் பரிவாரங்களுடன் வந்திருக்கிறார். அதில் ஒரு அசிஸ்டன்ட் "அமைச்சர் வர்றாங்க. அமைச்சர் வர்றாங்க" என்று ட்யூன் போட்டுக்கொண்டே உள்ளே நுழைந்ததோடு  மீண்டும் பில்ட் அப்பை ஏற்றி 'அமைச்சருக்கு கரெக்டா பொருளை எடுத்து குடுங்க' என்று வாசிக்க, "நாங்க பாத்துக்கறோம் சார். கட்சில இருக்குற பெரிய தலைகள் எல்லாம் இங்க ரெகுலரா வர்றவங்கதான். மேடமுக்கு கூட இங்கிருந்துதான் பொருட்கள் அனுப்புகிறோம்" என்று வேலை செய்பவர்கள் சொல்ல,  "என்னது மேடமுக்கு கூடவா"  என்று திடுக்கென திரும்பி அமைச்சர் கேட்டாராம். "ஆம்" என்றதும் பரிவார பேன்ட் வாசிப்புகள் அமுங்கிப்போனதாம். நல்ல சீனை மிஸ் பண்ணிட்டமோ?
..............................................................................................

எங்கேயும் எப்போதும்: 

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமா? சொ.கு. வழக்கில் ஜெ ஆஜராவாரா? படுவா...இந்தக்கேள்வியை எல்லா ஊடகப்பயல்களும் ஏண்டா எங்ககிட்டயே கேட்டு உசுர வாங்கறீங்க? அத தெரிஞ்சிக்கத்தானே நாங்களே காசு குடுத்து பேப்பர் வாங்கறோம். இனிமே இந்த மாதிரி கேள்வியை எல்லாம் பழைய பேப்பர் கடைல போட்டு பேரிச்சம்பழம் வாங்கி தின்னுட்டு அப்படியே ஆத்தோட போய்டுங்க....
...............................................................................................

(மன்கோகன்) சிங்கம்:

மெகா ஹிட் ஆன சிங்கம் படத்தை பஞ்சாபி மொழியிலும் ரீமேக்குகிரார்கள். சூர்யா, அஜய் தேவ்கன் எல்லாருமே இந்தப்படம் வந்தா பத்தடி பின்னாலே போயி பம்மிக்கிட்டுதான் நிக்கணும். இதய பலகீனம் உள்ளவர்கள் இக்காட்சியை காண வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.      


மவனே, இனிமே எவனாச்சும் பெட்ரோல், கேஸ் வெல ஏறிடுச்சின்னு எகுறுவீங்க?
.....................................................................................................  

......................................
My other site:

agsivakumar.com
.....................................

............................................................
சமீபத்தில் எழுதியது:

கட்சியில் சேராதோர் கட்சி 
...........................................................


14 comments:

Unknown said...

மாப்ள கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க சூப்பர்...ஹிஹி இந்த சிங்கத்த கிசிளிக்காஸ்ல பாத்து புட்டேன்...இருந்தாலும் நன்றி!

Cable சங்கர் said...

INTERESTING

CS. Mohan Kumar said...

மேயர்கள் பற்றி சொன்னது மிக சரி

MANO நாஞ்சில் மனோ said...

மவனே, இனிமே எவனாச்சும் பெட்ரோல், கேஸ் வெல ஏறிடுச்சின்னு எகுறுவீங்க?//

ஹா ஹா ஹா ஹா செமையா இருக்கு மக்கா வீடியோ ஹா ஹா ஹ ஹா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

பல்சுவையா எழுதி இருக்கீங்க, அந்த அமைச்சர் காத்து போன பலூனானது சூப்பர்...!!!

கோகுல் said...

சைதை துரைசாமி சட்டசபை தேர்தலில் ஜெயித்திருந்தால் ஒரு வேளை சுப்பிரமணியம் மேயராகியிருப்பாரோ?

அப்படி நடந்திருந்தால் நல்லாருந்திருக்குமே!

கோகுல் said...

நலம் விசாரிக்கிறேன் பேர்வழின்னு
குட்டை குழப்புரவங்க பண்ற ஜீவிகள் திருந்தனும்.இல்ல அவ்ளோ பெரிய அபாடேக்கரா ன்னு கேக்குறேன்!

kanagu said...

தமிழ் பட பெயர்களை வைத்து அருமையாக எழுதியுள்ளீர்கள்.. அருமை சிவா :)

மன்மோகன் அவரோட அந்த வீடியோ-வ ரொம்ப நாள் முன்னாடியே பாத்து இருக்கேன்... :) அட்டகாசம் :)

இளம் பரிதி said...

ammavin plus pointe antha payam katrathu than....meals nalla iruku...

Philosophy Prabhakaran said...

மேயர்கள் வடக்கையும் சேர்த்து கவனிக்க வேண்டும்...

Philosophy Prabhakaran said...

நூலக அறிவிப்பால் கொஞ்சம் சார்பு நிலையில் இருந்து நடுநிலைக்கு வந்துவிட்டதாக தெரிகிறது... ம்ம்ம் தொடரட்டும்...

Philosophy Prabhakaran said...

உங்கள் உற்சாக பானம் தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன்... No Words...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema collection

சிராஜ் said...

சிவா,

வெரி இன்ட்ரஸ்டிங். தமிழ்ல எழுதுகிற ஒரு சில தரமான எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர்.

சிராஜ்
வடைபஜ்ஜி

Related Posts Plugin for WordPress, Blogger...