ச(த்)தம் போடாதே:
செஞ்சுரி அடிப்பாருன்னு இருந்த சொத்தை எல்லாம் வித்து ஏழெட்டு ஆட்டம் பாத்துட்டேன். கடைசி பஸ்சுக்கு காத்துருக்குற அஷ்வின் கூட 100 போட்டாச்சி. ட்ரைவர் சீட்ல இருக்குற இந்த ஆளு மட்டும் இந்த ஆ(ட்)டு ஆ(ட்)டறாரே"
...................................................................................
பெண்சிங்கம்:
டாக்டர் பட்டம் வாங்கிக்கொண்டு ஒரு சொட்டு போலியோ மருந்து கூட தராமல் ஏமாற்றும் கலைஞர், கேப்டன் போன்றவர்களை விட ஜெ எவ்வளவோ மேல். அடிக்கடி டிசைன், டிசைனாக ஆஸ்பத்திரி அமைப்பது குறித்து அறிக்கை விடுகிறார். அதில் லேட்டஸ்ட்டாக 'புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்' அமைக்கப்படும் என்றிருக்கிறார். ஏற்கனவே 'அதிநவீன' முறையில் சேவை செய்யும் ஆ.சு.மையங்கள் பல வருணபகவானின் ஷாக் ட்ரீட்மென்ட்டால் தண்ணீரில் தத்தளிக்கின்றன. அதன் மூலம் மேலும் சில வியாதிகள் வர வாய்ப்புகள் உண்டென செய்திகள் வருகின்றன. இப்போது நோயாளிகளாக இருப்பவர்களை உடனே ரட்சியுங்கள். எங்கள் சமூகம் உங்களுக்கு பின்பாக கொஞ்ச நேரமாவது செல்லும்.
.................................................................................
சின்ன மாப்ளே:
மாயாவதி ஆட்கள் ராகுலின் பேனர்களை கிழித்து எறிந்து ஆவேசம். 'ப்ரின்ஸ் ராகுல், இனி உ.பி. வந்தால் தெரியும் சேதி' என்று கொந்தளித்தனர்.
'ப்ரின்ஸ்..அந்த ஊர்ல கஞ்சி எல்லாம் தீந்து போச்சாம். ஸ்டியரிங்கை திருப்புங்க. இல்லன்னா கஞ்சி காச்சிடுவாங்க போல'.
......................................................................................
வந்தான். வென்றான்.
லண்டனில் நடைபெற்று வரும் உலக சுற்றுலா (வேர்ல்ட் டூர்) பைனல்ஸ் போட்டியில் பரம வைரி நடாலை வென்று தனக்கான களம் இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் பெடரர். தொடர்ந்து நடால், டோஜோவிக் மற்றும் சில புதிய வீரர்களிடம் தோற்று வந்த பெடரர் இந்த வெற்றி மூலம் அடுத்த ஆண்டு ஒரு ரவுண்ட் வருவார் என்று தெரிகிறது. ஏற்கனவே அனல் பறக்கும் ஆண்கள் டென்னிஸ் போட்டியில் பெடரரின் மறுமலர்ச்சி டென்னிஸ் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை தரும்.
.....................................................................................................
கலர் கனவுகள்:
போனமுறை இருந்த மேடம் ஆட்சியில் சென்னை நகரில் நிறைய வெள்ளை போர்ட் பேருந்துகளும், மீதம் இருந்தவை மஞ்சள்(LSS) மற்றும் பச்சை(பாய்ன்ட் டு பாய்ன்ட்) நிறங்களிலும் வலம் வந்தன. அடுத்து வந்த ரெட் ஜெயன்ட் ஐயா வெள்ளை போர்ட் பேருந்துகளை பெருமளவு ஒழித்தார். மக்களிடம் கேட்காமலேயே நம்மீதிருந்த பொங்கி வழியும் பாசத்தால் சொகுசு, தாழ் தளம், குளு குளு கூல் என பலரக பேருந்துகளை உலவவிட்டு மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தினார். அதை 'தளபதி...எங்கள் தளபதி' என்று 'தற்காலிக டார்ச் லைட்'களால் போற்றப்படும் 'எளிய சன்ஷைன்' ஸ்டாலினும் வேடிக்கை பார்த்தார். புலிக்கு பிறந்தது பூனையாகதல்லவே.
அந்த விஞ்ஞான யுக்தி மேடமுக்கு தெரியாததால், வழக்கம்போல் தனது திடீர் அட்டாக்கை கையாண்டு மேலும் டிக்கட் விலைகளை ஏற்றி உள்ளார். மேடம், எப்படியும் நீங்க ரேட்டை குறைக்க போறதில்ல. அட்லீஸ்ட் வெள்ளை போர்ட் பேருந்துகளையாவது அதிகமாக இயக்குங்க. தாங்காது பூமி.
.................................................................................
பம்பாய்: 26/11 மும்பை தாக்குதல் குறித்த தெளிவான ஒரு காட்சித்தொகுப்பை ஒளிபரப்பியது ஹிஸ்டரி டி.வி. பாகிஸ்தானில் இருந்து கசாப்பின் க்ரூப் படகு மூலம் மும்பை கிளம்பியது முதல் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் பேட்டி வரை ஒன்று விடாமல் ஒளிபரப்பினர். பல காட்சிகளை நிஜமாகவும், சிலவற்றை சித்தரித்தும் காட்டினர். சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனில் கசாப் நடத்திய வெறியாட்டத்தில் தன் குழந்தையை பறி கொடுத்த நபீசா எனும் பெண் 'அவர்களை கண்டிப்பாக தூக்கில் இட வேண்டும். குழந்தை என்று தெரிந்தும் இச்செயலை புரிந்தவர்களுக்கு மன்னிப்பே கூடாது' எனக்கூறி அழுதார். மரண தண்டனை கூடாது என்பவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்? நிகழ்ச்சி முழுக்க தமிழில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மறுஒளிபரப்பு போடுவார்களா என்று தெரியவில்லை. ஹிஸ்டரி டி.வி. (தமிழ்) பல சிறப்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள்.
.......................................................................................
.......................................................................................
ட்வீட்ஸ் இன் ப்ளாக் (சொந்த சரக்கு).
ராஜநடை:
பல்வேறு பிரச்னைகளை முன்னிறுத்தி வணிகர் சங்கங்கள் கடையடைப்பு செய்ய முடிவு.
"இந்த போராட்டத்துல நடைபாதை வியாபாரிங்கள வலுக்கட்டாயமா சேத்துக்கங்க. அன்னிக்காவது நடைபாதைல நடந்து பாக்கறோம்"
...............................................................................
தெற்குத்தெரு மச்சான்:
சரத்பவாரை சப்பு சப்பென கன்னத்தில் அறைந்தார் சீக்கிய இளைஞர்.
"நல்லவேள. தமிழன் இதை செய்யல. அப்படி ஏதாச்சும் நடந்துருந்தா அஷ்வினை டீம்ல இருந்து தூக்கி இருப்பாங்க # 'தமிழக வீரர்களை தூக்க காரணமா தேவை? வாங்கிக்க' சங்கம்.
.................................................................................
தூரத்து இடி முழக்கம்:
கொட்டித்தீர்க்கும் கன மழையின் கொடுமையைக்கூட பொறுத்துக்கொள்ளும் தமிழர்கள், அந்த இரண்டு நிமிடம் மட்டும் காட்டாறாக கர்ஜித்து பொங்குகிறார்கள் # ரமணன். பெய்யலாம், பெய்யாமலும் போகலாம்.
.......................................................................................
வரலாறு:
அறுபதுகளில் தமிழ் சினிமா. ஒரு வித்யாசமான காணொளி. புகழ்பெற்ற பிரெஞ்ச் இயக்குனரான லூயிஸ் மல்லே 1968 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது எடுத்த வீடியோ தொகுப்புகளில் ஒன்றுதான் இது. 'தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஒத்திகையின்போது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நடிகர்களை தயார்படுத்தும் காட்சி இதில் பதிவாகி இருக்கிறது.
அறுபதுகளில் தமிழ் சினிமா. ஒரு வித்யாசமான காணொளி. புகழ்பெற்ற பிரெஞ்ச் இயக்குனரான லூயிஸ் மல்லே 1968 ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது எடுத்த வீடியோ தொகுப்புகளில் ஒன்றுதான் இது. 'தில்லானா மோகனாம்பாள் படத்தின் ஒத்திகையின்போது இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நடிகர்களை தயார்படுத்தும் காட்சி இதில் பதிவாகி இருக்கிறது.
..................................................................................................
கேப்டன் பிரபாகரன்:
மாவீரர் தினத்தின் அடையாள சின்னங்களை அழித்து பேருவகை கொண்ட சிங்களனே. அதே நவம்பர் 27 அன்று ஊன்றப்பட்ட விதைகள், இன்று உன் பிரதாபங்களை அமைதியாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. நெருப்புச்செடிகளாக வளரும் வரை பொறுத்திரு. இன்னும் ஒரே ஒரு ஆட்டம் மீதம் இருக்கிறது.
....................................................................
..........................................................
சமீபத்தில் எழுதியது:
தேசி பாய்ஸ் - விமர்சனம்
..........................................................
................................
My other site:
...............................