CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, October 30, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்மனித உயிர்களை கொத்து கொத்தாக அள்ளிச்செல்லும் வியாதிகளில் நெஞ்சு வலி, புற்று நோய் எனப்பலவகை உண்டு. ஆனால் நோயாளி(குடிகாரன்) மட்டும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க அவன் மனைவி, மக்கள் மட்டும் நித்தம் செத்துப்பிழைக்கும் வண்ணம் விசித்திர வியாதியை பரிசளிக்கும்...மது என்னும் கொடூர ராட்சசன். அரசாண்டவர்கள் மதுவருந்தி கேளிக்கைகள் புரிந்த காலம், நடுத்தர வயதை தாண்டியவர்கள் பெர்மிட் வாங்கி குடித்த காலம், மதுத்தடை அமுலில் இருந்தால் கள்ளச்சாரயத்தை ஆவலுடன் அருந்தி கண்களையும், உயிரையும் பறி கொடுத்த காலம்..எத்துனை...இன்று அரசே தெருவுக்கு தெரு கடைகள் திறந்து மக்களின் தாகசாந்திக்கு பூரண நிவாரணம் செய்யும் காலம் வரை அசுர வளர்ச்சி பெரும் அளவிற்கு வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளதை என் சொல்ல?  

சரளமாக குடிப்போரின் வயது வரம்பு முப்பதாக இறங்கி, பிறகு கல்லூரி வரை பரவிய கொடுமையையும் சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் கண்டதுண்டு. அப்போது பள்ளி மாணவனாக இருந்த காலம். கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டமாக எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் மதுக்கடைக்கு அடிக்கடி செல்வதை கண்டு அதிர்ந்த நாட்கள் பல. நான் சென்னையில் படித்த கல்லூரி ஒன்றில் ஜாதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு ஸ்காலர்ஷிப் பணம் தருவதுண்டு. அதை வாங்கிய நாள் இரவே கல்லூரி மைதானத்தில் அமர்ந்து குடித்து கும்மாளமிட்டு, மது பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல டாஸ்மாக் வருகைக்கு பிறகு பள்ளி மாணவர்கள் சர்வ சாதாரணமாக தெருவில் நின்று குடிப்பதை காணும் பாக்கியம் கிடைத்து வருகிறது தற்போது.  

மனதில் பயங்கர சோகத்தை வைத்திருப்பவர்கள், தவறான வழியில் பொருளீட்டிய செல்வச்சீமான்கள், நாள் முழுக்க பாரம் இழுப்பதால் ஏற்படும் உடற்சோர்வை தணிக்க குடிக்கிறோம் என்று தினம் வாங்கும் கூலியை அப்படியே மதுக்கடை உண்டியலில் போடும் பாமரர்கள்..இவர்கள் மட்டுமே பெரும்பாலும் குடிக்கு அடிமையாகிக்கிடந்த வரலாறு போய் இன்று அனைத்து காரணத்திற்கும் பொருந்திப்போய்விட்டது 'தண்ணி அடிக்கலாம்'. குடிகார கணவன்களால் இளம் வயதில் தாலி இழந்து..சொந்தக்காலில் இரவுபகலாக உழைத்து, மகிழ்ச்சி எனும் வார்த்தையை தம் அகராதியில் இருந்து கிழித்து எறிந்துவிட்ட லட்சக்கணக்கான தாய்மார்கள் (என் தாயையும் சேர்த்து) வாழும் எனது புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் பிறக்க என்ன தவம் செய்தேன்? "அட. இதெல்லாம் ஒரு விஷயமா? நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியணுமா?" என்று சிலர் நினைப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். 

ஆனால்...

விவரம் தெரிந்த நாள் முதல் தந்தையின் குடிப்பழக்கம் கண்டு குமுறிய இளைஞன், குடிகார தந்தையுடன் வாழும் ஒவ்வொரு இரவையும் பயத்துடன் கழிக்கும் மகள்,அக்கம்பக்கத்தில் பிற பெண்களின் ஏளனப்பார்வைக்கு நித்தமும் ஆளாகும் தாய். இவர்களிடம் கேட்டிருக்கிறீர்களா அந்த வலியின் வீரியத்தை? இதோ...அப்படி நித்தம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனான என் வாழ்வில் இருந்து ஒரு சில பக்கங்கள். 

மது எனும் அரக்கனுடன்(என் தந்தைதான்) கடுமையாக போராடி நான் பட்ட அனுபவங்களை வரும் பதிவுகளில் உங்கள் முன் வைக்கிறேன். இதை எழுதி முடித்த பிறகு சில நாட்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தேனும் கூட எவரோ ஒருவர் அப்பழக்கத்தை நிறுத்த இயலாவிடினும், குறைந்தபட்சம் தன் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போதை தலைக்கேற குடிப்பதை குறைத்துக்கொண்டாலே பெருமகிழ்ச்சி அடைவேன். 

தொடரும்..........
......................................................................

.................................
My other site:

................................


  
  

20 comments:

ம.தி.சுதா said...

போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டால் பூமி தான் உண்மையிலேயெ பெரிய சொர்க்கம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

சக்தி கல்வி மையம் said...

விவரம் தெரிந்த நாள் முதல் தந்தையின் குடிப்பழக்கம் கண்டு குமுறிய இளைஞன், குடிகார தந்தையுடன் வாழும் ஒவ்வொரு இரவையும் பயத்துடன் கழிக்கும் மகள்,அக்கம்பக்கத்தில் பிற பெண்களின் ஏளனப்பார்வைக்கு நித்தமும் ஆளாகும் தாய். இவர்களிடம் கேட்டிருக்கிறீர்களா அந்த வலியின் வீரியத்தை/// மனதை நெகிழச்செய்த வரிகள்..

கோகுல் said...

குடிக்காதன்னோ,குடிப்பழக்கம் உடலுக்கு கேடுன்னோ சொன்னா யாரும் கேக்க போறதில்ல.கடைசியா சொன்னிங்க பாருங்க
\\
குறைந்தபட்சம் தன் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போதை தலைக்கேற குடிப்பதை குறைத்துக்கொண்டாலே பெருமகிழ்ச்சி அடைவேன். \\

இதை செய்தாலே போதும்!

கோகுல் said...

சமீபத்தில் எனது உறவில் ஒரு குடும்பத்திற்கு இது போல நிகழ்ந்திருக்கிறது.இன்னும் எத்தனை குடும்பங்களோ?

saidaiazeez.blogspot.in said...

ஒரு காலத்தில் கல்வியை அரசாங்கமும், சாராயத்தை சமூக விரோதிகளும் விற்றனர். இன்றோ கல்வியை சாராய அதிபர்களும் சாராயத்தை அரசாங்கமும் விற்கின்றனர். நல்லா விளங்கிடும் நாடு. நம் இளைய சந்ததியை அனைவரும் சேர்ந்து கூட்டாக நாசம் செய்கிறோம்.

நாய் நக்ஸ் said...

:))

MANO நாஞ்சில் மனோ said...

குறைந்தபட்சம் தன் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போதை தலைக்கேற குடிப்பதை குறைத்துக்கொண்டாலே பெருமகிழ்ச்சி அடைவேன்.//

தண்ணி அடிச்சா தண்ணி வயித்துகுள்ளே கிடக்கணும், அதை வாந்தி [[பேச்சும்தான்]] எடுக்கக்கொடாதுன்னு என் மலையாளி நண்பன் அடிக்கடி சொல்வான் சரிதானோ....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஐநூறு ரூபாய் செலவழிச்சி தண்ணி அடிச்சா நாலுபேரை அடிக்கணும், நாலுபெர்கிட்டே அடிவாங்கனும், அப்போதானே நான் குடிச்சிருக்கேன்னு ஊருக்கு தெரியும் - இது மும்பை மராட்டி நண்பனின் டயலாக்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

என்னை பொருத்தவரை குடியை நிறுத்த முடியாதவர்கள், சத்தமில்லாமல் குடித்துவிட்டு, சாப்ட்டுட்டு தூங்கிரனும்'ன்னு சொல்லுவேன்.

MANO நாஞ்சில் மனோ said...

விவரம் தெரிந்த நாள் முதல் தந்தையின் குடிப்பழக்கம் கண்டு குமுறிய இளைஞன், குடிகார தந்தையுடன் வாழும் ஒவ்வொரு இரவையும் பயத்துடன் கழிக்கும் மகள்,அக்கம்பக்கத்தில் பிற பெண்களின் ஏளனப்பார்வைக்கு நித்தமும் ஆளாகும் தாய். இவர்களிடம் கேட்டிருக்கிறீர்களா அந்த வலியின் வீரியத்தை? இதோ...அப்படி நித்தம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனான என் வாழ்வில் இருந்து ஒரு சில பக்கங்கள். //

மனதை வலிக்க செய்யும் வ[லி]ரிகள்...

ஷஹி said...

மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அனைவரும் உணர வேண்டிய ஒரு வலிமிகுந்த தொடரை ஆரம்பித்து இருக்கிறீர்கள். நிச்சயமாக பலன் இருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள். மனதில் இருப்பதை கொட்டிவிட்டால் நிம்மதியும் கிடைக்கும்!

கவி அழகன் said...

உங்கள் நிலைமை எனக்கு புரிகிறது

சென்னை பித்தன் said...

மற்றவர் நலனுக்காக ஒரு தைரியமான முயற்சி,உங்கள் மனதில் புதைந்திருக்கும் வேதனையயும் மீறி.

! சிவகுமார் ! said...

கருத்திட்ட உள்ளங்களுக்கு நன்றி.

pichaikaaran said...

இது குறித்து நேரில் ஏராளம் சொல்லி இருக்கிறீர்கள் , அதெல்லாம் என் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின, உங்கள் மீதான மதிப்பும் அதிகரித்தது.

இதை இப்போது பொதுவாக எழுதுகிறீர்கள். நல்லது.

ஆனால் கோபத்தை களைந்து விட்டு, படிப்பினையை மட்டும் வலியுறுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

Shanmugam Rajamanickam said...

ஐநூறு ரூபாய் செலவழிச்சி தண்ணி அடிச்சா நாலுபேரை அடிக்கணும், நாலுபெர்கிட்டே அடிவாங்கனும், அப்போதானே நான் குடிச்சிருக்கேன்னு ஊருக்கு தெரியும் - இது மும்பை மராட்டி நண்பனின் டயலாக்....!!!///


அடேங்கப்பா...

Unknown said...

MIGAVUM ARUMAIYANA PADHIVU

ஆமினா said...

நல்லதொரு தொடரை கவனிக்காமல் விட்டமைக்கு மிகவும் வருந்துகிறேன் சகோ.

முதல் பாகத்திலிருந்தே தொடங்குகிறேன்.

குடி பற்றி உங்களின் பார்வை -படிக்கும் போதே பல எண்ண ஓட்டங்கள் மனதில் வந்து செல்கிறது. நித்தமும் அவமானம் சுமக்கும் வலிகள் மரண வலிகள் தான்.....

அனைவருக்கும் அன்பு  said...

சிவா மனதை வலிக்க செய்யும் பதிவு அதுவும் உணர்ந்தவரே உரைக்கும் போது வழி மிகுகிறது எப்போது திருந்தும் இந்த சமூகம் ஏக்கத்துடன் நானும்

Related Posts Plugin for WordPress, Blogger...