CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, October 18, 2011

மெட்ராஸ்பவன் - மனதில் பட்டவை


                                                                       
பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். முக்கியமான விஷயங்களில் வழ வழ  கொழ  கொழ என்று இழுப்பது நமக்கு சரிப்பட்டு வராது. எனவே 'செம பாப்புலர்' வலைத்திரட்டி குறித்த என் நிலைப்பாட்டை விரைவாகவும்,  அதேசமயம் நன்றாக யோசித்துவிட்டுதான் எடுத்திருந்தேன். இம்மாதிரி முடிவை எடுக்க சில நண்பர்கள் தயக்கம் காட்டியதையும் நாம் அறிவோம். நண்பன் என்ற உரிமை இருப்பதால் பிரபாகரனிடம் மட்டும் இன்று அதிகாலை பேசி 'சரியோ தவறோ..அது முக்கியமல்ல. தயவு செய்து உங்கள் நிலைப்பாட்டை தெரிவியுங்கள். அது உங்கள் மீதான தேவையற்ற சந்தேகங்களை களையும்' என்று கூறியதும் இன்று அவர் ஒரு பதிவை இட்டிருந்தார். நன்றி பிரபாகர்.

அந்த திரட்டியின் நிர்வாகம் அளித்த பதிலை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. சரி எங்கேனும் ஓரிடத்தில் எங்கள் ஆள் செய்ததும் தவறு என்று சொல்லி இருப்பார்கள் என்று பார்த்தேன். இல்லை. அதில் எனக்கு பிடித்த மற்றும் மனதை கொக்கிய வரிகள் சில:

* தங்கள் கருத்துக்களை பதிவுகளில் வெளியிடுவதால் எந்தப்பயனும் இல்லை.
   (சொல்லவே இல்ல)

* அவர் மேல் அனானித்தாக்குதல் நடத்தப்பட்டது (பார்ரா) 

* அவர் கருத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை (யம்ம யம்மா)

* காத்திர பதிவுகளை மட்டுமே வெளியிடுவோம் (மொக்கை மன்னர்கள் கிளீன் போல்ட்)

* ஆரவார பதிவுகளே ஆக்கிரமித்து இருந்தது (மறுபடியும் ஒரு ட..........க்..........கு)

இதுல வேற ஒரு அக்கா அங்க கமன்ட் போட்டு இருக்காங்க. திடீர்னு உங்களுக்கு பெண்கள் மீது அப்படி என்ன பாசம்? இத்தனை நாள் எங்கே போனீர்கள்?  டெர்ரர் கும்மி நண்பர்களே இது உங்களுக்கு நமக்கு தேவைதான். சில மாதங்களுக்கு முன்பு பெண்களுக்கு பிரச்னை தந்த சில நபர்களை கண்டித்து நீங்கள் இட்ட பதிவை அக்கா பார்க்கவில்லை போல. பெண்களை சீண்டி பல்வேறு இன்னல்களை தந்த நபர்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்ததற்கு கிடைத்த பலன். நன்றிக்கா! 

இத்தனை கலவரம் நடக்கையில் ஓரமாக அமர்ந்து மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்த சில பிதாமக பதிவர்கள் இப்போதுதான் லேசாக சோம்பல் முறித்து வந்துள்ளார்கள். அதுகூட எந்த தரப்பு செய்தது நியாயம் என்று முழுமையாக அறியாமல். அவர்கள் தரப்பு கருத்து 'அத்திரட்டி செய்தது நியாயமே. நீங்கள் செய்தது தவறு' என்று. சோக்கா சொன்னீங்க சார். எங்களை ஆட்டு மந்தைகள் போல் பார்க்கும் மனோபாவம் எப்போதோ உங்கள் மனதில் ஊறிவிட்டதால் அப்படித்தான் சொல்லத்தோன்றும். தன் அபிமான நடிகனை உச்சத்தில் ஏற்றி பார்க்கும் ரசிகனுக்கு அந்த நட்சத்திரம் தரும் மரியாதை போல்தான் இதுவும். இன்னும் அப்பாவி ரசிகர்களாகவே இருக்கும் சில நண்பர்களை கண்டு மனம் நோவதைத்தவிர வேறென்ன செய்ய?

'அத்திரட்டி சார்பாக அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம். அவசரம் வேண்டாம்' என சில நண்பர்கள் இருந்தனர். ஆனால் அத்திரட்டி விளக்கம் தந்த பின்னும் மௌனம் நீடிக்கிறது. அது தனி மனித உரிமை. ஆனாலும் தயவு செய்து மனசாட்சியை சற்று திறந்து பாருங்கள். தங்கள் பதிவுகளில் பாசமாக வந்து கருத்திட்டு உங்களை உற்சாகப்படுத்திய அதே ஆட்டு மந்தைதான் தற்போது வேறுபக்கமும் நிற்கிறது. நீங்கள் மட்டும் மதில்மேல் பூனையாக? விசித்திரமான உலகம்.....

இஸ்லாம் குறித்து அந்த நபர் தவறாக சொன்ன வார்த்தைகளுக்கு ஒரு நபர் ஒத்து ஊதி உள்ளார். அதாவது 'சாந்தியும் சமாதானமும்' எனும் சொல்லை இஸ்லாமியர்கள் எப்போது தமக்கு சொந்தமாக்கி கொண்டார்கள்?' என்று கேட்கிறார். நம்மள கலாய்ச்சிட்டாராம். அய்யா டூமா கோலி..... நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?  'ஐ லவ் யூ ரஸ்னா' என்று விளம்பரம் செய்வோரை பார்த்து 'டேய்..நீ எப்படி சொல்லலாம். உகாண்டாவில் ரஸ்னா எனும் பெண்ணிற்கு ஏற்கனவே என் லவ்ஸை ஜொள்ளிவிட்டேன்' என்று வம்புக்கு போவது போல் உள்ளது. 'ஐ லவ் யூ ரஸ்னா' என்றால் அது ரஸ்னா கம்பனிக்கு மட்டும்தான் பொருந்தும். இஸ்லாம் மக்களை காரணமின்றி சீண்டினால் அதைக்கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்துவாக இருக்க  நான் விரும்பவில்லை. மத வெறியை ஒதுக்கி விட்டு நல்ல இதயங்களை தேடும் இந்து, கிறித்துவ மற்றும் பிற மதம் சார்ந்த நண்பர்களும் இதை ஆமோதிப்பார்கள் என நம்புகிறேன். நடந்ததை கூர்மையாக கவனித்த (ஒரிஜினல்)கடவுள் மறுப்பாளர்களும்  மதம் தாண்டி இங்கு யார் செய்தது சரி என்று அறிவார்கள் என்பதும் நமக்கு தெரியும். 

பதிவர்கள் எழுதும் எழுத்தின் தரம் கொண்டே அவர்களுக்குள் போட்டி வைக்க வேண்டுமே தவிர அதை விடுத்து ஹிட்சை வைத்து மட்டுமே டாப் 50, 20/20 மற்றும் மகுடம் சூட்டல் சரியல்ல என்பது என் கருத்து. ஆயிரக்கணக்கானோர்  எழுதுகிறார்கள். அதை எப்படி தரம் பிரிப்பது என்று சொல்வது சரியாக படவில்லை. ஆனால் வேறு வழியில்லை. ஆஸ்கர் விருது, உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருது, சிறந்த புகைப்பட கலைஞர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வழங்கி வரும் நிர்வாகிகள் மற்றும் நீதிபதிகளுக்கு இல்லாத மண்டை குடைச்சலா?  ஆனால் இங்கு அத்தனை சிரமம் இருக்காது. ஏனெனில் காப்பி பேஸ்ட், மொக்கை, ஆரவார பதிவு, சீண்டல் பதிவு போன்றவற்றை பில்டர் செய்தாலே உங்களுக்கு மிஞ்சப்போவது வெகு சில காத்திரப்பதிவுகளே. So it will be very easy to choose the BEST. அப்படி தேர்ந்து எடுத்தாலும் அதையும் குறைகூற ஒரு கூட்டம் உண்டு என சொல்லலாம். அதுவும் உண்மைதான். ஆஸ்கார், தேசிய விருது கமிட்டி சந்திக்காத விமர்சனங்களா? அப்படி அதுவும் பிரச்னை என்றால் கிண்டி ரேஸை தமிழக அரசு ஸ்டாப் செய்தது போல முண்டி அடிக்கும் ரேஸை நீங்கள் முன்பே நிறுத்தி இருந்தால் பிரச்னை வந்திருக்க வாய்ப்பே இல்லை. 

அர்த்தமற்ற ரேஸ் சமாச்சாரங்கள் அந்த திரட்டியில் இருந்து நீங்கும் வரை, அதை விட முக்கியமாக தற்போது விலகி இருக்கும் நடுநிலையான நண்பர்கள் நல்ல முடிவுக்கு வரும் வரை நான் என்றும் விலகியே இருப்பேன். நாங்கள் விலகுவதால் உங்களுக்கு நயா பைசா நஷ்டமில்லை. அதேபோல்தான் எங்களுக்கும். ஏன்னா....இந்த டீலிங் எங்களுக்கு பிடிச்சி இருக்கு.

ஆமா..நானும் கேக்கனும்னு நெனச்சேன்..'அவசரப்பட்டு ஏன் இப்படி செஞ்சீங்க? பாத்தீங்களா அவங்க எப்படி நேர்மையா பதில் சொல்லி இருக்காங்க' அப்டின்னு அட்வைஸ் சொல்றீங்களே..இன்னாபா இது. இருந்துட்டு போவுது. போங்கய்யா.  வீட்டுக்கு போனா அம்மா, பொண்டாட்டி, புள்ளைங்களோட சண்ட, வேல செய்ற எடத்துல எப்படா நாலு காசு அதிகம் கிடைக்கும்னு ஏங்குது மண்ட. விக்கிற விலைவாசில அவன் அவன் ரோட்ல 'மிலிட்டரி படத்துல சத்யராஜை பாத்ததும் ரமேஷ் கண்ணா கைய ஆட்டிட்டு மார்க்கமான நடந்து போற மாதிரி' திரிஞ்சிகிட்டு இருக்கான். இதுல நாங்க வெலகி இருக்கறது என்னமோ தேசியப்பேரழிவு மாதிரி சீன் காட்டாதீங்க. வர்ட்டா!
..............................................................................................


சரி சரி..டென்சனை குறைக்கலாம் வாங்க:.........................................................................................

.............................
My other site:
agsivakumar.com
............................27 comments:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

இன்னொரு நிருவாகி பதில் போட்டிருந்தாரே வாசிச்சீங்களா? அவுருக்கு நேரம் இல்லையாம். நம்ம வெட்டியா ஒக்காந்து புலம்புரோமாம். திருந்தாத ஜென்மங்கள். யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்தப்போராங்கன்னு தெரியல.

வெளங்காதவன்™ said...

//அத்திரட்டி சார்பாக அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம். அவசரம் வேண்டாம்///

மன்னன் வருவான், கதை சொல்லுவான்..

காயடிப்பான்!

(வசன உதவி- பட்டாபட்டி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன சிவா. அடுத்த பதிவா? தீபாவளி ஸ்பெஷல். சூப்பரப்பு(தெளிவாக படிக்கவும். தப்பா படிச்சிட்டு பொங்கக்கூடாது)

வைகை said...

.'அவசரப்பட்டு ஏன் இப்படி செஞ்சீங்க? பாத்தீங்களா அவங்க எப்படி நேர்மையா பதில் சொல்லி இருக்காங்க' அப்டின்னு அட்வைஸ் சொல்றீங்களே..///

அட்வைசூ பண்ராங்கலாமாம்... :))

வைகை said...

அதில் எனக்கு பிடித்த மற்றும் மனதை கொக்கிய வரிகள் சில:///

இதை விட்டீங்களே பாஸ்..

அவரு கீழ பீகால்ஃப் ஆப் தமிழ்மணம்னு போட்டா அது தமிழ்மணம் கருத்தாம்... அது போடலைனா அவரு சொந்த கருத்தாம்..

கடுப்பெத்துறாங்க யுவர் ஹானர் :))

சிராஜ் said...

சிவா,

பல நாட்களுக்கு பிறகு இப்பொழுதுதான் பதிவுலகத்தை கவனிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே டெரரா இருக்கு. நானும் டெரர் கும்மி தளத்தை போய் பார்வையிட்டேன். இரமணிதரன் மிகவும் மோசமாகவே எழுதி இருந்தார். சம்பந்தமே இல்லாமல் இஸ்லாம், ஆனந்த விகடன் மற்றும் இதர நண்பர்களை வம்பிழுத்து உள்ளார். அவர்களின் பதில் அவர்களின் ஈகோவை காட்டுவதாகவே உள்ளது.

உங்கள் கோபம் மிகவும் நியாயமானதே. ரொம்ப அற்புதமாய் எழுதி உள்ளீர்கள். அவர்கள் பதிவர்களை கண்டு பயந்து விட்டார்கள் என்பது அப்பட்டமான உண்மை. அதை வெளிக்காட்டவில்லை அல்லது விரும்பவில்லை என்பதே உண்மை. பதிவர்கள் இந்த போராட்டத்தில் வென்று விட்டார்கள் என்பதே என் கருத்து. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்னும் முதுமொழி மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுவிட்டது.
நல்ல புரிந்துணர்வுடன் எழுதிய நண்பருக்கு நன்றிகள் பல.

சிராஜ்
வடைபஜ்ஜி

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... சரியான சமயத்தில் வந்த பதிவு..... நன்றி

நட்புடன்,
http://tamilvaasi.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

போங்கய்யா போங்க போயி பிள்ளைகுட்டிங்களை படிக்க வையுங்க....

செங்கோவி said...

நிதானமான, தெளிவான கருத்துகள்.

அஸ்மா said...

//இஸ்லாம் மக்களை காரணமின்றி சீண்டினால் அதைக்கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்துவாக இருக்க நான் விரும்பவில்லை. மத வெறியை ஒதுக்கி விட்டு நல்ல இதயங்களை தேடும் இந்து, கிறித்துவ மற்றும் பிற மதம் சார்ந்த நண்பர்களும் இதை ஆமோதிப்பார்கள் என நம்புகிறேன்.//

நியாயமான எதிர்ப்பார்ப்பு! மிக்க நன்றி சகோ.

//..'அவசரப்பட்டு ஏன் இப்படி செஞ்சீங்க? பாத்தீங்களா அவங்க எப்படி நேர்மையா பதில் சொல்லி இருக்காங்க' அப்டின்னு அட்வைஸ் சொல்றீங்களே..இன்னாபா இது.//

//நாங்கள் விலகுவதால் உங்களுக்கு நயா பைசா நஷ்டமில்லை. அதேபோல்தான் எங்களுக்கும். ஏன்னா....இந்த டீலிங் எங்களுக்கு பிடிச்சி இருக்கு//

வெல்டன் :))

த‌மிழ்ம‌ண‌த்துக்கு பொதுவில் ஓர் அ‌றிவிப்பு‌!

Philosophy Prabhakaran said...

// பிதாமக பதிவர்கள் //

எப்படியோ கே.ஆர்.பியையும் கோர்த்து விட்டா சரி...

Astrologer sathishkumar Erode said...

மூத்த பதிவர்கள் எங்களை புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை பார்த்தீர்களா..செம ஐஸ்..இனி அந்த மூத்த பதிவர்கள் பேசுவாங்கன்னு நினைக்கிறீங்க..தமிழ்மணம் விருது வேற இருக்கு.கவுரவ பதிவர்கள் லிஸ்டில் இருக்கவே அவர்கள் விரும்புவர்.கருத்து சொல்ல மாட்டார்கள்...ரமணீதரன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.நிர்வாகிகளில் ஒருவர் தமிழ்மணம் நிர்வாகி நான் என சொல்லிவிட்டு கமெண்ட் போடும்போது நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்

saidaiazeez.blogspot.in said...

இன்னாபா சிவா
நல்லாகீறீயா?
நான் ரொம்பநாளா உன்னெ வாசிக்கிறேன்பா!
உன் ஹோட்டல்க்கு நான் ரெகுலர் கஸ்டமர்பா. ஆனா இன்னா, இதுவரெக்கும் நான் பில் கட்டுணது இல்லே. இதுதான் மொதமுறை.
நான் வொரு பயமொயீ சொல்ட்டா?
அனா இங்க்லிபீஸ்லேதான் சொல்வேன் கேட்டுக்க!
DONT FIGHT WITH PIG
IT WILL TAKE YOU TO SHIT
பிரிஞ்சிதா?
போய்க்கினேயிரு

! சிவகுமார் ! said...

@ Dr. Butti Paul

அதை படிக்கவில்லை நண்பா. லிங்க் இருந்தால் தரவும்.

! சிவகுமார் ! said...

@ வெளங்காதவன்

தகவலுக்கு நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ ரமேஷ்

//என்ன சிவா. அடுத்த பதிவா? தீபாவளி ஸ்பெஷல். சூப்பரப்பு(தெளிவாக படிக்கவும். தப்பா படிச்சிட்டு பொங்கக்கூடாது)//

ஆஹா..பய புள்ள ஏதோ ப்ளான் பண்ணுதே...

! சிவகுமார் ! said...

@ வைகை

வாங்க வைகை.

//அவரு கீழ பீகால்ஃப் ஆப் தமிழ்மணம்னு போட்டா அது தமிழ்மணம் கருத்தாம்... அது போடலைனா அவரு சொந்த கருத்தாம்..

கடுப்பெத்துறாங்க யுவர் ஹானர் :))//

தனிப்பட்ட கருத்தாகவே இருந்தாலும் பண்பாளர்கள் எனும் முறையில் 1% ஆவது மன்னிப்பு கேட்பதில் அவர்களுக்கு அப்படி என்ன ஈகோ?

! சிவகுமார் ! said...

@ சிராஜ்

ஐயா, இத்தனை நாளா எங்க போனீங்க? செம பிசியா?

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சிராஜ். மொத்தமா கடைய மூடிடாதீங்க. சீக்கிரம் திறங்க பாஸு.

! சிவகுமார் ! said...

@ தமிழ்வாசி

நன்றி பிரகாஷ்.

! சிவகுமார் ! said...

@ மனோ

தல, எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. பக்கத்து வீட்டு புள்ள குட்டிங்கள படிக்க வச்சா உதைதான் விழும்.

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

நன்றி நண்பா!

! சிவகுமார் ! said...

@ அஸ்மா

தங்கள் வருகைக்கு நன்றி அஸ்மா.

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

ஏம்பா... என்ன எதுக்கு சிங்கத்தோட கூண்டுல தள்ளி விடற?

! சிவகுமார் ! said...

@ சோதிடம் சதீஷ்குமார்

வருகைக்கு நன்றி சதீஷ் சார்.

! சிவகுமார் ! said...

@ சைதை அஜீஸ்

வணக்கம் சைதை தோழா. பில்லை உங்க ஏரியாவுக்கே வந்து கலெக்ட் பண்ணிக்கறேன். PIG, SHIT போன்ற தாக்குதல் வேண்டாம் தோழரே.

சி.பி.செந்தில்குமார் said...

நல்லதொரு அலசல்

உலக சினிமா ரசிகன் said...

தமிழ் மணத்தை தொடர்ந்து சாட்டையால் விளாசி வருகிறீர்கள்.பாராட்டுக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...