CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, October 14, 2011

பன்றி - ஒரு பார்வை


                                                                
இருப்பதிலேயே மட்டமான ஜீவராசியான மனிதனை அடித்துக்கொள்ள/கொல்ல எதுவுமில்லை. எந்த ஒரு விலங்கினமும் சக ஜீவனை பார்த்து 'அடச்சீ...மனிதனே' என்று ஏசுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு விலங்கின் மனதும் அவ்வார்த்தையை சொல்லத்துடிக்கும் என்பது உண்மையே. ஆனால் மனிதன் மட்டும் சக மனிதனை 'நாயே' என்றும்..இன்னும் கீழ்த்தரமாக 'பன்றி' என்றும் அழைத்து தன் கோபத்தை போக்கிக்கொள்கிறான்.பாவம். மனிதக்கழிவுகளை அகற்றி தன்னாலான தொண்டை செய்து அதற்கு வெகுமானத்தையும் பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்கின்றன பன்றிகள்.  

வீட்டுப்பன்றிகளின் அறிவியல் பெயர் Sus scrofa domesticus ஆகும். பன்றிகள் நல்லதோர் சமூக விலங்கென்றும், அவை நாய்களை விட புத்திசாலிகள் என்றும் செய்திகள் உண்டு. Domestic pigs அதாவது சமூக பன்னி அரிதாக மட்டுமே aggressive ஆக நடந்து கொள்ளுமாம். உள்ளூர் சாக்கடைகளில் திரியும் பன்றிகளைப்பார்த்து அருவருப்பு பட்டே பழகிப்போன மக்களுக்கு பன்றி வளர்ப்பு குறித்த அச்சம் வருவது இயற்கையே. ஆனால் வெண்பன்றி வளர்ப்பது சிறந்ததாம். நம் நாட்டில் வெண்பன்றி இறைச்சியை உண்பது சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது. எனவே வெண்பன்றியை வளர்த்து நல்ல லாபத்தை ஈட்டி வருகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.  சென்னையில் கூட இதன் கறிக்கு செம டிமாண்டாம். மழை மற்றும் குளிர் காலங்களில் பன்றிக்காய்ச்சலின் பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்.

           
வெண் பன்றி வளர்ப்பு பற்றி மேலும் அறிய கீழே கிளிக்கவும்:

.                                                                   
பன்றி காய்ச்சலில் கடுமையாக அவதிப்படும் நோயாளிகள் உடனே படிக்க:


பன்றிக் காய்ச்சல் குறித்த பன்னி (Funny) வீடியோ:


பன்றி வளர்ப்பு எனும் புத்தகத்தை சிவகுமார் எழுதி இருக்கிறார். ஆன்லைனில் விற்பனைக்கு உள்ள அப்புத்தகத்திற்கான லிங்க்:


மரண தண்டனைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மக்கள், பன்றிகளை கொல்வதை பார்த்தால் நிச்சயம் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். இந்தவித சித்ரவதைகளின் பிரதிபலிப்பாகத்தான் ஆங்காங்கே  உருவாகி இருக்கிறது பன்றிக்காயச்சல். சர்வதேச அளவில் நமது வர்த்தகம் மட்டும் உலகமயமாக்கப்படவில்லை. பன்றி காய்ச்சலும், கொள்ளை நோய்களும் உலகமயமாக்கப்பட்டு வருகின்றன. 
    பன்றி குறித்த பதிவை பொறுமையுடன் படித்த அன்பர்களுக்கு நன்றி.
........................................................................       


                                                                

19 comments:

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டியை பழிவாங்கலைதானே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் வேதனை எனக்கு புரியுது மக்கா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதற்க்கு நீங்கள் பன்னிக்குட்டி ராம்சாமியிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா? இல்லையென்றால் இங்கு புரட்சி வெடிக்கும்..

சென்னை பித்தன் said...

பன்றியை லேசாக நினைக்க வேண்டாம் எனச் சொல்கிறீர்கள்!

செங்கோவி said...

அண்ணன் பன்னிக்குட்டி வாழ்க..சரியான நேரத்தில் சரியான பதிவு.

Philosophy Prabhakaran said...

என்ன சிவா... திடீர்னு வித்தியாசமான genre... ஏதாவது உள்குத்து...?

! சிவகுமார் ! said...

/MANO நாஞ்சில் மனோ said...
பன்னிகுட்டியை பழிவாங்கலைதானே ஹி ஹி...//

அவர் சொல்லிதாங்க எழுதுனேன்.

! சிவகுமார் ! said...

// MANO நாஞ்சில் மனோ said...
உங்கள் வேதனை எனக்கு புரியுது மக்கா.//

நன்றி தல.

! சிவகுமார் ! said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இதற்க்கு நீங்கள் பன்னிக்குட்டி ராம்சாமியிடம் அனுமதி வாங்கிவிட்டீர்களா? இல்லையென்றால் இங்கு புரட்சி வெடிக்கும்..//

புரட்சி 'வெடி'க்குமா? நீங்க வேற எதுக்கு மறுபடியும் வெடிய ஞாபகப்படுத்தறீங்க.......

! சிவகுமார் ! said...

@ சென்னை பித்தன்

ஆமாம் சார்.

! சிவகுமார் ! said...

//செங்கோவி said...
அண்ணன் பன்னிக்குட்டி வாழ்க..சரியான நேரத்தில் சரியான பதிவு.//

அவர் பாவம். எங்க எல்லாரும் அப்படியே யோசிக்கறீங்க. சரியான நேரத்திலா? புரியலியே?

! சிவகுமார் ! said...

//Philosophy Prabhakaran said...
என்ன சிவா... திடீர்னு வித்தியாசமான genre... ஏதாவது உள்குத்து...?//

ஆமாம் பிரபாகர். அதேதான்.

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல வேள.....

! சிவகுமார் ! said...

@ ப.ரா.

Ha..ha...

! சிவகுமார் ! said...

This comment has been removed by the author.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பன்றிக்கு நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடா பன்றிய பத்தி போட்டதுக்குன்னு நன்றின்னு சுருக்கமா சொல்ல வந்தேன்.....

! சிவகுமார் ! said...

அண்ணே.. சிலசமயம் சிங்கிள் கமன்ட் போடும்போது conflicting edits அப்டின்னு ஒரு மெசேஜ் வருது. அதனால ஒரே கமன்ட் ரெண்டு தபா போஸ்ட் ஆகுது. அதான் ஒண்ணை டெலிட் பண்ணேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...