CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, October 12, 2011

இண்டிப்ளாக்கர் சந்திப்பு - ஒன் மோர் போஸ்ட்


                                                                   
சென்ற ஞாயிறு அன்று நடந்த இண்டி ப்ளாக்கர் சந்திப்பு குறித்த சர்ச்சை இன்னும் சொயட்டி சொயட்டி அடித்துக்கொண்டு இருப்பதால், எனது கருத்தை சொல்லியே தீர வேண்டிய நிலைக்கு 'ஆள்' ஆகி இருக்கிறேன். நல்லவேளை நான் சிந்தனை சிற்பி/பிரபல பதிவர்/முடிசூடா மன்னன் போன்ற 'வாங்கடா வட்டத்த போட்டு நின்னுக்கிடுவோம்' சர்க்கிளில் சிக்காத வழிப்போக்கன் என்பதால் இழப்பதற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. 

சனிக்கிழமை வரை இண்டி ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. பிரபல பதிவர்கள் சிலர் விவரத்தை கூறி அந்த சந்திப்பில் பங்குபெற என் பெயரை பதிவு செய்யுமாறு கால் சுண்டு விரலை இழுத்துப்பிடித்து மன்றாடி கேட்டுக்கொண்டதால்(Believe Me) ஆவன செய்தேன். நிகழ்ச்சியும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஓரிரு அழகிய தங்கைகள் என்னிடம் பேசியது மகிழ்வை தந்த சில நிமிடங்களில் சங்கர் நாராயணன் எனும் புது பதிவர் ஏதோ ரவுசு விட்டுக்கொண்டிருக்க அவரை சுற்றி சென்னை தமிழ்ப்பதிவர்களும் அணைகட்ட, என்ன என்று எட்டிப்பார்த்தால் நீங்கள் ஏற்கனவே படித்து டயர்ட் ஆகி மீண்டும் படித்த மேட்டர் நடந்து கொண்டு இருந்தது. எனவே அப்படியே ட்ரிபிள்  ஜம்ப் அடித்து நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். 

'உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்'!!  பலே  வெள்ளையத்தேவா! இந்த சந்திப்பு குறித்து நண்பர் யுவகிருஷ்ணா ஒரு ட்ரைலர் காண்பித்தார். அதை பிரபாகரன் பதிவின் மூலம் காணும் வாய்ப்பு கிட்டியது: அதற்கான லிங்க்:


இந்த சந்திப்பிற்கு அச்சாரம் போட்ட பதிவாக இது இருந்ததில் மாற்றுக்கருத்து இல்லை என்பதும், யுவா அதை நகைச்சுவை உணர்வோடு மட்டுமே எழுதி இருப்பார் என்பதும் அவரை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. ஆனால் மைனாரிட்டி மக்களுக்கு(வெகுஜனங்கள் எல்லாம் ஏற்கனவே பிரபல பதிவர்களின் பால்லோயர்கள் என்பதால்) அது எப்படி போய்ச்சேரும் என்பதை உணராமல் எழுதி இருந்தது அன்லக்கியே லக்கி.

நாங்கள்(சந்தேகமே இல்லாமல் வெகு சுமாரான பதிவர்கள்தான்) தமிழில் எழுதுவதை அவர்கள்(ஆங்கிலம் பேசும் மேன்மக்கள்)பார்க்க வாய்ப்பில்லையாம். அப்படியே நைசாக பார்த்தாலும் நம் பதிவுகளை  பெரிதாக கண்டுகொள்ளப்போவதில்லையாம். எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம் அல்லது சக பதிவனை அர்த்தமின்றி சாடும் மனப்பான்மை? அவர்கள் பார்க்க வேண்டும் என்று எண்ணியா இத்தனை பேர் பதிவெழுத ஆரம்பித்தனர்? நட்சத்திர ஓட்டலில் நிகழ்ச்சி நடத்தியதற்கு வேண்டுமானால் உங்கள் கண்ணில் அவர்கள் மேன்மக்களாக தெரியலாம். அதற்காக தமிழ் பதிவர்களை இப்படி இழிவாக பேச எப்படி மனம் வந்தது? அவர்கள் கண்டுகொள்ளாததால் நஷ்டம் நன்றாக எழுதும் பதிவர்களுக்கல்ல. சிறப்பாக எழுதும் தமிழ்ப் பதிவர்களின் பட்டியல் உங்களுக்கு எத்தனை வேண்டும்? சொல்லுங்கள். அள்ளித்தர நாங்கள் தயார்.     

அதாகப்பட்டது தமிழில் தொழில்நுட்பம் தெரிந்த பதிவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லவே இல்லையாம். தொழில்நுட்பம் குறித்து சிறப்பாக பதிவு எழுதுவதோடு நில்லாமல், சக பதிவர்கள் உதவி கேட்டால் மறுக்காமல் ஆலோசனை வழங்கிவரும் சகோதரர்களை பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது யார் தவறு? சாம்பிள் பார்க்க வேண்டுமெனில் கீழே கிளிக்கவும்:


இது போல் ஏகப்பட்ட உதவிகளை செய்துவரும் தொழில்நுட்ப அறிவுடைய தமிழ்ப்பதிவர்களுக்கு (ஸ்)பெசல் சல்யூட். 

தமிழ் பதிவர்களுக்கு உதவுவதற்கு முன்பு எவ்வகையில் உதவி வேண்டும் என்று ஆலோசனை செய்தார்களா? 1000 ரூபாயாகவே இருந்தாலும் அதை உங்கள் அனுமதி இன்றி பாக்கெட்டில் வைத்துவிட்டு யாசகமாக  வைத்துக்கொள் என்று ஒருவன் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  ஈழத்தமிழன், சிங்கப்பூர், மலேசியா தமிழன் என யாராக இருந்தாலும் அவர்கள்  உதவியே கேட்காத பட்சத்தில் பாசக்கார பய ஒருவன் தானாக முன்வந்து 'இட்லியை பெனஞ்சி அடிடா' என்று அன்பு காட்டினால் உள்ளூர ஒரு சந்தேகம் வந்தே தீரும். அது மாதிரிதான் இதுவும். 

கேபிள் அண்ணாத்தை இதை 'இந்திய வரலாற்றில் முதல் முறையாக' செய்யவில்லையே. எங்கு அநியாயம் நடந்தாலும் 'அந்நியன்' அம்பி போல 'ஆஸ்க்'காவதாரம் எடுப்பது ஜகஜம்தானே. அவருக்கு மனதில் பட்டதை கேட்டார். சபை நாகரீகம் இல்லை என்றும், தாழ்வு மனப்பான்மை என்றும் சவுண்டு வேறு. ஸ்டார் ஹோட்டலையும், நுனிநாக்கு இங்கிலீஷ் பிரஜைகளையும் கண்டு சில தோழர்களுக்கு வேண்டுமானால் Inferiority complex  
வந்திருக்கலாம். அது எல்லாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை இறைத்தால் ஸ்டார் ஓட்டல் ஓனர்களுக்கு பில்கேட்சும், பிளேடு பக்கிரியும் ஒன்றுதான். அங்கிருந்த ஆங்கில வலைப்பதிவர்கள் தமிழ் பதிவர்களை கோமாளிகளாக பார்த்தார்கள் என்ற தவறான தகவலை தந்து யாரை ஏமாற்றப்பார்க்கிறீர்கள்? நாம் அனைவரும் அந்த சம்பவம் நடக்கையில் நின்ற இடம் சுவற்றோரம். சற்று தூரத்தில் இருந்த ஆங்கில வலைப்பதிவர்கள் ஏதோ சலசலப்பு என்று எண்ணி நம்பக்கம் பார்த்தார்களே ஒழிய பலருக்கு அது குறித்த அசல் நிலவரம் தெரியவே இல்லை. பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கலாம். சோற்றுப்பருக்கைக்குள் மறைக்க பார்க்கிறீர்களே நண்பா.

'நான் மட்டுமே அத்தாரிட்டி. நான்தாண்டா சின்ன பகவதி' என்கிற இறுமாப்பில் கேபிள் பேசவே இல்லை. அது அவரது இயல்பு. நரம்பு முறுக்கேறும் சமயம் அதை அடக்கிக்கொண்டு முறுக்கு தின்னாமல், ஆன் தி ஸ்பாட்டில் கதக்களி ஆடியதில் தவறென்ன?  ஒருவேளை கேபிள் அத்தாரிட்டி ஆகி விடுவாரோ என்கிற பயமா? அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் நம்மைப்பொறுத்தவரை நாமே நம்பர் ஒன் பதிவர் என்று ஆளாளுக்கு பட்டாபிஷேகம் செய்துகொண்டதால் இங்கு மன்னர்கள் மட்டுமே. அடிமைகள் சிக்க வாய்ப்பே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் கேபிள் வானத்துக்கும், பூமிக்கும்(200 அடி போர் போட்டு) தைய தக்க என்று குதித்தார் என்றும் அதே சமயம் இண்டிப்ளாக்கர் நண்பர் அமைதி காத்தார் என்று அவருக்கு ISO சான்று வேறு வழங்கி உள்ளனர். தமிழ்ப்பதிவர்கள் கேட்ட கேள்விகள் நியாயமாக இருந்ததால் அவர் அதை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதை ஏன் நீங்கள் எழுதவில்லை????????

அனைத்திலும் மிக முக்கியமாக, அந்த சர்ச்சை ஓய்ந்த பிறகு வட்டமாக அமர்ந்து அதே இண்டிப்ளாக்கர் நண்பருடன் கேபிள், கார்க்கி மற்றும் பிற நண்பர்கள் சகஜமாக உரையாடி பல தகவல்களை பரிமாறியதை அருகிலேயே அமர்ந்து பார்த்த முக்கிய சாட்சியே நீங்கள்தானே யுவா? அந்த கிளைமாக்ஸ் காட்சியை உங்கள் பதிவில் வெளியிடாமல் வெட்டி எறிந்தது எந்தவகையில் நியாயம்?????????????????????????????????????????????????????????????

பிரம்மாண்ட ஏசி அறை கூட்டம் மட்டுமே உங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது என்று தோன்றினால் அதை ஒன்றும் செய்ய இயலாது. 'எல்லாத்தையும் பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்' என்று அவர்களின் தூதராக நீங்கள் சொன்னால் அதை சிரமேற்கொண்டு செய்ய இது அரசு தர்பார் அல்ல. அடுத்த இண்டிப்ளாக்கர் சந்திப்பிற்கு இப்படிப்பட்டவர்கள் வர வேண்டாம் என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை.முதலில் இந்த அத்தாரிட்டி மனப்பான்மையை விட்டொழியுங்கள். 

டாட்டா தனது பொருட்களை விளம்பரப்படுத்திக்கொள்ள நமக்கு தரும் மறைமுக ஊதியம்தான் அந்த டீயும், டீ சர்ட்டும். ஓசியில் குடுக்க அவர்கள் என்ன கேனையர்களா?   'டீ குடி, டீ சர்ட் பிடி' என்று அடுத்த இண்டிப்ளாக்கர் சந்திப்பிற்கு ஒருவேளை நீங்கள் அழைப்பு விடுத்தாலும்(!) வருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. வராதே என்று சொல்ல எந்த ராசாக்களுக்கும் அதிகாரமும் இல்லை. 


கூகுள் பஸ்ஸில் சமீபத்தில் யுவகிருஷ்ணா: 


'அய்யய்யோ.. தமிழனை அவமானப்படுத்திட்டாங்க'  எனும் தலைப்பிற்கு போட்ட படம் நாகரீகமான செயலா? நடுநிலையாளர்கள் பதில் சொல்லட்டும். இனி நாகரீகமாக நடந்து கொள்வது குறித்து உபதேசம் செய்யும் முன் அதை நீங்கள் தயவு கூர்ந்து பாலோ செய்யவும் நண்பரே.    


அய்யகோ...தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் ஏன் இப்படி ஒரு பூகம்பம். இனி அன்னாரது அசத்தல் காவியங்கள் வெளிவராமல் போய்விடுமோ என்று குலைநடுங்க வேண்டாம் பேரன்புடையீரே. ஏனெனில் உண்மையாகவே சிறந்த படைப்புகளை தரும் தமிழ்ப்பதிவர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் தங்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் சந்தேகமில்லாமல் தமிழ்ப்பதிவுலகின் நம்பர் ஒன். அவர்களை ஊக்குவித்து தமிழ்ப்பதிவுலகை மேலும் சிறக்க செய்யுங்கள்.

ஆங்....முக்கியமான விஷயம். பதிவிற்கு தலைப்பு வைக்கையில் 'செருப்பால் அடிப்போம்' போன்ற வார்த்தைகளை பிரயோகித்து பட்டையை கிளப்பவும். அப்படி நாகரீகமாக எழுதினால்தான் பிறமொழி பிளாக்கர்கள் உங்களை கண்டு கொள்வார்கள். அச்சான்றோர் குலம் உங்களை ஏறெடுத்து பார்க்காவிடில் நாளை காலை பெட்ரோல் போட காசு இல்லாமலும், தொட்டுக்க அப்பளம் இல்லாமலும் பஞ்சத்தில் அலைய வேண்டிய இக்கட்டான நிலை வரும். அந்த இடத்தில் இருந்து தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்திற்காக இந்தப்பதிவை எழுதித்தொலைக்க வேண்டி இருந்தது. அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல நீ தொலைஞ்சி போ என்று சொல்வது கேட்கிறது. ரைட்டு. இட்ஸ் டைம் டு அப்பீட்டு.
.........................................................................


மேலே கேட்ட கேள்விகளுக்கு பிரபல பதிவரிடம் இருந்து நியாயமான பதில் வரும் என்ற நப்பாசையுடன் காத்திருக்கும் பிஸ்கோத்து பதிவன். 
.........................................................................


........................................
My other site:
agsivakumar.com
......................................

நண்பர்களுக்கு நான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்பும் விஷயம்(கமன்ட் மாடரேஷன்), சில புது மாப்பிள்ளைகளுக்காக மறுக்கா மறுக்கா சொல்ல வேண்டி உள்ளது. நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் இதுவரை நாயகிகளின் கவர்ச்சிப்படங்கள் மற்றும் அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது இல்லை. இனியும் அவ்வாறே. ஆனால் பின்னூட்டம் இடுகையில் சில வெத்து வேட்டு மாப்பிள்ளைகள் அசிங்கமான வார்த்தைகளை போடுவதால் அதை தவிர்க்கவே இப்படி செய்ய வேண்டி உள்ளது. ஒரு தரம் தாழ்ந்த கமண்டிற்காக, பிற அன்பர்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலை வருவதை தவிர்க்கவே இந்த மாடரேஷன். இதுவரை இரண்டே இரண்டு கமண்ட்டுகளை மட்டுமே டெலிட்  செய்துள்ளேன். அவை இரண்டும் மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகள். மற்ற  அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறேன். 


அந்த வெண்ணைகளுக்கு தெரிந்த வார்த்தைகளை பேச எங்களுக்கும் தெரியும். இடம், பொருள், ஏவல், வவ்வால் கருதி அடக்கி வாசிக்கிறோம். அவ்வளவே. அதை மீறியும் அட்டை கத்தியை சொழட்டியே தீர வேண்டும் என எகிறும் அசகாயசூரர்கள் தாரளமாக madrasminnal@gmail.com எனும் இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை தருகிறேன். போனில் அல்லது நேரில் உங்கள் டகுல் பாட்சா வேலைகளை தாராளமாக காட்டலாம். மற்றபடி எந்த தொண்ணைக்கும் பயந்து கமன்ட் மாடரேஷன் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி டயர்ட் ஆகிட்டேன். 
...........................................................................23 comments:

அப்பாதுரை said...

மொழிக்குழப்பம் காரணம்னு தோணுது. இதையெல்லாம் பார்த்து ரசிக்க முடியலியே!

Philosophy Prabhakaran said...

இதுக்கும் நீங்க இணைச்சிருக்குற படத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு சத்தியமா புரியல சாமீ...

Philosophy Prabhakaran said...

// நாங்கள்(சந்தேகமே இல்லாமல் வெகு சுமாரான பதிவர்கள்தான்) தமிழில் எழுதுவதை அவர்கள்(ஆங்கிலம் பேசும் மேன்மக்கள்)பார்க்க வாய்ப்பில்லையாம். //

அப்படி பார்த்து தான் கேபிள் பதிவில் anoop johnson என்பவர் பின்னூட்டமிட்டிருக்கிறார்... அந்த பின்னூட்டத்தில் நீங்களும் பலரும் குறிப்பிட்டபடி அவர்கள் டெக்னிக்கல் உதவி தர முன்வந்ததாகவோ ப்ளாக் எழுதி பணம் சம்பாதிப்பது எப்படி என்று சொல்லித்தர முன்வந்ததாகவோ குறிப்பிடவில்லை...

Philosophy Prabhakaran said...

கே டிவியில பகவதி படம் பார்த்தீங்க போல... இட்லியை பெனஞ்சு அடிடா முதற்கொண்டு கவனத்தில் வைத்து எழுதியிருக்கிறீர்கள்...

Philosophy Prabhakaran said...

சிவா... உங்கள் அனுமதி இல்லாமல் லாகின் செய்து எனது பின்னூட்டங்களை வெளியிட்டுக் கொண்டேன்... மன்னிக்கவும்...

Unknown said...

விஷயம் ரொம்ப சீரியஸ் போல...பகிர்வுக்கு நன்றி...வேற எது சொன்னாலும் நல்லதுக்கு இல்ல!

நாய் நக்ஸ் said...

Innum ethanai aruva ....vel....
Varapogutho...

Astrologer sathishkumar Erode said...

இண்ட்லி ப்ளாக்கர் சர்ச்சை பற்றி முழுமையான விளக்க பதிவு உங்க்ளுதுதான் :))

Katz said...

;-)

! சிவகுமார் ! said...

@ அப்பா துரை

அது சரி..

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

எப்ப நான் போட்ட படமும் பதிவும் சம்மந்தம் இல்லாம இருக்கோ அப்பவே நான் பிரபல பதிவன் ஆயிட்டேன்னு அர்த்தம். எதுக்கும் மறுபடியும் கொஞ்சம் "நிதானமா" படிங்க.

! சிவகுமார் ! said...

@ விக்கி

நன்றி மாம்ஸ்!

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

Let us wait and watch.

! சிவகுமார் ! said...

@ சதீஷ்குமார்

//இண்ட்லி ப்ளாக்கர் சர்ச்சை பற்றி முழுமையான விளக்க பதிவு உங்க்ளுதுதான்//

அய்யய்யோ.. சார் அது indiblogger. இன்ட்லி ப்ளாக்கர் இல்ல..ஆஹா ஸ்டியரிங்க வேற பக்கம் திருப்பறாங்களே........

! சிவகுமார் ! said...

@ Katz

:-)

! சிவகுமார் ! said...

@ பிரபாகரன்

//சிவா... உங்கள் அனுமதி இல்லாமல் லாகின் செய்து எனது பின்னூட்டங்களை வெளியிட்டுக் கொண்டேன்... மன்னிக்கவும்...//

இவ்ளோ நேரம் தொண்ட தண்ணி வத்த அத்தாரிட்டி பத்தி பேசி இருக்கோம். அதுக்கு அப்புறம் கூட பூட்டை ஒடச்சி உள்ள போயிருக்கீங்க. ராஸ்கோல்!

rajamelaiyur said...

//
நல்லவேளை நான் சிந்தனை சிற்பி/பிரபல பதிவர்/முடிசூடா மன்னன் போன்ற 'வாங்கடா வட்டத்த போட்டு நின்னுக்கிடுவோம்' சர்க்கிளில் சிக்காத வழிப்போக்கன் என்பதால் இழப்பதற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை.

//
Any உள்குத்து ...?

rajamelaiyur said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா நடக்குது இங்கே, ஒன்னுமே புரியலை...!!!

Avani Shiva said...

இவ்வளவு நாள் படிச்ட்டு ,இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்கேன் ,


அப்ப நானும் அதாரிட்டி எடுக்கவ ( சுயட்சை ) பயப்பட வேணாம் அப்பிடி எதுவும் சொல்லமாட்டேன்.

கவிதை பூக்கள் பாலா said...

எல்லாம் சரி என்ன ஏன்பா தம்பிகளா கூப்பிடல போங்கப்பா உங்க டீலிகே சரி இல்லை ஹோ பிரபல பதிவர் சந்திப்போ ( என்னமோ போங்க ) கொஞ்சம் வருத்தம் தான் ( எனக்கு தெரியாம போச்சி ) பிரபா மேல கோவம் தான்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நடந்த விஷயம் பற்றி முழுமையா போட்டு இருக்கீங்க....

Muthuvel Sivaraman said...

நல்ல பதிவு.

என் வலையில்

இண்டிப்ளாக்கரின் புகைப்படங்கள்
இண்டி ப்ளாக்கர் மீட் 2011"

Related Posts Plugin for WordPress, Blogger...