CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, October 8, 2011

வேலூர் மாவட்டம்                                                                    
பீர் போலீஸ், போக்கிரி போலீஸ், 'நாங்க மொத்தம் நாலு பேர்' நாங்களும் போலீஸ் என்று டிசைன் டிசைனாக நாம் பார்க்காத போலீஸா? எல்லாத்துக்கும் மேலாக மே மாத வெயிலிலும் நீண்ட 'கோட்'டை போட்டுக்கொண்டு சில்லி வேலை செய்யும் தேசத்துரோக மூட்டைப்பூச்சிகளை கொல்லும் நவீன மிஷினாக கன கெம்பீரமாக உலாத்தும் 'கேப்டன்' போலீஸ். அந்த வம்சாவழியில் புதிதாக ட்யூட்டிக்கு வந்திருப்பவர்தான் இந்த வேலூர் போலீஸ். நேர்மையான அதிகாரி நந்தாவை கடமை ஆற்றவிடாமல் லந்து செய்யும் அரசியல்வாதிகள். அவர்களை நம்ம ஆளு எப்படி பழிதீர்க்கிறார் என்பதே கதை. ஆனா ஒண்ணு பேபி. இந்த மாதிரி கதை இருக்குறவரை தமிழ் சினிமாவை யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.  

ஏன் வேலூர் மாவட்டம் என்று கேட்டதற்கு "மதுரையில் குஷ்பு இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய் சட்னியை தவிர எல்லாத்தையும் சொழட்டி சொழட்டி சக டைரடக்கர்ஸ் படமாக்கிவிட்டதால்....ஒரு மாற்றத்திற்கு வேலூர்" என்றார் இயக்குனர்.  அதுவும் சர்தான்.  போலீஸ் ரோல் என்றாலே DTS எபக்டில் உறுமியே ஆக வேண்டும் எனும் ஆகம விதியை உடைத்த வெகு சிலரில் நந்தாவும் சேர்ந்தது பாராட்ட வேண்டிய விஷயம். ஓவர் சீன் போடாத உயர் அதிகாரியாக நந்தா நடித்திருப்பார் என்று நம்பி சென்றவர்களை ஏமாற்றவில்லை. கூலான பெர்பாமன்சை தந்து இருக்கிறார். அதேபோல பூர்ணா, அழகம்பெருமாள், ஸ்ரீமன் ஆகியோரும் அளவாக நடித்து உள்ளனர்.

சந்தானம் வரும் முதல் காட்சியில் சிங்கம் சூர்யாவை செமையாக ஓட்டி இருக்கிறார். அதற்குப்பின் சிங்கமுத்துவுடன் அவர் செய்யும் டமாசு எல்லாம் சுமார்தான். மயில்சாமி...சிரிப்பே வரல. போலீஸ் கெட்டப்பில் நடிப்பவர்கள் எல்லாம் 'நான் சைலேந்திரபாபு சார்கிட்ட யோசனை கேட்டேன்' என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் ட்ரைனிங் செய்யும்போது தாஜ்மகாலை சுற்றி காதல் செய்தால் டபுள் பிரமோசன் கிடைக்கும் என்று சைலேந்திரபாபு சார் சொன்னதாக நினைவில்லை. நந்தாவை பார்த்த உடனேயே பூர்ணாவுக்கு பூத்து குலுங்குது லவ்வு. மாநில அமைச்சராக வருபவர் பார்ப்பதற்கு மத்திய அமைச்சர் போல இருக்கிறார். நடிப்பு சுத்தம்.

                                                                   
சுந்தர் சி பாபுவின் இசை படத்தின் காட்சிகளை முந்திக்கொண்டு ஓடுகிறது. நமக்கு பரபரப்பை கூட்டுகிறாராம். என்னைக்காட்டி கொடுக்காமல் இருந்தால் உனக்கு 100 கோடி தருகிறேன் என்று நந்தாவிடம் சொல்கிறார் அமைச்சர். நம்பிட்டோம். படத்தில் என்னை அசர வைத்த காட்சி: அடியாள் ஒருவனை துரத்தி காய்கறி கடைகள் இருக்கும் இடத்திற்குள் நுழைகிறார் நந்தா. அந்த இடமெங்கும் மக்கள் சத்தம். இப்போது அவனை நந்தா கண்டுபிடிக்க வேண்டும். தலைவர் என்ன செய்கிறார் தெரியுமா? கண்ணை மூடிக்கொண்டு பிரெயினை ஓப்பன் செய்கிறார். மனதை ஒருமுகப்படுத்தி எதையோ யோசிக்கிறார். அடியாள் மூச்சு விடும் சப்தம் மட்டும் பில்டர் செய்யப்பட்டு அவர் காதில் விழ...சரியாக எதிரியைப்பிடிக்கிறார். அவ்வ்!

படத்தின் கடைசிப்பாடல் வழக்கம்போல ஒரு ஐட்டம் நம்பர். போலீஸ் படம் என்று ஆனபிறகு குத்தாட்ட அம்மணியை மட்டும் சரியாக தேர்வு செய்யாமல் இருப்பாரா இயக்குனர்? அதனால் தொப்பை போட்ட பெண் ஒருவரை களத்தில் இறக்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறார். வழக்கமாக நம்ம போலீஸ் ஹீரோக்கள் அடித்தால் அந்தரத்தில் பறந்தவாறு ஏரோப்ளேனில் போய் இடித்துக்கொள்ளும் அவல நிலை ஸ்டன்ட்மேன் யாருக்கும் இப்படத்தில் இல்லாதது பெரிய ரிலீப். போலீஸ் கேரக்டர் என்றாலே ACP போஸ்டிங்தான் வேணும் என்று இயக்குனர்களின் ஷார்ட்ஸ் நாடாவை பிடித்து தொங்கியவாறு அலம்பல் செய்யும் ஸ்டார்களுக்கு மத்தியில் குடுத்த ASP பதவியை பிரச்னை பண்ணாமல் வாங்கிக்கொண்ட நந்தா வாழ்க. ஏம்பா ஹீரோஸ்..நீங்க ஏன் ஒரு ஐ.ஜி அல்லது  டி.ஜி.பி மாதிரி ரோல் எல்லாம் பண்ணக்கூடாது? அப்படி பண்ணா உங்க லட்சியத்துக்கு ஏதாவது இழுக்கு வந்துடுமா? 


வேலூர் மாவட்டம் - நந்தாவின் யதார்த்த நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.  
.....................................................................................

சினிமா போலீஸ் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ரியல் போலீஸ் வெப்சைட்டையும் கொஞ்சம் பாருங்க:


...................................................................................


எனக்கு பிடித்த ரியல் ஹீரோ: 

                                                            விஜயகுமார் ஐ.பி.எஸ். 
.....................................................................................


..............................
My other site:
..............................


                                                                         

18 comments:

MANO நாஞ்சில் மனோ said...

முதல் போலீஸ்....

MANO நாஞ்சில் மனோ said...

அமைச்சர் நம்ம பி சிதம்பரம் மாதிரி இருக்குன்னு படிச்சேனே, என்ன கோவமோ...??

rajamelaiyur said...

படம் பார்த்தேன் .. எனக்கு பிடித்து இருந்தது

rajamelaiyur said...

நல்ல விமர்சனம்

rajamelaiyur said...

இன்று என் ப்ளாக் இல் ...


தெரியுமா உங்களுக்கு ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

again police story , feel boring . .

♔ℜockzs ℜajesℌ♔™ said...

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

ஓ மை கடவுளே . .
இங்க இது இருக்க , இது தெரியாம கமெண்ட் போட்டுடனே.

Your comment has been saved and will be visible after blog owner approval. -

இது வேறையா ? முடியலடா சாமி . . இதுக்காகத்தான் நான் ஒரு பதிவே போட்டேன்--- ஏன் கமெண்ட் மொடேரசியன் ? ( why comment moderation? )
லிங்க் : http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html

Unknown said...

கலக்கல் விமர்சனம் மாப்ள...யதார்த்தம் என்பதை சொல்லி இருப்பது அழகு நன்றி!

சென்னை பித்தன் said...

உங்க ரியல் ஹீரோ,எல்லோருக்கும் ஹீரோதான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:)

ஆமினா said...

:-)

தமிழ்மணம் 5 :-)

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

நான் முதல்ல இருந்தே போலீஸ்!

! சிவகுமார் ! said...

@ ராஜா

நன்றி ராஜா.

! சிவகுமார் ! said...

@ ராக்ஸ் ராஜேஷ்

கமன்ட் மாடரேசன் வைக்க எனக்கு மாட்டும் ஆசையா ராஜேஷ்? சில சமயம் தரம் தாழ்ந்த கமன்ட்டுகளை போட்டு உசுரை வாங்குபவர்கள் இருப்பதால் இந்த செக்க்போஸ்ட் தேவைப்படுகிறது.

! சிவகுமார் ! said...

@ விக்கி

தேங்க்ஸ் மாம்ஸ்!

! சிவகுமார் ! said...

@ விக்கி

தேங்க்ஸ் மாம்ஸ்!

! சிவகுமார் ! said...

@ சென்னைபித்தன், ரமேஷ்

தேங்க் யூ!

! சிவகுமார் ! said...

@ ஆமினா

தர்மம் போட்டதற்கு நன்றி!!

Related Posts Plugin for WordPress, Blogger...