அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையுலகை எங்கே தவறான திசைக்கு அழைத்துச்சென்று விடுமோ என்று இதயம் படபடத்த வேளையில் 'யாமிருக்க பயமேன்' என கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்னா படம்ணா!
இப்படத்தின் சிறப்புக்களை பற்றி எப்படி சொல்ல? ஒன்றா இரண்டா? இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத காட்சிகளை திரையில் கொண்டுவர அரபிக்கடலின் ஆழத்தில் அமர்ந்து அமைதியாக யோசித்து இருக்கிறார்கள். படம் பார்த்த நொடி முதல் உற்சாகம் பீறிட்டுக்கொண்டே இருப்பதால் இனி பொறுப்பதில்லை. இதோ இதுவரை எவரும் காணா அதிசயக்காட்சிகள்:
* படம் துவங்கியதும் நம் கண்ணில் இந்திய வரைபடத்தை சொருகுகிறார்கள். தூத்துக்குடி, கல்கத்தா என்று நீள்கிறது பட்டியல். ஊர் பெயரை அடிக்கடி போட்டுக்காட்டுவதை இப்போதெல்லாம் அளவுக்கு மீறி செய்கிறார்கள். எந்த ஊரில் எந்த காட்சி எடுத்தனர் என்று யோசிப்பதற்குள் மதுரை, மும்பை, காஷ்மீர் எல்லை, அடையாறு குறுக்கு சந்து என்று இஷ்டத்திற்கு தவ்விக்கொண்டே இருந்தால் என்னப்பா நியாயம்? வெடியில் கல்கத்தாதான் கைப்புள்ள. சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம்.
* நம்பகத்தன்மை எனும் சைத்தானை மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். முதல் பாதியில் எதையோ தேடி அலைகிறார் விஷால். அவரைத்தேடி அலைகின்றனர் வில்லனின் பொடியாட்கள். யார் இந்த விஷால்? சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன்னால சொன்னா நீங்க ஓடிருவீங்க. அப்பறம் குளிர்பானம், தேநீர் எல்லாம் விக்காது. அதனால் நீடிக்கிறது மர்மம்.
* 'நான் தமாசு செஞ்சா மட்டும் ஏண்டா சிரிக்க மாட்றீங்க' என்று ஒவ்வொரு படத்திலும் அழும் விவேக்..இங்கும் தனது பயணத்தை தொடர்கிறார். எங்கே செல்லும் இந்தப்பாதை....
* சமீரா ரெட்டியை(ரெட்டி நீங்க படிச்சி வாங்குன பட்டமா?) பார்த்தால் ஒரு துளி கூட காதல் உணர்வு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. நீங்க ஒரு அதிசயப்பிறவி கௌதம். விஷாலை ஏன் காதலிக்கிறோம் என்று தெரியாமல் நடிக்கும் காட்சிகளில் தமிழ் திரைப்பட பெருமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
* 'டேய்..டேய்.டேய்...உன்னை போட்டு தள்ளிருவண்டா' என்று கெட்டவர் சாயாஜி ஊளை இடும் காட்சி உங்களை மிரளச்செய்யும் விதத்தில் படமாக்க பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. அவருடைய ஆட்கள் எல்லா முறையும் விஷாலிடம் உதை வாங்கி சாவது யாரும் காணா அதிசயம். 'சாகாதுடா..தமிழ்த்திரை ' என நம்பிக்கை உரத்தை ஊட்டுகிறது.
* எதிரிகளுக்கே தெரியாமல் அவருடைய வண்டியில் போதைப்பொருள் வைத்து அவரை பேக்கு ஆக்கும் காட்சியை பிரபு தேவா முதன் முறை யோசித்து இருப்பது படத்திற்கு 'பக்கா' பலம்.
* யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று பீதி எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு காவலதிகாரி என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. முதல் பாதியில் ஏதோ ஒரு பொறுப்பை சுமந்து கொண்டு சாயாஜியை தேடி முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டு நமக்கு 'பாதாள சாக்கடையை' திறந்து வைத்திருக்கிறார்.
* பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் இறுதிக்காட்சி உலகப்படங்களின் உச்சம்! விஷாலை பொளந்து கட்டி வாயில் தக்காளி சட்னியை ஊற்றி படுக்க வைக்கிறார் ஷாயாஜி. "அய்யய்யோ..இனி நீதி, நியாயம், தர்மம், சத்தியம் (எல்லாம் வேற வேற) போன்றவற்றை காப்பாற்ற யாருமே இல்லையா" என்று நீங்கள் அலற எண்ணும் ஒரு நொடிக்கு முன்னால் அவரின் தங்கச்சி "அண்ணா......" என்று கதறியவுடனே ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து திரையரங்கில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. கெட்ட பயல்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார்.
இப்படி பல்வேறு அரிய காட்சிகளை அனாசயமாக படம் பிடித்து உள்ளனர். இருக்கையில் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் எனும் மருத்துவர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு நமக்காக எல்லாப்பாடல்களையும் படுமொக்கையாக போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. கடைசி பாடலில் மட்டும் பிரபுதேவாவின் கற்பனை வளம் எட்டிப்பார்க்கிறது. சிறு சிறு விளம்பர பலகைகளில் கிராமத்து மக்களை வைத்து கலக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒரே ஆறுதல் இப்பாடல் காட்சிகள் மட்டுமே.
ஸ்ரீமன், ஊர்வசி இருவரும் தமாசு செய்து படத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முயற்சி செய்தாலும்..அவ்வ். 'நான் இருக்குற வரை என் தங்கச்சி அனாதை இல்லடா...............' என்று விஷால் கூவும் காட்சி அவன் இவனில் 'அம்மா..மாவு மாவா வருதும்மா' எனும் வசனத்திற்கு முன் ஒன்றுமே இல்லை. அங்க நிக்கிறார் உக்காருறார் பாலா. என் முன்னிருக்கையில் இருந்த இளைஞர் ஒருவன் வெறியாகி 'யய்யா' என்று தலை முடியை பிய்த்துக்கொண்டு இருந்ததை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.
படம் முடிந்ததும் அப்பாவி இளசுகள் சிலர் அரங்கில் சொன்னவை: "வேணும்னே மொக்க படமா கூட்டிட்டு வரியே. என் காசு போச்சேடா". இதே ரீதியில் இன்னும் இரண்டு படங்கள் வந்தால் அந்த படங்களுக்கு அழைத்து வந்த நண்பன் சக நண்பனின் வெறியால் வாயில் வெற்றிலை போட்டுக்கொள்வது உறுதி. உறுதி. உறுதி.
வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்!
..........................................................................
..........................
My other site:
...........................
70 comments:
"வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்! "
ரொம்ப நன்றிங்க்ணா! உங்க எச்சரிக்கைக்கு..
தப்பிச்சேண்டா சாமி.. பிச்சுக்கோ.........................
சூப்பரா இருக்கு உங்க விமர்சனம்..
உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
Press Meet Gallery
நண்பரே! இந்த படத்தை முதல் நாளே பார்த்து இவ்விமர்சனம் மூலம் பலரை காப்பாற்றி இருக்கிறீர்கள் நன்றி
music director Vijay antanoy not DSP
Ticket book panniyache boss ippo naan enna pannuven ippo naan enna pannuven
சூப்பர்.......
''அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் சினிமாவை எங்கே தவறான திசைக்கு அழைத்துச்சென்று விடுமோ என்று இதயம் படபடத்த வேளையில் 'யாமிருக்க பயமேன்' என கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்ன படம்னா!''
ஒப்பனிங் சீனிலேயே கலக்கிட்டிங்க!!
''வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்! '' கிளைமாக்ஸ் அருமை.
gud comedy
சூப்பர் விமர்சனம் சிவா? நானும் வெடி வெடிச்சதுல வெலவெலத்து போய்தான் இருக்கேன்
வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்!
final touch supr
ஹஹஹா செம நகைச்சுவையாய் சொல்லியுள்ளீர்கள்.. விமர்சனம் பார்த்த பின்னும் யாராவது படம் பார்க்க போனால் 'வெடி சீட்டுக்கு அடியில் தான் !' ;-)
ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்.//
யோவ் சிரிச்சு முடியலை . விட்ரா சாமி
வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்! //
ROFL
//////கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்னா படம்ணா!////////
வில்லு படத்த விட வேற ஒரு நல்ல ஒலகப் படம் இனி வராதுன்னு நெனச்சி கலங்கி போயிருந்தேன்.... என் நெஞ்சுல பீர வார்த்துட்டிங்கண்ணே......
////// சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம். ///////
அந்த சீனாவது ஒரிஜினலா எடுத்தாங்களா, இல்ல ஏதாவது பழைய தமிழ்ப்படத்துல இருந்து எடுத்து போட்டுக்கிட்டானுங்களா?
/////யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று டென்சன் எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு போலீஸ் என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. . ///////
இது ஏற்கனவே நம்ம டாகுடரு படத்துல வந்த ”முடிச்சாச்சே?” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே? அப்போ சரி..... !
//////அவரின் தங்கச்சி "அண்ணா......" என்று கதறிய உடனேய ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. வில்லன்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார்.///////
ஆஹா.... படம்னா படம் இது படம்யா.........
ஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்....
இது விமர்சன வாரமா?
@ கறுவல்
எங்களைபோன்ற தியாகிகளுக்கு பென்ஷன் தந்தால் நன்றாக இருக்கும்.
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்....//
நானும்வாழ்த்டி தொலையுறேன்
@ சரோ, Katz, HajasreeN
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
@ அண்ணாமலை சுவாமி
ஆம். ஆனால் படம் பார்த்தவர்கள் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் உள்ளார்கள் அண்ணாமலை.
@ Suresh
நன்றி சுரேஷ். மாற்றிவிட்டேன். இப்படத்தின் ஒரு பாடலில் DSP டான்ஸ் ஆடினார். அவர்தான் இசையும் அமைத்திருப்பார் என்று எண்ணிவிட்டேன். டைட்டிலை சரியாக படிக்காவிடில் எடிட்டர் ஆண்டனிக்கும், விஜய் ஆண்டனிக்கும் வித்யாசம் காண சிரமப்பட வேண்டும். என்னைப்போல.
@ கேரளாக்காரன்
சீக்கிரம் வெடியை(டிக்கட்) யார் பாக்கெட்லயாவது போட்டுட்டு ஓடிருங்க.
@ கந்தசாமி
தியேட்டரில் கால் வைத்தால் கண்ணி வெடி இலவசமாம் கந்தசாமி!
@ ரமேஷ்
தியேட்டர்ல போய் பாருங்க. ரசிகர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி கோபமாக கத்துவதை கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது.
@ DR பாலா
உங்க ட்ரீட்மென்ட் நிறைய பேருக்கு தேவைப்படுது சார். வர முடியுமா?
@ இரவு வானம்
அடுத்து தீபாவளி வெடி(வேலாயுதம்) வெடிக்கப்போகுது. கெட் ரெடி!
@ பன்னிக்குட்டி ராமசாமி
வில்லு பார்ட் - 2 வருதாம்ணே. கவலை வேண்டாம்!!
@ ரமேஷ்
தியேட்டர்ல போய் பாருங்க. ரசிகர்கள் தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தி கோபமாக கத்துவதை கேட்டால் சிரிப்பை அடக்க முடியாது.//
உனக்கு ஏன்யா இந்த ரத்த வெறி
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம். ///////
அந்த சீனாவது ஒரிஜினலா எடுத்தாங்களா, இல்ல ஏதாவது பழைய தமிழ்ப்படத்துல இருந்து எடுத்து போட்டுக்கிட்டானுங்களா?//
ஆமா. சொல்ல முடியாது. செஞ்சாலும் செய்வாங்க. தயாரிப்பு பன் பிக்சர்ஸ் ஆச்சே. கேப்டன் தண்ணி அடிச்சிட்டு வேட்பாளரை உதைச்ச சீனை மறக்க முடியுமா...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று டென்சன் எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு போலீஸ் என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. . ///////
இது ஏற்கனவே நம்ம டாகுடரு படத்துல வந்த ”முடிச்சாச்சே?” ஓ அதுவும் பிரபுதேவா டைரக்ட் பண்ணதுதானே? அப்போ சரி..... !//
"ஏன்? விஷால் டாக்டர் ஆவக்கூடாதா?" அப்டின்னு பிரபுதேவா நினைச்சிட்டார்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரு ஒலகப்படத்தை தமிழுக்கு வழங்கி கலைச்சேவை புரிந்திருக்கும் அன்பர்களை வாழ்த்துகிறேன்//
அதை பார்த்து நொந்து வெந்த எங்களுக்கு ஏதாச்சும் பட்டம் குடுங்கண்ணே!
//* வேடந்தாங்கல் - கருன் *!said...
இது விமர்சன வாரமா?//
எல்லாம் ஓசி டிக்கட் தல!
ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் படிச்ச ஒரு கலக்கல் விமர்சனம். வரிக்கு வரி கலக்கல்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உனக்கு ஏன்யா இந்த ரத்த வெறி//
தக்காளி சட்னி எல்லாருக்கும் கிடைக்கணுமே அப்டிங்கற ஆதங்கம்தான்.
@ நாகராஜசோழன்
தேங்க்ஸ் தல. எல்லாம் விஷாலின் விஸ்வரூப வெ(ற்)றிக்கு சமர்ப்பணம்.
ஐயோ!தியேட்டருக்குப் பக்கத்திலேயே போகக்கூடாது!வெடிச்சா என்ன ஆகறது?
//சமீரா ரெட்டியை(ரெட்டி நீங்க படிச்சி வாங்குன பட்டமா?) பார்த்தால் ஒரு துளி கூட ரொமான்ஸ் மூட் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. நீங்க ஒரு அதிசயப்பிறவி கௌதம்//
கலக்கிட்டீங்க...
இனிய இரவு வணக்கம் நண்பா,
உங்களின் விமர்சனம் வித்தியாசமா இருக்கிறது.
நான் படித்த வெடி விமர்சனங்களில் படத்தினைப் பற்றிய விலாவாரியான விமர்சனம் உங்களிடமிருந்து கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
//'நான் ஜோக் அடிச்சா மட்டும் ஏண்டா சிரிக்க மாட்றீங்க' என்று ஒவ்வொரு படத்திலும் அழும் விவேக்..இங்கும் தனது பயணத்தை தொடர்கிறார். எங்கே செல்லும் இந்தப்பாதை....//
இந்த வரியில் உள்ள அளவுகூட தன்னால் நகைச்சுவை கொடுக்க முடியவில்லையே என்று விவேக் நிச்சயம் வருந்துவார்!
//ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. வில்லன்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார். //
சான்சே இல்ல...செமயா சிரிச்சேன்:))
//என்று கதறிய உடனேய ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்//
சிரிச்சு முடியலைடா சாமிமிமி!!! கிளாசிக் விமர்சனம்!! :-)
சூப்பர்.....
Sun Tv il vimarsanam varum.. kadasiyil.. otrai variyil soladhaanaal VEDI..PUSVAANAM..
saridhanney! saarey..
சூப்பரா இருக்கு உங்க விமர்சனம்
//இப்படி பல்வேறு அரிய காட்சிகளை அனாசயமாக படம் பிடித்து உள்ளனர். இருக்கையில் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் எனும் டாக்டர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு நமக்காக எல்லாப்பாடல்களையும் படுமொக்கையாக போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி//
ROFL!
Fantastic Writing Boss!!! Keep Going !!!
மன ரணத்திற்கு சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா//
முதல் வரியே தாண்ட முடியலை..அப்படி சிரிச்சுகிட்டிருக்கேன்..
விஷால், சிம்பு, ஆர்யா போன்றவர்களை வைத்து மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, வருஷம் பதினாறு போன்ற படம் எடுக்க முடியுமா .
உங்கள் எதிர்ப்பார்ப்பே மிகவும் தவறு.
விஷால் ஹீரோ என்ற உடனேயே அந்த த்யேட்டர் இருக்கும் எல்லைக்கே செல்லக் கூடாது.
எனவே இந்தப் படம் இப்படி இருக்கிறது என்பதில் ஆச்சர்யமே இல்லை
//சென்னை பித்தன் said...
ஐயோ!தியேட்டருக்குப் பக்கத்திலேயே போகக்கூடாது!வெடிச்சா என்ன ஆகறது?//
வெடிக்கலையே..
@ மாதவன்
நன்றி Maddy!
@ நிரூபன்
வலி அடங்க நாளாகும். அவ்வ்!
@ குசும்பன்
மிக்க நன்றி தலைவரே!
@ தக்குடு
தக்குடு...... தூக்குடு தமிழ் ரீமேக்ல நீங்கதான் ஹீரோவாம். நெசமா?
@ raja23
correct boss.
@ துரைராஜ், ஜெய்சங்கர்
நன்றி நண்பர்களே.
@ சுகுமார் சுவாமிநாதன்
தேங்க்ஸ் சார். வலைமனைல யார்னா ஆக்கிரமிப்பு பண்ணி இருந்தா சொல்லுங்க. விஷால் நம்பர் இருக்கு. வீடு கட்டி அடிக்கலாம்.
@ சதீஷ்குமார்
வெல்கம். எப்படி இருக்கீங்க சார்.
//ராம்ஜி_யாஹூ
விஷால், சிம்பு, ஆர்யா போன்றவர்களை வைத்து மூன்றாம் பிறை, சிப்பிக்குள் முத்து, வருஷம் பதினாறு போன்ற படம் எடுக்க முடியுமா . உங்கள் எதிர்ப்பார்ப்பே மிகவும் தவறு.//
அப்படி எதிர்பார்த்து போனேன் என்று எங்கே சொல்லி இருக்கிறேன்? என்னதான் நல்ல படமாக இருக்கும் என எண்ணி நீங்கள் தியேட்டருக்கு சென்றாலும் அதில் மொக்கையான படங்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல் விஷால், ஆர்யா, சிம்பு படங்கள் அனைத்தும் மொக்கையாக இருக்கும் என்று நம்மால் கணிக்கவும் இயலாது. வெடி இப்படி இருக்கும் என்று ஊருக்கே தெரிந்ததுதான். நான் மட்டும் விதிவிலக்கல்லவே. நண்பர்களுடன் படம் சென்றேன். அவ்வளவே.
//ராம்ஜி_யாஹூ said...
விஷால் ஹீரோ என்ற உடனேயே அந்த த்யேட்டர் இருக்கும் எல்லைக்கே செல்லக் கூடாது.
எனவே இந்தப் படம் இப்படி இருக்கிறது என்பதில் ஆச்சர்யமே இல்லை//
நான்தான் இரண்டரை மணிநேரம் தியேட்டர் எல்லையை தாண்டாமல் 'வெடி' அரங்கினுள் பதுங்கி இருந்தேனே. இப்படம் இப்படித்தான் இருக்கும் என்பது ஆச்சர்யம் இல்லைதான். கமர்சியல் படங்களில் ஒரு அளவுக்கு மேல் நாம் பெரிதாக எதை எதிர்பார்க்க முடியும் ராம்ஜி?
//ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து தியேட்டரில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்//
இதை மிக ரசித்தேன்.
உங்கள் விமர்சனம் அருமை. இதைப் பிரபு தேவா; விஷால் பார்க்க வேண்டும்.
hai siva sir....
your writing style is so intresting. you have lots of sense of humour.
i also posted about this terror "vedi" if you have a time... visit my page
feelthesmile.blogpsot.com
வெடி:- புஷ்வானம்
@ யோகன், மனோ, குறுக்கால போவேன்(?)
அனைவருக்கும் நன்றி.
Hi
Your blogs are funny and witty.
Keep it up.
தன் நெருங்கிய நண்பர்கள் தவிர மற்றவர்களுக்கு கமன்ட் போடாத குசும்பன் வந்து கமன்ட் போட்டுருக்கார்!! பாத்துக்குங்க.
காமெடி உங்களுக்கு நல்லா வருது. மக்கள் விரும்புவதும் சிரிக்க தான் அசத்துங்க சிவா
Thanks Mohan Sir. I am blessed by the elder bloggers.
// யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால்.// செம காமெடி
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment