மௌன கீதங்கள்:
செய்தி: சொந்த ஊர் ஆலமரத்தடியில் ஒருவாரத்திற்கு அண்ணா ஹசாரே மவுன விரதம்.
.........................................................................................
ஆடிப்பெருக்கு:
செய்தி: இம்மாத இறுதியில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை தொடப்போகிறதாம். இதனால் வேலை இல்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென சர்வே தெரிவிக்கிறது.
போன அஞ்சி வருசத்துல கரண்ட் கட் பண்ணாம இருந்துருந்தா இந்த நெலம வந்துருக்குமா? இதுல வேற மேடம் சொல்லி இருக்காங்க. இன்னும் ஒரு வருஷம் கரண்ட் கட் தொடருமாம். அடுத்த வருஷம் பூமில நிக்க எடம் பத்தாம நிஜமாவே ஒத்தக்கால்ல நின்னுதான் சண்ட போடணும் போல.
ஓர் இரவு:
நேற்று இரவு இண்டியன் ருபீ எனும் மலையாளப்படத்தை அண்ணன் கே.ஆர்.பி. உடன் பார்த்தேன். தியேட்டரில் பார்த்த முதல் மலையாளப்படம் என்பது முக்கிய செய்தி. ரியல் எஸ்டேட் பிசினசை மையமாக வைத்து படம் பண்ணி உள்ளார்கள். நடிப்பு: ப்ரித்விராஜ், திலகன். தயாரிப்பு: ப்ரித்விராஜ், சந்தோஷ் சிவன். ஹீரோயின் ரீமா கல்லிங்கல். என்னா கண்ணுப்பா. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தது. சீசன்ஸ் தியேட்டர் மலையாள மக்களால் நிரம்பி வழிந்தது. சுமாரான ஜோக்குக்கு கூட எக்ஸ்ட்ரா சவுண்ட் குடுத்து சிரித்தனர். விஜய்யின் வேலாயுதம் ட்ரைலர் போட்டதும் செம ஆரவாரம். படத்தில் கூட விஜய் டி.வி.யில் வருவது போல் ஒரு காட்சி. அதற்கும் ஆர்ப்பரித்தனர். வேலாயுதம் தமிழ்ல ஹிட்டோ இல்லையோ கேரளால அமோகமா போகும் போல.
என்னை ஏன் கூப்பிடவில்லை என்று புதிய பதிவர் கேபிள் சங்கர் மிரட்டியதால் அவருக்கு ஒரு டிக்கட் எடுக்க முயன்றும் முடியவில்லை. கடைசியில் Saheb biwi aur ganster எனும் ஹிந்திப்படம் புக் செய்துவிட்டு எதிரில் இருக்கும் சிக்ஸ் டிகிரீஸ் தியேட்டருக்குள் நுழைந்தார், எங்களுக்கு சாபம் விட்டுக்கொண்டே: "நீங்க பாக்குற படம் மொக்கையா இருக்கணும்". அதான் கிட்டத்தட்ட நடந்தது. வெளியே வந்து பார்த்தால் "நான் பார்த்த ஹிந்திப்படம் சூப்பர்" என்று காண்டை கிளப்பினார். நல்லவர்களை ஆண்டவன் லேசா சோதிப்பான். அசர மாட்டோம்.
......................................................................................
வந்தாளே மகராசி:
போர்ட்லான்ட்(USA) நகரில் சமீபத்தில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் சேர்ந்த கிருஷ்ணா பூனியா. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 59.50 மீட்டர் தூரம் வட்டு எறிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இவர் 61.12 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து உள்ளார். இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் ஆறாவது அத்லெட் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
................................................................................................
இனி பொறுப்பதில்லை:
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நமது சிங்கம் ஜே. கே. ரித்தீஷ் எம்.பி.யின் காரை எதிரிகள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா? அய்யகோ. ஓ..எதிரிகளே, எங்கள் தலை பார்ப்பதற்கு 'டம்ளருக்குள் நீச்சல் அடிப்பவர்' போல தோன்றலாம். கோபம் வந்தால் இரண்டு தோள்பட்டையிலும் தலா நான்கு ஸ்கார்பியோ கார்களை ஏந்தி உங்கள் முகத்தில் விட்டெறிவார் என எச்சரிக்கிறோம். ஜாக்ரத!
.....................................................................................................

துள்ளுவதோ இளமை:
'உண்மை. உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. இங்கிலாந்து அணி என்பதற்கு பதில் இங்கிலந்து போன்ற சொற்பிழைகள், பெண் செய்திவாசிப்பாளர்களுக்கு போடப்படும் ஓவர் மேக்கப்(சரண்யா சிஸ்டர் முகத்துல பவுடரை கொஞ்சம் கம்மி பண்ணுங்கப்பா), சற்று பதட்டத்துடன் பேசும் இளம் நிருபர்கள் போன்றவற்றை சொல்லலாம். உலகத்தரம் என்று சொல்லிக்கொள்வதால் இந்த விஷயங்களை சரி செய்தால் நன்று. தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா? சும்மா கேட்டேன்.
....................................................................................
எத்தன்:
எங்கள் வீட்டருகே இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடுகிறார். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரும் தேர்தலில் நின்று நின்று தோற்று தோற்று போகிறார். இந்த வாரம் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு ஒருவர் அண்ணனுக்கு ஆதரவு கேட்டு மைக்கை கடித்தார்..."சுமார் நாற்பது ஆண்டு(?) காலமாக நமது பகுதியில் அடிப்படை பிரச்னைகளை சரி செய்து வரும் தோழருக்கு" என்று (பப்)படம் காட்டினார். பொய் பேசலாம். ஏக்கர் கணக்குல எல்லாம் பேசக்கூடாது செகப்பு சட்ட.
...................................................................................
கீழ்வானம் சிவக்கும்:
இந்த தீபாவளிக்காவது கேப்டன் டி.வி.யில் விருதகிரி போடுவார்களா என்று பேராவலுடன் காத்திருக்கும் கோடான கோடி தெற்காசிய, ஐரோப்பா மக்களை ஏமாற்ற முயல்வது மனதை கவ்வுகிறது. சன்ல எந்திரன் போட்டாக்கூட என் படத்த இப்போதைக்கு போட மாட்டேன் என்று பந்தா செய்வது சரியல்ல தலைவா.
....................................................................................
நெஞ்சம் மறப்பதில்லை:
'வசூல் ராஜா' கமல்: "இன்னாடா..ஆஸ்காரா குடுக்கறாங்க. இப்பிடி நடிக்கற?"
செய்தி: போலீஸ் அரெஸ்ட் என்றதும் நெஞ்சுவலி என்று கூறி ஆஸ்பிட்டலில் அண்ணன் எடியூரப்பா தானே தவழ்ந்து போய் படுத்துக்கொண்டார்.
...........................................................................................

தேன்மழை:
வடக்கில் மட்டுமல்லாது சென்னையிலும் செம ஹிட் ஆன 'ஷாருக்'கின் தில் தோ பாகல் ஹை படத்தில் வரும் சூப்பர் பாடல். லொக்கேஷன், இசை, லதா மங்கேஷ்கரின் எவர்க்ரீன் வாய்ஸ் என அனைத்தும் அசத்தல். முழுசா ஒரு தரம் கேட்டுப்பாருங்க:
.............................................................................
...................................
...................................
9 comments:
// ரியல் எஸ்டேட் பிசினசை மையமாக வைத்து படம் பண்ணி உள்ளார்கள். //
இப்பதான் தெரியுது ஏன் எங்களை எல்லாம் விட்டுட்டு கே.ஆர்.பியை கூட்டிட்டு போனீங்கன்னு...
// செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா? //
ஏய் dont touch that... (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்)
////தேர்தலில் நின்று நின்று தோற்று தோற்று போகிறார்.////
யாரப்ப இப்பபுடி சொல்றது ஹ...ஹ...
அப்படி நடந்து கொண்டாத் தான் அரசியல்வாதிக்கு பெருமைப்பா...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
சினிமா டைட்டில் சூப்பர் கலக்கல்!
தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/
வணக்கம் சகோ,
நலமா?
சமகால விடயங்களோடு, சுவையான மீலாக இந்த வார மீல்ஸ் வந்திருக்கிறது.
ரசித்தேன்.
ஜே.கே.ரித்திஷ் பற்றிய கமெண்ட் சூப்பர்.
வசூல் ராஜா' கமல்: "இன்னாடா..ஆஸ்காரா குடுக்கறாங்க. இப்பிடி நடிக்கற?"
செய்தி: போலீஸ் அரெஸ்ட் என்றதும் நெஞ்சுவலி என்று கூறி ஆஸ்பிட்டலில் அண்ணன் எடியூரப்பா தானே தவழ்ந்து போய் படுத்துக்கொண்டார்.//
ஹா ஹா ஹா ஹா கலக்கல், ரசிச்சி சிரிச்சேன்....!!!
//புதிய பதிவர் கேபிள் சங்கர்//
raightunganna...:))
Post a Comment