நூறாவது நாள்:
..................................................................................
ருத்ர தாண்டவம்:
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் எந்த (ஏ)மாற்றமும் இல்லை என்று காங் திட்டவட்டமாக கூறி விட்டதால் நாம் பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோமே என்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனராம். 'காங்'கின் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வற்புறுத்த ச.மூ.பவனுக்கு இதர கட்சி தலைகள் பேராசையுடன் புறப்பட எத்தனித்தாலும் மாற்று வேஷ்டி வாங்கும் வரை அந்த ரிஸ்க்கை எடுக்க தயாராக இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எத்தன நாள் முதுகுல சவாரி செஞ்சீங்க. இப்ப வாங்க ஒண்டிக்கு ஒண்டி.
'சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய். சிவனேன்னு கிடந்தவனை சீண்டி விட்டாய்'
.................................................................
குத்து:
அஜர்பெய்ஜானில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் பாக்சிங் போட்டியில் அரை இறுதி வரை சென்று போராடி தோற்றுள்ளார் இந்தியாவின் விகாஸ் க்ரிஷன். இதன் மூலம் வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்தாலும் லைஸ்ராம், ஜெய்பகவான், மனோஜ்குமார் ஆகியோருடன் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் விகாஸ். இவருக்கு வயது 19 மட்டுமே. ஒலிம்பிக்கில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துவோம்!
.....................................................................................
வியாபாரி:
ஒலி, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களில் சென்னை தியேட்டர்களின் ராஜா சத்யம் என்பது சத்யம் என்றாலும், உணவு பொருட்கள் விற்பதில் செப்படி வித்தை செய்யும் யுத்தியை கடைபிடிப்பது சரியல்ல. 'கோக்'கை ஸ்மால்(400ml),மீடியம்(650ml) மற்றும் லார்ஜ்(1000ml) என்று விற்கின்றனர். இவை அனைத்தும் Fountain வகையை சார்ந்தவை(பட்டனை அமுக்கினால் கொட்டும்). நான் தனியாக படம் பார்க்க போகையில் ஸ்மால் கோக் கேட்டால் சில சமயம் இல்லை என்று சொல்வார்கள். மீடியம் மற்றும் லார்ஜை நம் தலையில் கட்டும் டெக்குனிக்கு. இதை ஒரு நாள் கேட்க வேண்டும் என எண்ணியதுண்டு.
சமீபத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டியது. நான் "ஸ்மால் கோக்" என்றதும் "இல்லை சார்" என்றார் பணியாள். நான் "ஏன் இல்லை? மிஷினில் மூன்று பட்டன்கள் உள்ளன. அதில் மீடியம்,லார்ஜ் கொட்டும்போது ஸ்மால் கொட்டாதா? அதற்கான பட்டன் மட்டும் வேலை செய்யவில்லையா? அல்லது ஸ்மால் கோக்கிற்கான பேப்பர் கப் தீர்ந்துவிட்டதா? அப்படி என்றால் மீடியம் பேப்பர் கப்பில் ஸ்மால் கோக்கை நிரப்புங்கள். கப்பிற்கான பணத்தை வேண்டும் என்றாலும் தருகிறேன்" என்றேன். தலைவர் பதில் பேசாமல் அடுத்த நிமிடமே ஸ்மால் கோக்கை எடுத்து வந்தார். நாங்களும் பொங்குவோம்ல!
....................................................................................
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு:
காப்பி அடித்த படங்கள் என்று உறுதியாக தெரிந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது என் கொள்கை. முன்பதிவு செய்தபின் அல்லது படம் பார்த்து விட்டு வந்த பிறகு காப்பி படம் என்று பதிவர்கள் வாயிலாக தெரிய வருகையில் வருந்துவதுண்டு. லேட்டஸ்ட் உதாரணம்: முரண். எனவே நான் அடுத்து தவிர்க்க போகும் படங்களில் ஒன்று வேலாயுதம். Assassins Creed எனும் கேமில் இருக்கும் ஸ்டில்லை உருவி விஜய் போஸ் குடுத்து இருப்பது ஊர்ஜிதம் ஆகி இருப்பதால் நான் எஸ்கேப். பார்க்க போகும் அன்பர்கள் அனைவருக்கும் இனிய வேலாயுத பூஜை வாழ்த்துகள்!!
....................................................................................
ஒளிவிளக்கு:
நித்தம் ஒரு மணிநேர பவர்கட்டை அனுபவித்து வரும் தமிழர்களில் நானும் ஒருவனாக இருப்பது கண்ணை கட்டுகிறது. எங்க ஏரியாவில் மாலை 3-4 கட். சும்மா சொல்லக்கூடாது... 'டாண்' என்று மூன்று மணிக்கு கட் செய்து தங்கள் கடமை உணர்ச்சியை காட்டுகிறார்கள் மின்சார கண்ணாக்கள். அதுவும் பல மாதங்களாக குறி தவறாமல். இதே டீயை எல்லா அரசு அலுவலகங்களிலும் ஆற்றினால் இந்தியா அடுத்த வாரமே அமெரிக்காவை ஓவர்டேக் செய்து மெகா வல்லரசாக வாய்ப்புகள் அதிகம். ஆவன 'ஜெ'ய்வாங்களா?
......................................................................................
எங்கேயும் எப்போதும்:
செய்தி: அமெரிக்காவில் வேலை இன்றி 4.5 மில்லியன் மக்கள் அவதி:
...................................................................................
தூள்:
கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி சென்னை தி.நகரில் மறுபடியும் . மேலும் விவரம் அறிய:
பத்ரி
..............................................................................
தூள்:
கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி சென்னை தி.நகரில் மறுபடியும் . மேலும் விவரம் அறிய:
பத்ரி
..............................................................................
புரியாத புதிர்:
பிரபலமான வலைதிரட்டியான இன்ட்லி அண்மையில் செய்த மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சி? விரைவில் இவற்றை சரி செய்து முன்பு போல தெளிவாக இயங்கினால் நன்றாக இருக்கும். தமிழ்மணத்தின் சமீபத்திய மாற்றங்களால் அதன் புகழ் மேலும் அதிகரித்துள்ளது என்பதும் கண்கூடு. உடான்சும் முன்னேறி வரும் வேளையில் இன்ட்லி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறதோ? பார்க்கலாம்.
...................................................................................
மயக்கம் என்ன?
செய்தி: தான் பத்தாவது பரீட்சை பாஸ் செய்ய வேறு ஆளை தேர்வறைக்கு அனுப்பிய புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு.
எல்லாம் போச்சா? இனிமே சக அரசியல் தோழர்கள் உங்கள பாத்து இதத்தான சொல்ல போறாங்க:
"நீங்க பத்தாவது பெயிலுண்ணே. நாங்க ஏழாவது பாஸுண்ணே. இப்ப சொல்லுங்க. பாஸு பெருசா? பெயிலு பெருசா?".
...........................................................................................
தாலாட்டு:
என் அபிமான பாடகர் ஜேசுதாசின் தேனினுமினிய குரலில்.........
........................................................................................
20 comments:
ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்
அண்ணே!'பொங்க'ல்சூப்பர்//
விகாஸ் க்ரிஷன்-க்கு வாழ்த்துக்கள்//
மூணு மணிக்கு கரெக்ட்டா போகும் கரண்டு நாலு மணிக்கு கரக்டா வருதா?
அனா எல்லா கடைலேயும் இந்தா டிய ஆத்துனா பால் பொங்கி அடுத்த எலக்சன்ல வேலைய காட்டிடும்.அதனால ஆவன ஜெ'ய்யறது டவுட்டு தான்.
//
ஹா ஹா பிளாக்கர்ஸ்,பிளாக்கர்ஸ்
//
அண்ணே !டகால்டி அமைச்சர் இப்ப எஸ்ஸாயிட்டாறு.தேடிட்டுஇருக்காங்க~
//கடமை, கண்ணியம், கட்டுப்பாடு://
புல்லரிக்குது....
Nalla irukku.....
அருமை. பூவே பூச்சூட வா எனக்கும் பிடித்த பாடல். காப்பி படங்கள் பார்க்காமல்/ விமர்சிக்காமல் இருக்கும் முடிவை மறு
பரிசீலனை செய்யுங்க நண்பா
@ கவி அழகன்
வருகைக்கு நன்றி கவி!
@ கோகுல்
டக்கால்டி அமைச்சருக்கு டூப் போட்டது நீங்கதானாமே? புதுவைப்பதிவர் இப்படி செய்யலாமா?
@ புட்டி பால் அண்ட் நாய் நக்ஸ்
ரெண்டு பேருக்கும் என்னா பேர் பொருத்தம். நன்றிங்கோ!
@ மோகன் குமார்
அம்மாதிரியான படங்களை தெரிந்தே பார்ப்பது தவறு என நினைக்கிறேன். குறிப்பாக காப்பி படங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் கருந்தேள், ஹாலிவுட் பாலா போன்றவர்களின் முயற்சிக்கு என்னாலான சிறு ஒத்துழைப்பு.
வேலாயுதத்துக்கு இப்பமே ஆப்பு வச்சாச்சா ஹா ஹா ஹா ஹா.....
கடைசியா விஜயின் குருவி படம் பார்த்ததோடு சரி, அந்த கிர்ர்ர்ர்ர்ர்ர் இன்னும் மாறலை....
மினி மீள்ஸ்...
4.5 மில்லியன் ப்ளாக்கர்ஸா...தாங்காதுடா சாமீ!
சூப்பர்., மீல்ஸ்...
இந்த வார மீல்ஸ் சூப்பர் அண்ணே.
////நூறாவது நாள்:
//
உண்மைதான் .. பாவம் அவர்
சினிமா தலைப்புகளில் கலக்கல்
இன்று என் வலையில் ...
இந்த மாத SUPER BLOGGER விருது
கல்யாணச் சாப்பாடு!
அருமையான பகிர்வு
Post a Comment