CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, October 2, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (02/10/11)


ஒரு கல் ஒரு கண்ணாடி:
  

......................................................................

மின்சாரக்கனவு: 

ஆற்காடு அண்ணன் இருக்கையில் நித்தம் பல்க்காக பவரைப்பிடுங்கி கரண்ட் பில்லை கம்மியாக கட்ட வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார். மேடம் வந்த நாளில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே கட் செய்வதால் பில் தொகை கூட ஆரம்பித்துவிட்டது. நம்ம ஆற்றொண்ணா சோகத்தை துடைத்தெறிய ஆந்திர மக்கள் முடிவு செய்துவிட்டனர். தெலுங்கானா போராட்டத்தில் அங்குள்ள நிலக்கரி தொழிலாளிகள் ஐக்கியம் ஆகி ஸ்ட்ரைக் பண்ணி வருகிறார்கள்.   இந்தப்போராட்டம் தொடர்ந்தால் தமிழகத்தில் அடிக்கடி பவர் கட் வருமாம்.  நாம் கரண்ட் பில்லை கம்மியாக கட்டவேண்டும் எனும் அக்கறை பக்கத்து மாநில மக்களுக்கு இருக்கிறது. அந்நல்லெண்ணம்   மேடம் அரசுக்கு இல்லாதது என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு கடும் மன உளைச்சலை தந்துள்ளது. வெளிச்சம் என்று ஒன்று இருந்தால் இருள் இல்லாமலா போகும்? ஜெய் ஆந்திராலு!
....................................................................................

ஆடுகளம்: 

உலகின் மிகப்பிரபலமான பார்முலா ஒன் கார் பந்தயம் இம்மாதம் 30 ஆம் தேதி டில்லி அருகே நோய்டாவில் நடக்கிறது. டிக்கெட் விலை 2,500 முதல் 35,000 வரையாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை மனதில் கொண்டு கார் பார்க்கிங்(போட்டி நடக்கும் இடத்தில் அல்ல. சற்று தள்ளி) கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளனர். வெறும் 1,500 ரூபாய்தான். 'விர் விர்'ப்பான போட்டியைக்காண தவறாமல் டில்லிக்கு கிளம்புங்கள். போகிற வழியில் பார்லிமெண்டில் மீரா குமார் மேடம் 'சிட் டவுன் ப்ளீஸ். ப்ளீஸ் சிட் டவுன்' என்று சொல்லியும் கேட்காமல் எம்.பி.க்கள் லந்து செய்தால் நறுக்கென்று நாலு கொட்டு கொட்டிவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
.................................................................................

பார்வை ஒன்றே போதுமே: (sms) 

வேல்விழி கொண்டு அவள் பார்க்கும் பார்வைக்கு 
எளிதாக அர்த்தம் கண்டு பிடிக்கத்தெரியும் எனக்கு  
அவள் பேசும் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் 
கண்டுபிடிக்க முடிவதே இல்லை...  
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூச்சு விடாமே இங்கிலீஷ்லேயே பேசறா மச்சான்.
.............................................................................

பொல்லாதவன்:

பேப்பர் கடை பக்கம் தெரியாம பாக்குறது குத்தமாடா? 

'கனி மொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?'   

'ரஜினி படத்தில் ஒபாமா வில்லனா?'  

இதையெல்லாம் ஜட்ஜு கிட்டயும், ரஜினி கிட்டயும் கேக்காம செவனேன்னு போற எங்ககிட்ட கேக்குறத தயவு செஞ்சி நிறுத்துங்கன்னு உங்க கால் சுண்டு விரல இழுத்து புடிச்சு கேட்டுக்கறேன்.
..........................................................................................

நானே ராஜா நானே மந்திரி: 

செய்தி: விரைவில் தெலுங்கானா உதயமாகாவிட்டால் கிருஷ்ணா ஆறு ரத்த ஆறாக மாறும் - கே. சந்திரசேகர ராவ்.

.....................................................................................

வறுமையின் நிறம் சிகப்பு:

இந்தியாவில் நகர்புறத்தில் வாழும் ஒருவருக்கு 32 ஓவாயும், நகரம் தாண்டி வாழும் நபருக்கு 26 ஓவாயும் வருமானம் இருந்தால் போதும். அவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களாக  கருதப்படமாட்டார்கள் என திட்டக்குழு கமிஷன் அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அருமையான ஆராய்ச்சியை செய்த மாண்டேக் சிங் அல்வா வாயா..சாரி..அலுவாலியா போன ஜென்மத்தில் ஐசக் நியூட்டனின் ஒன்று விட்ட தம்பி என்பது தற்போது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. நாளை பிரதமரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறாராம். 
     
ஒரு சின்ன விண்ணப்பம்ணே. அந்த அமௌன்ட்ல கூட ரெண்டு ஓவா சேத்து சொல்லுங்க. அப்பதான் நாடார் கடைல ரப்பர் வாங்கி வறுமைக்கோட்டை வக்கனையா அழிக்க முடியும். ப்ளீஸ்ணே...அண்ணே......
....................................................................................

மெல்லத்திறந்தது கதவு:  

எதிர்க்கட்சி புள்ளிகள் கையில் கவர்மென்ட் ப்ரேஸ்லட்டை(கைவிலங்கு) கட்டி வேனில் ஏத்தும்போதெல்லாம் அவர்களுடைய உள்நாக்கில் மைக்கை சொருகி 'இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?' என்று நிருபர்கள் கேட்கிறார்கள். அதற்கு எல்லாரும் சொல்லும் ஒரே டயலாக்: 'இது பழிவாங்கும் செயல்'. ஆனால் பல பேருக்கு 'ழ' வன்னா தொண்டையோரத்தில் பஞ்சர் ஆகி விடுவதால் 'இது பலி வாங்கும் செயல்' என்றுதான் நம் காதில் விழுகிறது. எப்படியோ.. அர்த்தம் ஒண்ணுதான். அதால மன்னிச்சிட்டோம்.          
.................................................................................... 
                                                                   
வாகை சூட வா:   

துயரங்கள் உன்னை ரவுண்டி கட்டி ரவுசு கட்டுகையில் 
உயரத்தில் இருந்து தொபக்கடீர் என ஓனிக்ஸ் வண்டியில் நீ வீழ்கையில் 

சோகப்பிசாசு உன் உச்சந்தலையில் உறுமி அடித்தாடுகையில் 
ரயில் வரா நேரம் பார்த்து தண்டவாளத்தில் சாய்ந்து கொறட்டை விடுகையில் 

உன்னை ரட்சிக்க ஓடோடி வருவேன் நான்....

பவர் ஸ்டாரும் நானே. யுவர் ஸ்டாரும் நானே:  .........................................

My other site:
.........................................

சமீபத்தில் எழுதியது:


..........................................
   

                                                                           

20 comments:

நாய் நக்ஸ் said...

ஹா ..ஹி ...ஓஹோ ....

• » мσнαη « • said...

///பவர் ஸ்டார் !!!///

நாராயணா !!!

இந்த கொ...........................!!!!!!

ஆமினா said...

அந்நல்லெண்ணம் மேடம் அரசுக்கு இல்லாதது என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு கடும் மன உளைச்சலை தந்துள்ளது.//

நக்கலு

ஆமினா said...

திட்டக்குழு கமிஷன் அறிக்கையை தயார் செய்துள்ளது. //

இந்த அறிவாளிங்கள எப்படி தான் பாராட்டுறதுன்னே தெரியல சகோ.....

ஆக நம்ம நாட்ல இனி வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவங்க இருக்க மாட்டாங்க ?? //டவுட்டு

ஆமினா said...

ஆந்திராகாரர் மிஸ்ட்டர் பீன் மாதிரியே இருக்காருல? :-)

கோகுல் said...

சிவா அண்ணே அப்படியே நம்ம எம்பிக்களுக்கு கூட 32 ஓவா போட்டுக்கொடுதுடுவோம் சம்பளமா!
என்ன பண்றாங்கன்னு பாப்போம்!

கோகுல் said...

இவங்க பார்வையிலேயும் பேசுளையும் ஏதோ ஒண்ணு தெரியுதே!மொதல்ல ரெண்டு பேரையும் கண்ணாடிய கழட்ட சொல்லுங்க!

MANO நாஞ்சில் மனோ said...

கொடுமையிலும் கொடுமை இது பெரிய கொடுமைடா சாமீ.....

kanagu said...

/*இந்தியாவில் நகர்புறத்தில் வாழும் ஒருவருக்கு 32 ஓவாயும், நகரம் தாண்டி வாழும் நபருக்கு 26 ஓவாயும் வருமானம் இருந்தால் போதும்*/

Mr. அலுவாலியா கிட்ட 900 ரூவா கொடுத்து நகரத்துல ஒரு மாசத்துக்கு வாழ்ந்து பாக்க சொல்லணும்... அப்புறம் போய் அறிக்கைய சப்மிட் பண்ணா சொல்லணும்..

சந்திரசேகர ராவ் போட்டோ செம காமெடி :)

! சிவகுமார் ! said...

//NAAI-NAKKS said...
ஹா ..ஹி ...ஓஹோ ....//

பார்ரா!

! சிவகுமார் ! said...

//• » мσнαη « • said...
///பவர் ஸ்டார் !!!///

நாராயணா !!!

இந்த கொ.....!!//

என்னாச்சி. பவரு ஸ்டாரு உங்க வீட்டுக்கே வந்துட்டாரா....அய்யா யாராச்சும் ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி மோகனை எழுப்புங்க!!

! சிவகுமார் ! said...

//ஆமினா said...
ஆந்திராகாரர் மிஸ்ட்டர் பீன் மாதிரியே இருக்காருல? :-)//

அவர் மூக்கு சுமாராத்தானே பொடச்சி கெடக்கு..

! சிவகுமார் ! said...

//கோகுல் said...
சிவா அண்ணே அப்படியே நம்ம எம்பிக்களுக்கு கூட 32 ஓவா போட்டுக்கொடுதுடுவோம் சம்பளமா!
என்ன பண்றாங்கன்னு பாப்போம்!//

அவங்க பாஷைல 32 ஓவான்னா ஏழு முட்டை கூட போடணும். அம்புட்டு முட்டைக்கு நாம எங்க போவ.

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
கொடுமையிலும் கொடுமை இது பெரிய கொடுமைடா சாமீ.....//

கடைசிவரைக்கும் நீங்க அது எந்தக்கொடுமைன்னு சொல்லாததுதான் பெரிய கொடுமை அண்ணாத்த.

! சிவகுமார் ! said...

@ கனகு

//Mr. அலுவாலியா கிட்ட 900 ரூவா கொடுத்து நகரத்துல ஒரு மாசத்துக்கு வாழ்ந்து பாக்க சொல்லணும்... அப்புறம் போய் அறிக்கைய சப்மிட் பண்ணா சொல்லணும்.//

அப்பறம் எங்க அறிக்கையை சப்மிட் பண்றது. பழைய பேப்பர் கடைலதான் தேடணும்.

! சிவகுமார் ! said...

This comment has been removed by the author.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க நிறைய பேருக்கு மூக்க செக் பண்ண வேண்டி இருக்கு......

Katz said...

gud post

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

நாக்கையும்தான்.

! சிவகுமார் ! said...

@ Katz

Thanks!

Related Posts Plugin for WordPress, Blogger...