CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 31, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 2100% உண்மைச்சம்பவங்களை கொண்ட இத்தொடரை எழுத சில மாதங்களுக்கு முன்பே எண்ணியபோதும் அதற்கான நேரம் இப்போதுதான் வாய்த்துள்ளது. சமீபத்தில் நடந்த சென்னை பதிவர் சந்திப்பில் கூட தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் அசுர வேகத்தில் பரவிவரும் மதுப்பழக்கம் குறித்து சில வார்த்தைகள் பேசினேன். அப்போது நண்பர் நரேன் 'இதை உங்கள் பதிவில் சொல்லலாமே?' என்று கூறினார். இப்போது எழுதுவதற்கு அதுவும் ஒரு காரணம். அந்த சந்திப்பில் கூட ஒரு சில நண்பர்கள் நான் சொல்ல வந்ததை சற்று வேறுவிதமாக புரிந்து கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் தீர்க்கமாக சொல்லிக்கொள்வது இதுதான். குடிப்பவர்களை திருந்த சொல்லி பிரச்சாரம் செய்யும் சமூகப்பாதுகாவலன் வேடம் பூண்டு கொள்வது என் நோக்கமல்ல. 'குடிக்காதே' என்று பிறரின் உரிமையில் எடுத்தவுடன் தலையிடலும் தவறு என்பதையும் நன்கறிவேன். தயவு செய்து சக மனிதர்களுக்கு தொந்தரவு செய்யாமல் இருங்கள் என்பதே எனது கோரிக்கை.

இதோ...சமூகத்தில் நல்ல நிலையில் இருந்து மெல்ல மெல்ல மதுவிற்கு அடிமையாகி இறுதியில் அதற்கே இரையான எனது தந்தையின் கதை. என் தாய் சொன்னதை இப்பதிவு தொடங்கி அடுத்த சில பதிவுகள் வரை பகிர்கிறேன்.

தமிழக கலைத்துறை வரலாற்றில் நீங்காமல் நிலைத்து நிற்கும் வண்ணம் பெரும்புகழ் பெற்ற ஒருவர் மீது கொண்ட அன்பினால் சொந்த ஊரை விட்டு மெட்ராஸ் வந்தடைந்தார் என் தந்தை. அவரிடமே காரோட்டியாகவும் வேலைக்கு சேர்ந்தார். சில வருடங்களில் நேர்மையான தொழிலாளி எனும் பெயரையும் பெற்றதோடு மட்டுமின்றி தனக்கென சொந்தமாக ஒரு அம்பாசிடர் காரையும் வாங்கினார். எங்கள் வாழ்வை புரட்டிப்போட்டதில் இந்த காருக்கும் முக்கிய பங்குண்டு.

1970 கால கட்டத்தில்  காரோட்டி ஒருவர் சொந்த வாகனம் வைத்திருப்பது பெரிய அந்தஸ்தை தந்தது. மெட்ராசில் இப்படி ஒரு மதிப்பு என்றால், சொந்த ஊரில் சொல்லவா வேண்டும். ஊருக்கு செல்கையில் எல்லாம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் சொந்தங்களும் 'அந்த பிரபலத்திடம் வேலை செய்கிறார் இவர். சொந்த வாகனமும் வைத்துள்ளார்' என்று வியப்பு மேலிட பேசுவார்களாம். இப்படி ஒரு நிலையில் என் தந்தை இருக்கையில் பொறாமை எனும் பிசாசு சிலர் மனதில் குடிகொள்ளாமல் இருக்குமா? அப்படி ஒரு நல்லவர் எங்கள் நெருங்கிய சொந்தத்தில் இருந்தார்.

லைட்டா குடி. தப்பில்ல:  

திருமணத்திற்கு முன்பு வரை வெகு அரிதாக குடித்த என் தந்தைக்கு அந்த வாசனை மேலும் பழக்கப்பட தூண்டுகோலாய் இருந்தவன் அந்த பொறம்போக்கு. என் பெற்றோரின் திருமண நாள் அன்று காலை கூட சிறிய எவர் சில்வர் வாளியில் சாராயத்தை நிரப்பி தந்தையை குடிக்கச்சொல்லி வற்புறுத்தி அதில் வெ(ற்)றியும் பெற்றான். சொந்தக்காரனோ அல்லது நண்பனோ ஒருவனை அடிக்கடி வற்புறுத்தி குடிக்க சொல்வதற்கு முக்கிய காரணங்களில் கீழ் சொன்ன இரண்டும் முக்கியமானது என்பது எனது கணிப்பு: ஒன்று தன்னை விட ஒரு படி மேலே போய் விட்டவனை பள்ளத்தில் தள்ள விரிக்கும் சூழ்ச்சி வலை. மற்றொன்று தனியாக குடிக்க திராணி இன்றி 'கம்பனி' எனும் பெயரில் வீட்டில் இருப்பவனை வெளியே அழைத்து ஊற்றிக்கொடுத்தல்.

புத்திசாலிகள் சிலர் இடைப்பட்ட காலத்தில் சுதாரித்துக்கொண்டு அந்தப்பேயை விரட்டி விடுவர். ஆனால் பல பேர் அந்த வஞ்சக குணம் அறியாமல் மதுவிற்கு அடிமையாகி வாழ்வை தொலைத்து விடுவர். அதில் இரண்டாவது ரகம்தான் என் தந்தை. தன் சொந்தக்காசை செலவு செய்து அப்பாவிற்கு ஊற்றிக்கொடுப்பானாம் அந்த நல்லவன். ஆனால் அவன் மதுவைத்தொட மாட்டான். அவனைச்சொல்லி குற்றமென்ன? இவருக்கு எங்கே போனது புத்தி?

என் நண்பர்கள் அவ்வப்போது "வாடா பாருக்கு போலாம்" என்று அழைக்கையில் எல்லாம் "தாராளமாக போய் வாருங்கள். நான் வரவில்லை" என்று கூறுவேன். அதற்கு அவர்கள் "சும்மா வாடா. நாங்க எல்லாரும் என்ன மொடாக்குடிகாரங்களா? லைட்டா குடிப்போம் அவ்ளோதான்" என்று உபதேசம் செய்வார்கள்.  அவர்கள் வீட்டில் குடியடிமை ஒருவன் இல்லாமல் இருக்கும் வரை என் நிலையை உணர வாய்ப்பில்லை.

முதல் சிப்பை உறிஞ்சும் ஒவ்வொருவனும் 'நாம் குடிக்கு அடிமையாகி சுயம் இழந்து குடும்பத்தினரை தீரா இன்னலுக்கு ஆளாக்க வேண்டும்' என்று சபதம் ஏந்தி குடிக்க ஆரம்பிப்பதில்லைதான். ஆனால் ஒரு குடும்பம் சிதைவதற்கான ஆரம்ப புள்ளியே அந்த முதல் 'சிப்'பாக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே தகப்பனால் பட்ட பாட்டை உணர்ந்த ஒருவன் அந்த கருமத்தை எப்படி தொடுவான்???

தொடரும்........
.............................................................

...............................
My other site:
agsivakumar.com
..............................
  


Sunday, October 30, 2011

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்மனித உயிர்களை கொத்து கொத்தாக அள்ளிச்செல்லும் வியாதிகளில் நெஞ்சு வலி, புற்று நோய் எனப்பலவகை உண்டு. ஆனால் நோயாளி(குடிகாரன்) மட்டும் மகிழ்ச்சியில் திளைத்து இருக்க அவன் மனைவி, மக்கள் மட்டும் நித்தம் செத்துப்பிழைக்கும் வண்ணம் விசித்திர வியாதியை பரிசளிக்கும்...மது என்னும் கொடூர ராட்சசன். அரசாண்டவர்கள் மதுவருந்தி கேளிக்கைகள் புரிந்த காலம், நடுத்தர வயதை தாண்டியவர்கள் பெர்மிட் வாங்கி குடித்த காலம், மதுத்தடை அமுலில் இருந்தால் கள்ளச்சாரயத்தை ஆவலுடன் அருந்தி கண்களையும், உயிரையும் பறி கொடுத்த காலம்..எத்துனை...இன்று அரசே தெருவுக்கு தெரு கடைகள் திறந்து மக்களின் தாகசாந்திக்கு பூரண நிவாரணம் செய்யும் காலம் வரை அசுர வளர்ச்சி பெரும் அளவிற்கு வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளதை என் சொல்ல?  

சரளமாக குடிப்போரின் வயது வரம்பு முப்பதாக இறங்கி, பிறகு கல்லூரி வரை பரவிய கொடுமையையும் சில ஆண்டுகளுக்கு முன்பு நாம் கண்டதுண்டு. அப்போது பள்ளி மாணவனாக இருந்த காலம். கல்லூரி மாணவர்கள் சிலர் கூட்டமாக எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் மதுக்கடைக்கு அடிக்கடி செல்வதை கண்டு அதிர்ந்த நாட்கள் பல. நான் சென்னையில் படித்த கல்லூரி ஒன்றில் ஜாதியில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரசு ஸ்காலர்ஷிப் பணம் தருவதுண்டு. அதை வாங்கிய நாள் இரவே கல்லூரி மைதானத்தில் அமர்ந்து குடித்து கும்மாளமிட்டு, மது பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதை பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல டாஸ்மாக் வருகைக்கு பிறகு பள்ளி மாணவர்கள் சர்வ சாதாரணமாக தெருவில் நின்று குடிப்பதை காணும் பாக்கியம் கிடைத்து வருகிறது தற்போது.  

மனதில் பயங்கர சோகத்தை வைத்திருப்பவர்கள், தவறான வழியில் பொருளீட்டிய செல்வச்சீமான்கள், நாள் முழுக்க பாரம் இழுப்பதால் ஏற்படும் உடற்சோர்வை தணிக்க குடிக்கிறோம் என்று தினம் வாங்கும் கூலியை அப்படியே மதுக்கடை உண்டியலில் போடும் பாமரர்கள்..இவர்கள் மட்டுமே பெரும்பாலும் குடிக்கு அடிமையாகிக்கிடந்த வரலாறு போய் இன்று அனைத்து காரணத்திற்கும் பொருந்திப்போய்விட்டது 'தண்ணி அடிக்கலாம்'. குடிகார கணவன்களால் இளம் வயதில் தாலி இழந்து..சொந்தக்காலில் இரவுபகலாக உழைத்து, மகிழ்ச்சி எனும் வார்த்தையை தம் அகராதியில் இருந்து கிழித்து எறிந்துவிட்ட லட்சக்கணக்கான தாய்மார்கள் (என் தாயையும் சேர்த்து) வாழும் எனது புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் பிறக்க என்ன தவம் செய்தேன்? "அட. இதெல்லாம் ஒரு விஷயமா? நீங்க சொல்லித்தான் எங்களுக்கு தெரியணுமா?" என்று சிலர் நினைப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான். 

ஆனால்...

விவரம் தெரிந்த நாள் முதல் தந்தையின் குடிப்பழக்கம் கண்டு குமுறிய இளைஞன், குடிகார தந்தையுடன் வாழும் ஒவ்வொரு இரவையும் பயத்துடன் கழிக்கும் மகள்,அக்கம்பக்கத்தில் பிற பெண்களின் ஏளனப்பார்வைக்கு நித்தமும் ஆளாகும் தாய். இவர்களிடம் கேட்டிருக்கிறீர்களா அந்த வலியின் வீரியத்தை? இதோ...அப்படி நித்தம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சக்கணக்கான அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனான என் வாழ்வில் இருந்து ஒரு சில பக்கங்கள். 

மது எனும் அரக்கனுடன்(என் தந்தைதான்) கடுமையாக போராடி நான் பட்ட அனுபவங்களை வரும் பதிவுகளில் உங்கள் முன் வைக்கிறேன். இதை எழுதி முடித்த பிறகு சில நாட்கள் கழித்தோ அல்லது சில வருடங்கள் கழித்தேனும் கூட எவரோ ஒருவர் அப்பழக்கத்தை நிறுத்த இயலாவிடினும், குறைந்தபட்சம் தன் குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் போதை தலைக்கேற குடிப்பதை குறைத்துக்கொண்டாலே பெருமகிழ்ச்சி அடைவேன். 

தொடரும்..........
......................................................................

.................................
My other site:

................................


  
  

Tuesday, October 18, 2011

மெட்ராஸ்பவன் - மனதில் பட்டவை


                                                                       
பதிவுலக அன்பர்களுக்கு வணக்கம். முக்கியமான விஷயங்களில் வழ வழ  கொழ  கொழ என்று இழுப்பது நமக்கு சரிப்பட்டு வராது. எனவே 'செம பாப்புலர்' வலைத்திரட்டி குறித்த என் நிலைப்பாட்டை விரைவாகவும்,  அதேசமயம் நன்றாக யோசித்துவிட்டுதான் எடுத்திருந்தேன். இம்மாதிரி முடிவை எடுக்க சில நண்பர்கள் தயக்கம் காட்டியதையும் நாம் அறிவோம். நண்பன் என்ற உரிமை இருப்பதால் பிரபாகரனிடம் மட்டும் இன்று அதிகாலை பேசி 'சரியோ தவறோ..அது முக்கியமல்ல. தயவு செய்து உங்கள் நிலைப்பாட்டை தெரிவியுங்கள். அது உங்கள் மீதான தேவையற்ற சந்தேகங்களை களையும்' என்று கூறியதும் இன்று அவர் ஒரு பதிவை இட்டிருந்தார். நன்றி பிரபாகர்.

அந்த திரட்டியின் நிர்வாகம் அளித்த பதிலை இன்று காலையில் படிக்க நேர்ந்தது. சரி எங்கேனும் ஓரிடத்தில் எங்கள் ஆள் செய்ததும் தவறு என்று சொல்லி இருப்பார்கள் என்று பார்த்தேன். இல்லை. அதில் எனக்கு பிடித்த மற்றும் மனதை கொக்கிய வரிகள் சில:

* தங்கள் கருத்துக்களை பதிவுகளில் வெளியிடுவதால் எந்தப்பயனும் இல்லை.
   (சொல்லவே இல்ல)

* அவர் மேல் அனானித்தாக்குதல் நடத்தப்பட்டது (பார்ரா) 

* அவர் கருத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை (யம்ம யம்மா)

* காத்திர பதிவுகளை மட்டுமே வெளியிடுவோம் (மொக்கை மன்னர்கள் கிளீன் போல்ட்)

* ஆரவார பதிவுகளே ஆக்கிரமித்து இருந்தது (மறுபடியும் ஒரு ட..........க்..........கு)

இதுல வேற ஒரு அக்கா அங்க கமன்ட் போட்டு இருக்காங்க. திடீர்னு உங்களுக்கு பெண்கள் மீது அப்படி என்ன பாசம்? இத்தனை நாள் எங்கே போனீர்கள்?  டெர்ரர் கும்மி நண்பர்களே இது உங்களுக்கு நமக்கு தேவைதான். சில மாதங்களுக்கு முன்பு பெண்களுக்கு பிரச்னை தந்த சில நபர்களை கண்டித்து நீங்கள் இட்ட பதிவை அக்கா பார்க்கவில்லை போல. பெண்களை சீண்டி பல்வேறு இன்னல்களை தந்த நபர்களுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்ததற்கு கிடைத்த பலன். நன்றிக்கா! 

இத்தனை கலவரம் நடக்கையில் ஓரமாக அமர்ந்து மிக்சர் சாப்பிட்டு கொண்டிருந்த சில பிதாமக பதிவர்கள் இப்போதுதான் லேசாக சோம்பல் முறித்து வந்துள்ளார்கள். அதுகூட எந்த தரப்பு செய்தது நியாயம் என்று முழுமையாக அறியாமல். அவர்கள் தரப்பு கருத்து 'அத்திரட்டி செய்தது நியாயமே. நீங்கள் செய்தது தவறு' என்று. சோக்கா சொன்னீங்க சார். எங்களை ஆட்டு மந்தைகள் போல் பார்க்கும் மனோபாவம் எப்போதோ உங்கள் மனதில் ஊறிவிட்டதால் அப்படித்தான் சொல்லத்தோன்றும். தன் அபிமான நடிகனை உச்சத்தில் ஏற்றி பார்க்கும் ரசிகனுக்கு அந்த நட்சத்திரம் தரும் மரியாதை போல்தான் இதுவும். இன்னும் அப்பாவி ரசிகர்களாகவே இருக்கும் சில நண்பர்களை கண்டு மனம் நோவதைத்தவிர வேறென்ன செய்ய?

'அத்திரட்டி சார்பாக அறிவிப்பு வரும். அதுவரை காத்திருப்போம். அவசரம் வேண்டாம்' என சில நண்பர்கள் இருந்தனர். ஆனால் அத்திரட்டி விளக்கம் தந்த பின்னும் மௌனம் நீடிக்கிறது. அது தனி மனித உரிமை. ஆனாலும் தயவு செய்து மனசாட்சியை சற்று திறந்து பாருங்கள். தங்கள் பதிவுகளில் பாசமாக வந்து கருத்திட்டு உங்களை உற்சாகப்படுத்திய அதே ஆட்டு மந்தைதான் தற்போது வேறுபக்கமும் நிற்கிறது. நீங்கள் மட்டும் மதில்மேல் பூனையாக? விசித்திரமான உலகம்.....

இஸ்லாம் குறித்து அந்த நபர் தவறாக சொன்ன வார்த்தைகளுக்கு ஒரு நபர் ஒத்து ஊதி உள்ளார். அதாவது 'சாந்தியும் சமாதானமும்' எனும் சொல்லை இஸ்லாமியர்கள் எப்போது தமக்கு சொந்தமாக்கி கொண்டார்கள்?' என்று கேட்கிறார். நம்மள கலாய்ச்சிட்டாராம். அய்யா டூமா கோலி..... நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது தெரியுமா?  'ஐ லவ் யூ ரஸ்னா' என்று விளம்பரம் செய்வோரை பார்த்து 'டேய்..நீ எப்படி சொல்லலாம். உகாண்டாவில் ரஸ்னா எனும் பெண்ணிற்கு ஏற்கனவே என் லவ்ஸை ஜொள்ளிவிட்டேன்' என்று வம்புக்கு போவது போல் உள்ளது. 'ஐ லவ் யூ ரஸ்னா' என்றால் அது ரஸ்னா கம்பனிக்கு மட்டும்தான் பொருந்தும். இஸ்லாம் மக்களை காரணமின்றி சீண்டினால் அதைக்கண்டு கொள்ளாமல் இருக்கும் இந்துவாக இருக்க  நான் விரும்பவில்லை. மத வெறியை ஒதுக்கி விட்டு நல்ல இதயங்களை தேடும் இந்து, கிறித்துவ மற்றும் பிற மதம் சார்ந்த நண்பர்களும் இதை ஆமோதிப்பார்கள் என நம்புகிறேன். நடந்ததை கூர்மையாக கவனித்த (ஒரிஜினல்)கடவுள் மறுப்பாளர்களும்  மதம் தாண்டி இங்கு யார் செய்தது சரி என்று அறிவார்கள் என்பதும் நமக்கு தெரியும். 

பதிவர்கள் எழுதும் எழுத்தின் தரம் கொண்டே அவர்களுக்குள் போட்டி வைக்க வேண்டுமே தவிர அதை விடுத்து ஹிட்சை வைத்து மட்டுமே டாப் 50, 20/20 மற்றும் மகுடம் சூட்டல் சரியல்ல என்பது என் கருத்து. ஆயிரக்கணக்கானோர்  எழுதுகிறார்கள். அதை எப்படி தரம் பிரிப்பது என்று சொல்வது சரியாக படவில்லை. ஆனால் வேறு வழியில்லை. ஆஸ்கர் விருது, உலகின் சிறந்த விளையாட்டு வீரர் விருது, சிறந்த புகைப்பட கலைஞர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வழங்கி வரும் நிர்வாகிகள் மற்றும் நீதிபதிகளுக்கு இல்லாத மண்டை குடைச்சலா?  ஆனால் இங்கு அத்தனை சிரமம் இருக்காது. ஏனெனில் காப்பி பேஸ்ட், மொக்கை, ஆரவார பதிவு, சீண்டல் பதிவு போன்றவற்றை பில்டர் செய்தாலே உங்களுக்கு மிஞ்சப்போவது வெகு சில காத்திரப்பதிவுகளே. So it will be very easy to choose the BEST. அப்படி தேர்ந்து எடுத்தாலும் அதையும் குறைகூற ஒரு கூட்டம் உண்டு என சொல்லலாம். அதுவும் உண்மைதான். ஆஸ்கார், தேசிய விருது கமிட்டி சந்திக்காத விமர்சனங்களா? அப்படி அதுவும் பிரச்னை என்றால் கிண்டி ரேஸை தமிழக அரசு ஸ்டாப் செய்தது போல முண்டி அடிக்கும் ரேஸை நீங்கள் முன்பே நிறுத்தி இருந்தால் பிரச்னை வந்திருக்க வாய்ப்பே இல்லை. 

அர்த்தமற்ற ரேஸ் சமாச்சாரங்கள் அந்த திரட்டியில் இருந்து நீங்கும் வரை, அதை விட முக்கியமாக தற்போது விலகி இருக்கும் நடுநிலையான நண்பர்கள் நல்ல முடிவுக்கு வரும் வரை நான் என்றும் விலகியே இருப்பேன். நாங்கள் விலகுவதால் உங்களுக்கு நயா பைசா நஷ்டமில்லை. அதேபோல்தான் எங்களுக்கும். ஏன்னா....இந்த டீலிங் எங்களுக்கு பிடிச்சி இருக்கு.

ஆமா..நானும் கேக்கனும்னு நெனச்சேன்..'அவசரப்பட்டு ஏன் இப்படி செஞ்சீங்க? பாத்தீங்களா அவங்க எப்படி நேர்மையா பதில் சொல்லி இருக்காங்க' அப்டின்னு அட்வைஸ் சொல்றீங்களே..இன்னாபா இது. இருந்துட்டு போவுது. போங்கய்யா.  வீட்டுக்கு போனா அம்மா, பொண்டாட்டி, புள்ளைங்களோட சண்ட, வேல செய்ற எடத்துல எப்படா நாலு காசு அதிகம் கிடைக்கும்னு ஏங்குது மண்ட. விக்கிற விலைவாசில அவன் அவன் ரோட்ல 'மிலிட்டரி படத்துல சத்யராஜை பாத்ததும் ரமேஷ் கண்ணா கைய ஆட்டிட்டு மார்க்கமான நடந்து போற மாதிரி' திரிஞ்சிகிட்டு இருக்கான். இதுல நாங்க வெலகி இருக்கறது என்னமோ தேசியப்பேரழிவு மாதிரி சீன் காட்டாதீங்க. வர்ட்டா!
..............................................................................................


சரி சரி..டென்சனை குறைக்கலாம் வாங்க:.........................................................................................

.............................
My other site:
agsivakumar.com
............................Monday, October 17, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (10/17/11)மௌன கீதங்கள்:

செய்தி:  சொந்த ஊர் ஆலமரத்தடியில் ஒருவாரத்திற்கு அண்ணா ஹசாரே மவுன விரதம்.

                                                               
.........................................................................................

ஆடிப்பெருக்கு:

செய்தி: இம்மாத இறுதியில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை தொடப்போகிறதாம். இதனால் வேலை இல்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதென சர்வே தெரிவிக்கிறது. 

போன அஞ்சி வருசத்துல கரண்ட் கட் பண்ணாம இருந்துருந்தா இந்த நெலம வந்துருக்குமா? இதுல வேற மேடம் சொல்லி இருக்காங்க. இன்னும் ஒரு வருஷம் கரண்ட் கட் தொடருமாம். அடுத்த வருஷம் பூமில நிக்க எடம் பத்தாம நிஜமாவே ஒத்தக்கால்ல நின்னுதான் சண்ட போடணும் போல.   
.................................................................................

ஓர் இரவு:  

நேற்று இரவு இண்டியன் ருபீ எனும் மலையாளப்படத்தை அண்ணன் கே.ஆர்.பி. உடன் பார்த்தேன். தியேட்டரில் பார்த்த முதல் மலையாளப்படம் என்பது முக்கிய செய்தி. ரியல் எஸ்டேட் பிசினசை மையமாக வைத்து படம் பண்ணி உள்ளார்கள். நடிப்பு: ப்ரித்விராஜ், திலகன். தயாரிப்பு: ப்ரித்விராஜ், சந்தோஷ் சிவன். ஹீரோயின் ரீமா கல்லிங்கல். என்னா கண்ணுப்பா. இரண்டாம் பாதி விறுவிறுப்பாக இருந்தது. சீசன்ஸ் தியேட்டர் மலையாள மக்களால் நிரம்பி வழிந்தது. சுமாரான ஜோக்குக்கு கூட எக்ஸ்ட்ரா சவுண்ட் குடுத்து சிரித்தனர். விஜய்யின் வேலாயுதம் ட்ரைலர் போட்டதும் செம ஆரவாரம். படத்தில் கூட விஜய் டி.வி.யில் வருவது போல் ஒரு காட்சி. அதற்கும் ஆர்ப்பரித்தனர். வேலாயுதம் தமிழ்ல ஹிட்டோ இல்லையோ கேரளால அமோகமா போகும் போல. 

என்னை ஏன் கூப்பிடவில்லை என்று புதிய பதிவர் கேபிள் சங்கர் மிரட்டியதால் அவருக்கு ஒரு டிக்கட் எடுக்க முயன்றும் முடியவில்லை. கடைசியில்  Saheb biwi aur ganster எனும் ஹிந்திப்படம் புக் செய்துவிட்டு எதிரில் இருக்கும் சிக்ஸ் டிகிரீஸ் தியேட்டருக்குள் நுழைந்தார், எங்களுக்கு சாபம் விட்டுக்கொண்டே: "நீங்க பாக்குற படம் மொக்கையா இருக்கணும்". அதான் கிட்டத்தட்ட நடந்தது. வெளியே வந்து பார்த்தால் "நான் பார்த்த ஹிந்திப்படம் சூப்பர்" என்று காண்டை கிளப்பினார். நல்லவர்களை ஆண்டவன் லேசா சோதிப்பான். அசர மாட்டோம்.
......................................................................................

வந்தாளே மகராசி: 

                                                                    
போர்ட்லான்ட்(USA) நகரில் சமீபத்தில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அடுத்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் இந்தியாவின் சேர்ந்த கிருஷ்ணா பூனியா. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற 59.50 மீட்டர் தூரம் வட்டு எறிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இவர் 61.12 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்து உள்ளார். இந்தியா சார்பாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெரும் ஆறாவது அத்லெட் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
................................................................................................

இனி பொறுப்பதில்லை:


                                                                         
உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற நமது சிங்கம் ஜே. கே. ரித்தீஷ் எம்.பி.யின் காரை எதிரிகள் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். கண்ணீர் இல்லையா? கடையடைப்பு இல்லையா? அய்யகோ. ஓ..எதிரிகளே, எங்கள் தலை பார்ப்பதற்கு 'டம்ளருக்குள் நீச்சல் அடிப்பவர்' போல தோன்றலாம்.  கோபம் வந்தால் இரண்டு தோள்பட்டையிலும் தலா நான்கு ஸ்கார்பியோ கார்களை ஏந்தி உங்கள் முகத்தில் விட்டெறிவார் என எச்சரிக்கிறோம். ஜாக்ரத!
..................................................................................................... 

துள்ளுவதோ இளமை:

'உண்மை. உலகத்தரத்துடன்' என்று பறைசாற்றிக்கொண்டு வந்திருக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சில சொதப்பல்கள் நடந்து வருகின்றன. இங்கிலாந்து அணி என்பதற்கு பதில் இங்கிலந்து போன்ற சொற்பிழைகள், பெண் செய்திவாசிப்பாளர்களுக்கு போடப்படும் ஓவர் மேக்கப்(சரண்யா சிஸ்டர் முகத்துல பவுடரை கொஞ்சம் கம்மி பண்ணுங்கப்பா), சற்று பதட்டத்துடன் பேசும் இளம் நிருபர்கள் போன்றவற்றை சொல்லலாம். உலகத்தரம் என்று    சொல்லிக்கொள்வதால் இந்த விஷயங்களை சரி செய்தால் நன்று. தொலைக்காட்சியின் பெயர் 'புதிய தலைமுறை'என்பதற்காக செய்தி வாசிக்கும் பெண்கள் புடவையே கட்டக்கூடாதா? சும்மா கேட்டேன்.    
....................................................................................

எத்தன்:

எங்கள் வீட்டருகே இருக்கும் கம்யூனிஸ்ட் தோழர் இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டி இடுகிறார். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரும் தேர்தலில் நின்று நின்று தோற்று தோற்று போகிறார். இந்த வாரம் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு ஒருவர் அண்ணனுக்கு ஆதரவு கேட்டு மைக்கை கடித்தார்..."சுமார் நாற்பது ஆண்டு(?) காலமாக நமது பகுதியில் அடிப்படை பிரச்னைகளை சரி செய்து வரும் தோழருக்கு" என்று (பப்)படம் காட்டினார். பொய் பேசலாம். ஏக்கர் கணக்குல எல்லாம் பேசக்கூடாது செகப்பு சட்ட.
...................................................................................

கீழ்வானம் சிவக்கும்:


இந்த தீபாவளிக்காவது கேப்டன் டி.வி.யில் விருதகிரி போடுவார்களா என்று பேராவலுடன் காத்திருக்கும் கோடான கோடி தெற்காசிய, ஐரோப்பா மக்களை ஏமாற்ற முயல்வது மனதை கவ்வுகிறது. சன்ல எந்திரன் போட்டாக்கூட என் படத்த இப்போதைக்கு போட மாட்டேன் என்று பந்தா செய்வது சரியல்ல தலைவா.
....................................................................................

நெஞ்சம் மறப்பதில்லை:

'வசூல் ராஜா' கமல்: "இன்னாடா..ஆஸ்காரா குடுக்கறாங்க. இப்பிடி நடிக்கற?"

செய்தி: போலீஸ் அரெஸ்ட் என்றதும் நெஞ்சுவலி என்று கூறி ஆஸ்பிட்டலில் அண்ணன் எடியூரப்பா தானே தவழ்ந்து போய் படுத்துக்கொண்டார்.
...........................................................................................
  
தேன்மழை:

வடக்கில் மட்டுமல்லாது சென்னையிலும் செம ஹிட் ஆன 'ஷாருக்'கின் தில் தோ பாகல் ஹை படத்தில் வரும் சூப்பர் பாடல். லொக்கேஷன், இசை, லதா மங்கேஷ்கரின் எவர்க்ரீன் வாய்ஸ் என அனைத்தும் அசத்தல்.  முழுசா ஒரு தரம் கேட்டுப்பாருங்க:
................................................................................................................
My other site:

agsivakumar.com
.....................................


Friday, October 14, 2011

பன்றி - ஒரு பார்வை


                                                                
இருப்பதிலேயே மட்டமான ஜீவராசியான மனிதனை அடித்துக்கொள்ள/கொல்ல எதுவுமில்லை. எந்த ஒரு விலங்கினமும் சக ஜீவனை பார்த்து 'அடச்சீ...மனிதனே' என்று ஏசுவதும் இல்லை. ஆனால் ஒவ்வொரு விலங்கின் மனதும் அவ்வார்த்தையை சொல்லத்துடிக்கும் என்பது உண்மையே. ஆனால் மனிதன் மட்டும் சக மனிதனை 'நாயே' என்றும்..இன்னும் கீழ்த்தரமாக 'பன்றி' என்றும் அழைத்து தன் கோபத்தை போக்கிக்கொள்கிறான்.பாவம். மனிதக்கழிவுகளை அகற்றி தன்னாலான தொண்டை செய்து அதற்கு வெகுமானத்தையும் பல்வேறு வழிகளில் பெற்றுக்கொள்கின்றன பன்றிகள்.  

வீட்டுப்பன்றிகளின் அறிவியல் பெயர் Sus scrofa domesticus ஆகும். பன்றிகள் நல்லதோர் சமூக விலங்கென்றும், அவை நாய்களை விட புத்திசாலிகள் என்றும் செய்திகள் உண்டு. Domestic pigs அதாவது சமூக பன்னி அரிதாக மட்டுமே aggressive ஆக நடந்து கொள்ளுமாம். உள்ளூர் சாக்கடைகளில் திரியும் பன்றிகளைப்பார்த்து அருவருப்பு பட்டே பழகிப்போன மக்களுக்கு பன்றி வளர்ப்பு குறித்த அச்சம் வருவது இயற்கையே. ஆனால் வெண்பன்றி வளர்ப்பது சிறந்ததாம். நம் நாட்டில் வெண்பன்றி இறைச்சியை உண்பது சமீப காலமாக பிரபலம் அடைந்து வருகிறது. எனவே வெண்பன்றியை வளர்த்து நல்ல லாபத்தை ஈட்டி வருகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.  சென்னையில் கூட இதன் கறிக்கு செம டிமாண்டாம். மழை மற்றும் குளிர் காலங்களில் பன்றிக்காய்ச்சலின் பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அச்சம் தெரிவிக்கிறார்கள் இந்திய மருத்துவர்கள்.

           
வெண் பன்றி வளர்ப்பு பற்றி மேலும் அறிய கீழே கிளிக்கவும்:

.                                                                   
பன்றி காய்ச்சலில் கடுமையாக அவதிப்படும் நோயாளிகள் உடனே படிக்க:


பன்றிக் காய்ச்சல் குறித்த பன்னி (Funny) வீடியோ:


பன்றி வளர்ப்பு எனும் புத்தகத்தை சிவகுமார் எழுதி இருக்கிறார். ஆன்லைனில் விற்பனைக்கு உள்ள அப்புத்தகத்திற்கான லிங்க்:


மரண தண்டனைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மக்கள், பன்றிகளை கொல்வதை பார்த்தால் நிச்சயம் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வார்கள். இந்தவித சித்ரவதைகளின் பிரதிபலிப்பாகத்தான் ஆங்காங்கே  உருவாகி இருக்கிறது பன்றிக்காயச்சல். சர்வதேச அளவில் நமது வர்த்தகம் மட்டும் உலகமயமாக்கப்படவில்லை. பன்றி காய்ச்சலும், கொள்ளை நோய்களும் உலகமயமாக்கப்பட்டு வருகின்றன. 
    பன்றி குறித்த பதிவை பொறுமையுடன் படித்த அன்பர்களுக்கு நன்றி.
........................................................................       


                                                                

Wednesday, October 12, 2011

இண்டிப்ளாக்கர் சந்திப்பு - ஒன் மோர் போஸ்ட்


                                                                   
சென்ற ஞாயிறு அன்று நடந்த இண்டி ப்ளாக்கர் சந்திப்பு குறித்த சர்ச்சை இன்னும் சொயட்டி சொயட்டி அடித்துக்கொண்டு இருப்பதால், எனது கருத்தை சொல்லியே தீர வேண்டிய நிலைக்கு 'ஆள்' ஆகி இருக்கிறேன். நல்லவேளை நான் சிந்தனை சிற்பி/பிரபல பதிவர்/முடிசூடா மன்னன் போன்ற 'வாங்கடா வட்டத்த போட்டு நின்னுக்கிடுவோம்' சர்க்கிளில் சிக்காத வழிப்போக்கன் என்பதால் இழப்பதற்கு ஒரு புண்ணாக்கும் இல்லை. 

சனிக்கிழமை வரை இண்டி ப்ளாக்கர் என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது. பிரபல பதிவர்கள் சிலர் விவரத்தை கூறி அந்த சந்திப்பில் பங்குபெற என் பெயரை பதிவு செய்யுமாறு கால் சுண்டு விரலை இழுத்துப்பிடித்து மன்றாடி கேட்டுக்கொண்டதால்(Believe Me) ஆவன செய்தேன். நிகழ்ச்சியும் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஓரிரு அழகிய தங்கைகள் என்னிடம் பேசியது மகிழ்வை தந்த சில நிமிடங்களில் சங்கர் நாராயணன் எனும் புது பதிவர் ஏதோ ரவுசு விட்டுக்கொண்டிருக்க அவரை சுற்றி சென்னை தமிழ்ப்பதிவர்களும் அணைகட்ட, என்ன என்று எட்டிப்பார்த்தால் நீங்கள் ஏற்கனவே படித்து டயர்ட் ஆகி மீண்டும் படித்த மேட்டர் நடந்து கொண்டு இருந்தது. எனவே அப்படியே ட்ரிபிள்  ஜம்ப் அடித்து நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். 

'உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்'!!  பலே  வெள்ளையத்தேவா! இந்த சந்திப்பு குறித்து நண்பர் யுவகிருஷ்ணா ஒரு ட்ரைலர் காண்பித்தார். அதை பிரபாகரன் பதிவின் மூலம் காணும் வாய்ப்பு கிட்டியது: அதற்கான லிங்க்:


இந்த சந்திப்பிற்கு அச்சாரம் போட்ட பதிவாக இது இருந்ததில் மாற்றுக்கருத்து இல்லை என்பதும், யுவா அதை நகைச்சுவை உணர்வோடு மட்டுமே எழுதி இருப்பார் என்பதும் அவரை பற்றி அறிந்தவர்களுக்கு தெரிய வாய்ப்புண்டு. ஆனால் மைனாரிட்டி மக்களுக்கு(வெகுஜனங்கள் எல்லாம் ஏற்கனவே பிரபல பதிவர்களின் பால்லோயர்கள் என்பதால்) அது எப்படி போய்ச்சேரும் என்பதை உணராமல் எழுதி இருந்தது அன்லக்கியே லக்கி.

நாங்கள்(சந்தேகமே இல்லாமல் வெகு சுமாரான பதிவர்கள்தான்) தமிழில் எழுதுவதை அவர்கள்(ஆங்கிலம் பேசும் மேன்மக்கள்)பார்க்க வாய்ப்பில்லையாம். அப்படியே நைசாக பார்த்தாலும் நம் பதிவுகளை  பெரிதாக கண்டுகொள்ளப்போவதில்லையாம். எங்கிருந்து வருகிறது இந்த ஆணவம் அல்லது சக பதிவனை அர்த்தமின்றி சாடும் மனப்பான்மை? அவர்கள் பார்க்க வேண்டும் என்று எண்ணியா இத்தனை பேர் பதிவெழுத ஆரம்பித்தனர்? நட்சத்திர ஓட்டலில் நிகழ்ச்சி நடத்தியதற்கு வேண்டுமானால் உங்கள் கண்ணில் அவர்கள் மேன்மக்களாக தெரியலாம். அதற்காக தமிழ் பதிவர்களை இப்படி இழிவாக பேச எப்படி மனம் வந்தது? அவர்கள் கண்டுகொள்ளாததால் நஷ்டம் நன்றாக எழுதும் பதிவர்களுக்கல்ல. சிறப்பாக எழுதும் தமிழ்ப் பதிவர்களின் பட்டியல் உங்களுக்கு எத்தனை வேண்டும்? சொல்லுங்கள். அள்ளித்தர நாங்கள் தயார்.     

அதாகப்பட்டது தமிழில் தொழில்நுட்பம் தெரிந்த பதிவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லவே இல்லையாம். தொழில்நுட்பம் குறித்து சிறப்பாக பதிவு எழுதுவதோடு நில்லாமல், சக பதிவர்கள் உதவி கேட்டால் மறுக்காமல் ஆலோசனை வழங்கிவரும் சகோதரர்களை பற்றி நீங்கள் அறியாவிட்டால் அது யார் தவறு? சாம்பிள் பார்க்க வேண்டுமெனில் கீழே கிளிக்கவும்:


இது போல் ஏகப்பட்ட உதவிகளை செய்துவரும் தொழில்நுட்ப அறிவுடைய தமிழ்ப்பதிவர்களுக்கு (ஸ்)பெசல் சல்யூட். 

தமிழ் பதிவர்களுக்கு உதவுவதற்கு முன்பு எவ்வகையில் உதவி வேண்டும் என்று ஆலோசனை செய்தார்களா? 1000 ரூபாயாகவே இருந்தாலும் அதை உங்கள் அனுமதி இன்றி பாக்கெட்டில் வைத்துவிட்டு யாசகமாக  வைத்துக்கொள் என்று ஒருவன் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?  ஈழத்தமிழன், சிங்கப்பூர், மலேசியா தமிழன் என யாராக இருந்தாலும் அவர்கள்  உதவியே கேட்காத பட்சத்தில் பாசக்கார பய ஒருவன் தானாக முன்வந்து 'இட்லியை பெனஞ்சி அடிடா' என்று அன்பு காட்டினால் உள்ளூர ஒரு சந்தேகம் வந்தே தீரும். அது மாதிரிதான் இதுவும். 

கேபிள் அண்ணாத்தை இதை 'இந்திய வரலாற்றில் முதல் முறையாக' செய்யவில்லையே. எங்கு அநியாயம் நடந்தாலும் 'அந்நியன்' அம்பி போல 'ஆஸ்க்'காவதாரம் எடுப்பது ஜகஜம்தானே. அவருக்கு மனதில் பட்டதை கேட்டார். சபை நாகரீகம் இல்லை என்றும், தாழ்வு மனப்பான்மை என்றும் சவுண்டு வேறு. ஸ்டார் ஹோட்டலையும், நுனிநாக்கு இங்கிலீஷ் பிரஜைகளையும் கண்டு சில தோழர்களுக்கு வேண்டுமானால் Inferiority complex  
வந்திருக்கலாம். அது எல்லாருக்கும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பணத்தை இறைத்தால் ஸ்டார் ஓட்டல் ஓனர்களுக்கு பில்கேட்சும், பிளேடு பக்கிரியும் ஒன்றுதான். அங்கிருந்த ஆங்கில வலைப்பதிவர்கள் தமிழ் பதிவர்களை கோமாளிகளாக பார்த்தார்கள் என்ற தவறான தகவலை தந்து யாரை ஏமாற்றப்பார்க்கிறீர்கள்? நாம் அனைவரும் அந்த சம்பவம் நடக்கையில் நின்ற இடம் சுவற்றோரம். சற்று தூரத்தில் இருந்த ஆங்கில வலைப்பதிவர்கள் ஏதோ சலசலப்பு என்று எண்ணி நம்பக்கம் பார்த்தார்களே ஒழிய பலருக்கு அது குறித்த அசல் நிலவரம் தெரியவே இல்லை. பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கலாம். சோற்றுப்பருக்கைக்குள் மறைக்க பார்க்கிறீர்களே நண்பா.

'நான் மட்டுமே அத்தாரிட்டி. நான்தாண்டா சின்ன பகவதி' என்கிற இறுமாப்பில் கேபிள் பேசவே இல்லை. அது அவரது இயல்பு. நரம்பு முறுக்கேறும் சமயம் அதை அடக்கிக்கொண்டு முறுக்கு தின்னாமல், ஆன் தி ஸ்பாட்டில் கதக்களி ஆடியதில் தவறென்ன?  ஒருவேளை கேபிள் அத்தாரிட்டி ஆகி விடுவாரோ என்கிற பயமா? அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனெனில் நம்மைப்பொறுத்தவரை நாமே நம்பர் ஒன் பதிவர் என்று ஆளாளுக்கு பட்டாபிஷேகம் செய்துகொண்டதால் இங்கு மன்னர்கள் மட்டுமே. அடிமைகள் சிக்க வாய்ப்பே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில் கேபிள் வானத்துக்கும், பூமிக்கும்(200 அடி போர் போட்டு) தைய தக்க என்று குதித்தார் என்றும் அதே சமயம் இண்டிப்ளாக்கர் நண்பர் அமைதி காத்தார் என்று அவருக்கு ISO சான்று வேறு வழங்கி உள்ளனர். தமிழ்ப்பதிவர்கள் கேட்ட கேள்விகள் நியாயமாக இருந்ததால் அவர் அதை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதை ஏன் நீங்கள் எழுதவில்லை????????

அனைத்திலும் மிக முக்கியமாக, அந்த சர்ச்சை ஓய்ந்த பிறகு வட்டமாக அமர்ந்து அதே இண்டிப்ளாக்கர் நண்பருடன் கேபிள், கார்க்கி மற்றும் பிற நண்பர்கள் சகஜமாக உரையாடி பல தகவல்களை பரிமாறியதை அருகிலேயே அமர்ந்து பார்த்த முக்கிய சாட்சியே நீங்கள்தானே யுவா? அந்த கிளைமாக்ஸ் காட்சியை உங்கள் பதிவில் வெளியிடாமல் வெட்டி எறிந்தது எந்தவகையில் நியாயம்?????????????????????????????????????????????????????????????

பிரம்மாண்ட ஏசி அறை கூட்டம் மட்டுமே உங்களுக்கு ஒழுங்கு செய்யப்பட்டது என்று தோன்றினால் அதை ஒன்றும் செய்ய இயலாது. 'எல்லாத்தையும் பொத்திக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்' என்று அவர்களின் தூதராக நீங்கள் சொன்னால் அதை சிரமேற்கொண்டு செய்ய இது அரசு தர்பார் அல்ல. அடுத்த இண்டிப்ளாக்கர் சந்திப்பிற்கு இப்படிப்பட்டவர்கள் வர வேண்டாம் என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை.முதலில் இந்த அத்தாரிட்டி மனப்பான்மையை விட்டொழியுங்கள். 

டாட்டா தனது பொருட்களை விளம்பரப்படுத்திக்கொள்ள நமக்கு தரும் மறைமுக ஊதியம்தான் அந்த டீயும், டீ சர்ட்டும். ஓசியில் குடுக்க அவர்கள் என்ன கேனையர்களா?   'டீ குடி, டீ சர்ட் பிடி' என்று அடுத்த இண்டிப்ளாக்கர் சந்திப்பிற்கு ஒருவேளை நீங்கள் அழைப்பு விடுத்தாலும்(!) வருவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. வராதே என்று சொல்ல எந்த ராசாக்களுக்கும் அதிகாரமும் இல்லை. 


கூகுள் பஸ்ஸில் சமீபத்தில் யுவகிருஷ்ணா: 


'அய்யய்யோ.. தமிழனை அவமானப்படுத்திட்டாங்க'  எனும் தலைப்பிற்கு போட்ட படம் நாகரீகமான செயலா? நடுநிலையாளர்கள் பதில் சொல்லட்டும். இனி நாகரீகமாக நடந்து கொள்வது குறித்து உபதேசம் செய்யும் முன் அதை நீங்கள் தயவு கூர்ந்து பாலோ செய்யவும் நண்பரே.    


அய்யகோ...தமிழ்ப்பதிவர்கள் மத்தியில் ஏன் இப்படி ஒரு பூகம்பம். இனி அன்னாரது அசத்தல் காவியங்கள் வெளிவராமல் போய்விடுமோ என்று குலைநடுங்க வேண்டாம் பேரன்புடையீரே. ஏனெனில் உண்மையாகவே சிறந்த படைப்புகளை தரும் தமிழ்ப்பதிவர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் தங்கள் பணிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் சந்தேகமில்லாமல் தமிழ்ப்பதிவுலகின் நம்பர் ஒன். அவர்களை ஊக்குவித்து தமிழ்ப்பதிவுலகை மேலும் சிறக்க செய்யுங்கள்.

ஆங்....முக்கியமான விஷயம். பதிவிற்கு தலைப்பு வைக்கையில் 'செருப்பால் அடிப்போம்' போன்ற வார்த்தைகளை பிரயோகித்து பட்டையை கிளப்பவும். அப்படி நாகரீகமாக எழுதினால்தான் பிறமொழி பிளாக்கர்கள் உங்களை கண்டு கொள்வார்கள். அச்சான்றோர் குலம் உங்களை ஏறெடுத்து பார்க்காவிடில் நாளை காலை பெட்ரோல் போட காசு இல்லாமலும், தொட்டுக்க அப்பளம் இல்லாமலும் பஞ்சத்தில் அலைய வேண்டிய இக்கட்டான நிலை வரும். அந்த இடத்தில் இருந்து தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்திற்காக இந்தப்பதிவை எழுதித்தொலைக்க வேண்டி இருந்தது. அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல நீ தொலைஞ்சி போ என்று சொல்வது கேட்கிறது. ரைட்டு. இட்ஸ் டைம் டு அப்பீட்டு.
.........................................................................


மேலே கேட்ட கேள்விகளுக்கு பிரபல பதிவரிடம் இருந்து நியாயமான பதில் வரும் என்ற நப்பாசையுடன் காத்திருக்கும் பிஸ்கோத்து பதிவன். 
.........................................................................


........................................
My other site:
agsivakumar.com
......................................

நண்பர்களுக்கு நான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்பும் விஷயம்(கமன்ட் மாடரேஷன்), சில புது மாப்பிள்ளைகளுக்காக மறுக்கா மறுக்கா சொல்ல வேண்டி உள்ளது. நான் பதிவு எழுத ஆரம்பித்தது முதல் இதுவரை நாயகிகளின் கவர்ச்சிப்படங்கள் மற்றும் அசிங்கமான வார்த்தைகளை உபயோகப்படுத்தியது இல்லை. இனியும் அவ்வாறே. ஆனால் பின்னூட்டம் இடுகையில் சில வெத்து வேட்டு மாப்பிள்ளைகள் அசிங்கமான வார்த்தைகளை போடுவதால் அதை தவிர்க்கவே இப்படி செய்ய வேண்டி உள்ளது. ஒரு தரம் தாழ்ந்த கமண்டிற்காக, பிற அன்பர்கள் முகம் சுளிக்க வேண்டிய நிலை வருவதை தவிர்க்கவே இந்த மாடரேஷன். இதுவரை இரண்டே இரண்டு கமண்ட்டுகளை மட்டுமே டெலிட்  செய்துள்ளேன். அவை இரண்டும் மிகக்கேவலமான கெட்ட வார்த்தைகள். மற்ற  அனைத்தையும் வெளியிட்டு இருக்கிறேன். 


அந்த வெண்ணைகளுக்கு தெரிந்த வார்த்தைகளை பேச எங்களுக்கும் தெரியும். இடம், பொருள், ஏவல், வவ்வால் கருதி அடக்கி வாசிக்கிறோம். அவ்வளவே. அதை மீறியும் அட்டை கத்தியை சொழட்டியே தீர வேண்டும் என எகிறும் அசகாயசூரர்கள் தாரளமாக madrasminnal@gmail.com எனும் இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களை தருகிறேன். போனில் அல்லது நேரில் உங்கள் டகுல் பாட்சா வேலைகளை தாராளமாக காட்டலாம். மற்றபடி எந்த தொண்ணைக்கும் பயந்து கமன்ட் மாடரேஷன் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி டயர்ட் ஆகிட்டேன். 
...........................................................................Monday, October 10, 2011

ஸ்பெஷல் மீல்ஸ்(10/10/11)நூறாவது நாள்: 


..................................................................................

ருத்ர தாண்டவம்:  

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவில் எந்த (ஏ)மாற்றமும் இல்லை என்று காங் திட்டவட்டமாக கூறி விட்டதால் நாம் பேரழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோமே என்று பிரதான கட்சிகளின் தலைவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனராம். 'காங்'கின் முடிவை மறுபரிசீலனை செய்ய சொல்லி வற்புறுத்த ச.மூ.பவனுக்கு இதர கட்சி தலைகள் பேராசையுடன் புறப்பட எத்தனித்தாலும் மாற்று வேஷ்டி வாங்கும் வரை அந்த ரிஸ்க்கை எடுக்க தயாராக இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. எத்தன நாள் முதுகுல சவாரி செஞ்சீங்க. இப்ப வாங்க ஒண்டிக்கு ஒண்டி. 

'சும்மா கிடந்த சங்கை ஊதி விட்டாய். சிவனேன்னு கிடந்தவனை சீண்டி விட்டாய்'
.................................................................

குத்து: 

                                                                       
அஜர்பெய்ஜானில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக சாம்பியன்ஷிப் பாக்சிங் போட்டியில் அரை இறுதி வரை சென்று போராடி தோற்றுள்ளார் இந்தியாவின்  விகாஸ் க்ரிஷன். இதன் மூலம் வெண்கல பதக்கம் மட்டுமே கிடைத்தாலும் லைஸ்ராம், ஜெய்பகவான், மனோஜ்குமார் ஆகியோருடன் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் விகாஸ். இவருக்கு வயது 19 மட்டுமே. ஒலிம்பிக்கில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துவோம்!
.....................................................................................

வியாபாரி:

ஒலி, ஒளி அமைப்பு போன்ற விஷயங்களில் சென்னை தியேட்டர்களின் ராஜா  சத்யம் என்பது சத்யம் என்றாலும், உணவு பொருட்கள் விற்பதில் செப்படி வித்தை செய்யும் யுத்தியை கடைபிடிப்பது சரியல்ல. 'கோக்'கை ஸ்மால்(400ml),மீடியம்(650ml) மற்றும் லார்ஜ்(1000ml) என்று விற்கின்றனர். இவை அனைத்தும் Fountain வகையை சார்ந்தவை(பட்டனை அமுக்கினால் கொட்டும்). நான் தனியாக படம் பார்க்க போகையில் ஸ்மால் கோக் கேட்டால் சில சமயம் இல்லை என்று சொல்வார்கள். மீடியம் மற்றும் லார்ஜை நம் தலையில் கட்டும் டெக்குனிக்கு. இதை ஒரு நாள் கேட்க வேண்டும் என எண்ணியதுண்டு. 

சமீபத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிட்டியது. நான் "ஸ்மால் கோக்" என்றதும் "இல்லை சார்" என்றார் பணியாள். நான் "ஏன் இல்லை? மிஷினில் மூன்று பட்டன்கள் உள்ளன. அதில் மீடியம்,லார்ஜ் கொட்டும்போது ஸ்மால் கொட்டாதா? அதற்கான பட்டன் மட்டும் வேலை செய்யவில்லையா? அல்லது ஸ்மால் கோக்கிற்கான பேப்பர் கப் தீர்ந்துவிட்டதா? அப்படி என்றால் மீடியம் பேப்பர் கப்பில் ஸ்மால் கோக்கை நிரப்புங்கள். கப்பிற்கான பணத்தை வேண்டும் என்றாலும் தருகிறேன்" என்றேன். தலைவர் பதில் பேசாமல் அடுத்த நிமிடமே ஸ்மால் கோக்கை எடுத்து வந்தார். நாங்களும் பொங்குவோம்ல!
....................................................................................

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு:

காப்பி அடித்த படங்கள் என்று உறுதியாக தெரிந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பது என் கொள்கை. முன்பதிவு செய்தபின் அல்லது படம் பார்த்து விட்டு வந்த பிறகு காப்பி படம் என்று பதிவர்கள் வாயிலாக தெரிய வருகையில் வருந்துவதுண்டு. லேட்டஸ்ட் உதாரணம்: முரண். எனவே நான் அடுத்து தவிர்க்க போகும் படங்களில் ஒன்று வேலாயுதம். Assassins Creed எனும் கேமில் இருக்கும் ஸ்டில்லை உருவி விஜய் போஸ் குடுத்து இருப்பது ஊர்ஜிதம் ஆகி இருப்பதால் நான் எஸ்கேப். பார்க்க போகும் அன்பர்கள்  அனைவருக்கும் இனிய வேலாயுத பூஜை வாழ்த்துகள்!!
....................................................................................  

ஒளிவிளக்கு:

நித்தம் ஒரு மணிநேர பவர்கட்டை அனுபவித்து வரும் தமிழர்களில் நானும் ஒருவனாக இருப்பது கண்ணை கட்டுகிறது. எங்க ஏரியாவில் மாலை 3-4 கட். சும்மா சொல்லக்கூடாது... 'டாண்' என்று மூன்று மணிக்கு கட் செய்து தங்கள் கடமை உணர்ச்சியை காட்டுகிறார்கள் மின்சார கண்ணாக்கள். அதுவும் பல மாதங்களாக குறி தவறாமல். இதே டீயை எல்லா அரசு அலுவலகங்களிலும் ஆற்றினால் இந்தியா அடுத்த வாரமே அமெரிக்காவை ஓவர்டேக் செய்து மெகா வல்லரசாக வாய்ப்புகள் அதிகம். ஆவன  'ஜெ'ய்வாங்களா? 
......................................................................................

எங்கேயும் எப்போதும்: 

செய்தி: அமெரிக்காவில் வேலை இன்றி 4.5 மில்லியன் மக்கள் அவதி: 


...................................................................................    

தூள்:

கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி தள்ளுபடி சென்னை தி.நகரில் மறுபடியும் . மேலும் விவரம் அறிய:

பத்ரி 
..............................................................................                                                                  

புரியாத புதிர்: 

பிரபலமான வலைதிரட்டியான இன்ட்லி அண்மையில் செய்த மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சி?  விரைவில் இவற்றை சரி செய்து முன்பு போல தெளிவாக இயங்கினால் நன்றாக இருக்கும். தமிழ்மணத்தின் சமீபத்திய மாற்றங்களால் அதன் புகழ் மேலும் அதிகரித்துள்ளது என்பதும் கண்கூடு. உடான்சும் முன்னேறி வரும் வேளையில் இன்ட்லி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யப்போகிறதோ?  பார்க்கலாம். 
...................................................................................

மயக்கம் என்ன? 

செய்தி: தான் பத்தாவது பரீட்சை பாஸ் செய்ய வேறு ஆளை தேர்வறைக்கு அனுப்பிய புதுவை கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு.

எல்லாம் போச்சா? இனிமே  சக அரசியல் தோழர்கள் உங்கள  பாத்து இதத்தான சொல்ல போறாங்க:

"நீங்க பத்தாவது பெயிலுண்ணே. நாங்க ஏழாவது பாஸுண்ணே. இப்ப சொல்லுங்க. பாஸு பெருசா? பெயிலு பெருசா?".
...........................................................................................


தாலாட்டு:

என் அபிமான பாடகர் ஜேசுதாசின் தேனினுமினிய குரலில்.........   


........................................................................................


சமீபத்தில் எழுதியது:

போஸ்டர் அடிக்கலாம் வாங்க!  

.....................................
My other site:
agsivakumar.com
.....................................
      
                                                                 

Saturday, October 8, 2011

வேலூர் மாவட்டம்                                                                    
பீர் போலீஸ், போக்கிரி போலீஸ், 'நாங்க மொத்தம் நாலு பேர்' நாங்களும் போலீஸ் என்று டிசைன் டிசைனாக நாம் பார்க்காத போலீஸா? எல்லாத்துக்கும் மேலாக மே மாத வெயிலிலும் நீண்ட 'கோட்'டை போட்டுக்கொண்டு சில்லி வேலை செய்யும் தேசத்துரோக மூட்டைப்பூச்சிகளை கொல்லும் நவீன மிஷினாக கன கெம்பீரமாக உலாத்தும் 'கேப்டன்' போலீஸ். அந்த வம்சாவழியில் புதிதாக ட்யூட்டிக்கு வந்திருப்பவர்தான் இந்த வேலூர் போலீஸ். நேர்மையான அதிகாரி நந்தாவை கடமை ஆற்றவிடாமல் லந்து செய்யும் அரசியல்வாதிகள். அவர்களை நம்ம ஆளு எப்படி பழிதீர்க்கிறார் என்பதே கதை. ஆனா ஒண்ணு பேபி. இந்த மாதிரி கதை இருக்குறவரை தமிழ் சினிமாவை யாரும் அசச்சிக்க முடியாது. அசச்சிக்க முடியாது.  

ஏன் வேலூர் மாவட்டம் என்று கேட்டதற்கு "மதுரையில் குஷ்பு இட்லிக்கு தொட்டுக்கொள்ளும் தேங்காய் சட்னியை தவிர எல்லாத்தையும் சொழட்டி சொழட்டி சக டைரடக்கர்ஸ் படமாக்கிவிட்டதால்....ஒரு மாற்றத்திற்கு வேலூர்" என்றார் இயக்குனர்.  அதுவும் சர்தான்.  போலீஸ் ரோல் என்றாலே DTS எபக்டில் உறுமியே ஆக வேண்டும் எனும் ஆகம விதியை உடைத்த வெகு சிலரில் நந்தாவும் சேர்ந்தது பாராட்ட வேண்டிய விஷயம். ஓவர் சீன் போடாத உயர் அதிகாரியாக நந்தா நடித்திருப்பார் என்று நம்பி சென்றவர்களை ஏமாற்றவில்லை. கூலான பெர்பாமன்சை தந்து இருக்கிறார். அதேபோல பூர்ணா, அழகம்பெருமாள், ஸ்ரீமன் ஆகியோரும் அளவாக நடித்து உள்ளனர்.

சந்தானம் வரும் முதல் காட்சியில் சிங்கம் சூர்யாவை செமையாக ஓட்டி இருக்கிறார். அதற்குப்பின் சிங்கமுத்துவுடன் அவர் செய்யும் டமாசு எல்லாம் சுமார்தான். மயில்சாமி...சிரிப்பே வரல. போலீஸ் கெட்டப்பில் நடிப்பவர்கள் எல்லாம் 'நான் சைலேந்திரபாபு சார்கிட்ட யோசனை கேட்டேன்' என்று அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் ட்ரைனிங் செய்யும்போது தாஜ்மகாலை சுற்றி காதல் செய்தால் டபுள் பிரமோசன் கிடைக்கும் என்று சைலேந்திரபாபு சார் சொன்னதாக நினைவில்லை. நந்தாவை பார்த்த உடனேயே பூர்ணாவுக்கு பூத்து குலுங்குது லவ்வு. மாநில அமைச்சராக வருபவர் பார்ப்பதற்கு மத்திய அமைச்சர் போல இருக்கிறார். நடிப்பு சுத்தம்.

                                                                   
சுந்தர் சி பாபுவின் இசை படத்தின் காட்சிகளை முந்திக்கொண்டு ஓடுகிறது. நமக்கு பரபரப்பை கூட்டுகிறாராம். என்னைக்காட்டி கொடுக்காமல் இருந்தால் உனக்கு 100 கோடி தருகிறேன் என்று நந்தாவிடம் சொல்கிறார் அமைச்சர். நம்பிட்டோம். படத்தில் என்னை அசர வைத்த காட்சி: அடியாள் ஒருவனை துரத்தி காய்கறி கடைகள் இருக்கும் இடத்திற்குள் நுழைகிறார் நந்தா. அந்த இடமெங்கும் மக்கள் சத்தம். இப்போது அவனை நந்தா கண்டுபிடிக்க வேண்டும். தலைவர் என்ன செய்கிறார் தெரியுமா? கண்ணை மூடிக்கொண்டு பிரெயினை ஓப்பன் செய்கிறார். மனதை ஒருமுகப்படுத்தி எதையோ யோசிக்கிறார். அடியாள் மூச்சு விடும் சப்தம் மட்டும் பில்டர் செய்யப்பட்டு அவர் காதில் விழ...சரியாக எதிரியைப்பிடிக்கிறார். அவ்வ்!

படத்தின் கடைசிப்பாடல் வழக்கம்போல ஒரு ஐட்டம் நம்பர். போலீஸ் படம் என்று ஆனபிறகு குத்தாட்ட அம்மணியை மட்டும் சரியாக தேர்வு செய்யாமல் இருப்பாரா இயக்குனர்? அதனால் தொப்பை போட்ட பெண் ஒருவரை களத்தில் இறக்கி நம்மை கிளுகிளுக்க வைக்கிறார். வழக்கமாக நம்ம போலீஸ் ஹீரோக்கள் அடித்தால் அந்தரத்தில் பறந்தவாறு ஏரோப்ளேனில் போய் இடித்துக்கொள்ளும் அவல நிலை ஸ்டன்ட்மேன் யாருக்கும் இப்படத்தில் இல்லாதது பெரிய ரிலீப். போலீஸ் கேரக்டர் என்றாலே ACP போஸ்டிங்தான் வேணும் என்று இயக்குனர்களின் ஷார்ட்ஸ் நாடாவை பிடித்து தொங்கியவாறு அலம்பல் செய்யும் ஸ்டார்களுக்கு மத்தியில் குடுத்த ASP பதவியை பிரச்னை பண்ணாமல் வாங்கிக்கொண்ட நந்தா வாழ்க. ஏம்பா ஹீரோஸ்..நீங்க ஏன் ஒரு ஐ.ஜி அல்லது  டி.ஜி.பி மாதிரி ரோல் எல்லாம் பண்ணக்கூடாது? அப்படி பண்ணா உங்க லட்சியத்துக்கு ஏதாவது இழுக்கு வந்துடுமா? 


வேலூர் மாவட்டம் - நந்தாவின் யதார்த்த நடிப்பிற்காக ஒருமுறை பார்க்கலாம்.  
.....................................................................................

சினிமா போலீஸ் ஒரு பக்கம் இருக்கட்டும். நம்ம ரியல் போலீஸ் வெப்சைட்டையும் கொஞ்சம் பாருங்க:


...................................................................................


எனக்கு பிடித்த ரியல் ஹீரோ: 

                                                            விஜயகுமார் ஐ.பி.எஸ். 
.....................................................................................


..............................
My other site:
..............................


                                                                         

Monday, October 3, 2011

FORCE


                                                                   
'தோஸ்தானா' படத்தில் அபிஷேக்குடன் சேர்ந்து 'அவனா நீ' கேரக்டரில் புகுந்து விளையாடிய ஜான் ஆப்ரஹாமை நீண்ட இடைவெளிக்குப்பின் காணும் வாய்ப்பு. தமிழில் இருந்து ரீமேக் ஆகும் ஹிந்திப்படங்களை காணும் ஆர்வமும் எனக்கு இருப்பதால், ஹிந்தி சிங்கம் பார்த்த பின் இப்போது FORCE. காக்க காக்க படத்தால் இன்ஸ்பயர் ஆகி இயக்கி உள்ளார் நிஷிகாந்த் காமத். இவர் எடுத்த படங்களை இதுவரை பார்க்காவிடினும் மராத்தியில் மெகா ஹிட் ஆன 'டொம்பிவிலி பாஸ்ட்'டின் ரீமேக்கான எவனோ ஒருவன் பார்த்திருக்கிறேன். FORCE ஹீரோயின் ஜெனிலியா, இசை ஹாரிஸ்.  

ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன் நாயகன் ஜான் அளித்த பேட்டியில் "சல்மான், அஜய் தேவ்கன் செய்றதெல்லாம் சினிமாத்தனமான ஆக்சன். இதுல நீங்க பாக்கப்போறதுதான் ரியல். இனிமே ஹிந்தி சினிமால ஆக்சன் ஹீரோன்னா அது நாந்தான்" என்று பில்ட் அப்பை ஏற்றினார். ஆனால் அவர் சொன்ன அளவிற்கு ரியல் ஆக்சன் காட்சிகள் பெரிதாக இல்லை. அதுக்கெல்லாம் என்னைக்குமே ப்ரூஸ்லீ, ஜாக்கிசான் மட்டுந்தான். ஜான், அர்னால்ட் மாதிரி 'பப்பரப்பே' பாடி வைத்திருக்கும் ஆட்கள் எல்லாம் எப்ப குனிஞ்சி வளைஞ்சி சண்ட போட்டுருக்காங்க. நாலு கைக்குத்தல் இல்லனா டுப்பாக்கி வச்சி சுடறது. இதுதான் இவங்ககிட்ட ஸ்டாக் இருக்கும். இதிலும் அவ்வாறே. 

மும்பை,கோவா, பஞ்சாப், குஜராத், இமாசலம்(ஸ்ஸ்ஸ்..) இப்படி நாடு முழுக்க நடக்குற போதைப்பொருள்(ள்) கடத்தலை ஒழித்துக்கட்ட புறப்படுகிறது ஜான் அண்ட் கோ. உடம்பில் கண்ட இடத்தில் எல்லாம் பச்சை குத்திக்கொண்டு நம்ம சரத்குமாரை விட நாலு இன்ச் அதிகமாக விரிந்த மார்புடன் என்ட்ரி தருகிறார் ஜான். முதலில் அவரை ஒதுக்கும் ஜெனீலியா பிறகு காதலை நெஞ்சுக்குள் பதுக்க முடியாமல் பொதுக்கென்று லவ்ஸ் கம்மாயில் இடறி விழுகிறார். சூர்யா, ஜோதிகா காக்க காக்க படத்தில் காட்டும் அழகிய 'ரொமாண்டிக் லுக்'கை  ஜான் ட்ரை கூட செய்யவில்லை. நீதாய்யா அக்மார்க் எந்திரன். ஜெனீலியாவின் துள்ளல் நடிப்பால் முதல் பாதி தப்பிக்கிறது. 

                                                                         
ஒரு சண்டைக்காட்சியில் பைக்கை கையால் தூக்கி MRF மாடல் போல போஸ் குடுக்கிறார் ஹீரோ. அது நம்பும்படிதான் இருக்கிறது. ஆனால் பைக்கை தூக்கி எதிரி மேல் வீசும்போது கிராபிக்ஸ் காட்டிக்கொடுக்கிறது. முதலில் சற்று டல்லடித்தாலும்,  இன்டர்வலுக்கு பின் FORCE ஆக நகர்கிறது. சூர்யாவுடன் நடித்த இளம்போலீஸ் க்ரூப் ரேஞ்சிற்கு இதில் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. ஹாரிஸ் இசை..சுத்தம். 'உயிரின் உயிரே' அப்படியே இங்கு ரிப்பீட். அந்தப்பாடலில் 1% கூட லவ் ரியாக்சன் காட்டாமல் ஜெனீலியாவை ஒரு பக்கம் ஆடவிட்டு 'க்வாபோ க்வாபோ' என்று தனியாக கதறுகிறார் ஜான். அந்தக்கண்கொள்ளா காட்சியை பாக்கணுமா? இந்த லிங்க்கை அழுத்துங்க:

'ஓ மகாசியா ஓஹி யாஹோ...ஓஹி யாஹோ...' 

 மற்ற எல்லாப்பாடல்களும் ஏனோ தானோ. 'ஒரு ஊரில்' பாடலில் வரிகள், இசை, ஜோ என எல்லா அம்சமும் செம ப்ரெஷ் பீலிங்கை தரும். இன்று கேட்டாலும். அதையும் அங்கு தர மறுத்துவிட்டார் ஹாரிஸ்.     

எல்லாம் போகட்டும். அட்லீஸ்ட் ஜீவன் நடித்த ரோலில் யார் நடித்திருப்பது என்று ஆர்வத்துடன் காத்திருந்தால் விஷ்ணு எனும் பாத்திரத்தில் ஒருவர் வருகிறார். ஜான் ஆப்ரஹாமின் மினியேச்சர் மாதிரி. 'பாண்டியா'வாக பின்னிய ஜீவன் எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். இவர் அந்த அளவிற்கு மனதில் நிற்கவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவும், இவரும் சட்டையை அசட்டையாக கடாசி விட்டு பேர் பாடியுடன் மல்லுக்கு நிற்கின்றனர். நம்ம ஆளு ஜான் உருண்டு திரண்ட முரட்டுப்புலி போல உறும, பாவம் விஷ்ணு. அவருக்கு முன் புனுகுப்பூனையாக காட்சி அளிக்கிறார். நான்கு முறை ஓங்கிக்குத்தி விஷ்ணுவின் யூரின் டேங்க்கை உடைத்து கசாப்புக்கடை ஆட்டை போல கம்பியில் தொங்கவிட்டு 'ஆவ்..ஆவ்' என சில நிமிடங்கள் கர்ஜித்து விட்டு சாந்தி அடைகிறார் ஹீரோ.     

தமிழில் இருந்து ரீமேக் ஆகும் ஆக்சன் படங்களில் இருக்கும் முக்கிய வித்யாசங்கள் நான் பார்த்தவரையில்:

* தமிழ் ஹீரோக்கள் நடிப்பில் பாதியைக்கூட அங்குள்ள ஹீரோக்களால் வெளிப்படுத்த முடியவில்லை. அதேசமயம் இங்குள்ள ஹீரோயிசம் சற்று தூக்கல்தான். சில சமயங்களில் ஓவரும் கூட. ஆனால் அஜய் தேவ்கன்(சிங்கம்) மற்றும் ஜான் ஆப்ரகாம் போன்றவர்கள் கூடுமானவரை அடக்கி வாசிக்கிறார்கள்.

* தமிழ் படங்களில் சின்ன கேரக்டர்கள் கூட மனதில் நிற்கும் வண்ணம் பாத்திரத்தேர்வு இருப்பதுபோல் ஹிந்தியில் இல்லை.

* பொதுவாக தமிழை விட ஹிந்திப்பாடல்கள் கேட்கத்தூண்டும் வகையில் இருக்கும். ஆனால் ரீமேக் என்று எடுத்துக்கொண்டால் பாலிவுட் சொதப்புகிறது.    


FORCE - முரட்டுத்தீனி 
................................................................


.................................
My other site:

agsivakumar.com
.................................


சமீபத்தில் எழுதியது:


.................................
Sunday, October 2, 2011

ஸ்பெஷல் மீல்ஸ் (02/10/11)


ஒரு கல் ஒரு கண்ணாடி:
  

......................................................................

மின்சாரக்கனவு: 

ஆற்காடு அண்ணன் இருக்கையில் நித்தம் பல்க்காக பவரைப்பிடுங்கி கரண்ட் பில்லை கம்மியாக கட்ட வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார். மேடம் வந்த நாளில் இருந்து ஒரு மணி நேரம் மட்டுமே கட் செய்வதால் பில் தொகை கூட ஆரம்பித்துவிட்டது. நம்ம ஆற்றொண்ணா சோகத்தை துடைத்தெறிய ஆந்திர மக்கள் முடிவு செய்துவிட்டனர். தெலுங்கானா போராட்டத்தில் அங்குள்ள நிலக்கரி தொழிலாளிகள் ஐக்கியம் ஆகி ஸ்ட்ரைக் பண்ணி வருகிறார்கள்.   இந்தப்போராட்டம் தொடர்ந்தால் தமிழகத்தில் அடிக்கடி பவர் கட் வருமாம்.  நாம் கரண்ட் பில்லை கம்மியாக கட்டவேண்டும் எனும் அக்கறை பக்கத்து மாநில மக்களுக்கு இருக்கிறது. அந்நல்லெண்ணம்   மேடம் அரசுக்கு இல்லாதது என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு கடும் மன உளைச்சலை தந்துள்ளது. வெளிச்சம் என்று ஒன்று இருந்தால் இருள் இல்லாமலா போகும்? ஜெய் ஆந்திராலு!
....................................................................................

ஆடுகளம்: 

உலகின் மிகப்பிரபலமான பார்முலா ஒன் கார் பந்தயம் இம்மாதம் 30 ஆம் தேதி டில்லி அருகே நோய்டாவில் நடக்கிறது. டிக்கெட் விலை 2,500 முதல் 35,000 வரையாம். வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களை மனதில் கொண்டு கார் பார்க்கிங்(போட்டி நடக்கும் இடத்தில் அல்ல. சற்று தள்ளி) கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளனர். வெறும் 1,500 ரூபாய்தான். 'விர் விர்'ப்பான போட்டியைக்காண தவறாமல் டில்லிக்கு கிளம்புங்கள். போகிற வழியில் பார்லிமெண்டில் மீரா குமார் மேடம் 'சிட் டவுன் ப்ளீஸ். ப்ளீஸ் சிட் டவுன்' என்று சொல்லியும் கேட்காமல் எம்.பி.க்கள் லந்து செய்தால் நறுக்கென்று நாலு கொட்டு கொட்டிவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். 
.................................................................................

பார்வை ஒன்றே போதுமே: (sms) 

வேல்விழி கொண்டு அவள் பார்க்கும் பார்வைக்கு 
எளிதாக அர்த்தம் கண்டு பிடிக்கத்தெரியும் எனக்கு  
அவள் பேசும் வார்த்தைகளின் அர்த்தத்தை மட்டும் 
கண்டுபிடிக்க முடிவதே இல்லை...  
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மூச்சு விடாமே இங்கிலீஷ்லேயே பேசறா மச்சான்.
.............................................................................

பொல்லாதவன்:

பேப்பர் கடை பக்கம் தெரியாம பாக்குறது குத்தமாடா? 

'கனி மொழிக்கு ஜாமீன் கிடைக்குமா?'   

'ரஜினி படத்தில் ஒபாமா வில்லனா?'  

இதையெல்லாம் ஜட்ஜு கிட்டயும், ரஜினி கிட்டயும் கேக்காம செவனேன்னு போற எங்ககிட்ட கேக்குறத தயவு செஞ்சி நிறுத்துங்கன்னு உங்க கால் சுண்டு விரல இழுத்து புடிச்சு கேட்டுக்கறேன்.
..........................................................................................

நானே ராஜா நானே மந்திரி: 

செய்தி: விரைவில் தெலுங்கானா உதயமாகாவிட்டால் கிருஷ்ணா ஆறு ரத்த ஆறாக மாறும் - கே. சந்திரசேகர ராவ்.

.....................................................................................

வறுமையின் நிறம் சிகப்பு:

இந்தியாவில் நகர்புறத்தில் வாழும் ஒருவருக்கு 32 ஓவாயும், நகரம் தாண்டி வாழும் நபருக்கு 26 ஓவாயும் வருமானம் இருந்தால் போதும். அவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களாக  கருதப்படமாட்டார்கள் என திட்டக்குழு கமிஷன் அறிக்கையை தயார் செய்துள்ளது. இந்த அருமையான ஆராய்ச்சியை செய்த மாண்டேக் சிங் அல்வா வாயா..சாரி..அலுவாலியா போன ஜென்மத்தில் ஐசக் நியூட்டனின் ஒன்று விட்ட தம்பி என்பது தற்போது ஊர்ஜிதம் ஆகி உள்ளது. நாளை பிரதமரிடம் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கிறாராம். 
     
ஒரு சின்ன விண்ணப்பம்ணே. அந்த அமௌன்ட்ல கூட ரெண்டு ஓவா சேத்து சொல்லுங்க. அப்பதான் நாடார் கடைல ரப்பர் வாங்கி வறுமைக்கோட்டை வக்கனையா அழிக்க முடியும். ப்ளீஸ்ணே...அண்ணே......
....................................................................................

மெல்லத்திறந்தது கதவு:  

எதிர்க்கட்சி புள்ளிகள் கையில் கவர்மென்ட் ப்ரேஸ்லட்டை(கைவிலங்கு) கட்டி வேனில் ஏத்தும்போதெல்லாம் அவர்களுடைய உள்நாக்கில் மைக்கை சொருகி 'இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?' என்று நிருபர்கள் கேட்கிறார்கள். அதற்கு எல்லாரும் சொல்லும் ஒரே டயலாக்: 'இது பழிவாங்கும் செயல்'. ஆனால் பல பேருக்கு 'ழ' வன்னா தொண்டையோரத்தில் பஞ்சர் ஆகி விடுவதால் 'இது பலி வாங்கும் செயல்' என்றுதான் நம் காதில் விழுகிறது. எப்படியோ.. அர்த்தம் ஒண்ணுதான். அதால மன்னிச்சிட்டோம்.          
.................................................................................... 
                                                                   
வாகை சூட வா:   

துயரங்கள் உன்னை ரவுண்டி கட்டி ரவுசு கட்டுகையில் 
உயரத்தில் இருந்து தொபக்கடீர் என ஓனிக்ஸ் வண்டியில் நீ வீழ்கையில் 

சோகப்பிசாசு உன் உச்சந்தலையில் உறுமி அடித்தாடுகையில் 
ரயில் வரா நேரம் பார்த்து தண்டவாளத்தில் சாய்ந்து கொறட்டை விடுகையில் 

உன்னை ரட்சிக்க ஓடோடி வருவேன் நான்....

பவர் ஸ்டாரும் நானே. யுவர் ஸ்டாரும் நானே:  .........................................

My other site:
.........................................

சமீபத்தில் எழுதியது:


..........................................
   

                                                                           

Saturday, October 1, 2011

வெடி - உலக சினிமாவின் உச்சம்!


                                                                     
அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையுலகை எங்கே தவறான திசைக்கு அழைத்துச்சென்று விடுமோ என்று இதயம் படபடத்த வேளையில் 'யாமிருக்க பயமேன்' என கோடான கோடி தமிழர்களின் மன ரணத்திற்கு  சர்வலோக நிவாரணியாக இந்த வெடிமருந்தை தடவி உள்ளார் பிரபு தேவா. ண்ணா..என்னா படம்ணா!

இப்படத்தின் சிறப்புக்களை பற்றி எப்படி சொல்ல? ஒன்றா இரண்டா? இதுவரை தமிழ் ரசிகர்கள் கண்டிராத காட்சிகளை திரையில் கொண்டுவர அரபிக்கடலின் ஆழத்தில் அமர்ந்து அமைதியாக யோசித்து இருக்கிறார்கள். படம் பார்த்த நொடி முதல் உற்சாகம் பீறிட்டுக்கொண்டே இருப்பதால் இனி பொறுப்பதில்லை. இதோ இதுவரை எவரும் காணா அதிசயக்காட்சிகள்:

* படம் துவங்கியதும் நம் கண்ணில் இந்திய வரைபடத்தை சொருகுகிறார்கள். தூத்துக்குடி, கல்கத்தா என்று நீள்கிறது பட்டியல். ஊர் பெயரை அடிக்கடி போட்டுக்காட்டுவதை இப்போதெல்லாம் அளவுக்கு மீறி செய்கிறார்கள். எந்த ஊரில் எந்த காட்சி எடுத்தனர் என்று யோசிப்பதற்குள் மதுரை, மும்பை, காஷ்மீர் எல்லை, அடையாறு  குறுக்கு சந்து என்று இஷ்டத்திற்கு தவ்விக்கொண்டே இருந்தால் என்னப்பா நியாயம்? வெடியில்  கல்கத்தாதான் கைப்புள்ள. சென்னை என்றால் சென்ட்ரல். கல்கத்தா என்றால்...ஹவுரா. அப்பதான் அது கல்கத்தா என்று நமக்கு தெரியுமாம். 

* நம்பகத்தன்மை எனும் சைத்தானை மரத்தில் கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். முதல் பாதியில் எதையோ தேடி அலைகிறார் விஷால். அவரைத்தேடி அலைகின்றனர் வில்லனின் பொடியாட்கள். யார் இந்த விஷால்? சொல்ல முடியாது. இடைவேளைக்கு முன்னால சொன்னா நீங்க ஓடிருவீங்க. அப்பறம் குளிர்பானம், தேநீர் எல்லாம் விக்காது. அதனால் நீடிக்கிறது மர்மம்.

* 'நான் தமாசு செஞ்சா மட்டும் ஏண்டா சிரிக்க மாட்றீங்க' என்று ஒவ்வொரு படத்திலும் அழும் விவேக்..இங்கும் தனது பயணத்தை தொடர்கிறார். எங்கே செல்லும் இந்தப்பாதை....

* சமீரா ரெட்டியை(ரெட்டி நீங்க படிச்சி வாங்குன பட்டமா?) பார்த்தால் ஒரு துளி கூட காதல் உணர்வு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. நீங்க ஒரு அதிசயப்பிறவி கௌதம். விஷாலை ஏன் காதலிக்கிறோம் என்று தெரியாமல் நடிக்கும் காட்சிகளில் தமிழ் திரைப்பட பெருமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

                                                                 
* 'டேய்..டேய்.டேய்...உன்னை போட்டு தள்ளிருவண்டா' என்று கெட்டவர் சாயாஜி ஊளை இடும் காட்சி உங்களை மிரளச்செய்யும் விதத்தில் படமாக்க பட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. அவருடைய ஆட்கள் எல்லா முறையும் விஷாலிடம் உதை வாங்கி சாவது யாரும் காணா அதிசயம். 'சாகாதுடா..தமிழ்த்திரை ' என நம்பிக்கை உரத்தை ஊட்டுகிறது. 

* எதிரிகளுக்கே தெரியாமல் அவருடைய வண்டியில் போதைப்பொருள் வைத்து அவரை பேக்கு ஆக்கும் காட்சியை பிரபு தேவா முதன் முறை யோசித்து இருப்பது படத்திற்கு 'பக்கா' பலம். 

* யார் இந்த பிரபாகரன்(விஷால்) என்று பீதி எகிறும் வேளையில் இரண்டாம் பாதியில் அவர் ஒரு காவலதிகாரி என்கிற முடிச்சு அவிழோ அவிழ் என்று அவிழ்கிறது. முதல் பாதியில் ஏதோ ஒரு பொறுப்பை சுமந்து கொண்டு சாயாஜியை தேடி முட்டுச்சந்தில் போய் முட்டிக்கொண்டு நமக்கு 'பாதாள சாக்கடையை' திறந்து வைத்திருக்கிறார். 

* பாழடைந்த கட்டிடத்தில் நடக்கும் இறுதிக்காட்சி உலகப்படங்களின் உச்சம்!   விஷாலை பொளந்து கட்டி வாயில் தக்காளி சட்னியை ஊற்றி படுக்க வைக்கிறார் ஷாயாஜி. "அய்யய்யோ..இனி நீதி, நியாயம், தர்மம், சத்தியம் (எல்லாம் வேற வேற) போன்றவற்றை காப்பாற்ற யாருமே இல்லையா" என்று நீங்கள் அலற எண்ணும் ஒரு நொடிக்கு முன்னால் அவரின் தங்கச்சி "அண்ணா......" என்று கதறியவுடனே  ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து திரையரங்கில் யாராவது மிச்சம் இருக்கிறார்களா என்று பார்க்கிறார் விஷால். அப்புறம் என்ன.. கெட்ட பயல்களை வெள்ளாவியில் வைத்து வெளுத்து தள்ளுகிறார்.         

இப்படி பல்வேறு அரிய காட்சிகளை அனாசயமாக படம் பிடித்து உள்ளனர். இருக்கையில் தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் அமராமல் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும் எனும் மருத்துவர்களின் அறிவுரையை சிரமேற்கொண்டு நமக்காக எல்லாப்பாடல்களையும் படுமொக்கையாக போட்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. கடைசி பாடலில் மட்டும் பிரபுதேவாவின் கற்பனை வளம் எட்டிப்பார்க்கிறது. சிறு சிறு விளம்பர பலகைகளில் கிராமத்து மக்களை வைத்து கலக்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒரே ஆறுதல் இப்பாடல் காட்சிகள் மட்டுமே.

ஸ்ரீமன், ஊர்வசி இருவரும் தமாசு செய்து படத்தை கொஞ்சமாவது காப்பாற்ற முயற்சி செய்தாலும்..அவ்வ். 'நான் இருக்குற வரை என் தங்கச்சி அனாதை இல்லடா...............' என்று விஷால் கூவும் காட்சி அவன் இவனில் 'அம்மா..மாவு மாவா வருதும்மா' எனும் வசனத்திற்கு முன் ஒன்றுமே இல்லை. அங்க நிக்கிறார் உக்காருறார் பாலா. என் முன்னிருக்கையில் இருந்த இளைஞர்  ஒருவன் வெறியாகி 'யய்யா' என்று தலை முடியை பிய்த்துக்கொண்டு இருந்ததை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. 

படம் முடிந்ததும் அப்பாவி இளசுகள் சிலர் அரங்கில் சொன்னவை: "வேணும்னே மொக்க படமா கூட்டிட்டு வரியே. என் காசு போச்சேடா". இதே ரீதியில் இன்னும் இரண்டு படங்கள் வந்தால் அந்த படங்களுக்கு அழைத்து வந்த நண்பன் சக நண்பனின் வெறியால் வாயில் வெற்றிலை போட்டுக்கொள்வது உறுதி. உறுதி. உறுதி.  

வெடி - உங்கள் சீட்டுக்கு அடியில்! 
..........................................................................
   

..........................
My other site:
...........................

சமீபத்தில் எழுதியது:

முரண் - விமர்சனம் 
.......................................................Related Posts Plugin for WordPress, Blogger...