CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, September 30, 2011

நான் 'MALE' ஜாதிடா - 2
நான் ஏன் அப்படி சொன்னேன்? இப்படி சொல்வதற்கு குறிப்பிட்ட குலம் அல்லது மதம் சார்ந்த புத்தக வாசிப்பை விட, பெரியோர் சொல்லும் அனுபவக்கதைகளை விட முக்கியமானது நாம் நிஜத்தில் உணர்ந்து தெளிதல். சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த இடத்தில் நடந்த  நிகழ்வுகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். புதிதாக பணியில் அமர்ந்த சமயமது. நான் இருந்த அணியில் வேலை செய்யும் அனைவருக்கும் கடும் வேலைப்பளு. எப்போதும் பரபரப்பாக இயங்கும் நண்பர்கள்.  பொதுவாக முதல் ஓரிரு வாரங்கள் மட்டும் புதுமாப்பிள்ளை போல நம்மை உபசரித்து, அடிக்கடி எழும் சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்  சீனியர்கள். நாட்கள் நகர நகர 'நீயா ஆராய்ச்சி செஞ்சி தப்ப எப்படி திருத்தலாம்னு பாரு' என்று தொங்கலில் விட்டு விடுவார்கள். 

அப்படி ஒரு இக்கட்டான நிலை எனக்கும் வந்தது. சில வேலைகளை எப்படி செய்து முடிப்பது என்று தெரியாமல் மணிக்கணக்கில் மண்டை காய்ந்து கொண்டிருந்தேன். இப்படியே போனால் வேலைக்கு வெடி வைத்து விடுவார்கள் என மனம் மணி அடித்தது. அதை புரிந்து கொண்ட சீனியர் ஒருவர் எனக்கு உதவ ஆரம்பித்தார். படிப்படியாக தவறுகள் குறைந்தன. ஒரு கட்டத்தில் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தேன். ஆனால் அதற்கு அவர் குடுத்த விலை மிக அதிகம். தனது வேலைப்பளு பற்றி கவலைப்படமால் பல வாரங்கள் எனக்கு நீண்ட நேரம் ஒதுக்கி மிகவும் உதவியாக இருந்தார். இதனால் அவர் தனது டார்கெட்டை அடிக்க முடியாமல் திணற ஆரம்பித்தார்.  நிர்வாகம் அவரை எச்சரிக்க தொடங்கியது. அப்போதெல்லாம் என் மனது படபடக்கும். எனக்கு உதவி செய்யப்போய் தன் வேலையை சரிவர செய்ய இயலாமல் இப்படி அவர் அவமானப்பட நேர்கிறதே என்று. எனக்கு உதவி செய்ய அவரைத்தவிர வேறு நபர்கள் இருந்தனர். ஆனால் அவர்களை விட  எனக்கு சுயநலமின்றி உதவி செய்தார் இந்த குறிப்பிட்ட நண்பர்.  

அதுபோலவே இன்னொரு நபரும் வேறொரு புதிய அணிக்கு நான் மாற்றப்பட்ட நேரத்தில் வேலைசார்ந்த சந்தேகங்களை பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். சிலசமயம் உணவு இடைவேளைக்கு கூட செல்லாமல். என்னைப்பொறுத்தவரை அவ்விருவரும் ஆபத்பாந்தவர்கள். பொதுமொழியில் பிராமின்ஸ். இன்னும் சுருக்கி விளித்தால் ஐயர். எனக்கு உதவி செய்ததால் அவர்கள் பெற்றது ஒன்றுமில்லை. இழந்தது அதிகம்.மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்க வேண்டும் எனும் எனது ஸ்திரமான எண்ணத்திற்கு மேலும் வலு சேர்த்தன இத்தகு நிகழ்வுகள்.   ஏன் ஒருசாரார் மட்டும் இன்றும் ஒட்டுமொத்த பிராமணர்களையும் இழிவாக  பேசிவருகிறார்கள்? அவர்களை இழிவு செய்வதில் தமிழ் சினிமா இன்றுவரை பெருந்தொண்டு ஆற்றி வருகிறது என்பதை  மறுக்க இயலுமா?

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவனை பள்ளி கழிப்பறை சுத்தம் செய்ய பணிக்கும் கேடுகெட்ட ஆசிரியனை எந்த செருப்பால் அடிப்பது? இதற்கே இன்னும் விடை கிடைக்காதபோது இந்தியா வல்லரசு ஆகி எதை கிழிக்கும்?
      
                                                                   
நண்பர்களே, எனக்கு நெருக்கமாக இருக்கும் மலையாளி நண்பர் ஒருவரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வப்போது பணிசார்ந்த ஆலோசனைகளை தந்து கொண்டிருக்கும் அன்பான மனிதர். 'இப்படித்தான் முதல்ல இனிக்க இனிக்க பேசுவாங்க. அப்பறம் உனக்கு பம்ப் அடிப்பாங்க' என்று ஒரு குரல் ஒலிக்கலாம். மன்னிக்க வேண்டும். அவரும் நானும் வெவ்வேறு துறையை சார்ந்தவர்கள். ஆனால் இன்றுவரை இனிதாக தொடர்கிறது எங்கள் நட்பு. இன்னொரு வகையறாவை சேர்ந்தவன் நம்மை பிழைக்க விடமாட்டான் என்று சில 'நல்லவர்கள்' மூளைச்சலவை செய்வதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் ஆராயாமல் கண்ணை மூடிக்கொண்டு நம்பப்போகிறோம் நண்பர்களே?

அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு நம் வாழ்வினை மேம்படுத்திக் கொண்டால் என்ன? 'பட்ட மேற்படிப்பு படித்தே தீர வேண்டும். அந்த படிப்பின் துணையுடன் அயலகம் சென்று பொருள் ஈட்ட வேண்டும். சிறுபிராயம் முதலே படிப்பு தவிர இன்னபிற கலைகள் ஒன்றிரண்டை கற்றுக்கொள்ள வேண்டும்'. இவற்றை விடாப்பிடியாக கடைப்பிடித்து வரும் பிராமணர்கள் பற்றி அனைவரும் அறிவோம். அவர்களைப்பார்த்து சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வதில் என்ன தவறு? 

அயலகம் சென்றாலும் கேரளத்தை சேர்ந்த நண்பனை வேலை செய்யுமிடத்தில் கண்டால் முதல் நாளே நட்பு பாராட்டி ஒன்றுபடுவதை மலையாள மக்களிடம் காண்கிறோம். காலை ஆறு மணிக்கு நமது டீக்கடைகள் சோம்பல் முறித்து திறப்பதற்குள், அதிகாலை நான்கு மணிக்கே கடைதிறந்து கல்லா கட்டும் சேட்டனின் சுறுசுறுப்பை கண்கூடாக பார்க்கிறோம். தீப்பெட்டி சைசில் டீக்கடை இருந்தாலும் வெள்ளை டைல்ஸ் போட்டு பளீரென வைத்திருக்கும் நாயர்கள் பலரை நாம் கண்டதில்லையா?  அதுபோல நம்மிடம் இருந்து அவர்களும், அங்கிருந்து நாமும் கற்க வேண்டிய விஷயங்கள் கொட்டிக்கிடக்கையில் எங்கிருந்து வந்து தொலைகிறது இந்த ஜாதி/மத/மொழி வெறி?

'அவர்களை நம்பாதே. நச்சுப்பாம்பினும் கொடியவர்கள்' என்று இந்தக்கணினி யுகத்திலும் இளையோர் நெஞ்சில் விஷம் பாய்ச்சுவதேன் பெரியோர்களே? 

நண்பா..தற்கால பணிச்சூழலில் SURVIVAL OF THE MOST FITTEST எனும் ஜெபச்சொல் மட்டுமே நம் இதயத்தில் ஒலிக்க வேண்டும். மனிதர்களை வர்ணம், மொழி, மதம் அல்லது ஜாதி என்று தரம்பிரித்து பார்த்துக்கொண்டிருந்தால் இலக்கை நோக்கி நீ ஓடுவதென்ன. நடக்கக்கூட இயலாது. 

''இவ்ளோ பேசறியே. முதல்ல நீ என்ன ஜாதின்னு சொல்லுடா?'' என்று கேட்கும் சக சிட்டிசன்களுக்கு இருக்கவே இருக்கிறது அரதப்பழசான, மங்காப்புகழ் வாய்ந்த பஞ்ச்: "ஒலகத்துல இருக்குறது ரெண்டே ஜாதிதான். ஒண்ணு பெண் ஜாதி. இன்னொன்னு ஆண் ஜாதி. அதால நான் MALE ஜாதிடா!!"  

இறுதியாக: 

ஜாதி, மதங்கள் குறித்து ஆயிரக்கணக்கான விளக்கங்கள் நாட்டில் இருப்பினும், ஒரு மனிதனின் செய்கையை வைத்து அவனை பற்றி விமர்சிக்காமல் எடுத்த எடுப்பிலேயே அவனை இனம் பிரித்து பார்க்கும் முட்டாள்தனத்தை மையமாக வைத்தே இப்பதிவை எழுதி உள்ளேன். அதைத்தாண்டியும் நான் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதத்திற்கு கொடி பிடிக்கிறேன் என்று எவரேனும்  எண்ணினால் அது என் தவறல்ல. "அதெல்லாம் நம்ப முடியாது. நீ கண்டிப்பா மலையாளி. அப்டி இல்லனா பிராமின்" என்று சந்தேகப்படும் தாமஸ் ஆல்வா எடிசன்கள் தாரளாமாக இல்லத்திற்கு வந்து என் ஜாதிச்சான்றிதழை உற்று நோக்கலாம். சென்னை உங்களை அன்புடன் அழைக்கிறது.

விசாரணைக்கு/பஞ்சாயத்திற்கு நான் ரெடி:  +91 98416 11301.

மேன்மை தங்கிய பெரியோர்களே, தயவு செய்து இனிவரும் இளைய தலைமுறை சகோதரத்துவத்துடன் முன்னேற வழி செய்யுங்கள். வேற்றுமைத்தீயை பற்றவைத்து குளிர் காய வேண்டாம். அப்படியே நினைத்தாலும் உமக்குள் இருக்கும் பேயை விரட்டி அடிக்க தயங்காது இந்த இளையோர் படை.
.....................................................................................

  
..................................

My other site:

..................................
  

                                                                      

21 comments:

bandhu said...

பிரமாதம்! குடுங்க கையை.. congrats.. நல்லா எழுதியிருக்கீங்க.

நாய் நக்ஸ் said...

Super....super.....

Unknown said...

சிவா இரண்டு பாகங்களையும் படித்தேன், என்னுடைய எண்ண ஓட்டங்களை உங்கள் எழுத்தில் கண்டேன்,இது போன்ற செயலால் நானும் நேரடியாக பாதிக்கப்பட்டுளளதால் புரிந்து கொள்ள முடிகிறது, நானும் சில விசயங்களை பற்றி எழுத வேண்டும், பார்ப்போம்.

rajamelaiyur said...

Kalakkal boss . . Your statement is very true

shortfilmindia.com said...

ஸ்டார் ஆன இந்த வாரத்துக்கு சரியான கட்டுரை. வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்.

MANO நாஞ்சில் மனோ said...

எனக்கும் நிறைய மலையாளி நண்பர்கள் உண்டு, ஆனால் எல்லாரும் அப்படி இல்லையென்றாலும், நம்மை பாண்டி என்று சொல்லி சிறுமை படுத்துகிற நாதாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர், சில சினிமாக்களில் [[மலையாளம்]] இந்த காட்சிகள் இருக்கிறது. அடுத்து தமிழை, தமிழனை நேசிக்கும் மலையாளிகளும் நிறைய இருக்கிறார்கள், இதுக்கு என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்....

! சிவகுமார் ! said...

@ பந்து, ராஜா, NAAI-நக்க்ஸ் மற்றும் கேபிள் சங்கர் அனைவரின் கருத்துக்கும் நன்றி!

! சிவகுமார் ! said...

@ இரவுவானம்

தங்களுடைய பதிவிற்கு காத்திருக்கிறேன்.

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

அண்ணே.. ஒரு பிரிவில் எத்தனை சதவீதம் பேர் நல்லவர்கள் அல்லது கெட்டவர்கள் என்று யோசித்து பழகுவதை விட, தனிப்பட்ட நபரின் செயல்களை வைத்தே ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்பது எனது கருத்து. மலையாளிகள் தமிழர்களை பாண்டி என்று அழைப்பதும், தமிழ் சினிமாக்கள் மலையாள டீக்கடை பெண்களை கொச்சையாக சித்தரிப்பதும் கண்டிக்கத்தக்க செயலே. என்னைப்பொறுத்தவரை முதுகில் குத்தும் இந்தியனை விட தூய நட்புடன் பழகும் பாகிஸ்தானி மேல்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Unknown said...

இருக்கட்டும் நீங்க எந்த ஜாதில திருமணம் செய்கிறீர்கள் என்று பார்ப்போம்

தமிழ்வாசி பிரகாஷ் said...

நல்ல பகிர்வு

செங்கோவி said...

நீங்கள் சொல்வது சரி தான் சிவா...தனிநபரின் நடவடிக்கையை வைத்துத் தான் ஒரு ஆளை முடிவு செய்ய வேண்டுமேயொழிய, அவரது பிறப்பை வைத்து அல்ல.


‘உயர்த்தப்பட்ட’ மக்களிடம் ’தாழ்த்தப்பட்ட’ மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களிடம் உயர்த்தப்பட்ட மக்களும் கற்றுக்கொள்ள நிறையவே உண்டு. இருதரப்பும் கற்று, மேலேறட்டும்.

! சிவகுமார் ! said...

@ ரத்னவேல்

நன்றி ஐயா.

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
இருக்கட்டும் நீங்க எந்த ஜாதில திருமணம் செய்கிறீர்கள் என்று பார்ப்போம்//

அண்ணே...நான் உங்க தம்பி. நேற்று காலையில் நடத்திய திருவிளையாடலை நன்கு அறிவேன். நல்ல சம்மந்தம் அமைந்தால் எங்கள் ஜாதிப்பெண்ணோ அல்லது செவ்வாய் கிரகப்பெண்ணோ..அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்காக தன் அடையாளத்தை தொலைத்து, இரவுபகலாக உழைத்து சமூகத்தில் மனிதனாக உலவ விட்டிருக்கும் என் தாயின் விருப்பத்திற்கு மதிப்பளித்தே திருமண விஷயத்தில் முடிவெடுப்பேன்.

தங்கள் கருத்து என்னைப்பொறுத்தவரை Typical Indian Mindset எனப்படுவதின் பிரதிபலிப்பு என்று தெரிகிறது. உதாரணம்: "நான் ரஜினியின் தீவிர ரசிகன்" என்று சொன்னால் உடனே "அப்ப உனக்கு கமலை பிடிக்காதா?" என்று கேட்டுப்பழகிவிட்டோம்.

என் பதிவின் மையக்கருத்தை நீங்கள் புரிந்துகொள்ளாதது ஆச்சர்யமே!!

! சிவகுமார் ! said...

@ பிரகாஷ்

நன்றி நண்பரே!

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

தங்கள் கருத்துக்கு நன்றி செங்கோவி.

! சிவகுமார் ! said...

This comment has been removed by the author.

RVS said...

நல்ல கட்டுரை சிவா!

ஆண் ஜாதி, பெண் ஜாதின்னு எழுதிட்டீங்க... பொஞ்சாதின்னு எழுதலையே... அதான் செந்தில் கேட்டாரு? ஓ.கே!!!! :-))))))))

muthukumaran said...

sema. kalalittinga thalaivaa

சேக்காளி said...

உங்கள் "MALE" சாதி ஆதிக்க சிந்தனை வன்மையாக கண்டிக்கப் படுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...