CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, September 29, 2011

நான் 'MALE' ஜாதிடா!


எச்சரிக்கை: 

ஜாதி/மொழி/மத/நிறவெறி பிடித்த மிருகங்கள் எல்லாம் யு டர்ன் அடித்து ஓடி விடுங்கள். நெஞ்சில் ஈரமும், தூய எண்ணங்களும் கொண்ட உள்ளங்கள் மட்டுமே நண்பர்களாய் இருத்தல் வேண்டும் என என்னும் இளைஞனின் இதயக்குமுறல் இது. 

                                                                     
நிறம்:
''ஓ மை காட். தமிழ்நாட்ல முக்காவாசி பேர கருப்பாவும், மாநிறமாவும் கலர்   அடிச்சி பூமிக்கு அனுப்பிட்டு,  என்ன மாதிரி ஒரு செட்டை மட்டும் எதுக்கு கொஞ்சம் வெள்ளையா படச்ச" என்று அவ்வப்போது கேட்கத்தோன்றும். ஏனெனில் ரோஸ்/கோதுமை/வெள்ளை உளுவை/செகப்பு ஆகிய நிறங்கள்  தமிழனின் நிறம் அல்ல என்பது சிலரின் அரிய கண்டுபிடிப்பு. என்னை புதிதாக சந்திக்கும் ஆட்கள் பொதுவாக கேட்கும் கேள்வி: "நீங்க பிராமிணா?" "நீங்க சேட்டா?"  "நீங்க முஸ்லிமா?" ஸ்ஸ்ஸ்...எத்தன தடவ சொல்றது: "இல்லீங்க. இல்லீங்க". இந்தக்கேள்விக்கு நான் பதில் சொன்ன உடனே பெட்ரோல் விலை ஒரு ரூபாயாவது குறையும்னா சொல்லுங்க. எத்தனை தடவைன்னாலும் பதில் சொல்றேன். எங்க இருந்துதான் கெளம்பி வர்றாங்களோ....         

ஒருத்தன் வேற ஜாதி, மதம், மொழிய சேந்தவனா இருந்தா போதும். அவன் நல்லவனா கெட்டவனான்னு பகுமானமா பகுத்து அறியாம நக்கல் அடிக்கறது. "இந்த க்ரூப் இப்படித்தான் இருக்கும். உஷாரு" அப்டின்னு கி.மு. 007 ல ஏதோ ஒரு உத்தம ஆத்மா சொல்லிட்டு போனதையே புடிச்சி தொங்கிக்கிட்டு இன்னைக்கி வரைக்கும் உலாத்திட்டு திரியுது ஒரு கூட்டம். What a pity வாத்யாரே!     

மதம்:
என்று ஆறாம் வகுப்பில் சேர்ந்தேனோ அன்றே தூக்கி எறியப்பட்டு விட்டன  ஜாதி/மத/மொழி வேறுபாடுகள். என் முதல் நண்பன் பெயர் முசாதிக் நசீர். அடுத்த சில நாட்களில் எங்களுடன் கைகோர்த்தவன் பெஞ்சமின். நானும் முசாதிக்கும் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பெஞ்சமின் வசதியானவன். பள்ளி முடிந்ததும் நித்தம் ஒரு இளநீர் குடிக்க ஏற்பாடு செய்திருந்தார் அவன் தாயார். கடைக்காரரிடம் வாங்கும் இளநீரில் எங்கள் இருவருக்கும் சமபங்கு தந்துவிட்டுதான் குடிப்பான் அவன். அது போல ஏழாம் வகுப்பு படிக்கையில் புதிதாக BSA SLR சைக்கிளை வாங்கிய நாள் முதல் எங்கள் இருவரையும் ஏற்றி இடைவேளை நேரங்களில் மைதானத்தை சுற்றி வருவான்.

முசாதிக் அந்த இளம் வயதிலேயே ரமலான் நோன்பை கடுமையாக கடைபிடித்தான்.  ''உனக்கு பசிக்காதா? எப்படி தாங்கிக்கொள்கிறாய்?" என அவனை நச்சரிப்பேன். நோன்பிருப்பதற்கான காரணங்களை விளக்கி இஸ்லாம் மதம் குறித்தான அறிமுகத்தை எனக்கு தந்தவன் அவன்.  எங்கள் நட்பு நாளாக நாளாக மேலும் வலுப்பெற ஆரம்பித்தது. வகுப்பாசிரியர்கள் எங்களை அழைத்து அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்: "உங்கள பாத்தா பொறாமையா இருக்குடா. எப்பவும் இப்படியே இருக்கணும்". இன்று வரை அவர்களின் ஆசியுடன் தொடர்கிறது அந்த பந்தம். மதவெறி/மதவேறுபாடு  எனும் விலங்குகளின் பற்களை பிடுங்கி எறிந்தது அந்த நட்பு.

ஜாதி/மொழி: 
தற்போது பத்திரிக்கைகளில் படித்து வரும் அபத்தங்களை கண்டால் அதிர்கிறது இதயம். ஆசிரியர் சற்று அதிகமாக கண்டித்தால் 'ஜாதி பிரச்சினையை கிளப்பி உன்னை காலி செய்து விடுவேன்' என்கிறான் பள்ளி மாணவன். கல்லூரிகளிலும் சில சமயம் வெளிப்படையாக பொங்கி சிதறுகிறது  ஜாதித்தீ. அந்தத்தீ சமீபத்தில் பதிவுலகிலும் கொழுந்துவிட்டு எரிந்தது.

குறிப்பிட்ட குலத்தை சேர்ந்த மக்களையும் அவர் தலைவரையும் ஆபாசமாக வர்ணித்து கிண்டல் செய்கிறார் ஒருவர். அத்தோடு விடாமல் இவர் வெறுக்கும் ஜாதி ஆள் ஒருவரை வம்புக்கு இழுக்கிறார். அவரும் உள்ளே புக சண்டை உச்ச கட்டத்தை அடைகிறது. இருவரும் மாறி மாறி நாகரீக எல்லை கடந்து வசைபாடினாலும் ஒரு வசனத்தை மட்டும் நேக்காக சொருகத்தவறவில்லை:"எனக்கு ஜாதி வெறியெல்லாம் கிடையாது. எல்லாரும் எனக்கு சமமே". அட ஆண்டவா! கேக்குறவன் கேனப்பயலா இருந்தா கொக்க கோலாவுல எலுமிச்சை சாறு வடியுமாம். தீவிரவாதம், வெப்பமயம், வாகன விபத்து, சுற்றுச்சூழல் சீர்கேடு  என்று உயிருக்கு பாதுகாப்பு இல்லாத யுகத்தில் நம் அடுத்த தலைமுறைக்கு எதை மிச்சம் வைக்கப்போகிறோம் என்று நிச்சயம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சணத்தில் ஜாதிவெறி ஒன்றுதான் பாக்கி. போங்கடா நொன்னைங்களா.
                                                                   
                                                                                                                    
தற்போதைய கணினி யுகத்திலும் சக மனிதனை குலம் அல்லது மொழியை  வைத்து வேறுபடுத்தி பிரிக்க எண்ணும் அரக்கர்களை அண்டவிடாமல் இருப்பது சற்று கடினமாகத்தான் இருக்கிறது என்னைப்போன்ற இளையவர்களுக்கு. குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில், இருக்கவே இருக்கிறது பேமசான டயலாக்: "மச்சி. பிராமிண் பசங்ககிட்டயும், கேரளா பசங்ககிட்டயும் உஷாரா இரு. காரியம் ஆவனுன்னா உன்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க".  இது என்னடா இப்படி அலாரம் அடிக்கரானுங்க என்று நான் ஆரம்பத்தில் சற்று குழம்பினேன். "என்னடா இப்படி சொல்ற. நான் பழகுன பிராமிண், கேரளா ஆளுங்கள்ள நல்லவங்க இருக்காங்களே. அப்படியெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு சார்பு மக்களை  குத்தம் கண்டு புடிச்சி பழகுறது எனக்கு புடிக்காது". நான் ஏன் அப்படி சொன்னேன்?

நாளை தொடரும்.......
    
......................................................................................................


..................................................
My other Site:

.................................................
12 comments:

சசிகுமார் said...

//சுற்றுச்சூழல் சீர்கேடு என்று உயிருக்கு பாதுகாப்பு இல்லாத யுகத்தில் நம் அடுத்த தலைமுறைக்கு எதை மிச்சம் வைக்கப்போகிறோம் என்று நிச்சயம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சணத்தில் ஜாதிவெறி ஒன்றுதான் பாக்கி. போங்கடா நொன்னைங்களா. //

நெத்தியடி மாப்ள

சசிகுமார் said...

//நான் பதில் சொன்ன உடனே பெட்ரோல் விலை ஒரு ரூபாயாவது குறையும்னா சொல்லுங்க. //

மன்மோகன் நெனச்சாலே பெட்ரோல் விலையை குறைக்க முடியாது ஹா ஹா

நாய் நக்ஸ் said...

Nall aathangam .....

கோகுல் said...

சிலர் சாதியை ஆயுதமாக எடுத்துக்கொண்டு மிரட்டுகின்றனர்.
ஒழுங்கா வேலை செய்யலன்னு கேள்வி கேட்டா, நான் இந்த ஜாதிங்கரதனாலன்னு தான என்னை கேள்வி கேக்குறிங்க?அப்படிங்கறாங்க.
இந்த அனுபவம் என் நண்பனுக்கு நேர்ந்தது.

கொடுக்கற காசுக்கு வேலை பாக்கலன்னா கண்டுக்க கூடாதுன்னு எந்த ஜாதியில யாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்காங்களா தெரியல.

நாய் நக்ஸ் said...

Nanga female aatharippor
jathi.....he...he...

rajamelaiyur said...

Super post . . Kalakkal

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் காரம், பதிவில் சாரம்

சென்னை பித்தன் said...

சாதி இரண்டொழிய வேறில்லை!

சக்தி கல்வி மையம் said...

சுற்றுச்சூழல் சீர்கேடு என்று உயிருக்கு பாதுகாப்பு இல்லாத யுகத்தில் நம் அடுத்த தலைமுறைக்கு எதை மிச்சம் வைக்கப்போகிறோம் என்று நிச்சயம் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கும் லட்சணத்தில் ஜாதிவெறி ஒன்றுதான் பாக்கி. போங்கடா நொன்னைங்களா///

சாட்டையடி.. சவுக்கடி...

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

பிரிவினையை ஊக்குவிப்போருக்குச் சொற்களால் சாட்டையடி கொடுத்திருக்கிறீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சபாஷ் சிவகுமார். பலர் தொடத் தயங்கும் சப்ஜெக்ட். பின்னியெடுத்திருக்கீங்க...!

Related Posts Plugin for WordPress, Blogger...