CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, September 27, 2011

நான் இன்னும் நல்லா பட்ச்சி இருக்லாம்


                                                                     
திரும்பி பாக்ரதுக்குள்ள அம்பது வயசு ஆயிடுச்சி. மொத மொதோ ரோட்டோரமா வெறும் இட்லி, தோசை போட்டு வயத்த கழுவுக்கினு கெடந்தேன். அப்பல்லாம் போலீசுஆளுங்கட்சி ஆளுங்களுக்கு மொய் வக்கிறது போதாதுன்னு பொர்க்கி பசங்க வேற எப்பயாச்சும் தண்ணிய போட்டுட்டு வந்து ஓசில துன்ட்டு போற கொடுமையையும் தாங்கிட்டு கெடந்தேன். வெலைய ஓவரா ஏத்தி கோலிக்குண்டு சைசுல இட்லியும், முறுக்குன கர்சீப் ஆட்டமா பொரோட்டாவும் போட்டு ஊர ஏமாத்தாம ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு நல்ல டிபன் போட்டதால வந்தவங்களே அடிக்கடி வந்து சாப்ட்டு போனாங்க. அதால நிக்குற தள்ளுவண்டில ஏதோ என் வாழ்க்க வண்டி சுமாரா ஓடிச்சி. இப்ப ஒருவழியா சின்னதா ஓட்டல தெறந்து கல்லால குந்திக்கினு கெடக்கறேன். 

என்னதான் கைல காசு பொளங்குனாலும் நம்மளும் நல்லா பட்ச்சி    இருக்கலாமோன்னு அப்பப்ப மனசு அரிச்சிக்கினே கெடக்குது. ஏழுக்கு மேல படிக்க முட்ல. மிஞ்சிப்போனா தினத்தந்தி படிப்பேன். அவ்ளோதான். சிறுசா இர்க்க சொல்லோ உஸ்கோலுக்கு போவாம ஏரியா பசங்களோட சேந்துக்குனு தேட்டரு, பீச்சுன்னு சுத்துனா எங்க உருப்பட்றது. இப்ப அத நெனச்சாலே டென்சனா கீதுப்பா. ஒரு வாட்டி இப்படித்தான்..என் கடைய புதுசா தொறக்க சொல்லோ சாப்பாட்டு ஐட்டம் பேர பெயிண்ட்ல எழுத சொல்லி ஒரு பயகிட்ட வேள கொடுத்தேன். அந்தப்பயல 'காஞ்ச மொளகா கார சட்னி'ன்னு எழுதுடான்னு சொன்னா கம்னாட்டி 'கஞ்சா மொளகா கார சட்னி'ன்னு கிறுக்கி வச்சிட்டான். ரெகுலரா கடைக்கு வர்ற ஏட்டு என்ன தனியா இஸ்துக்குனு போயி செம துருவு துருவிட்டாறு. வெளக்கம் சொல்லி எட்டு ஓசி பொரோட்டாவ அவர் தலைல கட்டி அனுப்புறதுக்குள்ள..யம்மா! 

வூட்டாண்ட கீர செந்திலு பய ஒரு தரம் போன்பில் கட்ற எடத்துல என்ன பாத்துட்டு கேட்டான்: "என்னண்ணா ரொம்ப நேரமா வர்சைல நிக்கறீங்க. கடைல கூட்டம் வர்ற நேரமாச்சே. இதையெல்லாம் ஆன்லைன்ல கட்டி நேரத்த மிச்சப்படுத்துங்கண்ணே". நான் சொன்னேன்: "நல்லா பாரு செந்திலு. நான் ஆண் லைன்ல தான் நிக்கறேன்". அல்லாரும் சிர்ச்சாங்க. ஒண்ணியும் புர்ல எனுக்கு. அப்பால என்ன தனியா வல்சிக்கினு போயி செந்திலு சொன்னான்: "ண்ணா. ஆன்லைன்னா கம்ப்யூட்டர்லயே பில்லு கட்றது. மொபைல் பில்லு, ட்ரெய்ன், தியேட்டர் டிக்கிட்டு அல்லாத்தயும் க்யூல மணிக்கணக்குல நிக்காம பத்து நிமிசத்துல கம்ப்யூட்டர்ல கட்டிக்கலாம்". கேக்க நல்லாத்தான் இந்துச்சி. அப்டியே கம்ப்யூட்டர் வாங்குனாலும் எப்படி வேல செய்றதுன்னு தெரியாது. காலா காலத்துல நாலு வார்த்த சேத்து பட்சி இருந்தா பிஸ்னசையும் சூப்பரா கொண்டு போய்ருக்கலாம். எம்புள்ள பட்ச்சி மேல வர்ட்டும்னு காத்துனு கீரேன்.     

அது இன்னாவோ தெர்ல..உஸ்கோல்ல இங்கிலீசு பாடத்த கண்டாலே வவுத்த கலக்கும். மத்த எல்லாத்துலயும் கவுரதையா 25-க்கு மேலயாச்சும் வாங்கிருவேன். இங்கிலீசுல மட்டும் ரெட்டப்பட மார்க் வாங்க நான் பட்ட பாடு இருக்கே. ஏன் கேக்குற. எர்ம மாடு வய்சாயி கல்யாணம் பண்ணதுக்கு அப்ரமேட்டு கூட சொம்மா இருக்குற நேரத்துல தமிழு, இங்கிலீசு ரெண்டுத்தையும் சுமாராவாவது கத்துனு இருந்துருக்கலாம். கடைய மூடிட்டு வூட்ல போயி டி.வி.ல போட்ட படத்தையே பத்தாவது தபா போட்டாலும் புதுசா பாக் மாதிரி பல்ல இளிச்சிக்கினு பாக்றது இல்லாகாட்டி ரோட்ல நின்னுக்கினு எவங்கிட்டயாவது கட்சிங்கள பத்தி ஆத்துதுன்னு பொழுத வேஸ்ட் பண்ணிட்டேன்.

பையன் சுரேஷு இப்பதான் டெண்த்து  பச்சினு இருக்கான். அவன் தலை எடுத்துட்டான்னா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். டி.வி. பாக்க சொல்லோ அப்பப்போ இங்கிலீசு சேனல் பக்கமா ஊர்வலம் போவேன். அதுல ஓட்டல் பத்தி ப்ரோக்ராம் போட சொல்லோ அவுங்க இன்னா சொல்றாங்கன்னு ஒண்ணியும் புரியாது. நம்ம தொழில் சம்மந்தமா போட்ற மேட்டர கூட புரிஞ்சிக்க முடியலியேன்னு மனசு அட்சிக்கும். எப்டியாச்சும் எம்மவன ரொம்ப நல்லா படிக்க வச்சி டக்கரா கொண்டு வந்துரனும். என்ன மாதிரி இல்லாம நாலு பேத்துக்கு நல்லா பாடம் சொல்லி குடுக்குற அளவுக்கு எம்மவன் ஒசந்தான்னா அப்பால அவனான்டயே நானும் கொஞ்சம் கத்துக்கலாம்னு காத்துருக்கேன்.  ஏதோ மனசுல இருந்தத ஒன்னான்ட சொல்லனும்னு தோணிச்சி.


நீயும் நம்ம கேசுன்னா சொம்மா இர்க்க சொல்லோ நாலு வார்த்த சேத்து கத்துக்கண்ணே. வர்ட்டா!!
..............................................................................................................................
எக்ஸ்ட்ரா மீல்ஸ்:


                                                                      
இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட ஒரு செய்தி. கடந்த ஞாயிறு அன்று  இஸ்தான்புல் நகரில் நடந்த உலக வில்வித்தை இறுதிப்போட்டியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது இளம்சிங்கம் தீபிகா குமாரி சீனப்பெண்ணிடம் கடுமையாக போராடி தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார். அது மட்டுமா..அடுத்த வருடம் நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்று விட்டார் நம்ம தங்கச்சி.  


உலக அரங்கில் போட்டிபோட தகுதி உள்ள இந்திய ஆட்டக்காரர்கள் வறுமைக்கு மிக நெருக்கமானவர்கள் என்பதற்கு இவரும் விதிவிலக்கல்ல. தந்தை ஆட்டோ ஓட்டுனர். தாய் நர்ஸ். சிறுவயதிலேயே தனது ஊரில்   மாங்காய்களை குறி தவறாமல் அடிப்பதில் கில்லியாம் இந்த தீபிகா. இப்போது உலக அரங்கில் பட்டையை கிளப்புகிறார் இக்குமரி. 


........................................................
My other site:

........................................................22 comments:

Unknown said...

நட்சத்திர வாழ்த்துக்கள்!

அப்புறம் கதையை இன்னும் கொஞ்சம் விரிவா பேசியிருக்கலாம்..

! சிவகுமார் ! said...

நன்றிண்ணா. இன்னும் கொஞ்சம் நீளமா எழுதி இருக்கலாம். மெகா பதிவா போயிடுமோன்னு சுருக்கிட்டேன். செம டைட் வொர்க் வேற. ரெண்டே நாள்தான் டைம் இருந்துச்சி. அதுக்குள்ள ஏழு பதிவு எழுத சொல்லிட்டாரு கேபிள். கதை அல்லது சம்பவங்களை பற்றி எழுதுவதற்கான இலக்கணங்கள் எதுவும் எனக்கு தெரியாது. அதற்கு சில வருடங்கள் ஆகலாம். மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.

நான் 'வளரும்' பதிவர்னு சொன்னாக்கூட ரவுசு விடுவீங்க. என்ன செய்ய..

Unknown said...

தலைவா கதை ரொம்ப நல்லா இருக்கு, ஆனா சுரேஷுன்னு பேரு வச்சா பையன் எப்படி படிப்பான்? அதுவும் இங்கிலிபீசுன்னாலே சுரேசுகளுக்கு எப்பவுமே பயம்தான் :-) ஹா ஹா ஹா நீங்க சொன்ன மாதிரியே மாத்திட்டேன், படிச்ச பசங்க எல்லாம் நாலு பேருக்கு சொல்லி கொடுங்கப்ப்பா உங்களுக்கு புண்ணியமா போகும், நம்ம தங்கச்சி தீபிகா கூடிய சீக்கிரமே தங்க மெடல் வாங்குவாங்க, கில்லி அடிக்கற பசங்கள்ளாம் சொல்லி அடிக்க கத்துக்கங்கப்பா

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா எழுதி இருக்கீங்க மக்கா வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் மொய் வைக்கிறதுக்கு ரொம்பதான் யோசிக்கிறீங்க ஹி ஹி...

RVS said...

கஞ்சா மொளகாவை ருசித்துக்கொண்டிருக்கிறேன் சிவா!! சூப்பர்ப்! :-)

Unknown said...

தல செம கலக்கல் ,பையன் டென்த் படிக்கிரான்கிறீங்க டிவி பாக்க விடலாமா ,நான் டென்த் படிக்க சொலோ டிவி பாக்கமாட்டேன் தெரியுமா ?அதனால்தான் நான் அல்லாத்துலையும் ஜஸ்ட் பாஸ் ஆனேன்

அப்பறம் தீபிகாவெலாம் தங்கச்சியா நெனைக்க முடியாது

அம்பலத்தார் said...

கையேந்திபவன் அண்ணாச்சியோட ஆதங்கத்தை புரிஞ்சுகொள்ளமுடிந்தது. நல்ல பதிவு

rajamelaiyur said...

//
இளம்சிங்கம் தீபிகா குமாரி சீனப்பெண்ணிடம் கடுமையாக போராடி தோற்றாலும் வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறார்.
//

சந்தோஷமான விஷயம்

saidaiazeez.blogspot.in said...

ஐயோ தோடா!
இன்னா கிடைச்சிக்கீதோ அத்தே வச்சி சந்தோசப்படுபா... அத்தே வுட்டுப்புட்டு சுரேசு சொல்லிக்குடுப்பான், அது இதுன்னுக்கிட்டு. நா ஒரு ஸ்டோரி சொல்ட்டா.

ஒரு ஊர்லே ஒரு பெரிய கோடீஸ்வரன். அவன் செக்குல கூட கைநாட்டுதான் வைப்பான். ஒரு நாள் பேங்க் மேனேஜராண்ட பேசிக்கினிருக்கும்போது மேனேஜர் சொன்னாராம், ஒரு நாளெழுத்து படிச்சிருந்தா அட்லீஸ் செக்கிலாவது கையெழுத்து போடலாமில்லே. அப்போ அந்த கோடீஸ்வரர் சொன்னாராம், நான் நாலெழுத்து படிச்சிருந்தா இன்நேரம் ஒரு சர்ஸ்லே மணியடிச்சிக்கொண்டிருந்திருப்பேன்னு. அப்போ அந்த மேனேஜர் ஒண்ணும் புரியலேன்னாராம். அப்போ மீண்டும் அந்த கோடீஸ்வரர் தன் பழைய கதைய சொன்னாராம். இவர் சின்ன வயசிலே ஒரு சர்ஸ்லே மணியடிக்கிற வேலைலே சேர்ந்தாராம். அப்பாலே ஒரு நாள் சர்ஸச்லே புது ரூல் போட்டாங்களாம். அதாவது அட்லீஸ் கொறஞ்சது தன் பெயரை கையெழுத்தாக போடத்தெர்ஞ்சவனுக்குத்தான் இன்மே சர்ச்லே வேலை அப்படீன்னு. நம்மாள், அதான் கோடீஸ்வரன் பார்த்து இருக்கார். தன்னால் கையெழுத்து போடமுடியலேன்னுட்டு சர்ச் ஃபாதர் அவருடைய சீட்ட கிழிச்சிட்டார். உடனே நம்மாளு சர்ச் வாசல்லே மெழுகுவத்தி விக்க ஆரம்பிச்சான். யாவாரம் சூப்பரபோச்சு. பின்னெ மெழுகுவத்தியோட சர்ச்சுலே பாடுகிற பாட்டுபுஸ்தகங்கள சேத்து விச்சார். அப்பாலே மெழுகுவத்திய செய்ய ஆரம்பிச்சார். அப்படியே படிப்படியா முன்னேறி இப்போ கோடீஸ்வரன் ஆயிட்டேன்னாராம். பாங்க் மானேஜர் வாயடைத்துப் போய்ட்டாராம்.
வெளங்கிச்சாபா?
இருக்கிறத வெச்சுக்கிட்டு சந்தோஷப்படு.
இல்லாததுக்காக வருத்தப்படாதே!

சென்னை பித்தன் said...

நன்று.

Unknown said...

கதை சூப்பர்

கோகுல் said...

சோக்கா சொன்ன நைனா!
அந்த நைனா ஒன்னாண்ட சொன்னத நீ நம்மகிட்ட நல்லா புத்தில ஒரைக்கற மாதிரி சொல்லிபுட்ட.

அப்பால நைனா, அந்த ஜார்க்கண்ட் சிங்கதாண்ட நம்ம காங்கிரசையும் சொல்லிடு என்னா நைனா புரியலையா?அதாம்பா வாழ்த்துன்னு டமில்ல சொல்லுவாங்களே அதாம்பா.

சொம்மா இர்க்க சொல்லோ நாலு வார்த்த கத்துக்கன்னே வர்ட்டா!

! சிவகுமார் ! said...

@ இரவு வானம் சுரேஷ்

சுரேஷ்னு பேரு இருக்குறவங்க எல்லாம் உலக அனுபவம் உள்ள திறமைசாலிங்க. அதுக்கு நீங்கதான் சாட்சி.

! சிவகுமார் ! said...

@ மனோ

முக்கனி மனோ...மிக்க நன்றி.

! சிவகுமார் ! said...

@ RVS

கஞ்சா மிளகாவை ருசிக்கிறீர்களா..Please take care.

! சிவகுமார் ! said...

@ மணி

யோவ். 17 வயசு பொண்ணு தங்கச்சி இல்லையா? அடப்பாவிங்களா..!

! சிவகுமார் ! said...

@ அம்பலத்தார்

நன்றி அம்பலத்தாரே!

! சிவகுமார் ! said...

@ ராஜா

நன்றி ராஜா!

! சிவகுமார் ! said...

@ சைதை அஜீஸ்

என் பதிவுக்கு கீழ சப்வே போட்டு நீங்க ஒரு பதிவு போடறீங்களே...சைதை அஜீஸ். வாழ்க!

! சிவகுமார் ! said...

@சென்னை பித்தன், சதிஷ்

தங்கள் கருத்துக்கு நன்றி.

! சிவகுமார் ! said...

@ கோகுல்

மெட்ராஸ் பாஷைல எப்படி தம்பி இப்படி பின்றீங்க?

Related Posts Plugin for WordPress, Blogger...