என்னதான் பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும், படம் நன்றாக உள்ளதென பலர் பேன்ட் வாசித்தாலும் ஒரு சில நாயகிகள் அந்தப்படங்களில் நடித்து இருந்தால் தியேட்டர் பக்கம் தலைகாட்டவே கூடாது என்பது எனது தலையாய பாலிசிகளில் ஒன்று. உதாரணம்: த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் சிலர். ஆனால் எங்கேயும் எப்போதும் படத்தில் கிடைத்ததோ டபுள் ட்ரீட். தற்காலத்தில் நடிப்பில் கொடிகட்டிப்பறக்கும் பொடிப்பெண்ணான அஞ்சலியும், அல்டிமேட் ஹோம்லி லுக்குடன் விளங்கும் அனன்யாவும் இணைந்து சரியான பெர்பாமன்சை தந்திருக்கிறார்கள். (நாயகிகளுக்கு) துணை நடிகர்களாக வரும் ஜெய் மற்றும் சரவ் இருவரும் தத்தமது பணிகளை செவ்வனே செய்துள்ளார்கள்.
முக்கால்வாசி படம் முழுதும் செம ப்ரெஷ் ஆன காதல்-கம்-காமடி பூவாசங்களை தியேட்டரில் மணக்க விட்டு அதற்கு அன்பளிப்பாக தொடர் கைத்தட்டல்களை கூடையில் கொத்து கொத்தாக வாங்கிக்கொள்கிறார் இயக்குனர் சரவணன். இறுதிக்கட்ட காட்சிகளில் விபத்து குறித்த பிரச்சார நெடி வராமல் அதே சமயம் சொல்ல வந்த விஷயத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைத்திருக்கிறது இப்படக்குழு. முதல் தயாரிப்பிலேயே பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் சேர்ந்து ஜில்லா முழுக்க கல்லா கட்டி இருக்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர், எம். மல்டிப்ளெக்ஸ் அரங்குகளில் சின்ன ஸ்க்ரீன்களில் இருந்து பெரிய ஸ்க்ரீன்களுக்கு இப்படம் மாற்றப்பட்டு மங்காத்தா புகழை சற்று மங்க வைத்து இருப்பதே இதற்கு சாட்சி.
அனன்யா...சென்னையில் இண்டர்வியூ செல்லும் வழிநெடுக சரவ்வை சந்தேக்கண்ணுடனே பார்க்கும் காட்சிகள். என்ன சொல்ல. மிரளும் மான் விழிகளுக்கு ஒட்டுமொத்த காப்பிரைட்டை வாங்கிவைத்த ஆள்போல அசத்தி எடுக்கிறார். எப்படிம்மா இப்படி? அஞ்சலிக்கு அங்காடித்தெரு படத்திற்குப்பின் சரியான தீனி. சில இடங்களில் ஜெய்யை மிரட்டுகிறேன் பேர்வழி என்று ஓவர் ஸ்பீட் எடுக்கிறார். தவிர்த்து இருக்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஜெய் ஸ்கோர் செய்து விடுகிறார். ஜெய்யின் கேரியரில் இந்தப்படம் ஒரு மைல்கல். அஞ்சலி பேசும் வசனங்களில் ஆந்திர வாடை அதிகம். அனன்யா மீதுள்ள அதீதப்பற்றால் இயக்குனர் அஞ்சலியை கோட்டை விட்டிருக்கலாமோ என்னவோ. அவர் என்ன செய்வார் பாவம். அனன்யா அம்புட்டு அழகாக மிரண்டால்/மிரட்டினால்.........
படம் பார்க்கையிலே இளவட்டங்கள் குடுத்த லைவ் கமண்ட்டுகள்:
* சென்னைக்கு வரும் அனன்யா தன் ஊருக்கு ஒரு ரூபாய் போட்டு லான்ட் லைனில் பேசுகிறார். ரொம்ப நேரமாக. கமன்ட்: "ஒரு ரூபா போட்டுட்டு எப்படிடா இவ்ளோ நேரம் பேசறா?"
* அஞ்சலி அறிமுகம் ஆகும் காட்சியில் "ஏய். இவ நேர்ல இவ்ளோ வெள்ளை இல்லியே. மேக்கப்பா?"
* மரணம் நிகழ்கையில் நாயகி அழப்போகும் காட்சி வருவதற்கு சில நொடிகளுக்கு முன்பு ஓநாய் போல ஊளையிட்டு அழுதது சில 'விசிலடிச்சான்' க்ரூப். பாவம் விபத்தின் கொடூரத்தை உணராதவரை அவர்களுக்கு எப்படி தெரியும் அதன் வலி. நீங்க ஆடுங்கடா. அந்தக்காட்சியில் தன் நடிப்பின் மூலம் மேலுமோர் உயரத்தை எட்டியுள்ளார் அஞ்சலி.
சென்னையை சப்போர்ட் செய்து சரவ் சொல்லும் ஒரு வசனம் சூப்பர்ப். சென்னை நகரை மையமாக வைத்து வந்த பெரும்பாலான படங்களில் லோக்கல் ஸ்லாங்கில் பேசும் மக்கள் மட்டுமே சென்னையில் இருப்பதாக ஒரு பிம்பமும் இல்லாவிடில் பப் கல்ச்சரில் புரள்பவர்கள்(ஈசன்), ட்விட்டர்/பேஸ்புக் என சிம்புவின் பாடல் வரிகளில் வாழ்பவர்கள் என வேறுவகையான பிம்பமும் மக்களிடையே முன் நிறுத்தப்பட்டு வந்தன. அதிலிருந்து மாறுபட்டு சென்னை இளசுகள் பற்றிய சில நுணுக்கமான காட்சிகளை பதிய வைத்து இருக்கிறார் இயக்குனர் சரவணன். சபாஷ். ஆனால் சரவ்வின் அடையாளம் பற்றி தன் அக்காவிடம் அனன்யா போன் போட்டு சொல்வது சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருப்பது போல தோன்றுகிறது.
படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் மற்றும் (காமடி) வசனங்களில் லாஜிக் கலந்த மேஜிக் சாரல்கள் இடைவிடாமல் அடித்து மனதை நனைய வைக்கின்றன. பொதுவாக விமர்சனங்களில் கதை/மொத்த வசனம் அல்லது கிளைமாக்சை சொல்வதில் என்றுமே எனக்கு உடன்பாடில்லை. இருந்தாலும் ஒரு காட்சி அரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனதில் நிழலாடிக்கொண்டே இருக்கிறது. அஞ்சலியை பூங்கா அருகே பார்த்ததும் குச்சி ஐஸை வாயில் இருந்து எடுக்க எத்தனிக்கையில் குச்சி மட்டும் கையோடு வர, அப்போது ஜெய் முழிக்கிறாரே. சான்ஸ்லெஸ்!
லைவ் விமர்சகர்கள்:
என்னுடன் சேர்த்து நால்வர் படம் பார்த்தோம். நல்ல படம் வந்தால் கூட நக்கல் அடிப்பதை குலத்தொழிலாக வைத்திருக்கும் நண்பன் ஒருவன் "எப்படியோ ஒரு டாக்குமென்டரி படத்த பாக்க வச்சிட்ட" என்று என்னிடம் அங்கலாய்க்க, க்ளைமாக்ஸ் பார்த்து கனத்த இதயத்துடன் இருந்த மற்றொரு நண்பன் படம் எடுத்து ஆடிவிட்டான்: "டேய். உனக்கெல்லாம் உணர்ச்சியே இல்லையா? மவனே இது உனக்கு டாக்குமென்டரியா? படத்துல வருதே அந்த பஸ்சுல உன்ன ஏத்தி அனுப்பிச்சி இருக்கனுண்டா?" என்று ரிவிட் அடித்தான்.
பரவாயில்லை என்னை நம்பி வந்தவனுக்கு நல்ல படத்தை காட்டி உள்ளோம் என்று இதயம் குளிர்ந்தது. ஆனால் மீண்டும் அவன் டேக் ஆப் ஆகி அதே நண்பனை திட்ட ஆரம்பித்தான்: "நீயெல்லாம் மனுஷனாடா. எவ்ளோ எமோசனலா படம் இருந்துச்சி. அதப்போயி..". என்னடா பயபுள்ள மனசு அநியாயத்துக்கு ஈரமா இருக்கே என்று தியேட்டரை ஒரு முறை நோட்டம் விட்டேன். ரைட்டு. பையன் சும்மா கொதிக்கவில்லை. இரண்டு வரிசை தள்ளி இளம் பெண்கள் சிலர் படம் முடிந்து கூட்டம் கலையும் வரை சீட்டில் அமர்ந்து இருந்தனர். அதான் அளவுக்கு மீறி சமூகப்பொங்கல் வைத்திருக்கிறான்.
எங்கேயும் எப்போதும் - எப்போதாவது அரிதாக!
...............................................................................
............................................
My other site:
...........................................
38 comments:
சரியான பார்வையில்...
மாப்ள கலக்கலான படம்தான் போல...சைடுல மங்காத்தாவையும் ஓட்டிட்ட ஹிஹி!
ஹா ஹா ஹா நண்பன் பொங்கினது காரணமாத்தான்.......
படம் ஒரு பொங்கல்!!!!
நேர்மையான விமர்சனம்!!!!!!
அந்த குச்சி ஐஸ் ----சான்சே இல்லை...சுப்ரமணியபுரம் படத்துக்கபுறம் இப்போது தான் நல்ல ஸ்கோர் பண்ணிருகிறார்...
ட்ரைலர் வந்த போதிலிருந்து,அஞ்சலியை விட, அனன்யாவுக்காக பார்க்க முடிவு செய்து பார்த்த படம் ..க்யூட் நடிப்பில் நம்மை ஏமாற்றவில்லை....
நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் சிவா..நல்ல படம்!
சிவா, படத்தப் பாக்கணும் போல இருக்கு..
udanz star of the week க்கு வாழ்த்துக்கள்
கேபிள் சங்கர்
udanz ஸ்டார் ஆப் த வீக்குக்கு வாழ்த்துக்கள்.
y late?
படம் பார்க்க தூண்டும் விமர்சனம்...
த.ம.7
நல்ல விமரிசனம்.
நிறைய பேர் சொல்லிவிட்டீர்கள் இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்க வில்லை>நீங்கள் வேறு ஆவலைதூண்டி விட்டீர்கள்.விரைவில் பார்க்கிறேன்!
இயல்பான நடையில் விமர்சனம் அருமை!
ஹும், இன்னும் பார்க்கலை! :-(
பார்க்கணும்....................................!
நல்லா ரசிச்சு விமர்சனம் எழுதி இருக்கீங்க..... நல்லாருக்கு!
தல ஒரு வாரம் நீங்க இல்லாம தமிழ் பதிவுலகமே மொடக்கமாயிடுச்சு...
// என்னதான் பெரிய ஹீரோக்கள் நடித்து இருந்தாலும், படம் நன்றாக உள்ளதென பலர் பேன்ட் வாசித்தாலும் ஒரு சில நாயகிகள் அந்தப்படங்களில் நடித்து இருந்தால் தியேட்டர் பக்கம் தலைகாட்டவே கூடாது என்பது எனது தலையாய பாலிசிகளில் ஒன்று. உதாரணம்: த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் சிலர். //
ஏன் இப்படி... த்ரிஷா சொந்தக்குரலில் தமிழ் பேசுவதை கேட்டால் இப்படியெல்லாம் சொல்ல மாட்டீர்கள்...
// சென்னையை சப்போர்ட் செய்து சரவ் சொல்லும் ஒரு வசனம் சூப்பர்ப். //
அந்த வசனத்தை கேட்கும்போதே உங்களைத்தான் நினைச்சேன்...
உங்க நண்பரின் சமூகப்பொங்கல் இனித்தது....
பார்க்க வேண்டிய பாடம் தான்
@ கவிதை வீதி சௌந்தர்
நன்றி ஆசானே!
@ விக்கி
மங்காத்தாவை ஓட்ட தல ரசிகர்கள் பத்தாதா மாம்ஸ்?
@ மனோ
படம் ஒரு பொங்கலா? புரியல தல.
@ மோகன்
சுப்ரமணியபுரத்தைவிட இந்த ரோல் ஜெய்க்கு நன்றாக பொருந்தி உள்ளது.
@ செங்கோவி
வியாழக்கிழமையே விமர்சனம் போட்டு கலக்குறீங்க. நன்றி செங்கோவி.
@ கருன்
கண்டிப்பாக பாருங்க.
@ சங்கர் நாராயண்
வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார்!
@ ரமேஷ்
நெட்டில் ரிசர்வ் செய்யலாம் என்று பார்த்தால் சென்ற வாரம் பில் கட்டாததற்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ரெண்டு நாள் கழித்து ட்ரை செய்தால் ஆல் ஷோ ஹவுஸ்புல். அதான்..
@ பிரகாஷ்
நன்றி நண்பரே!
@ சென்னை பித்தன்
தங்கள் வருகைக்கு நன்றி சார்!
@ கோகுல்
வாங்க கோகுல். பாண்டிச்சேரி ஆளு நீங்களே படம் பாக்க லேட் பண்றீங்களே..
@ சேட்டைக்காரன்
பாருங்க சேட்டை. உங்க விமர்சனத்தையும் எதிர்பாக்குறேன்.
@ பன்னிக்குட்டி ராமசாமி
எல்லாப்புகழும் அனன்யாவிற்கே!
@ பிரபாகரன்
பதிவுலகம் மொடங்கிருச்சா. அது ஏற்கனவே இப்பவோ அப்போவுன்னுதான் கெடக்கு. நம்மள மாதிரி நாலு பேரு எழுதுனா இதான் கதி.
@ பிரபாகரன்
என்னாது திரிஷா சொந்தக்குரலா? போதும் போதும்.
கிளைமேக்சில் ஜெய்யின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி பிறகு ஆம்புலன்ஸ் கதவை மூடும் போது அந்த கதவில் எழுதி இருக்கும் ஒரு வாசகம் ’’சாலை விதிகளை மதிக்கவும்’’ அருமையான இயக்கம் சிவா, உங்களது விமர்சனம் வழக்கத்தை விட கொஞ்சம் டல்லாக இருக்கிறது போல் உள்ளதே படத்தில் உள்ள சீன்களை சொல்லி விட கூடாது என்றா? மற்றபடி சூப்பர், இந்த வார உடான்ஸ் நட்சத்திர வாழ்த்துக்கள்
படத்தின் பாடல்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே ! ! !
Post a Comment